Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை" - டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை"

02 நவம்பர் 2013

ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான ஏது – டக்ளஸ்


Ducklas_CI.gif
ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும் கட்சிக்கு தாவிய அனைவரும் நன்மை ஏற்படுத்துவர் என்ற நம்பிக்கை பலனிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றி மூலம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் இல்லாத உலகத்தையே தாம் எப்போதும் எதிர்பார்த்ததாகவும், சுயநலத்திற்காக புலிகளுக்கு எப்போதம் துதி பாடியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டணி வைத்துக் கொண்டமைiயை ஆளும் கட்சியினர் சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களின் குறைபாடுகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சரியான பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிராக தமிழ் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன எனவும் கடந்த வட மாகாணசபைத் தேர்தலின் போது அநேகமான தமிழ் ஊடகங்கள் ஈ.பி.டி.பி. கட்சியின் தோல்வியை உறுதி செய்ய கடும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகள் தங்களது தேவைக்காக உருவாக்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் ஈ.பி.டி.பி அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98415/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் பிரபாகரன் இல்லாத உலகத்தை பார்கிறோமே. புத்தர் சிலைகளே தமிழ் மண்ணுக்குள் காலடி எடுத்து வைக்க பயப்பிடும் அளவுக்கு சிங்களவனுக்கு சிம்ம சொம்பனமாக இருந்தார்.எத்தனை  தந்ரோபாயங்கள் செய்தும் தமிழ் மக்களை பேய்க்காட்டலாம் என எண்ணிய மகிந்தவுக்கும் அடிவருடி டக்ளசுக்கும் மக்கள்  முகத்தில் கரி பூசி அனுப்பினார்கள்.ஏதோ மக்களுக்கு சேவை செய்தார் டக்ளஸ் என்றார்கள். ஏன் அப்போ மக்கள் வாக்களிக்கவில்லை? பிரபாகரன் ரனிலின் குள்ள நரி விளையாட்டுக்கு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என கூற மக்கள் அதனை ஏற்று மக்கள் ரனிலை மண் கவ்வ வைத்தார்? யார் அப்போ மக்கள் மனதில் இருந்தார்??

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருடமாகப்பார்த்தாச்சு............

 

இனி

நாற்பது வருடத்தின் பின்பும்

இதைத்தான் சொல்லப்போகின்றீர்கள்....

 

அதற்கிடையில்

இருக்கும் ஒன்று  இரண்டு சாட்சிகளையும் இடித்து அழித்துவிடுவீர்கள்??? :(

அதாவது பிரபாகரனுக்கு துதி பாடவில்லை.ஏனென்றால் அவருக்கு துதி பாடி எனக்கு பிஸ்கட் கிடைக்காது. ஆகவே எஜமானர்களுக்கு துதி பாடுவதே இணக்க அரசியல் என்று தனது பாணியில் கூறுகிறார் அவர்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ராஜபக்ச தான் திறமையானவர்.

ஒருபுறம் டக்கிலஸ், மறுபுறம் விக்னேஷ்வரன் .....ஆனால் இருவரும் அரசின் பக்கம் தான்.

 

அதே போல ஒருபுறம் சீனா, மறுபுறம் இந்தியா

 

ஆனால் எல்லாம் தமிழருக்கு எதிர் தான்

அதாவது பிரபாகரனுக்கு துதி பாடவில்லை.ஏனென்றால் அவருக்கு துதி பாடி எனக்கு பிஸ்கட் கிடைக்காது. ஆகவே எஜமானர்களுக்கு துதி பாடுவதே இணக்க அரசியல் என்று தனது பாணியில் கூறுகிறார் அவர்.

அது நண்பா ..............

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இல்லாத காலத்திலும் டக்லஸ் அவர்களின் கட்சி
மகிந்தவுடன் ஒட்டியிருக்கின்றது
இனியாவது அவர் மத்தியில் கூட்டாட்சி செய்தாலும் மாநிலத்தில்
சுயாட்சிக்காகப் போராடட்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

புலன்,

விக்னேஸ்வரனை மாண்பு மிகு அமைச்சருடன் ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என நீங்கள் நிறுவ முயல்வது ஒரு தந்திரமான காய் நகர்த்தல் என்று நீங்கள் நினக்கலாம். ஆனால் மக்கள் முட்டாள்களில்லை. அண்மைய தேர்தல் முடிவுகள் சொல்வது இதைத்தான்.

மத்தியில் மகின் ஆட்சி

மாநிலத்தில் வளர்த்து விட்ட அல்லகைகள் ஆட்சி அங்கையன்

கட்சியில் டக்குக்கு வாயில சூப்பி அதை பார்க்கும் போது

எனக்கு ஹப்பி :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வல் வல் வல் 5kkr.jpg

இதை செய்தியா பார்க்க முடியவில்லை புலம்பல் மாதிரித்தான் எனக்குத்தெரியுது.

 

டக்கிலஸ் இன்னும் மூன்றாந்தர அரசியலில் இருந்து வெளில வரேல்ல.

 

என்னமோ தெரியாது டக்கிளசின்ர முகத்துக்கே மக்கள் வாக்களிக்க விரும்புகிறார்கள் இல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலன்,

விக்னேஸ்வரனை மாண்பு மிகு அமைச்சருடன் ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என நீங்கள் நிறுவ முயல்வது ஒரு தந்திரமான காய் நகர்த்தல் என்று நீங்கள் நினக்கலாம். ஆனால் மக்கள் முட்டாள்களில்லை. அண்மைய தேர்தல் முடிவுகள் சொல்வது இதைத்தான்.

மக்கள் யாருக்காக வாக்களித்தார்கள்? ஒரு தனி மனிதனுக்கா? முள்ளிவாய்க்கால் தொடங்க முன்பு இவர் பெயர் எங்கேயாவது தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததா? இல்லை இவருக்கு தமிழ் மக்கள் ஆதரவு இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

இது, செய்தியல்ல...
காக்கை வன்னியன் பரம்ப‌ரையில்.... வந்த, நக்கித் தின்னும் நாய்களின் செயல்.
வெட்கம் கெட்ட, பிறப்புகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது, செய்தியல்ல...

காக்கை வன்னியன் பரம்ப‌ரையில்.... வந்த, நக்கித் தின்னும் நாய்களின் செயல்.

வெட்கம் கெட்ட, பிறப்புகள்.

 

சரியாக்க சொன்னீர்கள் குரு... இவன் தமிழ் இனத்தின் கழிவு...இது எல்லாம் ஒரு செய்தியா என்ன.... போன தேர்தலில் ஒரு இட‌த்தில் தன்னும் ஜெயிக்க வில்லை...இந்தியாவில் இருக்கும் ஒரு சில அறிவில்லாத கூட்டம் இவர போய் ஈழத்து எம் ஜி ஆர் என்று சொல்லிக் கிட்டு

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

புலன்,

விக்னேஸ்வரனை மாண்பு மிகு அமைச்சருடன் ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என நீங்கள் நிறுவ முயல்வது ஒரு தந்திரமான காய் நகர்த்தல் என்று நீங்கள் நினக்கலாம். ஆனால் மக்கள் முட்டாள்களில்லை. அண்மைய தேர்தல் முடிவுகள் சொல்வது இதைத்தான்.

 

தமிழகத்தில் முதலமைச்சர் தேர்தல் வைத்தால் ........
ஒன்றில் ஜெயலலிதா வெல்வார் அல்லது கருணாநிதி வெல்வார்.
 
ஒன்று புறம்போக்கு....
மற்றது முடுச்சவிக்கி ......
 
தேர்தலில் வென்றார்கள் என்பன் பொருள் மக்கள் முட்டாள்கள் என்று ஆகுமா?
அலது அது முட்டாள் தனமே இல்லை என்று ஆகுமா??
 
அல்லது அவர்கள் சுத்தமானவர்கள் என்று பொருள் ஆகுமா?
 
கூட்டமைப்பில் நான் நின்றிருந்தால் இன்று நான்தான் முதலமைச்சர். அது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும்.

சரியாக்க சொன்னீர்கள் குரு...இவன் தமிழ் இனத்தின் கழிவு...இது எல்லாம் ஒரு செய்தியா என்ன....போன தேர்தலில் ஒரு இட‌த்தில் தன்னும் ஜெயிக்க வில்லை...இந்தியாவில் இருக்கும் ஒரு சில அறிவில்லாத கூட்டம் இவர போய் ஈழத்து எம் ஜி ஆர் என்று சொல்லிக் கிட்டு

அதுகளும் இவரைப்போல் நக்கித்தின்னும் முதுகெலும்பில்லாக் ௬ட்டம்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.