Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அது எப்படி வெள்ளரசுக்கு வெள்ளை சேர்த்தால் பிழை. நெல்லிக்கு அரை நெல்லி சேர்க்க வேண்டும்?

 

அதுதானே ?????தீர்ப்பைத் திருத்த வேண்டும் :lol:

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காட்டாமணக்குச் செடி.

 

காட்டமணக்கில்  தண்டு, இலைகளில், சிவப்பு, ஊதா நிறங்கள் கலந்திருக்கும். இலையை ஒடித்தால் பால் வழியும். நச்சுத்தன்மையானது.

 

இதை யாழ்ப்பாணத்தில் ஆமணக்கு என்றும், காட்டாமணக்கு என்றும் அறியப்பட்டிருக்கும். இதன் விதை எண்ணை வடிக்க பாவிப்பதில்லை. 

 

அது எப்படி வெள்ளரசுக்கு வெள்ளை சேர்த்தால் பிழை. நெல்லிக்கு அரை நெல்லி சேர்க்க வேண்டும்?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

 

அண்ணாச்சி கும்புறேனுங்கோ :lol: :lol: . நீங்கள் பாவட்டை மரத்துக்கு கீழை சின்னனாய் நெல்லி எண்டு போட்டியள்  :unsure:  :unsure: .  நான் நினைச்சன் நீங்கள் பாவட்டைக்கு போடுறியளாக்கும் எண்டு :D :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிள்ளையள் !!! எல்லாரும் கலகலப்பாய் மறுமொழி தந்திருக்கிறியள் . உங்களுக்கு நான் என்ன செய்யப் போறன் :unsure: :unsure: ??  இந்த முறை மயூரன் சரியாய் மறுமொழி தந்ததாலை அவருக்குதான் பரிசு கண்டியளோ :D :D .

 

இது நெல்லிக்காய்!

 

amla.jpg

 

இது அரை நெல்லிக்காய் (  அரி நெல்லிக்காய்)

 

03+NELLI+MARAM.JPG

 

இரண்டும் ஒன்றல்ல, கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

za261.jpg

ஓம்! மல்லை! இது தான் நெல்லிக்காய்!

 

ஆனால் இந்தப்படத்தைப் போடுவம் எண்டால், யாழ் 'எனக்கு இதைப்பாவிக்க அதிகாரம் இல்லை' எண்ட மாதிரிச் சொல்லிச்சுது! :o

 

அவசரத்தில , இந்த நெல்லிக்காயை நினைச்சுப் பக்கத்திலை இருந்த படத்தைப் போட்டுட்டன் போல!

 

இணைப்புக்கு நன்றிகள், மல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு பேக்காட்ட நிக்கிறாங்களப்பா.. :(:D

  • தொடங்கியவர்

za261.jpg

 

அழுகுணி மல்லை உது முழு நெல்லிக் காய் மரம் கண்டியளோ :lol: :lol: :D .

 

ஆளாளுக்கு பேக்காட்ட நிக்கிறாங்களப்பா.. :(:D

 

நான் சொல்ல வெளிக்கிட்டால் கும்மாங்குத்து குத்து குத்துறாங்களப்பா டங்கு :lol::D .

 

29_Aug_2011-07_13_49Keela.jpg

 

இதுகுங்க பேர் கீழ்க்காய் நெல்லி  :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

29_Aug_2011-07_13_49Keela.jpg

 

இதுகுங்க பேர் கீழ்க்காய் நெல்லி  :D

 

அண்ணன் அவர்களே..........  இதுக்குப் பேர் கீழா நெல்லி . எங்கை சொல்லுங்கோ :lol::D :D ...........

 

அண்ணன் அவர்களே..........  இதுக்குப் பேர் கீழா நெல்லி . எங்கை சொல்லுங்கோ :lol::D :D ...........

 

நாங்கள் யாழ்ப்பாணம். நீங்கள்? :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கும்முன்னு இருக்கிறது  புளி நெல்லி,

சிக்ஸ் பேக்குல உள்ளது  அருநெல்லி,

இலையாடை போர்த்தினது  கீழா நெல்லி.  :D

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :unsure: :unsure: .

  • தொடங்கியவர்

ஆமணக்கு மரம்

castor oil plant

 

வணக்கம் பிள்ளையள் !! எல்லாரும் சரியாத்தான் சொன்னியள்  . ஆனால் மல்லையர் காட்டாமணக்கு எண்டு சொன்னார் :icon_idea: . அதே நேரத்திலை லண்டன் சொலிசிட்டரும் முதல் ஆளாய் வந்து ஆமணக்கு எண்டு சரியாச் சொல்லியிருக்கிறா :lol: . போட்டிவிதிப்படி பரிசு அவாக்குதான் போகவேணும் :icon_mrgreen: . அனால் நான் ஆமணக்கு எண்டு படத்தை போட அது காட்டாமணக்கு மரமாய் போச்சுது :( . அதாலை மல்லையர் என்னோடை கொழுத்தாடு பிடிக்கக் கூடாது . எனக்கும் கொஞ்சம் மனம் சரியில்லை :(  . இனி வலுகவனமாய் படங்களை போடிறன்  :D .

 

  • தொடங்கியவர்

13 சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி ( Candle Bush Senna alata )

 

ta9d.jpg

 

சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் தாவரம் ஆகும். இத்தாவரத்திற்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி போன்ற வேறுபெயர்களும் உண்டு . இத்தாவரம், தான் வாழும் இடத்தின் தாவரங்களை விட வேகமாக வளரும் இயல்பைப் பெற்றிருக்கிறது. எனவே, இவை நாட்டிற்க்கு நாடு உருவத்தால் வேறுபாட்டு, அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது. இது 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் 50முதல் 80செ.மீ நீளமுடையது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் குணமுடையது. இதன் 'இருபுறவெடிக்கனி' வகையினைச் சாரந்த விதைகள், நீர் அல்லது விலங்குகள் மூலம் பரவும் இயல்புடையதாகும்.

தென் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ள ஆற்றுப்படுகைகளில் மிக நன்றாக வளரும் இயல்புடையது. இதனை வெட்டவெட்ட, நன்குத் தழைத்து வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.

இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.

 

தோல் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் தீரப் பயன்படுகிறது.

 

இலைகளில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்சில் பயன்படுத்துகிறார்கள்.

 

இதனுடைய தண்டின் பட்டை, இருபாலரின் இனப்பெருக்க மண்டல நோய்களைத் தீர்க்கவும் பயனாகிறது.

 

மலக் கழிவைக் குணப்படுத்தும் மருந்திலும் பயனாகிறது.

 

இதன் பூக்களை நீரில் இட்டு, பின்னர் அதனைக் காய்ச்சி உண்டு வர சிறுநீரகத் தொந்தரவுகள் நீங்குமென சித்த மருத்துவம் கூறுகிறது.

 

http://en.wikipedia.org/wiki/Senna_alata

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ta9d.jpg

கொய்யா மரம் போல கிடக்கு!

 

வேற ஆரும் வந்து, சீனிக் கொய்யா, ஆனைக் கொய்யா என்று கதை விட்டுக் குழப்பக்கூடாது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிலக்கடலைச் செடி

  • கருத்துக்கள உறவுகள்

கொயாவும் பிழை, நிலக்கடலையும் பிழை. :icon_mrgreen:

 

பொறுத்தார் பரிசெடுப்பார் எண்டு உதுக்குத்தான் சொல்லுறது. :lol:

 

  • தொடங்கியவர்

பொறுத்தார் பரிசெடுப்பார் எண்டு உதுக்குத்தான் சொல்லுறது. :lol:

 

 

என்னத்தை சொல்ல விதி ................ :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தமுறையாவது மா,பனை,தென்னை,பிலா எண்டு படங்களை போடுங்கோப்பா.......என்னைப்போலை ஆக்கள் ஆராயாமல் பதில் சொல்ல வசதியாயிருக்கும். :lol:

  • தொடங்கியவர்

என்னப்பா பயிர் பச்சை எல்லாம் வாடிக்கிடக்கு  :o  :o  :(  .

  • தொடங்கியவர்

800px-Mu%E1%BB%93ng_tr%C3%A2u_%E1%BB%9F_

 

இதுதான் வண்டுகொல்லி மரம் . ஊரிலை இந்தமரம் பேமஸ் . தோல் வருத்தங்கள் முக்கியமாய் எக்ஸ்ஸிமா , செலோரிசியஸ் வருத்தத்துக்கு இதின்ரை இலையை வறுத்து வறையாய் சாப்பிட வருத்தம் போகும் . இல்லாட்டில் இலையை அரைச்சும் பூசலாம் . எங்கடை வீட்டை இந்தமரம் நிண்டது . இப்ப ஊரிலை இது இருக்கோ தெரியாது . அதோடை கிரந்தி வருத்தங்களுக்கும் இதின்ரை இலை வறை கைகண்ட சாமான் . ஒருத்தரும் இதின்ரை பேரை சொல்லேலை பறவாய் இல்லை . ஆனால் நீங்கள் இந்த மரத்தைப் பற்றி அறிஞ்சு வைச்சிருக்கவேணும் எண்டுதான் போட்டன் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஆவாரை  என்றும்பெயர் உண்டா..?.

  • தொடங்கியவர்

14 பாலை ( Ceylon ironwood, Indian rose chestnut, or Cobra's saffron , Manilkara hexandra)

 

5tav.jpg

 

பாலை என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை Ceylon Iron Wood என்றும் அழைப்பர்.

தமிழர் நிலத்திணைகளில் ஐந்தில் ஒன்றான குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை பாலை என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர இந்தியா, வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.

இலங்கையில் தொடர்வண்டி சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளை பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.

இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)

 

http://en.wikipedia.org/wiki/Mesua_ferrea

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.