Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
p.c-11213-150.jpg

 

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்."இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடந்தது.இதில், சிதம்பரம் பேசியதாவது: இலங்கை பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். இல்லையேல் தமிழகத்தில், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அதனால், அங்கு பேச முடிவதில்லை.

  

தமிழகத்தில், பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், பொதுக்கூட்டங்களை, காங்கிரஸ் நடத்துவதில்லை. இதனால், வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டு, இந்த கூட்டத்தை நடத்தி, இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் நிலையை விவரிக்கிறேன்.இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாட்டை பிரித்து, தனிநாட்டை உருவாக்கிக் கொடுக்க முடியாது. இந்தியாவில், காஷ்மீரையும், வடகிழக்கு மாநிலங்களில், நாகா மற்றும் மிசோ நாடுகளையும் கேட்டு போராடி வருகின்றனர்.அவர்களுக்கு, நாட்டை பிரித்துக் கொடுத்துவிட முடியுமா? அதுபோல் தான், இறையாண்மை கொண்ட இலங்கையைப் பிரித்து, தனிநாடு உருவாக்க முடியாது. ஆனால், "இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வேண்டும்' என, ராஜிவ் ஜெயவர்த்தன ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.இதன்படி, தமிழை, இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, ஒரே மகாணத்தை உருவாக்க வேண்டும். அரசியல் மற்றும் பிற உரிமைகளை, தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.

இதற்கு, இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தில், 13வது திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். இதையேற்று, 13வது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், அதை அமல் செய்ய, இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.இதற்கிடையே, இலங்கையில், இறுதிகட்டப் போர் நடந்த, 2009ல், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.இருந்தாலும், தன்னால் முடிந்தளவு, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், போரை நிறுத்த, விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் ஒத்து வரவில்லை. இதனால், பெரும் மன வருத்தம் தரக்கூடிய, இனப் படுகொலை நடந்தேறியது.

இந்தியாவின் விருப்பப்படி போர் நிறுத்தப்பட்டு இருந்தால், பிரபாகரன் இன்று உயிரோடு இருந்திருப்பார். இதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை. இருக்கக் கூடிய, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுக்காக்க வேண்டியதே நமது கடமை.இதற்காக, ஐ.நா., சபையில் குரல் கொடுத்தோம். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

இலங்கையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில், இந்திய பிரதமர் பங்கேற்காமல் இருந்தது, இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் தான், கனடா நாடு, கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தது.

"இலங்கை சென்ற, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், பேசியது போல, இந்திய பிரதமர் ஏன் பேசவில்லை' என்கின்றனர். இந்திய பிரதமர், இலங்கை சென்றிருந்தால், அப்படிப் பேசியிருக்க முடியும். ஆனால், பிரதமர் செல்லாமல், வெளியுறவு அமைச்சரை கொமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியது தான், விவேகமான செயல். இதன்மூலம் தான், இலங்கைப் பிரச்சினையில், தொடர்ந்து தலையிட்டு, தமிழர்கள் நலனை பாதுகாக்க முடியும். நாம் முழுமையாக கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து இருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவு கொள்ளமுடியாது. நமக்கு, விசா கொடுக்க, இலங்கை அரசு மறுக்க முடியும்.

இந்திய பிரதமர், யாழ்பாணத்துக்கு செல்வார். அங்கிருக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுடன் ஆலோசித்து, தமிழர்களின் நலனை மேம்படுத்துவார் இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்வு செய்யவேண்டும். இதிலிருந்து, எந்த காலகட்டத்திலும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98038&category=TamilNews&language=tamil

  • Replies 98
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதற்குரிய காணொளிப் பதிவைப் பார்த்த பின்னரே இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளின் பாவனையை உறுதிப்படுத்தமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் காங்கிரசின் வால் ஒட்டநறுக்கப்பட்டுளதை இன்னமும் புரிந்துகொள்ளாமல் தமிழர்களுக்கு தன் வாலை ஆட்டிக் காட்டுவதாக எண்ணி மனதுக்குள் கொண்டாடி மகிழும் சிதம்பரம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=128082

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் காங்கிரசின் வால் ஒட்டநறுக்கப்பட்டுளதை இன்னமும் புரிந்துகொள்ளாமல் தமிழர்களுக்கு தன் வாலை ஆட்டிக் காட்டுவதாக எண்ணி மனதுக்குள் கொண்டாடி மகிழும் சிதம்பரம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=128082

இணைப்பிற்கு நன்றி பாஞ்ச் அவர்களே.. :rolleyes: உங்கள் புண்ணியத்தில் bragging rights எனக்குக் கிடைத்துள்ளது..

அமெரிக்கா வரும் என்று நம்பி ஏமாந்தார்கள் என்று இங்கே பகிடி செய்தார்கள்..! ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில் இச்செய்தி வெளியாகியிருந்தமை இச்சம்பவத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று.. அச்சமயத்தில் மேனன் அமெரிக்காவுக்கு ஓடிப்போய் தடுத்து நிறுத்தியதும் நடந்தது..

இன்னொருமுறை இந்தியாவை மீறி சர்வதேச நாடு ஒன்றை உள்நுளைகக முடியுமா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும்..!

:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் காங்கிரசின் வால் ஒட்டநறுக்கப்பட்டுளதை இன்னமும் புரிந்துகொள்ளாமல் தமிழர்களுக்கு தன் வாலை ஆட்டிக் காட்டுவதாக எண்ணி மனதுக்குள் கொண்டாடி மகிழும் சிதம்பரம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=128082

அது மாத்திரம் அல்ல இந்த சகுனிக்கு மக்களை சந்திச்சு நேர தேர்தலில்  வென்று காட்ட வக்கிருக்காது ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு வெற்றி பெற்றவர்கள் போகும் வண்டியில் தானும் ஏறி குந்தியிடும் . ..................இவரைமாதிரி நம்ம கூத்தமைப்பு அரசியலிலும்  மக்களை சந்தித்து வெல்ல வக்கத்த அரசியல் வாதி சுமத்திரன் எனும் தமிழ் பெயரில் உலா வரும் சிங்கள அடிவருடி இரண்டு பேருமே தமிழனுக்கு எதிரி.

சிதம்பரத்தின் குற்றச்சாட்டை மறுத்து தமிழக பாஜக கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பாரதீய ஜனதா கட்சியே  காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் பஞ்சாயத்தில் கிராம யாத்திரையை தொடங்கி வைத்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.


அதன் போது, பாரதீய ஜனதா மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி  இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜனதா உணர்ந்து இருந்தது.


எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது கொடுக்க மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு கொடுக்க மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.


இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெற போவது ராஜபக்ஷ. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த் மாநாட்டை பா.ஜனதா எதிர்த்தது.


இங்கிலாந்து பிரதமர் கெமரூனின் அடிப்படை தைரியம் கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்த பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.


இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ஷ 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு.


மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும். காலம் கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

பசி கொஞ்சம் இலங்கை தமிழர் மீது அனுதாபம் உடையவர் இறுதி கட்ட போரின்போது அவர் தன்னால் ஆனவற்றை முயற்ச்சித்தார் என்று நினைக்கின்றேன் பட் காங்கிரஸ் தலைமை விடாப்பிடியாக நின்று விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சுண்டல் பசி ஒரு சகுனி பாலசிங்கத்தால் பலமுறை அடையாளபடுத்தபட்ட நபர் .

  • கருத்துக்கள உறவுகள்
இது ஏதோ ப.சி. தானாகப் பேசுவது அல்ல.. கருத்தரங்கு வைக்கிறார்கள் என்றால் மத்திய அரசின் பின்புலம் அதில் கண்டிப்பாக இருக்கும்.
 
கமரன் வந்த விடயத்தில் இந்தியாவின் பிடி தளர்ந்தது. உடனே "நாங்களும் ரவுடிதான்" பாணியில் இப்போது இனக்கொலை என்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

பசி கொஞ்சம் இலங்கை தமிழர் மீது அனுதாபம் உடையவர் இறுதி கட்ட போரின்போது அவர் தன்னால் ஆனவற்றை முயற்ச்சித்தார் என்று நினைக்கின்றேன் பட் காங்கிரஸ் தலைமை விடாப்பிடியாக நின்று விட்டது

 

தமிழகம் இன்றைய திரட்சி  இவரை இவ்வாறெல்லாம் பேசவைக்கிறது.

அதுவும் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்  என அழுத்திச்சொல்ல  வைக்கிறது

 

இல்லையென்றால்

கூசாமல் முடிக்கப்படவேண்டியவர் என்று சொல்லக்கூடிய  ராயீவின் விசுவாசி  இவர். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கடைசி நேரம் ' யுத்த நிறுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள TN தலைவர்கள் பலரும் பசியை தான் தொடர்பு கொண்டார்கள்

 கொஞ்சம் இலங்கை தமிழர் மீது அனுதாபம் உடையவர் இறுதி கட்ட போரின்போது அவர் தன்னால் ஆனவற்றை முயற்ச்சித்தார் என்று நினைக்கின்றேன் பட் காங்கிரஸ் தலைமை விடாப்பிடியாக நின்று விட்டது

 

இன்னுமாடா இந்த  தமிழர்கள் நம்மல நம்பிகிட்டு இருக்கனுங்க -ப. சி

 

http://www.youtube.com/watch?v=XjgM5YmHDHw

இல்லை சுண்டல் பசி ஒரு சகுனி பாலசிங்கத்தால் பலமுறை அடையாளபடுத்தபட்ட நபர் .

சகுனி இங்கு இடம் மாறி இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சகுனி இங்கு இடம் மாறி இருக்கு .

 

 

உஙகளால் ஆதாரம் தர முடியுமா? தேசத்தின் குரல் உங்களுக்கு எப்படி சகுனி ஆனார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உஙகளால் ஆதாரம் தர முடியுமா? தேசத்தின் குரல் உங்களுக்கு எப்படி சகுனி ஆனார்?

 

அர்ஜூனைப் பொறுத்தவரை புலிகளின் அமைப்பில் இருந்தவர்களைக் கண்டால் எழுத்தில் தடுமாற்றம் இருப்பது வழமைதானே இன்றும் அந்த தடுமாற்றம்தான். :D     

  • கருத்துக்கள உறவுகள்

சகுனி இங்கு இடம் மாறி இருக்கு .

 

நீங்கள் உங்களை வெளிப்படையாகவே இனம்காட்ட முயன்றாலும், இந்த உறவுகள் உங்களை புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் அர்யுன். :blink:

 

சகுனி இல்லையென்றால் பாரதப்போரில்லை. உங்களைப்போன்ற சிந்தனையாளர்கள் இல்லையென்றால் விடுதலைப் புலிகளுக்குச் சிறப்பில்லை. :D

உஙகளால் ஆதாரம் தர முடியுமா? தேசத்தின் குரல் உங்களுக்கு எப்படி சகுனி ஆனார்?

பாலசிங்கத்தை புலிகளில் சேர்த்தவர் எனது நண்பர் .அவர்தான் இந்தியாவிற்கும் கூட்டிச்சென்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கத்தை புலிகளில் சேர்த்தவர் எனது நண்பர் .அவர்தான் இந்தியாவிற்கும் கூட்டிச்சென்றார் .

 

 

 சந்தர்ப்ப வசமாக புலிகளில் இணைந்தது தெரியும்.  ஒன்றில் உங்களுக்கு சகுனி பாத்திரம் பற்றி தெரியாது  இருக்க வேண்டும் அல்லது பாலசிங்கம் அவர்களை பற்றி  தெரியாது இருக்க வேண்டும்.

இன்றைய நிலையில் மோடியா அல்லது ராகுல்காந்தியா என்றால், என்னுடைய தேர்வு ராகுல்காந்திதான். சிதம்பரம் போன்றவர்களுடன் உறவுகளை பேணுவது தமிழர் தரப்புக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் மோடியா அல்லது ராகுல்காந்தியா என்றால், என்னுடைய தேர்வு ராகுல்காந்திதான். சிதம்பரம் போன்றவர்களுடன் உறவுகளை பேணுவது தமிழர் தரப்புக்கு நல்லது.

சபேசன் பகிடிக்குதானே சொல்றீங்கள்? இல்லாவிடின் எனக்கு அரசியல் வறட்சியோ விளங்கவில்லை. :huh:

இல்லை, உண்மையாகவே சொல்கிறேன். உங்களுக்கு புரிவதற்கு மோடி ஆட்சிக்கு வந்தால் நல்லது. ஆனால் தமிழர்களுக்கு அது நல்லது இல்லையே!

மூன்றாவது தெரிவு இல்லாத நிலையில்தான் நான் ராகுல்காந்தி பற்றி பேசுகிறேன்.அனுபவமும் இல்லாமல், ஒரு துடிப்போடு வரக் கூடிய ராகுல்காந்தி நிச்சயமாக ஒரு இடத்தில் சிறிலங்காவுடன் முட்டுப்படுவார். நாம் புத்திசாலித்தனமாக இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் மோடியா அல்லது ராகுல்காந்தியா என்றால், என்னுடைய தேர்வு ராகுல்காந்திதான். சிதம்பரம் போன்றவர்களுடன் உறவுகளை பேணுவது தமிழர் தரப்புக்கு நல்லது.

மனிதனுக்கும் விலங்கினத்த்திட்கும் உள்ள வித்தியாசம்

மனிதர்களுக்கு மானம் என்ற ஒன்று இருக்கிறது. அது மட்டுமே.

மனிதர்களை விலங்குகளாக மாறுங்கள் என்று சொல்வதட்கு ........

மிகுந்த அறிவு வேண்டும் அப்படியென்று உங்களுக்குள்ளேயே ஒரு பெருமிதம் கொள்கிறீர்கள்

இந்த செருக்கு உங்களை கொண்டு சென்று சேர்க்கப்போகும் வேறாகும் என்று நான் முன்பே பலதடவை

எழுதியிருக்கிறேன். ஆணவம் அகங்காரம் என்பது ஒரு மனிதனை அடையாளமே இல்லாமல் செய்துவிடும்.

 

 

அறிவு என்பது ......

தன்னிலை தாளாத்ு தான் நினைத்த்தததை சாதிப்பது ஆகும்.

எனது மனைவியை உங்களுடன் படுக்க விட்து உங்களிடம் இருந்து ஒன்றை பெற்றுகொளவாத்ட்கூ பெயர் அறிவல்ல..... அதுக்கு வேறு பெயர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைகின்றேன் மே மாதம் அளவில் யுத்தம் மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது தமிழர்களின் கையை விட்டே எல்லாம் போக போகின்றது என்ற பதபதைப்பு தமிழக தமிழ் உணர்வாளர்களுக்கும் சில அரசியல் வாதிகளுக்கு ம்...... எப்பிடியாவது யுத்தத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் உடனே சிலர் பசியை தொடர்பு கொள்கின்றார்கள் பசியும் பேசுகின்றார் ....நாராயணன் மேனன் என்ற ஒரு குழுவே இது தான் சந்தர்ப்பம் விடக்கூடாது என்ற மனநிலையில் யுத்த முடிவில் தீவிரமாக இருக்கின்றார்கள் காங்கிரஸ் தலைமையிடம் பசியின் பேச்சு எடுபடவில்லை இங்கே பசி க்கு வக்காலத்து வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றாலும் கடைசி நேரம் அவற் முயற்ச்சி செய்தார் என்பது அன்று தொடர்பில் இருந்தவர்களுக்கு தெரியும்

என்னுடைய கருத்தில் செருக்கு, ஆணவம் போன்றவை எங்கே உள்ளன என்று புரியவில்லை.

அது இருக்கட்டும். விடயத்திற்கு வருகிறேன்.

அரசியல் என்று வந்த பின்பு மானமாவது, மண்ணாங்கட்டியாவது. எங்கள் பயணத்தில் எந்தப் பிசாசுடன் கைகோர்ப்பதிலும் எனக்கு பிரச்சனையில்லை. இலக்கை அடைந்தால் போதும்.

இங்கே உணர்ச்சிக்கு இடம் இல்லை. நலன்தான் முக்கியம். தமிழர் தேசத்தின் நலனுக்காய் உயிரை பலி கொடுத்தவர்களை பார்த்தோம். கேவலம் இந்த மானம்தானே போகிறது. போனால் போகட்டும். ஆனால் இலக்கை அடைந்த பின் போன போன மானம் திரும்ப வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையும் தமிழகத்திற்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரத்தை விட எக்காரணம் கொண்டும் அதை விட கூடுதலான அதிகாரம் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க விடமாட்டார்கள் காரணம் தேவை இல்லாத பல பிரச்சனைகளை அது இந்தியாவில் ஏற்ப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை

இதில் நீங்கள் யாரோடு கூட்டணி வைத்தாலும் தீர்வு ஓன்று தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.