Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரி  நன்றாக

நல்ல  பாதையில் நகர்கிறது

இதில் பெரும் வல்லரசுகள் எல்லாம் மோதுகின்றன

அதனால் தள்ளி  நின்று பார்ப்பதே நல்லதாக தோன்றுகிறது :D

ஆனால் இங்கு   சோழியான் குறிப்பிட்டதைப்போல

எனது மதத்தை  எவர் குற்றம் கண்டாலும்

எனது மத்தை  எவர் சிதைக்கமுற்பட்டாலும்

அதை  கடுமையாக  எதிர்ப்பவன்.........

  • Replies 254
  • Views 33k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ்சூரியன்
    தமிழ்சூரியன்

    கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்.. Welcome to our club.. :D

அதற்காக கடவுளைத் தொழாமல் இருக்க வேண்டியதில்லை. அதை ஒரு சிறந்த தியானப் பயிற்சி போல் செய்யலாம். மனதை ஒருநிலைப்படுத்தும்போது மூளையின் செயற்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது. அதற்காக இப்படித்தான் தியானம் செய்யவேண்டும் என்கிற விதிமுறைகள் ஏதுமில்லை.

ரகுநாதன்,
 
ஏன் இந்த சிங்களம், தமிழ் என்று மொழிச்சண்டை ?
 
நாம் எல்லாருமே சிங்களத்தைப் பேசி சிங்களவராய் மாறி இருக்கலாமே.
 
சிங்களம், தமிழ் இரன்டுமே சும்மா சப்தங்கள் தானே ?  

ஒரு பாதிரியார் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றால் 
அவர் கிறிஸ்தவத்தை நம்பவில்லை என்றே நான் பொருள் கொள்கிறேன்.
கிறிஸ்தவ மதத்தை முழுமையாக நம்பி அதுதான் முழுமுதல் கடவுள் என்ற பின்பே ஒருவன் பாதிரி ஆகிறான்.
அதுதான் முழுமை என்று நம்பியவன் ............. அதுதான் மனித வாழ்வை மேம்படுத்தும் என முழுமையாக நம்பியவன். சக மனிதர் எலோரும் கிறிஸ்தவத்தை பின்பற்றி சொர்கத்தை எட்ட வேண்டும் என்றே விரும்புவான். அப்படி இல்லாத பட்சத்தில் அவனுடைய பாதிரி என்ற நிலை கேள்விக்கு உள்ளாக்க பட வேண்டும்.
தேவாலயத்திலேயே வந்து நிற்கும் ஒரு சிறுவனை அவன் கிறிஸ்தவன் ஆக்கவில்லை என்றால் ...?
அது பெருத்த அயோக்கியத்தனம். தான் மட்டுமே சொர்கத்தை அடைய வேண்டும் என்ற சுய நிலை சிந்தனை.
 
இத்தனை இந்து கோவில் உள்ள நாட்டில் .............
போரால் பதிக்க பட்ட சிறுவர்களை கூட்டி  சென்று விடுவதற்கு என்று ஒரு இந்து கோவில் ஏன் இல்லை?
 
ஏன் தேவாலயத்தில் கொண்டு சென்று விடுகிறீர்கள் ?
இதனை பெரிய நல்லூர் கோவிலில் 15 சிறுவர்களை பராமரிக்க இடவசதி இல்லையா ? அல்லது மன வசதி இல்லையா ??
 
எங்களிலும் .......... எமது மதத்திலும் சேறை வாரி பூசி திரிந்து கொண்டு ............. அடுத்தவன் பற்றி கதைக்க என்ன இருக்கிறது ?
 
கிறிஸ்த்தவம் புனிதம் இல்லை.
தமிழர் மீது திணிக்க பட்ட ஒரு அடாவடி தனம்.
ஆனால் எம்மீது அழுக்கை சுமந்துகொண்டு அடுத்தவனை பற்றி பேச ஏதும் இல்லை.
எமது மதத்தில் உள்ள குறைகளை நீக்கினால் ............ யாரும் ஏன் அங்கு போக போகிறான்?
போவதற்கு வீதியை போட்டு விடுவதே நாங்கள்தான். பின்பு போனவர்களை அன்போடு அரவணைக்கிறார்கள்  என்றால் எப்படி?
அது ஒரு குற்றமா ??

கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது? எதற்காக மதம் மாற்றுவான் என்று தான் கேட்கிறேன். அந்த பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதால் விரும்பி மதம் மாறியிருக்க மாட்டார்கள். கட்டாய மதமாற்றம் என்பது அந்த பிள்ளைகளை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடியது.

ஒரு மதத்தை தலைமையாக கொண்டு தான் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களை நீ சைவமா கோவிலுக்கு போ  கிறிஸ்தவமா தேவாலயத்துக்கு போ என்று கூறி உதவி செய்வதென்பது மதத்தை பிரதிநிதிப்படுத்துவது போன்றது. அந்த பிள்ளையை யார் தேவாலாயத்தில் கொண்டு போய் விட்டார்களோ தெரியாது. அழைத்து சென்றவர்கள் அந்த பிள்ளையை சைவமா கிறிஸ்தவமா என கேட்டு விட்டு அழைத்து சென்றிருப்பார்கள் என்றுமில்லை. அல்லது தேவாலயத்தினரே அந்த பிள்ளையை அழைத்து சென்றும் இருக்கலாம்.

என்னமோ தேவாலயத்தில் தனிய கிறிஸ்தவர்களின் பணத்தில் உதவி செய்வது போல் கதைக்கிறீர்கள். வெளிநாட்டிலுள்ள சைவ சமயத்தவர் பலர் தேவாலயங்களின் மூலம் பண உதவி செய்கிறார்கள். அதை வாங்குகிறார்கள் தானே?

இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம். மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம். கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர. இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,
 
ஏன் இந்த சிங்களம், தமிழ் என்று மொழிச்சண்டை ?
 
நாம் எல்லாருமே சிங்களத்தைப் பேசி சிங்களவராய் மாறி இருக்கலாமே.
 
சிங்களம், தமிழ் இரன்டுமே சும்மா சப்தங்கள் தானே ?  

அது முடியாது ஈசன். நாங்கள் எங்களில் இதுவரை 2  லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்துவிட்டோம். கொன்றவர்களுடன் சேர்ந்திருப்பதென்பது முடியாது.

அது முடியாது ஈசன். நாங்கள் எங்களில் இதுவரை 2  லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்துவிட்டோம். கொன்றவர்களுடன் சேர்ந்திருப்பதென்பது முடியாது.

அதே போல்,
 
கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை.
 
ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை.
 
இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை.
 
எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம்.
 
மதம் என்பது எம்முடைய அடையாளம். 
 
மதம் எமது வாழ்க்கை முறை.
 
மதம் எமது வரலாறு.
 
மதம் எமது கலாச்சாரம்.
 
மதமே எமது மொழியின் ஊற்று. 
 
இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது.
 
இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை  (யேசுவை) வணங்க முடியாது.
 
என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது.
 
ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது.
 
இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால‌ பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு.
 
கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு... புண்ணாக்கு அல்ல.
 
நாம் நாமாக இருப்போம். நீங்கள் நீங்களாக இருங்கள்.  
 
.
 
Edited by ஈசன்

ஈசனின் இந்த கோபம் பிடித்திருக்கு. :icon_idea: ..

(கனகாலம் இதை  ஈசனிடமிருந்து பார்த்து :lol: )

அது உங்களுடைய சொந்த அனுபவம்.
 
தாம் வணங்கும்  கடவுளின் பெயரால்  துன்புறுத்தபட்டு வீதியில் திரியும் மனிதர்களை நான் 
கண்டிருக்கிறேன் இது எனது சொந்த அனுபவம்.
 
இந்த அடாவடி தனங்களை மதம் என்று சொல்லி மழுப்பிவிட முடியாது.
இந்த கொடூரங்களை மதம் என்று மூடிவிட்டு இனியும் கும்பிட்டு கொண்டு இருக்க முடியாது.
 
இந்துமதம் என்ற சாக்கடை .............
சிறுவயதில் எனது சக மாணவிகளாக இருந்தவர்களை சாதி என்று சொல்லி அவர்களுக்கு செய்த 
அநியாங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். துன்பம் தாங்காது படிப்பை முறித்து வீடுகளில் தங்கியவர்களை நேரில் கண்டு இருக்கிறேன்.
 
இந்த சாதி வெறி பிடித்த பேயை எனது சமூகத்தில் இருந்து விரட்டி  அடிப்பது என்பது.
வள்ளியை மணம்  முடித்த முருகனுக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு என்று எண்ணுகிறேன்.

சாதி அடக்குமுறைகளை மதத்துள் புதைக்காதீர்கள்!

இந்து சமயம் இப்படித்தான் இரு என்று மனிதர்களை பலாத்காரப்படுத்தவில்லை.

மாதா மாதம் இவ்வளவு கட்டணம் செலுத்து என்றோ, கட்டாயம் தீட்சை கேள் என்றோ வற்புறுத்தவில்லை.

இதைத்தான் படி என்றுகூட கூறவில்லை.

ஆக, விரும்பினால் வா என்னும் போக்கிலேயே உள்ளது.

மதங்களை அரசியல்வாதிகளும் சாதாரண மனிதர்களும் தங்களது சுயலாபங்களுக்கு கையில் எடுத்ததற்கு மதங்களை குறை கூற முடியாது.

கிழக்கு ஐரோப்பா, ரஷ்ய கொம்மியூனிச வீழ்ச்சிக்கும் முக்கிய காரணம் அரசியல் சார்பான மதங்களின் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடுருவல்தான்.

ஆக, மனிதனின் தவறுகளுக்கு மதத்தை குற்றம் கூற முடியாது.

பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை... 
 
மதம் என்பது எம்முடைய அடையாளம். 
ஆம் இந்த மதம்தான் எம் மீது சாதிய கட்டமைப்புகளை அமிழ்த்துகிறது. இந்த மதத்தின் பெயரில்தான் மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது. அதன் பெயரிலேயே நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் . அதன் பெயரிலேயே எனது பாட்டன் முப்பாட்டன் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். அதன் பெயரிலேயே எமக்கு சமூக நீதி மறுக்கபப்டுகிறது. நான் இந்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் கீதை இருக்கும், கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம் இருக்கும். அதன் பெயரால் நான் மீண்டும் துன்புறுத்தப்படலாம்.
 
வேறு எங்கும் சாதிப் பாகுபாடு இருக்கிறதோ இல்லையோ? சுரண்டல் இருக்கிறதோ இல்லையோ?? தெரியாது. அதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. ஆனால் இங்கு இருக்கிறது அதுவும் மிக கடுமையாக இருக்கிறது. சாதியின் பெயரால் சிதைக்கப்படுகிறார்கள். வறுமையின் பெயலால் வதைக்கபப்டுகிறார்கள். சமூக நீதி பெறவும், வறுமையிலிருந்து விடுபடவும் யாரவது உதவ மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். சில பேர் வருகிறார்கள் அவர்கள் அடையாளத்தை மற்றக் கோருகிறார்கள். இந்த அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு வறுமையில் இருந்து தப்பிக்க ஒரு வழி தெரிகிறது. தனது தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. மாறுவது என முடிவு கொண்டு மாறுகிறார்கள். ஏனெனில் இந்த அடையாளம் நல்ல வாழ்வைத் தரவில்லை வசதியை தரவில்லை.  இதனால் யாருக்கு என்ன கோபம்?? இவ்வளவு காலம் நான் சுரண்டப்படும்போது குரல் கொடுத்தார்களா? இல்லை. வதைக்கப்படும்பொது வாழ்வு கொடுத்தார்களா? இல்லை. அப்புறம் இன்ன இப்பொழுது?? ஏன் அடிமை எண்ணிக்கை ஒன்று குறைகிறதே என்று வருத்தமா?  
 
பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை... 

கருப்பு தோல் மக்களின் வெள்ளை மயக்கம்... இது தமிழர்களுக்கு நிச்சயமாய் பொருந்தும்.. உத்தியோகபூர்வ வீடியோவை பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள்.

இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா

சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில்  மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால்  அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு  என்பது அவசியம். ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும், ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும்.  பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே, சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும். குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.  குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும்,

அடுத்தது சாதி... சாதி என்பது  எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும். சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர, அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும்...

இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள், பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ, அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை. அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை. எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன். திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன். இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம்...

கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள்.

இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா

சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில் மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?

அநெகமாக ஐரோப்பா முழுக்க இந்த கதைதான். லண்டன் சென் போல்ஸ் கூட பேகன் ஆலயத்திமீதுதான் கட்டப்பட்டுள்ளது. ஆனால் வருவோர் போவோர் மீது கட்டுப்பாடுகள் இல்லை. ஏழைகளுக்கு உதவ ஆயிரம் திட்டங்கள் செயல்பாடுகள்..

ஆனால் சைவ ஆலயங்களின் மீது கட்டப்பட்ட இந்து கோவில்களுக்கு, மிக சமீபகாலம் வரை ஆரிய சாதிகள் மட்டும்தான் போகலாம். இன்று கூட ஒருவருக்கும் ஒரு உதவியும் செய்வதில்லை.

பிகு. நான் பிறப்பால் சைவன் இன்று எனது சமயம் டைசம்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளுக்கு உதவ என்பது வேறு, ஆள்பிடிக்க என்பது வேறு...  நீங்கள் சுயமாக ஒரு உணர்வோடு முடிவுக்கு வந்து எந்த மதத்தையும் பின்பற்றுங்கள். ஆனால் ஆள்பிடிப்பவர்களின் பணத்துக்காகப் போகாதீர்கள். அவ்வளவு தான்...

சிலர் தாங்கள் புதுமையானவர்கள் என்று காட்டவும் சில மதம் பின்பற்றுவர்கள் எனவும் அறிந்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் குறிப்பிட்ட மதம் Taoism ஆ??

ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை.

இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது.

இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது.

சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம்.

பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம்.

இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன்.

இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது.

இந்தக் கருத்துடன் முற்றும் உடன்படுகின்றேன்.

இல்லை இல்லை என்று மூடிமறைப்பதால் பூசினிக்காய் முழுவதும் சோற்றுக்குள் மறைந்துவிடாது!

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு....

அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...

இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம். மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம். கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர. இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

super thulasi
 
  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைகளில் கதைபுனைந்தால் அகில இந்திய விருதுகளுக்கு அனுப்பலாம்!

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாடடில் மெக்காவுக்குச் சிலரை அனுப்பலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் குளித்துச் சுத்தமாகவில்லை என்றால், அடுத்த வீட்டுக்காரனும் குளிக்காமல் அசுத்தமாகத்தானே இருக்கிறான்!

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

  • கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களும் இசுலாமிய மதமும் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்து மதம் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளூர் அரசியல்வாதிகளால் அரசியல் பலம்பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்து மதம் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படாத காரணத்தால் தீவிர மதமாற்றத்தை இந்து மதம் செய்யவில்லை.

இந்து தீவிரவாதத்தை முன்வைத்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது மிக அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில், சிவ் சேனா இலங்கையில் உருவாக்கபடுவது, இலங்கையில் மனித உரிமை விடயங்களில் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்யும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத் தலைவர்கள் அஞ்சி ஒதுங்க வழிவகுக்கும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்துக்களை முதன்மைபடுத்தும் தீர்வை தீவிரமாக அமுல்படுத்த முயலலாம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்தவர்கள் முஸ்லிம்கள் போல இலங்கை அரசை ஆதரித்து அதன் ஆட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். போர் முடிந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் இலங்கை அரசை தீவிரமாக ஆதரித்து வந்ததை இவ்விடத்தில் நினைவு கூரூவது பொருத்தமானதாகும்.

சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு....

அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...

இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை.

இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம்.

இந்துத்தவம் ஒரு விசம். மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்? இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்?

தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது.

பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா? ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று. ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர்.

இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

(அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்)

அதே போல்,

கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை.

ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை.

இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை.

எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம்.

மதம் என்பது எம்முடைய அடையாளம். 

மதம் எமது வாழ்க்கை முறை.

மதம் எமது வரலாறு.

மதம் எமது கலாச்சாரம்.

மதமே எமது மொழியின் ஊற்று. 

இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது.

இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை  (யேசுவை) வணங்க முடியாது.

என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது.

ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது.

இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால‌ பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு.

கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு... புண்ணாக்கு அல்ல.

நாம் நாமாக இருப்போம். நீங்கள் நீங்களாக இருங்கள்.  

.

மதமே மொழியின் ஊற்று என்றால் சமணத்தையும் பௌத்தததையும் தான் ஆதரிக்கவேண்டுமே தவிர தமிழை நீச பாசை என்று தீட்டு நீக்கும் முறை கொண்ட இந்துத்துவத்தை எப்படி ஆதரிப்பது?

மதமே எமது கலாச்சாரம் என்பதால் அதற்குள் சாதீயமும் ஏற்றதாழ்வுகளும் தக்கவைக்கப்படுகின்றது. அது இருக்கும் வரை ஒருவனை ஒருவன் ஏற்றும் ஜனநாயகப் பண்பு வராவே வராது. இவை சாத்தியப்படாத போத இன ஒற்றுமை என்பத எக்காலத்திலும் சாத்தியம் இல்லை.

என்று ஒருவனுக்கு தான் வாழ்ந்த நிலத்தை விட மதம் தேசீய அடயாளமாகின்றதோ அதன் பிறகு அவனுக்கு நாடு அவசியம் இல்லை. மதத்தை காவிக்கொண்டு உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வாழமுடியும். புலம்பெயர் தமிழர்களின் கோயில்களும் தேசீயமும் இதே வழிகாட்டலில் தான் நாடக்கின்றது. அவனுக்கு தேசம் நாலம் பட்சம்.

ஆன்மீகம் வேறு மதம் வேறு. நீங்கள் ஆன்மீகத்தை தொலைக்கும் மதவாதிகளா உருவெடுத்துள்ளீர்கள். அதற்கு விலையாக தேசம் தேசீயம் நாடு என்பதை கொடுகின்றீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.