Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு அவர்களது உண்ணாநிலைப் போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துக் கொள்கின்றது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Transitional_150news.jpg

சிறிலங்காவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக், வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன தோழர் தியாகு அவர்கள் தமிழகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  

சுதந்திர தமிழீழத்தினை தாகமாக கொண்டு விடுதலைப்பசிக்கு தன்னுயிரை கொடுத்த தியாகி திலீபனை தமிழினம் நினைவேந்திய நாட்களில், தோழர் தியாகு அவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டமானது தமிழீழத்துக்கான போராட்ட தடத்தில் தமிழகத்தின் வகிபாகத்தினை மீண்டும் உணர்த்தி நிற்கின்றது.

 

தமிழகத்தின் சமூக, அரசியல் தளத்தில் எப்போதுமே மக்களின் பக்கம் நின்றவராக், தர்மத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் தோழர் தியாகு அவர்களுடைய இப்போராட்டமானது;, தமிழகமெங்கும் விரிந்து செல்லும் பொதுநலவாய நாடுகளின் சிறிலங்கா மாநாட்டுக்கு எதிரான போராட்டங்களின் அதிஉச்ச வடிவமாக அமைகின்றது.

 

'எல்லாத் துறைகளிலும் இலங்கையைப் புறக்கணிக்கும் உலகளாவிய இயக்கத்தின் பகுதியாக, தமிழ்நாட்டில் நாங்கள் விரும்புவதெல்லாம், இந்திய அரசாங்கம் குறைந்தது கூட்டம் நடைபெறும் இடத்தை கொழும்பிலிருந்து வேறொரு காமன்வெல்த் தலை நகரத்திற்கு மாற்றும்படி கேட்க வேண்டும் அல்லது மாற்றமே இல்லையென்றால் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதே' எனும் இப்போhரட்டத்தின் நியாயபூர்மான கோரிக்கையானது இந்திய மத்திய அரசினை எட்ட வேண்டும் என்பது அனைவரதும் வேணவாவாகவுள்ளது.

 

சிறிலங்காவினை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும், சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்கும் முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டியது இந்திய அரசின் ஒரு கடமை என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே தெரிவித்திருந்தமையினை இவ்வேளை நினைவுறுத்திக் கொள்வதோடு , தென்னாசியப் பிராந்தியத்தின் முதன்மை நாடு என்ற வகையில் இந்தியா தனது தார்மீகப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் நாம் கருதுகின்றோம்.

 

இந்நிலையில் ஒன்பது அம்சக் கோரிக்கையுடன் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலராவும் , இலங்கையில் கொமன்வெல்த் எதிர்ப்பியக்கத்தின் சார்பிலும் தோழர் தியாகு அவர்களது இப்போராட்டமானது வெற்றிபெற வேண்டும் என தமிழீழமக்களது சார்பில் வாழ்த்திக் கொள்கின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தோழர் தியாகு அவர்களுடைய ஒன்பது கோரிக்கைகள் :

 

1. அ) இனக்கொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்கிவைக்க வேண்டும்.

 

ஆ) எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும், காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக்கூடாது.

 

இ) காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால், அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக்கூடாது.

 

2. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படையினருக்கு எவ்விதப் பயிற்சியும் வழங்கக்கூடாது.

 

3. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடலடிக் கம்பி வடம் வழியாக மின்சாரம் கொடுப்பதற்குச் செய்துள்ள ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.

 

4. சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்து, மீனவ இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்க வேண்டும்.

 

5. 1974, 1976 ஆண்டுகளில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்துகொண்ட கச்சத்தீவு உடன்படிக்கைகளை நீக்கம் செய்து, தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியான கட்சத்தீவை மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

 

6. அ) தமிழகத்தில் இன்னமும் செயல்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதி முகாம்களைக் களைத்து விட வேண்டும்.

 

ஆ) அகதி உரிமை தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட வேண்டும்.

 

இ) அகதி உரிமைகள் தொடர்பான நீதிபதி பி.என்.பகவதி குழு வரைந்துள்ள மாதிரிச் சட்ட முன்வடிவை, இந்திய அரசு, உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்க வேண்டும்.

 

ஈ) தமிழீழ அகதிகளை இந்தியக் குடிமக்களுக்கு நிகராக நடத்தும் வகையில், அவர்களுக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

 

உ) தமிழகத்தில் வாழும் தமிழீழ மக்களின் பொருளியல், குடியியல், அரசியல் உரிமைகளை இந்திய அரசும் தமிழக அரசும் முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.

 

ஊ) ஈழத் தமிழ் அகதிகள் எவரையும் அவர்களது விருப்பத்திற்குப் புறம்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோ, இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதோ கூடாது.

 

7. இராசீவ் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்குக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் , வாழ் நாள் சிறைப்பட்டுள்ள நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும், அவர்கள் இருபதாண்டு காலத்துக்கு மேல் சிறையில் கழித்துவிட்டதைக் கருத்தில்கொண்டு, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 

8. உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை என்ற முறையில், தமிழகச் சட்டப்பேரவை 2013 மார்ச் 27 ஆம் நாள் இயற்றிய தீர்மானத்தின்படி,

 

அ) இராசபக்சேவின் சிங்கள அரசு, தமிழீழ மக்களுக்கு எதிராகச் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மானுட விரோதக் குற்றங்கள் குறித்து, தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த வேண்டும்.

 

ஆ) ஏழை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கட்டமைப்பில் இனக்கொலையைத் தடுத்து நிறுத்த, பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

 

இ) ஈழத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்யும் வகையில், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 

9. சிங்கள அரசு, தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்கும்படி , அவ்வரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - என்ற தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு, இந்திய அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

 

நாதம் ஊடகசேவை

 

 

 

http://seithy.com/breifNews.php?newsID=94223&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
எமக்காக போராடுபவரை எள்ளிநகையாடாமால் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும்.இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றாமல் செய்ய வேண்டும். இனப்படுகொலையையும் செய்து உலக நாடுகளை அழைத்து நல்ல பிள்ளையாக நடிக்கும் மகிந்த அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.இனவாத தென்னாபிரிக்காவிற்கு உலகினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், தடைகளை சிறிலங்காவுக்கு வரவிடாமல் இந்தியா தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. இந்தியா இம்மாநாட்டுக்கு செல்லாவிட்டால் பல  மேற்கு நாடுகள்  அங்கு செல்லாது.
 
சாகும் வரை உண்ணாவிரதம் என்பது சாவதல்ல. மாறாக மக்களை அணிதிரட்டும் ஒரு ஜனநாயக நடவடிக்கை.தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை எள்ளவும் மதிக்காத மத்திய அரசுக்கு இப்படியான போராட்டங்களும், வாக்குகளும் தான் அவர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒரே ஆயுதம். 
  • கருத்துக்கள உறவுகள்

சாகும் வரை எண்டால் அப்ப என்ன அர்த்தம்? ஓ எப்பயாவது சாகத்தானே போறம், அதுவரைக்கும் போராடுவம் அதுதான் சாகும் வரை போராட்டமோ? அப்படி பார்த்தாலும் சாப்பிடாம விட்டா சாவு வந்துடுமே. இவர் செய்வதுக்கு பெயர் "இயலும்வரைக்கும் உண்ணா விரதம்".

இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும் ஊண்ணும் விரதமிருக்கிறேன். இதையும் நல்லா கழண்ட அரசு ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
தற்போது அவர் உணவு இல்லாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப உண்ணாவிரதத்தை கைவிடலாம்.
 
சாப்பிட்டு விட்டு விசைப்பலகையில் தட்டுவதற்கு பேர்  கொழுப்பு.
  • கருத்துக்கள உறவுகள்

அதயேன் கேக்கிறியள், டொக்டர் சொல்லிப்போட்டார் எனக்கு கொழுப்பு ஓவரம், அதுவும் உக்கார்ர இடத்துல. அதனால இப்ப தள்ளி உக்காருகிறேன்.

உணவில்லாமல் இருந்து செத்தா அது சாகும்வரை உண்ணாவிரதம், கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேறாம இடைல எழும்பினாஅது இயலும்வரை உண்ணாவிரதமே. எனக்கு இதுதான் நியாபகம் வருது.

http://m.youtube.com/watch?v=qyzorw-I_CE#

  • கருத்துக்கள உறவுகள்

அதயேன் கேக்கிறியள், டொக்டர் சொல்லிப்போட்டார் எனக்கு கொழுப்பு ஓவரம், அதுவும் உக்கார்ர இடத்துல. அதனால இப்ப தள்ளி உக்காருகிறேன்.

உணவில்லாமல் இருந்து செத்தா அது சாகும்வரை உண்ணாவிரதம், கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேறாம இடைல எழும்பினாஅது இயலும்வரை உண்ணாவிரதமே. எனக்கு இதுதான் நியாபகம் வருது.

http://m.youtube.com/watch?v=qyzorw-I_CE#

 

ஐயா

நுணா  சொன்னது

நமக்காக ஒருவர் பட்டினி  கிடக்கிறார்

நாம் சாப்பிட்டு  இங்கிருந்து தட்டுகின்றோம் என்று.

 

பசி  என்பதை உணர்ந்திருந்தீர்களானால் இப்படி எழுதமாட்டீர்கள்......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உண்ணாவிரதத்துக்கான விளக்கமும் இப்படி தான் இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க போட்ட படத்தை பார்க்க சண்டீவி காரன் விடுறான் இல்ல நுனா.

விடுங்க விசுகு 8ம் நாளோ அல்லது 10ம் நாளோ தானே எழுந்திடுவார், அல்லது பொலிஸ் எழுப்புவாங்க அல்லது சீமான் ஆசுப்பதிரில சேர்த்துடுவார். இதயெல்லாம் சூதானமா மேடைல இருக்கு முன்பே பிளான் பண்ணனும். தியாகி திலீபன் அன்னை பூபதி இவர்களை மன்னிப்பார்களாக.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க போட்ட படத்தை பார்க்க சண்டீவி காரன் விடுறான் இல்ல நுனா.

விடுங்க விசுகு 8ம் நாளோ அல்லது 10ம் நாளோ தானே எழுந்திடுவார், அல்லது பொலிஸ் எழுப்புவாங்க அல்லது சீமான் ஆசுப்பதிரில சேர்த்துடுவார். இதயெல்லாம் சூதானமா மேடைல இருக்கு முன்பே பிளான் பண்ணனும். தியாகி திலீபன் அன்னை பூபதி இவர்களை மன்னிப்பார்களாக.

 

 

சரி

உங்க  வழிக்கே வருகின்றேன்

தாயகத்தில்  தமிழர் வேண்டுவது 

சோறா?

சுதந்திரமா???

  • கருத்துக்கள உறவுகள்
சோறுமில்லை சுதந்திரமுமில்லை. அவர்கள் வேண்டுவது சொந்த மண்ணில், காணி பறிப்பு இல்லாமல், தமிழ் அரசியல் தலைமைகளால் வழி நடத்தப் படும் ஒரு காவல்துறையின் கீழ், மொழி கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப் பட்ட ஒரு வாழ்க்கையே அவர்கள் வேண்டுவது. இதற்க்கு மாகாணசபை காணாது, தனிநாடு ஏலாது.
 
ஆகவே அவர்கள் புத்திசாலித்தனமாக கேட்ப்பது சமஸ்டி. இதை சோறா சுதந்திரமா என்று குறுக்கிப் பார்க்க முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவின் உண்ணாவிரதம் பற்றி நக்கீரன் முழு இருட்டடிப்பு செய்து வருகிறது.. ஏன்..????! கலைஞருக்கு இது பிடிக்கல்லையோ..??! தன்னை விஞ்சிடுவானோ என்று..!!! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவின் உண்ணாவிரதம் பற்றி நக்கீரன் முழு இருட்டடிப்பு செய்து வருகிறது.. ஏன்..????! கலைஞருக்கு இது பிடிக்கல்லையோ..??! தன்னை விஞ்சிடுவானோ என்று..!!! :rolleyes::)

எல்லம் வியாபாரப் போட்டி அண்ணே

தோழர் தியாகுவின் உண்ணாவிரதம் பற்றி நக்கீரன் முழு இருட்டடிப்பு செய்து வருகிறது.. ஏன்..????! கலைஞருக்கு இது பிடிக்கல்லையோ..??! தன்னை விஞ்சிடுவானோ என்று..!!! :rolleyes::)

 

நக்கீரன் மட்டுமல்ல பல தமிழக ஊடகங்கள் 100 வீத  இருட்டடிப்பை செய்கின்றன அல்லது ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறு தகவலாக போட்டுள்ளன. பொதுவாக இத்தகைய போராட்டங்களில் முனைப்புடன் FB இல் பலர் எழுதுவார்கள், அவர்களிலும் பலர் பெரும் மெளனம் காக்கின்றனர்.  என் தமிழக நண்பர்கள் அனைவருக்கும் நான் சொல்லித்தான் இந்த விடயமே தெரிய வந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு கடந்த தடைவை  ஈழத்தமிழர் பிரச்சனையை  வைத்து நடைப் பயணம் மேற்கொண்டபோது அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் மற்றும் அவரிற்கு நான் அனுப்பிய பதில்கள் என்பவற்றால் எங்களிற்குள் சில முரண்பாடுகள் தோன்றியிருந்தது . அதே நேரம் இன்றைய இவரது உண்ணா விரதம் என்கிறது அவரது குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளால் அவரிற்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை போக்க  அவரால்  நடாத்தப் படும் ஒரு நாடகத்திற்கு  மீண்டும் ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாகவேல தமிழக நண்பர்கள் பலரும் கருதுவதால் இதனை பெரிதாக தமிழகத்தில் யாரும் கணக்கெடுக்கவில்லை.  இத்துடன் நிறுத்துகிறேன்.

இதை அண்ணன் சீமான் அவர்கள் செய்து இருந்தா தமிழ் நாட்டில் மாற்றம் வந்து இருக்கும் மீடியாக்கள் முன்னணி செய்தியா போட்டு இருக்கும் கவனத்தில் எடுப்பாரா .

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய ஹசாரே போராட்டத்தை ஒளிபரப்பு செய்தீர்கள்.

நித்யானந்தா லீலைகளை ஒளிபரப்பு செய்தீர்கள்.

நயன்தாரா பற்றி கட்டுரைகள் பல எழுதுனீர்கள்.

சினிமாக்காரன் தும்மினால் கூட அதை செய்தியாக எழுதுனீர்கள்..

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையைப் புறக்கணிக்க கோரியும், மீறி நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று கோரியும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் தோழர் தியாகு.

இன்று நான்காவது நாளாக தன் போராட்டத்தை தொடர்கிறார்.

இந்த செய்தியை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்??

பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றைய ஊடகங்களின் நோக்கம்.

மக்களே! விழித்துக் கொள்ளுங்கள்.

தோழர் தியாகுவின் போராட்டம் குறித்து தகவல்களை இணையதளத்தில் அதிகமாக பகிருங்கள்..

1378653_525363070880379_1343640314_n.png

 

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி சாதிய சினிமா மோகத்தில் இருக்கும் 7.8 கோடிக்கு திடீரென்று விழிப்பு வருமாம், அதை தொடர்ந்து எழும் பேரலையில் எமக்கு தனிநாடு கிடைக்குமாம்.
 
கதைகதையாம். . . .

 

இப்படி சாதிய சினிமா மோகத்தில் இருக்கும் 7.8 கோடிக்கு திடீரென்று விழிப்பு வருமாம், அதை தொடர்ந்து எழும் பேரலையில் எமக்கு தனிநாடு கிடைக்குமாம்.
 
கதைகதையாம். . . .

 

 

ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாமல், உறங்கிக் கொண்டு இருப்போம். காகம் பனம் பழம் போடும்.

  • கருத்துக்கள உறவுகள்

2050 ம் ஆண்டு - 7.8 கோடிக்கு விழிப்புணர்வேற்றி தேசிய உணர்வேற்றி அவர்கள் மூலம் நாம் மத்ய அரசை நெருக்குகிறோம்.

2051 - யாழில் தமிழரல்லாதோர் சனத்தொகை 70% ஆனது.

2050 ம் ஆண்டு - 7.8 கோடிக்கு விழிப்புணர்வேற்றி தேசிய உணர்வேற்றி அவர்கள் மூலம் நாம் மத்ய அரசை நெருக்குகிறோம்.

2051 - யாழில் தமிழரல்லாதோர் சனத்தொகை 70% ஆனது.

சுயாட்சி வந்தால் உந்த சமன் பாடும் மாறாமல் இருக்குமோ...??

  • கருத்துக்கள உறவுகள்

2050 ம் ஆண்டு - 7.8 கோடிக்கு விழிப்புணர்வேற்றி தேசிய உணர்வேற்றி அவர்கள் மூலம் நாம் மத்ய அரசை நெருக்குகிறோம்.

2051 - யாழில் தமிழரல்லாதோர் சனத்தொகை 70% ஆனது.

 

கணக்கும் சரிவருகுதில்லை.அரசியலும் சரிவரிகுதில்லை என்ற படியால் சரியான புண்ணாக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுயாட்சி வந்தால் உந்த சமன் பாடும் மாறாமல் இருக்குமோ...??

அவர் ஏதோ உண்மைக்கு சமஷ்டி வேணும் என்று எழுதுவதுமாதிரி நம்பி நீங்களூம் கதைக்கிறீங்கள்..

போர் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது மகேஷ் என்கிற பெயரில் புலிகள் பற்றிய செய்திகளுடன் ஒரு தளம் உருவாகி செயற்பட்டது.. புலிகளின் அன்றைய நடவடிக்கைகள், வெற்றி தோல்விகள் எல்லாம் அந்தமாதிரி எழுதப்படும்.. அந்த ஆங்கிலத்தளத்தின் எழுத்துத்தரம் அப்பவே எனக்கு சந்தேகத்தை தந்தது..

சில நாட்களின் பின் குட்டு உடைந்துவிட்டது.. சிங்களப் புலநாய்வுக்காரரின் தளம் அது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள்.. சிங்களவர்கள் எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள்..

இங்கே சமஷ்டி என்று கோஷான் எழுதுவதும் ஒரு திசைதிருப்பல் நாடகமே.. நாளை நீங்கள் சமஷ்டி என்று சொன்னால் அவர் 13ஆம் திருத்தத்துக்குப் போய்விடுவார்.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஏதோ உண்மைக்கு சமஷ்டி வேணும் என்று எழுதுவதுமாதிரி நம்பி நீங்களூம் கதைக்கிறீங்கள்..

போர் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது மகேஷ் என்கிற பெயரில் புலிகள் பற்றிய செய்திகளுடன் ஒரு தளம் உருவாகி செயற்பட்டது.. புலிகளின் அன்றைய நடவடிக்கைகள், வெற்றி தோல்விகள் எல்லாம் அந்தமாதிரி எழுதப்படும்.. அந்த ஆங்கிலத்தளத்தின் எழுத்துத்தரம் அப்பவே எனக்கு சந்தேகத்தை தந்தது..

சில நாட்களின் பின் குட்டு உடைந்துவிட்டது.. சிங்களப் புலநாய்வுக்காரரின் தளம் அது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள்.. சிங்களவர்கள் எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள்..

இங்கே சமஷ்டி என்று கோஷான் எழுதுவதும் ஒரு திசைதிருப்பல் நாடகமே.. நாளை நீங்கள் சமஷ்டி என்று சொன்னால் அவர் 13ஆம் திருத்தத்துக்குப் போய்விடுவார்.. :D

 

நான்

13ஆம் திருத்தத்துக்கு  இப்பவே போய்விடுகின்றேன்..  :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நான்

13ஆம் திருத்தத்துக்கு இப்பவே போய்விடுகின்றேன்.. :lol: :D

உங்களுடன் கைகுலுக்கிப்போட்டு அவர் ஊராட்சி அளவுக்கு வந்துவிடுவார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் கைகுலுக்கிப்போட்டு அவர் ஊராட்சி அளவுக்கு வந்துவிடுவார்.. :D

 

பாவம் இதுவும் தரமாட்டார் மகிந்த

இதுக்கு கீழ  போக  வேறு எதுவும் இல்லை :( ...

நான்  நாடுகடந்த அரசுக்கு தேர்தல் பரப்புரை அறிவித்தல்  அச்சிடப்போறன்.... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.