Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம்

dinamani.jpgகாமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபட்ச அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை.

பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன.

இந்தியா என்பது பல மாநிலங்களில் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு அடிபணிந்து விட்டது என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை.

எல்லா பிரதமர்களும் எல்லா காமன்வெல்த் மாநாடுகளுக்கும் போவதில்லை. பிரதமரே கலந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இதற்கு முன் 2011இல் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. குடியரசுத் துணைத் தலைவர்தான் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நியூசிலாந்துப் பிரதமரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல.

1987இல் கையெழுத்தான ஜெயவர்தன - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்படி 13ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை இன்னும் கொண்டு வரவில்லை. எந்தவித அதிகாரப் பகிர்வுக்கும் இலங்கை தயாராகவும் இல்லை.

இப்போது இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்று அங்கே தமிழர்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் நிலைமை. அதனால், வடக்கு மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தரவேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

1976இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய சர்வதேச நிகழ்வு காமன்வெல்த் மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு சர்வதேச நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல்.

இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே சகஜநிலைக்குத் திரும்பிவிட்டது என்று காட்ட முற்படுகிறது ராஜபட்ச அரசு.

காமன்வெல்த் மாநாடு வெற்றிகரமாக நடப்பது அதிபர் ராஜபட்சவுக்கும், அவரது அரசுக்கும் ஒரு கௌரவப் பிரச்னை. அதை பயன்படுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வர முடிந்திருந்தால், அதை இந்தியாவின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

13ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் அதிகாரப் பகிர்வுக்குப் பிறகு காமன்வெல்த் மாநாட்டையொட்டி மாநில சுய உரிமையுடன் கூடிய வடக்கு மாகாணத்திற்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்திருந்தால், அது நமது ராஜதந்திர வெற்றியாக இருந்திருக்கும். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துவதாகவும், அங்கே வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அமைந்திருக்கும்.

மத்திய அரசின் அணுகுமுறையில் அப்படியெல்லாம் எந்தவொரு சிந்தனையும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லை.

குறைந்தபட்சம், பிரதமர் தமிழக முதல்வரை அழைத்துக் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திருந்தால், தமிழகக் கட்சிகளை எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்திருந்தால்கூட, காமன்வெல்த் மாநாட்டை வட இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பயன்படுத்தி இருக்க முடியும்.

இலங்கையில் போர் நடந்த போது, பதவி சுகத்துக்காக, இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள்; அப்போது ராஜபட்ச அரசுக்கு ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் உதவ முற்பட்டவர்கள்; கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்தைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தவர்கள் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான்.

சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர், இனப்படுகொலை நடக்கும்போது யோசித்திருக்க வேண்டும் அதை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்...

இலங்கையில் நடந்த இனப் படுகொலையைப் பற்றிப் பேசாமல், 13ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வற்புறுத்தாமல், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் ஏதோ தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபட்சவிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக, தான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது, ஆனால், பிரதமர் கலந்து கொள்ளவில்லை. புரிகிறதா சூட்சுமம்?

ராஜபட்சவின் ராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது!

- தினமணி, ஆசிரியர் தலையங்கம் (12.11.2013)

-புதினப்பலகை
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம்

dinamani.jpg

----

சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர், இனப்படுகொலை நடக்கும்போது யோசித்திருக்க வேண்டும் அதை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்...

தினமணிக்கு.... இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதது... உள்ளூர வருத்தம் என்றாலும்....

அதை காட்டிக் கொள்ளாமல்.... "ராஜபக்சவின் ராஜதந்திரம் வெற்றி பெற்று விட்டது" என்று தலையங்கம் எழுதி  அற்ப‌ சந்தோசப் படுகின்றது.

போர் நடந்த போது... தினமணி, ராஜபகசவின் பக்கம் நின்று, புலிகளை தூற்றி எழுதியதை... வாசகர்கள் இலகுவில் மறந்து விட்டார்கள், என்று தினமணி நினைத்தால்... அதன் முட்டாள் தனத்தையே காட்டுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தினமணிக்கும் தினமலருக்கும் வித்தியாசம் இருக்கிறது. தினமணி ஒரளவு ஈழத்தமிழருக்கு சார்பான கட்டுரைகள் எழுதிவருகிறது. தினமலர் காங்கிரசு சார்பான தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 சனவரியில் தினமணியில் வந்த செய்தி - கருணா காட்டிக் கொடுத்தார், கருணாநிதி கண்டு கொள்ளாமல் இருக்கிறார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=51205

  • கருத்துக்கள உறவுகள்

தினமணிக்கும் தினமலருக்கும் வித்தியாசம் இருக்கிறது. தினமணி ஒரளவு ஈழத்தமிழருக்கு சார்பான கட்டுரைகள் எழுதிவருகிறது. தினமலர் காங்கிரசு சார்பான தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை.

ஓ....

தினமணியை.... தினமலர் என்று... நினைத்து கருத்து எழுதி விட்டேன்.

தவறை சுட்டிக் காட்டியமைக்கு... நன்றி கந்தப்பு.im-very-sorry-smiley-emoticon.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஓ....

தினமணியை.... தினமலர் என்று... நினைத்து கருத்து எழுதி விட்டேன்.

தவறை சுட்டிக் காட்டியமைக்கு... நன்றி கந்தப்பு.im-very-sorry-smiley-emoticon.gif

அரசியல் பற்றிய விமர்சனங்கள் எழுதுபவர்கள் தவறுகள் என்றோ, மன்னிப்பு என்றோ எதனையும் கூறக்கூடாது. அதெல்லாம் இராசதந்திரம். மேலும் விளக்கம் தேவேவை என்றால் மாண்புமிகு தலைவர் கருனாநிதியிடம் இரண்டுநாள் பயிற்சி எடுக்கவும். :icon_idea: 

பாஞ்ச் சொன்னதற்காக... கேட்ட மன்னிப்பை, வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமணிக்கு.... இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதது... உள்ளூர வருத்தம் என்றாலும்....

அதை காட்டிக் கொள்ளாமல்.... "ராஜபக்சவின் ராஜதந்திரம் வெற்றி பெற்று விட்டது" என்று தலையங்கம் எழுதி  அற்ப‌ சந்தோசப் படுகின்றது.

போர் நடந்த போது... தினமணி, ராஜபகசவின் பக்கம் நின்று, புலிகளை தூற்றி எழுதியதை... வாசகர்கள் இலகுவில் மறந்து விட்டார்கள், என்று தினமணி நினைத்தால்... அதன் முட்டாள் தனத்தையே காட்டுகின்றது.

என்னது? எக்ஸ்பிரஸ் குரூப்பின் தினமணி ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நின்றதா? எப்போது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பத்திரிகைகளும் புலிகளுக்கு எட்கிரானவையே அதையும் மீறி தினமணி அவபோது ஈழத்தமிழர் ஆதரவு செய்திகள் கட்டுரைகள் போட்டாலும் அது வியாபார தந்திரமே தவிர வேறொன்றும் இல்லை அது எப்பிடி தமிழ் பத்திரிக்கை ஆதரவாகவும் ஆங்கிலபத்திரிகை எதிராகவும் இருக்க முடியும்?

பாஞ்ச் சொன்னதற்காக... கேட்ட மன்னிப்பை, வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். :D  :lol:

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பற்றிய விமர்சனங்கள் எழுதுபவர்கள் தவறுகள் என்றோ, மன்னிப்பு என்றோ எதனையும் கூறக்கூடாது. அதெல்லாம் இராசதந்திரம். மேலும் விளக்கம் தேவேவை என்றால்

மாண்புமிகு தலைவர் கருனாநிதியிடம் இரண்டுநாள் பயிற்சி எடுக்கவும். :icon_idea: 

இன்றைய தினம், அண்ணன் தமிழ்சிறி, தினமணி இதழ் குறித்து தெரிவித்த கருத்து, நெஞ்சில் வேல் போல் பாய்ந்து தாக்கியது.

தினமலர், துக்ளக் போன்ற பார்பனிய ஏடுகளுக்கு மத்தியில், ஈழத் தமிழர் குறித்து எவ்வித தயக்கமும் இன்றி எடுத்து வந்த எங்கள் தினமணி குறித்த  அண்ணர் கருத்துகள் எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டன.

கழகக் கண்மணிகள் கோபத்தில் துடிக்கிறார்கள். அமைதியுறுங்கள் என்று சொல்வதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்.

சூதை மறுபடி வாய்மை கவ்வும், வாய்மை வெல்லும் என்பதை தான் இப்போது நான் சொல்ல கடமைப் பட்டு உள்ளேன்.

:icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by Nathamuni

உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது நாதமுனி அவர்களே! உங்களைப்போல் ஓரிருவர் உள்ளதினால்தான் நாட்டில் மழை பொழிகிறது. ஆனாலும் என்ன செய்வது, ''தவறுகளையும் நியாயப்படுத்தத் தெரிந்தவர்களே சிறந்த அரசியல்வாதிகளாக வரமுடியும்'' என 'பிரிட்டன் பிரதமர் வின்சன் சேர்ச்சில்' அன்று சொன்னதைத் தினமணியோ, கழகக் கண்மணிகளோ கண்டித்து, இன்றுவரைக்கும் ஒரு அறிக்கைதன்னும் விட்டதில்லை. அதன் விளைவுதான்,,,,,,,,,இப்படி.......கோபம்வேண்டாம்!!!!!  :rolleyes:   :D 

கோபம் ஒன்றும் இல்லை பஞ்சர்,

கருணாநிதியாரின் பயிற்சி எப்படி இருக்கும் என்று ஒரு முன்னோட்டம்......

  :D

ஆனாலும் அண்ணன் தமிழ்சிறி, துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஓடி விட்டார் போல....

:icon_mrgreen:  :icon_mrgreen:

எதிர்காலம் தான் இதற்கு விடை சொல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலம் தான் இதற்கு விடை சொல்லும் .

எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தமிழ் சிறி துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டாரா இல்லை துணியோடு ஓடிவிட்டாரா என்று எதிர்காலம் தான் பதில் சொல்லும் என்று மதிப்புக்குரிய உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார் :D

அண்ணன் தமிழ் சிறி துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டாரா இல்லை துணியோடு ஓடிவிட்டாரா என்று எதிர்காலம் தான் பதில் சொல்லும் என்று மதிப்புக்குரிய உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார் :D

கண்ணா முடியல ............... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களோடை.... பெரிய ரோதனையாய்ப் போச்சுது.
"டங் ஸ்லிப்" பண்ணினதுக்கு... இப்பிடி காய்ச்சி எடுக்கிறாங்கள்.
இனி நான், அரசியல் விமர்சனம் எழுதிறதில்லை எண்டு முடிவெடுத்திட்டன்.
முட்டைப் பொரியலுக்கு.... பச்சை மிளகாய் போடுவது நல்லதா? செத்தல் மிளகாய் போடுவது நல்லதா... என்பது போன்ற, கருத்துக்களை மட்டும்... எழுதப் போறன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தினமணியும் தினமலரும் பார்ப்பன ஊடகங்கள். கூடங்குளம் அணுமின் அணுநிலையத்தை கட்ட இரண்டு பத்திரிகைகளூம் மூர்கமாக செயற்படுவது ஒரு சிறந்த உதாரணம்.

தினமணிக்கும் தினமலருக்கும் வித்தியாசம் இருக்கிறது. தினமணி ஒரளவு ஈழத்தமிழருக்கு சார்பான கட்டுரைகள் எழுதிவருகிறது. தினமலர் காங்கிரசு சார்பான தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை.

தினமலர் BJP சார்பான பத்திரிகை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடம் 2

அண்ணன் தமிழ்சிறி, நொந்து போயுள்ளார் என்பதை அண்ணன் அர்ஜுன் கண்டுணர்ந்து, காலம் தான் பதில் சொல்லும் என்று ஆறுதல் சொன்னார்.

இந்த சகோதரத்துவம் தான் கழகத்தினை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது உடன்பிறப்புகளே.

இவங்களோடை.... பெரிய ரோதனையாய்ப் போச்சுது.

"டங் ஸ்லிப்" பண்ணினதுக்கு... இப்பிடி காய்ச்சி எடுக்கிறாங்கள்.

இனி நான், அரசியல் விமர்சனம் எழுதிறதில்லை எண்டு முடிவெடுத்திட்டன்.

முட்டைப் பொரியலுக்கு.... பச்சை மிளகாய் போடுவது நல்லதா? செத்தல் மிளகாய் போடுவது நல்லதா... என்பது போன்ற, கருத்துக்களை மட்டும்... எழுதப் போறன். :D  :lol:

நல்ல விடயம் சிறி 

உணமியா எது நல்லது பச்சையா செத்தலா? நான் மிளகாயை மட்டும்தான் கேட்டேன்   :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சம்பந் என்பவர் தினமணிக்கு ஆசிரியாராக இருந்தார். தற்பொழுது அவர் காலமாகிவிட்டார். அவர் தமிழகத்தில் இருந்த ஈழ அகதிகள் சிலருடன் நட்புடன் இருந்தார். அதனால் 93ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு தினமணி உதவி ஆசிரியர் ஒருவரை சென்றிருந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் அவ்வாசிரியர் கொண்டு சென்ற உயர்ந்த பொருள் திருடப்பட்டிருந்தது. பிறகு விடுதலைப்புலிகளினால் திருடியவர் கண்டு பிடிக்கப்பட்டு அப்பொருள் உதவியாசிரியருக்கு திருப்பிக் கிடைக்கப் பெற்றது. அவ்வாசியர் தனது யாழ்ப்பாணத்துக்கு சென்று வந்த சம்பவத்தினை 93ம் ஆண்டு தினமணிப்பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தார். அதில் விடுதலைப்புலிகளின் நிற்வாகத்தினை மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார். அதே போல சம்பந் அவர்களின் கட்டுரைகளும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாகவே எழுதப்பட்டிருந்தன. ஆனால் தினமணிக்குழுவில் இருந்துவரும் தமிழன் எக்பிரஸ் பத்திரிகையில் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் எதிரான கருத்துக்கள் எழுதப்பட்டுவந்தன. சம்பந் அவர்களைத் தொடர்பு கொண்ட பெசன்ட் நகரில் வசித்த ஈழத்தமிழர் ஒருவர் ஏன் இவ்வாறு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துக்கள் தினமணிப்பத்திரிகையில் வருகின்றது என்று கேட்டதற்கு, தினமணியின் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள். அதனால் அவர்களின் கருத்துக்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வருகின்றது. இவ்வாறே குமுதம் குழுவில் இருக்கும் ஏகலைவன் போன்றவர்கள் ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் பற்று இருப்பதினால் அவர்களின் கட்டுரைகள் ஈழத்தமிழர்கள் சார்பாக வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.