Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம்.

Featured Replies

சிதம்பரத்தின் அடுத்த மத்திய தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட இந்தப் பேச்சை ஒற்றி சபேசனால் எழுதப்பட்ட கருத்துக்கள் மிக மேலோட்டமானவை.

 

எமது நலங்களின் அடிப்படையில் பார்த்தால் பிஜேபியும், கான்கிரசும் ஒன்றே. இதில் யார் வந்தாலும் ஈற்றில் முடிவுகளை எடுப்பது டெல்லியில் இருக்கும் அதிகாரிகளே.

 

அவர்களின் கரிசனை என்ன? சிறிலங்காவில் எழுந்து இருக்கும் சீன ஆதரவு நிலைப்பாடு.

இந்த நிலை ஏன் ஏற்பட்டது? சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களின் நிலையை அண்மையில் கொதபாய தெளிவாகச் சொல்லி இருந்தான். அதாவது தமது வெளியுறவுக் கொள்கை எவரையும் சாராதது என.இதன் உண்மை அர்த்தம் நாம் இந்திய சார்ப்பு நிலை எடுக்க முடியாது என்பதே. இன்று இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் இருக்கும் பிரச்சினை இது தான்.

 

இன்று மேற்குலகம்,இந்தியக் கூட்டுக்கு இருக்கும் பிரச்சினை , சிறிலங்காவின் சீனச் சார்பே. இதில் தமிழர்களின் நலங்கள் எவ்வாறு வென்றெடுக்கப்பட முடியும்?

 

எமக்கு ராஜபக்ச ஆட்சியில் இருக்க வேண்டும், அவர் மேலும் சீனச் சார்பு நிலை எடுக்க வேண்டும். இதில் சிறிலங்கா எதிர்கட்சிகள் முயற்சிக்கும் ஆட்சி மாற்றத்துக்கு தமிழர்கள் துணை போகக் கூடாது.

 

மேற்கு/இந்தியக் கூட்டணிக்கும் , சீனச் சார்பு மகிந்த அரசுக்கும் இடையேயான முரண்பாட்டை நாம் மேலும் வளர்க்க வேண்டும்.இதற்கு தமிழர்கள் அடுத்த இந்திய தேர்தல் சம்பந்தமாக எத் தகைய நிலையை எடுக்க வேண்டும்?

 

காங்கிரசு ,பிஜேபி என்ற இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்களிக்காமல் மானிலக் கட்சி ஒன்றிற்கு மிகப் பெரியளவில் வாக்கழிக்க வேண்டும்.இதன் மூலம் உருவாகும் அடுத்த மத்திய அரசு ஒரு கூட்டாட்ச்சியாக உருவெடுக்க வேண்டும். இதற்கு சிதம்பரம் முதல் அனைத்து , பிரதான இந்தியக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் தோற்கடிக்கப் பட வேண்டியவர்கள்.

 

இன்றைய நிலையில் சுயாதினமாகப் போட்டி இடக் கூடியவர் ஜெயலலிதா மட்டுமே. அவர் அனேகமாக தனித்தே போட்டி இடுவார் என்று தெரிகிறது. அவர் தமக்கான பேரம் பேசலை , தேர்தலின் பின்னரே  மேற்கொள்வார். இந்தப் பேரம் பேசலில்  அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை தமிழ் நாட்டில் உள்ள ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சிறிலங்கா மேலும் சீனச்சார்பாகும். மேற்குலகு/இந்தியா கூட்டணிக்கும், சீனா/சிறிலங்கா கூட்டணிக்கும் இடையேயான முரண்பாடு மேலும் கூர்மை அடையும்.

 

இந்த இரு வேறு அணிகளுக்கு இடையேயான அதிகார போட்டியின் முடிவில் தமிழர்களுக்கான ஒரு அரசு உருவாவது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகும்.   

 

 

 

  • Replies 98
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்று

மகிந்தவா??

சரத் பொன்சேகாவா  என்றநிலை

 

இன்றும் அதே தான்.

 

ஆனால் அதில் இரண்டும் எதிரிகள்  என்று தெரியும்

இங்கு

எப்பொழுதும் தின்று  ஏப்பம் விட்டு போகும்  2 நரிகளுடன்.......... :(  :(

முதுகில் குத்துவார் என்று தெரிந்தே

  ஏற்று நடக்கவேண்டிய அடிமைகளாய்... :(  :(

 

இதுவும் கடந்து போகும்............ :(

Edited by விசுகு

ரகுநாதன்! என்னுடைய கருத்து முட்டாள்தனமானது என்று எழுதியதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் என்னுடைய கருத்தை "ஆகா, அற்புதம்" என்று சொல்வது போன்று இன்னொருவர் "முட்டாள்தனமானது" என்று கருதுவார் என்பதை உணர்ந்தே இங்கே இருக்கிறேன்.

"முட்டாள்தனமானது" என்பது அப்படி ஒன்றும் வசைச் சொல் இல்லை. எங்கள் எல்லோருக்குள்ளும் உள்ள ஒன்றுதான்.

இது நிற்க...

மல்லையூரானின் நீண்ட கட்டுரை வழமை போன்று எனக்கு விளங்கவில்லை. ஆயினும் கடைசி வசனம் புரிகிறது. "தலையிடாக் கொள்கை" பற்றி பேசியிருக்கிறார்.

"தலையிடாக் கொள்கை" என்பது ஒரு முக்கிய புள்ளி. எமது விவாதத்தை இதில் இருந்து கூட நாம் தொடரலாம்.

தமிழர் தரப்பு பலமாக இருந்த பொழுது, இந்தியாவின் தலையிடாக் கொள்கை ஒரு சாதகமான அம்சமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது அப்படி இருக்கப் போவது இல்லை. அது ஈழத்தின் தமிழர் தரப்பு அரசியலை தேக்கநிலைக்கு கூட கொண்டு செல்லலாம்.

இந்தியா தலையிடாது இருக்க, மேற்குலகின் தலையீடு மட்டுமே இலங்கையை நகர்த்த போதுமானதாக இருக்குமா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஐநா மனித உரிமையில் இலங்கைக்கு எதிராக விழுந்த வாக்குகள் மேற்குலகின் செல்வாக்குக்கு உட்பட்டவை மட்டும் அல்ல. இந்தியா இதில் நடுநிலையோ, எதிராகவோ போனால், வேறு பல அணிசேரா நாடுகள் இந்த உதாரணத்தை பின்பற்றும் வாய்ப்பும் உண்டு.

இந்தியா தலையிடாத வரை மேற்குலகின் எல்லைகள் மேலும் சுருங்கவும் வாய்ப்பு உண்டு.

ஆயினும் மல்லையூரான் தலையிடாக் கொள்கை என்று ஆரம்பித்து வைத்தது நல்ல புள்ளி. இது நடக்குமா, நடக்காதா, பாதகமா, சாதகமா என்று நாம் தொடர்ந்து பேசலாம்.

நாரதர்! நான் விவாதத்தின் போது ஒரு கட்டுரை போன்று பந்தி பந்தியாக எழுதுவதை விரும்புபவன் அல்ல. ஒரு நான்கு வரிகளுக்குள் பதில் சொல்லி, தொடர்ந்து பேசுவதையே விரும்புபவன். இத்தனை காலமும் அப்படித்தான் செய்கிறேன். ஆகவே ஆரம்பத்தில் என்னுடைய கருத்துக்கள் மேலோட்டமாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் தொடர்ந்து பேச அது ஆழமாக போகும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அரசியல் அரசியல் தந்திரத்திற்காக என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு செயற்படுவதாகவும் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், போரின் இறுதிக்கட்டத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்தியிருக்க முடியும் எனவும் இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை ஆய்வாளர் ஜோதி சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுடன் நடைபெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கு எதிரான இந்த பாரிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் இந்த கருத்திற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களின் பதில். கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். 

 

http://www.dailymotion.com/video/x17va63_chidambaram-speech-vs-thirumurugan-gandhi-interview-1dec2013_news

மல்லை, இந்தக்கட்டுரை உங்களின் ஆக்கமா?? எழுதப்பட்ட விதம் பலவிடயங்களக் கூறுவதுபோலத் தோன்றினாலும், என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முடிவில், என்னதான் சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை. பாரதீய ஜனதா வரவேண்டும் என்கிறார்களா? அல்லது கிண்டலடிக்கிறார்களா??

அந்த கருத்து, அதற்கு மேலே எழுதபட்ட கருத்து ஒன்றுக்கு பதில் மட்டும்தான்.  உங்களுக்கு விளங்காமல் இருந்தால் அதில் நீங்கள் கவலைப்பட பாரதூரமான தொன்றும் இல்லை. ஆனால் சில தடவைகள் மேலே உள்ள இரண்டு கருத்துக்களை சேர்த்து வாசித்தால் அதன் தொடர்பு புலப்படும். 

 

இனி திரும்ப பழைய பந்திகளை பிரித்து வசனம் வசனமாக விள்ங்கப்படுத்தி எழுத அது அளவு கடந்து போய்விடும். அதை நான் முயற்சிக்கப்போவதில்லை. ஆனால் அதில்  ஓட ஓட எழுதும் போது வந்த எழுத்துப்பிழைகளை முடிந்தவரை  திருத்தியிருக்கிறேன். இனி அதை வாசிக்க இலகுவாக இருக்கும்.

 

கட்டுரையில் வெளியாருக்கு புதிதாக தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. அரசியலை விளங்கி ஆய்வை நடத்தாதவர்கள், தங்களை முன்னால் கொண்டுவரும் பிரச்சாரத்துக்காக, கொதித்து பொங்கும்  தமிழர் பிரச்சனையை எடுத்து, கற்பனைகளை சேர்த்து அங்கொன்றும் இங்கொன்றும் எழுதி தமிழரின் எரியும் வீட்டில் நெருப்பு எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அந்த ஈனத்தனத்தை புட்டுக்காட்ட எழுதப்பட்டதுதான் மேலே இருக்கும் பதில்.

 

தமிழ் நாட்டின் தேர்தலை அதில் சேர்த்தால் அது இன்னும் பெரியதாகும். அதில், இலங்கைத் தேர்தலோ, இந்திய தேர்தலோ ஆராயப்படவில்லை. ஆனால் கங்கிரசா, பாஜக வா மத்தியில் வர வேண்டும் என்ற ஒரு கேள்வியை தானே எழுப்பி அதற்கு காங்கிரஸ் வரவேண்டும் என்று வைக்கப்பட்டத்திற்கு  பதிலே அதில் எழுதப்பட்டிருக்கிறது. 

 

உங்களை மாதிரியே சபேசனும் விளங்கவில்லை என்றுதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் பதிலை தெளிவாக விளங்கி, "தான்  ஆரம்பத்தில் முழுவதாக சிந்திதித்து எழுதவில்லை" என்று கூறி  இன்னும் ஒரு தடவை நழுவி தப்புகிறார்.  சபேசன் சிந்திதித்து எழுதுபவர் அல்ல என்றதை காட்டத்தான் அந்த பதில் எழுத பட்டிருக்கு.

 

அந்த ஆக்கம் அப்படி பெருதாக இருந்தும்,  கருத்துக்களில் விரிவாக இல்லாமல் மிகவும் சுருக்கமாக இருப்பதால்தான்  விளங்குவது கடினமாக இருக்கிறது. அதாவது நான் பலவற்றை தொட வேண்டியிருந்தால் அந்த நிலை வந்தது.வழமையில் சபேசன் எப்படி நடந்துகொள்வார் என்பதை முழுவதாக  சிந்த்தித்து எழுத விரும்பியதால்தான் நான் அப்படி எழுதினேன் . வழமையில் சபேசன் எழுதும் ஆராச்சிகளை பற்றி எதிர்த்துக் கருத்து வைத்தால்,  அவர் "நான் எழுதியது அதுவில்லை" என்றுவிடுவார். அதனால் எதுவெல்லாவற்றையும் உள்ளடக்கி பதில் வைக்க முடியுமோ அதை எல்லாம் உள்ளடக்கி பதில் வைத்த போது சபேசன் தான் விவாதங்களை ஆழமாக்க சிந்தித்து தொடக்குவதில்லை என்றும் அப்படி ஆழ்மாக சிந்திக்காமைத்தான் நல்ல பாணி என்றும் மானம் கெட்ட தனமாக புதிய திருப்பம் கொடுக்கிறார். ஆனால் " ஆழமாக சிந்தியாமல் விவாதங்களை தொடக்குவது சரியானதா பிழையானதா" என்றதறகு விளக்கம் எழுதினால் அதிலிருந்து சறுக்க இன்னொரு கதை வைப்பார். 

 

இபோதைக்கு தான் சிந்தியாமல் விவாதத்தை தொடக்கி மற்றவர்களினால் ஆழமாக்கப்படடும் என்று விட்டு விட்டேன் என்று தன்னால் ஆழமாக சிந்திக்க முடிவத்தில்லை என்ற்தை ஒத்துக்கொண்டமை போதும். இனி ஆழ்மாக சிந்தியாமல், பாஜக வின் தலையிடாக் கொள்கையில் இருந்து விந்தத்தை ஆரம்பிக்க போகிறாராயின் தான் அதைப்பற்றி இதுவரை எவ்வளவு ஆழமாக சிந்திக்காமல் இருந்தார் என்றதை முன்னால் வைத்தால் ஆழமானவ்ற்றை எழுத முடியும்.

 

இதில் தமிழர் இப்போது பலமில்லாமல் இருக்கிறார்கள் என்று சபேசன் எழுதுவது இன்னொரு ஆழமாக சிந்தியாத "ஓய்நாய்கதை" சொல்லி பிள்ளையை தூங்க வைக்கும் தாயின் மிரட்டலே. ஓய்நாய் வருவதற்கு எப்படி தாயிடம் ஆதரம் இல்லையோ அதே மாதிரியே சபேசனிடமும் எதற்கும் ஆதாரம் இல்லை என்பதுதான் இந்த "தமிழரிடம் பலம் இல்லை" கதையும். 

 

ஒரு சின்ன விடையம் சபேசன் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசோ, பாஜக வோ தமிழர் விடையத்தில் தலையிடுவதாயின் அது இந்திய நலன் கருதி என்றாகத்தான் இருக்கும். எனவே அவர்கள் தலையிடாவிட்டால் தமிழர் அவர்களின் நலன்களுக்காக தங்கள் நலன்களை தாரை வார்க்க வேண்டிய தேவை இருக்காது. 

 

தலியீட்டை நாம் எதிர்க்கவில்லை, இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் இந்தியாவா மேற்கு நாடுகளா என்றதுதான் கேள்வி. இரண்டும் என்று பதில் இல்லை; ஏன் எனில் இரண்டும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதால்த்தான் இதுவரைக்கும் தமிழருக்கு எந்த தீர்வும் வந்து சேர முடியாமல் இருக்கு. 

 

மேற்கு நாடுகள் தலையிட்டால், அதில் அவர்களின் நலன்கள் இல்லையா என்ற கேள்வி வரும். அவர்கள் தலையிடுவது ஆக்கிரமிப்புக்களை சமன் செய்ய தோற்றுவித்த ஐ.நா ஊடாக மட்டுமே. இந்தியா மாதிரி நேரடி ஆக்கிரமிப்பாக இல்லை. இதனால் அவர்கள் மீதான பீதி அநாவசியமானது. பூகோள ரீதியாக இலங்கையுடன் இணைக்கப்பட்டிருப்பது இந்தியா. அதற்கு புவிசார் அரசியல் ஊடாக இலங்கை மீது இருக்கும் ஆர்வம்பற்றி சபேசன் போன்ற "இந்திய பாதுகாப்பு கொள்கை" வாதிகள் பலதடவை எழுதிவிட்டார்கள். அதன் பின்னர் மேற்கு நாடுகள் தமிழர் விடையத்தில் தலையிடும் போது இந்தியா அளவுக்கு புவிசார் அரசியல் நன்மைகளை இலங்கையிடமிருந்து எதிர்பார்ப்பார்கள் என்பது போல எழுதுவது, சபேசன் போன்றோர் தாங்கள் முன்னர் வைத்த இந்திய பாதுகாப்பு கொள்ள்கை theory களை தாங்களே தோற்கடிப்பது போலாகும்.

 

 

இந்திய ஜனநாயகத்திற்கும், மேற்கு நாட்டு ஜனநாகத்துக்கு மிடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. எனவே அவர்களின் தலையீடும், இந்தியத் தலையீடளவுக்கு நீதியற்றத்தாகத்தான் இருக்கும் என்பது சரியல்ல. தமிழருக்கு தனி ஆட்சியான தீர்வு கிடைப்பது காங்கிரசுக்கு ஒத்து வராது என்ற நிலைப்பாட்டை காஸ்மீரை உதாணம் காட்டி அண்மையிலும் சிதம்பரம் பேசினார். எனவே அதன் பின்னர் காங்கிரஸ் பின்னால் போக வேண்டும என்று கருத்து வைத்தால் அது சுயநலமகவே இருக்கும். இலங்கை அரசியல் அமைப்பில் 'தமிழர் தீர்வுக்காக' இன்னொரு திருத்தம் வந்தாலும், அதிலும் வடக்கு-கிழக்குப் பாகம் இலங்கையிடமிருந்து திமிறிவிடாமல் இருக்க காங்கிரஸ் நிச்சயம் செய்துதான் முடிக்கும். எனவே முதலில் இந்தியாவிடம் வடக்கு-கிழக்கு மாகாண ஆட்சியை பெற்று, பின்னர் நாம் தனியாக தமிழ் ஈழம் எடுக்கலாம் என்பது ஆழமாக சிந்த்திக்காமல் ஒவ்வொரு வசனமாக கண்டு பிடித்து எழுதும் ஆராய்வு. 

 

மேலும் சிந்தம்பரம் திருப்பவும் தங்களை இலங்கை கேட்கவில்லை என்று கூறியிருப்பத்தால் பலமில்லாத தமிழர், தான் சொல்வதை  இலங்கையை கேட்க வைக்க பலமில்லாத காங்கிரசின் தலையீட்டை தேடுவது குருடனிடம் குருடன் பாதை கேட்பது போன்றது. ஆனால் பாஜக இலங்கைக்கு எதையாவது சொல்லப்போனால் அதை கேட்க்க வைக்க அ முயலும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது. ஆனால் அது நமது பாதை அல்ல. 

மல்லை! துரதிஸ்டவசமாக நீங்கள் கடைசியாக எழுதிய "கட்டுரை" எனக்கு ஓரளவு விளங்கி விட்டது. "என்ன கொடுமை இது" என்று தலையிலடித்துக் கொள்ளத்தான் முடிந்தது.

நான் இந்தக் கருத்துக்களத்தில் இதுவரை பின்பற்றி வந்த, வருகின்ற அணுகுமுறையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இது எனக்கு முன்னமேயே விளங்கியிருந்தால், பதில் சொல்லியிருப்பேன். நாரதரின் கேள்வி அதற்கான வாய்ப்பை கொடுத்தது.

நான் கட்டுரை எழுதுகின்ற பொழுது ஒரு முறையையும், வாதங்கள் செய்கின்ற பொழுது இன்னொரு முறையையும் கைக்கொண்டு வருகின்றேன்.

வாதங்கள் செய்கின்ற போது, பந்தி பந்தியாக உங்களைப் போன்று நான் என்றுமே எழுதுவது இல்லை. நான் எழுதுகின்ற கருத்தை, எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதால், எவ்வளவு சுருக்க முடியுமோ, அவ்வளவு சுருக்குவதில் கவனமாக இருப்பேன்.

பதில் கருத்தாக ஒரு கட்டுரையை இணைக்கின்ற பழக்கம் கூட இங்கே சிலருக்கு உண்டு. நான் அதைக் கூட செய்வது இல்லை.

சுருக்கமான முறையில் பதில் சொல்லி, வாதத்தை நீடித்து, மற்றவர்களின் கருத்தையும் உள்வாங்கி, என்னுடைய சிந்தனையையும், மற்றவர்களின் சிந்தனையையும் வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதிலேயே கவனமாக இருப்பேன்.

நீங்கள் இங்கே எனக்கு கற்பிக்க முனைகின்ற பாடங்களையும் என்னுடைய பல கருத்துக்களில் நான் ஏற்கனவே வைத்திருக்கிறேன். இந்தியா எதற்காக தலையிடுகிறது, எதுவரை தலையிடும் என்பவை எல்லாம் ஏற்கனவே நாம் பேசியவைதான். இந்த விவாதத்தில் கூட நான் அதுபற்றி சொல்லியிருக்கிறேன்.

பாஜகவிற்கு எங்கள் பிரச்சனை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று நான் எழுதினேன். நீங்கள் "தலையிடாக் கொள்கை" என்று ஆழமாக குறிப்பிட்டீர்கள்.

இதைத்தானே நான் விரும்புகிறேன். ஆகவே நான் தொடர்ந்தும் இப்படித்தான் எழுதுவேன். நீங்கள் என்னை எப்படியும் நினைத்துக் கொள்ளலாம். அது பற்றிக் கவலை இல்லை.

ஆயினும் ஒரு வேண்டுகோள்! என்னைப் பற்றி ஆராய்வதை விடுத்து, இந்த விவாதத்தை ஆரோக்கியமான முறையிலும், புரியும்படியாகவும் கொண்டு செல்ல ஒத்துழைத்தால், மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இல்லை தெரியாமல் தான் கேக்கிறன் இம்புட்டு வயசுக்கு வந்த நீங்கள் கடந்த 40, 50 வருடங்களாக தமிழர் போராட்டத்தை பார்த்து வளர்ந்த நீங்க இன்னுமா இந்திய ஆட்சியில் வரும் அரசு தான் இலங்கை விடையங்களை தீர்மானிக்க கூடிய ஷக்தி என்று நினைக்கின்றீர்கள்? அது தான் இல்லை. சரி அப்போ ஆட்சிக்கு வருகின்றவர்களை விட்டால் யாரு தீர்மானிக்க முடியும்? அப்பிடின்னு நீங்க கேட்டால் அதுக்கு பதில்

இந்திய வெளிவிவகார புலனாய்வுப்பிரிவு ஆனா "றோ" தான் முழுக்க முழுக்க இலங்கை விவகாரங்களை கையாளுகின்றது....... அதனை மீறி எந்த ஒரு ஆட்சியாளர்களாலும் எதையும் நிகழ்த்திவிட முடியாது இதனை தமிழர் தரப்பின் கொள்கை வகுப்பாளர்கள் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்......கடந்த கால கசப்பான அனுபவங்களால் சிதைந்து போய் இருக்கும் அதனுடனான உறவுகளை புதுபிக்க வேண்டும் ...... பரஸ்பரம் இரண்டு தரப்பும் சில விட்டுகொடுப்புகளை செய்து புதிய பாதையை விடிவிற்கான பாதையை நோக்கி நிச்சையம் நகரலாம்....... அதற்க்கான பேச்சுவார்த்தைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.....

இது தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் கண்டிபிடிக்க 4 வருசம் சென்றிருக்கு சிதம்பரம் ஐயாவுக்கு. ஐயா இந்த முறையும்.. மீள சரிக்கட்டி எண்ணித்தான் வெல்ல வேண்டி இருக்கும். நிச்சயமாக.. நீங்கள்.. பெரும் இன அழிப்புக்கு உட்படுத்திய இனத்தின் காயங்களை உணராத.. இந்தக் கண்டுபிடிப்புக்கள் உங்களின் வெற்றியை அவ்வளவு இலகுவாக்காது. :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆயினும் ஒரு வேண்டுகோள்! என்னைப் பற்றி ஆராய்வதை விடுத்து, இந்த விவாதத்தை ஆரோக்கியமான முறையிலும், புரியும்படியாகவும் கொண்டு செல்ல ஒத்துழைத்தால், மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

 

தயவு செய்து நீங்கள் என்னைத்தாக்க முயலாமல் பாஜகவின் தலையிடாக கொள்கை சரியா பிழையா என்று எழுதுங்கள். அது சரியாயின் நாங்கள் ஏன் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று எழுதுங்கள். இல்லையேல் ஏன் தலையிடா கொள்கை பிழை என்று எழுதுங்கள். 

 

 

மல்லை! துரதிஸ்டவசமாக நீங்கள் கடைசியாக எழுதிய "கட்டுரை" எனக்கு ஓரளவு விளங்கி விட்டது. "என்ன கொடுமை இது" என்று தலையிலடித்துக் கொள்ளத்தான் முடிந்தது.

 

அதாவது இதை விளங்கவில்லை என்று சொல்வது விளங்குகிறது என்று சொல்லவதை விட கடினமானதா?

 

நான் கட்டுரை எழுதுகின்ற பொழுது ஒரு முறையையும், வாதங்கள் செய்கின்ற பொழுது இன்னொரு முறையையும் கைக்கொண்டு வருகின்றேன்.

 

நீங்கள் கட்டுரை எழுதும் போது அதில் வாதம் இல்லாதிருப்பதையும், வாதங்கள் என்று தனிய வைக்கும் போது கருத்து தொகுப்பு இல்லாதிருப்பதையும் நான் சுட்டிக்கட்ட வந்தால் நான் உங்களை ஆராய முயல்வதாக கூறுகிறீர்கள். பின்னர் ஏன் உங்களை நீங்கள் மட்டும் ஆராந்து பந்தி எழுதுகிறீர்கள்? 

 

நீங்கள் இங்கே எனக்கு கற்பிக்க முனைகின்ற பாடங்களையும் என்னுடைய பல கருத்துக்களில் நான் ஏற்கனவே வைத்திருக்கிறேன். இந்தியா எதற்காக தலையிடுகிறது, எதுவரை தலையிடும் என்பவை எல்லாம் ஏற்கனவே நாம் பேசியவைதான். இந்த விவாதத்தில் கூட நான் அதுபற்றி சொல்லியிருக்கிறேன்.

 

அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். இந்திய அரசியலை தெரியாதவர் ஒருவர் காங்கிரசு வரவேண்டும் என்றால் அது வேற கதை. மற்ற்வர்கள் எல்லோரும் எனது பாணியில் உண்மைகளை ஒன்றன் பின்னர் ஒன்றாக போட்டு பார்த்துவிட்டு என்னை மாதிரியே பாஜக வர வேண்டும் என்று முடிவுக்கு வர வேண்டும். ஆனால் உங்களுக்கு என்னுடன் எல்லாம் ஒத்து போன பின்னர் ஏன் இன்னமும் நீங்கள் காங்கிரஸ் வர வேண்டும் என்று சொல்கிறிர்கள என்றால் அதில் சுயநலம் கலந்து இருக்கா என்று கேள்வி எழுப்புகிறேன்? நீங்கள் என்னை போல உண்மைகளை ஒழுங்கு படுத்தும் போது பாஜக வரவேண்டும் என்ற முடிவு வாரது ஏன் என்ற பதிலை எழுதாமல் ஆனால் " விவாதத்தில் ஒரு வனத்தை மட்டும் போட்டு விட்டு ஆழமாக மிச்சம் வரட்டும் என்று விட்டு விடுவேன்" என்று எழுதிய போது உண்மைகளை தெரிந்து வைத்துகொண்டு மூடி மறைக்கும் அந்த இயல்பை கண்டிப்பது உங்களின் மீதான ஆராய்வா? அது யாருக்கும் சரியில்லா ந்டத்தை என்றதை மறுக்கிறீர்களா?

 

வெளியிடங்களில் இருந்து உங்களுக்கு வந்து கிடைக்கும் உண்மைகளை ஒழித்துவைத்துகொண்டு சிலவற்றை போட்டு விவாத்தைதை தூண்டி அதில் வந்து விழும் விட்டில் பூச்சிகளை சுட்டெரிக்க முயலவது அற்பத்தனம். அதை நீங்கள்  செய்ய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. ஆழம் மற்ற்வர்களிடமிருந்து வர முதல் விவாத்தை தொடக்கிய உங்களிடமிருந்துதான் அது வந்திருக்க வேண்டும் என்பதை மறுக்கிரீர்களா? 

 

கொடூர சிங்கள ராட்சதர்கள் தமிழர் உயிருடன் இருந்தால் தாங்கள் அரசராக முடியாது என்று அவர்களை முழுவத்தாக அழிக்க முல்லைத்தீவில் நடத்திய "மனிதாபிமான" போருக்கும் மேற்கு நாடுகள் லிபியா, ஆப்பானிஸ்தானில் நடத்திய போருக்கும் பெயர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றுதான் இரு வரும் பெயர் வைத்தார்கள். 

 

இதனால் கறுத்தை கொழும்பான் மாம்பழத்தை சந்தையில் வாங்கினாலும் அது தென்மராட்சி மணலில் வளர்ந்த மரமா செம்பாட்டு மண்ணில் வளர்ந்த மராமா என்று ஆராய வேண்டியது அவசியம். அதில் புளி ஒழுந்திருக்கா என்றதை ஆழமாக வெட்டிச்சாப்பிடும் போது கண்டு பிடித்தால் கொடுத்த காசு வீண். எனவே வாதம் உருவான இடத்தையும் ஆராய வேண்டி இருக்கிறது. நீங்களே சொல்கிறீர்கள் நானும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பவை எல்லாம் ஒன்றுதான் என்று.

 

ஆனால் நீங்கள் ஏன் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றதை விளக்க முயலாமல் விவாத்தை திருப்புவது எதனால்? நீங்கள் ஆழத்தை தேடவில்லையா?

Edited by மல்லையூரான்

இந்த விவாதத்தில் பல இடங்களில் மோடியால் வரக் கூடிய தீமைகளை நான் குறிப்பிட்டிருப்பதாக நம்புகிறேன். அவற்றை பட்டியல் போன்று கூட எழுதியிருக்கிறேன். அத்துடன் ராகுல்காந்தி வருவதில் உள்ள சாதகத் தன்மைகளையும் குறிப்பிட்டுத்தான் இருக்கிறேன்.

ராகுல்காந்தி வருவது சாதகமானது என்று சொல்வதன் அர்த்தம், காங்கிரஸை ஆதரிப்பது என்பது அல்ல. ஆதரிப்பது என்பது வேறு, அரசியலில் பயன்பெறுவது என்பது வேறு.

பாஜக ஆட்சிக்கு வருவதை விட காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழர்களுக்கு நன்மையானது.

சுலபமான ஒரு விடயத்தை கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கும் ஈழத் தமிழர் தரப்புக்கும் ஏற்கனவே தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஊடாகவும், நேரடியானதுமான தொடர்புகள் உண்டு. ஈழத் தமிழர்களின் "லொபி" வேலை காங்கிரஸ் கட்சியோடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாஜகவோடு இது பற்றி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. (இதற்கு அர்த்தம் தமிழர்கள் இங்கேயும் தமது தொடர்புகளை ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான்)

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், படிகளில் ஏறுவது சற்று இலகுவாக இருக்கும் என்பது என்னுடைய பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் பாஜகவின் சில தலைவர்களை சந்தித்து விட்டு வந்தாரே?

நீங்கள் கூறுவது தவறு பாஜக ஆட்சியில் இருந்த காலத்தில் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலத்தில் புலிகளுக்கு பல உதவிகளை செய்து இருந்தார்கள் ஏன் அதிகமா ஆயுத கப்பல்கள் வந்தது பாஜக வின் ஆட்சி காலத்தில் என்று தான் சொல்ல வேண்டும் வரலாறுகளை திரிபு படுத்த கூடாது

யார் இல்லை என்றார்கள்? ஆனால் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எல்லாம் இப்போது அதே செல்வாக்கோடு இருப்பதாக தெரியவில்லை. அவரைப் போல ஒரு ஈழ ஆதரவுத் தலைவர் இன்று பாஜக கூட்டணியில் இல்லை.

நான் கடந்த காலத்தைப் பற்றி பேசவில்லை. நிகழ்காலத்தில் உள்ள நிலைமையைத்தான் பேசுகிறேன்.

இந்த விவாதத்தில் பல இடங்களில் மோடியால் வரக் கூடிய தீமைகளை நான் குறிப்பிட்டிருப்பதாக நம்புகிறேன். அவற்றை பட்டியல் போன்று கூட எழுதியிருக்கிறேன். அத்துடன் ராகுல்காந்தி வருவதில் உள்ள சாதகத் தன்மைகளையும் குறிப்பிட்டுத்தான் இருக்கிறேன்.

ராகுல்காந்தி வருவது சாதகமானது என்று சொல்வதன் அர்த்தம், காங்கிரஸை ஆதரிப்பது என்பது அல்ல. ஆதரிப்பது என்பது வேறு, அரசியலில் பயன்பெறுவது என்பது வேறு.

பாஜக ஆட்சிக்கு வருவதை விட காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழர்களுக்கு நன்மையானது.

சுலபமான ஒரு விடயத்தை கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கும் ஈழத் தமிழர் தரப்புக்கும் ஏற்கனவே தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஊடாகவும், நேரடியானதுமான தொடர்புகள் உண்டு. ஈழத் தமிழர்களின் "லொபி" வேலை காங்கிரஸ் கட்சியோடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாஜகவோடு இது பற்றி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. (இதற்கு அர்த்தம் தமிழர்கள் இங்கேயும் தமது தொடர்புகளை ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான்)

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், படிகளில் ஏறுவது சற்று இலகுவாக இருக்கும் என்பது என்னுடைய பார்வை.

தொடர்புதான் தீமை என்பது எனது முழு வாதட்டமுமே. அதை மீண்டும் ஒருதடவை படியுங்கள். லொபி பதவியில் இருப்பவர்களுடன் மட்டும்தான் வைப்பது. லொபி வேறு பேச்சு வார்த்தை வேறு. பேச்சு வார்த்தைகள் உடன்படிக்கைகள் யாருடனும் செய்ய முடியும். 

 

காங்கிரஸ் 13ம் திருத்ததை நீர்க்கவைத்து அதை அமுல் படுத்தி, ஐ.நா பிரேரணையை குழப்ப சுப்பிரமணிய சாமியை பாவிக்கிறது. இது கொலைகாற அரச குடுபம்பதை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் காங்கிரஸ் இருப்பதால் மட்டுமே. பாஜக வ்ந்தால் இலங்கையினது மட்டும் அல்ல  ஒரு வேளை காங்கிரசின் போர்க்குற்றமும் விசாரணைக்கு வருவதை காங்கிரசால் தடுக்க முடியாமல் போகும். 

யார் இல்லை என்றார்கள்? ஆனால் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எல்லாம் இப்போது அதே செல்வாக்கோடு இருப்பதாக தெரியவில்லை. அவரைப் போல ஒரு ஈழ ஆதரவுத் தலைவர் இன்று பாஜக கூட்டணியில் இல்லை.

நான் கடந்த காலத்தைப் பற்றி பேசவில்லை. நிகழ்காலத்தில் உள்ள நிலைமையைத்தான் பேசுகிறேன்.

ஆதாரவு வேண்டாம். அமேரிக்கா பிரித்தானியாவை சுப்பிரமணிய சாமி காங்கிரசுக்காக ஐ.நா சென்று  பிரேரணைகளை நீர்த்த்துப்போக செய்து  குழ்ப்ப வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தில் பல இடங்களில் மோடியால் வரக் கூடிய தீமைகளை நான் குறிப்பிட்டிருப்பதாக நம்புகிறேன். அவற்றை பட்டியல் போன்று கூட எழுதியிருக்கிறேன். அத்துடன் ராகுல்காந்தி வருவதில் உள்ள சாதகத் தன்மைகளையும் குறிப்பிட்டுத்தான் இருக்கிறேன்.

ராகுல்காந்தி வருவது சாதகமானது என்று சொல்வதன் அர்த்தம், காங்கிரஸை ஆதரிப்பது என்பது அல்ல. ஆதரிப்பது என்பது வேறு, அரசியலில் பயன்பெறுவது என்பது வேறு.

பாஜக ஆட்சிக்கு வருவதை விட காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழர்களுக்கு நன்மையானது.

சுலபமான ஒரு விடயத்தை கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கும் ஈழத் தமிழர் தரப்புக்கும் ஏற்கனவே தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஊடாகவும், நேரடியானதுமான தொடர்புகள் உண்டு. ஈழத் தமிழர்களின் "லொபி" வேலை காங்கிரஸ் கட்சியோடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாஜகவோடு இது பற்றி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. (இதற்கு அர்த்தம் தமிழர்கள் இங்கேயும் தமது தொடர்புகளை ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான்)

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், படிகளில் ஏறுவது சற்று இலகுவாக இருக்கும் என்பது என்னுடைய பார்வை.

 

சபேசன்..
 
இதுக்கு அதிகம் மினக்கடத் தேவையில்லை. வரலாற்றுரீதியாக இந்தியாவில் எந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன என்றும், அப்போதெல்லாம் ஈழத்தில் என்ன நடந்தது என்றும் பார்த்தால் போயிற்று.  :huh:
 
1) 1984 - 1989 காங்கிரஸ் ஆட்சி: ஈழத்தில் அமைதிப்படை அட்டூழியம்.
 
2) 1989 - 1990 மாற்றுக்கட்சிகள் ஆட்சி: அமைதிப்படை ஈழத்தில் இருந்து வெளியேற்றம்.
 
3) 1991 - 1996 காங்கிரஸ் ஆட்சி: யாழில் சூரியக்கதிர் நடவடிக்கையும், யாழ் குடாநாடு பறிபோதலும்.
 
4) 1996 - 1998 காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாற்றுக்கட்சிகள் ஆட்சி: ஈழத்தில் ஜெயசிகுறு நடவடிக்கை ஆரம்பம். பெருமளவு வன்னி நிலம் பறிபோதல்.
 
5) 1998 - 2004 பாஜக ஆட்சி: ஓயாத அலைகள் 2, 3 நடவடிக்கைகள் மூலம் நில மீட்பு. ஆயுதப்போராட்டம் அதி உச்சமான வீரியத்தைப் பெற்றிருந்த காலம்.
 
6) 2004 - 2009 காங்கிரஸ் ஆட்சி: இலங்கைத் தீவில் சமாதானப் பேச்சுவார்த்தை முறிதல்; இனக்கொலை; போர் அழிவு.
 
7) 2009 முதல் இன்று வரை காங்கிரஸ் ஆட்சி: மீண்டும் காங்கிரஸ் 2009 இல் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஆயுதப் போர் மௌனிக்கப்படல். சிங்கள அரசுக்கு சர்வதேச அளவில் இந்தியாவால் பாதுகாப்பு ஒழுங்குகள்.
 
இப்ப சொல்லுங்கோ.. இதில் எதை நம்பி காங்கிரஸ் ஆட்சி வந்தால் நல்லது என்கிறீங்க?  :o  :blink:

இசை! இப்பொழுது விடுதலைப் புலிகள் பலத்துடன் இருந்திருந்தால், நான் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதையே விரும்பியிருப்பேன். அதற்கு நீங்கள் தந்த தரவுகளே காரணமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. இந்த ஒப்பீடு இன்று பொருந்தாது என்று நான் நினைக்கிறேன்.

இசை! இப்பொழுது விடுதலைப் புலிகள் பலத்துடன் இருந்திருந்தால், நான் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதையே விரும்பியிருப்பேன். அதற்கு நீங்கள் தந்த தரவுகளே காரணமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. இந்த ஒப்பீடு இன்று பொருந்தாது என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் திரும்பவும் நினைக்கிறீர்கள். அதில் உண்மை இல்லை. புலிகள் இல்லாமல் தனது கைங்கரியத்தை ஈழத்தமிழர் மீது காட்ட என்று இந்தியா புலிகளை அழித்தது. 

 

தேன் கூட்டுக்கு நெருப்பு வைத்த வேடன் தேன் எடுக்க வருகிறான். அவன் நோக்கம் நிறைவேறாமல் பார்ப்பது தப்பியிருக்கும் தேனீக்களின் கடமை. 

Edited by மல்லையூரான்

இனி எந்த கட்சியும் ஈழ ஆதரவு தர தேவை இல்லை. அங்கே ஆயுதம் மவுனிக்கப் பண்ணி விட்டார்கள்.

 

இனி ஈழம் தவிர்ந்த ஒரு மாநில சுயாட்சிக்கு எந்த கட்சியும் குரல் தர முன்  வரும்.  இல்லையேல் அது தமிழ்நாட்டு அரசியலை பாதிக்கும் என்பது மத்திக்கு நன்றாக தெரியும்.

 

பா.ஜ.க வந்தால் என்ன, சோனியா வந்தால் என்ன.  ஒன்றும் பெரிதாக மாறாது.

 

தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் விடை சொல்லும்.

சபேசன்,

 

திமுக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டி இட, அதிமுக தனித்துப் போட்டி இட்டால் தமிழர்களின் நலனின் அடிப்படையில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?

நாரதர்! ஆதரவு என்று எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. மதிமுக ஓரளவு பரவாயில்லை.

உங்கள் கேள்வி நாடாளுமன்றத் தேர்தலை வைத்து கேட்கப்படுவதாக இருந்தால், இரண்டு தரப்பும் சம அளவில் வெற்றி பெறட்டும் என்றுதான் விரும்புவேன். இவர்களின் குழப்பமான நடவடிக்கைகளுக்கு தீர்ப்பும் குழப்பமாக இருப்பதே நல்லது.

2016இல் சட்டசபைத் தேர்தலை வைத்து உங்கள் கேள்வி அமைந்திருந்தால், அதில் திமுக ஆட்சி அமைக்கட்டும் என்பது என் விருப்பமாக இருக்கும். சீமானுக்கும் நெடுமாறனுக்கும் வீரம் வருவதை பார்க்கின்ற ஆசை எனக்கும் இருக்கும் அல்லவா?

அதை விட...

ஜெயலலிதா எதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினேனோ, அதையெல்லாம் அவர் செய்து விட்டார். இதற்கு மேல் அவர் எதுவும் செய்து விட்டார்.

ஈழத் தமிழர் சார்பான ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக, இதை வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பது என்னுடைய நம்பிக்கை.

மூவர் தூக்குப் பற்றிய அமைச்சரவை தீர்மானம் செய்யப்படவில்லை போன்ற விடயங்கள் இருக்கின்றன. இவைகளை செய்யக்கூடிய துணிவை ஜெயலலிதா கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவிற்கு பலவற்றை செய்யக்கூடிய துணிவு இருக்கிறது. ஆனால் விருப்பம் இல்லை.

திமுகவிற்கு நிறைய செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் துணிவு இல்லை.

ஆகவே மாறி மாறி இவர்கள் வருவதுதான் எமக்கு நல்லது.

சிதம்பரம் இலங்கை விவகாரத்தை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார் – அரசாங்கம்.

இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், இலங்கை விவகாரத்தை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தரப்பினரை திருப்தி படுத்தும் நோக்கில் அண்மையில் சிதம்பரம் சில கருத்துக்களை சென்னையில் தெரிவித்தள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலில் தமது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் ஓர் முனைப்பாக சிதம்பரத்தின் கருத்துக்களை நோக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை அரசாங்கம் படுகொலை செய்ததனைப் போன்று, சிதம்பரம் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்தே இவ்வாறு சிதம்பரம், இங்கைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99791/language/ta-IN/article.aspx

 

நாரதர்! ஆதரவு என்று எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. மதிமுக ஓரளவு பரவாயில்லை.

உங்கள் கேள்வி நாடாளுமன்றத் தேர்தலை வைத்து கேட்கப்படுவதாக இருந்தால், இரண்டு தரப்பும் சம அளவில் வெற்றி பெறட்டும் என்றுதான் விரும்புவேன். இவர்களின் குழப்பமான நடவடிக்கைகளுக்கு தீர்ப்பும் குழப்பமாக இருப்பதே நல்லது.

2016இல் சட்டசபைத் தேர்தலை வைத்து உங்கள் கேள்வி அமைந்திருந்தால், அதில் திமுக ஆட்சி அமைக்கட்டும் என்பது என் விருப்பமாக இருக்கும். சீமானுக்கும் நெடுமாறனுக்கும் வீரம் வருவதை பார்க்கின்ற ஆசை எனக்கும் இருக்கும் அல்லவா?

அதை விட...

ஜெயலலிதா எதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினேனோ, அதையெல்லாம் அவர் செய்து விட்டார். இதற்கு மேல் அவர் எதுவும் செய்து விட்டார்.

ஈழத் தமிழர் சார்பான ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக, இதை வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பது என்னுடைய நம்பிக்கை.

மூவர் தூக்குப் பற்றிய அமைச்சரவை தீர்மானம் செய்யப்படவில்லை போன்ற விடயங்கள் இருக்கின்றன. இவைகளை செய்யக்கூடிய துணிவை ஜெயலலிதா கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவிற்கு பலவற்றை செய்யக்கூடிய துணிவு இருக்கிறது. ஆனால் விருப்பம் இல்லை.

திமுகவிற்கு நிறைய செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் துணிவு இல்லை.

ஆகவே மாறி மாறி இவர்கள் வருவதுதான் எமக்கு நல்லது

 

 

மாறி மாறி வந்த  கலைஞர் தனது ஆட்சியில் என்ன செய்தார் சபேசன்? 

தீர்ப்பு குழப்பமாக இருப்பதால் யாருக்கு என்ன நன்மை? திடமான மத்திய அரசு, மானிலக் கட்சியின் தயவில் இருக்கும் போது, தமிழ் நாட்டரசு அளவில் செயற்பட்ட செல்வி ஜெயலலிதா அவர்களால் ஏன் மத்திய அரசிலும் திடமாகச் செயற்பட முடியாமல் இருக்கும்? நீங்கள் சொல்லும் காரணங்கள் எவையும் எந்தத் தரவின் அடிப்படையிலோ ,தர்க்கத்தின் அடிப்படையிலோ சொல்லப்பட்டவை அல்ல.

 

மாறாமல் இருக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் கொள்கைகளை மாற்ற வல்ல திடமான உறுதியான அரசியலாளர்கள் தேவை. கலைஞருக்கு மேலும் சொத்துக் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

செல்வி செயலலிதா அவர்களுக்கு அவ்வாறான தேவை இருப்பதாகத் தெரியவில்லை.அவர் தமிழர் வரலாற்றில் தனெக்கென ஒரு இடத்தை வைத்துக் கொள்ள விரும்புவதாகவே இது நாள் வரையான அவரது நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன.

 

இலங்கை விவகாரம் ப.சிதம்பரம் விளக்கம் - பகுதி-01 video

 

http://www.dinamalar.com/video_inner.asp?news_id=23799&cat=1041

 

இலங்கை விவகாரம் ப.சிதம்பரம் விளக்கம் - பகுதி-02 video

 

http://www.dinamalar.com/video_inner.asp?news_id=23798&cat=1041

 

  • கருத்துக்கள உறவுகள்
''இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது!''
இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்
 
 

காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்துவிட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு! 

 

'இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த இந்த விழாவுக்கு வழக்கம்போல ப.சிதம்பரம் கோஷ்டியைத் தவிர மற்றவர்கள் ஆப்சென்ட்.

 

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி மட்டுமே உட்கார வைக்கப்பட்டார். வரவேற்றுப் பேசிய அழகிரி, ''இறுதிக்கட்டப் போரின்போது, நடேசன் என்பவர் சொல்லி, குமரன் பத்மநாபன் மூலம் இந்தியாவுக்கு செய்தி அனுப்பினார்கள். போரை நிறுத்த கோரிக்கை வைத்தார்கள். இந்திய அரசு அதற்கான முயற்சி எடுத்தது. ஆனால், நெடுமாறனும் வைகோவும்தான் தடுத்துவிட்டார்கள். 'இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் ஆட்சியே மாறப்போகிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிடும். தனி ஈழம் கிடைத்துவிடும்’ என்றார்கள். இதைப் பற்றியெல்லாம் நன்கு தெரிந்தவர் சிதம்பரம் மட்டும்தான்'' என்று கூறி சிதம்பரத்துக்கு வழிவிட்டார்.

p26.jpg''இந்திய-இலங்கை ஒப்பந்தம் மட்டும் நிறைவேறியிருந்தால், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தொடர்ந்து ஆட்சி செய்துகொண்டு இருந்திருப்பார்கள். கடந்த 15 ஆண்டு சோகங்கள் நடந்து இருக்காது. இறுதிக்கட்டப் போரை நிறுத்தப் பெரும்முயற்சி எடுத்தோம். அது வெற்றி பெறவில்லை.

போர் முடிந்த பிறகு என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும் என்றுதான் பேச வந்துள்ளேன். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் மீது பழிச்சொல் வீசப்படுகிறது. அவர்களுக்கு என்னென்ன செய்து வருகிறோம் என்பதை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல; தமிழக மக்களும் பொறுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்ற பீடிகையுடன் சிதம்பரம் பேச ஆரம்பித்தார்.

 

''இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தருவது என்பதுதான் முதல் பிரச்னை. இலங்கை இறையாண்மை பெற்ற ஒரு நாடு. அங்கு தங்களுக்குத் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா, இல்லையா என்பது அந்நாட்டு மக்களின் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது. அத்தகைய நாட்டில், சிறுபான்மை மக்களுக்கு இறையாண்மை பெற்ற இன்னொரு நாட்டில் உரிமை பெற்றுத்தருவது என்பது எளிதானதல்ல. நம் நாட்டில் காஷ்மீரிகள், நாகா மக்கள்... தனி நாடு கேட்கிறார்கள். அதை நாம் சரி என்றா சொல்கிறோம்? ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரத்தான், இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மூலம்  இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை நிறைவேற்றுவதாக ஜெயவர்த்தனே முதல் இப்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷே வரை ஒப்புக்கொண்டனர். நான் ராஜபக்ஷேவை ஒருமுறை சந்தித்தபோது அவர், '13-வது திருத்தம் என்ன... அதற்கு மேலே 13 ப்ளஸ் செய்து தருகிறேன்’ என்றார். ஆனால், இந்த வாக்குறுதிகளை எல்லாம் இலங்கை அரசு மீறியது. எனவே, முரட்டுத்தனமாக மோதாமல் ராஜதந்திரத்துடன் அணுகி 13-வது சட்டத் திருத்தத்தை காப்பாற்றுவோம் என்று ராஜீவ் காந்தி பெயரில் சூளுரைக்கிறேன்'' என்ற சிதம்பரம் இறுதிக்கட்டப் போர் பற்றிப் பேசினார்.

 

 

''இறுதிகட்டப் போரின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை நான் மறுக்கவில்லை. 2009-ம் ஆண்டு நம்முடைய முயற்சிக்கு உளப்பூர்வமாக அவர்கள் செவிசாய்க்கவில்லை. அப்படி நடந்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கக் கூடும். இறுதிக்கட்ட போரில் நடந்த இனப்படுகொலை பற்றி விரிவான, உண்மையான விசாரணை நடத்த வேண்டும். அது உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுபற்றியெல்லாம் நம்முடைய குரல் தொடர்ந்து ஒலிப்பதால்தான், இப்போது உலக நாடுகள் பேசுகின்றன. கனடாவும் பிரிட்டனும் எப்படியும் பேசலாம். அவர்கள் இலங்கைக்கு அண்டை நாடு அல்ல. அப்படி நாம் முற்றிலுமாக புறக்கணிக்க முடியுமா? ஒட்டுமொத்தமாக துண்டித்துவிட்டால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் தொடர்ந்து எப்படி உதவுவது? துரும்புகூட செல்லாவிட்டால், நாளைக்கு இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு வர விசா கிடையாது என்று ராஜபக்ஷே கூறுவார். நாம் என்ன செய்ய முடியும்?'' என்று கருணாநிதிக்கு மறைமுகமாக பதில் அளித்த சிதம்பரம்,

 

''உள்ளூர் அரசியல் போன்றதுதான் உலக அரசியலும். அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல இந்தியாவும் அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. யாழ்பாணத்துக்கு வாருங்கள் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு அப்படியே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது. அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம்'' என்று முடித்தார்.

தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் இதே மாதிரி சிதம்பரத்தைப் பேச வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது!    

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89979

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தை நம்பி நடக்க யாரும் தயாராக இல்லை.. ஆனால் இந்த அளவுக்கு சிதம்பரத்தைப் பேசவைத்த காரியத்தை செய்தவர்கள் தமிழகத்தின் போராட்டக்காரர்களே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.