Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தகவல்

Featured Replies

சீனா திருமதி. பண்டாரநாயக்கா காலத்தில் இருந்தே இலங்கையில் காலுன்றி விட்டது. பண்டார நாயக்கா மண்டபத்தை சீனா கட்டும் போதே அந்த மண்டபத்தின் ஒரு பகுதிக்கு ஒருவரும் செல்ல முடியாத நிலை இருந்தது?

அதுதான் சேகுவாராவை சீனவிசப்பல்லு என்று அதை பிடுங்க சிறிமா இந்தியாவை உதவிக்கு கூப்பிட்டவா ?.

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply

 

புலிகள் அழிந்தற்கான முக்கிய காரணங்கள் மூன்று ,ராஜீவ் கொலை ,சகோதர படுகொலை ,முஸ்லிம்கள் வெளியேற்றம் .இந்த மூன்றில் கடைசி இரண்டை காய் வெட்டி புலிகள் அரசியல் செய்து தப்பித்து இருக்கலாம் முதலாவதில் இருந்து  என்றுமே தப்பியிருக்க முடியாது.மேனன் ,நாராயணன் கடைசிவரை ஓடித்திரிந்தது இதற்குத்தான் அது சம்பந்தருக்கும் தெரியும் .

இதில் ஒன்றும் SLMM வெளியேற்றப்பட்டதையோ, இலங்கை யுத்தத்தில் பாவித்த பிரதான தளபாடங்களான விமானங்களை கொடுத்ததையோ பற்றியோ சிந்திக்க இல்லை. UAV களும் குண்டு வீச்சும் விமானங்களும்தான் சண்டையின் வெற்றியின் திசையை திருப்பியவை. போருக்கு தயார் என்ற பின்னர் ஐ.நா அணுசரனையுடன் இருந்த SLMM பிளேக்கால் வெளியேற்றப்பட்டது. 

 

வட கொறியாவுடன் இருந்த தொடர்பால் அமெரிக்க பலகாலத்துக்கு முன்னரே புலிகளை தடை செய்துவிட்டது. மத்திய கிழக்கில் தான் வென்றுவிட்டதாக நினைத்த புஸ் தனது கவனத்தை வட கொறியா மீது திருப்பியிருந்தார். இதானால் பக்க விளைவாக புலிகளின் கப்பலகள் அடையாளம் காணப்பட்டன. இலங்கைக்கு உதவி அந்த கப்பல்களை அழித்தார்கள். ஆனால் மத்திய கிழ்க்கில் கிடைத்த அதே தோல்விதான் இலங்கை அரசிடமும் கிடைத்தது.  அமெரிக்கா வெல்ல வைத்த நூரி மலிக்கும் கமீத் கர்சாயும் காட்டிய அதே பாடத்தையே மகிந்தாவும் பிளேக்குக்கு சொல்லிக்கொடுத்தார். புலிகள் கிழக்கில் முழுவதாக தோற்ற பின்னர், சொலெயும் இனி புலிககளை வெல்ல அமெரிக்கா விடாது என்றதையும் இந்தியாவுக்கு சொன்ன பின்னர் இந்தியா இந்திரா ராடருடன் வந்தது. 

 

1. ரஜீவ் கொலையால் 20 வருடங்கள் இந்தியாவால் நேராக பழிவாங்க முடியவில்லை.

2. சகோதர யுத்ததில் பெற்ற தெளிவான வெற்றியே புலிகளை அரசு அமைக்க இடம் கொடுத்தது.

3. முஸ்லீம்கள் வெளியேற்றம் போரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுததவில்லை.

 

போராட்டத்தில் வெற்றி பெற்ற புலிகள் சமாதனம் பேச போன பின்னர் மட்டும் இந்த மூன்றும் புலிகளுக்கு எதிராக SLMM போன்றவையை வெளியேற்ற பாவிக்கப்பட்ட அரசியல் காரணங்கள் மட்டுமே. இவற்றால் யுத்ததில் நேரடி தாக்கம் இருக்கவில்லை. யுத்தம் திரும்பி வந்த காரணம் வடகொறியாவில் இருந்து ஆயுதம் கொண்டு வந்த கப்பலகள். இல்லையேல் சமாதானப் பேச்சு சந்திரிக்காகாலத்தில் வெற்றி அளித்திருந்திருக்க வேண்டும். சந்திரிக்கா ரணிலிக்கு தெரியாமல் புலிகளின் கப்பலகளை அழிக்கும் முயற்சியில் இறங்கியிருந்திருக்கத் தேவை இல்லை. வீசா மறுக்கப்படாதிருந்திருந்தால் நியூயோர்க்கில் நடந்த கூட்டத்தில் புலிகள் பங்கு பற்றி 4.5 பில்லியன் உதவிக் கொடையில் தங்கள் பங்கையும் நிர்ணயித்திருந்திருக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் சேகுவாராவை சீனவிசப்பல்லு என்று அதை பிடுங்க சிறிமா இந்தியாவை உதவிக்கு கூப்பிட்டவா ?.

சேகுவரா எப்போ நடந்தது? பண்டாரநாயக்கா நினைவு மண்டபம் எப்போ கட்டப்பட்டது?

விஜயவீரவுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தமுங்கோ :D ...... அவர் படித்தது ரஷ்சியாவில்  Lumumba  University  :icon_mrgreen:

நன்றி மல்லையூரான் உங்கள் கருத்துக்களுக்கு. எனது ஒவ்வொரு matter of concernக்கும் உங்களிடமும் ஒரு கருத்து உள்ளது மகிழ்ச்சி. எனது கருத்து பலித்தால், எனக்கு ஆத்ம திருப்தி. உங்களுடையது பலித்தால், உங்களுக்கு ஆத்ம திருப்தி.

 

உங்களது கருத்துக்கள் பலித்தால் அதிலும் எனக்கு ஒரு பலன் உண்டு. எனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள அது உதவும் அல்லவா? உங்களது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுள்ளேன். அவை பலித்தால், உங்கள் பாணியில் சிந்திக்க முயற்சிக்கிறேன்.  

 

சந்தர்ப்பத்துக்கு நன்றி.

"என் கருத்துகள் பலித்தால்" அது எனக்கு புரியவில்லை.

 

நான் கேட்கவந்தது மேலே கொடுக்கப்படிருந்த தொகுப்பு கருத்தில் பாவிக்கப்படிருந்த செய்திகள் எல்லாம் அரசுக்காக்க பொய்யாக வெளிவிடப்பட்டவையா என்று சந்தேகிக்கப்பட்டவை. அதானால் இப்படி பொய்யாக காணப்பட்ட, மறுப்பு அறிக்கைகள் சம்பந்த பட்டவர்களால் வெளிவிடப்பட்ட பின்னர், பிழையான பழையவற்றை தேடித் தொகுக்க, சரியான புதியவற்றை அலட்சியம் செய்ய,  உந்து சக்தியாக விளங்கியதென்ன என்பதே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ரோகண விஜயவீர)


ரோகண விஜயவீர

சேகுவரா எப்போ நடந்தது? பண்டாரநாயக்கா நினைவு மண்டபம் எப்போ கட்டப்பட்டது?

விஜயவீரவுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தமுங்கோ :D ...... அவர் படித்தது ரஷ்சியாவில்  Lumumba  University  :icon_mrgreen:

நாங்கள் சந்திர மண்டலம் போய் அரசிவாங்கி வருவோம் என்று சிங்களவர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்துதான் வென்றவ. ஆனால் அவவின் காலத்தில் வந்த அரிசித் தட்டுப்பாட்டால் வெள்ளிகிழமைகளில் உணவகங்கங்கள் சோறு கொடுக்க கூடாது என்று சட்டம் போட்டிருந்தார்கள். இதானால் வெள்ளிகிழமை விரத்ததிற்கு என்ன விலையும் கொடுத்து சோறு வாங்கும் இந்துக்களால் சிங்கள மக்களின் இயல்பான வாழ்க்கை குழம்பி அவர்களும் என்ன விலையும் கொடுக்க வேண்டி வந்திடகூடாது என்று நினைத்தார்கள். 

 

ஆனல் கண்டியின் இராணி அரைப்பாவடை கட்டிக்கொண்டு சீனா சென்று தனக்கு சீனாவில் அதிகம் விலை விற்ற யாஸ்மீன் அரசியும், ஆடம்பர கொண்டாட்டங்களுக்கான பண்டாரநாயக்க மண்டபவும் வாங்கி வந்தார் என்றுதான் அன்றைய நாட்களில் பேச்சு. 

 

கவலையான விடயம் சில சிங்கள ஆய்வாளர்கள் இந்த உண்மைகளை இன்றும்தான் ஆய்கிறார்கள். ஆனால் நமது அரசியல் பண்டிதர்களுக்கு புலிகளைதவிர மற்றதெல்லாம் அம்னீசியாவால் அடித்து செல்லப்பட்டுட்டது. அவர்கள் இந்த கதைகளை எடுப்பதில்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் பதிலுக்கு நன்றி,

 

இறுதியாக நீங்கள் கூறிய புலிகள் அழிந்தமைக்கான மூன்று காரணங்களில் ஒன்றைத்தவிர மற்றைய இரண்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை முஸ்லீம்களை வெளியேற்றியதால் பாக்கிஸ்த்தனோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளோ இலங்கைக்கு உதவியிருக்கலாம். இதற்கு முன்னோடியாகத்தான் பல முஸ்லீம் அமைச்சர்கள் மத்திய கிழக்கிற்கு தூது போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் அண்மையில் பாக்கிஸ்த்தானிய இணையத்தலஒன்றில் ஒரு ஆக்கத்தை வாசிக்க முடிந்தது. அதில் இலங்கைக்கு பாக்கிஸ்த்தான் இராணுவரீதியான உதவிகளை வழங்கியதற்கான காரணம் இந்தியா தமிழர் மீது கொண்டுள்ள கரிசணைதான் என்று கருத்துப்பட எழுதியிருந்தார்கள். இதில் வேதனை என்னவென்றால் பாக்கிஸ்த்தான் பங்காற்றிய அதே யுத்தத்தில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானுக்கு நிகரான இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியமைதான். 

 

இரண்டாவது காரணமாகிய சகோதரப் படுகொலை. இது சரியா தவறா என்று ஆராய நான் விரும்பவில்லை. ஆனால் இதன்மூலம் நேரடியான விளைவுகள் யுத்தத்தில் ஏற்பட்டன என்று கூறமுடியாது. சிலவேளை இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த சில இயக்கங்களை புலிகள் அழித்தோ அல்லது தடைசெய்தோ இருந்தமை இந்திய புலநாய்வுத்துறைக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கலாம். அந்த இயக்கங்களை வைத்து இலங்கையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முயன்றதைப் புலிகள் தடுத்தமை அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

 

இறுதியாக நான் சரியென்று நம்பும் காரணம். ராஜீவை புலிகள் கொன்றது அல்லது கொல்வதற்குத் துணைபோனது. இது நடந்திருக்கவே தேவையில்லை. பதவியிலிருந்து தூக்கப்பட்ட ராஜீவ் மீண்டு வருவார், மீண்டும் இராணுவத்தை வடக்குக் கிழக்கிற்கு அனுப்புவார், ஆகவே அதற்கு முன்னர் அவரைக் கொல்ல புலிகள் முடிவெடுத்தார்கள் என்று அன்று பலராலும் காரணம் கூறப்பட்டது.ணஆனால் அப்படி எதுவுமில்லை, தன்னைக் கட்டாயப்படுத்தி விருப்பமற்ற ஒப்பந்தத்திற்குள் இழுத்துவிட்ட ரஜீவுக்கு பிரபாகரன் பாடம் புகட்ட எண்ணினார் என்றும் சொன்னார்கள். இவையிரண்டுமில்லை, வன்னியில் இந்திய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தணு இதற்குக் காரனமான ரஜீவைப் பழி வாங்க எண்ணினார், அவருடமன் புலிகளிடமிருந்து பிரிந்து செயற்பட்ட ஒரு அமைப்பும் சென்றது என்றும் காரனம் சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் ராஜீவ் கொல்லப்பட்டார், புலிகளுக்கு அதில் குறிப்பிடத்தக்களவு சம்பந்தமும் இருந்திருக்கலாம். ஆனால் அதன் விளைவு நாம் 2009 இல் பார்த்தது. ஒரு தனிமனிதனை பழிவாங்குவதற்காக ஒரு இனத்தையே பழிவாங்கியது உலகின் மிகப்பெரிய அகிம்ஸாவாத ஜனநாயக நாடு. சரியாக 18 வருடங்கள் காத்திருந்து, தனக்குச் சார்பான அரசொன்று கொழும்பில் அமையும்வரை பொறுத்திருந்து, இனவழிப்பிற்கான சகல புற செயற்பாடுகளையும் செய்துவைத்து இறுதியாக தமிழர்களை இனவழிப்பிற்குள் தள்ளிக்கொண்டொபோய் நிறுத்தும்வரை இந்திய காங்கிரஸ் அரசு ஓயவில்லை. இன்றுவரை நடத்தப்பட்ட இனவழிப்பை மறைக்கவும் அப்படி நடைபெறவில்லை என்று சாதிக்கவும், சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் இலங்கையை தூக்கி நிறுத்தவும் இந்தியா இன்றுவரை பின்னின்றதில்லை. நடக்கப்போகும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியா கொடுத்துவரும் ஆதரவு இதற்கான சின்ன உதாரனம் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

சில காலத்திற்கு முன்னர் (2012 ஆக இருக்கலாம்) பேராசிரியர் சூரிய நாராயணனும் இன்னும் சில இந்திய ராஜதந்திரிகளும் அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார்கள். இது மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்  நகரில் நடைபெற்றது. அதில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லையாயினும் எனது நண்பர்கள் சிலர் சிட்னியிலிருந்து சென்றிருந்தார்கள். 

 

கருத்தரங்கின் இறுதிப்பகுதியில் புலிகளை அழிப்பதில் இந்தியாவின் பங்குபற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த சூரிய நாராயணன், "ராஜீவ் கொலை மட்டுமே இந்தியா புலிகளை அழிக்க முடிவெடுத்த ஒற்றைக் காரணம் அல்ல. 1987 இல் இந்திய தலையீட்டுடன் அமுல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைப் புலிகள் கிழித்தெறிந்து, இறுதியில் பிரேமதாசாவுடன் சேர்ந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றியதை இந்தியா எக்காலத்திலும் மறக்கவில்லை. பிராந்திய வல்லரசான எங்களை ஒரு சாதாரண இயக்கம் வெளியேற்றத் துணைப் போனது இந்தியாவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானம். ஆகவேதான் அந்த அவமானத்தைத் தந்தவர்களை முற்றாக அழித்துவிட விரும்பினோம்" என்று கூறினார். அன்று அங்கே சென்றிருந்த பல தமிழர்களுக்கு இந்தப் பதில் வியப்பை அளித்தது என்று எனது நண்பர் கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,

இலங்கை சீனாவிடம் போகாமல் இருக்க இந்தியா உதவுகிறது என்பது உண்மை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் பிடி இலங்கையில் மாட்டிவிட்டது, அதனால் பயந்து தான் இந்தியா இலங்கைக்கு உதவுகிறது என்பது, அம்புலிமாமா கதை.

இவ்வளவு பெரிய பிராந்திய அரசு அப்படி ஒரு பிடியை இலங்கை போல் ஒரு சுண்டைகாய் நாட்டிடம் கொடுக்கும், கொடுத்து விட்டு பணய கைதியாய் இருக்கும் என்பது நம்ப முடியாத கதை.

நடப்பது என்னெவென்றால் இந்தியா 13 + ஐ வலியுறுத்துகிறது. இலங்கை முரண்டு பிடிக்கிறது. இலங்கையை முற்றிலும் தன்னை விட்டு அகல விடாமல் மிரட்டும் தொனியில் காரியம் சாதிக்க பார்க்கிறது இந்தியா. இந்தியாவை முற்றிலும் பகைகாமல் 13 ஐ குப்பையில் போடப் பார்க்கிறது இலங்கை. இது ஓர் ராஜதந்திர பனிப்போர். இந்த இடைவெளியில் கூட்டமைப்பு நமக்கு வேண்டிய வகையில் காய் நகர்த்த வேண்டும்.

இந்த பனிப்போர் இலங்கைக்கு சாதகமாய் முடியலாம், ஒரளவுக்கு மேல் இந்தியா பொறுமையிழந்து, எமக்கு சாதகமாய் அமையலாம், அல்லது இப்படியே வருடக்கணக்கில் இழுபடலாம்.

இதின் முடிவு, இந்திய ஆட்சி மாற்றம், கூட்டமைப்பின் மதிநுட்ப்பம், அமெரிக்காவின் போக்கு, இலங்கையின் நெகுழ்வுமை என பல்வேறு variables இன் கூட்டு விளைவாக இருக்கும்.

இதை எதிர்வு கூறுவது இயலாத காரியம்.

 

இலங்கைக்கு இன்றுவரை இந்தியா கொடுத்துவரும் ஆதரவிற்கான காரணமாக இந்திய ராஜதந்திரிகளாலும், அரசியல் வாதிகளாலும் கூறப்படுவதைத்தான் நான் மேலே சொல்லியிருந்தேன். ஆக அம்புலிமாமாக் கதை சொல்வது நானாக இருக்கமுடியாது. சீனாவிடமும் பாக்கிஸ்த்தனிடமும் இலங்கை செல்வதைக் காட்டிலும், நாமே அந்த உதவிகளை வழங்குவதுதான் நியாயம் என்று எத்தனை தடவை இவர்கள் கூறியிருக்கிறார்கள் ?? நீங்கள் ஒருமுறை தன்னும் இப்படிக் கேட்டதில்லையா?

 

கேணல் ஹரிஹரனுடனான தந்தித் தொலைக் காட்சிப் பேட்டியில் அவர், "2009 இல் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு எடுத்த முயற்சியை இந்தியா தடுத்தது. ஏனென்றால், அப்படித் தலையீடு ஒன்றை அமெரிக்க செய்வதை இந்தியா தடுக்காது விட்டிருந்தால் இலங்கை விவகாரத்தில் இனி எந்தக் காலத்திலுமே இந்தியாவால் தலையீடு செய்ய முடியாது போயிருக்கும். ஆகவேதான் போரில் அகப்பட்டிருந்த சில புலிகளையும் பொதுமக்களையும் ம்மிட்க அமெரிக்கக் கடற்படை எடுத்த முயற்சியை நாம் தடுத்து நிறுத்தினோம். அந்தக் காலம் இந்திய ராஜதந்திரத்துக்கு உண்டான கடுமையான சோதனைக்காலம்" என்று கூறியிருந்தார். 

 

இதில் வேடிக்கை என்னெவென்றால், எந்த நாடுகள் ஆயுதம் கொடுப்பதால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள், அதனால்த்தான் நாமே அந்த ஆயுதங்களைக் கொடுத்தோம் என்று கூறிய இந்தியா இறுதியில் தனது ஆயுதங்களைக் கொண்டே தமிழர்களை இரண்டாவது தடவையும் அழித்தது. 

Edited by ragunathan

சோனியா பழிவாங்குவதற்கான காலம் கனிந்து வந்ததை உணர்ந்திருந்தா. (ஆனால் இந்தியா தலையிடா விட்டாலும் SLMMமை வெளியேற்றிய அமேரிக்கா முடிவை இன்னொரு திசையில் போக அனுமதித்திருந்திருக்காது. நடந்த போர்க்குற்றம் குறைவாக இருந்திருக்கலாம்) சோனியா எடுத்த முடிவுகளில் மலையாளிகளின் தமிழ் நாட்டு குரோதம் மிக்க தாக்கத்தை கொண்டிருந்தது. இலங்கையுடன் காங்கிரசின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பமாகியிருந்தது. சிவசங்கர், சிதம்ப்ரம் சிங்கபூரின் தமிழ்ர்-சீன பங்குகளை கொண்டிருந்த கமபனிகள் மூலம் லாவகமாக பல விடையங்களை கையாண்டார்கள்.  அமெரிக்க ஆய்வாலர்கள் முத்துமாலை தியறி வெளிவிட்ப்பட்டிருந்தது. அமெரிக்கர்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பினார்கள். அவர்கள் சீனவை இந்தியா எதிர்க்கும் என்று பார்த்தார்கள். இந்தியா மாறாக இலங்கையில் சீனாவுடன் சேர்ந்து இயங்கியது. இதற்கு தொகை தொகையான இலஞ்சப்பண கைமாற்றம் உதவியது.  இந்திய பொருளாதாரம் தளைக்கத்தொடங்க காங்கிரசுக்கு கறுப்பணம் மூலம் முதலிட இலங்கை வசதியாக இருந்தது. சீனாவின் முத்துமாலை துறை முகப்போட்டி போலியாக காட்டப்பட்டது. இந்தியா அது சம்பந்தமாக பாகிஸ்த்தான், இலங்கை, பங்களா தேசத்தில் எதுவும் செய்யவில்லை. அமெரிக்க மட்டும் மாலைதீவில் தோல்வி போன கடல்படைத்தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கி அதை பின்னர் கைவிட்டது. 

 

தேவையான புலிகளின் இரகசியங்கள் சொலேயுமால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வழங்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கிங்கே சிலர் ஒரு உண்மையை மறந்துவிடுகிரார்கள். இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதையும், தார்மீக ஆதரவு கொடுப்பதையும் உள்நாட்டில் நியாயப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது. இதற்குக் கிடைத்த மிகச் சிறந்த சாட்டுத்தான் "சீனப் - பாக்கிஸ்த்தானிய" பூச்சாண்டி. இதை இந்தியாவில் எவரிடம் கூறினாலும் மூச்சுப் பேச்சில்லாமல் நம்பிவிடுவார்கள். ஏனென்றால் எல்லையில் சீனாவும், பாக்கிஸ்த்தானும் இந்தியாவை ஊடறுத்து கைப்பற்றப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிரார்கள், அதன் ஒரு அங்கம்தான் இலங்கையில் அவர்கள் காலூன்றுவதும் என்று சாதாரண இந்தியர்களை நம்பவைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

 

உண்மையான நோக்கம், தனிமனிதப் படுகொலையை ஒரு ஒட்டுமொத்த இனத்தின் கூட்டுப் படுகொலைமூலம் பழிவாங்குவது. அதன்பிறகு அம்புலிமாமாக் கதை சொல்லி உலகத்தையே நம்பவைப்பது. 

புலிகள் அழிவுக்கு முக்கிய காரணம் சமாதான காலம் புலிகளுக்கு எந்த வகையிலும் நன்மையாக அமையாமையே....   அதற்கு பல காரணங்கள்... 
 
அதே சமயம் இலங்கை அரசுக்கும்  இராணுவத்துக்கும் பலத்தை நன்மையையும் பலத்தையும் கொடுத்தது....    80 000 மாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கை  300 000 மாக அந்த ஒன்பது வருடங்களில் மாறியது... 
 
அதே சமயம் சமாதானம் புலிகளின் படை பலத்தை உயர்த்த உதவவில்லை ஆயுத பலத்தை அதிகரித்தாலும்  பலம் எப்போதும் பிரச்சினையாகவே  இருந்தது ...    கரந்தடி போர் முறையில் புலிகள் இருந்த போது மக்கள் கொடுத்து வந்த நெருக்கம் புலிகள் மரபுவளிக்கு மாறிய பின் ஒதுங்கும் நிலையையே கொண்டு வந்தது...  இதை அமரர் மாமனிதர்  தாரகி அவர்கள் விளக்கம் கொடுத்து ஒரு கட்டுரை வரைந்தார்... 
 

இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின் அரசியல் மயமாக்கல் தேவை

அதாவது ஒரு கெரில்லா போராளியிடமிருக்கக்கூடிய அர்ப்பணிப்பு, சூழலுக்கேற்ப செயற்படும்திறன், பொது மக்களை அரவணைத்துச் செல்லும்பாங்கு, அரசியல் தெளிவு, மனிதநேயம் என்பன ஒரு இராணுவப்பயிற்சிமுகாமின் நான்குவேலிகளுக்குள் உருவாக்கப்படும் மரபுவழி படையா ளிடமோ அல்லது அதிகாரியிடமோ காணப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 

இதனால் தற்போது நிலவும் அமைதி நீண்டு செல்லச்செல்ல விடுதலைப் புலிகளின் படைகளிலிருந்து விலகிச் செல்பவர் களின் தொகை அதிகரிக்கப் போகிறது என அந்த முன்னாள் போராளி கூறினார். இதுமட்டுமன்றி மரபு வழிப்படை என்பது மக்களோடு தொடர்பின்றி சமூகத்திற்கு வெளியில் முகா மிடப்பட்டு தனித்து வைக்கப்படுவதாகும். 
இதனால் விடுதலைப் போர் விழுமியங்களும் உணர்வு களும் மக்களிடையே பரப்பப்படுவதற்கான வாய்ப்பு இல்லாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது விடயத்தில் எமது போராட்டம் ஒரு முக்கியமான இரு தலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

கெரில்லாப் போர் என்ற மட்டத்திலேயே நாம் தேக்க மடைந்திருந்தால் எமது போராட்டம் காலவரையறை யின்றி இழுபட்டுக்கொண்டே சென்றிருக்கும் என்பதில் ஐய மில்லை. தென் அமெரிக்காவில் பல மக்கள் போராட் டங்கள் முப்பது நாற்பது வருடங்களாக கெரில்லா போர் நிலை யிலேயே முன்னேற்றமின்றி கிடப்பதை நாம் காண்கிறோம்.[/size]

அதேவேளை ஒரு மரபுவழிப்படையை உருவாக்கி அதை போரற்ற ஒரு சூழலில் நீண்டகாலம் பேண முற்படு கையில் அது கெரில்லாக்களால் முன்னெடுக்கப் படும் விடுதலைப் போருக்குரிய குணாம்சங்களையும் பற்று றுதியையும் இழந்து இயந்திரத்தனம் மிக்கதொன்றாக மாறுவது மாறக்கூடிய வாய்பு ஏற்படுகிறது.

 

20 வருட போரில் உளண்ற மக்கள் கிடைத்த சமாதானத்தை மக்கள் பயன் படுத்த தொடங்கினர்...   போரில் இழந்தவைகளை ஈடு கட்டவும் , தங்களை முன்னேறவும் தன்னிறைவை குடும்பங்களாக அடையவும் முற்பட்டனரே அண்றி போராட்டம் பற்றி அக்கறை இருக்க வில்லை..  அதை தவறு எண்று சொல்ல யாராலும் முடியாது ...  இது ஒரு காரணி...   இது புலிகளின் இராணுவ பிரிவுக்கு வெளிபிரிவுகளில்  இருந்த திருமணமான தளபதிகள் வரை தொடர்ந்தது... 

 

பின்னர் சமாதான காலம் ஆரம்பித்த போது  திருகோணமலையில் ஒரு மேடையில் பேசிய தாரகி சொல்கிறார்...  "நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவை"   ...

 

சமாதான காலங்களில்  தாரகி எழுதிய பல கட்டுரைகளில் ஒருசில  தோல்வி ஏற்படாமல்  தடுக்க முடியாது எண்டதை சொன்னவை...   அதற்கு சர்வதேச காரணிகளையே மிக முக்கியமாக குறிப்பிடுகிறார்...  விடுதலை போரின் முடிவு தீர்மானிக்க படுவது சிங்களவரால் அல்ல  சர்வதேச வியூகங்களே என்பதை தாரகி அவர்கள் 2003 ம் ஆண்டு ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறார்... 

 

சர்வதேச வியூகங்களே தமிழீழம் எதிர்கொள்ள வேண்டிய சவால்

 

எமது உரிமைப் போராட்டத்தின் பிரதான முட்டுக்கட்டைகளாக வருங்காலத்தில் அமையப் போவது சிங்களப் பேரினவாதிகளோ ஸ்ரீலங்கா இராணுவமோ அல்ல. தத்தமது கேந்திர மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை அடைவதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் என்பன இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வகுத்துக் கொண்டிருக்கின்ற வியூகங்களை அரசியல் ரீதியாகவும் போரியல் ரீதியாகவும் எதிர்கொண்டு எப்படி நாம் வரலாறு படைக்கப்போகின்றோம் என்பதே எம்முன் இன்றுள்ள சவாலாகும்.

14.12.2003 சிவராம்

 

பலர் இங்கு சொல்வது போல இந்தியா கிடைத்த பல காரணிகளை பயன் படுத்த நினைத்தது  புலிகளின்  அனுராத புரம் வான்படை தளத்தின் மீதான தாக்குதலின் பின்னரே...   புலிகளின் தற்காப்பு தாக்குதல்களை மௌனமாக பார்த்த இந்தியா   ஒரு நீண்ட தூரம் செண்ற  வலிந்த தாக்குதலை ஒத்துக்கொள்ள முன் வரவில்லை...   

 

அதன் பின்னரே இரசிய கூட்டு நாடுகளிடம் இருந்து MIG 27 முதல்  பல இரசாயண ,  ஆயுதங்களை கொடுப்பதுக்கு உடனடியாக பிணை நிண்றதோடு பல உதவிகளை செய்தது...   அது வரை இந்தியா ஒதுங்கியே இருந்தது...  என்பதுதான் உண்மை...  

 
 

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் தாக்குதலுக்குப் பின்னரே இந்தியா முழுமூச்சாக இறங்கியது என்றுதான் நானும் அறிந்தேன்.

அநுராதபுரத்தில் தேவையான சக்தியை போடு அடித்தது விமானங்களை கட்டுப்படுத்த. ஆனால் அங்கு போனவை பெரும்பாலனவை உப விமான்ங்கள். உடனடி போருக்கு தேவைப் படவில்லை. அமெரிக்கா விபரம் தெரிந்து வாங்கிக் கொடுத்திருந்த கீபீர்கள் பக்குவமாக இருந்து தாக்குதல்களை செய்தன. இந்தியாவின் உதவி தோற்ற பின்னர் ஒன்றாக சேர்ந்த அப்பாவி பொதுமக்களை கொல்லத்தான் பாவிக்கபட்டது. பிரதானமாக போரின் திசையை தீர்மானித்து முடித்தது விமானக் குண்டு வீச்சு.. அதுவே தான் அமெரிக்காவில் நடந்த வழக்கும். கீபீரை கட்டுப்படுத்த ஆயுதங்கள வாங்காமல் இருக்க கவனிக்கப்பட்டவர்களே சுரேஸ் போன்றோர்.

ஆனால் இஸ்ரேலின் இழப்பை அவர்கள் ஈடு செய்ய முடியாது. வழமையில் இப்படி சிறப்பு வடிவமைத்த போர் உபகரணங்களை எதிரியின் கைகளுக்கு போக விடுவத்திலை. ஆனால் இலங்கையில் இவை பாகிஸ்தான் விமானிகளால் பாவிக்கப்பட்டவை. சீனா, ரூசியா எல்லோர் ககைகளிலும்தான் போய் சேர்ந்தது. டிவோரா படகும், கீபீர் விமானமும் அவற்றுக்கான எதிர்ப்புக்கள் தயாரிக்கப்படுவிட்ட உபகரணங்களாக இஸ்ரேல் இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் தாக்குதலுக்குப் பின்னரே இந்தியா முழுமூச்சாக இறங்கியது என்றுதான் நானும் அறிந்தேன்.

 

அப்படி என்டால் தலைவருக்கு கொஞ்சம் கூட இராஜதந்திரம் தெரியாது இல்லையா இசை.இப்படி எதாவது கடுமையாக செய்தால் இந்தியாவின் கோபத்தை சந்திக்க வேண்டி வரும் என்டு தெரிஞ்சும் கடுமையான தாக்குதலை செய்திருக்கிறார்  <_<
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,

நான் அம்புலிமாமா கதை என்று சொன்னது உங்கள் கருத்தை அல்ல. இந்தியா வின் முள்ளிவாய்க்கால்ப் "பிடி" இலங்கையின் கையில் அதனால் இந்தியா பணயக்கைதியாக செயல் படுகிறது என்பதையே.

30 வருடத்துக்கு மேல் நீண்ட இலங்கை போரை முடிவுக்கு கொண்டுவருவது என்று உலக நாடுகள் 2002 லே தீர்மானித்து விட்டன. புலிகள் ஆயுதங்களை IRA செய்தாப்போல decommissioning செய்து முன்வருவார்களாயின் அவர்களுக்கு ஒரு கடைசிசந்த்ஹத்ப்பம் வழங்க தீர்மானிக்கப் பட்டது. புலிகள் இவ்வாறு செய்வதை இலங்கையோ இந்தியாவோ விரும்பவில்லை. எனவே அவர்கள் புலிகள் தொடர்ந்தும் வன்முறை யை செய்ய சந்த்ஹர்ப்பம் கொடுத்தார்கள். இதை புரிந்து கொள்ளாத புலிகளும் ஆயுத கப்பல், அரசியல் கொலைகள். குரங்கு பான்சான், மாவிலாறு என்று தவறு மேல் தவறு விட்டர்கள். ஆயுதங்களை மெளனிப்பதாக 2002 இல் சொல்லி இருந்த்ஹா அமெரிக்கா கூட்டத்துக்க்கும் போயுருக்கலாம். இடைக்கால அலகும் பெற்றிருக்கலாம். ஆனால் இதை விடுத்து ரனிலின் தோல்வியை புலிகள் உறுதி செய்த்தும். அமெரிக்காவிற்கு புலிகள் மேலிருந்த நம்பிக்கை முற்றாக போய்விட்டது.

புலிகளை அழிக்க அமெரிக்கா, அவர்களின் சகாக்கள் முடிவு செய்ய, அதை தமக்கு லாவகமாக இந்தியாவும் இலங்கையும் பயன்படுத்தி கொண்டன.

ராஜீவ் கொலை பழிவாங்கல் என்பது பல காரணிகளில் ஒன்று. இந்தியா குறிப்பக காங்கிரஸ் அரசு புலிகளை அழித்தொழிக்க காத்து இருந்தது. இலங்கைக்கு அதுதான் ஒரே குறி.

2006 க்கு பின் காலம் கனிய, "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று ஒரு பெரும் சதிராடி முடித்து விட்டனர் புலிகள் கதையை.

மக்கள் அழிவார்கள் என்பது அமெரிக்கா. இந்தியா இப்போது மாய்மாலம் போடும் கனடா எல்லோர்க்கும் தெரியும். ஆனால் collateral damage என்று அதை ஏற்க துனிந்தனர்.

ஆனால் போரின் பின் இலங்கை முன்பு கொடுத்த வாக்குறுதியில் (அரசியல் தீர்வு) பின்வாங்கவே போர்க்குற்றத்தை கையில் எடுக்கிறனர். இந்தியா அதிக அழுத்தம் கொடாமல் கூட்டத்து வரமாட்டேன் என்று சிறிய அளவில் பிரெசர் பண்ணுது. அமெரிக்கா அடுத்த நிலைக்குப் போய் நீதி விசாரணை கோருகிறது.

இந்தத் திரியில் ரகுநாதன் / தயா / கோஷான் / அர்ஜுன் ஆகியோரிற்கிடையில் இடம்பெறும் ஆரோக்கியமான உரையாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. பல விடயங்களை அறியத் தருகின்றன.

 

நன்றி.. தொடர்ந்து உரையாடுங்கள்.

சமாதானப் பேச்சு வார்த்தையை குழப்பியவர்கள் புலிகள் அல்ல. பேச்சுவார்த்தையில் கருணா போன்ற கோமாளிகளுக்கு ஆரம்பதில் கூட இடம் கொடுத்திருந்த கூடாது என்பதும், பால அண்ணை, சிவாபசுபது போல மட்டும்தான் நின்றிருக்க வேண்டும் என்பது வேறு கதை. 

2005 பிளேக்கை அமெரிக்கா கொண்டவந்ததே மாற்றங்களை செய்யவே. இதை புரிந்து கொள்ள வேண்டுமாயின் லன்ஸ்டெட்டின் யாழில் இருக்கும் டெலெக்ஸ் செய்தியை படிக்க வேண்டும். இந்த கட்டத்தில் அமெரிக்க கொள்கைகள் புலிகளுக்கு எதிராக அல்ல, தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பியது. பிளேக்கின் நடத்தைகளை அவரின் பொஸ் அமிர்தாஜ் கூட எதிர்த்தார். ஆனால் ராஜாங்க அமைச்சு மத்திய கிழக்கு வெற்றியை வடகொறியாவில் காசாக்கவே அவரை அங்கே அனுப்பியது. இதனால் அமெரிக்கா சுனாமி பணம் புலிகளுக்கூடாக தமிழருக்கு கிடையாமல் பார்த்துக்கொண்டது.(அரசு சுனாமி பணத்தில் தமிழருக்கு எதும் செய்யவில்லை என்றதை அமெரிக்கா என்றுமே கண்டிக்கவில்லை, தான் கூட தெற்கில்தான் அபிவிருத்தி செய்தது. இலங்கை சென்ற கிளீண்டனே இதை ஒத்துக்கொண்டிருந்தார்)  ரணில் கொடுக்க முன்வந்த சுனாமி பணத்தை எதிர்த்து வழக்கு போட்ட வடிகட்டின கம்யூனிட் காடைகளான  JVPயை  அவர்களின் காரியாலத்தில் சென்று சந்தித்தது. (இன்று மிசேல் சிசன் வடமாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு காரியாலயத்தில் சந்திருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?) 

 

அமெரிக்கா அபிவிருத்தி பணத்துக்கு $0 கூட போட மறுத்தத்து. அந்த பணம் புலிகளுக்கு கிடைக்க கூடாது என்பதில் நோர்வே, யப்பானுடன் கறாராக இருந்தது.  UN பணத்தில் கட்டியிருந்திருக்க வேண்டிய குடிநீர் திட்டங்களைஅரசு கட்ட மறுத்தபோது அமெரிக்கா அதை கேடகவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் மாவிலாறு தண்ணீருக்கு தடை கொண்டுவரப்பட்டது.

 

அமெரிக்கா எந்த சந்தர்பத்திலும் அன்றைய கொள்கைகளின் கீழ், $0 கூட அந்த $4.5 பில்லியன் பணத்தில் தமிழருக்கு கிடைக்க இடம் கொடுத்திருந்திருக்காது. யப்பான் வாக்குறுதி கொடுத்த $2.5 பில்லியனும் இலங்கை அரசிடம் கொடுத்து விட்டத்தாகத்தான் சொல்லப்படுகிறது. 

 

 கதிர்காமரின் சேவை இந்தியாவிலோ சீனாவிலோ அல்ல. முற்று முழுத்தாக மேற்குநாடுகளில். சந்திரிக்கவே ரணிலை விட மேற்கு சார்பாக அந்த நேராம் காணப்பட்டார். ரணிலை தோற்கடித்தது புலிகள் அல்ல. அமெரிக்காவின் நடத்தைகள்.  கப்பல்களை சந்திரிக்கா தாழ்ப்பதற்கு பிளேக் சந்திரிக்காவை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். தான் பிரதமராக இருக்க தனக்கு தெரியாமல் தனது ஒபந்தம் மீறப்பட்டு போர்கால நிபந்தனைகளில் கப்பல்கள் தாழ்க்கப்பட்டது சம்பந்தமாக ரணில் சந்த்ரிக்காவிடமும், அமெரிக்காவிடமும் முறைப்பாடுகள் செய்தும் இருந்தார். அமெரிக்காவின் நடத்தைகள் ரணில் போருக்கு உதவார் என்றதை வெளிக்காட்டி சந்திரிக்கவுடன் இணங்கி நடந்தே SLFPக்கு சிங்கள மக்களிடம் தேவை இல்லாத செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

 

மகிந்தாவின் புலிகளுடனான இரகசிய உடன்படிக்கை சிங்களவர்களுக்குதெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது. இதானால் புலிகளுடன் வெளிப்படையான ஒப்பந்த செய்த ரணிலை அவர்கள் தோற்கடித்து, இரகசிய ஒப்பந்தம் செய்த மகிந்தாவை தெரிந்தார்கள். இதில் முட்டாள்கள் ஆக்கப்படாதவர்கள் தமிழர்கள். அவர்கள் சிங்களவர்களை 1948ம் ஆணுமுதல் தெரிந்தவர்கள் என்பதால் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை.ஆனாலும் அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை. புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருந்த மகிந்தாவால் முட்டாள்கள் ஆக்கப்பட்டது சிங்கள மக்கள். ஆனால் அவர்கள் விரும்பிய இனத்துவேச அரசு புத்தர் சித்தமாக அவர்களுக்கு வந்து கிடைத்தது. அமெரிக்கா புலிகளுடன் ஒப்பந்தம் செய்த மகிந்தா என்றதை அறிந்த பின்னர் புலிகள் தான் மகிந்தாவை வெல்ல வைத்தாக குற்றம் சாடினார்கள். ஆனால் தாங்களேதான் மகிந்தாவுக்கு உதவிசெய்து புலிகளை அழைத்தார்கள். அவர்கள் மகிந்தாவுடன் இணைந்து செயல்பட போகிறார்கள் என்றால் என்ன படப்பாயத்துக்கு புலிகள் மகிந்தாவை பதவியில் அமர்த்தினார்கள் என்று குற்றம் சாட்டுவான். உண்மை, பில்லியன் டொலர்களை வேவுகளில் செலவிடும் அமெரிக்காவுக்கு அந்த ஒப்பந்த பற்றி தெரியாது.  அமெரிக்கா அதில் அந்த்சொல்லுக்கும் செயலுக்குமிடையில் மடுவும் மலையுமாக நடந்து கொண்டார்கள்.  தான் மூட்டாள் அக்கப்படதை சென்ற வருடம் காங்கிரசில் பிளேக் "இலங்கை அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது" என்றதை பகிரங்கமாக சொல்லும் வரை அதை ஒதுக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானப் பேச்சு வார்த்தையை குழப்பியவர்கள் புலிகள் அல்ல. பேச்சுவார்த்தையில் கருணா போன்ற கோமாளிகளுக்கு ஆரம்பதில் கூட இடம் கொடுத்திருந்த கூடாது என்பதும், பால அண்ணை, சிவாபசுபது போல மட்டும்தான் நின்றிருக்க வேண்டும் என்பது வேறு கதை. 

2005 பிளேக்கை அமெரிக்கா கொண்டவந்ததே மாற்றங்களை செய்யவே. இதை புரிந்து கொள்ள வேண்டுமாயின் லன்ஸ்டெட்டின் யாழில் இருக்கும் டெலெக்ஸ் செய்தியை படிக்க வேண்டும். இந்த கட்டத்தில் அமெரிக்க கொள்கைகள் புலிகளுக்கு எதிராக அல்ல, தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பியது. பிளேக்கின் நடத்தைகளை அவரின் பொஸ் அமிர்தாஜ் கூட எதிர்த்தார். ஆனால் ராஜாங்க அமைச்சு மத்திய கிழக்கு வெற்றியை வடகொறியாவில் காசாக்கவே அவரை அங்கே அனுப்பியது. இதனால் அமெரிக்கா சுனாமி பணம் புலிகளுக்கூடாக தமிழருக்கு கிடையாமல் பார்த்துக்கொண்டது.(அரசு சுனாமி பணத்தில் தமிழருக்கு எதும் செய்யவில்லை என்றதை அமெரிக்கா என்றுமே கண்டிக்கவில்லை, தான் கூட தெற்கில்தான் அபிவிருத்தி செய்தது. இலங்கை சென்ற கிளீண்டனே இதை ஒத்துக்கொண்டிருந்தார்)  ரணில் கொடுக்க முன்வந்த சுனாமி பணத்தை எதிர்த்து வழக்கு போட்ட வடிகட்டின கம்யூனிட் காடைகளான  JVPயை  அவர்களின் காரியாலத்தில் சென்று சந்தித்தது. (இன்று மிசேல் சிசன் வடமாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு காரியாலயத்தில் சந்திருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?) 

 

அமெரிக்கா அபிவிருத்தி பணத்துக்கு $0 கூட போட மறுத்தத்து. அந்த பணம் புலிகளுக்கு கிடைக்க கூடாது என்பதில் நோர்வே, யப்பானுடன் கறாராக இருந்தது.  UN பணத்தில் கட்டியிருந்திருக்க வேண்டிய குடிநீர் திட்டங்களைஅரசு கட்ட மறுத்தபோது அமெரிக்கா அதை கேடகவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் மாவிலாறு தண்ணீருக்கு தடை கொண்டுவரப்பட்டது.

 

அமெரிக்கா எந்த சந்தர்பத்திலும் அன்றைய கொள்கைகளின் கீழ், $0 கூட அந்த $4.5 பில்லியன் பணத்தில் தமிழருக்கு கிடைக்க இடம் கொடுத்திருந்திருக்காது. யப்பான் வாக்குறுதி கொடுத்த $2.5 பில்லியனும் இலங்கை அரசிடம் கொடுத்து விட்டத்தாகத்தான் சொல்லப்படுகிறது. 

 

 கதிர்காமரின் சேவை இந்தியாவிலோ சீனாவிலோ அல்ல. முற்று முழுத்தாக மேற்குநாடுகளில். சந்திரிக்கவே ரணிலை விட மேற்கு சார்பாக அந்த நேராம் காணப்பட்டார். ரணிலை தோற்கடித்தது புலிகள் அல்ல. அமெரிக்காவின் நடத்தைகள்.  கப்பல்களை சந்திரிக்கா தாழ்ப்பதற்கு பிளேக் சந்திரிக்காவை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். தான் பிரதமராக இருக்க தனக்கு தெரியாமல் தனது ஒபந்தம் மீறப்பட்டு போர்கால நிபந்தனைகளில் கப்பல்கள் தாழ்க்கப்பட்டது சம்பந்தமாக ரணில் சந்த்ரிக்காவிடமும், அமெரிக்காவிடமும் முறைப்பாடுகள் செய்தும் இருந்தார். அமெரிக்காவின் நடத்தைகள் ரணில் போருக்கு உதவார் என்றதை வெளிக்காட்டி சந்திரிக்கவுடன் இணங்கி நடந்தே SLFPக்கு சிங்கள மக்களிடம் தேவை இல்லாத செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

 

மகிந்தாவின் புலிகளுடனான இரகசிய உடன்படிக்கை சிங்களவர்களுக்குதெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது. இதானால் புலிகளுடன் வெளிப்படையான ஒப்பந்த செய்த ரணிலை அவர்கள் தோற்கடித்து, இரகசிய ஒப்பந்தம் செய்த மகிந்தாவை தெரிந்தார்கள். இதில் முட்டாள்கள் ஆக்கப்படாதவர்கள் தமிழர்கள். அவர்கள் சிங்களவர்களை 1948ம் ஆணுமுதல் தெரிந்தவர்கள் என்பதால் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை.ஆனாலும் அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை. புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருந்த மகிந்தாவால் முட்டாள்கள் ஆக்கப்பட்டது சிங்கள மக்கள். ஆனால் அவர்கள் விரும்பிய இனத்துவேச அரசு புத்தர் சித்தமாக அவர்களுக்கு வந்து கிடைத்தது. அமெரிக்கா புலிகளுடன் ஒப்பந்தம் செய்த மகிந்தா என்றதை அறிந்த பின்னர் புலிகள் தான் மகிந்தாவை வெல்ல வைத்தாக குற்றம் சாடினார்கள். ஆனால் தாங்களேதான் மகிந்தாவுக்கு உதவிசெய்து புலிகளை அழைத்தார்கள். அவர்கள் மகிந்தாவுடன் இணைந்து செயல்பட போகிறார்கள் என்றால் என்ன படப்பாயத்துக்கு புலிகள் மகிந்தாவை பதவியில் அமர்த்தினார்கள் என்று குற்றம் சாட்டுவான். உண்மை, பில்லியன் டொலர்களை வேவுகளில் செலவிடும் அமெரிக்காவுக்கு அந்த ஒப்பந்த பற்றி தெரியாது.  அமெரிக்கா அதில் அந்த்சொல்லுக்கும் செயலுக்குமிடையில் மடுவும் மலையுமாக நடந்து கொண்டார்கள்.  தான் மூட்டாள் அக்கப்படதை சென்ற வருடம் காங்கிரசில் பிளேக் "இலங்கை அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது" என்றதை பகிரங்கமாக சொல்லும் வரை அதை ஒதுக்கொள்ளவில்லை.

மல்லையூரான்.. உங்களின் கருத்துக்களில் பெரும்பகுதியுடன் எனது கருத்துக்கள் ஒத்துப் போகின்றன. மாவிலாறு, சமாதான பேச்சுவார்த்தை, புலிகள் மகிந்த ஒப்பந்தம் என்ற சில விஷயங்களை தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை,

அமெரிக்கா பெரும்பாலும் state actors v non state actors எனும் பிணக்குகளில் state actors பக்கமே சாய்வது வழமை. ஆகவே புலிகளை அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தியது வியப்பில்லை. ஆனால் 98 இல் IRA க்கு சொன்னது போல் புலிகளுக்கும் ஒரு இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

அதாவது ஆயுதங்களை decommisining செய்யுங்கள், குறைந்த பட்ச்சம் "putting beyond use" ஆவது செய்யுங்கள் என்பதே அந்த எச்சரிக்கை.

ஆனால் இவை ரெண்டும் புலிகள் அப்போ இருந்த நிலையில் அவர்கள் நினைத்தும் பார்க்க விரும்பாத தெரிவாயிருந்த்ஹது. எனவே அவர்கள் இந்த எச்சரிக்கையை கனம் செய்யாமல் விட முடிவு செய்தனர்.

இந்த எச்சரிக்கையின் கனத்தை பாலசிங்கம் உணர்ந்த்ஹிருந்தார் என்றும், அவரின் இது சம்பந்த்ஹமான ஆலோசனைகள் புறம்தள்ளப்பட்டன என்றும் அறியப்படுகிறது.

அடுத்தது கிளிநொச்சி ஊடக சந்த்ஹிப்பு. இதில் தனிநாட்டை கைவிட்டால் என்னையும் சுடலாம் என்ற நிலையில் மாற்றம் இல்லை என்று பிரபா கூறியது, புலி தன் கோடுகளை என்றும் மாற்றாது என்ற அவர்களின் நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கியது.

( அதுதான் உண்மையும் கூட இல்லையா?)

ஆக தமிழர்-புலிகள் என்ற சமன் பாடு அவசியம் என்ற முடிவுக்கு அவர்கள் போனார்கள். பின் நடந்தது எல்லாம் தெரிந்ததே.

புலிகள் யுத்த நிறுத்தத்தை முறிக்கவில்லை என்றே வைத்தாலும், அரசின் சீண்டலுக்கு tit for tat பதில் கொடுக்கப்போய் மேலும் மேலும் பெயரை கெடுத்த்கார்கள். அரசு இதை மேலும் மேலும் ஊக்குவித்தது.

புலிகள் விளையாடியது ஒரு high risk gamble. தனி நாட்டை அடைவதற்க்காக சின்ன சின்ன அனுகூலங்களான மாகாண அல்லது சமஸ்டி அரசுகளை கூட ஏற்க மறுத்தார்கள். இப்போ புலத்தவர் செய்வதும் இதுவே. தனி நாட்டை கை விட்டோம் என்று வாயளவில் சொல்லக்கூட புலிகள் ஒரு போதும் தயாராக இருக்கவில்லை. மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இப்போ நாம் மரண தேவனின் வருகைக்கு பின்னான கையறு நிலையில் நிக்கிறோம்.

மறு புறத்தே இலங்கை விளையாடியது win-win strategy game. புலிகளை சீண்டி முற்றாக அழிக்கும் Mulkivaikal scenario பெரு வெற்றி. அது இல்லாதவிடத்து ஆயுதங்களை களைந்து ஒரு சமஸ்டி அரசில் புலிகளை வைத்து நாடு பிரியாமல் வைத்க்திருப்பது சிறு வெற்றி. இரண்டு முடிவிலும் அவர்களின் bottom line ஆனா நாடு பிளவு படாமை உறுதிப் படுத்த பட்டிருந்தது.

திறமையாக காய் நகர்த்தி புலிகளின் inadvertent help உடன் முதலாவது தெரிவான பெரு வெற்றியை அடைந்தார்கள்.

ரகுநாதன்,

இலங்கை சீனாவிடம் போகாமல் இருக்க இந்தியா உதவுகிறது என்பது உண்மை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் பிடி இலங்கையில் மாட்டிவிட்டது, அதனால் பயந்து தான் இந்தியா இலங்கைக்கு உதவுகிறது என்பது, அம்புலிமாமா கதை.

இவ்வளவு பெரிய பிராந்திய அரசு அப்படி ஒரு பிடியை இலங்கை போல் ஒரு சுண்டைகாய் நாட்டிடம் கொடுக்கும், கொடுத்து விட்டு பணய கைதியாய் இருக்கும் என்பது நம்ப முடியாத கதை.

நடப்பது என்னெவென்றால் இந்தியா 13 + ஐ வலியுறுத்துகிறது. இலங்கை முரண்டு பிடிக்கிறது. இலங்கையை முற்றிலும் தன்னை விட்டு அகல விடாமல் மிரட்டும் தொனியில் காரியம் சாதிக்க பார்க்கிறது இந்தியா. இந்தியாவை முற்றிலும் பகைகாமல் 13 ஐ குப்பையில் போடப் பார்க்கிறது இலங்கை. இது ஓர் ராஜதந்திர பனிப்போர். இந்த இடைவெளியில் கூட்டமைப்பு நமக்கு வேண்டிய வகையில் காய் நகர்த்த வேண்டும்.

இந்த பனிப்போர் இலங்கைக்கு சாதகமாய் முடியலாம், ஒரளவுக்கு மேல் இந்தியா பொறுமையிழந்து, எமக்கு சாதகமாய் அமையலாம், அல்லது இப்படியே வருடக்கணக்கில் இழுபடலாம்.

இதின் முடிவு, இந்திய ஆட்சி மாற்றம், கூட்டமைப்பின் மதிநுட்ப்பம், அமெரிக்காவின் போக்கு, இலங்கையின் நெகுழ்வுமை என பல்வேறு variables இன் கூட்டு விளைவாக இருக்கும்.

இதை எதிர்வு கூறுவது இயலாத காரியம்.

 

ஜேர்மனிக்கோ ரூசியாவுக்கோஅருகில் நோர்வே இருக்கலாம். ஆனால் அவற்றால் அதன் கொள்கைகளை கையாள முடியாது. சோவியத் ரசியா போன பின்னரும் கியுபா தன் அரசாங்கத்துடன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறது. 

 

இந்தியா 1987 ல் இலங்கைக்குள் ராணுவத்துடன் புகுந்தது. இதை வைத்துதான் இன்றைய இலங்கையின் இன்றய ராஜதந்திர நகர்வுகள் அமைக்கப்படிருக்கின்றன. மகிந்தாவின் ஒவ்வொரு நகர்வும் இந்தியாவை நோக்கியதே. அவ்வளவு எளிதில் இந்தியாவால் இலங்கை மீது தனது பாரத்தை போட இனி இலங்கை விட்டுக்கொடுக்காது. இன்னொருதடவை இலங்கையில் இந்திய இராணுவம் இறங்கிவிட்டாமல் பாகிஸ்தானும் சீனாவும் தங்கள் எல்லைகளை ஓரிரு ஆணடுகளாக தொடர்ந்து பதட்டத்தில் வைத்திருக்கிறார்கள். இலங்கையை பொருளாதாரத் தடை போட்டு இந்தியாவால் அழுத்த முடியாது. இதைதான் மன்மோகன் சிங் 2011 யூனின் "நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லை, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்" என்றதின் மூலம் சொல்ல வந்தார்.

 

தேர்தலை இந்தியா நடத்தியது. அது, ஐ.நாவில், பொதுநாலவாயத்தில் இந்தியாவின் தேவையை உணர்ந்து இலங்கை நடந்து கொண்டமையாலேயே. இந்த இரண்டையும் இந்தியாவுக்கு இலங்கை மீதான பிடியாக கருத்த முடியாது. பொதுநலவாயம் இலங்கையில் நடக்கும். ஆனால் இரண்டு கிழமைகளுக்குள் முடிந்துவிடும். இனி அதற்கு இந்தியா வந்தால் என்ன வராவிட்டால் என்ன இலங்கையை பொறுத்தவரையில் அதன் பின்னர் இந்தியாவை தேவை இல்லை. மன்மோகன் சிங் வரலாம் விடாலாம். வராவிட்டால் இலங்கை இந்தியாவை இனி ஐ.நா.வுக்கு நம்பிக் காத்திருக்காது. அதோடு இந்தியாவின் பாரம் முழுவத்தாக தூக்கி எறியப்பட்டுவிடும். மன்மோகன் சிங் வந்தால் இன்னொரு நலிந்த பிடி மார்ச் வரைக்கும் இருக்கும். அதன் பின்னர் இதுதான் இந்தியா ஐ.நாவில் இலங்கைக்கு செய்யக்கூடிய கடசி உதவி. எதுவும் லோக்சபா தேர்தல் வரையும். மோடி வந்தால், வாஜ்பாய் காலத்து கொள்கையாக இருக்காவிட்டாலும்  பா.ஜ.க, காங்கிரஸ் இலங்கையில் தலையிடுவதில் 1/10 பங்கு தலையீடும் செய்யாது.  

 

சர்வதேச அரசியலில் மாறிகளின் தொகை அதிகம். அவற்றை வைத்து எதிர்வுகூறுவது கடினம். ஆனால் சர்வதேச அரசியல் அந்த கைவிரித்த நிலையில் அல்லது கையறு நிலையில் ஓடிக்கொண்டிருப்பதல்ல. பிழைகளுக்கு கழிவு கொடுத்துத்தான் வருங்கால நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவது. 

 

அமெரிக்காவும் மற்றைய மேற்கு நாடுகளும் ஐ.நாவில் இலங்கை மீது போதும் அழுத்தம் இப்படியானதொன்று. இதில் இலங்கை நழுவுவது கஸ்டம். (அதனால் தான் நாமும் மற்றயவை எல்லவற்றயும் விட போர்க்குற்றத்தில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும்.) புஸ்சுடன் போரில் இருந்த மக்கெயின் கூட இலங்கையின்  மனித உரிமைகளை பற்றி அமெரிக்கா கவனித்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். 

 

எவ்வளவு வளைந்து கொடுத்தாலும் போர்க்குற்றத்தில் சின்ன விசாரணை நடத்தாமல் இலங்கை அழுதங்களை நீக்க முடியாது. மகிந்தாவும், கோத்தாவும் கொடுத்த நேரடி கட்டளைகளால் அதில் விசாரணை என்பதே முடியாத காரியம். இது இந்தியாவால், அதன் பிரதமராக மகன் அல்ல சோனியாதான்  வந்தாலும் கனகாலம் கடத்த முடியாதது. அதேநேரம் இலங்கையில் இருக்கும் பல சிக்கல்களால் 13+ என்பதும் நினக்கவும் முடியாதது. சின்ன சின்ன தவறுகள் செய்த சிறிமா வாக்குரிமை இழந்து, JR  நாட்டை விட்டு ஒட நேர்ந்தது. பகிரங்க போர்குற்றதை செய்த மகிந்தா அதை கணக்கில் எடுக்காமல் இலங்கையில் அரசியல் செய்ய முடியாது.

2002 க்கு பிறகுதான் SLMM. இதன் பின்னர் புலிகள் விட்ட அரசியல் தவறுகள்தான் பிரதானமானவை. அணுசரணை நாடுகள் நோர்வேயிடமிருந்து சமாதான பேச்சு வார்தை பொறுப்புக்களை எடுத்த காலமும் இதுவே.  இதில் நான் சொல்ல வருவது அமெரிக்கா எடுத்திருந்த நிலைப்பாடில், இந்தகாலத்தில் புலிகள் தவறுகள் விடாவிட்டாலும் அமெரிக்கா தனது போக்கை மாற்றியிருக்காது என்பதே. இந்திய காங்கிரஸ் இதற்கு பின்னர்தான் பதவியில் வந்தது. 2009 லோக சபா தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க வலுவிழந்தமையும் தி.மு.கா  நிபந்தனை இன்றி காங்கிரசிடம் சரண் அடைய நேர்ந்தது.  இவை எல்லாம் கொளகை இல்லாமல் இந்தியா பழி வாங்கள் சணடையில் இறங்க வழிவகுத்தன. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட முக்கியமான காரணிகள் கோத்தா மேலையும் பொன்சேகா மேலையும் கைவைக்க வெளிக்கிட்டு தோல்வியில் முடிந்தது இன்னும் அவர்களை சீற்றத்துக்கு ஆளாக்கியது

மற்றது புலிகளின் வெளிநாட்டு பிரிவுகளில் பாரிய மாற்றம் செய்ய வெளிக்கிட்டு பலரை ஒதுக்கியது etc etc

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தாவை ஜனாதிபதியாக்கினது,சு.ப.த அரசியல் துறைப் பொருப்பாளாராக்கியது,தலைவர் சமாதான காலத்தில் மனைவி வழி உறவினர்களது பேச்சைக் கேட்க வெளிக்கிட்டதும் தோல்விக்கு காரணமாய் முடிந்தது
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.