Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

 

exam_b.jpg2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. 
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk/exam/contact.html இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10339646841398750484vavuniya2.jpg

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் சாதனை

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியாமாவட்டத்தில் முதல் பத்து இடங்களில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் 8 இடங்களை தமதாக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பெறுபேறுக்ளின் அடிப்படையில் தாட்சாயினி சிவமைந்தன் என்ற மாணவி வவுனியா மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 23 ஆம் இடத்தினை பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் அபிராமி பாலச்சந்திரன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தினையும் பிரமிளா விஸ்வநாதன் நான்காமிடத்தினையும் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய லக்சி மகாதேவன் ஐந்தாவது இடத்தினையும் தனுசா தெய்வேந்திரன் ஆறாவது இடத்தினையும் கஜேந்தினி கனகசெல்வராசா ஏழாவது இடத்தினையும் பவித்திரா செந்தில்குமார் எட்டாவது இடத்தினையும் சம்பிக்தா மகேந்திரன் ஒன்பதாவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

இதேவேளை, கணித பிரிவில் ஆரணி பாலச்சந்திரன் மற்றும் காயத்திரி விநாயகமூர்த்தி ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முறையே 5 ஆம் மற்றும் 7 ஆம் இடங்களை பெற்றுள்ளனர். 

அத்துடன் வர்த்தக பிரிவில் துசானி பத்மநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பியூலா கணேசன் 8 ஆம் இடத்தினையும் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய கஸ்தூரி செந்திரன் 8 ஆம் இடத்தினையும் சிவதர்சிகா பாலசுந்தரம் 9 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர். 

இது எமது பாடசாலையின் சிறந்த பெறுபேறாக கருதுவதாகவும் அம் மாணவிகளை வாழ்துத்துவதுடன் சித்தியடைந்த அனைத்து மாணவிகளுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவத்தார். 

இதேவேளை வவுனியா மத்திய மகாவித்தியாலய அதிபர் எம். எஸ் பத்மநாதன் கருத்து தெரிவிக்கையில். 

கணித பிரிவில் 2 மாணவர்கள் அதி விசேத தரத்தில் சித்தியடைந்துள்ளதுடன் 8 மாணவர்கள் பொறியில் பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் மருத்துவ பீடத்திற்கு மூன்று மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்ததுடன் கலைப்பிரிவு மற்றும் வர்த்தக பிரிவுகளிலும் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதிகளை பெற்றுள்ளனர் என தெரிவத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

எனது மருமகன் ஒருத்தர்

யாழ் இந்துவில்

ஏ 2பி  எடுத்து  பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியுள்ளான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்…

 

இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.  இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணிதத்துறையில் இராஜசேகரன் யதுசன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

aas.jpg

உயிரியல் துறையில் இரட்ணசிங்கம் பிரணவன் மாவட்ட மட்டத்தில் 2 ஆவது இடத்தினையும், தேசிய மட்டத்தில் 8 ஆவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவர் ஆங்கில மொழி மூலமாக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

wwe.jpg

வர்த்தக துறையில் கிருபாலன் சுபாங்கன் மாவட்ட மட்டத்தில் 7 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.

அதே போன்று கலைத்துறையில் 2A,B சித்தியினை சிறீஸ்கந்தராஜா சிவஸ்கந்தசிறி பெற்றுகொண்டுள்ளார்.

3A சித்தி பெற்ற மாணவர்களது விபரம் :

கணித துறை :

1) இராஜசேகரன் யதுசன்           ( மாவட்ட நிலை - 01 , தேசிய நிலை - 03)

2) சண்முகலிங்கம் குருபரன்     ( மாவட்ட நிலை - 04 , தேசிய நிலை - 22)

3) சிவகுமார் மேகலாதன்           ( மாவட்ட நிலை - 05 , தேசிய நிலை - 25)

4) நகுலநாதன் லவலோஜன்      ( மாவட்ட நிலை - 08 , தேசிய நிலை - 40)

5) சந்திரநேசன் ராம்ராஜ்             (மாவட்ட நிலை - 09)

6) கைலாசபதி சுதாகர்                (மாவட்ட நிலை - 11)

7) குணாநந்தசீலன் நிலக்சன்     (மாவட்ட நிலை - 13)

8) திருலிங்கம் ஆதவலோசன்   (மாவட்ட நிலை - 16)

9) செந்தில்நாதன் கிருசாந்         (மாவட்ட நிலை - 34)

10)குமாரசாமி கஜானன்             (மாவட்ட நிலை - 40)

11)புண்ணியராஜா திவாகரன்     (மாவட்ட நிலை - 41)

12)நந்தகுமாரன் கேதீஸ்வரன்    (மாவட்ட நிலை - 43)

13)சண்முகநாதன் சந்தோஸன் (மாவட்ட நிலை - 52)

உயிரியல் துறை :

14) இரட்ணசிங்கம் பிரணவன்   ( மாவட்ட நிலை - 02 , தேசிய நிலை - 08)

15) துரைசிங்கம் ஆதவன்          (மாவட்ட நிலை - 05)

வர்த்தக துறை :

16) கிருபாலன் சுபாங்கன்           (மாவட்ட நிலை - 05)

17) இதயராஜா ரமணன்

18) கோபலச்சந்திரன் குகரூபன்

qq.jpgr2.jpgr3.jpg

 

http://www.jhc.lk/online/index.php/archives/3476

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புச் சித்திகளைப் பெற்றுக்கொண்ட இந்துவின் மைந்தர்களுக்கு எனது உளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவின் மைந்தர்களுக்கும், எல்லாக் கழுத்தறுப்புக்களுக்குப் பிறகும், இன்னும் 'எமது உயிர்' துடிக்கின்றது எனக் காட்டி நிற்கின்ற சகல மாணவர்களுக்கும், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். :) ஏனையோர் மனம் தளராதீர்கள். :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

The Department of Examinations of  Sri Lanka has released the results of the G.C.E Advanced  Level Examination held in August 2013.Eighteen (18) students obtained A’s in all three  subjects,while other 18  Students got 2A,B.Miss.Nithusha Jeyakumar of Commerce stream secured the 1st rank in district level.This is the FIRST time our students obtained first 6 places in Commerce stream in Jaffna district.(Best Results)

 

 

Best Results in G.C.E(A/L) 2013
 

Bio Stream (Tamil Medium)

3A

  1. Shambave Yogendrarajah (District Rank 04)
  2. Karthiga Rajasingam (District Rank 09)
  3. Nivasiny Thaninayagam Ilango (District Rank 11)

2A,B

  1. Shanthana Vasanthakumar (District Rank 07)
  2. Shawme Kaajaaroganan (District Rank 14)
  3. Sobitha Shakthivadivel (District Rank 15)
  4. Ann Abinaya Arulnesan (District Rank 16)
  5. Gobika Raveendran (District Rank 17)
  6. Relangi Manivasakan (District Rank 21)
  7. Sobitha Siveswaran (District Rank 26)
  8. Mathushobiga Thivyakumaran (District Rank 50)

2A,C

  1. Shambavi Ramanan (District Rank 35)
  2. Krishni Manokaran (District Rank 48)

A,2B

  1. Thinuja Thayaparan (District Rank 24)
  2. Achchuthai Sriskanthan (District Rank 30)
  3. Mathangi Murugathas (District Rank 40)
  4. Pavithira Ranganathan (District Rank 41)
  5. Rosana Nagaratnam (District Rank 47)
 
Maths Stream (English Medium)
3A
  1. Kabitha Subramaniam (District Rank 18)
  2. Nishanthini Kavirajan (District Rank 20)
  3. Piraveena Paralogarajah (District Rank 21)

Maths Stream (Tamil Medium)

3A
  1. Anet Rubisha Anton Rubanathan (District Rank 10)
  2. Ketharani Jetheeswaran (District Rank 31)
2A,B
  1. Keerthana Kanthasamy (District Rank 37)
  2. Thirumagal Panchalingam (District Rank 47)
  3. Vinushika Panchalogarajan (District Rank 60)
  4. Thushani Sivarajah (District Rank 73)
 
Commerce Stream
3A
  1. Nithusha Jeyakumar (District Rank 01, Island Rank 97)
  2. Vaishnavi Manokaran (District Rank 02)
  3. Banuja Balasundram (District Rank 03)
  4. Kajaani Pathumanithy (District Rank 04)
  5. Jerinshiya Dominic Alfred (District Rank 05)
  6. Keerthana Balamanokara (District Rank 06)
  7. Mathura Kanaganaayagam (District Rank 10)
  8. Suganya Kunasegaram (District Rank 24)
  9. Kajalakshi Maanicavaasagar (District Rank 36)
  10. Nivethiga Krishnan (District Rank 40)
2A,B
  1. Bavaananthy Thairiyarajah (District Rank 08)
  2. Thaaranga Sivapatham (District Rank 34)
  3. Gangaajini Sundralingam (District Rank 35)
  4. Lathusha Pushparajah (District Rank 54)
  5. Naveena Thurairajah (District Rank 61)

2A,C

  1. Sharuga Soundrarajah (District Rank 47)
A,2B
  1. Brammika Selvanayakam (District Rank 53)
  2. Mythily Varatharajan (District Rank 71)
  3. Nirusha Balasubramaniam (District Rank 74)
ABC
  1. Hema luckshi Thavarasasingam (District Rank 68)
  2. Jensy Puvanesan (District Rank 77)
  3. Pathima Nazeera Nazar (District Rank 92)
  4. Keerthana Mahendrarajah (District Rank 117)
3B
  1. Kirusha Thiyagarajah (District Rank 93)
  2. Saajitha Lingeswaran (District Rank 99)
  3. Janusha Raveendran (District Rank 122)
 
Arts Stream
 
2A,B
  1. Vaishnavi Kunchithapatham (District Rank 22)

2A,C

  1. Sharmi Shanmuganathan (District Rank 53)

A,B,C

  1. Jeyalakshy Parameswaran (District Rank 42)
  2. Shobika Thavaneswaran
A,2B
  1. Sutharshiny Sundramoorthy
A,2C
  1. Sivalogika Theivendram
A,B,S
  1. Suganya Vimalendran
3B
  1. Logika Loganathan (District Rank 108)

http://www.vembadi.sch.lk/web/?page_id=2511

 

க. பொ. த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பிடித்த மாணவி.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் மகாவித்தியாலையத்தில் உயர்தரக் கல்வி கற்று வந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி க. பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக பெபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு தான் கல்வி கற்று வந்த பாடசாலைக்கும், அறிவையூட்டிய ஆசிரியர்களுக்கும் பெருமையையும், சிறப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

JI-200x300.jpg

 

மேற்குறிப்பிட்ட மாணவியின் தாயார் இவரின் ஒரு வயதிலேயே இறந்து விட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மூத்த ஆண் சகோதர்கள் மாவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இடை நிறுத்தப் பட்ட இவரின் படிப்பு, பின் பல இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர முடியாமலேயே போனது. இதனால் இவர் அந்த ஆண்டிற்குரிய பத்தாம் தரத்தினை படிக்க முடியாமலே போய் விட்டது. இருந்தும் மனம் தளராத இம் மாணவி பல துன்பங்களுக்கு மத்தியில் எப்படியாவது படித்தே தீரவேண்டும் என்ற இலட்சியக் கனவுகளோடு தவற விட்ட அடுத்த ஆண்டில் பதினோராம் தரத்தில் சேர்ந்து கற்காமல் போன பத்தாம் தரத்தையும் சேர்த்தே பல வலிகளுக்கு மத்தியில் கற்கத் துவங்கி நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது இவரின் கடின உழைப்பையும், தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் திறனையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எத்தனை துன்பங்கள் எம்மைத் துளைத்தெடுத்தாலும், நாம் கல்வியிலும் சளைத்தவர்களல்ல… என்பதை அதிக பெறுபேறுகள் பெற்று நிரூபித்துள்ளார் மேற்குறிப்பிட்ட மாணவியான பிரதா அவர்கள்.

பிரதா தெய்வேந்திரம்பிள்ளை பெற்ற பெறுபேறுகள் விபரம்:

புள்ளி விபரவியல் – A

கணக்கீடு – A

பொருளியல் – B.


பல வலிகளுக்கு மத்தியில் கல்வியினைக் கற்று உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட மாணவி பிரதாவை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் மென்மேலும் கல்வியில் சிறந்து பல துறைகளைக் கற்று வளர்ந்து வருகின்ற தமிழர் தேசத்தில் சிறந்த சிற்பிகளாக உயர வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

 

http://www.pulampeyartamizarkal.net/congrats/

வாழ்த்துக்கள்....

நிலைமைகளை உணர்ந்து, பொழுதை இனிமையாக மட்டும் கழிக்காமல் கல்விக்கும் செல்வழித்து சித்திகளை கண்ட மாணவர்களுக்கு வாழத்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. மாணவர்கள் சிரமப்பட்டு படிக்கத்தக்க வகையில் தாய்மார் கண்விழித்து கவனித்துக் கொள்வார்கள்.. அதன் பயனாக பிள்ளைகள் நல்ல சித்திகளைப் பெறுவார்கள்..! :rolleyes:

இந்த மாணவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! :D

மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மருத்துவ பீடத்துக்கு தெரிவான மட்டக்களப்பு மாணவி...

 

1505084_10153658972540637_2010672349_n.j


க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி விஞ்ஞான பிரிவில் பேத்தாழை பிரதேசத்தில் இருந்து பற்குணராஜா தயானி 1 A ,2B சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 21 ஆவது நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி உள்ளார்.

மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் உயர்தரம் பயின்று பரீட்சைக்கு தோற்றி இருந்தார். இவர் ஆரம்பம் முதல் க.பொ சாதாரணம் வரை பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்

சாதாரண தர பரீட்சையில் 8 A, 1C பெற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் முதலிடத்தை பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது

பரீட்சையில் சித்தி தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி மிகுந்த குடும்ப கஷ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்ததாகவும் ஆரம்பம் முதல் தனது பெற்றோர் தன்னை வைத்தியராக வேண்டும் என ஆசை பட்டதாகவும், வறிய நிலையிலும் தன்னை கற்பித்ததாகவும் இந்த நிலைக்கு வர உதவிய பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

(facebook)

சென்ஜோன்ஸ் றிசள்டையும் இருந்தால் போடுவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GCE A/L results out The Examinations Department released the GCE Advanced Level Examination 2013 results yesterday. Amaya Mahatanthila of Eheliyagoda Madya Maha Vidyalaya emerged all island first in the Bio - Science Stream, Abhitha Weerasiri Dias of Richmond College Galle was placed first in the Mathematics Stream, Methsarani Lokuge of Devi Balika Vidyalaya - first place in the Arts Stream and Erandi Kanchana of Gampaha Rathnavali Balika Vidyalaya - first place in the Commerce Stream. "The results could be accessed by logging onto the Examination Department website www.doenets.lk. The Examinations Department issued the result of Colombo school's candidates yesterday to the respective principals. "The result of other schools will be released today," Examination Department sources aid. - See more at: http://www.dailynews.lk/local/gce-al-results-out#sthash.xo8qXcv5.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.