Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவல்பழ மரம்.

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply

வணக்கம் பிள்ளையள் !!! எல்லாரும் சரியாதான் சொன்னியள் . நவீனனுக்கு நண்டர் குழப்பம் வைச்சாலும் :unsure: அலட்டாத நவீனனுக்கு ஒரு கூடை இலந்தைப் பழம் பரிசை தாறன் :D:lol: .

நன்றி கோ, ஓ நண்டர் சும்மா குழப்பம் வைக்க தான் பார்க்கிறார்.

இலவு மரம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இலவம் பஞ்சு மரம். :)

  • தொடங்கியவர்

இலவு = kapok = Ceiba pentandra

 

வணக்கம் பிள்ளையள் !!  இந்தமுறை எல்லாரும் கூட போட்டியிலை பங்குபற்றி இருக்குறியள்  .  நல்ல விசயம் . எல்லாருமே இலவு எண்டு சொன்னாலும் மல்லையர் முந்தினதாலை அவருக்கே பரிசை குடுப்பம்  :D  . பேந்து இங்கை நான் இருக்கேலாது :lol::D.

 

  • தொடங்கியவர்

24 இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம் ( Climbing wattle tree or Acacia concinna ).

 

 

gti7.jpg

 

இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம் ஏறு/பற்றுக் கொடி வகையைச் சார்ந்ததாகும். இவை புதர் போன்று வளரும் தன்மையது. இதன் இலை இரட்டைச்சிறகிலை யமைப்பையும், பூ மஞ்சள் நிறத்திலும் கோளகவடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டிட்டதுப் போலவும் காட்சியளிக்கும். இதன் காய்களில் 6-10 விதைகள் காணப்படும்.

இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத்திலிருந்துப் பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என விளிக்கிறோம். அதன் சிறப்பாலேயே இது சிகைக்காய்ச் செடி என அழைக்கப்படுகிறது.

இச்செடியின் சிறப்பே இதன் காய்களால் என்றுச் சொன்னால் மிகையல்ல. இதன் காய்களைப் பொடித்து பெறப்படும் தூளைப் பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன் படுத்தி வந்துள்ளனர்.

பெரும்பாலான செயற்கை முடிப்பராமரிப்புப் பொருட்களில் இவை கலக்கப்படுகின்றன.

இதற்கு பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் தோல் நோய்களுக்குச் சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. இது ஒரு மலமிலக்கியாகவும் இருமல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவல்லது .

 

இதன் மரப்பட்டைகளில் இருந்து சேப்போனின் என்னும் பொருள் பிரித்து எடுக்கப் படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக் காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்துக் காணப்படுகிறது. இதன் இலைகளில் புளிமத்தன்மைக் கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்டினி தயாரிக்கவும் பயன் படுத்துகின்றனர்.

இதன் காய்களில் இருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியின் பாதுகாப்பிற்கும் அதனில் உள்ள நுரைக்கும் தன்மை மயிரைச் சுத்தம் செய்யப்பயன்படுகிறது.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF

 

http://en.wikipedia.org/wiki/Acacia_concinna
 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பில் இப்பில் ./ ... இப்பிலி ..மரம்

ஒருவகை. அகத்தி?

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுச் சிகை மரம்

(சிகைகாய் - ஊரில் பேச்சுவழக்கில் சீயாக்காய் என்போம்) :D

  • கருத்துக்கள உறவுகள்

வாதனாராணி அல்லது வாதநிரோகினி !   :D

  • கருத்துக்கள உறவுகள்

வாதணாராணி  வேலி வழியதான் நிக்கும்,  இது தோட்டத்தில் நிப்பதால் கொஞ்சம் சந்தேகம்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உசில மரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கு.. ஆனால் அம்பிட மாட்டன் எண்டுது.. :unsure::blink:

வாதணாராணி  வேலி வழியதான் நிக்கும்,  இது தோட்டத்தில் நிப்பதால் கொஞ்சம் சந்தேகம்!

சீயாக்காய் மரம் என்றவர்கள் வெல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. 

 

 

 

http://indiabiodiversity.org/species/show/32012

 

இது நீங்கள் சொல்வதாக இருக்கலாம். இதை வியட்நாமியர் உண்கிறார்கள் என்கிறது விக்கிபீடியா. இலைகளை நாமும் வறுப்பதாக ஞாபகம்.

http://en.wikipedia.org/wiki/Senegalia_pennata

  • கருத்துக்கள உறவுகள்

சீயாக்காய் மரம் என்றவர்கள் வெல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. 

 

 

 

http://indiabiodiversity.org/species/show/32012

 

இது நீங்கள் சொல்வதாக இருக்கலாம். இதை வியட்நாமியர் உண்கிறார்கள் என்கிறது விக்கிபீடியா. இலைகளை நாமும் வறுப்பதாக ஞாபகம்.

http://en.wikipedia.org/wiki/Senegalia_pennata

 

நாமும் என்றால் உங்களுடன் வேறு யாரும்.??? நான் வறுப்பதில்லை :D

 

  • தொடங்கியவர்

காட்டுச் சிகை மரம்

(சிகைகாய் - ஊரில் பேச்சுவழக்கில் சீயாக்காய் என்போம்) :D

 

வணக்கம் பிள்ளையள் !!  எல்லாரும் நல்லாய் கஸ்ரப்பட்டிருகிறியள்  :D  . பாக்க சந்தோசமாய் இருக்கு . உண்மையிலை இந்த மரம் ஒரு பரியாரியளின்ரை மரம்  :lol:  . இதை இண்டு மரம் எண்டும் சொல்லுறவை . வாலி இதை கண்டு பிடிச்சதாலை அவருக்கே பரிசு போகுது :) . அவருக்கு எடுத்து குடுத்த மல்லையரையும் பாராட் டேலாமல் இருக்கு :D . அவருக்கும் பாராட்டுக்கள்  :)  .

  • தொடங்கியவர்

25 இலைக்கள்ளி ( EUPHORBIBA LIGULARIA.)

 

 

ys90.jpg

 

 

வளரியல்பு :-

இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள் :-

இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

1. இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.

2. இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

3. இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.

4. இலைச் சாற்றை அல்லது பாலைப்பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

5. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச்சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.

6. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டதேங்கிய சிறுநீர் வெளிப்படும்

7. இலையை வாட்டிச் சாறு பிழிந்துஇளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

8. இலைச்சாறு அல்லது பாலைவேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துமேற்ப்பூச்சாகதேய்த்துவர மூட்டுப் பிடிப்பு,வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை தீரும்.

9. இலையை வாட்டிப் பிழிந்து 7,8 துளிச்சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்துகுழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

10. . வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவுதேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒருதேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்றுவேளையும் கொடுத்துவர ஈளை,இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

11. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சிவைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டிகாலை மாலை கொடுத்துவரக் கக்குவான்,சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலைஆகியவை தீரும்.

12. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம்இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள்உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம்வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும்.இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாதபுண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள்ஆகியவை தீரும்.

 

https://www.facebook.com/Siddhacom/posts/122834401198406

Edited by கோமகன்

கோமகன் போட்ட படத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்றதால் பரிசி எனக்குத்தான் தரப்பட வேண்டும். :D

  • தொடங்கியவர்

கோமகன் போட்ட படத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்றதால் பரிசி எனக்குத்தான் தரப்பட வேண்டும். :D

 

இப்ப தெரியுதா மல்லையர் :) :) ??

 

இலைக்கள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

இலைக்கள்ளி மரம்..

Spoiler
என் கண்டுபிடிப்பு :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அடக்கறுமமே.. உண்மையிலேயே இலைக்கள்ளி மரம் என்று ஒன்று இருக்கா?? :blink: ஸ்பொய்லர் எழுதி மினக்கட்டதில கோட்டை விட்டிட்டன் போல இருக்கே.. :unsure:

இலைகள்ளியும் அல்ல, சதுரக்கள்ளியும் அல்ல (சரீரம் என்பதை சதுரம் என்றும் சொல்வார்கள்) சாரீரக்கள்ளியும் அல்ல வேலைக்கள்ளியும் அல்ல

 

இது அம்மான்பச்சரிசி மரம் :lol:  :lol:  :D


ys90.jpg

 

இப்பத்தான் லயிட்டை ஓன் பண்ணியிருக்கிறீர்கள். நன்றீறீறீ... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.