Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிவிற்கு வருவோம் ...........உண்மையை பேசி

Featured Replies

பட்டி மன்றம் ஒன்று நடாத்தி ஒரு முடிவிற்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ..........இதற்கு நடுவர்கள் யாரும் இல்லை .உங்கள் கருத்துக்களே நடுநிலைமை ..............சரி எதைப்பற்றி ........................ம்ம்ம்ம்................இது தேவையா அல்லது  இவனுக்கு லூசா என்றெல்லாம் நினைப்பவர்கள் இங்கே நிச்சயம் கருத்திட மாட்டார்கள் என்ற துணிவில் ..............
 
சீமான் என்னும் எம்மைப்போல தமிழன் யார் ??? இவனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன உறவு ,பிணக்கு .........அலசி ஆராய்வோம் .முடிவிற்கு வருவோம் .  உண்மையை அறிவோம் திசை நோக்கி பயணிப்போம் ..........................ஏனனில்  ஒரே திசையில் செல்பவர்களே கருத்து வேறுபாடுகளுடன் பயணிக்க முடியாமல் இருக்கும் சிக்கல்களை களைந்தெறியும் முகமாக ...............உண்மையை  தேடுவோம் .உணர்வோம் ...........விடியும் திசை நோக்கி பயணிப்போம் ..........நன்றிகள்  :)  :D

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

உண்மையில் கருத்துக்கள் மூலம் நான் அறிந்து கொண்ட கருத்தாளர்களை தேடிய வகையில் தாயகத்தின் மேல் உணர்வும் ,அன்பும் கொண்டவர்களே  நன் பார்க்கும் தாயகம் தமிழ் மீது பற்றுக்கொண்ட சீமான் அவர்கள் மீது ஒரு வெறுப்பு உணர்வை கொண்டதாக உணர்கிறேன் .அதற்காக அவர்களின் தாயக் உணர்வை உதாசீனம் செய்ய என் மனச்சாட்சி உறுத்துகிறது .அலசுவோம் ஆராய்வோம் .................உண்மை பேசி உத்தமனாய் வாழ முயற்சிப்போம் .ஆரம்பியுங்கள் ...........................தர்ம யுத்தத்தை .......................தேடலே வாழ்க்கை ..........இலக்கு ..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன், நீங்கள் 'தூண்டிலில' கொழுவியிருக்கிற 'இரை' சரியில்லைப்போல கிடக்கு! :icon_idea:

மீனெல்லாம் தூண்டிலை விலத்தி ஓடுது போல கிடக்கு! :o

ஒரு வேளை, மீன்களுக்கும் 'ஆறறிவோ" ? :D

  • தொடங்கியவர்

தமிழ் சூரியன், நீங்கள் 'தூண்டிலில' கொழுவியிருக்கிற 'இரை' சரியில்லைப்போல கிடக்கு! :icon_idea:

மீனெல்லாம் தூண்டிலை விலத்தி ஓடுது போல கிடக்கு! :o

ஒரு வேளை, மீன்களுக்கும் 'ஆறறிவோ" ? :D

அண்ணா இங்க வரணும் ./.......................வராட்டா எங்கும் எதிலும் இது பற்றி கதைக்க முயற்சிக்க கூடாது ........................இது கட்டளை அல்ல ..............அன்பு வேண்டுகோள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில், திருமுருகன் காந்தி போன்றவர்களின், ஆக்கமான முயற்சிகளையே விரும்புகின்றேன்!

எனது அம்மாவின் தாயார் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்லுவார்! தான் சிறு பெண்ணாக இருந்தபோது, 'மகாத்மா காந்தி'  ஊர்காவற்துறைக்கு வந்தபோது, பெண்கள் தங்கள் தாலிக்கொடியையே, மாகாத்மா காந்தியின் சால்வைக்குள் கழட்டிப் போட்டார்களாம்! இவையெல்லாம் வெறும், உணர்ச்சிகளின் வெளிப்பாட்டால் நிகழ்ந்த சம்பவங்களாகே இருக்கின்றனவேயன்றி, எந்த விதமான, அறிவுபூர்வமான சிந்தனைகளுமின்றியே, செய்யப்படும் செயல்கள்!

இவை போன்றவையே, தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் செயல்களுமாகும் என்பது எனது கருத்தாக அமைகின்றது!

மானிட சமுதாயத்தில், என்றுமே நடந்திருக்காத ஒரு கோரம் எம்மீது நிகழ்த்தப்பட்டிருக்கின்றது! உண்மையில் உணர்வுள்ளவர்களாக இருந்தால், பாக்கு நீரிணை, மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்க வேண்டுமே! அவ்வாறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை!

மாறாகத் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் 'சிறுநீர்' கழித்தால், சிங்களம் அதில் மிதிக்கும் என்று பேசுவதால், என்ன பலன் கிடைத்து விடப்போகின்றது?

தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுவதை 'இந்திய மத்திய அரசு' என்றும் விரும்பப் போவதில்லை! அதனால், சீமான் போன்றவர்களின் எழுச்சியை அடக்குவதற்கு அவர்கள் என்றும் பின்னிற்கப் போவதில்லை!

தமிழகத்தின் பத்திரிகை, தொலைத்தொடர்பு ஊடகங்கள் அனைத்தும், பார்ப்பனியர்கள் கையில் இருக்கும்போது, உண்மைகள் வெளியே வராமல் அவை பார்த்துக்கொள்ளும்! பார்த்துக் கொள்கின்றன! 

சீமானின் அரசியலும், வைகோ, நெடுமாறன் போன்றவர்களது போராட்டம் போல வெறும் 'உணர்ச்சிக் கொந்தழிப்பில்' விழையும் போராட்டங்களே! நாளை, உணர்ச்சிகள் மாறும்போது, அவர்களது போராட்டங்களும் பிசுபிசுத்துப் போகும் என்பதே எனது கருத்து!

அதை விடுத்து, திருமுருகன் காந்தி, போன்றவர்களின் பாதையில் சென்று, தமிழகத்தில் எமது கரங்களை வலுப்படுத்துவதே புத்திசாலித் தனமாகும்!

நான் பொதுவாக, சீமானுக்கு எதிராக எழுதாதன் காரணம், இந்திய ஆழும் வர்க்கம் செய்யும் வேலைக்கு, நானும்  'உறுதுணையாகப்' போய் விடக்கூடாது என்பதற்காகத் தான்!

ஆனால், தமிழ்நாட்டு உறவுகளிடம், எமக்கு உதவ வேண்டுமென்ற 'நல்லெண்ணம்' நிரம்ப உள்ளது! அதன் விளைவு தான் 'தமிழக மாணவர் போராட்ட முன்னெடுப்புகளும்'. தீக்குளித்தல்களுமாகும்!

ஆனால், அவர்களை வழிநடத்தக்கூடிய ' தலைமை' (சீமான் உட்பட) இன்னும் உருவாகவில்லை என்று தான் கூறுவேன்!

Edited by புங்கையூரன்

யதார்த்தமான கருத்து ...எங்கே தொடரட்டும் ..ஏனைய கருத்து வெள்ளங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரி குளோனிங் செய்யப்பட்டு பிறந்தவர்களல்ல. ஆகவே ஒவ்வொருத்தரிடமும் ஆயிரம் நிறங்கள், ஆயிரம் ஏற்றத் தாழ்வுகள். இதில் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்பவர்களின் விகிதாச்சாரமே அதிகம். அவர்களுக்கும் ஈழத்தின் வலி தெரிய வேண்டுமெனில் அவற்றை காவிச் செல்ல கவர்ச்சியான ஊடகங்கள் தேவை. ஏறக்குறைய தினத்தந்தி ஊடகம் போன்றே. அவை அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்றடையுமாறு இருத்தல் வேண்டும்.

படித்த மேல்தட்டு வர்க்கங்கள், தினத்தந்தியைப் பார்த்து கேலி செய்யும் நிலை இன்றும் உள்ளது. ஆனால் அந்த ஊடகம் தான் இன்றுவரை தமிழகத்தின் அதிகம் பேர் வாசிக்கும் நெ. ஒன் நாளிதழ். அதைப் போன்றே அரசியல் தலைமைகளும் சீமான், வைகோ, நெடுமாறன், மு.க., ஜெயலலிதா போன்றோர்.

ஒரு பொருளை சந்யைப் படுதுவதென்பது நுணுக்கமான பல்முகம் கொண்ட கலை. அச்சந்தைப்படுத்துதலை, நான் மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே செய்வேன் என்றால் உபயோகிப்போரின் எண்ணிக்கையும் குறையும், பெறுமதியான அனுகூலமும் இருக்காது. அதைப்போன்றே தமிழகத்தில் ஈழம் சார்ந்த செய்திகளும், அதன் ஆதரவு பலமும், வீச்சும்.

திருமுருகன் காந்தி போன்றோர் ஒருபக்கம் முகநூல், மற்ற போராட்டங்கள் மூலம் செய்கிறார் என்றால் செய்யட்டும், அதே வேளை மற்ற ஜனரஞ்சகமான தலைவர்களின் மூலமாகவும் அது தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கச் செய்தல் வேண்டும். இல்லையேல் ஈழம் செய்திகள், துயரங்கள் முகநூல், ட்விட்டர் வாசகர்களின் விவாதப் பொருளோடு நின்று விடும். இதையே ஈழமக்கள் விரும்புகிறார்களா..?

இந்திய மத்திய அரசு குறைந்த பட்சம் பயப்படுவது போல் நடிப்பது இந்த சாதாரண பொதுஜனங்களின் வாக்கு வங்கிக்காகவே. அப்பேர்பட்ட பொதுமக்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அனைத்து முறைமைகளையும் பயன்படுத்தி ஈழம் சார்பாக எப்பொழுதும் திருப்பி வைத்திருத்தல் வேண்டும். அதை யார், எப்படி செய்வது?

மக்கள் மனங்கவர்ந்த அரசியல்வாதிகள் அனைவரையும் எப்படி ஒருமுகமாக உங்கள்பக்கம் திருப்புவது எப்படி என சிந்தியுங்களப்பு. அதைவிட்டு  'நீ சரியில்லை, அவன் சரியில்லை' என இருக்கும் கொஞ்ச ஆதரவாளர்களிடமும் சலிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் யதார்த்தமாக கூறி இருக்கிறார்.

அதுவே என் கருத்தும்

நம்பிக்கை விதைகளை ஊன்று 
உரிமை மறுக்கப் பட்டாலும்
உழைப்பு சுரண்டப் பட்டாலும்
உதிரம் உறிஞ்சப் பட்டாலும்
உணர்வு நசுக்கப் பட்டாலும்
நம்பிக்கை விதைகளை ஊன்று
பட்ட மரம் பாலூறும்
பட்ட துன்பம் விட்டகலும்

'நீ சரியில்லை, அவன் சரியில்லை'...இது சரியல்ல.

  • தொடங்கியவர்

மக்கள் மனங்கவர்ந்த அரசியல்வாதிகள் அனைவரையும் எப்படி ஒருமுகமாக உங்கள்பக்கம் திருப்புவது எப்படி என சிந்தியுங்களப்பு. அதைவிட்டு  'நீ சரியில்லை, அவன் சரியில்லை' என இருக்கும் கொஞ்ச ஆதரவாளர்களிடமும் சலிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள். :)

அருமையான கருத்து .................இன்னும் பலரிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம் ..........எங்கே .. :D

மக்கள் மனங்கவர்ந்த அரசியல்வாதிகள் அனைவரையும் எப்படி ஒருமுகமாக உங்கள்பக்கம் திருப்புவது எப்படி என சிந்தியுங்களப்பு. அதைவிட்டு  'நீ சரியில்லை, அவன் சரியில்லை' என இருக்கும் கொஞ்ச ஆதரவாளர்களிடமும் சலிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள். :)

தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் தமது இருப்புகளின் வலுப்படுத்தலுக்காக 'கொமடி பீஸா'க்குபவர்களைக் கண்டுகொள்ளாமலும் கடந்துபோக முடியாதல்லவா?!!  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரி குளோனிங் செய்யப்பட்டு பிறந்தவர்களல்ல. ஆகவே ஒவ்வொருத்தரிடமும் ஆயிரம் நிறங்கள், ஆயிரம் ஏற்றத் தாழ்வுகள். இதில் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்பவர்களின் விகிதாச்சாரமே அதிகம். அவர்களுக்கும் ஈழத்தின் வலி தெரிய வேண்டுமெனில் அவற்றை காவிச் செல்ல கவர்ச்சியான ஊடகங்கள் தேவை. 

மக்கள் மனங்கவர்ந்த அரசியல்வாதிகள் அனைவரையும் எப்படி ஒருமுகமாக உங்கள்பக்கம் திருப்புவது எப்படி என சிந்தியுங்களப்பு. அதைவிட்டு  'நீ சரியில்லை, அவன் சரியில்லை' என இருக்கும் கொஞ்ச ஆதரவாளர்களிடமும் சலிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள். :)

நன்றாக சொன்னீர்கள்.

  • தொடங்கியவர்

தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் தமது இருப்புகளின் வலுப்படுத்தலுக்காக 'கொமடி பீஸா'க்குபவர்களைக் கண்டுகொள்ளாமலும் கடந்துபோக முடியாதல்லவா?!!  :D

இப்பதான் விடயம் ஆரம்பிக்குது .............. :D
 
சோழியான் அண்ணா அப்பிடி என்ன கொமடி பீசுகளை கண்டீர்கள் .விளக்கமாக சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம் ................ :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மனங்கவர்ந்த அரசியல்வாதிகள் அனைவரையும் எப்படி ஒருமுகமாக உங்கள்பக்கம் திருப்புவது எப்படி என சிந்தியுங்களப்பு. அதைவிட்டு  'நீ சரியில்லை, அவன் சரியில்லை' என இருக்கும் கொஞ்ச ஆதரவாளர்களிடமும் சலிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள். :)

அரசியல்வாதிகள் என்று கூறிவிட்டு எப்படி ஒருமுகமாகத் திருப்பு என்று கூறுகிறீர்கள் அண்ணா. எப்போதும் ஒரு அரசியல்வாதி மக்கள் சார்ந்த உண்மையான அக்கறையுடன் செயற்பட மாட்டான். அவன் நினைத்தாலும் செயற்பட முடியாது அவனைச் சூழவுள்ள எல்லாமே அவனை ஆக்கிவிடும். எங்கள் மாவீரன் அண்ணன் பிரபாகரனால் மட்டுமே முடிந்த ஒரு விடயம் இந்த அற்பர்களால் முடியவே முடியாது.

இப்பதான் விடயம் ஆரம்பிக்குது .............. :D
 
சோழியான் அண்ணா அப்பிடி என்ன கொமடி பீசுகளை கண்டீர்கள் .விளக்கமாக சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம் ................ :lol:

லேட்டஸ்டு கொமடி காசி ஐயா சைக்கிள் வலிக்க..பாலுக் கலைஞன் பள்ளிக்கூடத்துக்கு குண்டெறிந்தது...  :lol:

காசி ஐயா தமிழினத்துக்காக பலதை செய்திருக்கிறார்.. தனது தனிப்பட்ட வாழ்வில் பற்பல சுகங்களை இழந்திருக்கிறார்.

தற்போது தள்ளாத வயதில்... இறுதி நேரத்திலாவது ஒரு இடத்தில் வாழ்வதற்காக.. சில சமரசங்களுக்கு உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறேன்.  :D

அண்ணா  இதை பொய் என்கிறீர்களா .............அல்லது அவர் இப்பிடி உண்மையை சொல்லியிருக்க கூடாது என்கிறீர்களா ..............???
 
இப்பிடி ஒரு சம்பவம் நடக்கல ஆனால் தமிழ் நாட்டில் நான் வாழ வேண்டும் என்பதற்காக சீமான் சொன்ன பொய்யை மெய்யாக  காசிஐயா ஏற்றுக்கொண்டாரா ....................?? :D
 
Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நல்லதொரு தேவைக்கேற்ற  திரி.

முதலில் 

தம்பி  தமிழ்சூரியனிடம் ஒரு வேண்டுகோள்

புசத்தல் என்பது ஒருவித மரியாதையற்ற  சொல்

அதை  மாற்றமுடியுமா??

சீமான் பற்றி  எனது கருத்து...

தமிழரின் சிறு துரும்பாகத்தான் அவரைப்பார்க்கின்றேன்

ராசவன்னியன்  சொன்னது   போல்....

எவரையும் தூக்கி  எறியும் நிலையில் ஈழத்தமிழினம் இல்லை.

அதேநேரம் தமிழகத்தில் தற்பொழுது  வந்திருக்கும் எழுச்சிக்கும் 

காங்கிரசினதும் திமுகவினது வீழ்ச்சிக்கும் 

சீமான் அவர்களது பங்கு தவிர்க்கமுடியாத முக்கிய  இடம் பிடிக்கிறது.

சீமானில்

அதிக  நம்பிக்கை  அல்லது அதிகம் எதிர்பார்ப்பவர்களே

அவரது திருமணம்  உட்பட தனிப்பட்ட விடயங்கள்

பேச்சுக்களால் தூற்றித்திரிகின்றனர் என்பது எனது கணிப்பு

இன்னொன்று

சீமான் புலிகளை  ஆதரிப்பதால்

புலிகளது  எதிராளிகள் எல்லோரும் சீமானில் 

முட்டையில் மயிர் புடுங்குவது

ஒன்றும் பரம ரகசியமல்லவே............

நாளை  சீமான் புலிகளுக்கு எதிராக பேசிவிட்டால்

இவரது கூற்றுக்களே

இவர்களுக்கு சாத்திரங்காகிவிடுவதையும் காணலாம்..........

இன்னுமொன்று

எம்மைவிட

தனிப்பட்ட ரீதியில்

சீமான் தமிழுக்கு  பலவற்றை  செய்திருப்பதை  உணரவேண்டும்

சினிமாவிலிருந்து

தமிழகம்வரை

அவரது தமிழ்ப்பற்றும்

தமிழ்ப்பேச்சும்

தமிழ்  உணர்வும்  பாராட்டத்தக்கது..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஐயா தமிழினத்துக்காக பலதை செய்திருக்கிறார்.. தனது தனிப்பட்ட வாழ்வில் பற்பல சுகங்களை இழந்திருக்கிறார்.

தற்போது தள்ளாத வயதில்... இறுதி நேரத்திலாவது ஒரு இடத்தில் வாழ்வதற்காக.. சில சமரசங்களுக்கு உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறேன்.  :D

அவர் மற்றவர்கள் இழக்காத என்ன சுகத்தை இழந்தார் என்று கொஞ்சம் கூறுங்கள். அவரின் மகள்கள் இருவரும் வைத்தியர்கள். ஒருவர் அவுஸ்ரேலியாவில் மற்ற மகள் லண்டனில். நான்கு வருடங்கள் மட்டும் சிறையில் இருந்தார். வேறென்ன ??????சொன்னால் நானும் தெரிந்து கொள்ளலாம் சோழி

இன்னுமொன்று

எம்மைவிட

தனிப்பட்ட ரீதியில்

சீமான் தமிழுக்கு  பலவற்றை  செய்திருப்பதை  உணரவேண்டும்

சினிமாவிலிருந்து

தமிழகம்வரை

அவரது தமிழ்ப்பற்றும்

தமிழ்ப்பேச்சும்

தமிழ்  உணர்வும்  பாராட்டத்தக்கது..........

எவற்றை எல்லாம் தமிழுக்குச் செய்திருக்கிறார் ???????

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மற்றவர்கள் இழக்காத என்ன சுகத்தை இழந்தார் என்று கொஞ்சம் கூறுங்கள். அவரின் மகள்கள் இருவரும் வைத்தியர்கள். ஒருவர் அவுஸ்ரேலியாவில் மற்ற மகள் லண்டனில். நான்கு வருடங்கள் மட்டும் சிறையில் இருந்தார். வேறென்ன ??????சொன்னால் நானும் தெரிந்து கொள்ளலாம் சோழி

எவற்றை எல்லாம் தமிழுக்குச் செய்திருக்கிறார் ???????

மன்னிக்கணும்

காசியண்ணையையே  கை  நீட்டும் உங்களுக்கு என்னால்  திருப்திகரமாக  எழுதமுடியாது :(  :(  :(

மன்னித்துக்கொளளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா  இதை பொய் என்கிறீர்களா .............அல்லது அவர் இப்பிடி உண்மையை சொல்லியிருக்க கூடாது என்கிறீர்களா ..............???
 
இப்பிடி ஒரு சம்பவம் நடக்கல ஆனால் தமிழ் நாட்டில் நான் வாழ வேண்டும் என்பதற்காக சீமான் சொன்ன பொய்யை மெய்யாக  காசிஐயா ஏற்றுக்கொண்டாரா ....................?? :D

தமிழ்ச் சூரியன், காசி அண்ணனை எனக்குச் சிறு வயதிலேயே தெரியும். அவர் என் ஒன்றுவிட்ட அண்ணாவுடன் ஆரம்ப காலங்களில் ஒன்றாக சிறை சென்றவர். அவர் சிறையை விட்டு வெளியே வந்த அன்று கூட மாலை போட்டு ஊர்வலமாக கூட்டிக்கொண்டு அண்ணன் தன் வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தார். அவரைப் பார்க்க புரட்சிக் கவிஞன் என்றே மக்கள் கூடினார்கள். சத்தியசீலன் அண்ணனுடனும் சிறையில் நன்கு வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவரிடம் இன்று கதைத்தபோது தான் அப்படி ஒரு விடயம் கேள்விப்பட்டதில்லை என்றார். வயதுபோகப்போக கற்பனைத்திறன் அவருக்கு அதிகரிக்கிறது என்று சொன்னார். அவரின் வீரமான உணர்வான எழுத்துக்காகவே சிறை சென்றதுதான் உண்மை.

மன்னிக்கணும்

காசியண்ணையையே  கை  நீட்டும் உங்களுக்கு என்னால்  திருப்திகரமாக  எழுதமுடியாது :(  :(  :(

மன்னித்துக்கொளளுங்கள்

கடவுளையே கைநீட்டும் காலத்தில் என்கேயண்ணா இருக்கிறீர்கள் ???????

பதில் இல்லை எனில் இப்படி எழுதித் தப்பிக்க வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்

தமிழ்ச் சூரியன், காசி அண்ணனை எனக்குச் சிறு வயதிலேயே தெரியும். அவர் என் ஒன்றுவிட்ட அண்ணாவுடன் ஆரம்ப காலங்களில் ஒன்றாக சிறை சென்றவர். அவர் சிறையை விட்டு வெளியே வந்த அன்று கூட மாலை போட்டு ஊர்வலமாக கூட்டிக்கொண்டு அண்ணன் தன் வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தார். அவரைப் பார்க்க புரட்சிக் கவிஞன் என்றே மக்கள் கூடினார்கள். சத்தியசீலன் அண்ணனுடனும் சிறையில் நன்கு வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவரிடம் இன்று கதைத்தபோது தான் அப்படி ஒரு விடயம் கேள்விப்பட்டதில்லை என்றார். வயதுபோகப்போக கற்பனைத்திறன் அவருக்கு அதிகரிக்கிறது என்று சொன்னார். அவரின் வீரமான உணர்வான எழுத்துக்காகவே சிறை சென்றதுதான் உண்மை.

சுமே அக்கா அவர் சிறை சென்றார் என்பதையும் கூறுகிறீர்கள் ,வீரமான எழுத்துக்காகவும் என்று கூறு கிறீர்கள் ...............அப்புறம் இவர் தமிழுக்கு என்ன செய்தார் என்றும் கேட்கிறீர்கள் .
 
எத்தனையோ எழுத்தாளர்கள் ,கவிஞ்சர்கள் எழுதுகிறார்கள் .எழுதினார்கள் .ஏன் அவர்கள் சிறையிடப்படவில்லை ....................
 
மாபெரும் கவிஞ்சர் புதுவை ஐயா கூட எழுத்துக்கால் தான் தமிழுக்கும் ,போராட்டத்திற்கும்  பணி புரிந்தார் ,,,,,,,,,,,,,அவர் நிலத்தில்  வாழ்ந்தார் .காசி ஐயா புலத்தில் வாழ்ந்தார் ...........ஆனால் இருவருமே ஒரே திசையில் ,ஒரே பார்வையில் தம் பணியை சிறப்புற செய்தவர்கள் ..................உங்கள் கருத்தின் படி ஆயுதம் ஏந்திப்போராடினால் மட்டுமே தமிழுக்கு ஏதாவது செய்வது என்பதா ??? :D
  • கருத்துக்கள உறவுகள்

எவற்றை எல்லாம் தமிழுக்குச் செய்திருக்கிறார் ???????

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகக் கைவிடப்பட்ட தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற தலைவர்களை முன்னிறுத்தி தமிழர்களின் விழுமியங்களை பிரச்சாரப்படுத்தி வருகிறார். அண்ணல் காந்தி, மாமா நேரு என்று வட இந்திய விசுவாசத்தில் திளைத்துக் கிடக்கும் தமிழர்களை மீட்கும் முயற்சிதான் இது. இது ஒரு சிறு உதாரணம்தான்.

அவர் மற்றவர்கள் இழக்காத என்ன சுகத்தை இழந்தார் என்று கொஞ்சம் கூறுங்கள். அவரின் மகள்கள் இருவரும் வைத்தியர்கள். ஒருவர் அவுஸ்ரேலியாவில் மற்ற மகள் லண்டனில். நான்கு வருடங்கள் மட்டும் சிறையில் இருந்தார். வேறென்ன ??????சொன்னால் நானும் தெரிந்து கொள்ளலாம் சோழி

இனத்துக்காக இழந்தவை இழந்தவைதானே.. அவற்றை இன்னொரு இழப்புடன் ஒப்பிட்டு எடை போட முடியாது.

ஆரம்பத்தில் அவரும் அரச சேவையாளர்.. தமிழினத்திற்கே பங்கம் விளைக்கக் கூடிய சட்டமூலத்தை மொழிபெயர்க்க மறுத்து தனது உத்தியோகத்தை துறந்தவர் என நினைக்கிறேன்.

அதன் பிறகு அவர் எப்படி வாழ்ந்தார்.. எவர் உதவி செய்தார் என ஆராய முற்பட்டால் அங்கே கண்ணீருக்கான விடயங்களே நிறைய இருக்கும் என்பதே எனது சாதாரணமான ஊகம். 

அவரது இளைய சகோதரர் திரு. கா. சிவநாதன் (முன்னாள் ஜேர்மனி கலை பண்பாட்டுப் பொறுப்பாளர்) ஜேர்மனியில்தான் இருந்தார். அமிர்தநதி சுதர்சன் எனும் பெயரிலும் அவர் ஆக்கங்கள் எழுதியதுண்டு. 'இவ்வாறான அலுவல்களால் ஒழுங்காக ஒரு வேலையை செய்ய முடியவில்லை.. எனது அண்ணனின் பிள்ளைகளுக்கு ஒரு சொக்கிலேற்றுதானும் அனுப்ப முடியவில்லை..' என்று கவலைப்பட்டதுண்டு.

காசி ஆனந்தனின் விடுதலைப் பாடல்களை தேனிசை செல்லப்பா.. ரீஎல் மகாராசன்.. புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் அடிக்கடி மேடைகளிலும் ஊடகங்களிலும் பாடியதோடு அவர்கள் பணம் சம்பாதித்ததையும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு பாடல்களை எழுத்திக் கொடுத்துவிட்டு.. ஒரு சில தமிழ் ஆதரவாளர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்வை அந்த கவிஞர் கொண்டு நடத்தியதை மறுக்க முடியாது.

ஒருமுறை தேசியத் தலைவரிடம் இருந்து அவரை வன்னிக்கு வருமாறு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில்தான் அவரது புதல்விகள் மேற்படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார்கள். 'இவ்வளவு காலமும் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தேன்.. தற்போது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அவர்களூடன் இருந்தேயாக வேண்டிய நிலை.. அவர்களுடைய படிப்பிற்கான உதவிகளுக்காக.. தலைவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று அப்போது அவரை சந்திப்போரிடம் கூறுவாராம்.

அவரது உறவினர் நான் வசிக்கும் நகரத்திலும் வாழ்வதால்.. அப்போது அறிந்த விடயங்களை தற்போது பகிர்ந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.. தவறுதலான இடத்தில் பதியப்பட்டுவிட்டது.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் என்று கூறிவிட்டு எப்படி ஒருமுகமாகத் திருப்பு என்று கூறுகிறீர்கள் அண்ணா. எப்போதும் ஒரு அரசியல்வாதி மக்கள் சார்ந்த உண்மையான அக்கறையுடன் செயற்பட மாட்டான். அவன் நினைத்தாலும் செயற்பட முடியாது அவனைச் சூழவுள்ள எல்லாமே அவனை ஆக்கிவிடும். எங்கள் மாவீரன் அண்ணன் பிரபாகரனால் மட்டுமே முடிந்த ஒரு விடயம் இந்த அற்பர்களால் முடியவே முடியாது.

யம்மா, நான் சீமான் ஈழத் தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவார் என சொல்லவில்லையே..?

1991 க்குப் பின்னர் தேய்ந்துபோன அல்லது மறைக்கப்பட்ட ஈழ ஆதவு தளம், ஈழத்தில் அடுக்கடுக்காய் நிகழ்ந்த கொடூரங்களை சிறிய அளவிலேனும் வாசித்துணர்ந்த தமிழக மக்களின் மனக்கொந்தளிப்பை, எங்களின் ஆதங்கத்தை ஓரளவேனும் உணர்ந்து, வைகோ சீமான் போன்றோர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாகவே நாங்கள் பார்க்கிறோம். (Just enablers).

இவர்கள் யாராலும் ஈழம் பெற்றுத் தர இயலாது. ஆனால் ஈழ ஆதரவு தளத்தை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க இவர்களால் சில காலம் முடியும். இல்லையெனில் இங்கேயிருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளில் ஈழ விடயம் காற்றில் கரைந்த கப்பலாகி விடும். இன்னமும் பரப்புரையும், ஒருங்கிணைந்த முனைப்பும் வேண்டும், அவற்றை யார், எதன் மூலம் சாதிப்பது? மற்ற ஜனரஞ்சகமான அரசியல் தலைமைகளால், ஊடகங்களால் மட்டுமே. ஆனால் அனைவரின் ஆதரவும் இருந்தால் நல்லது, நிச்சயம் வேண்டும். அவர்களில் யாரை அதிகமாக நம்புகிறீர்களோ அவர்களை இனம் கண்டு உயர்த்திவிடுங்கள், அதுவே நீண்ட காலத்திற்கு நல்லது.

மற்றபடி, 'அவன் சரியில்லை..இவர் சரியில்லை' என்றால், பின் யார் தான் சரி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.