Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலைமாது விடுத்த கோரிக்கை..! (கவிஞர்:தமிழ்தாசன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன்.

 

 

விலைமாது விடுத்த கோரிக்கை..!

ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

கவிஞர்:தமிழ்தாசன்

கள்ளன் பசியிற்க்கு திருடுவான்.

 

நீதிபதி அவனுக்கு தண்டணை வழங்கமுதல் தனது புலமை நிறைந்த வார்த்தைகளால் பலவாறாக திட்டிவிட்டு  தண்டிக்கச் சொல்வார். 

 

தமிழ்மக்கள் தமது விடுதலைக்காக போராடினார்கள். குற்றம் காண் போர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விலை மாது ஒருத்தி,

விற்பனைக்கு இருக்கிறாள் என்று,

விளம்பரம் ஒட்டியவள்,

நீ தானே பெண்ணே!

 

வல்லூறுகளை,

வாவென்று அழைத்து,

விருந்து வைத்தவள் நீ,

வீணாக அரற்றுவது,

ஏன் என்று புரியவில்லை!

 

வாடகை பேசிய பின்,

வலிக்கிறது என்கிறாய்!

 

இரைதேடும் தாய்க்கோழி,

கேரல் குரல் எழுப்ப,,

கோழிக்குஞ்சுகள்,

சிறகுகளில் அணையும்!

கட்டுக்குள் வராத,

கோழிக்குஞ்சைத் தானே,

வல்லூறு ,கவர்கிறது ?

 

வேறு ஒன்றுமில்லை!

உனது மனச்சாட்சி,

உன்னை உறுத்துகின்றது!

உனது மகளை இழுத்து,

நியாயம் கற்பிக்கிறாய்!

 

கீறல் விழுந்த,

ஒரு இசைதட்டைப்போல.

திரும்பத் திரும்ப,

ஒரே வரிகளைப் பாடுகின்றாய்!

 

அதுவும்,

அனுதாபம் தேடும்,

முகாரியாய் ஒலிக்கின்றது! :o

 

நல்ல ஒரு கருத்துப் பொதிந்த 'கவிதையை இணைத்தமைக்கு நன்றிகள், சகாறா!

 

சேறு கண்ட இடத்தில மிதித்துத், தண்ணீர் கண்ட இடத்தில கழுவிச் செல்வது மனிதர்களின் குணம்!

 

இவளும் அதைத் தானே செய்கிறாள்! :o

 

மதுபான விற்பனையாளன், நான் குற்றவாளியல்ல, அதைப் பணம் கொடுத்து வாங்கியவன் தான் குற்றவாளி என்று சொல்வது போலவல்லவா உள்ளது இவளது நியாயம்? கடை இல்லாவிட்டால், அவன் என் குடிக்கப் போகிறான்?

 

சும்மா போனவளை இழுத்து, ஆண்கள் அவளைக் காயப்படுத்தினால் தவறு 'ஆண்களில்' உண்டு தான்!

 

சும்மா போற 'ஆண்களை' இவள் தானே இழுக்கிறாள்!

 

இவளுக்கும், இவளைக் குதறியவர்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கின்றீர்கள்?

 

இவளைப் போலவே அவர்களுக்கும் காமாந்திரக்காரன், பொம்பிளை பொறுக்கி, ஸ்திரீ லோலன், என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றன! :icon_idea:  

 

 

Edited by புங்கையூரன்

ஏன் அந்தப் பெண்ணுக்கு வேறை வழி இல்லையா உழைப்பதற்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறி வாழ்க்கையில்.. சுகமாக காசு உழைக்க.. காசுக்கு உடலை வித்துக் கொண்டு.. அதில கவிதை  வேற. இந்தப் பெண்களுக்கு பொதுமன்னிப்பளித்து.. நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தால் எத்தனை பேர் சமூக வாழ்க்கைக்குத் திரும்புவினம்..???! ஆண்களைத் திட்டி.. கவிதை எழுதிறது சுலபம்.. இந்தப் பெண்களின் புத்தியில் உரைக்க யாரும் கவிதை எழுதினம் இல்லையே.. ஏன்..???! கவிதை எழுதிறவனுக்கும் எழுதிறவளுக்கும்.. இவள் இப்படி சமூகத்தின் இருந்தால் தானே வரிகளில் தன் ஆபாச வித்தைகளை குவித்து.. வாசகர்களைக் கவர முடியும்.  :lol:  :)


இது கூட எழுத்து விபச்சாரம் தான். விபச்சாரத்துக்கு ஒரு விளம்பரம் தான். இதுக்கும் கீழ் வரும் ஐரம் சாங்குக்கும் இடையில.. பெரிய வித்தியாசம் இல்லை. :)


http://youtu.be/7zxmFHI9HYY

Edited by nedukkalapoovan

நெடுக அண்ணே உங்க ரசனையே வேறுதான் போங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன ரசிக்கக் கிடக்குது. உந்த கண்றாவியை எத்தின வடிவத்தில எத்தினை காலமா எழுதித் தள்ளுறாங்க. அதுவோ.. நீ சொல்லுறதைச் சொல்லு.. நான் செய்யுறதை செய்யுறன் என்ற கணக்கா.. முடிவில்லாமல் தொடர்ந்துக்கிடே இருக்குது. இவங்கட இந்த முடிவில்லாத.. கூத்தைப் பார்த்துத்தான் நெஞ்சு பொறுக்குதில்லை. விபச்சாரிகளோ....  நல்லா கையும் காசுமா..  மேனி மிணிக்கிட்டு.. எயிட்ஸும் பரப்பிக்கிட்டு.. திரியுதுங்க.  :)  :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?


ஏனென்றால் பெண்கள் சீரியலுடன் நின்றுகொள்வதால் செய்திகள் ஆண்களுக்காக எழுதப்படுகின்றன. :huh::D

அது அவளது தொழில். அவளது உடம்பு முழுமையாக அவளுக்கு சொந்தமானது. அதன் மேல் அவளுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது அதனடிப்படையில் அதை வைத்த தொழில் செய்வதும் செய்யாமல் விடுவதும் அவளது தனிப்பட்ட விடயம்.

 

சில நாடுகளில் சட்டம் தடுக்கின்றது. சில நாடுகளில் சட்டம் பாலியல் தொழிலை தடைசெய்யவில்லை. சில நாடுகளில் சட்டம் கண்டும் காணாததுபோல் இளகு நிலையை கடைப்பிடிக்கின்றது. இடங்கள் மற்றும் சூழ்நிலைக்கேப்ப எந்தத்தொழிலிலும் ஆபத்தும் வலிகளும் உண்டு. சட்டத்திற்கு அப்பாற்பட்ட இடங்களில் சிக்ல்கள் அதிகம்.

 

தொழில் என்று வந்தபின் அதில் ஒரு நியாயம் இருந்தே ஆகவேண்டும். பணம் வாங்கினால் பொருள் கொடுப்பதுபோல் சந்தோசத்தை மனமுவந்த கொடுப்பதே நியாயம். இல்லையேல் அந்தத் தொழிலை செய்ய அவருக்கு தகுதியில்லை. பாலியல் தொழிலுக்கு தகுதியில்லாத ஒருவனின் புலம்பலை கற்பனையில் என்னொருவன் இக்கவிதையில் புலம்புகின்றான்.

 

பொருள் அதிகமாக தேவைப்படும் இடத்தில் விற்பனைக்கு சொற்ப பொருட்களே இருந்தால் நுகர்வோர் பொருளைப் பெறுவதற்கு நெருக்கடிகளை கொடுக்கத்தான் செய்வார்கள். ஆகவே பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒன்றே இவ்வாறான புலம்பலுக்கு தீர்வு. வேறெந்தத் தீர்வும் இங்கே நடைமுறைக்கு சாத்தியப்படப்போவதில்லை.

 

பிரச்சனை பாலியல் தொழில் செய்வோரிடமோ இல்லை நுகர்வோரிடமோ இல்லை அதை வெளியல் இருந்து வேடிக்கைப் பார்ப்போரிடம் தான் உள்ளது. அவர்களே கலாச்சாரம் பண்பாடு அது இது என்று அற்த்தமற்று பிதற்றி தனிமனித சுதந்திரங்களில் தலையிட்டு சமூகத்தை சாக்கடையாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தாசனை புங்கை ஒரு அடியில் நோக் அவுட் ஆக்கிவிட்டார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் தேடலில் கொஞ்சம் அமர்ந்ததில் ஒரு சின்னதான பதிவு கவிராயர்களின் பார்வையில் விலைராணிகள் என்ற பதிவு கண்களில் தென்பட்டது.. சரி அதனையும் இணைப்போம் என்று கொண்டாந்து போடுறேன் அதையும் வாசியுங்கோ கூட்டாளிகளே...

 

கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்

 

 

அப்துல் கையூம்

 

 

விலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்?

 

எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை,

 

“பொன்னடங்கிய பெட்டகம் கனி

போல்அடங்கிய மார்பகம்

மின்னடங்கிய மெல்லிடை அதன்

மேலடங்கிய ஆலயம்”

 

என்று வருணனை செய்வதோடு நிற்காமல், ஒரு படி மேலே சென்று

 

“நெய்திரண்டன மேனியில் சில

நேரம்நின்றன என்விழி

கொய்துகொண்டது கைவழி கலை

கூடிநின்றது ‘தாய்க்’ கிளி”

 

என்று சொற்சிலம்பம் ஆடுகிறார்.

 

‘மறைக்க வேண்டியவற்றை எல்லாம் மறைக்காமல் எழுதுகிறோமே அதனால் நம் மதிப்பு பாழாகுமே’ என்றெல்லாம் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

 

ஆசைப்பட்டவளை அடைவதற்கு அருந்தமிழையே ஆயுதமாக்கிய இலக்கிய கர்த்தாக்களை என்னவென்றுத் திட்டித் தீர்ப்பது?

காளமேகப்புலவர் இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூரில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டாராம். இவரது ஆசைக்கு அவள் இணங்க மறுத்ததால், அவள் உதாசீனப் படுத்தி அறம் ஒன்றையும் பாடி விட்டார்.

 

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்

வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்

முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை

குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.” என்று.

 

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடித் தொலைக்க, பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு சம்மதம் தெரிவிக்க, உடனே காளமேகம்

 

“நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்

இஞ்சிகுடி தன்னினும்வந்து எய்வானோ - விஞ்சு

முலைச்சிகரத் தால்அழுத்தி முத்தமிட்டுச் சற்றே

கலைச்சிகரத் தால்அணைத்தக் கால்”.

 

என்று ‘பெரிய மனது’ பண்ணி, ‘அந்தர் பல்டி’யடித்து அவளைப் புகழ்ந்து பாடினாராம் கவிஞர் காளமேகம்.

 

புதுக்கவிதை புறப்பெடுத்த யுகத்தில்

 

'நிர்வாணத்தை விற்கிறோம்

ஆடை வாங்குவதற்காக'

 

என்ற நா.காமராசனின் வரிகள் இலக்கிய வட்டத்தில் பெரும் பரபரப்பையும் வாசகர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது.

 

ராட்சஸ ராட்டினத்தில் அமர்ந்து சவாரி செய்கையில், மேலிருந்து கீழ் இறங்கும்போது, உள்ளுக்குள் ‘கிலுக்’ என்ற அதிர்ச்சியோடு தூக்கி வாரிப் போடும். சில கவிதை வரிகளும் இப்படித்தான். நம் மனதில் சொல்ல முடியாத ஒரு விளைவை நிகழ்த்தும்.

 

புதிய மாதவியின் வரிகளைப் படிக்கையில் காமப்பித்து பிடித்த ஆண்களை சம்மட்டியால் அடிப்பதைப் போலிருக்கிறது.

 

'பசியை

அவள் சாப்பிட்டாள்

பசியின் உடலை

அவன்

பசி சாப்பிட்டது'

 

என்கிறார் இந்தப் பெண் கவிஞர்.

 

“விலங்குகளை விடக் கேவலமாகி இறைவனின் உயர்ந்த படைப்பான பெண்ணினத்தை காம இச்சையோடு பார்ப்பாரேயானல் அந்த ஆணினம் அடியோடு அழிந்து விடுவதே மேல் என்று நான் நினைப்பேன்” என்று எழுதுகிறார் மகாத்மா காந்தியடிகள்.

 

கவிக்கோ அப்துல் ரகுமான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தன்னிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்பதே அந்த போட்டி.

முதலாம் மாணவன் “பால்வினை நோய் விருட்சம்” என்ற சொற்றொடரை வழங்க, இரண்டாமவன் “சுக கிடங்கின் நித்திரை” என்று கூற

மூன்றாம் மாணவன் “வாடகை மனைவியின் உறக்கம்” என்று கூறியிருக்கிறான்.

 

இறுதியான ஒரு மாணவன் சொன்ன வாசகம் : “இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்”. பரிசு பெற்ற வாசகம் இதுதான்.

 

போகத்திற்காக தேகம் விலை பேசப்படுவது மாபெரும் சோகம். இச்சைக்காக பெண்ணினத்தையே கொச்சைப் படுத்தும் அவலம் இது. உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. காசுக்காக மாசுபடுகிறது இங்கே கற்பு. ..“கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம், கடைதெருவில் விற்குதடா அய்யோ பாவம்” என்ற திரைப்படப் பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

 

இரவுக்குப்பின்தான் விடியல் வரும். இவர்களுக்கோ இரவில்தான் விடியல். படுக்கை அறையை மாத்திரமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே இவர்கள் இருட்டாக்கிக் கொள்கிறார்கள்.

“வாழ்க்கையின் விடியலுக்காக

இரவை எதிர்நோக்கி

காத்திருக்கும்

அல்லி மலர்கள்”

 

என்று இவர்களை வருணிக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். அல்லி மலர்வது ஆகாயம் கருக்கையில்தானே?

 

கவிஞர் மு.மேத்தாவின் சிந்தனை இன்னும் சற்று ஊடுருவி அவர்களின் கருப்பை வரை சென்று விடுகிறது.

 

“இரைப்பை நிரப்ப

கருப்பையை

பட்டினியிடும் மாதர்” என்று பாடுகிறார்.

 

பிள்ளைப்பேறு என்பது பெரும் பேறு. தன் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக தன் வயிற்றுச் சுமையை ஏற்க மறுக்கிறார்கள் இந்தச் சுமைதாங்கிகள்.

 

Great men think alike என்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் சிந்தனையும் கவிஞர் மு.மேத்தாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது.

 

“இரைப்பை நிரப்பவா

கருப்பையை பட்டினியிட்டாய்?”

 

என்று கவிஞர் வினா தொடுக்க அதற்கு பால்வினையாளி பதில் சொல்கிறாள்.

 

சில உறுப்புகள் அனாவசியம்

குடல்வால்,

இரண்டாம் கிட்னி,

ஆறாம் விரல்,

எனக்குக் கருப்பை

 

ஆஹா.. என்ன ஓர் அற்புதமான சிந்தனை! வெறுப்பு மிகுதியால் கருப்பையையே உபயோகமில்லா உறுப்பு என்கிறாள் அவள்.

 

தனக்குள்ள இலக்கியப் பரிச்சயத்தை வெளிக்காட்ட குறள் ஒன்றையும் அவள் திரித்துக் கூறுகிறாளாம்.

 

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்

உச்சத்தாற் காணப்படும்”.

 

“எச்ச”த்தை “உச்ச”மாக்கி கூறும் போதும் சரி , கவிஞர் அவளை “எடை பார்க்கும் எந்திரம்” என்று வருணிக்கும்போதும் சரி, நமக்கு விரசம் தோன்றுவதில்லை. மாறாக அவள் மீது பரிவும், பச்சாதாபமுமே ஏற்படுகிறது.

 

விலைமாதர் உருவாவதற்கு காரணம்

 

செல்வத்தின் எச்சமும்

வறுமையின் உச்சமும்

 

என்று அதனைத் தொடர்ந்து வரும் வைரமுத்துவின் வரிகள் அதற்கு சான்று பகர்கிறது.

 

பால்வினையாளியின் தொழில் எதுநாள் வரைக்கும் நீடிக்கிறது என்றால்

 

திருமணம் – எய்ட்ஸ்

இரண்டிலொன்று முந்தும்வரை.. .. என்கிறார்.

 

மணம் அல்லது மரணம் இதில்தான் முடிகிறதாம். வாழ்க்கை ஒன்று ஆனந்தமாகிறது அல்லது அஸ்தமனமாகிறது. ஒரு படத்தில் எழுத்தாளராக வரும் பார்த்திபன் விபச்சாரம் பண்ணும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்வார். நிஜ வாழ்க்கையில் எத்தனை இளைஞர்கள் இதுபோல் முன்வருவார்கள் என்பதைச் சொல்லத் தெரியவில்லை.

 

முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமக்கும் மாதருக்கு இயற்கை ஏற்றமுடன் அளிக்கும் பதவி உயர்வு “தாய்” என்ற ஒப்பற்ற ஸ்தானம். இதை அழகாகச் சொல்கிறார் பெண்கவிஞர் புதிய மாதவி.

 

'அவள்

உங்களுக்காகச் சுமப்பது

வெறும் நீர்க்குடமல்ல

வாழ்க்கையின் உயிர்க்குடம்' என்று.

 

விலைமாதர்கள் தொடர்பினால் சீரழிந்துப்போகும் சமுதாயத்தை எண்ணி “சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்” என்ற நூலில் கண்ணீர் வடிக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருடைய கவலையெல்லாம் நாளைய நட்சத்திரங்களாக உருவாகப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியதாகவே இருக்கிறது

 

“இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?

 

ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?

 

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள் எட்டுகின்றன!

 

அடிப் பாவிப் பெண்ணே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா?

 

வைரமுத்துவின் நியாயமான ஆதங்கம் எழுதுகோலை ஆயுதமாக ஏந்தி இலக்கிய உலகில் உலா வரும் ஒட்டுமொத்த கவிராஜர்களின் ஏகோபித்தக் குரலாக இங்கே எதிரொலிக்கிறது.

 

 

மூலம் - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61001011&edition_id=20100101&format=html

Edited by வல்வை சகாறா

பட்டவர்களுக்கே அதன் வலிகள் உணரப்படும் . இணைப்புக்கு மிக்க நன்றி வல்வை சகாரா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலகருத்துக்களுக்கு ‘மெளனம்’ சாதிப்பதே சிறந்தது. அதில் ஒன்று இதுவும். ‘அரங்கேற்றம்’ என்ற ‘இயக்குனர் சிகரத்தின் படம் பார்க்கும்வரை ‘எனக்கும் ‘அருவருப்பு ஊட்டிய வார்த்தை ‘விபச்சாரிகள்’...!

 

நெடுக்ஸ் அண்ணை உங்களிடம் ஒரு கேள்வி...

 

அவர்கள் சமூக வாழ்க்கைக்கு வந்தால் இந்த சமூகம் அவர்களை வாழவிடுமா?!......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன ரசிக்கக் கிடக்குது. உந்த கண்றாவியை எத்தின வடிவத்தில எத்தினை காலமா எழுதித் தள்ளுறாங்க. அதுவோ.. நீ சொல்லுறதைச் சொல்லு.. நான் செய்யுறதை செய்யுறன் என்ற கணக்கா.. முடிவில்லாமல் தொடர்ந்துக்கிடே இருக்குது. இவங்கட இந்த முடிவில்லாத.. கூத்தைப் பார்த்துத்தான் நெஞ்சு பொறுக்குதில்லை. விபச்சாரிகளோ....  நல்லா கையும் காசுமா..  மேனி மிணிக்கிட்டு.. எயிட்ஸும் பரப்பிக்கிட்டு.. திரியுதுங்க.  :)  :lol:

 

அதுகளிட்டை போற உங்கட பிரதர்ஸ்மாரையும் ஒரு தட்டு தட்டி போக வேண்டாமெண்டு சொல்லுங்கோ நெடுக்கு சாமி :D .......... கடைக்கு சனம் போகாட்டி கடைக்காரியும் வேறை தொழிலை தேடத்தொடங்கீடுவாள் எல்லே... :icon_idea:

 

இணைப்புகளுக்கு நன்றி சகாறா....

  • கருத்துக்கள உறவுகள்
விபச்சாரர்
 
அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெள்கீக விஷயங்க்ள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில் பூரித்துப்போனாள்
 
"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச் சொன்னதும் கூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு எப்படி யிருந்தாலும் சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்
 
"திருமணத்தில் சாஸ்திர சம்பிராதயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பது கூட தாத்தா பாட்டிக்காதத்தான்
எனக்கு துளி கூட இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றார்
அவளுக்கும் இது சரியெனததான் பட்டது 
 
"திருமணமண்டபம் நல்லதாய் இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்" என்றார்
அதுகூட அவளுக்கு ஏற்கும்படியாகத்தானிருந்தது
 
சீர்வரிசையில் ஒரு சிறுகுறையொன்று
அவரது ஒன்று விட்ட மாமன் 
மண்டபத்தையே உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும் இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல் 
எனக்காகவேனும் இதை மட்டும் செய்துகொடுங்கள்"என்றார்
அவ்ளுக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை
 
கல்யாண அமர்க்களங்களெல்லாம் முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைற்யினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்" எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்
 
அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச் சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில் நியூட்டனால் கண்டுபிடிக்க முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்
 
"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தர எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது
 
அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை 
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ? தவறல்லவா"என்றாள்
 
தமிழச்சியின் கூற்று சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி சேர்த்து
விபச்சாரர் எனச் சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய் சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்
 
வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
தனது முதல் முத்தத்தில்
தனது முதல் பேரைணைப்பில்
அவள் நிலைகுலைந்து போனாள் என
ஆண்மைகுரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான் "விபச்சாரர்"

முதலாவது நியாயம் கேட்கும் கவிதை.

 

விபச்சாரர் - ஒரு ஆப்பிறுக்கல் கவிதை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.