Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் மட்டுமே அரசியல் தீர்வு! - குர்ஷித்திடம் மகிந்த திட்டவட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் மட்டுமே அரசியல் தீர்வு! - குர்ஷித்திடம் மகிந்த திட்டவட்டம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வைக் காணாலாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது, 13வது திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வைக் காணவேண்டும் என்றும், இவ்விடயத்தில் இந்திய அரசு உறுதியாக இருக்கின்றது என்றும் குர்ஷித் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் போதே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்துத் தெரிவிக்கும் போது, 'பல தசாப்தங்களுக்குப் பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றதை இந்திய அரசின் சார்பில் நான் பாராட்டுகின்றேன். இந்தத் தேர்தல் தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு முக்கியமான கட்டமாகும். நான் இதனை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகப் பார்க்கின்றேன்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டி வடமாகாண சபையை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ததன் ஊடாக கூட்டமைப்பின் நல்லிணக்க சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாகாணசபை அபிவிருத்தி காண சிறிலங்கா அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதற்கு இந்திய அரசும் தன்னாலான பங்களிப்பை வழங்கும்.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னுடன் நேற்று (நேற்று முன்தினம்) நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர். எனவே, வடக்குக் கிழக்கு மக்கள் கெடுபிடிகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படவேண்டும்.

அதேவேளை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி நிற்கின்றது.

சிறிலங்கா அரசாங்கம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வைக் காணவேண்டும். இவ்விடயத்தில் இந்திய அரசு உறுதியாக இருக்கின்றது' என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதிலளிக்கும் போது, 'நாடாளுமன்றம் ஊடாகவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கூட்டி மக்களின் தேவையைக் கருத்திற்கொண்ட தீர்வொன்றை பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றுக் கொள்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு சிறந்த வழியாகும்.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்று எம்முடன் கலந்துரையாடி மக்கள் விரும்புகின்ற ஒரு தீர்வுக்கு வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இனியும் பங்கேற்க மறுக்குமானால் நாம் ஒன்றும் செய்ய முடியாது' என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தி மூலோபாய நோக்கங்களின் அடிப்படையில் பல்வேறு பரஸ்பர நலன்கள் குறித்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இவ்விரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே எழும் பிரச்சினைகள் குறித்தும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கலந்துரையாடினர்.

மீனவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாங்களாகவே கண்டுகொள்ளும் வகையில் இவ்விரு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சமூகங்களுக்கு இடையில் ஒரு கலந்துரையாடலுக்கான வசதியைச் செய்து கொடுப்பது சிறந்த வழியாகும் என இந்தச் சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய வர்த்தகர்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் வர்த்தக சமூகங்களுக்கு மத்தியிலும் இத்தகையதோர் அணுகுமுறையை பின்பற்றுவது தொடர்பிலும் இதன்போது முன்மொழியப்பட்டது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹாவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாரம்பரியக் கைத்தொழில்கள் - சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு - சக்திவள அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=561863f0-5482-4734-99d2-22da0ac3fe07

நிச்சயமாக கூட்டமைப்பு தெரிவு குழுவில் பங்கேற்க்கும்... ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதை தான் அது...

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் குரல்!

 

நிச்சயமாக ஈழத் தமிழர்களின் 'குரல்' இல்லை!

 

பி.கு: கோசானை எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம், என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் குரல்!

நிச்சயமாக ஈழத் தமிழர்களின் 'குரல்' இல்லை!

பி.கு: கோசானை எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம், என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்! :D

அதெப்படி உங்களை மட்டும் விடுறது?? :D முடியாது.. :huh:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்து வெற்றி பெற்றாகி விட்டது.தெரிவுக்குழுவில் இணைந்து இணக்க அரசியலுக்கான நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டப்பேகிறோம் என்று சம்பந்தரின் அறிக்கை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சிறிலங்கா அரசாங்கம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வைக் காணவேண்டும். இவ்விடயத்தில் இந்திய அரசு உறுதியாக இருக்கின்றது' என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
நீங்கள் உறுதியாக இருந்து என்னத்தை புடுங்கப்போறீயள்...சிங்களவர்களும் உறுதியாக இருக்கிறார்கள் தமிழர்களுக்கு ஒன்றும் கொடுக்க கூடாது என்று....
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்து வெற்றி பெற்றாகி விட்டது.தெரிவுக்குழுவில் இணைந்து இணக்க அரசியலுக்கான நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டப்பேகிறோம் என்று சம்பந்தரின் அறிக்கை வரும்.

 

மிக விரைவில் இதனை எதிர்பார்க்கலாம்.

 

தெரிவுக்குழு எப்போதுமே தமிழர்களை ஏமாற்றும் சிங்களவனின் ஒரு பித்தலாட்டம். சம்பந்தர் தெரிவுக்குழுவில் சிங்களவனின் தேனீர் குடித்து நன்கு ருசி கண்டவர்..! சந்திரிக்காவின் மந்திரப் பொதிக்கான தேடலில்.. தெரிவுக்குழுவிலும் நீலனோடு முன்னும் பின்னும் திரிந்து தேனீர் குடித்தவர்..! :D:lol:

மிக விரைவில் இதனை எதிர்பார்க்கலாம்.

 

தெரிவுக்குழு எப்போதுமே தமிழர்களை ஏமாற்றும் சிங்களவனின் ஒரு பித்தலாட்டம். சம்பந்தர் தெரிவுக்குழுவில் சிங்களவனின் தேனீர் குடித்து நன்கு ருசி கண்டவர்..! சந்திரிக்காவின் மந்திரப் பொதிக்கான தேடலில்.. தெரிவுக்குழுவிலும் நீலனோடு முன்னும் பின்னும் திரிந்து தேனீர் குடித்தவர்..! :D:lol:

தெரிவு குழு போர் குற்றம் எண்ட புலம்பெயர் தமிழர்களின் நிகழ்சி நிரலையும் வலுவிளக்க செய்யும் மகிந்தவின் மந்திரக்கோல்... !

மகிந்தவை புனிதன் ஆக்கினால் தான் தமிழனுக்கு தீர்வு எண்று சொல்வார்கள்... அப்போதும் அறிக்கை விடுவார்...

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் குரல்!

 

நிச்சயமாக ஈழத் தமிழர்களின் 'குரல்' இல்லை!

 

பி.கு: கோசானை எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம், என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்! :D

 

 

அந்தப்பயம் இருக்கணும்

ஆமா....... :lol:  :D

பவர் ஸ்டார் ஸ்மைல்.

 

 

reconciliation-depends-on-dialogue-with-

சம்பந்தர் சுழியர் , மகிந்தவுக்கு அவர் பாடம் எடுப்பார்.காகம் இருக்கப் பனம் பழம் நழுவி பாலில விழும், கோசன் வருவார், வந்து எல்லாருக்கும் பாடம் நடாத்துவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.