Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL_LION.jpg

வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

மார்ச் 21ம் நாளிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் பட்டியலிடப்பட்டுள்ளன. 

அத்துடன், இவற்றுடன் தொடர்புடைய, 424 நபர்களும் தடைவிதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தடைவிதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளிலும், இந்தியா மற்றும் சிறிலங்காவிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டவர்களினது தற்போதைய முகவரி, சிறிலங்கா முகவரி உள்ளிட்ட விபரங்களுடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் ஊடாக சிறிலங்கா அரசின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை பார்வையிடலாம் :-

 http://documents.gov.lk/Extgzt/2014/PDF/Mar/1854_41/1854_41%20%28T%29.pdf#sthash.ClOzAbBi.dpuf

http://www.puthinappalakai.com/view.php?20140404110267

உடனே சிங்கள அமைப்புகளையும் தடை செய்ய கோரி சிறி லங்கா குடும்ப பயங்கரவாதிகளின் பெயர்களையும், முகவரிகளையும் வெளியிட வேண்டும்.

அப்படியே பட்டியலில் உள்ளோர் எல்லாம் அவதூறு வழக்கு போட்டு நட்ட ஈடு கோரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் விலாசங்கள்.. தொலைபேசி இலக்கங்கள்.. என்று.. சகல.. விபரங்களோடும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகம் பேர் ஐக்கிய இராச்சியம் என்றும் உள்ளது. உண்மையான விபரங்களோ தெரியவில்லை. ஆனால்.. இவற்றை எதிரிக்கு வழங்க.. பலர் எமக்குள்ளேயே இயங்குகிறார்கள் என்பது கேவலம். :o:icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

இதைத்தான் நானும் எழுதவந்தேன் 

அதிலுள்ள பிரான்சின் நண்பர்களது தொலைபேசி  இலக்கங்கள் பிழையானவை

அதேநேரம்

ஆக்கிய  

அழித்தவர்களின் பெயர்களும்

தாங்களே  தற்பொழுதைய புலிகள் என்பவர்களின்  பெயர்களும் இங்கு வராதது  கவனிக்கத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரச பயங்கரவாதிகளின் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாகவும், சட்டரீதியாக அவர்களைத் தண்டிப்பது தொடர்பாகவும் ஆராய வேண்டும்.

உண்மையில் இந்த விபரங்ஙகள் பழையன என நினைக்கின்றேன். ஒதுங்கிப் போய்விட்ட பலரது பெயர்களையும் வைத்துப் படம் காட்டுகின்றது. ஆனாலும் சிங்கள அரசின் இந்தச் செயலை ஏதாவது விடயத்தினுள் மாட்ட வைக்க வேண்டும்.

பட்டியிலில் உள்ளவர்கள் எல்லோரும் வெளிநாட்டு பிரசைகள் ,பிறப்பால் ஈழத்தவர்.  தங்கள் நாடுகளில் இதற்கு எதிராக வழக்கு போட்டு  இதை எதிர் கொள்ளும் வசதிகள் இருக்கும் என நினைக்கிறேன்

இலங்கை இப்படியான அறிவிப்புகளின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க நினைக்கிறது. அதாவது இனி தான் சர்வதேச விசாரணகளில் இருந்து தப்புவதற்கு தடையாக இருக்கும் புலம்பெயரமைப்புகளை பயமுறுத்தல்.. மேலும் உலகில் இருக்கும் தமிழினத்திற்கு பூச்சாண்டி காட்டல்.. தனக்கு சாதகமாக இருக்கும் நாடுகளில் இத்தடைகளை வைத்து நடவடிக்கை எடுத்தல். உலகத்திற்கு புலிப்பூச்சாண்டிகாட்டல். இலங்கையிலும் தமிழ்மக்களை ஒரு அச்சத்தில் அடிமையாக வைத்திருத்தல். இதன் மூலம் ஒரு தீர்வும் தமிழ்மக்களுக்கு கிடைக்காமல் முழுசிங்கள பௌத்தனாடுக்கனவை செயற்படுத்தல் இலங்கையின் இந்த நோக்கம் பிழைக்கவைக்க வேண்டுமானால் புலம்பெயர் தமிழ் மக்களிடையே இன்னமும் ஓற்றுமையை வளர்த்து தங்கள் அறிவாற்றலால் இன்னும் நீஙள் வாழும் நாடுகளுடன் நெருக்கமாக பலவழிகளிலும் செயற்படவேண்டும். இலங்கையின் ஒவ்வொரு இனவாத நடவடிக்கையும் பெரிதுபடுத்தி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏன் தடைசெய்தோம் என இலங்கை நித்தமும் கவலைப்பட வைக்கவேண்டும். தமிழ்மக்களில் புல்லுருவிகளை அடையாளம் கண்டு மற்றவர்களிடம் விழிப்பு உணர்வுடன் இருக்கசெய்ய வேண்டும்.. தங்களையறியாமலே (அல்லது சுயனலத்திற்கு) தன் இனத்தை அழிப்பதற்கு உதவுபவர்கள்.இவர்களை வைத்துதான் ஊடுறுவல் செய்து தன் இன அழிப்பை தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் பிறந்தாலும் வெளிநாட்டு பிரஜையாக உள்ளவரின் கடவுச்சீட்டு இலக்கம் போன்ற ஆவணங்களை இணையத்தில் வெளியிடுவது சட்டரீதியாக மிகத்தவறானது. மேற்கு நாட்டு சட்டங்களில் ஒருவரின் privacy  எவ்வளவு  விலை  மதிப்பானது என சிறிலங்கா அரசு அறியவில்லையோ அல்லது தமிழர்கள் தானே பயந்து விடுவார்ர்கள் என நினைத்ததோ தெரியவில்லை. சிறிலங்காவில் தமிழர்களை நடாத்துவது போல் வெளிநாட்டிலும் செய்யலாம் என சிறிலங்கா அரசு எண்ணி செயற்படுவது போல் உள்ளது.

முன்பு புலிகளை தடை செய்தவுடன் வெளிநாடுகள் தடைசெய்தது போல் இப்போதும் நடைபெறும் என சிறிலங்கா அரசு பகல் கனவு காண்கிறது.

பட்டியிலில் உள்ளவர்கள் எல்லோரும் வெளிநாட்டு பிரசைகள் ,பிறப்பால் ஈழத்தவர். தங்கள் நாடுகளில் இதற்கு எதிராக வழக்கு போட்டு இதை எதிர் கொள்ளும் வசதிகள் இருக்கும் என நினைக்கிறேன்

ஏற்கனவே கனடிய தமிழர் பேரவை ரோகன் குணரத்தின என்ற கூலியின் மீது அவதூறு வழக்கு போட்டு $53,000 தண்டம் தண்டனையாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை பாவித்து இலகுவாக வழக்கு போடலாம்.

வெளிநாடுகளும் தம்மால் அங்கீகரிக்கபட்ட அமைப்புகளை யாரோ ஒரு பிச்சைக்கார நாடு குற்றம் சாட்டுவதை விரும்பாது.

தகுந்த பதிலடி உடனே கொடுக்கவேண்டும்.

இதை இப்போது சிங்களம் வெளிப்படையாக சொல்லி செய்கிறது, இல்லாவிட்டாலும் இந்த நபர்கள் இலங்கை போயிருந்தால் அவர்கள் காணமல் போயிருந்திருப்பார்கள்.

இறந்து பல வருடங்களானவர்களின் பெயரும் விலாசமும் பட்டியலில் உண்டு. மேலுலக விலாசம் இல்லை. மேலுலக விலாசம் தெரிந்தவர்கள் இருந்தால் கோத்தாவிடம் அனுப்பி பட்டியலை update பண்ணிவிடவும்.

சிங்களம் காயை மிக தந்திரமாக நகர்துகின்றது .ஜெனிவாவில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் தனது அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டது போலிருக்கு ?

இந்த நடவடிக்கைக்கு  சில மேற்குலக நாடுகளும் துணை போயிருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம் .

இது எதுவுமே அறியாமல்  (அந்த அளவு அறிவு இருந்தால் தமிழனுக்கு ஏன் இந்த நிலைமை )  வழக்கம் போர் நடந்த காலத்தில் விட்ட  புஸ்வாணாங்களை இன்னமும் தமிழர் தரப்பு விட்டுக்கொண்டு இருக்கு ?

உங்களுக்கு சிங்களத்தை கொஞ்சாது விட்டால் நித்திரை வராது

உலக வரலாற்றில்

வெளிநாடுகளிலுள்ள அதன் பிரசைகள் மீது தொடரப்பட்ட தாக்குதல் இதுவாகத்தானிருக்கும்

புலிகள் ஆயுதம் வைத்திருந்தால்  மட்டுமே சர்வதேசம் புலிகளை அரவணைக்கமுடியாதிருந்தது

ஆனால் புலம் பெயர் தேசத்தவர்கள் அப்படியல்ல.........

இந்த தவறின் பயனை விரைவில் சிங்களம் புரிந்து கொள்ளும்

என்ன விசுகு  clown களுடன் உங்களுக்கு  ஏனுங்க வீண் வம்பு. ஜாலியா சிரிச்சிட்டு போங்க. Viel Spass!   Viel Spass!

யார் clown என்பது முள்ளிவாய்க்கால் நல்லதொரு சாட்சி .

சிங்களம் செய்வதை நான் எழுதுகின்றேன் நீங்கள் தமிழன் செய்யப்போகின்றான் என்று  காலம்காலமாக எழுதுகின்றீர்கள் .

அதுதான் யதார்த்தற்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசம் .கிழே உள்ள படமே அதற்கு சாட்சி .

 கோமாளிக்களுக்கு தாங்கள் கோமாளிகள் என்று தெரியாது . :icon_mrgreen:

07(153).jpg

சிங்களம் காயை மிக தந்திரமாக நகர்துகின்றது .ஜெனிவாவில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் தனது அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டது போலிருக்கு ?

இந்த நடவடிக்கைக்கு சில மேற்குலக நாடுகளும் துணை போயிருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம் .

இது எதுவுமே அறியாமல் (அந்த அளவு அறிவு இருந்தால் தமிழனுக்கு ஏன் இந்த நிலைமை ) வழக்கம் போர் நடந்த காலத்தில் விட்ட புஸ்வாணாங்களை இன்னமும் தமிழர் தரப்பு விட்டுக்கொண்டு இருக்கு ?

இது ஒரு முட்டாள்தனமான முடிவு.

உலக அரங்கில் கிடைக்கும் அரசியல் தோல்விகளுக்கு பழிவாங்க கிழம்பியிருக்கிறார்கள்.

அங்கு ஒரு மேற்கு நாடுகளும் உதவவில்லை. நீங்கள் சும்மா வெருட்டல் புரளிக்காக எடுத்துவிடுவது போல் தெரிகிறது.

ஈழ போர் நான்கின் கோமாளித்தனமான அரசியல் செய்கிறார்கள்.

தமிழகத்தில் கொங்கிரஸ் தேர்தலில் இருந்து ஒழித்து ஓடுமளவிற்கு தமிழர்கள் நாமும் காய் நகர்த்துகிறோம்.

தமிழர் விட்டபுஸ்வாணத்தை கண்டு சிறி லங்கா சர்வதிகாரி குடும்பம் லண்டனுக்கு போகவே பம்முகிறார்கள்.

காலம் வேகமாக மாறுகிறது. நீங்கள் இன்னும் 1985 சிவப்பு சிந்தனையிலேயே வாழ்கிறீர்கள்.

இத்தனை  வருடமாக  இப்படியே  வாழ்ந்தாச்சு...

பழி  வாங்கும் உணர்வைத்தவிர

வாழ்வில் வேறேதுமில்லை

இதற்குள் ஒற்றுமை பற்றி  வேறு கருத்து வைப்பு

இனி  தாண்டியென்ன?

தாண்டாமலென்ன?.......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரச பயங்கரவாதிகளின் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாகவும், சட்டரீதியாக அவர்களைத் தண்டிப்பது தொடர்பாகவும் ஆராய வேண்டும்.

உண்மையில் இந்த விபரங்ஙகள் பழையன என நினைக்கின்றேன். ஒதுங்கிப் போய்விட்ட பலரது பெயர்களையும் வைத்துப் படம் காட்டுகின்றது. ஆனாலும் சிங்கள அரசின் இந்தச் செயலை ஏதாவது விடயத்தினுள் மாட்ட வைக்க வேண்டும்.

இதற்கு ஏதாவது வழி இருந்தால் இவருக்கு தெரியும் தானே.

NTEPrimeMinister_zps6aa9d311.png

  • கருத்துக்கள உறவுகள்

இதை கருத்திற்கொண்டாவது இலங்கைக்கு போவதை தவிர்க்கலாம்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாகவும், சட்டரீதியாக அவர்களைத் தண்டிப்பது தொடர்பாகவும் ஆராய வேண்டும்.

உண்மையில் இந்த விபரங்ஙகள் பழையன என நினைக்கின்றேன். ஒதுங்கிப் போய்விட்ட பலரது பெயர்களையும் வைத்துப் படம் காட்டுகின்றது. ஆனாலும் சிங்கள அரசின் இந்தச் செயலை ஏதாவது விடயத்தினுள் மாட்ட வைக்க வேண்டும்.

இந்த சிறி நொங்குகளின் கோமாளி தனத்தால் ஒதுங்கி இருந்தவர்களும் திரும்பி களத்திற்குள் வருவார்கள்.

சேம் சைட் கோல் அடித்தது நல்ல விடயம். :)

  • கருத்துக்கள உறவுகள்
குமரன் பத்மநாதனை அரசாங்கம் பட்டியலில் சேர்க்கவில்லை?
06 ஏப்ரல் 2014
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய காரணிகளுக்காக இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களின் பெயர்களையும் தடை செய்துள்ளது.எனினும், இந்த தடை செய்த பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
16 புலம்பெயர் அமைப்புக்களையும். 424 தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய தடையுத்தரவானது புகலிடக் கோரிக்கையாளர்களை மோசமாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
புகலிடம் வழங்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களாக என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

அர்ஜுன்!

விடுதலைப் புலிகள் மேற்குலகின் கோரிக்கைகளை ஏற்காமல் முறுக்கிக் கொண்டு திரிந்தார்கள். வளைந்து கொடுக்க மறுத்தார்கள். ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிந்ததும் புலிகள் செய்த எதிர்நடவடிக்கைகளை நாங்கள் "அடுத்த கட்ட நகர்வு" என்று ஆய்வு செய்தோம். கடைசியில் புலிகள் முறிக்கப்பட்டார்கள்.

இப்பொழுது நீங்கள் சிறிலங்கா அரசு செய்திருக்கும் இந்த நடவடிக்கையை "அடுத்த கட்ட நகர்வு" என்று வர்ணிக்கின்றீர்கள். உண்மையிலேயே இதை அப்படித்தான் பார்க்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலர் அந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள்!ஒரு நாட்டின் குடிமகனை பயங்கரவாதி என்றும் தேடப்படுவோர் பட்டியலில் போடுவதும் அந்த அந்த நாட்டின் அனுமதியின்றி செய்வதும் மாபெரும் குற்றமாகும்.இதில் பலர அந்த நாடுகளின் அரசியல்வாதிகளுடன் கைகுலுக்கியவர்கள்.பிரித்தானிய தலைமை அமைச்சர் கமரோனுடன் கைகுலுக்கியவர்களும் இருக்கிறார்கள்.அப்படிப்பார்த்தால் கமரோனையும் பயங்கரவாதி என்று சிறிலங்கா சொல்கிறதா???????இதற்கு எதிராக அந்த அந்த நாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.சர்வதேச பொலிசாரால் தேடப்படும் குற்றவாளி கேபிக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கும் நாடு வெளிநாடுகளில் வருமானவரிகட்டிக் கொண்டு அந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழும் அந்த அந்த நாட்டின் கடிமக்களைத்தேடுவது நகைப்புக்குரியது. நாங்களும் தேடுகின்றோம்.உதாரணத்திற்கு ஒருவர். பெயர்-மகிந்த ராஜபக்ச பதவி-சிறிலங்கா அதிபர். விலாசம்-சிறிலங்கா பாரhளுமன்றம். இந்தப்பட்டியல் .இன்னும் நீளும்..........

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துவிட்டால் கணக்குக் காட்ட வசதியாய் இருக்கும்.(அதையும் நிச்சயமாய் செய்வார்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.