Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

சங்க காலப் பெயர் கணவீரம். 

 

இதன் மறு பெயர் செவ்வலரி, அல்லது செவ்வளரி

 

தாவரவியல் பெயர் Nerium oleander Ouarzazate

 

  • Replies 594
  • Views 102.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய  உண்டு கு.சா.கிரமப்புற வீடுகளில் வீட்டுக்கு ஒரு மரமாவது இருக்கும். நீங்கள் படத்தில் போட்டதுபோல் புக்ஷ்டியாய் இராது, ஊரில் தேமா மரம்போல் இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில தோட்டங்களில் பெரிய மாதுளை மரங்கள் உண்டு, மயில்கள் உண்டு, அலரி மரங்கள் வெள்ளை , சிகப்பு, எல்லாம் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

அரளி மரம்!

 

இது இரண்டு வகைகள் உண்டு! 

 

ஒன்று வெள்ளைப்பூக்கள் பூப்பது, இரண்டாவது ரோஸ் கலரில் பூப்பது! செவ்வரளி என அழைக்கப்படும்!

 

விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை!

  • கருத்துக்கள உறவுகள்

அரளி மரம்!

 

இது இரண்டு வகைகள் உண்டு! 

 

ஒன்று வெள்ளைப்பூக்கள் பூப்பது, இரண்டாவது ரோஸ் கலரில் பூப்பது! செவ்வரளி என அழைக்கப்படும்!

 

விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை!

மஞ்சள் நிறமும் உண்டு .ஆமா இதில நாலு மரம் நிக்குது எதிவின்ர பெயர் போடுறது  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சில தோட்டங்களில் பெரிய மாதுளை மரங்கள் உண்டு, மயில்கள் உண்டு, அலரி மரங்கள் வெள்ளை , சிகப்பு, எல்லாம் இருக்கு!

 

அப்ப துலாவோடை கிணறும் இருக்கும்!!!!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

துலாவோடு பார்க்க வில்லை, கப்பியுடன்  சில கினறுகள் பார்த்திருக்கின்றென்.

மேலும் கிராம வீடுகளில் குழாய் கிணறுகள் உண்டு. அவை சக்கரத்தால் சுற்றி நீர் எடுப்பது, கையால் இரும்புப்  பைப்பை அமத்தி அமத்தி நீர் எடுப்பது. இப்பவெல்லாம் பல வீடுகளில் மின்சார மோட்டர் பூட்டி இருக்கினம். வீட்டுத் தோட்டங்களுக்கு  நீர் இறைக்க இவை செலவு குறைவு!

  • தொடங்கியவர்

சங்க காலப் பெயர் கணவீரம். 

 

இதன் மறு பெயர் செவ்வலரி, அல்லது செவ்வளரி

 

தாவரவியல் பெயர் Nerium oleander Ouarzazate

 

வணக்கம் பிள்ளையள் !! கிட்டமுட்ட எல்லாருமே சரியான மறுமொழியைத்தான் தந்திருக்கிறியள் . சுமேரியர் அலரி மரம் எண்டு சொன்னியள் . ஆனால் அலரியிலை ரெண்டு வகையான அலரி இருக்குது எண்டதை மறந்து போனியள் . அதாலை மல்லையர் அழுகுணி ஆட்டம் போட்டு  உங்கடை இடத்தை பிடிக்கிறார் :lol: :lol: . அவருக்கு இந்தமுறை பரிசு போகின்றது . வாழ்த்துக்கள் மல்லையர் :) :) .

 

  • தொடங்கியவர்

06 செவ் அகத்தி மரம் ( swamp pea or  Sesbania grandiflora )

 

itde.jpg

 

 

அகத்தி என்னும் சிறிய மரம் கெட்டித்தன்மை இல்லாதது, இந்த அகத்தி மரம்  செவ் அகத்தி மஞ்சள் அகத்தி என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்  . இந்தமரம்   சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. இந்த மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

அகத்தியின் மருத்துவச் சிறப்பைப் பின்வருமாறு கூறலாம்.....

"மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு" .


அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

 

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.

 

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

 

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்ப்டுகிறது.

 

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

 

வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

 

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.

 

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டட்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

 

http://en.wikipedia.org/wiki/Sesbania_grandiflora

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

Edited by கோமகன்

அகத்தி மரம். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா :)

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களை வைத்துத்தான் மரத்தை இனம் காண்பது தவறு. தவறு இல்லை எனில் இம்மரம்  செவ்வகத்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் அகத்தியிலும் மஞ்சள் நிறமுடையதும் உண்டே. :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வகத்தி மரம். அகத்தியின் பூ மஞ்சள் நிறம்.....அத்துடன் ஒருசில மரங்களின் இலைகளையோ பூக்களையோ நுகர்ந்துதான் உணர முடியும்.

 

 

 

விக்கி பீடியா இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது.

 

இரண்டு தனி தனி மரங்கள் மாதிரி படவில்லை.

http://en.wikipedia.org/wiki/Sesbania_grandiflora

 

http://www.grannytherapy.com/tam/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-3/sesbania-grandiflora/

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டறியாத விக்கி......செவ்வகத்தி இலையை அகத்தி இலையெண்டு சொல்லி விக்கிறாங்கள்......பனையுரஞ்சி இலையை கருவேப்பிலையெண்டு சொல்லி விக்கிறாங்கள். விக்கியன் சொன்னால் இனி எல்லாம் உண்மை......இஞ்சை பொறு.....ஒரு துளி பொலிடோல் தலையிடிக்கு நல்லதெண்டு நானும் விக்கியிலை எழுதப்போறன்...பண்ணியில் பண்ணிப்பாருங்கோ. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தி.

அகத்தி.. நானும் தெரிஞ்சதை எழுதுவம்..

செவ்வகத்தி மரம். அகத்தியின் பூ மஞ்சள் நிறம்.....அத்துடன் ஒருசில மரங்களின் இலைகளையோ பூக்களையோ நுகர்ந்துதான் உணர முடியும்.

 

செவ்வகத்திதான் அண்ணை...  !!!     செவ்வகத்தி , அகத்தி இரண்டும் வேறை வேறு...  

 

ஊரிலை எங்கட வீட்டுக்கு பக்கத்து ஐயர் வீட்டிலை நிண்டது....   போய் கேட்டு வாங்கி வந்து  இரண்டு வகையான கண்டையும் கிணத்தடியில் வைச்சனான்.... !!!

 

அகத்தி கீரை மாதம் ஒருக்காலோ இல்லை இரண்டு தரத்துக்கு மேல் சாப்பிட கூடாது எண்டு சொல்வார்கள்,  கிரந்தி வருமாம் ....   உண்மையா....??    ஏன்...??   யாராவது  காரணம் தெரிஞ்சால் சொல்லுங்கள்...   

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி பீடியா இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது.

 

இரண்டு தனி தனி மரங்கள் மாதிரி படவில்லை.

 

அலரியையுமோ ??????????????

 

கண்டறியாத விக்கி......செவ்வகத்தி இலையை அகத்தி இலையெண்டு சொல்லி விக்கிறாங்கள்......பனையுரஞ்சி இலையை கருவேப்பிலையெண்டு சொல்லி விக்கிறாங்கள். விக்கியன் சொன்னால் இனி எல்லாம் உண்மை......இஞ்சை பொறு.....ஒரு துளி பொலிடோல் தலையிடிக்கு நல்லதெண்டு நானும் விக்கியிலை எழுதப்போறன்...பண்ணியில் பண்ணிப்பாருங்கோ. :icon_idea:

 

செவ்வகத்தி இலையை உண்பதில்லையா ???

 

அலரியையுமோ ??????????????

 

வேறு பெயர் இருந்தால் ஆதாரத்தை கொடுத்துதான் பாவிக்க வேண்டும். யாழில் ஒரு விவாததிற்காக மட்டும் ஒரு புதுப்பெயரை ஏற்றுகொள்ள முடியுமா?

 

நான் இரண்டு தாவரங்களையும் பற்றி விக்கிபீடியாவில்த்தான் பார்த்தேன்.  விக்கிபீடியா சரியா பிழையா என்பது வேறு விவாதம். ஆனால் அது ஒரு ஆதாரம். 

 

அகத்தியில் இலையும் அலரியில் பூவும் மட்டும் பயன் படுத்துவத்தாலும் இந்த நிலையை வந்திருக்கலாம். செவ்வலரி பூ போர்களங்களில் பாவிக்கப்பட்டதினால் அது அடையாளம் கணப்பட்டு தனிபெயர் இடப்பட்டிருக்கு.  அகத்தியில் இரண்டினதும் இலையைப்பாவனை மட்டும்தான் முதன்மை பெறுவதால் பூ முதனமை பெறவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சைவக் கடைகளில் சொதி வைக்கும் அகத்தி . :D

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சைவக் கடைகளில் சொதி வைக்கும் அகத்தி . :D

 

ஏனண்ணா உங்கள் வீட்டில் அகத்திச் சொதி வைப்பதில்லையோ ????

 

கார்த்திகை பூக்களையும் தேடி அழிக்கும் சிங்கள படையினர்

2297344951_cc4b24f774_z.jpg?zz=1

விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில் உள்ள சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும் கார்த்திகை மரத்தில் பூக்கும் கார்த்திகை பூக்களை விடுதலைப்புலிகள் தமிழீழ தேசிய மலர்களாக அறிவித்தனர்.

அதன் பின்னர் கார்த்திகை மலர்களை கண்டால் சிங்கள படையினருக்கு விடுதலைப்புலிகளை கண்டது போல சிம்ம சொர்பனமாக இருக்கும். தற்போது மாவீரர்நாள் ஆரம்பமாகியிருப்பதால் வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் கார்த்திகை கொடிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வேலிகளில் படர்ந்திருக்கும் கார்த்திகை கொடிகளையும் அழித்து விடுமாறு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். கார்த்திகை பூக்கள் ஆலயங்களிலும் பூசைக்கு எடுக்கப்படுகிறது. கார்த்திகை மார்கழி மாதங்களில் வரும் விநாயகர் விரதம், திருவெம்பாவை பூசைகளுக்கும் இந்த மலர்கள் எடுப்பது வழக்கமாகும்.

இராணுவத்தினரின் கெடுபிடிகளால் கார்த்திகை மலர்களும் வடக்கு கிழக்கிலிருந்து அழிந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

  • தொடங்கியவர்

வணக்கம்  கள உறவுகளுக்கு , தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக நான் , எனது பதிவுகள் யாவற்றையும் வரும் சனிகிழமை வரை நிறுத்தியுள்ளேன் . மீன்றும் சனிகிழமை சந்திப்போம் நன்றி ,

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :D :D .

  • தொடங்கியவர்

பூக்களை வைத்துத்தான் மரத்தை இனம் காண்பது தவறு. தவறு இல்லை எனில் இம்மரம்  செவ்வகத்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் அகத்தியிலும் மஞ்சள் நிறமுடையதும் உண்டே. :D

 

" அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்! " எண்டு ஒரு சொலவடை இருக்கு கண்டியளோ :unsure: . ஏன் இப்பிடி சொல்லிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேலை  . தமிழினி " அகத்தி" எண்டு சொன்னியள் .நல்ல விசையம் . அனால் என்ன அகத்தி??  சுமே உங்கடை மறுமொழியை வைச்சு இப்பிடி பரிசை லவட்டிப் போட்டாவே :lol: ?? அப்புக்காத்தைப் போட்டு வழக்காடினாலும் கேஸ் படுத்துட்டுதே :D :icon_idea: ?? இதிலை கலகலப்பாய் கருத்து எழுதின எல்லா கள உறவுகளுக்கும் நன்றி   . சுமேரியருக்கே பரிசு வழங்கப் படுகின்றது :) .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.