Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புதிய தலைவர் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
gun-fire--Thevain.-appan%2C-gobi.jpgமுல்லைதீவு பொலிஸார் இவர்கள் மூவரையும் கைது செய்ததன் பின்னர் இவர்கள் மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்  மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 
 
இதே வேளை சில ஊடகங்களில் இதன் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33b3f5cfb034a2cd3b132c28ddebaed0.jpg

 வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

 
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் தப்பிச் செல்ல முற்பட்ட போது   இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 
 
சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றைய நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை .
 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி தேடுதல் மேற்கொண்டுவந்தனர்.  
 
கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 
அதனை தொடர்ந்து கோபிக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற கிளிநொச்சியைச் சேர்ந்தஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை  கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான ராசமலர் என்பவரும்  கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற. இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 
கோபி சுட்டு கொலை செய்யப்ப்டதாக இராணுவத்தினர் தெரிவித்திருப்பதினால் இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=606852863111281076

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

goopi.jpg

இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 

வவுனியா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் இம்மூவரும் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்றிரவு (10) அப்பிரதேசங்களைச் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதனையடுத்து சந்தேகநபர்கள், இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.  

சம்பவத்தை அடுத்து நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 
 

அப்ப இனி திரும்பவும் சிறி லங்கா வெற்றி களியாட்ட பவனிகளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fight-in-sri-lanka_26.jpg

நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுககும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  

எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர். இதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாகவும் தற்போதைக்கு எதனையும் குறிப்பிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107333&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரணைக்கு முன்னால் பிடித்துவிட்டு தேடுவதுபோல நாடகம். பிரேரணை முடிந்ததும் மேலே அனுப்பிவிட்டார்கள். ஆட்களை வெளியே விட்டிருந்தால் வன்னி வைத்தியரைப்போல ஆகியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் ஒன்றும் அறியா அப்பாவிகள்.......... செய்தி தலைப்பை மாற்றுங்கள் ஒன்றும் அறியா அப்பாவிகள் மூவர் சுட்டுக்கொலை என்று...

Edited by புலிக்குரல்

எல்லா அதிகாரங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் வரும் தலைக்கனம் அதர்மம் இப்பிடித்தான் இருக்கும். அரசியல் வியியாட்டில் பலியான அப்பாவிகளுக்கு இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 பலியான அப்பாவிகளுக்கு இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிவாலைப் பிடித்தவர்கள்போல் இவர்கள் இராணுவத்தின் புலனாய்வு வாலைப்பிடித்தவர்கள். எதோ ஒரு காரணத்தால் இராணுவத்துடன் முரண்பட்டு நின்றதாலும், கடந்தகால மனித உரிமைமீறல்களது சாட்சிகள் என்பதாலும் தவிர தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் புலிப்பூச்சாண்டி காட்டவேண்டிய தேவையின் அவசியத்தாலும் ஓடவிட்டு என்கவுண்டரில் போட்டுத்தள்ளிப்போட்டாங்கள். இதுவே உண்மை.

 

இன்னும் கொஞ்சக்காலம் பொறுத்திருங்கள், புலம்பெயர் புலிப்பினாமிகள் அன்றேல் புலி ஆதரவாளர்கள் தற்போது இன்னுமொரு புலித்தலைவரையும் அவருக்கு அனுசரணை வழங்க நாலைந்துபேரையும் மீண்டும் நியமித்து நாட்டுக்குள் உலாவ விட்டுள்ளார்கள் என ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார்கள்.

 

அதனை, யாழ் களத்தில் புலிக்காய்சலில் வாந்தியெடுப்பவர்களும், முப்பது வருடமாக வந்த  எங்களுக்குக் புலிக்காய்ச்சல் ஓரளவு குறைந்தாலும் கூதல் இன்னமும் போகவில்லை என, புலம்பெயர் தேசத்துக் குளிருக்கு இதமாகப் கம்மிளிப்போர்வையால் போத்துமூடிக்கொண்டு முனக வெளிக்கிட்டுடுவினம் பாருங்கொ.

 

தவிர கோபி எனப்படுபவர் முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழாலை வீட்டுக்கு அடுத்தடுத்த வீட்டுக்கு பிரான்ஸ்சில்லிருந்து சென்ற ஒருவர் வீட்டுக்குப்போய் தேத்தண்ணியக்குடித்துவிட்டு கொஞசம் சாய்து படுப்பம் எண்டு நினைக்கையில் புலனாய்வுப்பிரிவு வந்து அள்ளிக்கொண்டு போயிட்டுது. நேரடியாக நாலாம்மாடிதான். பிறகு என்ன மனைவிக்காறி மனித உரிமை கவுன்சில் பிரான்ஸ் தூதரகம் போன்றவற்றைத் தொடர்புகொண்டு வெளியில எடுத்து பொடியன் தப்பித்தோம் பிழைத்தோம் எண்டு நேரடியாகவே கட்டுநாயக்காவந்து பிரான்சிலதான் அடுத்தவேளைச் சோறு சாப்பிட்டதாக உண்மைச்செய்தி.

 

ஆகவே மக்களே ஊருக்குப் போங்கோ அனால் லிங்கம்கூல்பாரில குளிர்களி திங்கிற எண்ணத்தோடபோய் நாலாம்மாடியில களிதிங்கிற நிலைமைக்குப் போயிடாதையுங்கோ.

 

இப்போதெல்லாம் கச்சேரி பியோன் முதற்கொண்டு ஆசுப்பத்திரி கக்கூஸ் கங்காணிவரைக்கும் கவனிக்க புலனாய்வாளர்களை வல்லிபுரத்தான் கப்பல்திருவிழாவுக்கு ஆக்களை இறக்கிவிட்டதுபோல இறக்கிவிட்டிருக்கினம். பிடிபடுவியளாக இருந்தால் நோண்டி நொங்கெடுத்துவிட்டுத்தான் அடுத்தவேலை. ஆனால் பிடிபடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை.

 

யாழ்ப்பாணம் அந்தமாதிரி, ரோட்டுகள் எல்லாம் சொல்லி வேலையில்லை, எண்டு யாராவது சொல்ல, நீங்களும் இதுவரை எதோ சவூதிப் பாலைவனத்தில தண்ணிக்கஸ்டத்துக்கு மத்தியில் ஒட்டகப்பீ அள்ளிக்கொண்டு இருந்ததாக நினைச்சுக்கொண்டு சிறீலங்கன் எயார்லைனிலதான் போவன், அதிலதான்  கட்டசம்பலோட சோறுபோடுறான் அதவிட அசினோட படமும்போடுறான், ஆரம்பமே அசத்தல்தான் எண்டு வெளிக்கிட்டு அசின் படாதபாடுபட்டு இப்போது பிசினான கதைபோல ஆகிவிடாதையுங்கோ.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தான் உருவாக்கின பில்லேடனை தானே கொல்ல.. எடுத்துக் கொண்ட காலத்தை விட.. சிங்களம் உருவகித்த அப்பாவிகளைக் கொல்ல எடுத்துக் கொண்ட காலம் மட்டும் குறைவல்ல... சிங்களம் நினைச்சால் சுட்டுக் கொல்லும்.. சட்டம் நீதிமன்றம் மனித உரிமைகள் எல்லாம் அதுக்கு தூசு. கிரிக்கெட் மட்டும் அதுக்கு கேக் வெட்டிற அளவுக்கு முக்கியமானது. கொடுமை.. இதுங்க எல்லாம் பூமில மனிசர் என்று வாழ்ந்துக்கிட்டு இருக்குதுங்க. நாங்க அதைப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்குது. :icon_idea::rolleyes::(

Edited by பாசம்

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ இறுதில ரிசேட் போட்டு யாரோ பொடி ஒண்டு வருது....

  • கருத்துக்கள உறவுகள்

 

3 தமிழனைக் கொல்ல 300 சிங்களவனா..???! கொடுமை சரவணா..!!

 

இதுக்கெல்லாம்.. காலத்தால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு கணக்கு இருக்கும். :icon_idea::rolleyes:

சிறீலங்கா ரி20 உலககிண்ணம் அடிச்சதோடு.. இவையும் இப்படி ஒரு வெற்றிச் செய்தி காட்டினால் தானே.. சரியும்.. மகிந்த செல்வாக்கு உயரும். ரணில் அப்பு நீவிர் இப்போதைக்கு.. எழும்ப முடியாது. உம்மீருக்கு அரசியலில் முடக்குவாதம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை... வாசித்தவுடன், மனம் பதறுகின்றது.
இன்னும்... எத்தனை அப்பாவிகளை, சுட்டுக் கொன்றுவிட்டு... சிங்களம் மார்தட்டப் போகுதோ என்று, அச்சமாக உள்ளது.
இனியும்... சர்வதேசம் இவற்றை வேடிக்கை பார்க்காமல், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

எம்மினத்தில்... உள்ள ஒட்டுக்குழுக்களும், புல்லுருவிகளும் தமது காட்டிக் கொடுப்புகளை நிறுத்தி.... தமிழன் என்னும் இனம் ஈழத்தில் நிலைத்திருக்க.... ஆன வழிகளில், தங்களது முயற்சிகளை... முன்னெடுக்க வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

NEWS ARTICLES
 
 
புலிகளின் புதிய தலைவர்களின் சடலங்கள் பதவியாவுக்கு மரண விசாரணையும் அனுராதபுரம் நீதிவானிடம்:-

 

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- அரச நாடகத்தின் இறுதிப்பாகம்:-

Ltte%20Lain_CI.png

 

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது.

வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தை நேற்று மாலை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது இராணுவத்தால் தேடப்பட்டு வந்த கோபி உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதனையடுத்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதேவேளை கோபி என்றொரு பாத்திரம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு புலிகளின் புதிய தலைவர் என பட்டம் சூட்டப்பட்டு, பின்னர் அவருடன் இணைத் தலைவர்களாக சேர்க்கப்பட்ட தேவிகன் மற்றும் அப்பன் என்ற பாத்திரங்களும் அரசாங்கத்தினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினதும் திட்டமிட்ட நாடகம் என குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்ச்சியாக கூறிவந்தது. அந்தக் கூற்று இன்று இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் நடந்து கொண்ட விடயத்தின் மூலம் உறுதியாகி இருப்பதனை வாசகர்கள் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக சுட்டுக்கொல்லப்பட்ட இவர்களின் சடலங்களை பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பியதும், அனுராதபுரம் நீதவானிடம் மரண விசாணை ஒப்படைக்கப்பட்டதும் பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03(586).jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டனர். நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற்ற இந்த இராணுவ முன்னெடுப்பில் ஈடுபட்ட படையினரை படங்களில் காணலாம். (படங்கள்: ரொமேஸ் மதுசங்க,நவரத்தினம் கபில்நாத்) 

04(414).jpg

05(308).jpg

07(155).jpg

09(114).jpg

10(1499).jpg

11(1021).jpg

14(370).jpg

15(347).jpg

DSC_0300(1).jpg

DSC_0381.jpg

DSC_0394(2).jpg

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

வவுனியா, நெடுங்கேணி வெடிவைத்தகல் பிரதேசத்தில் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கும் இடையில் இன்று (11) அதிகாலை மோதல் நிலை ஏற்பட்டதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது.

இதன் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சிறீலங்காவால் கூறப்படும் கோபி மற்றும் அப்பன் ,தெய்வீகன் ஆகிய மூவரும்  இன்று (11) அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

முல்லைதீவு சிறீலங்கா பொலிஸார் இவர்கள் மூவரையும் கைது செய்ததன் பின்னர் இவர்கள் மூவரும் சிறீலங்கா பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்  மூவரும் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் குறித்த  நெடுங்கேணி பிரதேசத்தில் சிறீலங்கா இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும்  கோபி உள்ளிட்ட மூவரின் சடலங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சிறீலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.

சடலங்கள் காணப்படும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் இடை மறிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சடலங்கள் தொடர்பான புகைப்படங்களை பதிவு செய்து கொள்ள முடியவில்லை என சங்கதி24ன் வன்னிச்செய்தியாளர் தொிவிக்கின்றார்.

1.JPG

2.JPG

3.JPG

4.JPG

5.JPG

6.JPG

7.JPG

8.JPG

9.JPG

10.JPG

11.JPG

12.JPG

http://www.sankathi24.com/news/40314/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு.... அழகிய மண், எம் மண்.
இந்தச் சிங்கள‌ காட்டு மிராண்டிகளின், கால்களில் பட்டு... பாழாகிக் கொண்டிருக்கின்றது.
எம்மினத்தையும், எம் மண்ணையும்... காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களுக்கு, சிங்களவனின் சப்பாத்து தான்....  சமர்ப்பணம்.

அதை... வைச்சு, நக்கிக் கொண்டிருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
கோபிக்கு எதிரான முன்னெடுப்பில் 2,000 படையினர் பங்கேற்பு
வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014 16:53
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது. 
 
நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/106696----2000---.html
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லும் வரைக்கும் விடுப்புப்பார்த்திட்டு இருந்த உலகமும்.. ஊடகங்களும்.. எனி கட்டுரையும் காணொளியும் விட்டு காலத்தைக் கடத்த கணக்குச் சரி.

 

உலகமெல்லாம்.. இராணுவமோ.. பொலிஸோ செய்யும் கொலைகள் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டால் விசாரிக்க ஆக்கள் இருக்கு. ஆனால் சிறீலங்காவில் அதற்கு இடமே இல்லை என்ற போதும்.. ஐநாவில்.. கிரிக்கெட்டில் அதுக்கு இடமளிக்கப்பட்டிருக்கும்.. போது சிங்களவன் எதற்கும் அஞ்ச வேண்டும். :icon_idea:

 

புதிசா ஆமிக்கு எடுத்த சிங்களக் குட்டிகளுக்கு தமிழனைக் கொல்லுறது எப்படின்னு..புதினம் காட்டிறாங்கள். உலகம் வேடிக்கை பார்த்திட்டு இருக்குது. இதைப் போல கொடுமை வேறு எதுவும் இல்லை.

திரைக்கதையை தொடர்ந்து எழுத முடியேல்லை போலை... 

Edited by தயா

திரைக்கதையை தொடர்ந்து எழுத முடியேல்லை போலை...

பீரிசுக்கு எடுத்துகுடுக்க கொங்கிரஸ் வாலாக்களுக்கு நேரமில்லை. தேர்தலில் தோற்பதில் பிசி போல.

எல்லாத்துக்கும் முதல் இவர்களுக்கு அஞ்சலி உண்டா..இல்லையா? சாதாரண தமிழர்கள் (கூடுதலாக அப்பாவிகளாக இருக்கவும் வாய்ப்புண்டு) என்றாவது யாரவது அஞ்சலி செலுத்துவார்கள் என்றால் யாருமில்லை....

 

அஞ்சலிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.