Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவனையே பட்டத்தில் வீடியோ கமராவுடன் பறக்கவிட்டுள்ளார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் சிறுவனையே பட்டத்தில் வீடியோ கமராவுடன் பறக்கவிட்டுள்ளார்கள்.

 

ஊரில் நடக்கும் விளையாட்டுக்கள்

 

மிக ஆபத்தான செயல்....முட்டாள் பெடியள்....ஆனால் அவர்களின் வயதில் எல்லாரும் இதை தான் செய்திருப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனையும்... தூக்கிக் கொண்டு பட்டம் மேலே பற‌க்கின்றது என்றால்,
எவ்வளவு பெரிய பட்டமாகவும், மொத்தக் கயிறாகவும் இருந்திருக்க வேண்டும்.
கீழே இருந்து இன்னுமொரு வீடியோவால்.. சிறுவன் பறக்கும் காட்சியையும் படம் பிடித்திருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

பட்டங்கள் பொதுவாகச் 'சமநிlலைப்படுத்தலில்' தான் பறக்கிறது! இவற்றுக்கு 'மொச்சை' கட்டுவது, மிகவும் 'நிபுணத்துவம்' நிறைந்த வேலை என்று நினைக்கிறேன்!

 

பெடியையும் வச்சுத் தான் சமநிலைப் படுத்தியிருப்பார்கள் என்பது எனது கருத்தாகும்!

 

மிகவும் ஆபத்தான விளையாட்டு! :o

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டங்கள் பொதுவாகச் 'சமநிlலைப்படுத்தலில்' தான் பறக்கிறது! இவற்றுக்கு 'மொச்சை' கட்டுவது, மிகவும் 'நிபுணத்துவம்' நிறைந்த வேலை என்று நினைக்கிறேன்!

 

பெடியையும் வச்சுத் தான் சமநிலைப் படுத்தியிருப்பார்கள் என்பது எனது கருத்தாகும்!

 

மிகவும் ஆபத்தான விளையாட்டு! :o

மன்னிக்கவும் புங்கை யூரன் இது பட்டம் தொடுத்து விடும் முறைமூலம்  சிறுவனை மேலே தூக்கியுள்ளார்கள் அம்முறை மூலமே லைற்பல்பு பட்டங்கள் பறக்க விடுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுவதற்கு கடினமான பட்டங்களை இந்த முறையில் ஏற்றுவார்கள் (கொக்கு, பிராந்து).. பையன் விஞ்ஞானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோய்ட்டான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தையின் உயிரோடு விளையாடும் இவர்களை மரத்தில் கட்டி வைத்துச் சாத்த வேண்டும். இதில் தவறுதலாக பட்டம் அறுந்தாலோ, அல்லது அதில் துவாரம் ஏற்பட்டாலோ குழந்தையின் கதி??

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டு செய்திருந்தால் வரவேற்கத்தக்க முயற்சி. இதனையே வெள்ளைக்காரன் செய்தால்.. ஆகோ.. ஓகோ என்று புகழும் நம்மவர்கள்.. நம்ம குட்டீஸ் செய்தால்.. ஆயிரம் நொட்டை. ஆனாலும்.. பாதுகாப்புக்கு முன்னுரிமை அவசியம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பதில் வரும் என எதிர்பார்த்தேன். வெள்ளைக்காரன் கயிற்றில் நடந்தால் கூட அதில் இருந்து தவறி விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வான். ஆனால் இப்படி பாதுகாப்பு ஏற்பாடே இல்லாமல் குழந்தையை அனுப்புவது எவ்வளவு முட்டாள்தனம். குறைந்தபட்சம் குழந்தை கீழே விழுந்தால் கூட அவனை ஏந்தக் கூட கீழே ஒருவரையும் காண முடியவில்லை. அதை எப்படி வரவேற்பது. இப்படியான சம்பவங்களால் இழக்கப்படப்போது தமிழனக் குழந்தை. இதில் பெருமையை விட கவலை தான் மிஞ்சும்....

  • கருத்துக்கள உறவுகள்


32,920,086

 
 

pixel-vfl3z5WfW.gif 221,888     pixel-vfl3z5WfW.gif 4,398

  • கருத்துக்கள உறவுகள்

ஓ. அப்படி எனில் குழந்தைக்குப் பறக்கும் பயிற்சி கொடுத்து விட்டுத் தான் பட்டத்தில் ஏற்றி விட்டார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மட்டுமே புத்திசாலிகள் என்று நினைக்கப்படாது. ரிஸ்க் எடுக்கிறவனுக்கும்.. மண்டைக்குள்ள சரக்கிருக்கும்..! அதையும் தாண்டி சில பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வலியுறுத்துவதும் கட்டாயம். ஆனால்.. விபத்து என்ற ஒரு பயத்தைக் காட்டி.. திறன் வளர்ப்பதை மட்டம் தட்டுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. :)

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்தான் ஞாபகத்திற்கு வருகிறார்...... 

 

அந்தக் காலத்தில் ரைட் சகோதரர்கள் பறப்பு முயற்சியில் ஈடுபடும்போது இது உயிராபத்து என்று பயந்திருந்தால் இன்று நாங்கள் இப்படி கண்டங்களுக்குக் கண்டம் பறந்திருக்கமாட்டோம்...

 

இருப்பினும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுதான் பறப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்......

  • கருத்துக்கள உறவுகள்

உரிய பாதுகாப்பு இல்லாமல் பறப்பது வரவேற்கத்தக்கதல்ல.துணிந்தவன் சாதிப்பான்! பயந்தவன் வாதிப்பான்!இருப்பினும் பாதுகப்பு அவசியம்.

நாங்கள் மட்டுமே புத்திசாலிகள் என்று நினைக்கப்படாது. ரிஸ்க் எடுக்கிறவனுக்கும்.. மண்டைக்குள்ள சரக்கிருக்கும்..! அதையும் தாண்டி சில பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வலியுறுத்துவதும் கட்டாயம். ஆனால்.. விபத்து என்ற ஒரு பயத்தைக் காட்டி.. திறன் வளர்ப்பதை மட்டம் தட்டுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. :)

 

நெடுக்ஸ் உங்களுக்கு ஒரு பச்சை. தங்கள் கருத்துக்கு நன்றி. இக்கருத்தில் 100 வீதம் நான் உங்கள் பக்கம். :)

  • கருத்துக்கள உறவுகள்

Tamil eelam national leder starting air the tiger event

"டேய் விட்றா கொஞ்ச நேரம் நிக்க போறானாம்"

 

பெத்த தாயைவிட பாசமான வசனம். 

 

ஆமிக்காறன் கண்டிருந்தால் Spy பண்ணுறாங்கள் என்டுட்டு இழுத்திருப்பான்.  

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் துணிச்சலை மெச்சாமல் இருக்க முடியாது ....... ஆனால் மிகவும் ஆபத்தானது  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புதினம் என்ற மெயில் அனுப்பியதைதான் இங்கு இனைத்தேன் இனையத்தில் மேலும் தேடிய போது உரிமையாளர்கள் கண்டு பிடிக்கபட்டார்கள். :)

575750_428491307252458_1283499531_n.jpg


1452427_428457877255801_643184099_n.jpg


893567_428457533922502_2021940466_o.jpg


1004918_445838752184380_1265015911_n.jpg


பொலிகண்டியின் பாரம் பரிய கலைகளில் ஒன்றான பட்டக்கலை தற்பொழுது ஆலடி சந்தி மைதான நிலப்பரப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நடைபெற்று வருகின்றது.... அதற்கான புகைப்படங்கள் இங்கே.....


1545623_445838755517713_975659115_n.jpg


அவர்களுடைய முகநூல் விலாசம்https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/338148932953363

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லோருக்கும் பட்டம் கட்டித் தருகின்றேன். அதில் உங்களின் பிள்ளைகள், உறவுக்குழந்தைகளைக் கட்டிப் பறக்க விட்டு வீரம் பேசுங்கள்.

இவர்களிடம் ஆகக் குறைந்தது ஒரு முதலுதவிப்பெட்டியாவது கைவசம் இருக்கின்றதா? கயிறும் பட்டமும் நம்பகத்தன்மையுடையது என்று யாராவது துறைசார்ந்தவர்கள் சோதித்தார்களா?

 

தற்பாதுகாப்பற்ற எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கதல்ல.

 

இக் கருத்தின் நோக்கம் இவ்வாறான முயற்ச்சிகளை எதிர்ப்தல்ல மாறாக இம் முயற்சிகளில் பாதுகாப்பு அவசியம் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

893567_428457533922502_2021940466_o.jpg

அட... சாமி தூக்கிறதும், டபிள் ஆட்கள் தூக்குகின்றார்கள்.
பொலிகண்டி ஆட்களை புரியவே முடியலைப்பா.... :D

அந்த பட்டதில் பறந்த சிறு பையன்கள் (பெரியவர்களுக்கு தெரியாமல் செய்திருக்கலாம்) என்று இனி செய்யாதே என்று சொல்லலாம்...இந்த சூரன் தூக்கிகளை என்ன செய்வது....

எல்லாருக்கும் சாகசம் செய்ய நிறைய ஆசை வந்து விட்டது..... ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை உணர்ந்து விட்டு தான் இறங்குகிறார்களா என்பது தான் கவலை தரும் விடயம்....

 

பட்டம் ஏற்றி விளையாடுவது ஒரு வீரவிளையாட்டு ..எத்தனை வேலி பாய்ந்து...அடுத்தவன் பட்டங்களை சுட்டு :) - மார்கழி விடுமுறையில் வீடுவருவதே..உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் தான் :icon_mrgreen:

 

 

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.