Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ytg(1).jpg

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்  பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில்,  பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/87596-2013-10-30-00-17-26.html

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியின் போர்க்கப்பலை வாய்பார்க்க கொழும்பு போறன் என்டு சொல்லி வரும் இந்த டம்மி தலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-28-10-2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவிற்க்கு உண்டியல் குலுக்க இன்னொரு அரிய சந்தர்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நீங்க உங்க உங்க பாக்கெட் நிறைய வைச்சிருக்கிற பணத்த உண்டியலுக்குள்ள போட்டு புண்ணியம் தேடிக்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் மிஸ் பண்ணிடாதிங்க

மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கூடாது: இராதாகிருஸ்ணன் எம்.பி

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை எந்த காரணம் கொண்டும் இந்திய அரசாங்கம் புறக்கணிக்க கூடாது. இந்த மாநாட்டில் பங்குபற்றி இலங்கையின் காத்திரமான செயல்திட்டங்களுக்கு தனது முழுமையான பங்களிப்பை செய்ய இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும்' என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனை நான் வரவேற்கின்றேன். வடக்கில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெற்று அந்த மக்கள் தாம் விரும்பிய தரப்பினரை தெரிவு செய்திருக்கின்றார்கள். இதுவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

எமது நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று கூறியவர்களுக்கு இது ஒரு சாட்டை அடியாக அமைந்து விட்டது. வடக்கில் அரசாங்கம் தோல்வி கண்டது என்பதைவிட ஜனநாயகத்தை ஜனாதிபதி வெற்றிபெறச் செய்துள்ளார் என்பதே உண்மை. இந்திய அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தி அந்த மக்கள் விரும்பிய சாராரை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வழியுறுத்தி வந்தனர். இன்று அது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இந்த பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசாங்கத்தின் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் கலந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வடக்கில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற்று முடிந்த இந்த வேளையில் அடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பொதுவநலவாய மாநாட்டை குறிப்பிடலாம்.

இதில் இந்தியா பங்குபற்றுவதன் மூலம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தனது காத்திரமான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். அதைவிடுத்து இந்த மாநாட்டை புறக்கணிப்பது என்பது அது தமிழர்களுக்கு பாதகமாவே அமையும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

இலங்கை தொடர்பாக பல்வேறு நாடுகளில் நிலவிவந்த கருத்துக்களை பொய்ப்பிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இங்கு வருகை தரவுள்ள அரச தலைவர்கள் நேரடியாக இலங்கையில் நடைபெறுகின்ற அபிவிருத்தியையும் எமது சமாதானமான சூழலையும் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே இவற்றையும் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் இந்தியா பங்குபற்ற வேண்டும் என்பதே எனதும் மலையக மக்களினதும் எதிர்பார்ப்பாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

மாநாட்டில் சிங்கு சாப்பிட மிக்ஸர் வாங்கி வைப்பாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் வருவார்  எனத் தகவல் வந்துள்ளது.
 
தலைப்பாகையுடன் வருவாரா இல்லையா என 
இனிமேல் தான் முடிவு எடுக்கப்படும் :D

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவிற்க்கு உண்டியல் குலுக்க இன்னொரு அரிய சந்தர்ப்பம்.

இந்தியா எண்டைக்குத்தான் தனது முள்ளந்தண்டை, நிமிர்வதற்காக உபயோகிக்கப்போகின்றது? :o

இலங்கை, இந்தியாவை 'முள்ளிவாய்க்கால்' பணயக் கைதியாக வைத்துள்ளது, இப்போது எல்லோருக்கும் விளங்கியிருக்கும் ! :wub:

இதுக்கு வரப்போகும் பதில், 'ராஜ தந்திரம்' ! :D  

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநாட்டில் சிங்கு சாப்பிட மிக்ஸர் வாங்கி வைப்பாங்களா?

சிங்குக்கு மட்டுமல்ல.. கூட்டமைப்புக்கும் சேர்த்து வாங்குகிறார்களாம். வீணாப் போகாதுதானே..

இலங்கையில் உள்ள தமது முதலீடுகளை காக்க வேண்டிய தேவை சோனியாவுக்கும், சிதம்பரத்துக்கும், சிவ்சங்கர் மேனனுக்கும் மன்மோகன் சிங்கிக்கும் இருப்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அது மட்டும் காங்கிரஸ் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுவிட்டதாகப் போவதில்லை.

தலைக்கு மேல் என்றால் சாண் என்ன முழம் என்ன என்று காங்கிரஸ் நினைக்கலாம். வெல்லப்போவதில்லாத 2014 மத்திய தேர்தலுக்காக தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரசை காக்கப் போய் இலங்கையில் எமது முதலீடுகளை ஏன் இழப்பான் என்று நினைக்கிறார்களாகும். ஆனால் மோடி மீது மதவாத குற்றம் சுமத்தும் காங்கிரசை அடுத தேர்தலின் பின்னர் போர்க்குற்றம் சுமத்தி கோட்டுக்கு இழுக்காமல் போக தமிழக மக்கள் மறக்க போவதில்லை. தலைவர்கள் தங்கள் பணத்துக்கு முதல் தங்களையும் காப்பது பற்றி சிந்திக்கட்டும். இலங்கையுடன் இன்னொரு தடவை சேர்ந்து பொதுநலவாய முள்ளிவாய்க்காளை காங்கிரஸ் அரசு நிறைவேற்ற்றி முடிக்காமல் இருக்கட்டும்.

இந்தியா எண்டைக்குத்தான் தனது முள்ளந்தண்டை, நிமிர்வதற்காக உபயோகிக்கப்போகின்றது? :o

இலங்கை, இந்தியாவை 'முள்ளிவாய்க்கால்' பணயக் கைதியாக வைத்துள்ளது, இப்போது எல்லோருக்கும் விளங்கியிருக்கும் ! :wub:

இதுக்கு வரப்போகும் பதில், 'ராஜ தந்திரம்' ! :D  

இலங்கை இந்தியாவை மட்டுமல்ல அமேரிக்கா ,பிரிட்டன் ,ஐ .நா எல்லோரையும் முள்ளிவாய்க்கால் பணயக்கைதிகள் ஆக வைத்திருக்கின்றார்கள் .பேய்க்காய்கள் :D .

பேய்க் காய்களா அல்லது வெறும் பேய் சுரைக்காய்களா புரியவில்லை. அமெரிக்காவும், பிருத்தானியாவும்தான் போர்குற்றத்தை ஐ.நா.வில் முன்னெடுக்க முயல்வதை இவர்கள் இன்னும் அறியாமல் இருபதால் பேய்க்காய்ளாக  இருப்பதிலும் பார்க்க பேய்சுரைக்காய்களாக இருக்கும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

funny-manmohan-funny-accident.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அர்ஜூன். இந்த்ஹப்பெரிய இந்தியா பள்ளிக்கூட பிள்ளை போல முள்ளிவாய்க்கால் "பிடியை" இலங்கை கையில் கொடுத்து விட்டு இப்போ பணயக்கைதியாய் நிற்க்ஜிறது எனும் இவர்கள் கருத்து உலகமா காமெடி.

சர்வதேச ராஜதந்த்ஹிரத்தை, கள்ள மட்டை போடும்மாப்போல் நினக்கிறார்கள்.

உண்மை தான், தலைவா!

உங்களுக்கு மற்றவர்களை மனிதர்களாக மதித்துக் கருத்துப் பகிரத் தெரியா விட்டால், போர்த்து மூடிக்கொண்டு படுத்துத் தூங்கவேண்டியது தானே!

உங்களைப்ப்போலவே மற்றவர்களையும் நினைக்கும், இந்தக் குணத்தை முதலில் மாற்றுங்கள்!

எந்தப்பெரிய இந்தியா என்று எங்களுக்கும் ஒருக்கால் விளங்கப்படுத்துங்களேன்! :D

அர்ஜுனை ஏன் உங்களுடன் சேர்க்கின்றீர்கள்?

அவர் எழுதிய கருத்து நக்கலைப்போன்று தோன்றினாலும் , அவரது கருத்தில் தவறு இருப்பதாக, நான் கருதவில்லை! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பின்னணி விஷயங்கள் தெரிந்தால், பொதுநலவாய மாநாடு விஷயத்தில் இந்தியா மிகவும் கவனமாக விளையாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். யாரையும் மட்டமாக எடைபோட கூடாது.

1) முதலில் விக்கினேஸ்வரன், மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

2) அதன் பின் சென்னை சென்ற சம்பந்தன், மத்திய அரசுக்கு எதிரணியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களை சந்தித்தார்.

3) அந்த சந்திப்பில், இந்தியா கலந்துகொள்வதை இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை, கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுதான் என்றார்.

4) சனிக்கிழமை கொழும்பு சூரியன் எப்.எம். வானொலியில் விக்கினேஸ்வரனை பாராட்டி, கே.பி. பேட்டி கொடுத்தார். விக்கியின் அணுகுமுறை அருமை என்பதே பேட்டியின் சாராம்சம். முக்கியத்துவம் கருதி சனிக்கிழமை இரவு செய்திகளின் நடுவே பேட்டி ஒலிபரப்பாகியது.  

5) திங்கட்கிழமை விக்கினேஸ்வரன், மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். “நீங்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு கொழும்பு வந்தால், யாழ்ப்பாணத்துக்கும் வாருங்கள்” என அழைப்பு விடுத்தார்.

6) இந்த கடிதத்துக்கு இரண்டு டிப்ளமட்டிக் அர்த்தங்கள் உண்டு. முதலாவது, நீங்கள் (சிங்) கொழும்பு வாருங்கள். இரண்டாவது, நாம் பா.ஜ.க.விடம் சொன்னதை வைத்து நீங்கள் வந்தால் நாங்கள் உங்களுடன் கோபம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். யாழ்ப்பாணமும் வாருங்கள்.

7) விக்கினேஸ்வரன் டில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை அனுப்பிய கடிதம், ஹிந்து பத்திரிகைக்கு புதன் கிழமை லீக் செய்யப்படுகிறது.

8) மன்மோகன் சிங்குக்கு, இலங்கை அரசின் அழைப்பு மட்டுமல்ல, வட மாகாண அரசின் அழைப்பும் உள்ளது என காட்டப்படுகிறது. 

9) மன்மோகன் சிங் கொழும்பு செல்லும் முடிவு, விக்கியின் கடிதம் வெளியே வந்தபின் புதன் இரவு டில்லியில் எடுக்கப்படுகிறது.

10) அடுத்து நடக்கப் போவது - கூட்டமைப்பின் அறிவிப்பு. அவர்கள் என்ன சொல்வார்கள் என்றும் சுலபமாக ஊகிக்கலாம். “இந்தியா வருவதால், நாமும் கலந்து கொள்கிறோம்” 

11) விக்கியின் அழைப்பு, கூட்டமைப்பு கலந்து கொண்டது ஆகிய இரண்டும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் (தமிழகத்தில்) பயன்படுத்தப்படும்.

தமிழகத்தில் இன்றைய அரசியல் நிலையில், பிரச்சாரம் பலன் கொடுக்காது என்பது வேறு விஷயம். 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவை மட்டுமல்ல அமேரிக்கா ,பிரிட்டன் ,ஐ .நா எல்லோரையும் முள்ளிவாய்க்கால் பணயக்கைதிகள் ஆக வைத்திருக்கின்றார்கள் .பேய்க்காய்கள் :D .

அர்ஜுன், நீங்கள் அரசிய தெரிந்தவர் என்று அடிக்கடி உங்கள் கருத்துக்களில் சொல்லி வருகிறீர்கள். அப்படித் தெரிந்தவர் எழுதுமாப்போல எழுத விரும்புகிறேன். 

நீங்கள் அண்மைக்காலமாக இந்திய அரசியல் மற்றும் இராணுவ வல்லுனர்களின் பேட்டிகள், கலந்துரையாடல்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பார்த்தவற்றில் ஏதாவது உங்களின் அரசியல் அறிவிற்குப் பட்டதா என்று தெரியவில்லை. உங்களைப்போல அரசியல் எனக்குத் தெரியாவிட்டாலும்கூட அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு கடிணமானதாக எனக்கு இருக்கவில்லை.

உதாரணத்திற்கு பேராசிரியர் சூரிய நாராயணன் என்பவரை எடுத்துக்கொள்வோம். இவர் முன்னால் இந்திய ராஜதந்திரி, இன்றும் இந்திய வெளியுறவுத்துறையில் கடுமையான செல்வாக்கைக் கொண்ட வெளியிலிருந்து ஆலோசனை வழங்கும் ஒரு மூத்த இந்திய ஆலோசகர். இவரைப் போலவே முன்னால் இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன். இன்று தமிநாட்டில் செல்வாக்குக் கொண்ட காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய எப்போதாவது விரும்பியதுண்டா?

இவர்கள் அனைவரும் திரும்பத் திரும்பச் சொல்லிவரும் ஒரு விடயம்தான், இலங்கையில் பிற நாடொன்றின் செல்சவாக்கு வளருவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. தனது இராணுவத் தேவைகளுக்காகவும், இராஜதந்திர நெருக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் இலங்கை சீனா பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாடுகள் எமது தெற்கு எல்லையில் காலூன்றுவது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஆகவே இலங்கை என்ன தேவைகளுக்காக இந்த நாடுகளிடம் கையேதுகிறதோ, அந்ததேவைகளை இந்தியா பூர்த்தி செய்யுமிடத்து இலங்கை அவர்களை நோக்கிப் போக வேண்டிய அவசியமில்லை. ஆகவே இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டியது அவசியம் என்று சொல்கிறார்கள்.  "நாங்கள் செய்யாவிட்டால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்துவிடும், ஆகவே நாங்கள் முந்திக்கொள்வோம் " என்கிறார்கள். 

இந்தியாவின் குடுமி இலங்கையின் கைகளுக்குள் இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்திற்கப்பால் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் முண்டு கொடுப்பதற்கான காரணங்களை வைத்திருக்கிறது. சீன பாக்கிஸ்த்தானிய பூச்சாண்டிகளை வைத்தே இலங்கை இந்தியாவை வளைத்து வைத்திருக்கிறது என்பதுதான் எனது எண்ணம். ஏனென்றால் இதையேதான் இந்தியர்களும் சொல்லி வருகிறார்கள். "நீங்கள் தராவிட்டால் பரவாயில்லை, நாங்கள் வேறு யாரிடமாவது பெற்றுக்கொள்கிறோம்" என்பதுதான் இலங்கையின் துரும்புச் சீட்டு. இதை மிகவும் இலாவகமாகப் பாவிக்கிறது இலங்கை. இந்த பிளாக்மெயில் இராஜதந்திரத்தில் இலங்கையிடம் இந்தியா தோற்றுத்தான் போய்விட்டது.

இறுதியாக, இலங்கையில் நடந்துமுடிந்தது ஒரு இனக்கொலை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?? அந்த இனக்கொலை யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியா பங்காற்றியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?( தாம் பங்காற்றியது உண்மைதான் என்பதை அண்மையில் ஹரிஹரன் அவர்கள் செவ்வியொன்றில் அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார். சூரிய நாராயணன் கூட தமது பங்கை நியாயப்படுத்தி இருக்கிறார். நாச்சியப்பன் இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்கப்படுவதை (இரு போர்க்கப்பல்கள்) சரியென்று வாதிட்டிருக்கிறார்)). அப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளுமிடத்து இந்தியா தனது நண்பனைக் காப்பாற்ற நிச்சயம் முயலும் என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.  இதைத்தவிர இந்தியாவுக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,

இலங்கை சீனாவிடம் போகாமல் இருக்க இந்தியா உதவுகிறது என்பது உண்மை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் பிடி இலங்கையில் மாட்டிவிட்டது, அதனால் பயந்து தான் இந்தியா இலங்கைக்கு உதவுகிறது என்பது, அம்புலிமாமா கதை.

இவ்வளவு பெரிய பிராந்திய அரசு அப்படி ஒரு பிடியை இலங்கை போல் ஒரு சுண்டைகாய் நாட்டிடம் கொடுக்கும், கொடுத்து விட்டு பணய கைதியாய் இருக்கும் என்பது நம்ப முடியாத கதை.

நடப்பது என்னெவென்றால் இந்தியா 13 + ஐ வலியுறுத்துகிறது. இலங்கை முரண்டு பிடிக்கிறது. இலங்கையை முற்றிலும் தன்னை விட்டு அகல விடாமல் மிரட்டும் தொனியில் காரியம் சாதிக்க பார்க்கிறது இந்தியா. இந்தியாவை முற்றிலும் பகைகாமல் 13 ஐ குப்பையில் போடப் பார்க்கிறது இலங்கை. இது ஓர் ராஜதந்திர பனிப்போர். இந்த இடைவெளியில் கூட்டமைப்பு நமக்கு வேண்டிய வகையில் காய் நகர்த்த வேண்டும்.

இந்த பனிப்போர் இலங்கைக்கு சாதகமாய் முடியலாம், ஒரளவுக்கு மேல் இந்தியா பொறுமையிழந்து, எமக்கு சாதகமாய் அமையலாம், அல்லது இப்படியே வருடக்கணக்கில் இழுபடலாம்.

இதின் முடிவு, இந்திய ஆட்சி மாற்றம், கூட்டமைப்பின் மதிநுட்ப்பம், அமெரிக்காவின் போக்கு, இலங்கையின் நெகுழ்வுமை என பல்வேறு variables இன் கூட்டு விளைவாக இருக்கும்.

இதை எதிர்வு கூறுவது இயலாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்ஸ்,

கோவியாதேயுங்கோ, யாரையும் நான் குறிவச்சு சொல்லேல்ல. சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் கள்ள மட்டை என்ற சொல்லை பாவித்தனான்.

கடன் அட்டைத் திருட்டு செய்யும் பெருந்தகைகள் யாவரயேனும் என்வார்த்தைகள் பாத்திதிருந்தால் கோடானு கோடி மன்னிப்புகள்.

அப்புறம் அர்ஜூனின் நக்கல நான் தான் பிழையா விளங்கீட்டன் போல.

சில பின்னணி விஷயங்கள் தெரிந்தால், பொதுநலவாய மாநாடு விஷயத்தில் இந்தியா மிகவும் கவனமாக விளையாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். யாரையும் மட்டமாக எடைபோட கூடாது.

1) முதலில் விக்கினேஸ்வரன், மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

ஏற்கனவே பிழையானதாக அறிவிக்கபட்ட தகவல். விக்கினேஸ்வரின் பேச்சாளர் மறுத்த பின்னர்  அந்த மறுப்பை மறுக்காமல் இப்படி முயல்வதசேற்கனவே விக்கினேஸ்வரன் எதிர்ப்பு ஊடகங்கள் அடித்துச் செத்த பாம்பை அடிப்பது.

2) அதன் பின் சென்னை சென்ற சம்பந்தன், மத்திய அரசுக்கு எதிரணியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களை சந்தித்தார்.

சம்பந்தர் மட்டும் அல்ல, சுஸ்மா கூட மகிந்தாவை சந்தித்தவுடன் காங்கிரசை சந்தித்தார். வடக்கு கிழக்கு தமிழரின் விவகாரங்களை ப.ஜா.க வுடன் பேசுவது எதுவும் காங்கிரசுக்கு எதிரானது அல்ல. கனடாவில் NDP யின் தான் ராதிகா. ஆனல் போஅக மறுக்கும் காப்பர் ரோரிக்கட்சி.  இலங்கை தூதுவர் அன்றே பா.ஜ.க தலைவர்களை டெல்கியில் சந்தித்திருந்தார். சம்பந்தர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயல்கின்றார் என செய்தியும் இதனோடு சேர்ந்ததுதான். இதில் "எதிரணி " என்ற டூப் சொல்  சேர்க்கப்படுவது சுரேசின் தீர்ப்பு  திரியில் கதைகளை திரித்த அதே பாணி.

3) அந்த சந்திப்பில், இந்தியா கலந்துகொள்வதை இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை, கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுதான் என்றார்.

காங்கிரசின் வெளிநாட்டு அமைச்சு இரண்டு நாடுகளுக்கு முன்னர் வெளிவிட்ட செய்தி வடக்கு கிழக்கு தமிழர் சொல்வதையும் தமிழ் நாடு கேடக வேண்டும் என்பது. (அதையும் இதையும் தொடுத்தால் "சம்பந்தர் சொல்வது போல தமிழீழ தமிழர்களின் விருப்பமான மாகாநாடுக்கு போகமல் விட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டவரே ஏற்றுக்கொள்ளுங்கள்" என்பதா வெளிவிவகார அமைச்சு சொல்ல வாசனத்தின் பொருள்?

அதை சம்பந்தர் மட்டும் சொல்ல வில்லை.  கூட்டமைப்பு தனது பல அடுக்கணிகளுடன் மகா நாட்டில் எதிர்ப்பை தெரிவித்து தங்களது பிரசாரத்தையும் செய்ய தயார் செய்கிறார்கள். "விக்கினேஸ்வரனை மகிந்தா பொதுநலவாயத்துக்கு அனுப்பினால்" என்று  யாழில் எங்கிருந்தோ ஒரு செய்தி அடிபடவிடப்பட்டது. அந்த செய்தியின் மூலம் அரசா அல்லது, மூலத்தை அரசு பின்பற்றியதா தெரியாது, அதன்பின்னர் அரசு அவரை மகாநாட்டில் சேர்த்துகொள்ளப்படுவது கவனத்தில் எடுக்கப்படிருக்கிறது என்று தனது பாகத்தையும் செய்தது. இவற்றை யாழில் செய்பவர்களேதான் இந்த தொகுப்புக்களை செய்துமுடிக்கிறார்களா என்பது தெரியப்படாதது.  

4) அதன்பின் விக்கினேஸ்வரன், மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். “நீங்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு கொழும்பு வந்தால், யாழ்ப்பாணத்துக்கும் வாருங்கள்” என அழைப்பு விடுத்தார்.

இந்த கிழமைதான் அந்த செய்தி வெளிவந்திருந்தாலும் ஒரே ஒருகடிதம் தேர்தல் நடந்தவுடன் எழுதப்பட்டது. மிச்சங்கள் தமிழ் ஊடகங்களின் செய்திகள். இதில் "மகாநாட்டுக்கு வந்தால்" என்று சொல்லப்படவில்லை. இதையேதான் மேலே உள்ள இன்னொரு கருத்து சொல்கிறது " யாழ்பாணம் வரும் படி அழைத்து மன்மோகன் சிங்கை பொதுநலவாயக்கூடத்திற்கு போகும் படி விக்கினேஸ்வரன் திருட்டுதனமாக ஆலோசனை கூறினார்" என்று. இவைகள் எல்லாம் திரிப்பவர்களுகிடையில் காணப்படும் ஒற்றுமைக்குறைவு. அவ்வளவுதான். 

5) இந்த கடிதத்துக்கு இரண்டு டிப்ளமட்டிக் அர்த்தங்கள் உண்டு. முதலாவது, நீங்கள் (சிங்) கொழும்பு வாருங்கள். இரண்டாவது, நாம் பா.ஜ.க.விடம் சொன்னதை வைத்து நீங்கள் வந்தால் நாங்கள் உங்களுடன் கோபம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். யாழ்ப்பாணமும் வாருங்கள்.

கடிதம் முதலில். பாஜக சந்திப்பு பின்னர். இதில் அடுத்த குழப்பம் கரியவாசம் கேட்க்காத மன்னிப்பு விக்கினேவரன் கேட்டார் எனறு திரிப்பது அரச பக்கத்துக்கு தாங்களும் பாஜக விடன் போனது உடனே மறந்துவிட்டது என்பத்தாலா? (உண்மையில் மறக்கவில்லை. சும்மா திரிப்பு). இன்னொரு குழ்ப்பாம் "5)" இரண்டு முறை எழுதியிருப்பது.

5) விக்கினேஸ்வரன் டில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை அனுப்பிய கடிதம், ஹிந்து பத்திரிகைக்கு புதன் கிழமை லீக் செய்யப்படுகிறது.

கிந்து விக்கினேவரனிடம் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றை மட்டும் தனக்கு ஏற்றபடி திரித்துப் பிரசுரித்து இலங்கையிடம் லங்காரத்தினா பட்டம் வாங்கிய பத்திரிகை. கிந்துவின் ஒரே நோக்கம் விக்கினேஸ்வரன் தமிழகத்தின் முதல் எதிரி என்று நிரூப்பிப்பது. விக்கினேஸ்வரன் தான் கொடுத்த 10 கேள்விகளின் பதில்களை கிந்து பிரசுரிக்கவில்லை என்று அன்று கிந்துவை மறுத்தார். இன்று கிந்து பிரசுரித்தது பழைய கதை என்று விக்கினேஸ்வரனின் உதவி அறிக்கைவிட்டுவிட்டார். இந்த முறை விக்கினேஸ்வரனின் கடிதத்தை திரித்தற்கு இனி என்ன ரத்தினா பட்டம் கிந்துவுக்கு கொடுக்கலாம். "புலம் பெயர் புயத்தல்களின் ரத்தினா"?

விக்கினேஸ்வரன் தமிழ் நாட்டுக்கு சொல்லவரும் செய்தி, இலங்கையில் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள்/போராட்டங்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நாங்கள் ஆர்ப்பாட்டத்தை/போராட்டத்தை  கை விட்டாலும் சில ராஜதந்திரங்களில் இறங்கியிருக்கிறோம். இதுதான் நாங்கள் தமிழீழத்தில் அப்படியான ஒரு முயற்சியில் முதன் முதலாக இறங்கியிருப்பதால் நீங்களும் எங்களுடன் இயைந்து அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முயலுங்கள். நாங்கள் போராடாத போது நீங்கள் போராடுவது இருபக்கத்தில் ஒருவர் மீது சந்தேகம் விழ வாய்ப்பாகும். இதானால் நீங்கள் தமிழ்ழீழத்தை வைத்து தேர்தல் நடத்துகிறீர்கள் அல்லது நாங்கள் அரசின் சேவண்டிகளாக மாறிவிட்டத்தாக அல்லது இரண்டுமாகத்தானும் தூற்றுதல்கள் எழும்.  எனவே ஆர்பாட்டங்கள்/போராட்டங்களை கைவிடுங்கள் என்பதாகும். அரசியல்வாதியல்லாத  விக்கினேஸ்வரன் செய்தியில் தவறு விட்டார் என்பதுதான் உண்மையே அல்லாமல் இங்கே காட்டப்படும் கள்ளத்திட்டங்களில் அவருக்கு பங்கு இல்லை. கள்ளம் என்றல் முதலில் அப்பா நெல்லு மூட்டை சாக்குக்குள் இல்லை என்று கத்தக்கூடியவ்ர் விக்கினேஸ்வரன். அவரை சேர்த்து கூட்ட்மைப்பு எந்த கள்ளமும் விட்டது என்றதில் உண்மை இல்லை. GTF இன் தலைவர் இமானுவல் அடிகளார் தமிழக  மாணவர்கள் "இந்தியா ஐ.நா பிரேரணையை பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேடக்கக்கூடாது" என்று கூறினார். பல ஆண்டுகள்  அரசியலில் அடிபட்ட அவரின் சொற்கள் எங்குமே தீ மூட்டவில்லை. 

6) மன்மோகன் சிங்குக்கு, இலங்கை அரசின் அழைப்பு மட்டுமல்ல, வட மாகாண அரசின் அழைப்பும் உள்ளது என காட்டப்படுகிறது. 

மன்மோகன் சிங்கிக்கு வடமாகணத்துகு வரும்படி விட்ட அழைப்பு வெறும் சம்பிரதாயம் என்றும் அவர் அதை நிறைவேற்ற வேண்டும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றும் சம்பந்தபட்டவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் மொட்டம் தலையையும் முழந்தாளையும் இணைக்கும் திரிப்புத்தான் "இலங்கை அரசின் அழைப்பு மட்டுமல்ல, வட மாகாண அரசின் அழைப்பும் உள்ளது."என்பது. எந்த இடத்திலும் எந்த ராஜதந்திரியும் "ராசக்காவீட்டை வந்தால் என்னட்டையும் வந்துட்டு போ, சிங்கி" என்று தாபல் எழுதுவதில்லை. 

7) மன்மோகன் சிங் கொழும்பு செல்லும் முடிவு, விக்கியின் கடிதம் வெளியே வந்தபின் புதன் இரவு டில்லியில் எடுக்கப்படுகிறது.

பகிடி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்திய வெளிநாட்டு அமைச்சு அறிக்கை விட்டும் விட்டது. ஆனால் இந்த ஓயாத திரிப்புக்கு அளவே இல்லை. கலோ! இனித்தானாம் முடிவு!  இந்த தொகுப்பு முழுவதுமே இந்த பொய் செய்தியை வைத்து திரிக்கப்பட்டது என்பது ஒரு பரிதாபகரமான உண்மை. 

8) அடுத்து நடக்கப் போவது - கூட்டமைப்பின் அறிவிப்பு. அவர்கள் என்ன சொல்வார்கள் என்றும் சுலபமாக ஊகிக்கலாம். “இந்தியா வருவதால், நாமும் கலந்து கொள்கிறோம்” 

இது கதையாம் கதையாம் பக்கத்தில் சேர்க்கபட வேண்டியது. செம்பாலையில் அல்ல. 

9) விக்கியின் அழைப்பு, கூட்டமைப்பு கலந்து கொண்டது ஆகிய இரண்டும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் (தமிழகத்தில்) பயன்படுத்தப்படும்.

இதுதான் அப்பாவித்தனமான அரசியல் வங்குரோத்து. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் நாட்டுடன் என்ன உறவு என்பது தெரியாமல் காங்கிரசுக்கு இந்த ஆலோசனையை கொடுக்கிறார் 36ம் சபேசன். விக்கினேஸ்வரனை யை தமிழ் நாட்டில் தேர்தலுக்கு அழைத்து சென்று அள்ளு கொள்ளை வாக்குகள் வாங்க கிந்துவும் 36ம் சபேசனும்  காங்கிரசும் படாத பாடு படுகிறார்கள். ஆனால் அவசியமாக இப்பொது விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது ரத்துச் செய்யப்பட்டத்தாக சொல்லப்படும் முதலமைசருடனான சந்திப்புக்கு வேறு தொடர்புகளை அணுகி அதை செய்து முடிப்பதாகும். பின்னர் தன் தலையை தமிழ் நாட்டில் காட்டி 36ம் சபேசனுக்காக காங்கிசை தோற்கடிக்கலாம்.   

தமிழகத்தில் இன்றைய அரசியல் நிலையில், பிரச்சாரம் பலன் கொடுக்காது என்பது வேறு விஷயம்.  

இப்பதான் விளங்கியிருக்கு!. வெல்லபோவத்தில்லாத காங்கிரசுக்காக தமிழ்நாடு புகழ் விக்கிரதின் (விக்கினேஸ்வரின்) போஸ்டர்களை தமிழ்நாட்டில் கட்டி பால் வார்த்து கபூரம் காடினால் தமிழ்நாட்டில் காங்கிரசை போட்டாட்டும் பீடை விக்கிரத்திலும் பாய்ந்துவிட்டால் தன் ஆலோசனை என்னாகும் என்று பதகளிக்கிறார்.  

கதை அப்படியும் இப்படியும் போனாலும் முடிவில் வைத்து ஜமாய்துவிட்டார். நன்னாத்தான் இருந்தது

ரகுநாதன் இதுவெல்லாம் தெரிவது பெரிய அரசியல் மேதாவித்தனம் அல்ல ஆனால் நடைமுறையில் தமக்கு தெரிந்ததை கூட பலர் பின்பற்ற விரும்புவதில்லை .

சம்பந்தம் இல்லாவிட்டாலும் மிக சின்ன உதாரணம் ஒன்று .இந்தியாவை பிரிட்டிஷ்காரன் கைப்பற்றினான் அப்போ எத்தனை பெரிய அரசுகள் ,சிற்றரசுகளை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்  ஆனால் தமிழ்நாட்டில் கட்டபொம்மனின் பெயர் தான் நாம் இன்று வெள்ளையரை எதிர்த்த மாவீரன் என்று மார் தட்டுகின்றோம் .மற்றவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களின் பலம் தெரியும் எனவே தமது ஆட்சியும் நீடிக்க வேண்டும் மக்களும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஒரு உடன்படிக்கையுடன் கப்பம் கட்டி தமது ஆட்சியை நடாத்தியிருப்பார்கள் ஆனால் கட்ட பொம்மன் தானும் அழிந்து தனது வீரர்களையும் மக்களையும் பலி கொடுத்து ஆனால் சரித்திரத்தில் இடம் பெற்றான் .(எமது வரலாற்றாளார்கள் கையும் வாலும் வைத்து கதையும் எழுதி படமும் எடுத்தது வேறு )

சூரிய நாராயணா புளொட் நடாத்திய பாடசாலைக்கு (T3S) வந்து பாடம் எடுத்தவர் .நான் அவருடன் கதைத்திருக்கின்றேன் .இவரைப் போல தான்  பார்த்தசாரதியும்.இவர்கள் தமிழர்கள் எமது விடுதலையில் அக்கறை கொண்டவர்கள் ஆனால் அதற்கான இந்தியாவின் வரைமுறையுடன் இணங்கிப்போகவேண்டும் என்று நினைத்தவர்கள் .

எங்கட விடுதலைக்கு  இவர்கள் யார் வரையறை போடுவது  என்று நினைத்தால் என்னை பொறுத்தவரை அவர் உலக அரசியலில் அருச்சுவடி என்பதை விட வேறு வார்த்தை இல்லை .தங்களுக்கும் இதே கதிதான் என்று சிங்கள தலைமைகள் மிக தெளிவாக  விளங்கியுள்ளன இருந்தாலும் இடைக்கிடை தெரியாத மாதிரி சவுண்ட் கொடுத்து பின்னர் மன்னிப்பும் கேட்பார்கள் .இல்லாவிடில் யாழ்பாணத்தில் இருந்து இந்திய தூதுவர் அப்படி ஒரு பேச்சு பேச முடியாது .

சீனா ,பாகிஸ்தான் ,பிற நாடுகள் அமெரிக்கா உட்பட எல்லாம் இலங்கைக்கு  பொருளாதார உதவி ,இராணுவ கட்டமைப்பு போன்றவற்றில் உதவுமே ஒழிய அரசியல் ரீதியில் அவர்கள் பங்கு எதுவும் இல்லை அது முடியவும் மாட்டாது .அரசியல் விடயத்தில் இலங்கைக்கு இந்தியா தான் அனைத்தும் .இது டெல்கியில் இருக்கும் அனைத்து தூதுவர்களும் சொல்லுகின்ற வாசகம் .

இந்தியா ஏதோ மாபெரும் சக்தி என்று இதனால் அர்த்தமல்ல இலங்கை இருக்கும் புவியியல் அமைப்பு அப்படி .ஒரு கொஞ்சம் தள்ளி போயிருந்தால் அவுஸ்திரேலியா சொல்வது எமக்கு சட்டமாகி இருக்கும் (பாலிகுண்டு வெடிப்புகள் ,கிழக்கு தீமோர் விடயங்களில் ஆஸி நடந்த விதம் ).

இதை விளங்காமல் இயக்க தலைமைகள் இருந்ததா என்றால் ? ஆம் இல்லை என்ற இரண்டு பதிலும் இருக்கு .

ஆம் விளங்கிதான் இருந்தன ஆனால் அதற்காக ஆமா போட விரும்பவில்லை .விளைவு தண்டவாளமும் முள்ளிவாய்க்காலும்.

குறிப்பு -உமா இது பற்றி மிக தெளிவாக இருந்தார் (எனக்கு பல விடயங்கள் சொன்னதே அவர்தான் ) ஆனால் இந்தியா அதற்கு முதல் அவரை கருச்சிதைவு செய்ய முடிவெடுத்துவிட்டது .அதற்கு பல காரணங்கள் வங்கம் தந்த பாடம் முதல் மார்கிச அரசியல் வரை (இதில் பெரிய பகிடி புளொட்டில் பல மாக்கிசவாதிகள் இருந்தார்களே ஒழிய உமா அப்படி அல்ல ).

புலிகள் அழிந்தற்கான முக்கிய காரணங்கள் மூன்று ,ராஜீவ் கொலை ,சகோதர படுகொலை ,முஸ்லிம்கள் வெளியேற்றம் .இந்த மூன்றில் கடைசி இரண்டை காய் வெட்டி புலிகள் அரசியல் செய்து தப்பித்து இருக்கலாம் முதலாவதில் இருந்து  என்றுமே தப்பியிருக்க முடியாது.மேனன் ,நாராயணன் கடைசிவரை ஓடித்திரிந்தது இதற்குத்தான் அது சம்பந்தருக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன்,

இலங்கை சீனாவிடம் போகாமல் இருக்க இந்தியா உதவுகிறது என்பது உண்மை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் பிடி இலங்கையில் மாட்டிவிட்டது, அதனால் பயந்து தான் இந்தியா இலங்கைக்கு உதவுகிறது என்பது, அம்புலிமாமா கதை.

இவ்வளவு பெரிய பிராந்திய அரசு அப்படி ஒரு பிடியை இலங்கை போல் ஒரு சுண்டைகாய் நாட்டிடம் கொடுக்கும், கொடுத்து விட்டு பணய கைதியாய் இருக்கும் என்பது நம்ப முடியாத கதை.

நடப்பது என்னெவென்றால் இந்தியா 13 + ஐ வலியுறுத்துகிறது. இலங்கை முரண்டு பிடிக்கிறது. இலங்கையை முற்றிலும் தன்னை விட்டு அகல விடாமல் மிரட்டும் தொனியில் காரியம் சாதிக்க பார்க்கிறது இந்தியா. இந்தியாவை முற்றிலும் பகைகாமல் 13 ஐ குப்பையில் போடப் பார்க்கிறது இலங்கை. இது ஓர் ராஜதந்திர பனிப்போர். இந்த இடைவெளியில் கூட்டமைப்பு நமக்கு வேண்டிய வகையில் காய் நகர்த்த வேண்டும்.

இந்த பனிப்போர் இலங்கைக்கு சாதகமாய் முடியலாம், ஒரளவுக்கு மேல் இந்தியா பொறுமையிழந்து, எமக்கு சாதகமாய் அமையலாம், அல்லது இப்படியே வருடக்கணக்கில் இழுபடலாம்.

இதின் முடிவு, இந்திய ஆட்சி மாற்றம், கூட்டமைப்பின் மதிநுட்ப்பம், அமெரிக்காவின் போக்கு, இலங்கையின் நெகுழ்வுமை என பல்வேறு variables இன் கூட்டு விளைவாக இருக்கும்.

இதை எதிர்வு கூறுவது இயலாத காரியம்.

இந்தியா எக்காலத்திலும் எமக்கு சாதகமாய் நடக்காது. இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்பது வெறும் கனவுதான்

ஈழத் தமிழருக்கு இந்தியா உதவபோய் தமிழ் நாட்டை பறிகொடுக்க,  என்ன முட்டாள் ராஜ தந்திரிகளா  அங்கு இருப்பவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன், நீங்கள் அரசிய தெரிந்தவர் என்று அடிக்கடி உங்கள் கருத்துக்களில் சொல்லி வருகிறீர்கள். அப்படித் தெரிந்தவர் எழுதுமாப்போல எழுத விரும்புகிறேன். 

நீங்கள் அண்மைக்காலமாக இந்திய அரசியல் மற்றும் இராணுவ வல்லுனர்களின் பேட்டிகள், கலந்துரையாடல்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பார்த்தவற்றில் ஏதாவது உங்களின் அரசியல் அறிவிற்குப் பட்டதா என்று தெரியவில்லை. உங்களைப்போல அரசியல் எனக்குத் தெரியாவிட்டாலும்கூட அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு கடிணமானதாக எனக்கு இருக்கவில்லை.

உதாரணத்திற்கு பேராசிரியர் சூரிய நாராயணன் என்பவரை எடுத்துக்கொள்வோம். இவர் முன்னால் இந்திய ராஜதந்திரி, இன்றும் இந்திய வெளியுறவுத்துறையில் கடுமையான செல்வாக்கைக் கொண்ட வெளியிலிருந்து ஆலோசனை வழங்கும் ஒரு மூத்த இந்திய ஆலோசகர். இவரைப் போலவே முன்னால் இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன். இன்று தமிநாட்டில் செல்வாக்குக் கொண்ட காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய எப்போதாவது விரும்பியதுண்டா?

இவர்கள் அனைவரும் திரும்பத் திரும்பச் சொல்லிவரும் ஒரு விடயம்தான், இலங்கையில் பிற நாடொன்றின் செல்சவாக்கு வளருவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. தனது இராணுவத் தேவைகளுக்காகவும், இராஜதந்திர நெருக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் இலங்கை சீனா பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாடுகள் எமது தெற்கு எல்லையில் காலூன்றுவது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஆகவே இலங்கை என்ன தேவைகளுக்காக இந்த நாடுகளிடம் கையேதுகிறதோ, அந்ததேவைகளை இந்தியா பூர்த்தி செய்யுமிடத்து இலங்கை அவர்களை நோக்கிப் போக வேண்டிய அவசியமில்லை. ஆகவே இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டியது அவசியம் என்று சொல்கிறார்கள்.  "நாங்கள் செய்யாவிட்டால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்துவிடும், ஆகவே நாங்கள் முந்திக்கொள்வோம் " என்கிறார்கள். 

இந்தியாவின் குடுமி இலங்கையின் கைகளுக்குள் இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்திற்கப்பால் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் முண்டு கொடுப்பதற்கான காரணங்களை வைத்திருக்கிறது. சீன பாக்கிஸ்த்தானிய பூச்சாண்டிகளை வைத்தே இலங்கை இந்தியாவை வளைத்து வைத்திருக்கிறது என்பதுதான் எனது எண்ணம். ஏனென்றால் இதையேதான் இந்தியர்களும் சொல்லி வருகிறார்கள். "நீங்கள் தராவிட்டால் பரவாயில்லை, நாங்கள் வேறு யாரிடமாவது பெற்றுக்கொள்கிறோம்" என்பதுதான் இலங்கையின் துரும்புச் சீட்டு. இதை மிகவும் இலாவகமாகப் பாவிக்கிறது இலங்கை. இந்த பிளாக்மெயில் இராஜதந்திரத்தில் இலங்கையிடம் இந்தியா தோற்றுத்தான் போய்விட்டது.

இறுதியாக, இலங்கையில் நடந்துமுடிந்தது ஒரு இனக்கொலை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?? அந்த இனக்கொலை யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியா பங்காற்றியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?( தாம் பங்காற்றியது உண்மைதான் என்பதை அண்மையில் ஹரிஹரன் அவர்கள் செவ்வியொன்றில் அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார். சூரிய நாராயணன் கூட தமது பங்கை நியாயப்படுத்தி இருக்கிறார். நாச்சியப்பன் இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்கப்படுவதை (இரு போர்க்கப்பல்கள்) சரியென்று வாதிட்டிருக்கிறார்)). அப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளுமிடத்து இந்தியா தனது நண்பனைக் காப்பாற்ற நிச்சயம் முயலும் என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.  இதைத்தவிர இந்தியாவுக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. 

சீனா திருமதி. பண்டாரநாயக்கா காலத்தில் இருந்தே இலங்கையில் காலுன்றி விட்டது. பண்டார நாயக்கா மண்டபத்தை சீனா கட்டும் போதே அந்த மண்டபத்தின் ஒரு பகுதிக்கு ஒருவரும் செல்ல முடியாத நிலை இருந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பின்னணி விஷயங்கள் தெரிந்தால், பொதுநலவாய மாநாடு விஷயத்தில் இந்தியா மிகவும் கவனமாக விளையாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். யாரையும் மட்டமாக எடைபோட கூடாது.

1) முதலில் விக்கினேஸ்வரன், மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

ஏற்கனவே பிழையானதாக அறிவிக்கபட்ட தகவல். விக்கினேஸ்வரின் பேச்சாளர் மறுத்த பின்னர்  அந்த மறுப்பை மறுக்காமல் இப்படி முயல்வதசேற்கனவே விக்கினேஸ்வரன் எதிர்ப்பு ஊடகங்கள் அடித்துச் செத்த பாம்பை அடிப்பது.

2) அதன் பின் சென்னை சென்ற சம்பந்தன், மத்திய அரசுக்கு எதிரணியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களை சந்தித்தார்.

சம்பந்தர் மட்டும் அல்ல, சுஸ்மா கூட மகிந்தாவை சந்தித்தவுடன் காங்கிரசை சந்தித்தார். வடக்கு கிழக்கு தமிழரின் விவகாரங்களை ப.ஜா.க வுடன் பேசுவது எதுவும் காங்கிரசுக்கு எதிரானது அல்ல. கனடாவில் NDP யின் தான் ராதிகா. ஆனல் போஅக மறுக்கும் காப்பர் ரோரிக்கட்சி.  இலங்கை தூதுவர் அன்றே பா.ஜ.க தலைவர்களை டெல்கியில் சந்தித்திருந்தார். சம்பந்தர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயல்கின்றார் என செய்தியும் இதனோடு சேர்ந்ததுதான். இதில் "எதிரணி " என்ற டூப் சொல்  சேர்க்கப்படுவது சுரேசின் தீர்ப்பு  திரியில் கதைகளை திரித்த அதே பாணி.

3) அந்த சந்திப்பில், இந்தியா கலந்துகொள்வதை இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை, கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுதான் என்றார்.

காங்கிரசின் வெளிநாட்டு அமைச்சு இரண்டு நாடுகளுக்கு முன்னர் வெளிவிட்ட செய்தி வடக்கு கிழக்கு தமிழர் சொல்வதையும் தமிழ் நாடு கேடக வேண்டும் என்பது. (அதையும் இதையும் தொடுத்தால் "சம்பந்தர் சொல்வது போல தமிழீழ தமிழர்களின் விருப்பமான மாகாநாடுக்கு போகமல் விட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டவரே ஏற்றுக்கொள்ளுங்கள்" என்பதா வெளிவிவகார அமைச்சு சொல்ல வாசனத்தின் பொருள்?

அதை சம்பந்தர் மட்டும் சொல்ல வில்லை.  கூட்டமைப்பு தனது பல அடுக்கணிகளுடன் மகா நாட்டில் எதிர்ப்பை தெரிவித்து தங்களது பிரசாரத்தையும் செய்ய தயார் செய்கிறார்கள். "விக்கினேஸ்வரனை மகிந்தா பொதுநலவாயத்துக்கு அனுப்பினால்" என்று  யாழில் எங்கிருந்தோ ஒரு செய்தி அடிபடவிடப்பட்டது. அந்த செய்தியின் மூலம் அரசா அல்லது, மூலத்தை அரசு பின்பற்றியதா தெரியாது, அதன்பின்னர் அரசு அவரை மகாநாட்டில் சேர்த்துகொள்ளப்படுவது கவனத்தில் எடுக்கப்படிருக்கிறது என்று தனது பாகத்தையும் செய்தது. இவற்றை யாழில் செய்பவர்களேதான் இந்த தொகுப்புக்களை செய்துமுடிக்கிறார்களா என்பது தெரியப்படாதது.  

4) அதன்பின் விக்கினேஸ்வரன், மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். “நீங்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு கொழும்பு வந்தால், யாழ்ப்பாணத்துக்கும் வாருங்கள்” என அழைப்பு விடுத்தார்.

இந்த கிழமைதான் அந்த செய்தி வெளிவந்திருந்தாலும் ஒரே ஒருகடிதம் தேர்தல் நடந்தவுடன் எழுதப்பட்டது. மிச்சங்கள் தமிழ் ஊடகங்களின் செய்திகள். இதில் "மகாநாட்டுக்கு வந்தால்" என்று சொல்லப்படவில்லை. இதையேதான் மேலே உள்ள இன்னொரு கருத்து சொல்கிறது " யாழ்பாணம் வரும் படி அழைத்து மன்மோகன் சிங்கை பொதுநலவாயக்கூடத்திற்கு போகும் படி விக்கினேஸ்வரன் திருட்டுதனமாக ஆலோசனை கூறினார்" என்று. இவைகள் எல்லாம் திரிப்பவர்களுகிடையில் காணப்படும் ஒற்றுமைக்குறைவு. அவ்வளவுதான். 

5) இந்த கடிதத்துக்கு இரண்டு டிப்ளமட்டிக் அர்த்தங்கள் உண்டு. முதலாவது, நீங்கள் (சிங்) கொழும்பு வாருங்கள். இரண்டாவது, நாம் பா.ஜ.க.விடம் சொன்னதை வைத்து நீங்கள் வந்தால் நாங்கள் உங்களுடன் கோபம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். யாழ்ப்பாணமும் வாருங்கள்.

கடிதம் முதலில். பாஜக சந்திப்பு பின்னர். இதில் அடுத்த குழப்பம் கரியவாசம் கேட்க்காத மன்னிப்பு விக்கினேவரன் கேட்டார் எனறு திரிப்பது அரச பக்கத்துக்கு தாங்களும் பாஜக விடன் போனது உடனே மறந்துவிட்டது என்பத்தாலா? (உண்மையில் மறக்கவில்லை. சும்மா திரிப்பு). இன்னொரு குழ்ப்பாம் "5)" இரண்டு முறை எழுதியிருப்பது.

5) விக்கினேஸ்வரன் டில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை அனுப்பிய கடிதம், ஹிந்து பத்திரிகைக்கு புதன் கிழமை லீக் செய்யப்படுகிறது.

கிந்து விக்கினேவரனிடம் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றை மட்டும் தனக்கு ஏற்றபடி திரித்துப் பிரசுரித்து இலங்கையிடம் லங்காரத்தினா பட்டம் வாங்கிய பத்திரிகை. கிந்துவின் ஒரே நோக்கம் விக்கினேஸ்வரன் தமிழகத்தின் முதல் எதிரி என்று நிரூப்பிப்பது. விக்கினேஸ்வரன் தான் கொடுத்த 10 கேள்விகளின் பதில்களை கிந்து பிரசுரிக்கவில்லை என்று அன்று கிந்துவை மறுத்தார். இன்று கிந்து பிரசுரித்தது பழைய கதை என்று விக்கினேஸ்வரனின் உதவி அறிக்கைவிட்டுவிட்டார். இந்த முறை விக்கினேஸ்வரனின் கடிதத்தை திரித்தற்கு இனி என்ன ரத்தினா பட்டம் கிந்துவுக்கு கொடுக்கலாம். "புலம் பெயர் புயத்தல்களின் ரத்தினா"?

விக்கினேஸ்வரன் தமிழ் நாட்டுக்கு சொல்லவரும் செய்தி, இலங்கையில் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள்/போராட்டங்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நாங்கள் ஆர்ப்பாட்டத்தை/போராட்டத்தை  கை விட்டாலும் சில ராஜதந்திரங்களில் இறங்கியிருக்கிறோம். இதுதான் நாங்கள் தமிழீழத்தில் அப்படியான ஒரு முயற்சியில் முதன் முதலாக இறங்கியிருப்பதால் நீங்களும் எங்களுடன் இயைந்து அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முயலுங்கள். நாங்கள் போராடாத போது நீங்கள் போராடுவது இருபக்கத்தில் ஒருவர் மீது சந்தேகம் விழ வாய்ப்பாகும். இதானால் நீங்கள் தமிழ்ழீழத்தை வைத்து தேர்தல் நடத்துகிறீர்கள் அல்லது நாங்கள் அரசின் சேவண்டிகளாக மாறிவிட்டத்தாக அல்லது இரண்டுமாகத்தானும் தூற்றுதல்கள் எழும்.  எனவே ஆர்பாட்டங்கள்/போராட்டங்களை கைவிடுங்கள் என்பதாகும். அரசியல்வாதியல்லாத  விக்கினேஸ்வரன் செய்தியில் தவறு விட்டார் என்பதுதான் உண்மையே அல்லாமல் இங்கே காட்டப்படும் கள்ளத்திட்டங்களில் அவருக்கு பங்கு இல்லை. கள்ளம் என்றல் முதலில் அப்பா நெல்லு மூட்டை சாக்குக்குள் இல்லை என்று கத்தக்கூடியவ்ர் விக்கினேஸ்வரன். அவரை சேர்த்து கூட்ட்மைப்பு எந்த கள்ளமும் விட்டது என்றதில் உண்மை இல்லை. GTF இன் தலைவர் இமானுவல் அடிகளார் தமிழக  மாணவர்கள் "இந்தியா ஐ.நா பிரேரணையை பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேடக்கக்கூடாது" என்று கூறினார். பல ஆண்டுகள்  அரசியலில் அடிபட்ட அவரின் சொற்கள் எங்குமே தீ மூட்டவில்லை. 

6) மன்மோகன் சிங்குக்கு, இலங்கை அரசின் அழைப்பு மட்டுமல்ல, வட மாகாண அரசின் அழைப்பும் உள்ளது என காட்டப்படுகிறது. 

மன்மோகன் சிங்கிக்கு வடமாகணத்துகு வரும்படி விட்ட அழைப்பு வெறும் சம்பிரதாயம் என்றும் அவர் அதை நிறைவேற்ற வேண்டும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றும் சம்பந்தபட்டவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் மொட்டம் தலையையும் முழந்தாளையும் இணைக்கும் திரிப்புத்தான் "இலங்கை அரசின் அழைப்பு மட்டுமல்ல, வட மாகாண அரசின் அழைப்பும் உள்ளது."என்பது. எந்த இடத்திலும் எந்த ராஜதந்திரியும் "ராசக்காவீட்டை வந்தால் என்னட்டையும் வந்துட்டு போ, சிங்கி" என்று தாபல் எழுதுவதில்லை. 

7) மன்மோகன் சிங் கொழும்பு செல்லும் முடிவு, விக்கியின் கடிதம் வெளியே வந்தபின் புதன் இரவு டில்லியில் எடுக்கப்படுகிறது.

பகிடி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்திய வெளிநாட்டு அமைச்சு அறிக்கை விட்டும் விட்டது. ஆனால் இந்த ஓயாத திரிப்புக்கு அளவே இல்லை. கலோ! இனித்தானாம் முடிவு!  இந்த தொகுப்பு முழுவதுமே இந்த பொய் செய்தியை வைத்து திரிக்கப்பட்டது என்பது ஒரு பரிதாபகரமான உண்மை. 

8) அடுத்து நடக்கப் போவது - கூட்டமைப்பின் அறிவிப்பு. அவர்கள் என்ன சொல்வார்கள் என்றும் சுலபமாக ஊகிக்கலாம். “இந்தியா வருவதால், நாமும் கலந்து கொள்கிறோம்” 

இது கதையாம் கதையாம் பக்கத்தில் சேர்க்கபட வேண்டியது. செம்பாலையில் அல்ல. 

9) விக்கியின் அழைப்பு, கூட்டமைப்பு கலந்து கொண்டது ஆகிய இரண்டும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் (தமிழகத்தில்) பயன்படுத்தப்படும்.

இதுதான் அப்பாவித்தனமான அரசியல் வங்குரோத்து. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் நாட்டுடன் என்ன உறவு என்பது தெரியாமல் காங்கிரசுக்கு இந்த ஆலோசனையை கொடுக்கிறார் 36ம் சபேசன். விக்கினேஸ்வரனை யை தமிழ் நாட்டில் தேர்தலுக்கு அழைத்து சென்று அள்ளு கொள்ளை வாக்குகள் வாங்க கிந்துவும் 36ம் சபேசனும்  காங்கிரசும் படாத பாடு படுகிறார்கள். ஆனால் அவசியமாக இப்பொது விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது ரத்துச் செய்யப்பட்டத்தாக சொல்லப்படும் முதலமைசருடனான சந்திப்புக்கு வேறு தொடர்புகளை அணுகி அதை செய்து முடிப்பதாகும். பின்னர் தன் தலையை தமிழ் நாட்டில் காட்டி 36ம் சபேசனுக்காக காங்கிசை தோற்கடிக்கலாம்.   

தமிழகத்தில் இன்றைய அரசியல் நிலையில், பிரச்சாரம் பலன் கொடுக்காது என்பது வேறு விஷயம்.  

இப்பதான் விளங்கியிருக்கு!. வெல்லபோவத்தில்லாத காங்கிரசுக்காக தமிழ்நாடு புகழ் விக்கிரதின் (விக்கினேஸ்வரின்) போஸ்டர்களை தமிழ்நாட்டில் கட்டி பால் வார்த்து கபூரம் காடினால் தமிழ்நாட்டில் காங்கிரசை போட்டாட்டும் பீடை விக்கிரத்திலும் பாய்ந்துவிட்டால் தன் ஆலோசனை என்னாகும் என்று பதகளிக்கிறார்.  

கதை அப்படியும் இப்படியும் போனாலும் முடிவில் வைத்து ஜமாய்துவிட்டார். நன்னாத்தான் இருந்தது

நன்றி மல்லையூரான் உங்கள் கருத்துக்களுக்கு. எனது ஒவ்வொரு matter of concernக்கும் உங்களிடமும் ஒரு கருத்து உள்ளது மகிழ்ச்சி. எனது கருத்து பலித்தால், எனக்கு ஆத்ம திருப்தி. உங்களுடையது பலித்தால், உங்களுக்கு ஆத்ம திருப்தி.

உங்களது கருத்துக்கள் பலித்தால் அதிலும் எனக்கு ஒரு பலன் உண்டு. எனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள அது உதவும் அல்லவா? உங்களது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுள்ளேன். அவை பலித்தால், உங்கள் பாணியில் சிந்திக்க முயற்சிக்கிறேன்.  

சந்தர்ப்பத்துக்கு நன்றி.

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.