Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார். camera_icon.jpeg 
[Thursday, 2014-02-27 07:53:19]
budha-270214-150.jpg

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை நேற்று கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அஸ்கிரிய பீடாதிபதி, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார். அதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றைத் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Askiriya-270214-600.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=104522&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பெளத்தம் வளர்த்த சிங்கன்.....100 வருடத்தின் பின்பு கட்டுரை எழுதலாம்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் ம‌ண்ணில், அவ‌ர்க‌ளின் ஆசை... நிறைவேறிய‌த‌ற்காக,
இப்படியான புத்தர் சிலைகளை... டக்ளஸ், கருணா போன்ற ஒட்டுக் குழுக்கள் திறந்து வைப்பதே... பொருத்தமாக இருக்கும்.
 
அப்படியே மொட்டையும் போடவேண்டும்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் புதிதாக வைரவர்சிலை வைக்க விடுவார்களா? bhairavar6.jpg

இலங்கையில் யாழ்பாணம் தவிர்ந்த எந்தப் பகுதியிலும் எந்த மத தலங்கள் அமைப்பதிலும் பொதுமக்கள் எதிர்ப்பதில்லை. சில தீவிர சிங்கள அமைப்புகள் எதிர்ப்பது உண்டு. ஆனால் யாழ்ப்பாணத்தில் புத்த மத தலங்களுக்கு தமிழர்களின் பொதுவான அமைப்புகளே எதிர்ப்பது ஏன். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே எதிர்ப்பது ஏன். சகிப்பு தன்மையே யாழ்ப்பாணத்தவருக்கு இல்லாமல் போவதற்கு வரலாற்று காரணம் என்ன. புலம் பெயர்நத நாட்டில் கூட அவர்களால் வெள்ளையர்களை தவிர மற்றவர்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஏதாவது வரலாற்று காரணம் உண்டோ. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற முடியாதோ.

உங்கள் கருத்து மிகவும் தவறானது என்பது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தவர் பற்றிய ஒரு தப்பான கருத்தையும் தருகின்றது!

யாழ்ப்பாணத்தில் நாக விகாரை, நைனாதீவிலுள்ள விகாரை, ஏராளமான கிறிஸ்தவத் தேவாலயங்கள், வெள்ளைக் கடற்கரை பள்ளிவாசல், ஐந்துலாம்படிச் சந்திப் பள்ளிவாசல்கள் எனப் பல இருக்கின்றன!  யாழ்ப்பாண  மக்கள் அனைத்தையும் அரவணைத்தே வாழ்கின்றனர். ஆனாலும், நீங்கள் சொல்லும் சிங்களப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கோவில்கள், உண்மையில் தமிழ் மக்கள் பிரதேசங்களில் இருந்த கோவில்களே! இப்போது அந்தப் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்பட்டு விட, அவைகள் ஏதோ சிங்கள மக்களின் பரந்த மனத்தால் கட்டப்பட்டவை என்பது போல நீங்கள் கூறுவது தான் விசித்திரமாக உள்ளது! பொலநறுவை சிவன் கோவில், பொன்னமபலவாணேசர் கோவில், முன்னேஸ்வரம் போன்ற பல உதாரணங்களைத் தர முடியும்!  இந்துக்கள் எங்கும் பலவந்தமாக வழிபாட்டிடங்களை அமைக்கவில்லை?                     புத்த மதத்தினர் பெரும்பானமையில்லாத இடத்தில, புத்தருக்கு என்ன வேலை இருக்கிறது! இங்கு மதமல்ல முக்கியத்துவம் பெறுவது! அது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக வருவதால் தான் அதை மக்கள் விரும்புவதில்லை! இந்து மதம், ஒரு போதும் தன்னை மற்றவர்கள் மீது வலிந்து திணித்ததில்லை!

யாழ்ப்பாணத்தவர்கள், அவர்கள் வாழும் நாடுகளில் 'வெள்ளையர்கள்' உட்பட அனைவரையும் 'சகித்துக் கொண்டும், அனுசரித்தும் தான் போகின்றார்கள்! தங்கள் கலாசாரத்தை எவர் மீதும், பலவந்தமாக அவர்கள் திணித்ததும் கிடையாது!

புங்கையின் கருத்து மிகவும் சரியானதே, எம்மைப்பற்றி எம் எதிரிகள் புரிந்து வைத்திருக்குமளவிற்கு எம்மவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதுதான் வேதனை.

தமிழர் தங்கள் கலாச்சாரத்தை எவரிடமும் திணிக்கவில்லை. புங்கை! உங்களுக்கு என்  பிரத்தியேக வணக்கங்கள்.

இலங்கையில் யாழ்பாணம் தவிர்ந்த எந்தப் பகுதியிலும் எந்த மத தலங்கள் அமைப்பதிலும் பொதுமக்கள் எதிர்ப்பதில்லை. சில தீவிர சிங்கள அமைப்புகள் எதிர்ப்பது உண்டு. ஆனால் யாழ்ப்பாணத்தில் புத்த மத தலங்களுக்கு தமிழர்களின் பொதுவான அமைப்புகளே எதிர்ப்பது ஏன். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே எதிர்ப்பது ஏன். சகிப்பு தன்மையே யாழ்ப்பாணத்தவருக்கு இல்லாமல் போவதற்கு வரலாற்று காரணம் என்ன. புலம் பெயர்நத நாட்டில் கூட அவர்களால் வெள்ளையர்களை தவிர மற்றவர்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஏதாவது வரலாற்று காரணம் உண்டோ. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற முடியாதோ.

 யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும் அவர்களது பாதுகாப்பில் குடியமர்த்தப் பட்டிருக்கும் சில குடும்பங்களையும் தவிர பெளத்தர்கள் எவரும் வாழ்வதில்லை. இந்நிலையில் அம்மண்ணில் அரசினால் அமைக்கப் படும் பெளத்த சின்னங்கள் ஆக்கிரமிப்புச் சின்னங்களாகவே அங்கு வாழும் மக்களால் பார்க்கப் படுகின்றன.

யாழ் மண்ணில் அருகருகாக கோயில்களும் தேவாலயங்களும் அமைக்கப் பட்டிருப்பதை பல இடங்களிலும் காண முடியும். மத சகிப்புத் தன்மை பற்றி இவ்வளவு அக்கறைப் படும் நீங்கள் சவூதி அரேபியாவில் தாம் வாழும் வீட்டில் தமது இறை வழிபாடு செய்தமைக்காக தண்டிக்கப் பட்ட இலங்கையர் பற்றிக் கேள்விப் பட்டிருப்பிருப்பீர்கள். அதற்கான வரலாற்றுக் காரணத்தைக் கண்டு பிடித்து அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்கலாமே.

மீண்டும் ஒரு தவறை என்னொரு தவறால் நியாயப்படுத்த வேண்டாம். மதங்கள் எல்லாமே அந்தந்த கால தேவைகளால் உருவானது. இன்று மதங்களால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். சவுதியிலோ ஆஃப்ஹானிலோ மத அடிப்படைவாதிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமே அழியாவிடாது காத்து வருகிறது. இதை புரிந்து கொள்ள அதிக உலக அரசியல் அறிவு தேவை இல்லை. 

யாழ்பாண மக்கள் நிச்சயமாக மற்றய கலாசாரங்களுடன் இணங்கி வாழுபவர்கள்தான். ஆனால் அவர்கள் பொது புத்தியை தீர்மானிக்கும் அல்லது தெரிவிக்கும் தலைமைகள்,  ஊடகங்கள் மற்றய கலாசரங்களை எதிரியாகவே பார்ப்பதற்கு வேறு உதாரணங்கள் தேவை இல்லை. இந்த யாழ் களதிலேயே மற்றய இனங்கள் அசிங்கமாக விமர்சிக்கப்படும்போது ஒருவரும் அதற்கு எதிராக கருத்து எழுதுவதில்லை. ஆனால் அதை ஏற்றிப் புளுகி எழுத நிறயப் பேர்கள் varuvaarkal. ஆகவே அந்த கருத்துக்கள் யாழ்ப்பாணத்தவரின் பொதுவான கருத்து என்று எடுத்து கொள்ளாம் அல்லவா. மற்ற இனங்கள் பற்றி ஏதாவது நல்லதை இந்த களத்தில் எழுதியத்தை காட்ட முடியுமா. மற்ற இனங்களுக்கு ஒரு நல்ல அம்சம் கூடவா இல்லை.

 யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும் அவர்களது பாதுகாப்பில் குடியமர்த்தப் பட்டிருக்கும் சில குடும்பங்களையும் தவிர பெளத்தர்கள் எவரும் வாழ்வதில்லை. இந்நிலையில் அம்மண்ணில் அரசினால் அமைக்கப் படும் பெளத்த சின்னங்கள் ஆக்கிரமிப்புச் சின்னங்களாகவே அங்கு வாழும் மக்களால் பார்க்கப் படுகின்றன.

யாழ் மண்ணில் அருகருகாக கோயில்களும் தேவாலயங்களும் அமைக்கப் பட்டிருப்பதை பல இடங்களிலும் காண முடியும். மத சகிப்புத் தன்மை பற்றி இவ்வளவு அக்கறைப் படும் நீங்கள் சவூதி அரேபியாவில் தாம் வாழும் வீட்டில் தமது இறை வழிபாடு செய்தமைக்காக தண்டிக்கப் பட்ட இலங்கையர் பற்றிக் கேள்விப் பட்டிருப்பிருப்பீர்கள். அதற்கான வரலாற்றுக் காரணத்தைக் கண்டு பிடித்து அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்கலாமே.

சிங்களவர்கள் விகாரைக்கும் போகின்றார்கள் கதிர்காமக் கந்தனிடமும் போகின்றார்கள் திருப்பதிக்கும் போகின்றார்கள். பௌத்த விகாரைக்குப் போவதற்கு பௌத்தராக்கதான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பௌத்தம் ஒரு புனித ஆன்மீக மார்க்கம் அது தமிழர்பகுதிகளுக்கு எவ்வளவு வருகின்றதோ அவ்வளவு நன்மையே ! பேரினவாதமே தமிழர்களுக்குப் பிரச்சனையே  அன்றி பௌத்தம் அல்ல. பௌத்தமும் சமணமும் தான் தமிழ் தழைக்க   அடிப்படையில் வழிசெய்த்தது. பௌத்த விகாரரைகளை தமிழர்பகுதிக்குள் கொண்டுவருவது சிங்களவர்கள் செய்யும் நன்மையாகவே பாரக்கமுடியும். எதிர்காலத்தில் நிறைய தமிழர்கள் பௌத்தத்திற்கு மாறும் நல்ல வாய்ப்புகள் இதனால் உருவாகும். இஸ்லாம் இந்து கிறிஸ்த்தவர்கள் போல் எதிர்காலத்தில் பௌத்த தமிழர்களும் இருப்பது நன்மையே. அத்தோடு தற்போது தமிழர்கள் தமிழோடு ஆங்கில மொழியையும் கற்பது போன்று சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். மொழி மதம் சாதி பிரதேசம் என்ற குறுகிய வட்டத்துள் தொடர்ந்து இருந்தால் மிச்சமின்றி அழிவது உறுதியானது.

கடந்த காலத்தில் சிங்களவர்களுடன் அண்டி அனுசரித்துப் போனவர்களும் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்தந்த மொழிகளையும் கலாச்சாரங்களையும் அனுசரித்துப்போனவர்களே போரில் இருந்து நழுவி வாழ்வையும் வளத்தையும் பாதுகாத்துக்கொண்டனர். அண்டிப்பிழைக்கவும் அனுசரித்துப்போகவும் தம்மை மாற்றிக்கொண்டவர்கள் என்னுமொருவனை மாறாதே அப்படி இரு இப்படி இரு என்று சொல்ல தகுதியற்றவர்கள்.

புத்தரைக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் வைப்பது சிங்கள அரசாங்கம். சிங்களவன் இல்லாத இடத்தில் புத்தருக்கு என்ன வேலை????

எல்லாமே திணிப்பு!!!

...சகிப்பு தன்மையே யாழ்ப்பாணத்தவருக்கு இல்லாமல் போவதற்கு வரலாற்று காரணம் என்ன. புலம் பெயர்நத நாட்டில் கூட அவர்களால் வெள்ளையர்களை தவிர மற்றவர்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஏதாவது வரலாற்று காரணம் உண்டோ. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற முடியாதோ.

...யாழ்பாண மக்கள் நிச்சயமாக மற்றய கலாசாரங்களுடன் இணங்கி வாழுபவர்கள்தான்.

சகிப்பு தன்மையே இல்லாதவர்கள், வெள்ளையர்களைத் தவிர வேறு யாரையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் ஆனால் நிச்சயமாக மற்றைய கலாச்சாரங்களுடன் இணங்கி வாழ்பவர்கள் தான்??

சிங்களவர்கள் விகாரைக்கும் போகின்றார்கள் கதிர்காமக் கந்தனிடமும் போகின்றார்கள் திருப்பதிக்கும் போகின்றார்கள். பௌத்த விகாரைக்குப் போவதற்கு பௌத்தராக்கதான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பௌத்தம் ஒரு புனித ஆன்மீக மார்க்கம் அது தமிழர்பகுதிகளுக்கு எவ்வளவு வருகின்றதோ அவ்வளவு நன்மையே ! பேரினவாதமே தமிழர்களுக்குப் பிரச்சனையே  அன்றி பௌத்தம் அல்ல. பௌத்தமும் சமணமும் தான் தமிழ் தழைக்க   அடிப்படையில் வழிசெய்த்தது. பௌத்த விகாரரைகளை தமிழர்பகுதிக்குள் கொண்டுவருவது சிங்களவர்கள் செய்யும் நன்மையாகவே பாரக்கமுடியும். எதிர்காலத்தில் நிறைய தமிழர்கள் பௌத்தத்திற்கு மாறும் நல்ல வாய்ப்புகள் இதனால் உருவாகும். இஸ்லாம் இந்து கிறிஸ்த்தவர்கள் போல் எதிர்காலத்தில் பௌத்த தமிழர்களும் இருப்பது நன்மையே. அத்தோடு தற்போது தமிழர்கள் தமிழோடு ஆங்கில மொழியையும் கற்பது போன்று சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். மொழி மதம் சாதி பிரதேசம் என்ற குறுகிய வட்டத்துள் தொடர்ந்து இருந்தால் மிச்சமின்றி அழிவது உறுதியானது.

கடந்த காலத்தில் சிங்களவர்களுடன் அண்டி அனுசரித்துப் போனவர்களும் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்தந்த மொழிகளையும் கலாச்சாரங்களையும் அனுசரித்துப்போனவர்களே போரில் இருந்து நழுவி வாழ்வையும் வளத்தையும் பாதுகாத்துக்கொண்டனர். அண்டிப்பிழைக்கவும் அனுசரித்துப்போகவும் தம்மை மாற்றிக்கொண்டவர்கள் என்னுமொருவனை மாறாதே அப்படி இரு இப்படி இரு என்று சொல்ல தகுதியற்றவர்கள்.

தமிழின் வளர்ச்சியில் பெளத்தமும் சமணமும் செய்த பங்களிப்பு மறுக்க முடியாதது. முன்னொரு காலத்தில் இலங்கைத் தமிழர்களும் பெளத்தர்களாகவும் அதனது செல்வாக்கிற்குட்பட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெளத்த தத்துவவியல் மற்றைய மதங்களைப் போலவே ஆன்மா, கர்மம், மறுபிறப்பு என்று பல ஐதீகங்களைக் கொண்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் உயர்வான தத்துவவியல் என்பதை மறுப்பதற்கில்லை. இந்து இளவரசனாகப் பிறந்த சித்தார்த்தர் தனது சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து தன்னை வருத்தும் தீவிர துறவறத்தில் ஈடுபட்டு இறுதியில் ஞானோதயம் அடைந்ததாகவும் 'போதி சத்துவ' நிலையை எட்டியதாகவும் பின்னப்பட்ட புனை கதைகளைத் தவிர்த்துப் பார்த்தால் பெளத்த மதம் தனது காலத்தையும் விஞ்சிய வாழ்வியலையே போதித்திருக்கிறது. பிக்குமார்களுக்கு இணையாக பிக்குணிமார்களும் அந்தக் காலத்திலையே உருவாகியிருந்தார்கள். இன்று வரை வத்திக்கானில் ஒரு பெண் கூட 'கார்டினல்' இல் அங்கத்தவர் நிலையில் இல்லை. கிறிஸ்தவ சமயத்திலேயே இந்த நிலையென்றால் இஸ்லாம் மார்க்கம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

பெளத்த மதம் எல்லாவித சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராகவே போராடியிருக்கிறது. குறிப்பாக இந்து மதத்தில் புரையோடிப் போயிருந்த சாதியத்திற்கெதிராகவும் அன்றைய மனித சமுதாயத்தில் சாதாரண நடைமுறையாக எற்றுக் கொள்ளப் பட்டிருந்த அடிமை முறைமைக்கும் எதிராகவே பெளத்த மதம் வளர்ந்திருக்கிறது. சித்தார்த்தரின் காலத்தின் பின் உருவாகிய கிறிஸ்தவ சமயமாகிலும் அதன் பின் உருவாகிய இஸ்லாமும் அடிமை முறையை ஏற்றுக் கொண்டே வளர்ந்தன. மேற்குலகில் அடிமை முறை மிகச்சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையில் வளர்ச்சி பெற்று நிறுவனமயப் பட்டிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதமானது சிறுபான்மையினரைக் குறி வைத்து அம்மக்களது வளங்களை அபகரிப்பதிலும் அவர்களது அடையாளங்களை அழித்தொழிப்பதிலுமே தீவிரம் காட்டி வருகிறது. அன்பைப் போதிக்க வேண்டிய பெளத்த துறவிகள் மொட்டையடித்த காடைகளாக பிற மதச் சின்னங்களை பகிரங்கமாகவே தாக்குகிறார்கள். வடகிழக்கு தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து ஆக்கிரமிப்பாளர்களால் அமைக்கப் படும் எந்த மதச் சின்னங்களும் அம்மதத்தின் வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை.

புத்தர் எதைப் போதித்தாரோ அந்த வழியில் பெளத்தம் வளருமானால் இங்கே நாம் விவாதம் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது.

தன்னை கடவுள் இல்லை என்ற புத்திரருக்கு சிலை வைத்து கடை திறப்பது சரியா?

ஒரு மதமும் மனிதனுக்கு அறிவை குடுக்கவில்லை. அந்த அம்மை அப்பனே கொடுத்தார்கள்.

அதை எழுதியோர் எல்லோரும் கருவிகளே!

புத்தர் கடவுள் கொள்கையையே மறுத்ததுடன் சுரூப வழிபாட்டையும் விலக்கியிருந்தார். அவரது சீடர்களோ அவருக்கு சிலை செய்து வழிபடுகிறார்கள்.

சீடர்கள் என்ற வார்த்தையிலும் பார்க்க வியாபாரிகள் என்ற சொற்பதம் பொருந்தும்.

பெரிய மொட்டை வியாபாரிகள் நிர்வாணத்தை போதித்து விட்டு குண்டு துளைக்காத பென்ஸ் காரில் சுற்றி திரிவார்கள்.

பகிடி என்னவென்றால் சிங்கள கீழ்நாட்டு பட்டி குப்பத்தான்களை தவிர ஒருத்தரும் இவர்களை அங்கு மதிப்பதில்லை.

ஏமாற ஆக்கள் இருக்குமட்டும் எமாற்றுவோரும் இருப்பார்கள். :)

இராணுவ திணிப்போடு நடாத்தப்படும் எந்த நடவடிக்கையும்  சாதாரணமக்களால் ஏற்று கொள்ளமுடியாது.

அது புத்தனுக்கும் பொருந்தும், சிங்களவனுக்கும் பொருந்தும்.

இவை எல்லாவற்றையும் எதிர்த்து மண்ணீல் வீழ்ந்த வீரர்கள் எத்தனை பேர்  .இன்னும் இரத்தம் காயவில்லை.

சிங்களம் ஒரு நாசி இனம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு சான்று தேவை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களும் பௌத்த சமண காலத்தில் அந்த காலத்து தமிழர்களை பற்றி இயற்றப்பட்ட காப்பியங்கள். ஆகவே இந்த காலத்துக்கு பின்னர் தமிழர்கள்

  1. பௌத்தத்தை வெறுத்து இந்துக்கள் ஆகி இருக்க இருக்க வேண்டும், அல்லது
  2. அரசர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

இதில் எது உண்மை?

சிங்களவர்களில் சிலர் சொல்கிறார்கள் தமிழர்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யபட்டார்கள் என்று.

அதற்கு முன்னர் சிங்களவரும் தமிழரும் பௌத்தர்களாக இருந்தார்கள். சிங்களவர்கள் தமக்கென தனி மொழி பேசிய காரணத்தால் அவர்களை வெற்றி கொண்ட இந்து அரசர்களால் கட்டாய மத மாற்றம் செய்வது கடினமானதாக இருந்தது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா?

மேலுள்ளவற்றில் உண்மையில்லை என நினைக்கிறேன், ஜூட்!

பௌத்த மதத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் இருந்தன!

இவை தேரவாத பௌத்தம், மகாஜான பௌத்தம்  என இருவகைப்படும்! மகாஜான பௌத்தம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இன்னொரு கிளையை, ஹீனயான பௌத்தம் என்று கூறுகின்றது. பொதுவாகக் கூறினால், ஹீனயான பௌத்தமானது, இந்து மதத்தில் உள்ள 'தாந்திரீகப்' பிரிவு போன்றது.

மேலோட்டமாகப் பார்க்கையில், இவற்றுக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லாது போலத் தோன்றினும், தென்னிந்தியாவில் முதன்மை பெற்ற மதமாகவும், வட இலங்கையில் முதன்மை பெற்ற மதமாகவும் 'மகாயான பௌத்தம்' இருந்தது. இந்தப் பிரிவில், பல சூத்திரங்கள் (இவ்வாறு தான் அவர்களின் சமைய நெறிகளை அழைப்பார்கள்) மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன! எல்லோராலும் 'பரிநிர்வாண'நிலையை அடைய முடியுமென்பதே இவர்களது கருதுகோளாக இருந்தது! இது ஏறத்தாள இந்து மதத்தின் கருதுகோள்களுடனும் பல வழிகளில் ஒத்திருந்தது! 

காலப்போக்கில் இரண்டு விதமான 'புத்தமதங்களும்' இல்லாமல் மறைந்த அழிந்து போயின! நீங்கள் கூறும் இரண்டாவது காரணம், 'அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்ற வகையில், ஆரிய ஊடுருவலினால் இது நிகழ்ந்திருக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

பின்னர் தற்செயலாகத் தொலைந்து போன 'தேரவாத திரிபிடகங்களில்' சில, இலங்கைக்கு வந்த ஒரு சீன யாத்திரிகரால், அடையாளம் காணப்பட்டுச் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில், தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஆகிய இடங்களில் தேரவாத பௌத்த மதத்தையும் பரப்பிச் சென்றார்.

இலங்கையிலும் மகாயான பௌத்தத்தின் சுவடுகள் இன்னும் இருக்கின்றன! இலங்கையில் உள்ள புத்த மதத்தவர்களில் எழுபது வீதமானோரே 'தேரவாத பௌத்தர்கள்' ! எஞ்சிய 'மகாயான பௌத்தர்களுக்கு' அதிக மரியாதை அழிக்கப்படாததால், அரச மானியங்களில்லாது, அது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இதுவே 'கந்தரோடை', மாதகல் போன்ற விகாரைகள் கைவிடப்பட்டமைக்கும், காரணங்களாக இருக்கக்கூடுமெனினும், 'மகாவம்சம்' என்னும் கட்டுக்கதையானது, தேரவாதத்தை முன்னிலைப்படுத்தியதும் முக்கிய காரணமாகும்!

இருப்பினும், தேவசேனாதிபதி 'முருகன்' என்னும் மகாயானக் கருத்தை, இன்னும் தேரவாத விகாரைகள் கைவிடவில்லை என்பதையும், புத்த விகாரைகளிலிருக்கும் 'விஷ்ணு' சிலைகளும், முருகன் சிலைகளும்   காட்டி நிற்கின்றன!

நைனாதீவு விகாரையில் ஒரு 'பிள்ளையாரும்' குந்திக்கொண்டிருக்கிறார். இது பற்றி அங்கிருந்த 'விகாராதிபதியிடம்' பல முறை கேட்டபோதும், அவரால் சரியான விளக்கமளிக்க முடியவில்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையிலும் மகாயான பௌத்தத்தின் சுவடுகள் இன்னும் இருக்கின்றன! இலங்கையில் உள்ள புத்த மதத்தவர்களில் எழுபது வீதமானோரே 'தேரவாத பௌத்தர்கள்' ! எஞ்சிய 'மகாயான பௌத்தர்களுக்கு' அதிக மரியாதை அழிக்கப்படாததால், அரச மானியங்களில்லாது, அது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
அப்ப மையவாத சிங்களவரிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லுங்கோ.... .........சிங்களவர்கள் சைவராகவும் இருந்துள்ளார்கள்....தேவநம்பியதீசன்.....ஒரு சைவன் என்று சொல்லியினம்.
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மையவாத சிங்களவரிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லுங்கோ.... .........சிங்களவர்கள் சைவராகவும் இருந்துள்ளார்கள்....தேவநம்பியதீசன்.....ஒரு சைவன் என்று சொல்லியினம்.

இருக்கலாம், புத்தன்! :D

இது பெரிய பதிவாக விரிந்து கொண்டு போகப்போகுது போல கிடக்கு! :o

இருந்தாலும் பின்வரும் பந்தி, ஓரளவுக்கு, இலங்கையில் பௌத்த வரலாறு பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அளிக்கும் என எண்ணி, இங்கே இணைக்கிறேன்!

கி.பி இரண்டாம் நூற்றாண்டளவில் வட்டகாமினி மன்னனின் காலத்திலேயே சிங்களரிடையே மகாயானக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. அபயகிரி விகாரை இக்கருத்துக்களை வரவேற்றுக் கொள்ள ஈழத்தீவில் சிங்களரிடையே முதன்முதலில் பௌத்த சங்கத்தில் பேதம் ஏற்பட்டது. வொகாரிக தீசன் காலத்தில் இப்பிளவின் விளைவாக மகாயான பௌத்த பிரிவின் நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டு தேரவாதமே உண்மையான பௌத்தம் எனும் முடிவு திணிக்கப்பட்டது. மீண்டும் கொடபாயன் ஆட்சிக் காலத்தில் மகாயான பௌத்தக் கருத்துகள் எழுந்த போது, தேரவாத பௌத்தத்தின் அடக்குமுறையால் அனைத்து மகாயானக் கோட்பாட்டு நூல்களும் எரிக்கப்பட்டு அபயகிரி விகாரைக் குருமார்கள் குறிசுடப்பட்டு நாடுகடத்தப்பட்டார்கள். இவர்களனைவரும் சோணாட்டின் காவிரிப்பூம் பட்டினத்தில், விகாரை ஒன்றில் அடைக்கலம் புகுந்தனர்.

4%20(2).jpgமகாசேனன் அரசுக்கட்டிலேறிய கி.பி மூன்றாம் நூற்றாண்டளவில் மீண்டும் மகாயான பௌத்தம் தலை தூக்கியது. இம்முறை மகாசேனன் தேரவாதத்தை ஆதரித்த மகாவிகாரையினரைத் தண்டிக்க தேரவாத பௌத்தம் சரியத் தொடங்கியது. தேரவாதத்தின் மத்தியநிலையமாக நின்ற மகாவிகாரை அழிக்கப்பட்டது. தேரவாதப் பிக்குகள் தஞ்சம் தேடி பிற தேசங்களுக்கு தப்பி ஓடினர். அபயகிரி விகாரையும் மகாயான பௌத்த பிரிவும் இந்நிலையில் மேன்மையடையத் தொடங்கின. ஆயினும் காலவோட்டத்தில் மகாயான பிரிவுக்கெதிரான கருத்துக்கள் மகாசேனனது காலத்திலேயே வலுப்பெற மகாயான பிரிவைப் பரப்புவதில் முன்னின்ற சங்கமித்திரர் மற்றும் சொண எனும் அமைச்சன் உட்பட பல மகாயான பிரிவினர் தேரவாத பிரிவினரால் கொல்லப்பட்டு மீண்டும் சிங்களரிடையே தேரவாத பௌத்த கொள்கைகள் மேலோங்கின. மகாசேனன் காலத்து இந்நிலைமை மகாயான பௌத்தத்திற்கு மட்டுமல்ல திருக்கோணமலையில் கோணேச்சரத்தை அழித்து கொகர்ண விகாரையை அமைக்க முற்பட்டதன் மூலம் தமிழர்களுக்கெதிரானதான விளைவுகளையும் கொண்டுவந்தது.

இவ்வாறு சிங்களரிடையே கூட பௌத்த தேரவாத கருத்துக்களே விதைக்கப்பட்டு மாற்றுக் கருத்துக்கள் - கருத்தாளர்கள் அழிக்கப்பட்டனர். மீண்டும் மகாசேனனது காலத்திலேயே சிங்களரிடையே மீள உருவாக்கம் பெற்ற தேரவாத பௌத்தத்தின் எழுச்சியை குறிப்பிட்டு முடியும் மகாவம்சம் இறுதிவரை தேரவாத பௌத்த சிங்களத்தின் பிரதியாக தனது உள்ளடக்கத்தைக் கொண்டு நிற்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.