Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

Posted

கவிஞர் ஜெயபாலன் குற்றமற்றவர்- நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

2013-11-23

 

Hakkeem_seithy-080513.jpg

 

இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்களை வா.ஐ.ச ஜெயபாலன் வெளியிடவில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் நேற்று மாலை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். வா.ஐ.ச ஜெயபாலனின் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் ஜெயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியலைக் கடந்து இலக்கியவாதி என்ற அடிப்படையில் ஜெயபாலனின் அறிமுகம் தனக்கு உள்ளதாகவும் அவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  

தமிழ், முஸ்ஸிம் உறவு குறித்தும் நல்லிணக்கம் குறித்தும் கரிசணையுடன் ஜெயபாலன் செயற்பட்டதாகவும் அவர் கூறினார். ஜெயபாலனை வெளிநாட்டவர் என கருதிவிட முடியாது, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டவர் என அமைச்சர் சுட்டிக் காட்டினார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் ஜெயபாலன் செயற்பட்டதாக கூறிய கருத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மறுத்தார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் துறையில் ஒப்படைப்பதற்காக வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=97478&category=TamilNews&language=tamil

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

Posted

ஜெயபாலன் ஐயா வந்து விடுவார் என்பது தெரிந்தாலும் இதையும் எமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் இதில் சென்று கையொப்பமிடுங்கள்.

 

Petitioning United Nations
United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED

http://www.change.org/petitions/united-nations-urgent-appeal-renowned-tamil-poet-arrested-and-detained

 

(இணைப்பு: முகநூல்)

Posted

ஈழத்து கவிஞரும் நண்பருமான ஜெயபாலனை இலங்கை அரசு சட்டவிரோத காவலில் வைத்திருக்கிறது..
அவரை விடுவிக்க நண்பர்கள் இந்த உதவியை செய்ய வேண்டும்..

Dear Sir,

This letter is to bring your attention that Mr. VIS Jayapalan, a renowned Tamil poet, resident of Norway, who is on a personal trip to Sri Lanka to pay homage to his mother during her anniversary, has been unlawfully detained by Sri Lankan Authorities citing that he has violated visa rules.

As Sri Lanka is known for abducting and killing people who raises voice against the Sri Lankan government on human rights issues. Jaya Palan, who is of from minority Tamil origin has been raising concerns about human rights violations when he was outside Sri Lanka. Now, while he was travelling to Sri Lanka he has been abducted. We are worried about his safety in hands of Sri Lankan authorities.

We request to intervene in this issue to ensure Mr.Jaya Palan's safety and return back from Sri Lanka.

Thank You

Sincerely,

(Your Name)

**********

Please send this email to
-------------------------

Amnesty International NORWAY

Email: info@amnesty.no

Phone: + 47 22 40 22 00
Fax: + 47 22 40 22 50
Address: Grensen 3, 0159 Oslo NO

Amnesty International London

Email: amnestyis@amnesty.org

Telephone: +44-20-74135500
Fax number: +44-20-79561157
Twitter account: @Amnestyonline
Address:
1 Easton Street
London
WC1X 0DW, UK

நன்றி :சரவணன் கன்னியாரி

 

(facebook: Cartoonist Bala)

Posted

Frances Harrison ‏@francesharris0n 5h
More on the award-winning #norwegian #tamil poet detained in #srilanka y. #lka http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/416-award-winning-tamil-poet-jayapalan-arrested-in-sri-lankas-north


Frances Harrison ‏@francesharris0n 4h
#srilankan justice minister Rauf Hakeem shocked that #jayapalan was arrested - elderly #tamil poet dedicated 2 peace & reconciliation #lka

 

(twitter)

Posted

அஞ்சுரன் எம்முடன் இந்த களத்திலே உறவாக உறவாடுபவர் ,கருத்து என்பது வேறு ,மனிதம் என்பது வேறு ............

Posted

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தளபதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேணும் முதல் மக்களே .

 

ஊர் சுற்றிப்பார்க்க போனவருக்கு இம்புடு பிள்டாப்பு ஓவர் தேவையில்லா ஆணிகளே அதிகம் .

Posted

அஞ்சரன் அண்ணா, ஜெயபாலன் ஐயா பற்றி ரகுநாதன் அண்ணா கூறிய கருத்து தான் எனதும்.

ஆனால் இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகள் நடப்பது பற்றி பிரச்சாரம் செய்வதற்கு இதையும் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டவர்களே இதை twitter இல் பதிகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்ப்பது தகுமா?

 

UN, Amnesty போன்றவற்றுக்கு அனுப்புவதால் அவர்கள் பதிவில் இதையும் சேர்க்க உதவும். அது இலங்கைக்கு எதிரான பிரச்சாரமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரது சொந்தக் கருத்துக்கள் எப்படியாவது இருக்கட்டும். ஒரு தமிழனாக அவர் விடுதலையடைய வேண்டுமென்று விரும்புகிறேன். இலங்கையில் தேனும் பாலும் ஓடுகிறது என்று சொல்பவர்களுக்கு இவரது கைது ஒரு பாடமாக அமையட்டும்.

 

துளசி, கைய்யொப்பம் இட்டிருக்கிறேன். நன்றி. 

Posted

நோர்வே அரசு தலையிட்டு அவரை பத்திரமாக கொண்டு வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.  ஏனெனில்   நோர்வே அரச அதிகாரிகளோடு  மாற்றுக்கொள்கை உடையவர் எனபதற்காக தொடர்பில் உள்ளவர்

Posted

நோர்வே பத்திரிகையில் வந்த செய்தி . அவரது மகன் பேட்டி கொடுத்துள்ளார்

 

 

Norsk-tamilsk forfatter og poet arrestert på Sri Lanka Erik Solheim om arrestasjonen: - Helt absurd

 

 

 

 

http://www.vg.no/nyheter/utenriks/artikkel.php?artid=10133257

 

 

Posted

மேலே உள்ள  நோர்வே பத்திரிகையை பார்த்து

குருடன் பெண்டிலுக்கு அடித்த மாதிரி விளங்கினளவுக்கு ..அதில் போட்டிருக்கு போலை ஜெயபாலனுக்கு 69 வயது என்று ....அப்படி வயது இருக்குமே ...நான் நினைக்கவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன்

 

 

 

கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம்.

 

நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

 

“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்....

...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”

 

எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட.

ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட.

 

முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர்.

 

அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள்.

 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர்.

யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

 

ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.

 

பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று  “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார்.

அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.

 

ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார்.

 

கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை.

அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன.

இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.

 

10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

 

உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது.

 

இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர்.

 

அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள்.

அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர்.

 

கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

 

இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள்.

 

இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை.

அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

 

இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே.

அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

 

அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார்.

 

இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன.

 

யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை.

 

ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது.

 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை.

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

 

அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.

ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன்

 

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

 

அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.

ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx

 

கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும்.  

 

இணைப்புக்கு நன்றி.

தமிழினம் உணர்வுநிலைப்பட்டு ஆய்வதிலேயே தனது காலத்தைக் கழிக்கிறது. ஆனால் சிங்களமோ அறிவு சார்ந்தும் நீண்டகால நோக்கிலும் செயற்படுவதோடு வெற்றியும் கண்டுவருகிறது. எனவே ஆயுதப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடு பெரும் உளவியல்போரை நீடித்துச்செல்வதினூடாகத் தனது இலக்கை அடைய முனைகிறது. பலமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தளங்களில் உள்ள தமிழர்கள் ஒருதிசையில் கூடுவதாக இல்லை. அதன் கரணியமாக பொருண்மிய நெருக்கடியில் நின்றவாறும் சிங்களம் தனது திமிரைக்காட்டுகிறது. பலவீனமான எவருடனும் யாரும் நெருங்குவதில்லை. உலகமும் அப்படியே.....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும். ...........நல்லிணக்கம் பேசியவர்...ம்....ம் 

Posted

கவிஞர் விரைவில் விடுதலை பெற்று வெளியே வருவார் என்று நம்புகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் ஜனநாயகம் பற்றி கூவுகிறவர்களுக்கு சமர்ப்பனம்.இலங்கை அரசு இன்னுமா விடவில்லை? 

Posted

உறவின் விடுதலைக்காய் பதிவிட்டுள்ளேன் துளசி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவை இல்லாமல்.. பெரிய இடத்து பெயர்களை இழுக்கப் போய் பொயட்டை விடுவிக்கிறதை வேண்டும் என்றே.. தாமதமாக்கிறாங்கள் போல..! இது தான் சொல்லுறது சும்மா விலாசம் காட்டக் கூடாது என்று. யாழிலும் நான் முகம் காட்டி எழுதிறனான் என்று இறுமாப்பு அடையுறவர். இவ்வளவு பின்புலம் இருக்கு என்ற துணிவில் தான் அது கூட. ஆனால் அதனை மகிந்த சுக்கு நூறாக்கிட்டார். இது ஒட்டுமொத்த தமிழருக்கும்.. டக்கிளஸ் வாலுகளுக்கும் ஒரு நாள் இது நடக்கும்... ஒரு நல்ல பாடமும் கூட. துளசி சொன்னது போல இவற்றை சிறீலங்கா அரசின் ஜனநாயக விரோத அடாவடிக்குச் சான்றாக பாவித்து சர்வதேச அனுதாபத்தை தமிழர்கள் பெற்றுக் கொள்வதும் நல்லது. எதுஎப்படியோ.... சக கள உறவு என்ற வகையில் இவரின் துரித கதியிலான.. விடுதலையை வரவேற்கிறோம். நாங்க சொல்லி எல்லாம் மகிந்த மசிய மாட்டார். அவரா கெதியா விட்டால் அவருக்குத் தான் நல்லது.

Posted

Arul Ezhilan
நான் ஜெயபாலனிடம் பேசினேன் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னார். மற்றபடி அவர் பேசவில்லை தொலைபேசியை துண்டித்து விட்டார். அவரை திருப்பி அனுப்புவார்கள் என நம்புகிறேஎன். ஆனால் இது தொடபாக அழுத்தங்கள் ஏற்பாடாவிட்டால் அவரை ஏதாவது செய்தாலும் செயவார்கள்.

 

 

வ.ஐ. ச ஜெயபாலனை கொழும்பில் சட்ட விரோதக் காவலில் வைத்திருக்கிறது கோத்தபய தரப்பு. அவரை சென்னைக்கோ, நார்வேவுக்கோ திரும்பியனுப்பாமல் இப்படி சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் வைத்திருக்கிறது. நேரடியாக கோத்தயபய ராஜபஷேவின் உத்தரவின் பெயரில் அவரை கடத்தியிருக்கிறார்கள். ஆனால் கைது செய்யவில்லை. இலங்கையில் கைது செய்வதை விட கடத்துவதே ஆபத்தானது.

 

Posted

 

கவிஞர் ஜெயபாலன் விசா விதிமுறைகளை மீறியதால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிங்களம் அறிவித்திருக்கிறது. 

இது ஒருபக்கம் இருக்கட்டும். மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் இது பொருந்தும். முதலில் வெனிநாட்வர்களுக்கு வருவோம். 

ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் பலருக்கு இலங்கைக்குள் நுழைய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மீறி வேறு வகையில் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

பொதுநலவாய மாநாட்டு தருணத்தில் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவ்வளவு ஏன் நியூசிலாந்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கூட 10 நாட்களுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். இதுதான் யதார்த்தம்.

இனி இலங்கைக்குள் நுழைய விரும்பும் தமிழர்களின் நிலையை பார்ப்போம். 

இனப்படுகொலை அரசுடன் அல்லது அதன் அடிவருடிகளுடன் தொடர்பு ஏற்படுத்துபவர்களும் அல்லது வெறும் சடங்காக எந்த வித அரசியல் விமர்சனமும் இன்றி சென்று வருபவர்களுக்கு மட்டுமே "கட்டுநாயக்கா" கதவு திறக்கும். மீறி செல்வது கடினம். மே 18 இற்கு பிறகு புலத்தில் இருந்து போய் வருபவர்களின் பட்டியலை தொகுத்தாலே இது புரியும்.

இதில் ஜெயபாலன் எந்த வகை என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில், எந்த நம்பிக்கையில் அங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. சிங்கள ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் கூட தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில் இவரை சிறீலங்காவிற்கு பயணிக்க வைத்த நம்பிக்கை என்னவென்றுதான் புரியவில்லை? எந்த அடிப்படையாயினும் அவரது கைது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் ஒரு விடயம் உறுத்துகிறது. கைது செய்யப்பட்டாரா? இல்லை கடத்தப்பட்டாரா என்று இன்று வரை தெரியாமல் பல்லாயிரக்கணக்கானவரின் நிலை தொடரும் ஒரு தேசத்தில் அவரது கைதை ஊடகங்கள் திட்டமிட்டு மிகைப்படுத்துகின்றனவோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டவர் தொலைபேசியில் உரையாடியது எல்லாம் கிடையாது. இது அங்கு நடக்கும் உண்மையான கைதுகளை - கடத்தல்ளை கேலிக்கூத்தாக்கும் செயல். ஏதோ திட்டமிட்ட பின்னணி இருக்கிறது. எனவே இந்த செய்தியை கையாள்வதில் கவனமாக இருப்பது நல்லது.

அவர் விடுதலைக்கு உழைப்போம். ஆனால் செய்தியை காவுவதில் கவனமாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:

 

 
நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது.

 

 
 
வரமுடியவில்லை அம்மா

தீயினை முந்தி உந்தன்

திரு உடலில் முத்தமிட...

சிங்கமும் நரிகளும் பதுங்கும்

நீர்சுனையின் வழி அஞ்சி

உயிர் வற்றும் மானானேன்.

சென்னைச் சுவர்பாலை

துடிக்கும் பல்லி வாலானேன்.

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த

நறுங் கனிகள தின்றதே

ஈழத் தமிழன் விதி என்ற

பேர் அறியா தேசத்துப் பறவை.

துருவக் கரை ஒன்றில்

அதன் பீயாய் விழுந்தேனே

என் கனிகளச் சுமந்தபடி

இறால் பண்ணை நஞ்சில்

நெய்தல் சிதைந்தழியும்

சேதுக் கரையோரம்

படகுகளும் இல்ல.

கண்ணீரால் உன்மீது

எழுதாத கவிதகளைக்

காலத்தில் எழுகிறேன்...

-வ.ஐ.ச.ஜெயபாலன்-

நன்றி  Watch Human முகநூல்

9ஆம் இணைப்பு - கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:-

 வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞர் விரைவில் விடுதலை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் ஜெயபாலனின் விடுதலைக்கு குரல் கொடுக்க எம்மை தூண்டியது எது?

 

சிவாசின்னப்பொடி

 

தோழர் ஜெயபாலனும் நானும் நல்ல நண்பர்கள் தோழர்கள்.எங்களுடைய நட்பும் தோழமையும் சுமார் 30 வருடங்கள் பழமையானது.அவர் நலமுடன் திரும்பிவரவேண்டும் என்பதில் நானும் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன்.அதற்கான முயற்சி எடுத்த சிலருடன் நானும் தொடர்பில் இருந்திருக்கிறேன்.அவர் நலமுடன் திரும்புவார் என்ற நான் திடமாக நம்புகிறேன்.

இந்த இடத்திலே எனது மனச்சாட்சியை ஒரு விடயம் உறுத்துகிறது. ; ஜெயபாலன் என்ற தோழனுக்காக கவிஞனுக்காக ஓங்கி ஒலித்த எங்கள் குரல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவினார்கள் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படையினரால் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சித்திரவதைகளை அனுபவித்து விசாரணையின்றி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான முகம்மறியா உறவுகள் வியடத்தில் ஏன் ஓங்கி உரத்து ஒலிக்க வில்லை? என்பதே அந்த உறுத்தலாகும்.

தோழர் ஜெயபாலனை விடுவிப்பதற்கு அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பிரபலமும் செல்வாக்கும் இருக்கிறது.
அந்த பிரபலமும் செல்வாக்கும் கவிஞர் நடிகர் என்ற அடையாளம் தான் எங்களை அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க தூண்டியது என்றால் நிச்சயமாக அது மனிதாபிமான செயற்பாடாகவோ மனித உரிமை சார்ந்த செயற்பாடாகவோ இருக்காது.

தோழர் ஜெயபாலன் ஒரு சாதாரண மணிதராக இருந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் நூற்றோடு நூற்றி ஒன்று என்று கூறி அவரை மறந்திருப்போதும்
சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வதைமுகாங்களிலும் சிறைகளிலும் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைக்காக தோழர் ஜெயபாலன் விடுதலைக்கு காட்டிய ஓர்மத்துடன் குரல் கொடுக்க முயற்சி எடுக்க எங்களை எது தடுக்கிறது?
எங்களுக்குள் இருக்கும் சந்தர்ப்ப வாதமா? இல்லை பிழைப்பவாதமா?

 

http://sivasinnapodi.wordpress.com/2013/11/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் களத்தின் ஊடாக சுண்டல் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அவருடைய விடுதலைக்காக முயற்ச்சி செய்வது மகிழ்ச்சியை தருகிறது நன்றிகள் அமைச்சருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
    • கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!              
    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.