Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து இரவுபோசன விருந்து -கனடா .

Featured Replies

 Jaffna Hindu College Association Canada

Annual Gala Dinner - 2014

will be held

on Saturday, April 26th, 2014, at  5.30 pm

at

Chandni Grand Banquet

3895 McNicoll Ave., Scarborough, ON, M1X 1E7

(Near Markham Road &  McNicoll Ave / Tapscott Rd)      

Agni Singers – Live music and dance

All old  students, staff  and well wishers are kindly invited to attend this event with their families.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு வாழ்த்துக்கள்  

(யாழுக்கு ஒரு விளம்பரம் கொடுக்கலாமே....

அதுவுக்கும் பசிக்குமல்லோ........)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரி, இராப் போசன விருந்து அழைப்பிதழை...
தமிழில் கொடுத்தால், குறைந்தா.... போய் விடுவீர்கள்.

எப்ப இருந்து, இந்த.... ஆங்கில மோகம்?
 
இதென்ன  யாழில்  இலவச விளம்பரம் போல்  கிடக்கு. ?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இலவசங்களுக்கு எதிரானவள்..இந்த ஓசி ஒட்டுதலுக்குள் நடக்க இருக்கும் விடையங்களை கணக்கு பார்த்தாலே விரையமாகும் பணம் எங்கயோ வந்துடும்.எனக்கு தண்டனை கிடைச்சாலும் பறவா இல்லை...நேர தான் சொல்கிறன்.
தயவு செய்து இனிமேலாவது இலவசங்களை போட்டு ஒரு மனிதனை மொட்டை அடிக்காதீங்கள்.
 
  • தொடங்கியவர்

யாழ் இந்து கல்லூரி எனது சொந்த வியாபார நிலையம் அல்ல .நிகழ்வு முடிய விபரமாக இதுவரை நாங்கள் செய்தது பற்றி எழுதுகின்றேன் .

யாழில் இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகள் ,புத்தக வெளியீடுகள் ,விபரண சினிமா காட்சிகள் பற்றிய விபரங்கள் போட்டிருக்கின்றேன் .இதுவரை எவருமே அது பற்றி ஒரு காலமும் வாயை திறக்கவில்லை .

இவ்வளவு கடுமையாக யாயினியின் பதிவை பார்த்து விட்டு நிகழ்தல் அறிதல்  பகுதிக்கு போனேன்.பல நிகழ்சிகள் பற்றிய அறிவிப்புகள் அங்கு இருக்கு ,

நான் பதிந்த இடம் பிழையோ அல்லது பதிந்திருக்க கூடாதோ என்று விளங்கவில்லை.

பதிந்தது பிழையாக இருந்தால் விளம்பரம் போல கருதி நிர்வாகம் கேட்கும் பணத்தை செலுத்துகின்றேன் .

இனிமேல் எந்த நிகழ்வுகள் பற்றியும் பதிய நான் தயாரக இல்லை .அது புத்தக வெளியீடாக இருக்கலாம் அல்லது இலக்கிய கலந்துரையாடலாக இருக்கலாம் .

நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றேன் யாயினி .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

தீவாரை காண்பதும் தீதே ..சுயநலமிகு தீவார் சொற் கேட்பதுவும் தீதே ..

பிற்:குறிப்பு..நான் எழுதியது  தீவுப் பகுதி அல்ல   தமிழில் தீமை அதாவது கெடுதல் செய்வோர் என்பது பொருள். தீயவரை  காண்பதும் தீயவரை கேட்பதும்  என்று வரும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் கருத்து எழுதியதும் ஏன்  உங்களுக்கு கோவம் வந்தது...????மேலே இன்னும் பலர் தங்கள் கருத்துக்களையும் எழுதி இருக்கிறார்கள் தானே..

நோ...என்னிடம் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்லை அர்ஜுன் அண்ணா....பொதுவாக எழுதபட்ட கருத்து உங்களுக்காக மட்டும் சொல்லப் பட்ட கருத்து அல்ல...நான் எழுதியது உங்கள் மனதை தாக்கியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்..

அதே நேரம் சிலவற்றை சொன்னால் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதிறன்..ஏன் நாங்களாக ஒரு விடையத்தை செய்வதற்கு ஊக்குவிக்க கூடாது..ஏன் அதற்காக முயற்சிக்க கூடாது....நாங்களாகத் தான் தேடிப்போய் ஒன்றை கேக்க வேண்டுமே தவிர அவர்களாக வர மாட்டார்கள் அண்ணா...நன்றாக யோசித்துப் பாருங்கள்.

.

சான்டினிகிரான்ட்  தானகவே வந்து தன்னிடம்  அந்த நிகழ்வை நடத்த சொல்லி கேட்டதா இல்லைத் தானே..இரண்டு,நான்கு பேர் சேர்ந்து போய் அல்லது  போணில் தொடர்பு கொண்டோ தானே கோல் புக்ட் பண்ணி இருப்பீர்கள்..அது போலத் தான்..இதையும் நினைச்சால் செய்யலாம் என்ற அடிப்படிடையிலயே நாங்களும் கருத்துக்ளை முன் வைப்பது..அதற்காக அதைப் பதிய  மாட்டேன் இதை பதிய மாட்டேன் என்று சொல்வது எல்லாம் தப்பு அர்ஜன் அண்ணா.என்னைப் பணிஸ்பண்ணுவது போல் இருக்கிறது.

புரிஞ்சு கொள்ளுங்கள்..மீண்டும் சொல்கிறேன் உங்களுக்காக மட்டும் சொல்லப்பட்ட கருத்து அல்ல ...பொதுவாக  எழுதப்பட்ட கருத்து மட்டுமே.இந்தப் பகுதிக்கு இது எனது கடசி கருத்து.நன்றி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்துக் கல்லூரி, இராப் போசன விருந்து அழைப்பிதழை...

தமிழில் கொடுத்தால், குறைந்தா.... போய் விடுவீர்கள்.

எப்ப இருந்து, இந்த.... ஆங்கில மோகம்?

அவையள் இஞ்சாலை வந்தாப்பிறகு தமிழ் பெரிசாய் வராது......

அதோடை தமிழிலை விவரிச்சால் நாகரீகமுமில்லை.......

பட்டிக்காட்டுத்தனமாயிருக்கும்......

எல்லாத்தையும் விட அவையின்ரை புள்ளையளுக்கு தமிழ் துண்டற விளங்காது எண்டது வேறை விசயம்..... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து கல்லூரி எனது சொந்த வியாபார நிலையம் அல்ல .

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் எங்கள் சொந்த வியாபார நிலையம் அல்ல. உங்களுக்கு ஏன் உங்கள் உறவுகளிடமிருந்தே இத்தனை எதிர்ப்புத் தோன்றியது ?? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவந்தபோதெல்லாம்.... அதற்கு நீங்கள் எழுதிய கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் ஒரு முறை மீளாய்வு செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும் !!!.... வெந்த புண்ணுக்கு மருந்திடத் தெரியாதிருப்பது தவறல்ல. அதில் வேல்பாச்சுவது கொடூரமானது. :blink::o

ஒரு சிறிய அளவாவது மூளையை(இருந்தால் ) பாவியுங்கள் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் யாழில் ஓசியில் விளம்பரம் கொடுத்து விட்டு,கொடுத்து கொண்டு அர்ஜீன் அண்ணா என்டவுடன் கேள்வி கேட்க வந்திட்டீனம்.அண்மையில் ஒரு கள உறவு ஒரு மரண அறிவித்தல் தமிழ்வின்னில் பதிந்ததை கொண்டு வந்து யாழில் போட்டு இருந்தார்.உடனே எல்லோரும் போய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்[அது தப்பில்லை] ஆனால் ஒரு உறவு கூட,அந்த கள உறவிடம் யாழில் மரண அறிவித்தல் கொடுங்கள் என கேட்கவில்லை.ஆட்களைப் பார்த்துத் தான் யாழ் கள உறவுகள் நியாய,தர்மம் கதைப்பார்கள் போல

தீவாரை காண்பதும் தீதே ..சுயநலமிகு தீவார் சொற் கேட்பதுவும் தீதே ..

பிற்:குறிப்பு..நான் எழுதியது தீவுப் பகுதி அல்ல தமிழில் தீமை அதாவது கெடுதல் செய்வோர் என்பது பொருள். தீயவரை காண்பதும் தீயவரை கேட்பதும் என்று வரும்.

ஒளவையாரே மிகத் தெளிவாக "தீயாரை காண்பதுவும் தீது" , என்று பாடியிருக்க நீங்கள் அதை திரித்து தீவார் என்று எழுதிவிட்டு அதற்கு தீயார் என்று விளக்கம் கொடுப்பதன் காரணம் என்னவோ? ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் குளிர்காய போதவில்லையோ? அதனால் புதிய நெருப்பை மூட்டுகின்றீர்களோ? அதுவும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல்.

Edited by tulpen

யாழ்களத்தின் மூத்த‌ உறுப்பினர், ஒரு எழுத்தாளர்.....

அப்படி எழுதியதன் மூலம், தன்னைத் தானே.... தாழ்த்திக் கொண்டார். அவ்வளவு தான்....

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒர் இடத்திலும் இலவசமாக விளம்பரம் கொடுக்கவேண்டிய தேவை யாழ் இந்துவுக்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இல்லை. இங்கு இது விளம்பரமாக இணைக்கப்படவில்லை. ஒரு புலம்பெயர் நிகழ்தல் அறிதலாகவே இணைக்கப்பட்டுள்ளது. தவறு என்னவென்றால் ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கலாம்.

மீண்டும் சொல்கின்றேன் சில வேண்டத்தகாத நிகழ்வுகளினால் விலகிநிற்கவேண்டியுள்ளதே தவிர இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க இந்துவின் நலன்விரும்பியாக இருந்துகொண்டு வாழ்த்துகின்றேன்.

வாலி நீங்கள் போகேலையோ??

எல்லாரும் யாழில் ஓசியில் விளம்பரம் கொடுத்து விட்டு,கொடுத்து கொண்டு அர்ஜீன் அண்ணா என்டவுடன் கேள்வி கேட்க வந்திட்டீனம்.அண்மையில் ஒரு கள உறவு ஒரு மரண அறிவித்தல் தமிழ்வின்னில் பதிந்ததை கொண்டு வந்து யாழில் போட்டு இருந்தார்.உடனே எல்லோரும் போய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்[அது தப்பில்லை] ஆனால் ஒரு உறவு கூட,அந்த கள உறவிடம் யாழில் மரண அறிவித்தல் கொடுங்கள் என கேட்கவில்லை.ஆட்களைப் பார்த்துத் தான் யாழ் கள உறவுகள் நியாய,தர்மம் கதைப்பார்கள் போல

ரதி நீங்கள் கூறியது சரியே. தன்னால் வெறுக்கப்படுபவர்கள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று உலக நியாயம் பேசும் சிலர் அதை விட பல மடங்கு குற்றங்களை சம காலத்தில் மற்றவர்கள் செய்யும் போது மூச்சு கூட விடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் யாழில் ஓசியில் விளம்பரம் கொடுத்து விட்டு,கொடுத்து கொண்டு அர்ஜீன் அண்ணா என்டவுடன் கேள்வி கேட்க வந்திட்டீனம்.அண்மையில் ஒரு கள உறவு ஒரு மரண அறிவித்தல் தமிழ்வின்னில் பதிந்ததை கொண்டு வந்து யாழில் போட்டு இருந்தார்.உடனே எல்லோரும் போய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்[அது தப்பில்லை] ஆனால் ஒரு உறவு கூட,அந்த கள உறவிடம் யாழில் மரண அறிவித்தல் கொடுங்கள் என கேட்கவில்லை.ஆட்களைப் பார்த்துத் தான் யாழ் கள உறவுகள் நியாய,தர்மம் கதைப்பார்கள் போல

யாழில் இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகள் ,புத்தக வெளியீடுகள் ,விபரண சினிமா காட்சிகள், மரண அறிவித்தல் பற்றிய விபரங்கள் வந்துள்ளன. மறுக்கவில்லை. யாழ் இந்துக் கல்லூரிக் கழக வருடாந்த விழாக் கொண்டாட்டம். என்று வந்திருந்தால்! எல்லோருமே வாழ்த்தவே முன்வந்திருப்பார்கள். பிறந்த மண்ணில் ஒருவேளை உணவுக்கு வழியின்றிப் பட்டிணியால் இறக்கும் நிலை வந்திருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்... 'இராப் போசன விருந்துக்கு அழைக்கிறோம்' என்றால் யாருக்குத்தான் ஆத்திரம் வராது? வேறு யாரோ என்றால் இத்தனை கவலை தோன்றாது. தாயக மக்களின் அவலநிலை போக்கப் பங்களிக்கும் ஒருவராகக் காணப்படுபவரின் செயற்பாடு தவறாகும்போது அது ஏமாற்றத்தையே உருவாக்கும்.  ஆட்களைப் பார்த்து யாழ் கள உறவுகள் நியாய, தர்மம் கதைக்கவில்லை. இங்கே ஆதங்கப்பட்டவர்கள் அர்யுனை எத்தனை தடவைகள் வாழ்த்தி மகிழ்ந்துள்ளார்கள் என்பதை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையாரே மிகத் தெளிவாக "தீயாரை காண்பதுவும் தீது" , என்று பாடியிருக்க நீங்கள் அதை திரித்து தீவார் என்று எழுதிவிட்டு அதற்கு தீயார் என்று விளக்கம் கொடுப்பதன் காரணம் என்னவோ? ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் குளிர்காய போதவில்லையோ? அதனால் புதிய நெருப்பை மூட்டுகின்றீர்களோ? அதுவும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல்.

பாவம்

ஒரு கூட்டம் தலையாட்டி 

வாசிக்காமலேயே அவர் எழுதியதற்கெல்லாம் பச்சை  போட்டதால்

அவருக்கு இப்படி எழுதி  பழகிவிட்டது.....

அதுவே சரியென்றும் தொடர்கிறார்

ஆனால் யாழ் மட்டுமல்ல

எல்லோரும் விழித்து கனகாலமாச்சு............

இப்ப  எவரும்  இவற்றை  கணக்கெடுப்பதில்லை

நான் ஆரம்பத்திலிருந்தே எடுப்பதில்லை.........

எல்லோரையும் அரவணைத்த போராட்டமாம்

முன்னாள் அவராம்?

ஆனால் தீவானாம்...........

இனியுமா புரியல......

போங்கப்பா

நான் வரல இந்த விளையாட்டுக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து கல்லூரி எனது சொந்த வியாபார நிலையம் அல்ல .நிகழ்வு முடிய விபரமாக இதுவரை நாங்கள் செய்தது பற்றி எழுதுகின்றேன் .

யாழில் இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகள் ,புத்தக வெளியீடுகள் ,விபரண சினிமா காட்சிகள் பற்றிய விபரங்கள் போட்டிருக்கின்றேன் .இதுவரை எவருமே அது பற்றி ஒரு காலமும் வாயை திறக்கவில்லை .

இவ்வளவு கடுமையாக யாயினியின் பதிவை பார்த்து விட்டு நிகழ்தல் அறிதல்  பகுதிக்கு போனேன்.பல நிகழ்சிகள் பற்றிய அறிவிப்புகள் அங்கு இருக்கு ,

நான் பதிந்த இடம் பிழையோ அல்லது பதிந்திருக்க கூடாதோ என்று விளங்கவில்லை.

பதிந்தது பிழையாக இருந்தால் விளம்பரம் போல கருதி நிர்வாகம் கேட்கும் பணத்தை செலுத்துகின்றேன் .

இனிமேல் எந்த நிகழ்வுகள் பற்றியும் பதிய நான் தயாரக இல்லை .அது புத்தக வெளியீடாக இருக்கலாம் அல்லது இலக்கிய கலந்துரையாடலாக இருக்கலாம் .

நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றேன் யாயினி .

சில  மாதங்களுக்கு முன்...

இதே இடத்தில் 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்  நடாத்தப்படும்  முத்தமிழ் விழாவின் விளம்பரத்தை  போட்டேன்

நிழலி கேட்டார்

இவ்வளவு  செலவளித்து விழா செய்கின்றீர்கள்

யாழில் இலவசமாக  போடாமல்

காசு கொடுத்து அதை விளம்பரம்  செய்தாலென்ன? என்று...

இதே இடம் தான்

பொதுச்சேவைதான்

ஆனால் பலர் நிழலிக்கு பச்சை  குத்தினார்கள்

நீங்களோ

ரதியோ வாய் திறக்கவில்லை

ஆட்களைப்பார்த்துத்தானோ...........??? :(  :(  :(

(இப்படி நான் அப்பொழுது கேட்கவே இல்லை)

ஆனால் நிழலிக்கு அதிலேயே உறுதிப்படுத்தினேன்

அடுத்த வருடத்துக்குள் செய்வேன் என.

அதேபோல் காசு கட்டி விளம்பரம் போட்டேன்

அதையே  தாங்களும் செய்யணும் என்ற  எதிர்பார்ப்பு மட்டுமே.

உங்களால் முடியும் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

சில  மாதங்களுக்கு முன்...

இதே இடத்தில் 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்  நடாத்தப்படும்  முத்தமிழ் விழாவின் விளம்பரத்தை  போட்டேன்

நிழலி கேட்டார்

இவ்வளவு  செலவளித்து விழா செய்கின்றீர்கள்

யாழில் இலவசமாக  போடாமல்

காசு கொடுத்து அதை விளம்பரம்  செய்தாலென்ன? என்று...

--------

ஆனால் நிழலிக்கு அதிலேயே உறுதிப்படுத்தினேன்

அடுத்த வருடத்துக்குள் செய்வேன் என.

அதேபோல் காசு கட்டி விளம்பரம் போட்டேன்

அதையே  தாங்களும் செய்யணும் என்ற  எதிர்பார்ப்பு மட்டுமே.

உங்களால் முடியும் என்பதால்.

------

பதிந்தது பிழையாக இருந்தால் விளம்பரம் போல கருதி நிர்வாகம் கேட்கும் பணத்தை செலுத்துகின்றேன் .

------

நிழலி,

விசுகிடம் கேட்ட... மாதிரி,

அர்ஜூனும் விளம்பரக் காசைக் கொடுக்க, தயாராக உள்ள நிலையில்...

விளம்பரத்துக்கு காசைக் கேட்க... ஏன் தயங்குகின்றார்?

€ வில், தான்... யாழ்க‌ள‌ பொருளாதார‌ சிக்க‌லை, மேம்ப‌டுத்த‌லாம் என்று... நிழ‌லி நினைக்குமாப் போலுள்ள‌து. :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

 தவறு என்னவென்றால் ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கலாம்.

-----

  JaffnaHindu_Logo_Color.png

வாலி, அத்துடன்.... "கற்க கசடற, கற்ற பின்... நிற்க அதற்குத் தக"

என்ற, யாழ் இந்துக் கல்லூரியின்... சின்னத்தையும் (லோகோ) இணைத்திருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா,நான் அப்போது அந்த கால கட்டத்தில் யாழில் எழுதிக் கொண்டு இருந்தேனா?....நான் நிழலிக்கு பச்சை குத்தி அங்கே அதை ஆதரித்துப் போட்டு இங்கே வந்து அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து நீங்கள் உட்பட சிலர் ஏன் யாழில் விளம்பரம் போடவில்லை என்று கேட்கும் அதை எதிர்த்து எழுதினால் தான் தவறு...அடுத்தது உங்கட ஊர் அமைப்பில் நீங்கள் ஒரு உறுப்பினரோ அல்லது செயலாளாரோ ஏதோ ஒரு பதவியில் இருக்கிறீர்கள்.ஆனால் அர்ஜீன் அண்ணா அந்தக் கல்லூரி சார்பாக ஏதாவது பதவியில் இருக்கிறாரா தெரியவில்லை?...தெரிந்தால் அறியத் தாருங்கள்.நிர்வாகம் இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்.கட்டணம் செலுத்தித் தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்டால் அதை தனியே ஒரு,இரு உறுப்பினர்களிடம் மாத்திரம் கேட்பது சரியில்லை.அதே போல ஒரு உறவு,இன்னொரு உறவிடம் நான் காசு செலுத்தி விளம்பரம் செய்த படியால் நீயும் அப்படித் தான் போட வேண்டும் என கேட்பதில் நியாயமில்லை என்பது என் கருத்து

  • தொடங்கியவர்

எந்த ஒர் இடத்திலும் இலவசமாக விளம்பரம் கொடுக்கவேண்டிய தேவை யாழ் இந்துவுக்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இல்லை. இங்கு இது விளம்பரமாக இணைக்கப்படவில்லை. ஒரு புலம்பெயர் நிகழ்தல் அறிதலாகவே இணைக்கப்பட்டுள்ளது. தவறு என்னவென்றால் ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கலாம்.

மீண்டும் சொல்கின்றேன் சில வேண்டத்தகாத நிகழ்வுகளினால் விலகிநிற்கவேண்டியுள்ளதே தவிர இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க இந்துவின் நலன்விரும்பியாக இருந்துகொண்டு வாழ்த்துகின்றேன்.

சில அல்ல பல வேண்டாத நிகழ்வுகள் எனக்கு நடந்திருக்கு ,

சமூகம் சார்ந்து ஒரு பொது வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் போது பல தரப்படவர்கள் ,பல தரப்பட்ட கருத்துக்கள் வந்து முட்டி மோதும் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து "என்ன நோக்கத்திற்கு ஆக  ஆரம்பித்தோமோ அதை அடைவதில் தான் அதன் வெற்றி " தங்கியிருக்கு .

விமர்சனங்கள் தாண்டிதான் நாம் அடுத்த படி கடக்கவேண்டும் .ஆரம்பத்தில் இந்த அமைப்பு தொடங்கிய நேரமே எழுந்த பிரச்சனைகள் காரணமாக இழுத்து மூடியிருந்தால் இன்று நாம் அடைந்திருக்கும் வெற்றி அவ்வளவும் வீணாகியிருக்கும் .

இப்போது உள்ள நிர்வாகம் இதுவரை நான் காணாத மிக ஒழுங்கு அமைக்கபட்ட சீரான நிர்வாகம் .

டின்னர் முடிய விரிவான ஒரு விளக்கம்  அன்றில் இருந்து இன்று வரை கட்டாயம் எழுதுவேன் .

இங்கு வரும் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விடுவதே நல்லது என முடிவு எடுத்துவிட்டன். எதையுமே செய்யாமல் இணையத்தில் சப்பு கொட்டுபவர்களை  கணக்கில் எடுத்தது எனது தவறு .

குறிப்பு -  சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய நட்சத்திரங்களை வைத்து  "நட்சத்திர இரவு"  நடாத்தி அகதிகளுக்கு பணம் சேர்த்த நிகழ்வுடன் ஒப்பிடும் போது இவையெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.. எனக்கே நான்  இப்படி ஒரு நிகழ்ச்சி செய்தேன் என்று இப்ப நினைக்க நம்பமுடியாமல் இருக்கு :icon_mrgreen: . 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா,நான் அப்போது அந்த கால கட்டத்தில் யாழில் எழுதிக் கொண்டு இருந்தேனா?....நான் நிழலிக்கு பச்சை குத்தி அங்கே அதை ஆதரித்துப் போட்டு இங்கே வந்து அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து நீங்கள் உட்பட சிலர் ஏன் யாழில் விளம்பரம் போடவில்லை என்று கேட்கும் அதை எதிர்த்து எழுதினால் தான் தவறு...அடுத்தது உங்கட ஊர் அமைப்பில் நீங்கள் ஒரு உறுப்பினரோ அல்லது செயலாளாரோ ஏதோ ஒரு பதவியில் இருக்கிறீர்கள்.ஆனால் அர்ஜீன் அண்ணா அந்தக் கல்லூரி சார்பாக ஏதாவது பதவியில் இருக்கிறாரா தெரியவில்லை?...தெரிந்தால் அறியத் தாருங்கள்.நிர்வாகம் இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்.கட்டணம் செலுத்தித் தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்டால் அதை தனியே ஒரு,இரு உறுப்பினர்களிடம் மாத்திரம் கேட்பது சரியில்லை.அதே போல ஒரு உறவு,இன்னொரு உறவிடம் நான் காசு செலுத்தி விளம்பரம் செய்த படியால் நீயும் அப்படித் தான் போட வேண்டும் என கேட்பதில் நியாயமில்லை என்பது என் கருத்து

ரதி

நன்றி  பதிலுக்கு...

அந்த பதிவைத்தேடிப்பார்த்தேன்

கிடைக்கவில்லை

யாழில் மாற்றங்கள் செய்தபோது மறைந்திருக்கலாம்

அர்யூன் ஒரு உறுப்பினர் தான்

அவரே அதை இங்கு உறுதிப்படுத்தியுள்ளார் பலமுறை..

அடுத்தது

நான் கொடுத்தேன் கொடுக்கணும் என்றவகையில் எழுதவில்லை

முயற்சி  செய்யலாமே எனத்தான் கேட்டேன்

அவரால் முடியும் எனத்தெரிந்தபடியால்.

அதையும் குறிப்பிட்டிருந்தேன்

முடியும்  முடியாது

செய்வேன் மாட்டேன் என ஒரு வரியில் முடித்திருக்கவேண்டிய  பிரச்சினை

இதுவரை நீளுது......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.