Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தீர்மான நகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1509902_664046606990247_177888166_n.jpg

1912513_664046680323573_45003851_n.jpg

1969235_664046763656898_66015495_n.jpg

1972531_664046816990226_876762665_n.jpg

 

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோம். ஆனால் அது போர்குற்றம் என்றார்கள். 
 

இன்று போர்குற்றம் என்ற சொல்லையே காணவில்லை. வெறும் மனிதஉரிமை மீறல் என்று வந்து நிற்கின்றது. அடுத்த ஆண்டு சிறீலங்கா என்ற சொல்லை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

 

சிறிலங்கா என்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு நாட்டின் பெயரை போட்டுப்பாருங்கள். இது அநேகமான அனைத்து நாடுகளிற்கும் பொருந்தும் தீர்மானம். 

 

இந்த இலங்கையை பாராட்டி வழங்கப்படும் இந்த சான்றிதழை வரவேற்கும் எம்மவர்களை என்னவென்றுசொல்வது? இதில் நீர்த்துப்போக என்ன உள்ளது? 

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்துடன் தீர்வென்றால் அதனை தலைவர் எப்பொழுது வாங்கித்தந்துவிட்டிருப்பார். 

 

இதில் எங்கேயும் தமிழர்களிற்கான நீதி பற்றி ஆணித்தரமாக எழுதப்படவில்லை. எமது நோக்கு சிங்களத்தை தண்டிப்பதல்ல. எமக்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றுக்கொள்வதேயாக இருக்க வேண்டும். மகிந்தவிற்கு பின்னர் வரும் எந்த ஆட்சியும் பெயரளவில் மட்டுமே மாற்றம் இருக்கும். கொள்கையளவில் மகிந்தவைவிட கொடியதாகவே இருக்கலாம். 

 

ஐ.நா.வின் சட்ட விதி 99ன் படி  பொதுச்செயலாளருக்கு (பான் கீ மூன்) சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது. இதனடிப்படையில் தான் சீரியாவில் விசாரனைக்கு உத்தரவும் இடப்பட்டது. இவரின் இந்த அதிகாரத்திற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. 

 

வி பிள்ளை அவர்கள் பலமுறை சர்வதேச விசாரனை தேவை என்று வலியுறுத்தியும் அதனை எந்த நாடுகளும் காதில் வாங்குவதாக இல்லை. பான் கீ மூனும் இதனை எதிர்த்தே வந்தார். பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி தலைவரை கொல்வதற்காக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் இருந்த ஒரு சிப்பாய் என்பதையும் தகவலாக அறிந்துகொள்வோம். 

 

எனவே வேறு எந்த நாடுகளும் சர்வதேச விசாரனை பற்றி தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னர் தாமே ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து சர்வதேச விசாரனை என்ற கோரிக்கையை குப்பையில் போட்டுவிட்டது.

 

எதிர்வரும் 31ஆம் திகதி ஆகஸ்ட் மாதத்துடன் நவி பிள்ளை அவர்களின் பதவி காலம் முடிவிற்கு வருகின்றது. அதற்கு பின்னர் பான் கீ மூன் போன்ற ஒரு அமெரிக்காவின் கைப்புள்ளை அந்த இடத்திற்கு வரலாம். அதன் பின்னர் இதுபோன்ற தீர்மானங்களில் ஈழம், தமிழர் போன்ற சொற்களே இருக்காது போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீது அடக்குமுறைகளயும் அழிப்பையும் ஏவிவிட்ட சர்வதேசமும், தமிழர் விரோததேசம் இந்தியாவும் அதன் ஏவலாளியான சிங்களமும் எதிர்பார்ப்பது, எதிர்காலத்தில்  எம்மை வன்முறையாளர்களாக காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை, நாம் மனம் சலித்துப்போய் வன்முறையைக் கையிலெடுப்போம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

போர்வடிவங்கள் மாற்றமடைந்து இவர்கள் எண்ணங்கள் தவிடுபொடியாகும் வண்ணம் காலத்துக்கேற்ற போராயுதத்தை எம் கையில் எடுப்போம். எதிரியின் எதிர்பார்ப்பை ஏமாற்றமடையச்செய்வோம்.

 

நாம் எந்தவிதமான ஆயுதத்தைக் கயிலெடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான். அதன்படி முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட போராயுதங்களை  நாம் எடுக்கவேண்டுமென எதிர்பார்க்கிறான், ஆகவே நாம் மனக்கிலேசமடைந்திடாமல் திடமான நம்பிக்கையுடன் எமது போர்வடிவங்களையும் உத்திகளையும் மாத்தியமைத்து முன்னேறுவோம்.

 

தவிர தமிழீழ விடுதலைப் புலிகளது ஆளுமை எப்போதும் எம்மத்தியிலும், எதிரியின்மனத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.

 

இன்றைய காலகட்டத்துக்கு இன்னுமொரு ஆயுதப்போராட்டம் தேவையில்லாதது,

 

ஆனால் அதுவே நிரந்தரமானதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொல்வதற்கு எதுவுமில்லை.

முன்பெல்லாம் நீர்த்துப்போகச் செய்வார்கள். அவர்களுக்கு வேலையே இல்லாமல் பண்ணிவிட்டார்கள். ஆனால் இந்த முறை கனடா போன்ற நாடுகள் வீரியமாகும்படி திருத்தங்களை முன்மொழிந்தால்தான் உண்டு. அதுதான் திட்டமோ தெரியவில்லை.

இலங்கை சொல்லியிருக்கும்

தாங்கள் கேட்டமாதிரி 2006 இலேயே புலிகள் சரணடைந்து இருந்தால் இவளவு மக்களும் செத்திருக்கமாட்டார்கள் ..

2009க்கு பிறகும் தமிழர்களை கூட்டம் கூட்டமாக கொன்றால் தான் இனவழிப்பு என்று...

போர் நடந்த இடத்தில் மக்கள் செத்தால் அது எப்படி இனவழிப்பாகும்?

 

மற்றும் இலங்கை ஒரு வே.வீ. வெத்தலை பெட்டி :) எல்லாருக்கும் உபயோகம்....

தமிழர்களை கூட்டம் கூட்டமாக கொன்றால் தான் இனவழிப்பு என்று...

போர் நடந்த இடத்தில் மக்கள் செத்தால் அது எப்படி இனவழிப்பாகும்?

போர் தவிர்ப்பு வலயத்தில் கொத்து கொத்தா கொன்றது, சரணடைந்த மக்களை கொன்றது என்று நிறைய இன அழிப்பு நடந்தது.

உங்கள் கூற்றை கேட்டால் 1952 இனவழிப்பின் பின் ஒன்றுமே தமிழருக்கு நடந்திருக்கவில்லை.

5 வருட சரித்திரம் மட்டுமே தெரிந்திருக்கிறது.

இதில அதிகமாக அலட்ட ஒன்றும் இல்லை, உலக அரசியல் நகர்வுக்கு இசைந்து பயணிக்க நாங்களும் பயணிப்போம். மேற்குக்கு தேவையானதை இலங்கையினால் அவ்வளவு எளிதாகா செய்து கொடுக்க முடியாது, அதுவரை போராடுவோம். அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரும்.

கருத்துச் சொல்வதற்கு எதுவுமில்லை.

முன்பெல்லாம் நீர்த்துப்போகச் செய்வார்கள். அவர்களுக்கு வேலையே இல்லாமல் பண்ணிவிட்டார்கள். 

 

 

 

 

முன்பு இந்தியா நீர்த்து போக செய்தது. இந்த முறை இந்தியா ஏற்கனவே தனது பங்களிப்பை செய்து விட்டதாக படுகிறது. நிஷாவின் இந்தியப் பயணம் கண்துடைபே. தேர்தல் என்பதால் அமெரிக்கா அடக்கிவாசித்திருந்ததாக படுகிறது.  13ம் திருத்தம் பற்றி பிரேரணை இவ்வளவு ஆர்வம் காட்டியிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கு.  வேறு என்ன விளக்கத்தை அதற்கு கொடுக்க முடியும்?

 

இவற்றுக்கு எல்லாம் மேலால் கமருன் இலங்கையில் வைத்து சர்வதேச விசாரணை வரும் என்று கூறியிருந்தார். 

 

பகிடி பல புலம் பெயர் அமைப்புக்கள் தாம் தாம் செய்ததாக சொல்ல அந்தரப்பட்டன.  வ்டை போச்சே. அடுத்தகரையில் அமெரிக்காவை, தாக்கி காலின் கீழ் போட்டு மிதித்துவிட்டு தாம் செய்து முடிக்க போவதாக சிலர்  துடித்தார்கள்.  ஜனநாயக தேர்தலால் தெரியப்படும் அரசை முழுமையாக எதிர்க்க அமெரிக்காவுக்கு சரவதேச ஆதரவு வேண்டும் என்பதை இனித்தன்னும் உணர்வார்களாக்கும்.  

 

சில தளங்களில் அமெரிக்கா, போரை பற்றி கதைக்கவில்லை, உள்நாடு அதிகாரத் துர்ப்பிரயோகம் பற்றித்தான் கதைதிருப்பத்தாக சொல்கிறார்கள். அது உண்மை. போரும் விசாரணையும் பிரேரணையில் பிரதான பாகம் கொள்ளவில்லை. சர்வாதிகாரத்தை நிரூபிக்கவும் நீக்கவும்தான் முயற்சி நடந்திருக்கு. 

 

இனி 2015 க்கு காத்திருப்பதை பற்றி ஆராய எதுவும் இல்லை. ஒவ்வொரு வருடமும் காத்திருப்பதை பற்றி மூன்று வருடங்களுக்கு மேல் ஆராந்தாயிற்று. 

 

இனி UNPயை காத்திருப்பதைப்பற்றித்தான் எழுத வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒருதனிக் கோரிக்கையில் பொது வேட்பாளரை போட்டு அதிபர் பதவியை கைப்பற்றினால் என்ன நடக்கும் என்று ஆராயலாம். அந்த நேரம் மகிந்தா பதவியை கையளிப்பாரா என்பது கேள்வி. கையளிக்காவிட்டால் அப்போது அமெரிக்காவை இறுக்கி பிடிக்க ஒரு சந்தர்ப்பம் எழலாம்.  அதுவரையும், அமெரிக்க தான் ஜனநாயகமாக அதிபர் தேர்தல் நடக்கும் நாட்டில் தலையிடுவதில்லை என்று காட்ட இப்படித்தான் முழங்கையில் பிடித்துக்கொண்டிருக்கும். 

போர் தவிர்ப்பு வலயத்தில் கொத்து கொத்தா கொன்றது, சரணடைந்த மக்களை கொன்றது என்று நிறைய இன அழிப்பு நடந்தது.

உங்கள் கூற்றை கேட்டால் 1952 இனவழிப்பின் பின் ஒன்றுமே தமிழருக்கு நடந்திருக்கவில்லை.

5 வருட சரித்திரம் மட்டுமே தெரிந்திருக்கிறது.

 

போர் தவிர்ப்பு வலயத்தில் புலிகளுக்கு என்ன வேலை? ஆயுதங்களுடன்?

அமெரிக்கா விட்டது பெரிய ஏமாத்து(அது தான் அவர்களுக்கு முடிந்ததா அல்லது தங்களின் சில நன்மைகளுக்கு அடுத்தவருடம் தள்ளிப்போடார்களா தெரியாது). ஆனால் இந்த வருடம் பிரேரணையில் கட்டாயம் அனைத்துலக விசாரணை வரும் என்று நம்பியதால் எந்த மாற்றுக்கருத்தாளரும் தங்களின் பக்க திரி ஒன்றும் திறக்கவில்லை. அந்தளவுக்கு அம்ரிக்காவால் ஏமாற்றம் கொடுக்கப்பட்டிருக்கு. 

திரைமறைவில் இலங்கை அமெரிக்காவிடம் சரணடைந்ததோ தெரியாது....ஆரம்பம் முதலே..இலங்கை (சிங்களவர்கள்) ஒரு மேற்கு சார்பான நாடு..ராஜபக்சே சகோதரர்களிடமும் காசு இருக்கென்றால்..அதை மேற்கு நாடுகளில் செலவு செய்தால் தான் பயன் தரும் :)

 

போர் தவிர்ப்பு வலயத்தில் புலிகளுக்கு என்ன வேலை? ஆயுதங்களுடன்?

1983 இல் புலிகள் கொழும்பில் போர் புரிந்தார்களா? 8000 தமிழர் செத்தார்களே?

2000 - 3000 இலிருந்து 8000மா?

 

 சும்மா சும்மா சண்டையை வளர்த்து விட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சரியில்லை...நாங்கள் எதிராளி அடிப்பான் என்றால்...தருணம் வரும் மட்டும் பம்முவதில் தவரில்லை... :) இல்லையென்றால்...அடி தான் வாங்கணும்...(எத்தனை bar இலே வாங்கியிருப்போம்)

  • கருத்துக்கள உறவுகள்

போர் தவிர்ப்பு வலயத்தில் புலிகளுக்கு என்ன வேலை? ஆயுதங்களுடன்?

புல்லுப்புடுங்க போயிருக்கலாம்

புல்லுப்புடுங்க போயிருக்கலாம்

 

அது தான் ஆமியும் சேர்ந்து புடுங்கியிருக்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு எதிராக தீர்ப்புகள் சட்டங்கள் நிறைவேறினால் அதன் பின் வடமாகாணத்தில் எப்படியான நிலமைகள் வரும்?

இலங்கைக்கு எதிராக தீர்ப்புகள் சட்டங்கள் நிறைவேறினால் அதன் பின் வடமாகாணத்தில் எப்படியான நிலமைகள் வரும்?

 

தமிழீழம் தான்.... (இலங்கை இராணுவம் கலைக்கப்பட்டு வெளியேறும்...சிங்களவர் ஓடி விடுவர்...)

 

சிலவேளை கொழும்பில் தமிழருக்கு திருப்பியும் அடி விழும் :)

Edited by naanthaan

2000 - 3000 இலிருந்து 8000மா?

சும்மா சும்மா சண்டையை வளர்த்து விட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சரியில்லை...நாங்கள் எதிராளி அடிப்பான் என்றால்...தருணம் வரும் மட்டும் பம்முவதில் தவரில்லை... :) இல்லையென்றால்...அடி தான் வாங்கணும்...(எத்தனை bar இலே வாங்கியிருப்போம்)

மன்னிக்கவும். எங்களுக்கு பார்ல குடுத்து தான் பழக்கம்.

நீங்கள் வேண்டி கட்டுபவர் என்றால் எல்லோரும் அப்படியா?

புலிகள் எதிராளி ஆம்பிளை என்று அடித்தால், கோழைகள் போல் 8000 தமிழரை கொழும்பில் கொன்றுபோடுவது தான் யுக்தி.

  • கருத்துக்கள உறவுகள்

2000 - 3000 இலிருந்து 8000மா?

 

 சும்மா சும்மா சண்டையை வளர்த்து விட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சரியில்லை...நாங்கள் எதிராளி அடிப்பான் என்றால்...தருணம் வரும் மட்டும் பம்முவதில் தவரில்லை... :) இல்லையென்றால்...அடி தான் வாங்கணும்...(எத்தனை bar இலே வாங்கியிருப்போம்)

 

 

எப்படி சண்டையை வளர்த்து விட்டோம். சேட்டை களட்டி விட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றோமா? :icon_mrgreen:  :icon_mrgreen:

நான் மறந்து போனேன்..தலைவரின்ரை டயலாக் "இன்று போய் ..போருக்கு..நாளை வா" என்றதை.... :)

 

எங்கே போனாலும் நான் ஒரு பிச்சைகாரன்...ஆட்கள் தருவதை வாங்குவதே...என் வழி

 

(இதெல்லாம் இந்த திரியில் தேவையா என்று அட்மின்ஸ் நினைக்கலாம்) ..நான் நிப்பாட்டுறன்...


எப்படி சண்டையை வளர்த்து விட்டோம். சேட்டை களட்டி விட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றோமா? :icon_mrgreen:  :icon_mrgreen:

 

அதை தான் விவசாயி அண்ணா (தம்பி) சொல்லுறார்

அமெரிக்க தீர்மான ந(க்)கல் எண்டு வரவேண்டும் 

எப்படி சண்டையை வளர்த்து விட்டோம். சேட்டை களட்டி விட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றோமா? :icon_mrgreen::icon_mrgreen:

13 சிங்கள கூலிகள் சிதற, அதை பார்த்து சிறி லங்கன்ஸ் அலற, மூக்கன் தன் பதவியை தக்கவைத்து சிங்கள மோடையரை திசை திருப்ப அப்பாவி கொழும்பு தமிழர் மீது வன்முறையை அவிழ்த்துவிட்டான். 8000 தமிழர் பலியானார்கள்.

புலி ஒரு இராணுவ அமைப்பு என்று கூட இன்னும் தலைக்கு ஏறவில்லை. பிரபாகரனை மதர் தேரேசாவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் சிங்கள அரசியல் காடைகளுக்கு, அப்படித்தான் அவர்கள் என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2013

 

 

 

 
 
 
HRC22+A.gif
(அமெரிக்க தீர்மானத்தின் நகலைக் கீழே காண்க)
இலங்கை குறித்த ஐநா மனித உரிமை தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் 'அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் நாம் முடிவெடுக்க முடியாது' என்று மழுப்பலாக பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை கவனிக்கும் எல்லோருக்குமே அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்!

உலகிற்கே தெரிந்த விடயம் இந்திய பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் தெரியாது என்று சொன்னால் அதற்காக இந்திய மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனாலும், உண்மை அதுவல்ல. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள 'இலங்கைக்கு இலேசாக வலிக்கும்' வாசகங்களைக் கூட இந்தியா ஏற்க மறுக்கிறது என்பதே இதன் பின்னுள்ள கொடூரமான உண்மை. 
srilanka-22-3.gif
இலங்கைக்கு கொஞ்சமும் வலிக்காத வகையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உலகநாடுகளுக்கு சமிக்ஞை அனுப்பும் வகையிலேயே இந்திய அரசு இப்போது நடந்துகொள்கிறது. ராஜதந்திர மட்டங்களில் இன்னும் தீவிரமாக இலங்கையை ஆதரித்து இந்தியா பஞ்சாயத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது உறுதி. 

இதுதான் தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் லட்சணமா? டெசோ கலைஞருக்கே வெளிச்சம்!

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது. அடுத்த வரைவு ஏழாம் தேதி வெளியாகியுள்ளது. இந்த தீர்மான நகல் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்க்கும் அளவிலோ, உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் எதிர்பார்க்கும் அளவிலோ இல்லை.

இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையையும் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பையும் தமிழர்கள் கோருகிறார்கள். இலங்கைப் போரின்போது பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன. இவை எதுவும் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் இல்லை.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் நிரைவேற்றப்பட்ட இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போல இந்த புதிய தீர்மானம் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீமானத்தை விட ஒரு படி மேலாகவும் புதிய தீர்மானம் இருக்கிறது.

அமெரிக்க தீர்மான விவரம்

உலக நாடுகளுக்கு 7.3.2013 அன்று அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

1. இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் ஆகிய இரண்டுமே பன்னாட்டு சட்டங்களின் கீழான பொறுப்புகளை நிரைவேற்ற போதுமானவை அல்ல என்று இந்த தீர்மானம் கவலை தெரிவித்துள்ளது.

2. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.

3. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

4. இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நியாயமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிற கடந்த ஆண்டின் தீர்மானத்தில், "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

5. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும்.

6.  ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐநா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும்  2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தின் நகல்:
HRC22+A.gif
HRC22+B.gif
HRC22+C.gif
அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக செய்ய இந்தியா துடிப்பது ஏன்?

1. முதன் முறையாக "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற கருத்து ஐநா தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், அப்படி ஒரு கோரிக்கை உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இதற்கு முன்பு டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இதனைக் குறிப்பிட்டாலும், அந்த தீர்ப்பாயமே அரசு சாராத ஒரு குடிமக்கள் அமைப்புதான் என்பதால் அதற்கு சட்ட வலிமை இல்லை. அடுத்ததாக, ஐநா பொதுச்செயலர் அமைத்த இரண்டு குழுக்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் - அந்த அறிக்கைகள் ஐநா பாதுகாப்பு அவையிலோ, மனித உரிமைகள் அவையிலோ சமர்ப்பிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. அவற்றின் மீது ஐநா நடவடிக்கை எதுவும் இல்லை.

"இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பது நவநீதம் பிள்ளை அவர்கள் மார்ச் 20 அன்று சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில்தான் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இது தீர்மானத்திலும் இடம்பெறுவது முக்கியமானதாகும்.

2. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. சுமார் ஆறு குழுக்கள் சென்று அவர்களது அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியாகும் நிலையில் அது உலக அரங்கில் இலங்கையை மேலும் அம்பலப்படுத்துவது உறுதி.

3. "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" எனும் புதிய வாசகத்துக்குள் எதை வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்.

4. அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் - ஐ.நா மனித உரிமைகள் விவாதத்தில் இலங்கை நிரந்தரமாக இடம் பிடிக்கும்.

இலங்கையிடம் அளவுகடந்த காதல் கொண்டுள்ள இந்தியா இதையெல்லாம் ஏற்பது கடினம்தான்.

திரிசங்கு நிலையில் இந்தியா

47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான்.
mathi+2.jpg
அமெரிக்க தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். கடந்த ஆண்டு 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து வெறிபெறச்செய்தன. இந்த ஆண்டு அதைவிட அதிகமான நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும். இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை இன்னும் தனிமைப்பட்டு போகும்.

மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக" கூறும் தீர்மானத்தை இலங்கை எப்படி தானாக ஏற்கும்?

ஏற்றுக்கொண்டால் உள்நாட்டில் அவமானம், ஏற்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இலங்கைக்கு.

தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கைக்கு வலிக்கும். ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இந்தியாவுக்கு.

அதனால்தான் 'இலங்கைக்கு வலிக்காத மாதிரி தீர்மானத்தை மாற்றுங்கள்' என்று கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா?

தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது. டெசோ கலைஞர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காண தமிழ்நாட்டு தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
dmk-poster.jpg

http://arulgreen.blogspot.com/2013/03/SriLanka-US-Draft-Resolution-HRC22.html

கடைசி போஸ்டர் சூப்பரப்பு.

தலைவர் பீச்ல காலை குட்டி நித்திரை போட்டு உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழரை இன்னுமொரு முறை காப்பாற்றினார்.

அவர் பவர் ஸ்டார்.

போஸ்டர் மட்டுமா மழை விட்டாலும் தூவானம் நின்றுவிடுமா என்று சொன்ன தி மு க அவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.