Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடுகளுக்கு மத்தியில் வட மாகாண உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

Featured Replies

TNA-Othe.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முரண்பாடுகளுக்கு மத்தியில் வட மாகாண சபைக்கான உறுப்பினர்களும், அமைச்சர்களும் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்கின்றனர்.

பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக இன்று காலை 8.30 அளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்து, பின்னர் அருகிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

trans.gif

வட மாகாண அமைச்சரவைப் பட்டியல் நேற்று வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், பட்டியல் குறித்து ஏனைய பங்காளிக்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் கலந்துகொள்வது குறித்தோ, பகிஷ்கரிப்பது குறித்தோ எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள் : வடக்கு அமைச்சரவை பட்டியலுக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு! சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்கும் நிலை?

http://tamilworldtoday.com/home

8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

 

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில்  தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலாவது வடமாகாண சபை அமைச்சர்களுக்கான பதியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை யாழ். வீரச்சிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் டெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.  

நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்பில் அங்கம் வகிக்கும்  5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

காணி காவல்துறை உட்பட முக்கிய அமைச்சுக்கள் சீ.வீ விக்னேஸ்வரன் வசம்!
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.
 
இதன்படி மாகாணசபையின் கீழ்வரும் முக்கிய துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசமே உள்ளன.  
 
மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப் பொருளாதாரத் திட்டங்களின் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், மாகாண வீடமைப்பு மற்றும் கட்டுமானம், வீதிகள், பாலங்கள், கடற்பாதைகள், மனித உரிமைகள், கூட்டுறவு மற்றும் கூட்டுறவு மேம்பாடு, காணி, சொத்துக்களைச் சுவீகரித்தல் மற்றும் கேள்விக் குட்படுத்தல், புனர்வாழ்வு, சமூக சேவைகள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, முஸ்லீம்கள் விவகாரம், உள்ளூராட்சி சபைகள், தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்புகள், சுற்றுலா, மின்சாரம் ஆகியன உள்ளிட்ட முக்கிய துறைகள் முதலமைச்சர் வசமே உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

globaltamilnews

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம் இந்த உறுப்பினர்கள் 8 பேரும் தனித்து ஒரு குழுவாக மாகான சபை அமர்வுகளில் செயல்ப்படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

குழறுபடிகள் - புறக்கணிப்புகளிடையே TNAயின் வட மாகாணசபை அங்கத்தவர்களுள் ஒருபகுதியினர் பதவியேற்பு

11 அக்டோபர் 2013

vik4_CI.jpg

குழறுபடிகள் மற்றும் புறக்கணிப்புகளின் மத்தியில் வட மாகாணசபை அங்கத்தவர்களுள்  ஒருபகுதியினர் இன்று தமது பதவியேற்புகளை செய்துகொண்டுள்ளனர். 

இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அவர்கள் தமது சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டனர். 

எனினும் ஈபிஆர்எல்எவ்வின் ஜந்து உறுப்பினர்களும் புளொட் அமைப்பின் இரு உறுப்பினர்களும் டெலோவின் உறுப்பினரான சிவாஜிலிங்கமும் மற்றும் குணசீலனும் பதவியேற்பை புறக்கணித்து விட்டனர்.

முன்னதாக யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவு தூபிப்பகுதியில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுத்தனர். 

முன்னதாக மேடை முன்பதாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணத்தினை செய்த பின்னர் பின்னர் ஆவணங்களில் ஒப்பமிடும் நிகழ்வினை கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன் செய்து கொண்டனர். பின்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஆவணத்தினை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன் உறுப்பினர்கள் அமைச்சர்கள் எவரும் மாலை மரியாதைகளை ஏற்க மறுத்ததை காணக்கூடியதாக இருந்தது.

கட்சி தலைவர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் வீ.ஆனந்த சங்கரி ஆகியோர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சமூகமளித்திருந்ததுடன் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விந்தனும் பிரசன்னமாகி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார். ஈபிஆர்எல்எவ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜங்கரநேசன் சமூகமளித்திருந்த போதும் அவர் மகிழ்சிகரமாக இருந்திருக்கவில்லை.

பெரும்பாலும் ஒரு நீடித்த மௌனம் பதவியேற்பில் காணப்பட்டது. கோலாக கொண்டாட்டங்கள் ஏதுமின்றி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடமாகாணசபையினது அமைச்சு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவினில் நிறைந்திருந்தனர்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97557/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ புறக்கணிப்பு : தேசிய விடுதலைப் போரட்டத்தின் எச்சசொச்சங்களும் அழிக்கப்படுகின்றன?

கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகளிலிருந்து அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, அந்தக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்துரையாடப்படவேண்டும், அவர்களின் தீர்மானமும் கரு த்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு எவையும் நடைபெற்றதாக நாங்கள் அறிந்தி ருக்கவில்லை. தமிழரசு கட்சியே கல்வி அமைச்சரையும், சுகாதார அமைச்சரையும் தெரிவு செய் திருக்கின்றது. அதேபோன்று ஏனைய கட்சிகளிலும் யாரெல்லாம் அமைச்சராக வரவேண்டும் என்பதையும் அவர்க ளே தீர்மானத்திருக்கின்றார்கள். எனவே எமக்கும் அதற்கும் தொடர்பில்லை. இரா.சம்ந்த ன், சுமந்திரன், சரவணபவன், மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போன்வர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்து அதனை அறிவித்திருக்கின்றார்கள்.-என்பது சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாக்குமூலம்.

இங்கு ஈ.பிஆர்.எல்.எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் 80 களின் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவை. தேசிய விடுதலைப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களை அழித்தொழிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் இன்னொமொரு சதியே இக் கட்சிகள் ஓரம்கட்டப்பட்டு அழிக்கப்படுவது என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன.

எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் பிழைப்புவாத அரசியலில் கூட ஈடுபடமுடியாமல் ஒரம்கட்டப்பட்டு அழிக்கப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே அரசியல் நடத்திய 80 களின் முற்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சாரிசாரியாக மனிதர்களைப் படுகொலைசெய்து புலிகள் அழிக்கப்பட, சம்பந்தனை ‘சாணக்கியப்படுத்தி’ தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களை இந்தியா அழிக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன

http://inioru.com/?p=37548

  • கருத்துக்கள உறவுகள்

npc_oath_01.jpg

 

npc_oath_03.jpg

 

npc_oath_05.jpg

 

NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes

 

[TamilNet, Friday, 11 October 2013, 06:57 GMT]

Twenty members of the Tamil National Alliance (TNA) elected to the Northern Provincial Council took oaths in Jaffna after visiting the memorial site of SJV Chelvanayakam and after observing honour to fallen Tamil Heroes (Maaveerar) and the people perished in the war, at Jaffna Veerasingham Hall Friday 9:00 a.m. EPRLF-leader Suresh Premachandran and five of the six EPRLF's elected members, TELO's M.K.Sivajilingam and an elected TELO member, PLOTE leader Tharmalingam Siththarthan and one elected PLOTE member were absent at the event. Ms Ananthi Sasitharan was present marking her independency between the ITAK and the portfolio-seekers. The ceremonial event took place without any celebrations and the members declined to wear traditional garlands at the function.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736

"சாரிசாரியாக மனிதர்களைப் படுகொலைசெய்து புலிகள் அழிக்கப்பட, சம்பந்தனை ‘சாணக்கியப்படுத்தி’ தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களை இந்தியா அழிக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன."
 
இவர்களும் "தேசிய விடுதலைப் போராட்டத்தில்" ஈடுபடவர்களா?. அதானால் தானா 2011 வரை சித்தார்த்தனின் குழு "தேசிய விடுதலைப் போராட்டத்தில்"  ஈடுபடவர்களையும் அவர்தம் உறவுகளையும் காட்டிக்கொடுத்தல், சித்தரவதை என எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள். தேசிய விடுதலைப் போரட்தான் எண்டால் என்ன என்று தெரிந்தபடியால சுரேஷ் மண்டையன் குழுவின் தலைவராக இருந்து தேசிய விடுதலைஇக்காக குரல் கொடுத்தவர்களையும் தேசிய விடுதலைஇக்கு ஆதரவு தந்தவர்களையும் சூட்து தள்ளினார்?. என்னையா ஊடக வியாபாரம் நடத்துகிறீர். இன்னும் கொஞ்ச நாளில் பாவம் டக்கிளாசும், கருணாவும், ரசீக்கும், இனயாபாரதியும் "தேசிய விடுதலைப் போராட்டம்" நடத்தி இறந்துப்போனார்கள் எண்டு நீங்கள் எழுதினாலும் நான் ஆச்சரியப்படப்போவத்திலை.

பிரேம சந்திரன் கூட்டமைப்புக்குள் பிரிவினையின் திருவுருவமாக இருந்தவர். சித்தர்த்தனுக்கு சம்பந்தர் எவ்வளவு கஸ்டப்படு தன்னை உள்ளெ கொண்டுவந்தவர் என்பது மறந்து போச்சு. அதனால் பிரேமசந்திரனுடன் கூட்டு போடுகிறார். பிரமசந்திரன் ஆனந்தசங்கரி, சித்தார்த்தனுடன் ஒரு தேர்தலில் சேர்ந்து நின்றால் அதன் பின்னர் இந்த பிரிவினை குணம் மாறிவிடும். இந்தியாவை நம்பி பிரிக்கிறாராகும். காங்கிரஸ் பதவிக்கு வருவதில் அது தங்கியிருக்கு என்றதை அவர் உணரவில்லை.

 

ஆனந்தசங்கரி கூட்டணியை பிரித்த போது வந்த சூழ்நிலை. 

 

தனது இராமபணத்தை விட துடிக்கிறார். விட்டாராயின் அது திரும்பி வந்து அவரைத்தான் தாக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ புறக்கணிப்பு : தேசிய விடுதலைப் போரட்டத்தின் எச்சசொச்சங்களும் அழிக்கப்படுகின்றன?
அந்த கிழடுகள்தான் தேசியத்தை 1948 ஆம் ஆண்டில் தொடங்கினதுகள் என்பதை உந்த பத்திரிகையாளர்கள் மறந்திட்டினம் போலகிடக்குது...அவர்கள் தொடங்கிய தேசிய போராட்டம்தான் இன்று சர்வதேச அளவில் வளர்ந்திருக்கு

Edited by putthan

முடிசூட்டு நிகழ்வு

 

 

CV%20%281%29.JPG
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு முடிசூட்டிய நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போதே இந்த முடிசூட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, அவ்விருவருக்கும் முடிசூட்டிய ஆதரவாளர்கள், அதன் பின்னர் அவ்விருவரிடமும் வெள்ளி வேல்களையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
CV%20%282%29.jpg
CV%20%283%29.JPG
CV%20%284%29.JPG

சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது- முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்

 

'அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்பொழுதுதான் எழுந்து நிற்கப் பழகிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜனநாயக வழியில் தலைநிமிர்ந்து செல்லும் வாழ்க்கையை வாழ நாங்கள் எங்களால் முடிந்த சகலதையும் செய்வோம்.

தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக்கூடாது என்பதுடன்; ஒரு வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் என்பதையும் மறக்கவும் முடியாது. மக்களை கைப்பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை நாங்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.

பொதுவாழ்க்கையில் எப்போதும் பொதுநலத்துடன் செயற்படவேண்டும் என்பதுடன், எமது உறவுகள் சார்ந்ததாக முடிவுகளை தான்தோன்றித் தனமாக எடுக்கக்கூடாது. எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்காமல் தலைநிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட அமைச்சு பதவிகள் தொடர்பில் உறுப்பினர்கள் யாராவது வந்து கேட்டிருந்தால் அவர்களிற்கு பதில் சொல்லியிருப்பேன். இருப்பினும், அப்படி யாரும் என்னிடம் வந்து கேள்வி எதனையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு காரணங்கள் கூறுவதற்கு நான் தயாராக இருந்தேன்' என்று அவர் மேலும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா செம காமடி கருணாநிதி யின் தொண்டர்கள் மாதிரி வந்திட்டாங்க தமிழ் அரசு கட்சி பழசுகள் ஏன் காசு மாலையும் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்டா அம்பி

அந்த கிழடுகள்தான் தேசியத்தை 1948 ஆம் ஆண்டில் தொடங்கினதுகள் என்பதை உந்த பத்திரிகையாளர்கள் மறந்திட்டினம் போலகிடக்குது...அவர்கள் தொடங்கிய தேசிய போராட்டம்தான் இன்று சர்வதேச அளவில் வளர்ந்திருக்கு

 

நிச்சயமாக ஒவொரு தலைமுறையும் ஏதோ ஒருவகையில் தேசியத்தை முன்னேத்துதது சென்றுள்ளார்கள். அதில் கடந்த 30 வருட போராட்தமும் ஓடிய இராத் ஆரும் அந்த கோடாப்பட்தை எம்மில் ஆழமாக பதிந்து சென்றுள்ளது. அதே போல சில அமைப்புக்கள் "தேசிய விடுதலை" என்று புறப்பட்டு பின்னர் என்னவெல்லாம் செய்தார்கள் எனபதும் எமக்கு தெரியும். அது தெரியாத மூடர்கள் நாங்கள் என்ற பாணியில் இங்கே ஊடகங்கள் செய்தி போடுவது அபத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகள் பதவியேற்பு நிகழ்வினைப் புறக்கணிக்கும் அளவுக்கு தமிழரசுக் கட்சி தலைமை எதேச்சதிகாரமாகச் செயற்படுவது வேதனை தருகின்ற விடயம்.

 

இவ்வாறே தொடர்ந்து செல்லுமாயின் உடைவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமோ என்கின்ற அச்சம் எழுவதனைத் தவிர்க்க முடியாது.

 

பிற இயக்கங்களை தவிர்ப்பதானது விடுதலைப் புலிகள் செய்த தவறினைத்தான் சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டணி செய்து வருகின்றது என்பதனை மறுதலிக்க முடியாது.

 

பொது எதிரிக்கு வேலை செய்வதனை விட இவர்கள் தமக்குள் மோதல் ஒன்று இருப்பதனைக் காட்டிக் கொடுப்பதே கவலை தருகின்ற விடயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சுரேஷை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை சம்மந்தனை விட யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கும் அரசின் ஆக்கிரமிப்பிற்கு எதிரா துணிவாக களத்தில் நின்று போராடிய போராளி

அனந்தி அக்காவிற்கு ஓன்று எண்டவுடன் சம்மந்தனை விட அவரின் வீடிற்கு ஓடோடி சென்றது இந்த சுரேஷ் தான்

பலருடைய சுயரூபம் தற்போது தெரியவருகிறது, – சம்பந்தன் குழப்பம் குறித்து கடுமையான தொனியில் பேசினார்.

 

மகிந்த அமைச்சரவைத்தெரிவின்போது மாவட்டம் மாவட்டமாக பார்த்து கொடுப்பதில்லை.இவர்கள் சொல்வதைப்பார்த்தால் வடமாகாணசபையினை மாவட்டசபையாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கு.தமது நலனுக்காக பதவிகளுக்காக பிரதேசவாதம் உருவாக்குவது சிலரின் வழமையாகிவிட்டது.

அமைச்சர் ஒருவர் சகல மாவட்டங்களுக்கும் சேவைசெய்யவே நியமி்க்கப்படுகின்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கட்சி பார்த்தோ மாவட்டம் பார்த்தோ ஒருவரும் வாக்களிக்கவில்லை! அமைச்சரவை தெரிவதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கே உள்ளது. அதைத்தான் அரசியலமைப்பும் கூறுகின்றது.

நிகழ்வில் சம்பந்தன் மேற்படி குழப்பம் குறித்து கடுமையான தொனியில் பேசினார்.

அமைச்சர்களைத்தெரிவுசெய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கே உரியது எனவும் வலியுறுத்தியதுடன் சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் பாதிப்பு என கண்டித்தார். மனம்மாறி வருமாறும் அழைப்பு விடுத்தார்.

அவர் தனது உரையில் தீர்வு குறித்த பேச்சுக்கு தாயார் என்றும் ஆனால் தெரிவுக்குழுவுக்கு வரத்தயாரில்லை என சூசகமாக அரசுக்கு எச்சரிக்ககை விடுத்தார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மிகவும் பொறுப்பான உரையொன்னிறினை ஆற்றி அவையோரிக் பாராட்டுதல்களை பெற்றார்.வழைமையினை விட அன்று கோபத்துடன் உரையாற்றியிருந்தார்.அமைச்சர் பதவி குறித்து எதிர்ப்பு காட்டி பதவி ஏற்க வருகை தராத உறுப்பினர்களையும் தலைமைகளையும் கடிந்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகள் பதவியேற்பு நிகழ்வினைப் புறக்கணிக்கும் அளவுக்கு தமிழரசுக் கட்சி தலைமை எதேச்சதிகாரமாகச் செயற்படுவது வேதனை தருகின்ற விடயம்.

 

இவ்வாறே தொடர்ந்து செல்லுமாயின் உடைவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமோ என்கின்ற அச்சம் எழுவதனைத் தவிர்க்க முடியாது.

 

பிற இயக்கங்களை தவிர்ப்பதானது விடுதலைப் புலிகள் செய்த தவறினைத்தான் சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டணி செய்து வருகின்றது என்பதனை மறுதலிக்க முடியாது.

 

பொது எதிரிக்கு வேலை செய்வதனை விட இவர்கள் தமக்குள் மோதல் ஒன்று இருப்பதனைக் காட்டிக் கொடுப்பதே கவலை தருகின்ற விடயம்தான்.

 

இது தமிழ்ரசுக்கட்சி தனது வெற்றியை கொண்டாடும் நாளாக அல்லாமல் இரவு பகல் சமாதானம், இணைவு என்ற  போர்வையில் பிரிவினைக்கு குத்தி முறிந்தவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும் நாளாக வந்து அமைந்திருக்குகிறது.  கன்சர் புண் வெட்டி நீக்க பட வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது. அதைச் செய்தால் தான் கூட்டமைப்பு வெற்றியைக் கொண்டாடும் நாள் வரும். அதுனுடன் தொடர்ந்து வாழந்தால் உயிராபத்து.  

 

விக்கினேஸ்வரன் தனிய எழுத்த வாக்குக்களை பிரிந்து போக துடிக்கும் கூட்டம் கட்சிகளாக எடுக்கவில்லை. மக்களின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள துடிக்கிறார்கள் போலிருக்கு.

 

இந்தியாவுடன் சேர்ந்து வரதர் செய்ததை வாரிசுகள் செய்கிறார்கள். தங்களுக்கு முடிவு கொண்டுவருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சுரேஷை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை சம்மந்தனை விட யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கும் அரசின் ஆக்கிரமிப்பிற்கு எதிரா துணிவாக களத்தில் நின்று போராடிய போராளி

அனந்தி அக்காவிற்கு ஓன்று எண்டவுடன் சம்மந்தனை விட அவரின் வீடிற்கு ஓடோடி சென்றது இந்த சுரேஷ் தான்

 

உண்மைதான் சுண்டல்.

 

மக்கள் மத்தியில் வேலை செய்கின்றவர்கள் சம்பந்தரோ அல்லது சுமந்திரனோ அல்ல. செல்வம், சுரேஸ், சித்தார்த்தன் போன்றவர்கள்தான் மக்களிடம் நேரடியாகச் சென்று வாக்குக் கேட்டவர்கள்.

 

சம்பந்தரோ மாவையோ எப்பவாது சிறிய கிராமங்களுக்குள் எல்லாம் சென்று வாக்குச் சேகரித்தார்களா என்று யாழ். மக்களிடம் கேட்டால் யாவும் தெரிய வரும்.

 

இயக்கங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் நாம் மீளாய்வு செய்து பார்ப்பதனை விடுத்து இன்று அவர்கள் என்ன செய்கின்றார்கள்; வடக்கு - கிழக்கு மக்கள் இவர்கள் தொடர்பில் என்ன அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர் என்று கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முடி சூட்டிக்கொள்ளும்  கனவாங்களே.....

ஒரு முறை

ஒரு நிமிடம்

எமக்காய் உயிர்தந்த அந்த உத்தமர்களை நினைத்தீரா??? :(

பலருடைய சுயரூபம் தற்போது தெரியவருகிறது, – சம்பந்தன் குழப்பம் குறித்து கடுமையான தொனியில் பேசினார்.

 

மகிந்த அமைச்சரவைத்தெரிவின்போது மாவட்டம் மாவட்டமாக பார்த்து கொடுப்பதில்லை.இவர்கள் சொல்வதைப்பார்த்தால் வடமாகாணசபையினை மாவட்டசபையாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கு.தமது நலனுக்காக பதவிகளுக்காக பிரதேசவாதம் உருவாக்குவது சிலரின் வழமையாகிவிட்டது.

அமைச்சர் ஒருவர் சகல மாவட்டங்களுக்கும் சேவைசெய்யவே நியமி்க்கப்படுகின்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கட்சி பார்த்தோ மாவட்டம் பார்த்தோ ஒருவரும் வாக்களிக்கவில்லை! அமைச்சரவை தெரிவதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கே உள்ளது. அதைத்தான் அரசியலமைப்பும் கூறுகின்றது.

நிகழ்வில் சம்பந்தன் மேற்படி குழப்பம் குறித்து கடுமையான தொனியில் பேசினார்.

அமைச்சர்களைத்தெரிவுசெய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கே உரியது எனவும் வலியுறுத்தியதுடன் சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் பாதிப்பு என கண்டித்தார். மனம்மாறி வருமாறும் அழைப்பு விடுத்தார்.

அவர் தனது உரையில் தீர்வு குறித்த பேச்சுக்கு தாயார் என்றும் ஆனால் தெரிவுக்குழுவுக்கு வரத்தயாரில்லை என சூசகமாக அரசுக்கு எச்சரிக்ககை விடுத்தார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மிகவும் பொறுப்பான உரையொன்னிறினை ஆற்றி அவையோரிக் பாராட்டுதல்களை பெற்றார்.வழைமையினை விட அன்று கோபத்துடன் உரையாற்றியிருந்தார்.அமைச்சர் பதவி குறித்து எதிர்ப்பு காட்டி பதவி ஏற்க வருகை தராத உறுப்பினர்களையும் தலைமைகளையும் கடிந்து கொண்டார்.

 

சுரேசின் பிரிவினை முயற்சி செய்த  ஒரு நன்மை தமிழரசுக்கு கட்சிக்கு விக்கினேஸ்வரனையும் சேர்த்துவைத்துதான் போலிருக்கு.

 

தன்னுடைய தம்பியை உள்ளே தள்ளி முடித்தது மட்டுமின்றி முல்லை தீவுக்கு இரண்டு மந்திரிகள் கேட்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

முடி சூட்டிக்கொள்ளும்  கனவாங்களே.....

ஒரு முறை

ஒரு நிமிடம்

எமக்காய் உயிர்தந்த அந்த உத்தமர்களை நினைத்தீரா??? :(

அவர்களின் பிள்ளைகளோ உறவினர்களையோ இழந்திருந்தால் அந்த வலியும் வேதனையும் புரிந்திருக்கும். இவர்கள் உசுப்பேத்தி மற்றவர்களை களமுனைக்கு அனுப்பிய மேடைப்பேச்சு வீரர்கள் நிச்சயமாக நினைத்திருக்கமாட்டார்கள்  :(

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகள் பதவியேற்பு நிகழ்வினைப் புறக்கணிக்கும் அளவுக்கு தமிழரசுக் கட்சி தலைமை எதேச்சதிகாரமாகச் செயற்படுவது வேதனை தருகின்ற விடயம்.

 

இவ்வாறே தொடர்ந்து செல்லுமாயின் உடைவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமோ என்கின்ற அச்சம் எழுவதனைத் தவிர்க்க முடியாது.

 

பிற இயக்கங்களை தவிர்ப்பதானது விடுதலைப் புலிகள் செய்த தவறினைத்தான் சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டணி செய்து வருகின்றது என்பதனை மறுதலிக்க முடியாது.

 

பொது எதிரிக்கு வேலை செய்வதனை விட இவர்கள் தமக்குள் மோதல் ஒன்று இருப்பதனைக் காட்டிக் கொடுப்பதே கவலை தருகின்ற விடயம்தான்.

உங்கள் கருத்துக்கு பல பச்சைகள்.

 

 

கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது அரசியல் வேளைகளுக்க அன்று கட்சி அரசியல் செய்யவல்ல.

 

இதை அங்கத்துவ கட்சிகள் அலட்சியம் செய்வது வருத்தத்தை தருகிறது.

 

ஒரு புதிய அரசியல் இயக்கமொன்றின் தேவை உணரப்படுகின்றது.

 

கஜேந்திரனின் அமைப்பு சரியான பாதையில் பயணித்தால் இந்த கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனையவர்களைவும் இனத்து செயற்பட சந்தர்ப்பங்கள் கிடைத்தால் மக்களின் தெரியும் நிச்சயம் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

முடி சூட்டிக்கொள்ளும்  கனவாங்களே.....

ஒரு முறை

ஒரு நிமிடம்

எமக்காய் உயிர்தந்த அந்த உத்தமர்களை நினைத்தீரா??? :(

சம்பிரதாயத்திற்காக மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது என்று செய்தியில் உள்ளது. கதிரையால் எழும்பக் கஷ்டப்படும்போது கட்டாயம் நினைத்திருப்பார்கள்.

ஒருபக்கத்தில் மத்திய அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் போக்காளர்கள், மற்றொரு பக்கத்தில் சர்வதேச சமூகம், என்று மும்முனை அழுத்தங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், வடக்கு மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது மிகவும் சவாலுக்குரிய விடயம் தான். ஆனாலும், நீதிமன்றத்தில் எப்போதும் இருவேறு முரண்பட்ட வாதங்களுக்குள் நடுநிலையுடன் செயற்பட்டுப் பழகிப் போனவர் என்பதால், எத்தகைய முரண்பட்ட கருத்துகள் எழுந்தாலும், அதைச் சமாளிக்கும் திறன் பெற்றவராக வடக்கு மாகாண முதல்வர் இருப்பது தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பலம்.

இங்கே சுரேஷை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை சம்மந்தனை விட யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கும் அரசின் ஆக்கிரமிப்பிற்கு எதிரா துணிவாக களத்தில் நின்று போராடிய போராளி

அனந்தி அக்காவிற்கு ஓன்று எண்டவுடன் சம்மந்தனை விட அவரின் வீடிற்கு ஓடோடி சென்றது இந்த சுரேஷ் த

உப்புத்திண்டவன் தண்ணி குடிக்கத்தானே வேண்டும் .செய்த பாவங்களுக்கான பிராயசித்தமாக இருக்கலாம் 

 

இவர்களுடைய செய்கைகளை கிழக்கு மக்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.