Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா
[ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ]

விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவர்களும் முயன்றதாக, எவ்பிஐ குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இன்னொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார்.

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இவருக்கான தண்டனை வரும் 28ம் நாள் அறிவிக்கப்படவுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20131017109268

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன் இனத்தை ஒரு அரச பயங்கரவாதம் விமானக் குண்டு வீசி அழிப்பதை தவிர்க்கத் தானே இதனைச் செய்தார். இன்று உலகமே அறியுது தானே அப்படி ஒரு பெரும் மனிதப் பேரவலம் நடந்திருக்கு என்று.

அப்படி இருக்கும் போது.. இது போன்ற வழக்குகளை வாதாடுவோர் ஏன் அவற்றை நீதிபதிகளின் முன் நியாயமாக நிறுத்தக் கூடாது. இந்த அப்பாவிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கக் கூடாது. சர்வதேசம் ஒரு மனித அவலத்தை தடுக்கத் தவறியதால் தானே இந்த இளைஞர்களை ஆயுதங்களால் அதனை தடுக்க முனைந்தார்கள். அதற்காகத் தானே ஆயுதங்களை வாங்கவும் முனைந்தனர்..! இதில் பொதுமக்களை இலக்கு வைக்கும் நோக்கங்கள் இருக்கல்லையே. அப்போ எப்படி இது பயங்கரவாதம் ஆகும். குற்றச்ச் செயலாகும்..??! அப்படி என்ற கருத்தையும் முன்வைக்கலாம் தானே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏவுகணைகளை அவர் அமெரிக்காவிலோ.. தனது வேறு எங்கும் பயங்கரவாத நோக்கங்களுக்காகவோ.. அப்பாவி மக்களை கொல்லவோ.. அவர்களுக்கு எதிராக.. பாவிக்கவோ வாங்கவில்லை. மோட்டிவ் என்று பார்த்தாலும்.. தனது பூர்வீக  நாட்டில் தனது இனத்தை அழிக்கும் ஒரு அரச பயங்கரவாதத்தின் மனித அழிவுச் செயலை தடுத்து நிறுத்துவதாக உள்ள நிலையில்.. இது எப்படி பயங்கரவாதம்.. அமெரிக்காவின் சிவில்.. மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்..??! எனவே இது ஒரு மனித நேய நோக்கம் கொண்டது என்ற வகையில்.. இந்தக் குற்றத்திற்கு குறைந்த தண்டனை வழங்கக் கேட்கலாம். அவருக்கு சரியான அறிவுரை வழங்குவதோடு வெளிநாடுகளுக்கு ஆயுத உதவிகள் செய்து..  மனிதப் படுகொலைகளுக்கு உதவும் அமெரிக்க அரசையும் பாதுகாப்புத்துறையையும் நீதித்துறை கண்டிக்க வேண்டும்.

இதுதான் கேள்வி. இதனை நீதிபதிகள் உணரச் செய்ய வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது mitigating circumstances. தண்டனை கொடுக்கும் போது இவை கருத்தில் எடுக்கப்படும். குற்றத்தை குறைக்கும் பேரம் கட்டாயம் நடக்கும். இவர் குற்றத்தை ஒப்புகொண்டதால் தண்டனை மிகவும் குறையும் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு செட்டப் வழக்கு(entrapment case). இப்போது கனடா, அமெரிக்காவில் சிறி லங்காவின் கோர உண்மை முகம் வெளிவந்து நீதியரசர்கள் எல்லாம் ஈழதமிழருக்கு ஆதரவாகவே தீர்ப்பை கொடுக்கிறார்கள்.

ஆனானப்பட்ட கே. பி. ராஜபக்சவுடன் கட்டி உருளும் போது, இந்த இளையோர் எல்லாம் அப்பாவிகள் என்று நீதியரசருக்கு தெரியும்.

செட்டப் வழக்கா? ஆ!!

இவர்கள் முதலில் பொட்டம்மான் டீமால் அடையாளம் காணப்பட்டு, சிறிது காலம் இயங்கி, அதன்பின் சார்ள்ஸ் ஆன்டனி (தலைவரின் மகன்) டீமால் உள்வாங்கப்பட்டவர்கள்.

ஆயுத வியாபாரி என நினைத்து இவர்கள் அமெரிக்காவில் டீல் பண்ணியது எப்.பி.ஐ. ஏஜென்ட்டுகளிடம்.

அவர்கள் தமது இடத்துக்கு இவர்களை அழைத்து, இவர்களுக்கு கையில் ஆயுதம் கொடுத்து, ரகசியமாக போட்டோ எடுத்து, பேசிய அனைத்தையும் ஒலிப்பதிவு செய்து போட்ட வழக்கு.

குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டதால், தண்டனை குறையும் என்று சொல்கிறார்கள்..

பாவம் அந்த மாணவர்கள் .உண்மையில் நாட்டுவிடுதலைக்காக  விசுவாசம் ஆகத்தான் செயற்பட்டார்கள் .வன்னிதலைமை எதுவும் செய்யும் என்பது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கான விலை தான் இவர்கள் இப்போ அனுபவிப்பது .

உயிரின் அருமை தெரிந்திருந்தால் இவ்வளவு அழிவுகளும் வந்திருக்கவே மாட்டாது . 

  • கருத்துக்கள உறவுகள்
உயிரின் அருமை தெரிந்திருந்தால் இவ்வளவு அழிவுகளும் வந்திருக்கவே மாட்டாது .

வியட்நாமிய மக்களும் உயிரின் அருமை தெரியாமல் தான் போராடினார்கள். நன்றி. வணக்கம்.

பாவம் அந்த மாணவர்கள் .உண்மையில் நாட்டுவிடுதலைக்காக  விசுவாசம் ஆகத்தான் செயற்பட்டார்கள் .வன்னிதலைமை எதுவும் செய்யும் என்பது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கான விலை தான் இவர்கள் இப்போ அனுபவிப்பது .

உயிரின் அருமை தெரிந்திருந்தால் இவ்வளவு அழிவுகளும் வந்திருக்கவே மாட்டாது . 

சும்மா புலிகளை இதுக்கை இழுக்காதேங்கோ...

விமான தாக்குதல்களால் நாளாந்தம் 100 , 200 எண்று மக்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டு இருந்த காலத்தில் துடிப்பாய் இருந்த இளைஞர்களை  கொதிநிலைக்கு கொண்டு போய் நடத்தப்பட்ட நாடகம் இது ... 

ஆயுதம் அனுப்ப காசு சேத்து தருமாறு  புலிகளின் செயற்பாட்டாளர்களாக காட்டி கொண்ட  தமிழர் ( இந்திய அடியும்  கொண்ட )  சிலரின் திட்டமிட்ட வலையின்  வீழ்த்தப்பட்டவர்கள் இவர்கள்...   

மக்களுக்குள் செயற்படும் மாணவர்களான இவர்கள்  விமான எதிர்ப்பு ஏழுகணையை  பார்க்க அமரிக்காவுக்கு போய் இருக்க வேண்டிய தேவை கூட  இல்லை...   அங்கை இருந்து அதை ஏற்ற போவதும் இல்லை எனும் போது  FBI  கையும் களவுமாக பிடிக்க வசதியாக வரவளைக்க பட்டவர்கள்.. 

இதிலை வன்னி தலைமை எண்டு நீங்கள் சொறிஞ்சு ஆகப்போவது ஒண்டும் இல்லை.... 

Edited by தயா

எந்த குற்றத்தை எப்ப நீங்கள் ஒப்புகொண்டீர்கள் நீங்கள் ,சாமி ஒப்புகொண்டாலும் குருக்கள் விடார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் யார் எதை ஒப்புக்கொண்டு, யார் எதை மறுத்து என்ன? எல்லாமே நடந்து முடிந்து விட்டது. திரை விழுந்தபோது, சிலர் சிக்கிக் கொண்டார்கள், சிலர் தப்பித்துக் கொண்டார்கள், சிலர் உயிரிழந்தார்கள், சிலர் துரதிஷ்டசாலிகள், சிலருக்கு பெரும் அதிஷ்டம். அத்தியாயம் ஓவர். 

அடுத்த பாகம், ‘விக்கினேஸ்வர மகிமை’ தொடங்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் விடுதலையை நேசித்த வல்லுநர்களான சுரேஷ், பிரதீபன் மற்றும் ஏனையவர்கள் நீதிமன்றங்களால் மட்டுமல்ல எங்களாலும் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளுக்கெதிரான பரப்புரை என நினைத்துக் கொண்டு
அமெரிக்க நீதிமன்றம் இவர்களுக்கு அதிக பட்சத் தண்டனையை
வழங்கக்கூடாது.
எத்தனையோ அரசியல்வாதிகள் நேரடியான ஆயுதக்கடத்தலில்
ஈடுபடும்போது இவர்கள் செய்ய நினைத்தது சிறிய விடயமே

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இதிலிருந்து என்ன தெரிகின்றது.

கே.பி.யை விலத்திவிட்டு பின்னர் புலிகளால் ஒழுங்காக ஆயுதங்களை வாங்க முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

கே.பி. எல்லாம் இப்படி குழந்தைப் புள்ளைத்தனமாக- தான் மாட்டியோ இல்லை மற்றவர்களை மாட்டியோ விடவில்லையே.

தீர்க்க தரிசனம் மிக்க தலைவர் எப்படி இதில் கோட்டை விட்டார். சொல்லுங்கப்பு சொல்லுங்க.

இவர்களின் விடுதலைக்காக வீதிகளில் புலம்பெயர் ****** ஏன் இதுவரை இறங்கவில்லை?

வீதிகளை அடைத்து அமெரிக்கா, கனடாவை செயல் இழக்கச் செய்யலாமே.

இதன் மூலம் உங்கள் பவரைக் காட்டலாமே.

ஏன் செய்யலை? ஏன்? ஏன்? ஏன்?

இன்னுமொரு சந்தேகம். இவர்களை எல்லாம் பிடித்து வழக்குப் போட்டு இருக்கின்றார்கள்.

கே.பி.க்குப் பின்னர் காஸ்ட்ரோ கும்பலின் ஆயுதம் வாங்கும் நபராக செயற்பட்ட ஐயா என்று அழைக்கப்படும் ஆனந்தராஜா மட்டும் எப்படி அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாடுகின்றார்?

எங்கேயோ இடிக்குதே...

Edited by நியானி

கேபி சார்க்கு ஜிங்சக் ஜிங்சக் ஜிங்சக் அப்புறம் .......அய்யா மாட்டுபடாமல் திரிவது உங்களால் பொறுக்கமுடியாமல் இருக்கிறதா? இல்லை போட்டு வாங்குதலா? 

இவர்களுக்கு மென்மையான் தீர்ப்பு வளங்கினால் இனிவரும் காலங்களில் ஏனைய பயங்கரவாத தொடர்பு வளக்குகளிலும் மென்மையான தீர்ப்பை வளங்கவேண்டிவரும் என நீதிபதிகள் சிந்திக்கலாம்.
 
ஏனென்றால் இந்தத் தீர்ப்புகள் மேற்கோல் காட்டப்படலாம்.

இந்த இளையோர் மீண்டு வர பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இதிலிருந்து என்ன தெரிகின்றது.

கே.பி.யை விலத்திவிட்டு பின்னர் புலிகளால் ஒழுங்காக ஆயுதங்களை வாங்க முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

கே.பி. எல்லாம் இப்படி குழந்தைப் புள்ளைத்தனமாக- தான் மாட்டியோ இல்லை மற்றவர்களை மாட்டியோ விடவில்லையே.

தீர்க்க தரிசனம் மிக்க தலைவர் எப்படி இதில் கோட்டை விட்டார். சொல்லுங்கப்பு சொல்லுங்க.

இவர்களின் விடுதலைக்காக வீதிகளில் புலம்பெயர் ****** ஏன் இதுவரை இறங்கவில்லை?

வீதிகளை அடைத்து அமெரிக்கா, கனடாவை செயல் இழக்கச் செய்யலாமே.

இதன் மூலம் உங்கள் பவரைக் காட்டலாமே.

ஏன் செய்யலை? ஏன்? ஏன்? ஏன்?

இன்னுமொரு சந்தேகம். இவர்களை எல்லாம் பிடித்து வழக்குப் போட்டு இருக்கின்றார்கள்.

கே.பி.க்குப் பின்னர் காஸ்ட்ரோ கும்பலின் ஆயுதம் வாங்கும் நபராக செயற்பட்ட ஐயா என்று அழைக்கப்படும் ஆனந்தராஜா மட்டும் எப்படி அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாடுகின்றார்?

எங்கேயோ இடிக்குதே...

அமெரிக்க அரசால் கே.பியின் வலது கை பிடிக்கப்பட்டு தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்  பற்றி வாய் திறக்க மாட்டீர்கள்.இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.