Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையைச் சொல்லுங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச அவர்கட்கு,

உங்கள் விண்ணப்பப் படிவம் பார்த்தேன். முன்பு புத்தகம் அடித்த எவருக்காவது பொருளாளராக இருந்த முன் அனுபவம் உண்டா????

இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அனால் 1000 புத்தகங்களும் விற்று முடிந்தபின்தான் உங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படும். சம்மதமெனில் இன்றிலிருந்தே வேலை.

இப்படிக்கும்

சுமே

சுண்டூஊஊஊஊஊஊஉ! பெரிய பிரித்தானியாவின் பிரபல கோழி அதிபர் நண்டனுக்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்கவும்.

:D

சுமேரியரே, அலைமகள் ஊட்டத்தை நீங்கள் கவனிக்கவில்லையா..?? அவருக்கு எனது நன்றிகள்!!. எனக்கு நியமனம் நிச்சயமாகிவிட்டது!. புது மனை ஒன்று கட்டிக்கொள்ளும் எனது கனவு நனவாகப்போகிறது.  :D :D :D

  • Replies 87
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியரே, அலைமகள் ஊட்டத்தை நீங்கள் கவனிக்கவில்லையா..?? அவருக்கு எனது நன்றிகள்!!. எனக்கு நியமனம் நிச்சயமாகிவிட்டது!. புது மனை ஒன்று கட்டிக்கொள்ளும் எனது கனவு நனவாகப்போகிறது.  :D :D :D

இலக்கங்கள் இரண்டு என்பதற்குப் பதிலாக ஒன்று என்பது விழுந்துவிட்டது. இப்பொழுதே என் விசைப்பலகையை மாற்றுகிறேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Swiss பிரபல தூள்( மிளகாய் தூள், சரக்கு தூள், கோப்பித்தூள்) வியாபாரியான சஜீவன் அண்ணா வும் France நாட்டிலே அழகிய இளம் பெண்களுக்கு மட்டும் இன்டெர் நெட்டு இலவசம் என்று கடை வாசலிலே போட்டு விட்டு தன்னலம் பாராது ஓயாது தூங்காது சமூக சேவையாற்றி வரும் பிரபல சமூக சேவகரும் தோழி அதிபருமான விசு அண்ணாவையும் ஒழுங்கு பண்ணி புத்தகத்த வாங்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு அக்கா சோ சட்டுப்புட்டு எண்டு காரியத்த தொடங்குங்கோ.......

சுமேரியரின் மண்டை ஓடுகள் மாதிரி ஒரு காலத்தில் உலகம் அழிஞ்சாலும் உங்க புத்தகத்த தோண்டி எடுக்க கூடிய மாதிரி நல்ல quality பேப்பர் use பண்ண சொல்லுங்கோ

நான் தான் எழுத்துப்பிழை திருத்துவேன் என்று சுண்டல் அடம்பிடிப்பதால் விமானத்தில் பாதுகாப்பாக அத்தனை கதைகளும் அனுப்பப்பட்டுள்ளன. நன்றி சுண்டல் உங்கள் ஆர்வத்துக்கும் ஒத்துழைப்புக்கும். :D

சிட்னியில் ஆறுதலாக வெளியீடு செய்யலாம் அவசரப்பட்டு மண்டபத்தை முன்பதிவு செய்துவிடாதீர்கள்.

என்ன சுண்டல்.. புத்தகத்தை வெளியிட வைக்கிறதுதான் ஒரே முடிவா? :D

சுமே அக்காவின் 100 நூல்களை நானே விற்றுத்தருவேன் என்று சுண்டலுக்குக் கூறிவிட்டு மற்றவர்களுக்காக இப்படி எழுதுகிறீர்கள் என்று தெரிகிறது. சரி ஒருத்தருக்கும் தெரியாமல் அனுப்பி வைக்கிறன். :lol:

செம்மொழிச் செல்வி :D  ,எம் இனமானம் காக்க புறப்பட்ட புரட்சிகர எழுத்தாணி :o சுமோ வாழ்க (விசிலடிச்சான் குஞ்சுகளும் ரெடி அக்கோய் ) :icon_idea:

உங்கள் இன உணர்வுக்கு முன்னால் நானெல்லாம் எம்மாத்திரம் நந்தன்.உங்களுக்கு எத்தனை புத்தகம் ???? :lol:

சுண்டூஊஊஊஊஊஊஉ! பெரிய பிரித்தானியாவின் பிரபல கோழி அதிபர் நண்டனுக்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்கவும்.

:D

அலைமகள் உங்களுக்கு 100 போதுமா???

நான் தான் கடைசியா வந்து சொல்லுறன் போல இருக்கு. நான் சொல்ல நினைச்ச பல விடயங்களை ஏற்கனவே சக உறவுகள் சொல்லி விட்டார்கள். என்னிடம் மிச்சமிருக்கும் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். நீங்கள் ஒரு இலக்கிய விமர்சகரிடம் ஆலோசனை கேட்டு நல்ல கதை சொல்லியா எனத் தீர்மானிப்பதை விட, உங்கள் எல்லாக் கதைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து புத்தகமாக்கி அதை வாசிக்கும் வாசகர்களிடமிருந்தே உங்கள் படைப்பின் தராதரத்தை அறிந்து கொள்ள வேண்டும். முறைசார் கல்வி முறைகளில் ஒருவர் தயாரிப்பது போன்ற ஆய்வுக் கட்டுரைக்கு (thesis) ஒத்ததாக உங்கள் முதல் புத்தகம் இருக்கலாம். புத்தகம் வெளியிட்ட பிறகும் எல்லா புனை கதை வாசகர்களும் உங்கள் புத்தகத்தை வாங்கி வாசிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. ஏனெனில், எப்படி எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட sub population இனைத் தான் நீங்கள் குறிவைக்க முடியும். அதனால், புத்தக விற்பனை எண்ணிக்கையை உங்கள் படைப்புத் திறமையின் அளவு கோலாக வைத்திருக்க வேண்டாம் என இப்போதே உங்களுக்குச் சொல்கிறேன். நான் புனை கதை வாசிப்பது மிகவும் குறைவு. ஆனால், நீங்கள் வெளியிடப் போகும் புத்தகத்தின் முன்னூறு பிரதிகள் கட்டாயம் வாங்குவேன்!  :D

நன்றி ஜஸ்டின் வரவுக்கு. முன்னூறு புத்தகங்களை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள் ??? :D

வருகைதந்த ஜீவாவுக்கும் சுபேசுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆம்மா வெளியிடுங்கோ நானும் பிரபல London கோழி வியாபாரியும் தொழில் அதிபரும் வியாபார காந்தம் (பிசினஸ் மக்நெட்) நந்தன் அண்ணாவும் ரெடி

இப்பிடித்தான் ஆரோ ஏத்திவிட கடைசியில கோழிக் கடையையும் வித்துப்போட்டு ரெண்டு பொட்டிக்கடையில வேலை..மறுபடியும் மக்நெற் எண்டு முதல்ல இருந்தா..?தாங்காது..தாங்காது...விழுற ரெண்டு நேர சாப்பாட்டுக்கும் ஆப்புதான்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் ஆரோ ஏத்திவிட கடைசியில கோழிக் கடையையும் வித்துப்போட்டு ரெண்டு பொட்டிக்கடையில வேலை..மறுபடியும் மக்நெற் எண்டு முதல்ல இருந்தா..?தாங்காது..தாங்காது...விழுற ரெண்டு நேர சாப்பாட்டுக்கும் ஆப்புதான்... :D

நீங்கள் புத்தகம் வாங்காட்டிப் பரவாயில்ல. வாங்கிரவையை ஏன் தடுக்கியியள். உது நல்லாயில்ல. :(

  • கருத்துக்கள உறவுகள்
உடனடியாக கருத்தெழுத முடியேல்ல அக்கா. நீங்கள் இத்தகையதொரு தலைப்பைப் போட்டு ஒரு எழுத்தாளர் உங்கள் கதைகளைப் பற்றி சொன்ன கருத்தென வாசித்ததுமே அவர் யாரென்பதனை ஊகித்துவிட்டேன். நான் நினைத்த அந்த மாபெரும் இலக்கியவாதி பற்றி இங்கு பலரும் அறிந்திருப்பார்கள் குறிப்பாக கிருபனுக்கு இவரை இவரது இதனால் புலம்புவது யாதெனில் என்ற புலம்பலை வாசித்த அனுபவம் இருக்கும்.
 
அந்த பெரியவருக்கு தன்னைவிட யாரையும் வளர்த்துவிடவோ அல்லது தனது விமர்சனத்தை வைக்கும் சம நேரத்தில் உங்கள் எழுத்தை செழுமைப்படுத்த ஏதாவது தனது ஆதரவை தரவோ முயற்சித்திருக்கமாட்டார். காரணம் அவரது இயல்பு தானே மணமகனாகவும் பிணமாகவும் இருக்கும் பெருந்தன்மை மிக்கவர் அவர்.
 
அவர் 2000தொடக்கத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தாசீசியஸ் ஐயா அவரை ஊடத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவரது ஊடக பிரகாசத்துக்கு அடியெடுத்துக் கொடுத்து ஆதரவு கொடுத்த மனிதரையே துரோகியாக்கி தானே பெரிய தேசீயவாதியாக தன்னை அறிமுகப்படுத்த பட்ட பிரயத்தனங்களுக்கு சாட்சியாக பல அனுபவங்கள் இருக்கிறது. வன்னியில் போய் தன்னை பல இடங்களுக்குள்ளும் பெரியமனிதராக்க முயன்ற போது சிபாரிசுகள் தேடி இங்கே அந்தக்காலத்தில் ஊடகங்களில் இருந்தவர்களையெல்லாம் ஓரங்கட்டி தானும் தனது சகதோழியும் மட்டுமே தேசியவாதிகள் என படம்காட்டி முயன்ற போது இந்த இம்மைகளை தாங்கிய ஒரு எழுத்தாளன் அகிலன் இன்னும் உயிரோடு இவரது கும்மிகளைத் தெரிந்த மனிதன் இருக்கிறான். இன்னும் கருணாகாரன் உட்பட பலர் இருக்கிறார்கள். 
 
ஒருவர் பற்றி இங்கு இத்தகைய விமர்சனத்தை ஏன் கொண்டு வருகிறேன் என கள உறவுகள் கோவிக்க வேண்டாம். குழிபறிப்பில் வளரும் எழுத்துக்களை எழுத்தாளர்களை வளர விடாத ஒரு ஆலமரம் சுமேயக்காவின் எழுத்துக்கள் கதைகளில்லையென்று சொன்ன பெரீய எழுத்தாளர். ஒருவரது இயல்பிலிருந்தே அவரது விமர்சனத்தையும் பார்க்க முடியும் அத்தகைய ஒருவரே அக்காவின் எழுத்துக்கு விமர்சனத்தை வைத்துள்ளார்.
 
ஆக இவரது கருத்தை வைத்து தனது எழுத்துக்கள் தரமில்லையென்றோ இனி எழுத முடியாதென்று வருந்தவோ தேவையில்லை. உங்கள் எழுத்தின் தரத்தையும் எழுத்தின் வெற்றியையும் தீர்மானிப்பது வாசகர்களே அதனை புரிந்து தொடர்ந்து எழுதுங்கோ. 
ஒருவரும் எடுத்தமாத்திரத்தில் சிறந்த கதைசொல்லிகளாகவோ கவிகளாகவோ வந்ததில்லை தொடர்ந்த வாசிப்பு எழுத்துக்களே அவர்களை வளர்த்தெடுக்கிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி. உங்களுக்கு நான் ஒண்டும் சொல்லவே இல்லை :D

நான் தான் எழுத்துப்பிழை திருத்துவேன் என்று சுண்டல் அடம்பிடிப்பதால் விமானத்தில் பாதுகாப்பாக அத்தனை கதைகளும் அனுப்பப்பட்டுள்ளன. நன்றி சுண்டல் உங்கள் ஆர்வத்துக்கும் ஒத்துழைப்புக்கும். :D

சிட்னியில் ஆறுதலாக வெளியீடு செய்யலாம் அவசரப்பட்டு மண்டபத்தை முன்பதிவு செய்துவிடாதீர்கள்.

சுமே அக்காவின் 100 நூல்களை நானே விற்றுத்தருவேன் என்று சுண்டலுக்குக் கூறிவிட்டு மற்றவர்களுக்காக இப்படி எழுதுகிறீர்கள் என்று தெரிகிறது. சரி ஒருத்தருக்கும் தெரியாமல் அனுப்பி வைக்கிறன். :lol:

உங்கள் இன உணர்வுக்கு முன்னால் நானெல்லாம் எம்மாத்திரம் நந்தன்.உங்களுக்கு எத்தனை புத்தகம் ???? :lol:

அலைமகள் உங்களுக்கு 100 போதுமா???

நன்றி ஜஸ்டின் வரவுக்கு. முன்னூறு புத்தகங்களை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள் ??? :D

வருகைதந்த ஜீவாவுக்கும் சுபேசுக்கும் நன்றி

இங்கை என்ன நடக்குது :o :o ?? உண்மையை சொல்லுங்கோ எண்டு தலைப்பை போட்டுட்டு இப்ப ரூட் மாறுது முருகா ........................ :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் ஆரோ ஏத்திவிட கடைசியில கோழிக் கடையையும் வித்துப்போட்டு ரெண்டு பொட்டிக்கடையில வேலை..மறுபடியும் மக்நெற் எண்டு முதல்ல இருந்தா..?தாங்காது..தாங்காது...விழுற ரெண்டு நேர சாப்பாட்டுக்கும் ஆப்புதான்... :D

அந்தக் காந்தம் கந்தலான கதையையும் எழுதினால் என்னைப் போன்ற வளர்ந்து வரும் காந்தக்களுக்கு வழிகாட்டியாய் இருக்குமெல்லோ? :D

இங்கை என்ன நடக்குது :o :o ?? உண்மையை சொல்லுங்கோ எண்டு தலைப்பை போட்டுட்டு இப்ப ரூட் மாறுது முருகா ........................ :lol::D .

அதான் எனக்கும் கண்ணைக் கட்டுது! மூன்று எண்டதை முன்னூறு எண்டு மாத்தி எல்லார் தலையிலயும் புத்தகக் கட்டுகளை ஏற்றி விடுற மாஸ்ரர் பிளான் இது! தெரியாமல் வந்து எல்லாரும் மாட்டிக் கொண்டினம் சரியோ? எப்பிடி எப்பிடியெல்லாம் கிளம்பி வாறாங்களப்பா! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காந்தம் கந்தலான கதையையும் எழுதினால் என்னைப் போன்ற வளர்ந்து வரும் காந்தக்களுக்கு வழிகாட்டியாய் இருக்குமெல்லோ? :D

அதான் எனக்கும் கண்ணைக் கட்டுது! மூன்று எண்டதை முன்னூறு எண்டு மாத்தி எல்லார் தலையிலயும் புத்தகக் கட்டுகளை ஏற்றி விடுற மாஸ்ரர் பிளான் இது! தெரியாமல் வந்து எல்லாரும் மாட்டிக் கொண்டினம் சரியோ? எப்பிடி எப்பிடியெல்லாம் கிளம்பி வாறாங்களப்பா! :D

சரி முன்னூறு வேண்டாம் ஒரு முப்பது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி. உங்களுக்கு நான் ஒண்டும் சொல்லவே இல்லை :D

இணுவில் கந்தசாமி முருகன் சாட்சியாக நீங்கள் ஒண்டுமே சொல்லேல்ல. :D

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் கந்தசாமி முருகன் சாட்சியாக நீங்கள் ஒண்டுமே சொல்லேல்ல. :D

இங்க ஆரப்பா கந்தசாமி? 

ஆரப்பா முருகன்? :D

நான் நினைச்சன் கந்தசாமி தான் முருகன் எண்ட 'புனை பெயர்' வைத்திருக்கிறார் எண்டும் இரண்டு பேரும் ஒரு ஆள் தான் எண்டும்..... :wub:

சீ.... எனக்கே இப்ப குழப்பமாக் கிடக்குது! :icon_idea:

அந்த ரெண்டு சாமியும் ஒராள் தானப்பா குழம்பாதையுங்கோ. :lol:

சுமேயக்காவிற்கு கருத்துச் சொன்ன அந்த மாபெரும் இ(க)லக்கியவாதியின் பெயரிலும் முருகனின் இவ்விரு பெயர்களிலும் ஒன்று சொந்தம். சுமேயக்காவுக்கு மட்டும் விளங்க எழுதினா இதில நீங்களும் விளக்கம் கேட்டிட்டீங்கள் அண்ணாச்சி. :icon_mrgreen:

நீங்கள் கூறுவதில் ஒரு நியாயப்பாடு இருக்கிறது. சமூகத்தில் நிகழ்பவையே பெரும்பாலும் கதைகளாகின்றன. அத்துடன் எத்தனையோ வகையாகப் பிரித்துப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனாலும் கதைகள் என்று நாம் மட்டும் முடிவெடுத்தாற் போதுமா??? வாசகர்களின் எண்ணங்களும் முக்கியமல்லவா???

இங்கேயும் சிக்கல்தான்  :) . எவ்வாறான வாசகர்களைத் திருப்திப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உங்களால் தீர்மானிக்க முடிந்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பிரிவு வாசகர்களுக்காகத்தான் இருக்கும். ஒரு பிரச்சார ரீதியான அல்லது இலக்கு நோக்கிய ஆக்கத்துக்கு வேண்டுமானால் இந்தத் தீர்மானம் உடன்பாடாக இருப்பினும், அது தனிப்பட்ட முறையில் உங்களைத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகமே!!  :D

எனது கதை எழுதும் அனுபவத்தை சுருக்கமாகக் கூறுவதானால்… நான் தாயகத்தில் உள்ளபோது பலரது கதைகளை, நாவல்களை வாசித்தாலும்… சாண்டில்யன், பாலகுமாரன் மற்றும் தாயக பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் (தற்போது எனது நகரத்தில்தான் வசிக்கிறார்) ஆகியோரது கதை சொல்லும் போக்கை கதைகளுக்கு ஏற்ப பின்பற்ற முயற்சி செய்வதுண்டு. 

என்னை கவரும் ஒரு சம்பவம்.. அதை எடுத்துக் கொண்டு சூழ்நிலையின் விபரிப்பு.. முக்கிய பாத்திரங்களின் அறிமுகம்.. அவைகள் உரையாடும்போது அல்லது நகரும்போது தேவைக்கேற்ப காலத்தோடு ஒட்டிய எனது பார்வை அல்லது கருத்து செருகல்… முடிவு வேண்டுமானால் குறிப்பிட்ட சம்பவமாகவே இருக்கலாம்..  :) நான் பொதுவாகவே வாசகருக்காக எழுதுவதில்லை.. எனக்காக எழுதிவிட்டு வாசகரது அபிப்பிராயத்துக்கு ஏங்குவதுதான் நடைமுறை உண்மை. ஒரு சில கதைகள் விதிவிலக்காக இருக்கலாம்.. அந்த வகையில் இதே யாழ் களத்தில் இளைஞர்களது தமிழ் கதை வாசிப்பார்வத்தை தூண்டவேண்டும் என்ற ஆர்வத்தில் இணையத்தை கதையின் பின்புலமாகக் கொண்டு எழுதியதுதான் (2003இல்) 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்ற தொடர்கதையாகும்.

இவ்வாறுதான் எனது பெரும்பான்மையான ஆக்கங்கள் அமைந்துள்ளன என நினைக்கிறேன். 

Edited by sOliyAn

ஆஸ்தான கவிஞர்களும், போராளிகள் எழுதின கவிதைகள் தரமானவையில்லை என்று கூறிவிட்டு பின்பு தாங்கள் எழுதிய கவிதைகளில் அவைகளை போட்டு எழுதியவைகளை விட சுமொவிடம் நேரடியாக சொன்னது பரவாயில்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்தான கவிஞர்களும், போராளிகள் எழுதின கவிதைகள் தரமானவையில்லை என்று கூறிவிட்டு பின்பு தாங்கள் எழுதிய கவிதைகளில் அவைகளை போட்டு எழுதியவைகளை விட சுமொவிடம் நேரடியாக சொன்னது பரவாயில்லை. :D

அப்ப உங்களுக்கும் ஆரெண்டு தெரிஞ்சு போச்சே

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லுங்கோ உறவுகளே! மெசொபொத்தேமியா சுமேரியரின் இத் திரியை, இன்றுவரை விழுந்து, விழுந்து பார்த்துப், படித்து, பின்னூட்டமும் எழுதிய அனைத்து உறவுகளையும் கேட்கிறேன்!. சுமேரியரின் இத்திரி ஒரு நவீனம் படிக்கும் உணர்வை ஏற்படுத்தவில்லையா?. :rolleyes: :rolleyes:

அதைவிட

நீங்கள் ஒரு முடிவோட புறப்பட்டிருப்பது தெரிகிறது.... :lol:

வெல்ல  வாழ்த்துக்கள் :D

அப்ப உங்களுக்கும் ஆரெண்டு தெரிஞ்சு போச்சே

பெயரைச் சொல்லவா அது ஞாயமாகுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா  இவ்வளவு மினக்கிட்டிருக்கத்தேவையில்லை :(

அவர் ஒரு தமிழர் என்று மட்டும்  எழுதியிருக்கலாம்

அதேநேரம்

படைப்பாளிகள் எல்லோருமே அப்படித்தான்

ஏன்  நாளை  சுமே அக்கா  வளர்ந்தாலும்

இப்படித்தான் இருக்கப்போகின்றார்.. :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் சிக்கல்தான்  :) . எவ்வாறான வாசகர்களைத் திருப்திப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உங்களால் தீர்மானிக்க முடிந்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பிரிவு வாசகர்களுக்காகத்தான் இருக்கும். ஒரு பிரச்சார ரீதியான அல்லது இலக்கு நோக்கிய ஆக்கத்துக்கு வேண்டுமானால் இந்தத் தீர்மானம் உடன்பாடாக இருப்பினும், அது தனிப்பட்ட முறையில் உங்களைத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகமே!!  :D

எனது கதை எழுதும் அனுபவத்தை சுருக்கமாகக் கூறுவதானால்… நான் தாயகத்தில் உள்ளபோது பலரது கதைகளை, நாவல்களை வாசித்தாலும்… சாண்டில்யன், பாலகுமாரன் மற்றும் தாயக பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் (தற்போது எனது நகரத்தில்தான் வசிக்கிறார்) ஆகியோரது கதை சொல்லும் போக்கை கதைகளுக்கு ஏற்ப பின்பற்ற முயற்சி செய்வதுண்டு. 

என்னை கவரும் ஒரு சம்பவம்.. அதை எடுத்துக் கொண்டு சூழ்நிலையின் விபரிப்பு.. முக்கிய பாத்திரங்களின் அறிமுகம்.. அவைகள் உரையாடும்போது அல்லது நகரும்போது தேவைக்கேற்ப காலத்தோடு ஒட்டிய எனது பார்வை அல்லது கருத்து செருகல்… முடிவு வேண்டுமானால் குறிப்பிட்ட சம்பவமாகவே இருக்கலாம்..  :) நான் பொதுவாகவே வாசகருக்காக எழுதுவதில்லை.. எனக்காக எழுதிவிட்டு வாசகரது அபிப்பிராயத்துக்கு ஏங்குவதுதான் நடைமுறை உண்மை. ஒரு சில கதைகள் விதிவிலக்காக இருக்கலாம்.. அந்த வகையில் இதே யாழ் களத்தில் இளைஞர்களது தமிழ் கதை வாசிப்பார்வத்தை தூண்டவேண்டும் என்ற ஆர்வத்தில் இணையத்தை கதையின் பின்புலமாகக் கொண்டு எழுதியதுதான் (2003இல்) 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்ற தொடர்கதையாகும்.

இவ்வாறுதான் எனது பெரும்பான்மையான ஆக்கங்கள் அமைந்துள்ளன என நினைக்கிறேன். 

நீங்கள் கைதேர்ந்த எழுத்தாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயரைச் சொல்லவா அது ஞாயமாகுமா? :D

பெயரைச் சொல்லிப் பழியை என்ற தலையில போடப் பாக்கிறியளோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா  இவ்வளவு மினக்கிட்டிருக்கத்தேவையில்லை :(

அவர் ஒரு தமிழர் என்று மட்டும்  எழுதியிருக்கலாம்

அதேநேரம்

படைப்பாளிகள் எல்லோருமே அப்படித்தான்

ஏன்  நாளை  சுமே அக்கா  வளர்ந்தாலும்

இப்படித்தான் இருக்கப்போகின்றார்.. :(  :(

அண்ணா நீங்கள் உங்களைப் போல் மற்றவரையும் எண்ணுவது தவறு. எனக்கு கதை எழுதுவதுதான் புதிதே அன்றி புகழ் என்னும் உச்சிவரை எத்தனையோ விடயங்களில் சென்று வந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் மாறியதில்லை. அது என்னுடன் பழகுபவர்களுக்கு நன்கு தெரியும். எப்போதும் நான் இயல்பிலிருந்து மாறுவதில்லை யாருக்காகவும், எதற்காகவும்.

உண்மையைச் சொல்லுங்கோ உறவுகளே! மெசொபொத்தேமியா சுமேரியரின் இத் திரியை, இன்றுவரை விழுந்து, விழுந்து பார்த்துப், படித்து, பின்னூட்டமும் எழுதிய அனைத்து உறவுகளையும் கேட்கிறேன்!. சுமேரியரின் இத்திரி ஒரு நவீனம் படிக்கும் உணர்வை ஏற்படுத்தவில்லையா?. :rolleyes: :rolleyes:

எனது கொள்கை பரப்புச் செயலாளராக பாஞ்சை நியமிக்கிறேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்கள் உங்களைப் போல் மற்றவரையும் எண்ணுவது தவறு. எனக்கு கதை எழுதுவதுதான் புதிதே அன்றி

புகழ் என்னும் உச்சிவரை எத்தனையோ விடயங்களில் சென்று வந்திருக்கிறேன்.

ஆனால் எப்போதும் மாறியதில்லை.

அது என்னுடன் பழகுபவர்களுக்கு நன்கு தெரியும்.

எப்போதும் நான் இயல்பிலிருந்து மாறுவதில்லை யாருக்காகவும், எதற்காகவும்.

உண்மைதான்

ஆனால் இதில்தான் பிரச்சினை

இவற்றையெல்லாம்

நாங்கள்

மக்கள்

வாசகர்கள்   சொல்லணும் :D 

இதை விளங்கிக்கொண்டால் எல்லாமே  சுபமாக  முடியும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

ஆனால் இதில்தான் பிரச்சினை

இவற்றையெல்லாம்

நாங்கள்

மக்கள்

வாசகர்கள்   சொல்லணும் :D 

இதை விளங்கிக்கொண்டால் எல்லாமே  சுபமாக  முடியும் :D

இனி உங்களுக்கு நின்மதியான நித்திரை வரும் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.