Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது!

Featured Replies

நீங்கள் எப்போ போராடினீர்கள் அங்குலம் பின்னால் வர?? :D இதற்குள் ஆயுதத்தை கை விட்டு விட்டோம்  என்ற கதை விடுதல் வேறு? போராடாமலே ஆயுதப்போராட்டத்தை கை விடுகிறோம் என்று சொன்ன ஆட்கள் நீங்கள் தானே? போராடாமல் உங்களுக்கு விளங்கி விட்டதா?  :icon_mrgreen:

இதை இன்றைய வெள்ளிக்கிழமை செய்தியாக எடுத்து சிரிக்கிறேன் ............... :D  :D

  • Replies 93
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி எழுதின கட்டுரையே உண்மை,பொய் என பிரித்தறிய முடியாதவர்கள்:(

நன்றாகவே காட்டிக் கொடுக்கப்படுகிறோம்.

நமது தமிழ் கருத்தியல் வெளியிலுள்ள  சமூகவலைத் தளங்களில் ஆக்கபூர்வமான விவாதங்கள் செழுமையான கருத்துப் பரிமாற்றங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று சொல்வதற்கு ஒப்ப குறைந்துகொண்டே செல்கிறது.
விதண்டாவதங்களும் தனிநபர் தாக்குதல்களும் சேறடிப்புகளும் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் பழமைவாத நக்கல் நையாண்டிகளும் கருத்து என்ற பெயரில் இணைய வெளியை நிரப்புகின்றன. எப்பொழுது ஒருவரின் சிந்தனை தளமும் கருத்தில் கருவூலமும் வற்ற ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்து அவர் அவர் அற்பத்தனமான தனிநபர் தாக்குலில் ஈடுபட ஆரம்பிக்கிறார்.இவ்வாறு தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்களின் மொழியாழ்கை வெறும் சொற்கோர்வைகளைக் கொண்ட வரட்டுத்தனமான சூத்திரங்களாகவும் சலிப்பூட்டும் ஏழுத்துக் கோர்வைகளாகவும் மாறிப் போகிறது.
சங்கதி 24 இணையத்திலே இந்தக் கட்டுரை எழுதியவருடைய நோக்கம் சூடு தணிந்து போயிருக்கும் தியாகி எதிர் துரோகி அரசியலை மறுபடியும் கொதிநிலைக்கு கொண்டுவருவது.
இப்போது எதற்காக அது மறுபடியும் செய்யப்படுகிறது என்று எவரும் ஆராயவில்லை.
சிறீலங்கா அரசாங்கம் இப்போது பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் செயற்பாட்டளர்களுடைய பெயர்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது..இன்னம் ஆயிரக்கணக்கானவர்களுடைய பெயர்களை பட்டியலிடப் போவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறது.
நெடியவன் விநாயகம் உட்பட 60 பேருக்கான சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய பிடியாணையை சர்வதேக காவல்துறை மூலம் பிறப்பித்திருக்கிறது.
இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் அகதி தகுதிநிலை பெற்றவர்கள் அல்லது அதற்கு விண்ணப்பித்துவிட்டு அதற்காக காத்திருப்பவர்கள்.அவர்களுக்கு இயல்பாகவே அகதிகளுக்கான ஜெனிவா சட்டத்தின் கீழான பாதுகாப்பு இருக்கிறது.
அவர்களை சர்வதேச காவல்துறை அவர்கள் வாழும் நாட்டு அரசாங்கங்களின் அனுமதியின்றி கைது செய்யவோ சிறீலங்காவுக்கு கொண்டு செல்லவோ முடியாது.
இதை சாத்தியமாக்க வேண்டுமானால் அவர்களுக்கு அகதிகளுக்கான ஜெனிவா சாசனம் வழங்கும் சட்ட பாதுகாப்பை இல்லாதாக்கவேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் வன்முறையை தூண்டுபவர்களாகவும் அதில் ஈடுபடுபவர்களாகவும் அல்லது வன்முறைக் குழு ஒன்றை வைத்து இயக்குபவர்களாகவும் குறிப்பாக அவர்கள் நாட்டு குடிமக்களுக்கும் அந்த நாட்டில் வாழும் அகதிகளுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய அகதிநிலை திரும்ப பெறப்படும்.அதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களாக இருந்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இதை தோற்விப்பது தான் சிறீலங்கா அரசின் நோக்கம்.
இனி மீண்டும்; போட்டிக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும் ஒருவர் ஒட்டிய போஸ்டரை மற்வர்கள் கிழக்க வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் இருட்டடி போட வேண்டும்.வாள் கத்தி கோடாலி துவக்குகளுடன் ஒருவரை ஒருவர் பின் தொடரவேண்டும்.பருதியை சாய்த்ததைப் போல இன்னும் பலரை சாய்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.இதை யெல்லாம் சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் தான் செய்விக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அந்ததந்த நாட்டு அரசாங்கங்களே அவர்களை கைது செய்ய சர்வதேச காவல்துறைக்கு அனுமதிவழங்கும் நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பது தான் இந்தக் கட்டுரையை எழுதிவரின் நோக்கம் என்பது தான் எனது உறுதியான கருத்தாகும்.
 
Edited by navam

அடுத்து தம்பி அர்சுனுக்கு நான் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்....
எங்களுடைய அரசியல் வரலாற்றிலே மெத்தப்படித்த பெரும் தலைவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.
சேர் பொன் இராமநாதன்.சேர் பொன் அருணாசலம்.மகாதேவர்;;;...
அடுத்த தலைமுறையாக ஜீஜீ.பொன்னம்பலம் கியூசி.செல்வநாயகம் கியூசி திருச்செல்வம் கியூசி. கணித மேதை அடங்கா தமிழன் சுந்தரலிங்கம்....
என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இந்த மேதைகளால் ஏன் தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க முடியவில்லை?
தமிழர்களுடைய மரபு வழித்தாயமான தமிழீழத்தை இவர்கள் ஏன்ற சிலோன் என்ற போலி தேசிய ஒற்றையாட்சி சிறைக்குள் அடைக்க இவர்கள் ஏன் ஒத்துக்கொண்டார்கள்?
விமான வசதிகள் இல்லாத காலகட்டத்தில் உலகப்போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு சிங்களவர்களுக்கு உதவுவதற்காக பிரித்தானி மகாராணியை சந்திக்க லண்டன் வந்த இவர்களால் ஏன் தமிழர்களின் சுயாட்சி உரிமைக்காக பிரித்தானிய அரசுடன் பேச முடியவில்லை?
வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபுவழித்தாயகம்  என்கிறபோது கிபி 13 ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற யாழப்பாண ஆரிய சகக்ரவர்த்திகளின் அரசை மட்டும்  அடையாளம் காட்டி பம்மிக்கொண்டு இருந்தது ஏன்?
பௌத்த சிங்கள பேரினவாதிகள் தங்களுக்கு 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது என்று கூறிவரும் பொய்யை ஆதாரபூர்வமாக ஏன் மறுதலிக்க வில்லை?
ஈழத்தமிழர்களுக்கு கிபி 13 ம் நூற்றாண்டுக்கு முன் அரசுகள் இருக்கவில்லையா?அவை பற்றி ஏன் ஆராயவில்லை?கந்தரோடையில் இருந்த தொன்மையான தமிழ் அரசின் வரலாற்றை மூடி மறைத்தது ஏன்?
தென் தமிழீழத்திலும் மணலாற்றிலும் திட்டமிட்ட குடியோற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை  சிங்களம் விழுங்கியபோது மந்திரி பதவிகளுக்குகாக அவர்களுக்கு முண்டு கொடுத்தது ஏன்?
(இன்னும் நிறைய இருக்கிறது. இப்போது நேரம் போதைமையால் இத்துடன் நிறுத்துகிறேன்.நாளை தொடர்கிறேன்)
 
தொடர்ந்து எழுதுங்கள் நவம் . 

அதற்கான எனது பதிலையும் எழுதுகின்றேன் .சிலருடன்  வீம்பாக  கீழிறங்கி  மல்லுகட்டுவது போல் உங்களுடன் செய்யமாட்டன் .

சங்கதி24 இணையத்தில் இந்தக் கட்டுரை எழுதியவரின் நோக்கம் பற்றி நவம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு சங்கதி24 இப்பொழுது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்கின்ற கேள்விக்கான விடையைத்தான் தேட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நந்தகோபன்தான் அதை இப்பொழுதும் நடத்துகிறார் என்கின்ற ஒரு வதந்தி இருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். அதை விட "ஒற்றுமை" தான்தோன்றித்தனமாக செயற்படும் மேலும் சில குழுக்களையும் உருவாக்கி விட்டுள்ளது. அப்படி ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் சங்கதி24 இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Edited by சபேசன்

"வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அமுக்கி வைத்திருந்து சொகுசு வாழ்க்கையை நடத்துபவர்களும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆபிரிக்காவில் தங்ககங்கள், விடுதிகள், காணி விற்பனை நிலையங்களின் வடிவிலும், தென்கிழக்காசிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகள், பண்ணைகள் வடிவிலும், மேற்குலக நாடுகளில் தளபாட விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பயண முகவர் நிலையங்கள், உணவகங்கள், வீடுகள் வடிவிலும் சொத்துச் சாம்ராஜ்யங்களை நடத்துபவர்கள், தம்மிடமுள்ள தேசிய சொத்துக்கள் மூலம் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்டுவதைத் தவிர்த்து, இவற்றால் பெறப்படும் வருமானத்தை தமிழீழத் தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வை மேம்படுத்தும் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதே நியாயமானது. இதனை விடுத்து தேசிய சொத்துக்களைத் தொடர்ந்தும் இவர்கள் அமுக்கி வைத்திருந்தால் இவை ஏதோ ஒரு கட்டத்தில் சிங்களத்தால் இனம்காணப்பட்டு அமுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன."

ங்கதி 24 இணைத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்த தகவல்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்ற கதையாக சிங்களத்துக்கு சூசகமாக மேற்கொள்ளும் காட்டிக்கொடுப்பல்லமல் வேறென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நவம் அண்ணா, இடையில் தலையிடுவதற்கு மன்னிக்கவும்.படித்தவர்கள் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை.செய்யக் கூடிய ஆற்றல் இருந்தும் அதனைப் பயன்படுத்தவில்லை என்பது உண்மை தான்.அதற்காக புலிகள் செய்தது சரி என்று ஆகி விடாதல்லவா.போராட்ட ஆரம்பத்தில்/புலிகள் போராடத் தொடங்கின நிலையில் இருந்து இன்னும் 60,70 ஆண்டுகளுக்கு போராட்டத்தை பின் நோக்கிய பெருமை புலிகளையே சாரும். மக்கள் இந்த கடைசி யுத்தத்தின் பின்னரான பாதிப்பில் இருந்து எழும்பவே இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ தெரியாது.வன்னியில் புலிகள் இருக்கும் போதே யாழில் 90 ற்குப் பிறந்தவர்களுக்கு போராட்டத்தைப் பற்றிய அறிவே இல்லை.இப்ப ஈழம் முழுமையாய் சிங்களவர்கள் வசம்.கொஞ்சம்,கொஞ்சமாய் தன்னுடைய அதிகாரத்தின் கீழ்கொண்டு வந்திட்டுடான்.மக்களும் விரும்பியோ,விரும்பாமலோ இசைவாக்கம் அடைந்திட்டார்கள். இன்னும் காலம் போக சிங்களவன் பெரும்பான்மை,நாங்கள் சிறுபான்மை.அவன் தாற பிச்சை வாங்கிட்டு பேசாமல் இருக்க வேண்டும் என்ட நிலமை வந்திடும். இப்படியொரு பாரிய வீழ்ச்சிக்கு மக்களை கொண்டு வந்து விட்டது யார்?...புலிகள் தானே!...மாற்று இயக்கங்களோ,படித்தவர்களோ அல்லது தங்களால் முடியாது என்டவுடன் அல்லது முயற்சிக்க விரும்பாமல் பேசாமல் இருந்து விட்டார்கள்.மக்களை இவ்வளவு பின்னடைவுக்கு கொண்டு வந்து விட்டது புலிகள் தான்.அவர்களோடு சேர்ந்து புலம் பெயர் மக்களாகிய நாமும் என்பது என் கருத்து.இடையில் தலையிட்டு எழுதியற்காக மன்னிக்கவும்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  நவம் அண்ணா

இடையில் வந்து குழப்பினேன் என்றிருக்கவேண்டாம்

தயவு செய்து கொஞ்ச  நேரத்தை எமக்காக  ஒதுக்கி  எழுதுங்கள்

நன்றி..........

புலிகள் செய்தார்கள்

புலிகள் விட்டார்கள்

புலிகள் தவறிழைத்தார்கள்..............?

யாரிந்த புலிகள்?

எங்கிருந்து வந்தார்கள்

ஏன் பிழை விட்டார்கள்.............???  எழுதுங்கள் ஐயா

அன்பு தங்கை ரதி  அர்சுண்  மற்றும் விசுகு ஆகியோருக்கு
நான் இப்போது பணிபுரிந்துகொண்டிருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை. இது பற்றி நிச்சயமாக இரவு விரிவாக எழுதவேன்.
புலிகள் தவறிழைத்துவிட்டார்கள்.;;
போராட்டைத்தை பின்னடைவுக்குள்ளாக்கிவிட்டார்கள்.
நாங்கள் 50 வருடம் 100 வருடம் பின் தங்கி விட்டோம்.
சிங்களம் வென்றுவிட்டது..... என்பதெல்லாம் என்னப்பொறுத்தவரை எதிர்மறையான விமர்சனம் தான்.
நாங்கள் இராணுவ ரீதியாக தோற்றுப் போய்விட்டோம்.அது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அரசியல் ரீதியாக வெற்றிடைந்திருக்கிறோம்.இது மறுக்க முடியாத உண்மை.
மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் உயிரிழந்த நிலையில் தோல்வியின் விளிம்புக்குச் சென்ற கிழக்கு தீமோர் விடுதலைப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ?
தெற்கு சூடானில் சூடான் விடுதலை முன்னணியின் தலைவர் உயிழந்து போராளிகள் எல்லாம் அழிக்கப்பட்டு அந்த மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டிருந்த நிலையிலும் இரண்டு தாசாப்பதங்கள் சேடம் இழுத்து தாக்குபிடித்து எப்படி தென் சூடான தனி நாடாக ஆகியதோ அதே போல எமது விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.அதற்கு சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்று தசப்பதங்கள் கூட ஆகலாம்.
எங்களுக்கு சிறுவயதில் ஏற்பட்ட தாக்கம் தான் இன்றளவும் விடுதலை தணலை அணைய விடாமல் எங்கள் மனதிலே காப்பாற்றி வைத்திருக்கிறது.எங்களை விட 300-400 மடங்கு வாகரை மற்றும் வன்னிறுதிப் போரிலே அவலங்களை சந்தித்த அதை கண்ணால் பார்த்த அடுத்த தலைமுறை ஒருபோதும் எல்லாவற்றையும் மறந்து சுகபோக வாழாது. ஆவர்களால் வாழவும் முடியாது.
அதேபோல் பு லம் பெயர்ந்த இளைய தலைமுறை (தியாகி எதிர் துரோகி அரசிலுக்குள் உழல்பவர்களை தவிர) சிங்களம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிகரங்களை தொட ஆரம்பித்திருக்கிறது..அதன் வெற்றிப் பயணம் சங்கிலித் தொடர் போல முடிவின்றித் தொடரத் தான் போகிறது.
இந்த உலக ஒழுங்கு என்பது பொருளியல் மற்றும் வணிக நலன் சார்ந்தது.இன்னும் இரண்டு தசாப்த காலத்தில் அந்த உலக ஒழுங்கில் தீர்மாகரமான சக்தியாக எமது அடுத்த தலைமுறை மாறும்.இது தவிர்க்க முடியாத இயங்கியல் நியதி.
அடுத்து சிங்களம் இன்று தனது அதி உச்ச வெற்றிவிளிம்பில் நிற்கிறது.இதன் அடுத்த கட்டம் என்ன?சரிவு தானே?
முள்ளிவாய்க்கால் தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதி உச்ச கொடூரமாகும்.இதற்கு மேல் செய்வதற்கு அவர்களிடம் ஒன்றும் இல்லை.சிங்களத்தில் இன்னும் ஒரு தசாப்த்த்தில் இரண்டு தசாப்தத்துக்கிடையில் இன்னொரு ஆயுத கிளர்ச்சி வெடிக்கும். வறுமையும் வேலையில்லா திட்டாட்டமும் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டமுடியமால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடையும் போது அதன் விளைவுகளை அதாவது விதைத்த வினையை சிங்களம் அறுவடை செய்யும்.இது உண்மை.
அப்போது  நாங்கள் பலவீனமானவர்களாக இருக்க மாட்டோம்.
சீனா காலாகாலமாக தூக்கிப் பிடித்து முண்டு கொடுத்த சூடான் அதிபர் பசீரை தனது பொருளாதார நலன் பாதிகப்படும் என்ற நிலை வந்த போது கைவிட்ட வரலாறு நம் கண்முன்னே இருக்கிறது.
நாங்கள் ஆயுதம் தூக்கம் தேவையில்லை. அதற்கான தேவை ஏற்படுமாக இருந்தால் காலம் அதை உருவாக்கும். நாங்கள் இப்போது அதை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
70 களில் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய போது சிங்களம் பலத்துடன் தான் இருந்தது.எங்களிடம் இருந்த துணிவும் நம்பிக்கையும் தான் போராட்டத்தை வளர்த்தது.
ஏங்களுடைய ஆயத பலத்தின்  முன்னால் சிங்கள் தோற்றப்போயிருந்தது.
தோற்றுப் போன சிங்கள அதிகாரவர்க்கத்துக்கு உயிரூட்டியது யார்?
லக்சுன் கதிர்காமரில் இருந்து நிலன் திருச்செல்வம் ராசன் கூல் சிறீதரன் முதலான இன்னும்பல  தமிழ் அதிகாரவர்க்கம் தானே சிங்களவர்களைவ pட அதிகளவில் பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று உலக நாட்டாண்மைகளிடம் முறையிட்டது.
புலிகள் பாசிட்டுகள் பங்கரவாதிகள் என்று கூச்லிடுபவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்?
மடு வரையிலே விடுதலைப்புலிகள் சிங்களப்படைகளை எதிர்த்துப் போரிட்டு தோல்வியுற்று பின் வாங்கிய நிலையில் சிங்களப் படையினர் மணிக்கு மணி வன்னிப் பெரு நிலப்பரப்பிலே குண்டுமழை பொழிந்து எமது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைவர் பிரபாகரன் ஒரு 100;-200 தற்கொலைப்படையினரை தென்பதுpக்கு அனுப்பி கிராமம் கிராம மாக நகரம் நகரமாக சிங்கள மக்களை குண்டுகள் வைத்து கொன்று குவித்திருக்கலாமே.பயங்கரவாதி மற்றும் பாசிஸ்ட்டுக்கு நீங்கள் சொல்லும் அடையாளமும் வரைவிலக்கணமும் அது தானே. ஏன் அவர் அதை செய்யவில்லை.அவற்றை செய்வதற்காக வலுவும் பலமும் கூடவா அப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
நியாயத்தை இங்கிருந்துதான் நாங்கள் தேட வேண்டும்.
 
Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்
மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் உயிரிழந்த நிலையில் தோல்வியின் விளிம்புக்குச் சென்ற கிழக்கு தீமோர் விடுதலைப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ?
தெற்கு சூடானில் சூடான் விடுதலை முன்னணியின் தலைவர் உயிழந்து போராளிகள் எல்லாம் அழிக்கப்பட்டு அந்த மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டிருந்த நிலையிலும் இரண்டு தாசாப்பதங்கள் சேடம் இழுத்து தாக்குபிடித்து எப்படி தென் சூடான தனி நாடாக ஆகியதோ அதே போல எமது விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.அதற்கு சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்று தசப்பதங்கள் கூட ஆகலாம்.
எங்களுக்கு சிறுவயதில் ஏற்பட்ட தாக்கம் தான் இன்றளவும் விடுதலை தணலை அணைய விடாமல் எங்கள் மனதிலே காப்பாற்றி வைத்திருக்கிறது.எங்களை விட 300-400 மடங்கு வாகரை மற்றும் வன்னிறுதிப் போரிலே அவலங்களை சந்தித்த அதை கண்ணால் பார்த்த அடுத்த தலைமுறை ஒருபோதும் எல்லாவற்றையும் மறந்து சுகபோக வாழாது. ஆவர்களால் வாழவும் முடியாது.
 
நன்றி  அண்ணா
தொடர்ந்து எழுதுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது போனால் படிப்பவர்கள் உயிர்பலி இல்லாத போராட்டங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். ஆகவே இந்த பதில்.

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது. இந்த புரட்சியை அடுத்து திருமதி அகினோ நாட்டின் அதிபரானார். அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சில கொலைகள் இடம் பெற்றிருந்தாலும் இலங்கையில் போல பெரும்தொகையில் 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்களத்திலும், வாழ்விடங்களிலும் மக்கள் தொகை தொகையாக கொல்லப்பட்ட புரட்சியாக அது அமையவில்லை. இது உலகின் பல இரத்தம் சிந்தாத புரட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

நான் எழுதியதில் மேலே பச்சையில் உள்ளதை, முற்றிலும் தலை கீழாக புரட்டி, நான் எழுதியதாக கூறி, தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவதற்காக நீங்கள் எழுதியது கீழே சிவப்பில் இருக்கிறது. எவ்வளவு கீழ்த்தரமான பொய்மை?

அமெரிக்க ஆதரவோடை  பிலிப்பீன்சை மக்கள் ஸ்பானில காலணித்துவ ஆதரவு கொண்ட  மாக்கோசை வெளியேற்றினார்கள் எனும் மேற்கத்திய திரைக்கதையை மட்டும் சொல்கிறீர்கள்...

 இதில் இருந்து தெரிவது ???? பொய்யும், புனைகதையும், திரிபுகளும், புரட்டுகளும் ....
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடமிருந்து இப்படி எழுத்தை எதிர்பார்க்கவில்லை

ஒரு அடிமைப்பட்ட இனத்தின் விடுதலையை

ஒரு பெரும் இனச்சுத்திகரிப்பு முகம் கொடுக்கும் ஒரு இனத்தை

எதனுடன் ஒப்பிடுவதே என்பதே தெரியாததால்  தான்

  • எந்த வெற்றி பெற்ற போராட்டத்துடன் நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
  • அல்லது ... ஒப்பற்ற தனித்துவமான தோற்றுப்போன போராட்டம், என்றும் ஒப்பற்ற தனித்துவமான இன அழிப்பு என்றும் வரலாறு எழுதப்போகிறீர்களா?
  • யூதர்களிற்கு எதிரான இனவழிப்பு மற்றும் ஆர்மேனியர்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியன வேறு உலக நாடுகளால் உத்தியோகபூர்வமாக இனவழிப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை இனவழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா?
  • இலங்கையில் எந்த இனம் அடிமையில்லை? முஸ்லிம்கள் அடிமைகளாக நடத்தப்படவில்லையா? கிறீஸ்தவர்கள் அடிமைகளாக நடத்தப்படவிலையா? நியாயம் கேட்கும் ஏழை சிங்களவர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படவில்லையா?
  • எந்த நாட்டில் அடிமைகளுக்கு இலவச பல்கலைக்கழக கல்வி வழங்கப்படுகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்கலைக்கழக கல்வி இலவசமாக கிடைக்கிறதா இல்லையா?
  • எந்த நாட்டில் அடிமைகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்படுகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு புற்றுநோய் உட்பட செலவு மிக்க மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்கிறதா இல்லையா?
  • இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது போல JVP கிளர்ச்சியின் போது சிங்களவர்களும் பெரும் தொகையில் கொல்லப்பட்டார்களே? அதை எந்த இனவழிப்பு என்று கூறுவீர்கள்?
விசுகு,

இந்த போராட்டம் காரணமாக நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். உறவுகளை இழந்திருக்கிறேன். இந்த இழப்புகள் தொடரக்கூடாது. இதனை முடிவுக்கு கொண்டுவர முதலில் தேவையானது உண்மையும், நேர்மையும், அறிவார்ந்த அணுகுமுறையும் ஆகும்.

முடிந்தால், நேர்மையும், உண்மையும் உங்கள் பண்பாடாக இருந்தால், மேலுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள் பார்க்கலாம்?

Edited by Jude

ரதி மிக தெளிவாக உண்மையை எழுதியதற்கு நன்றி .

நாட்டில் ஏற்பட்ட அழிவுகளை விட சர்வதேசத்திடம் பயங்கரவாதிகள் என்ற பெயர் அடுத்து அரை அங்குலம் கூட அசைய முடியாத நிலையில் இருந்து கொண்டு எமது போராட்டத்துடன் எந்த ஒரு அடிப்படை ஒற்றுமையும் இல்லாத போரட்டங்களை உதாரணம் காட்டி எம்மில்  நாமே திருப்தி பட்டுக்கொள்ளாலாம் ஒழிய உண்மை அதுவல்ல .

எல்லாவற்றையும் விட முக்கியம் இந்தியாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை களையவே இன்னமும் எத்தனை காலம் எடுக்குமோ தெரியாது .

இந்தியா சர்வதேசம் என்று புலிகள் ஏற்படுத்திய கெட்ட பெயரை நீக்கவவே பலவருடங்கள் சென்றிருக்கும் .அவர்கள் அழிந்ததன் மூலம் அந்த வேலை தமிழர் தரப்பிற்கு இல்லாமல் போய்விட்டது .

அப்ப இந்திய கொங்கிரஸ் 8000 தமிழரை கொன்றது இந்திய இராணுவத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கவில்லையா?

உங்கட பப்புரை யுக்தி பலகாலமாக ஒன்று தான்.

தமிழர் செய்வது எல்லாம் தவறு, சிங்களவர், கொங்கிரஸ் கூட்டம் செய்வதெல்லாம் சரி என்று அரைக்கிறீர்கள்.

இந்த யுக்தி 2009 பின் படுதோல்வி அடைந்துவிட்டது.

பயங்கரவாத தடை பெறாத ராஜபக்சே ஏன் டொரோண்டோ, லண்டன், சென்னை வர பம்முறார்?

உங்கள் புலி வெருட்டல் புரளிகள் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • எந்த வெற்றி பெற்ற போராட்டத்துடன் நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
  • அல்லது ... ஒப்பற்ற தனித்துவமான தோற்றுப்போன போராட்டம், என்றும் ஒப்பற்ற தனித்துவமான இன அழிப்பு என்றும் வரலாறு எழுதப்போகிறீர்களா?
  • யூதர்களிற்கு எதிரான இனவழிப்பு மற்றும் ஆர்மேனியர்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியன வேறு உலக நாடுகளால் உத்தியோகபூர்வமாக இனவழிப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை இனவழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா?
  • இலங்கையில் எந்த இனம் அடிமையில்லை? முஸ்லிம்கள் அடிமைகளாக நடத்தப்படவில்லையா? கிறீஸ்தவர்கள் அடிமைகளாக நடத்தப்படவிலையா? நியாயம் கேட்கும் ஏழை சிங்களவர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படவில்லையா?
  • எந்த நாட்டில் அடிமைகளுக்கு இலவச பல்கலைக்கழக கல்வி வழங்கப்படுகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்கலைக்கழக கல்வி இலவசமாக கிடைக்கிறதா இல்லையா?
  • எந்த நாட்டில் அடிமைகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்படுகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு புற்றுநோய் உட்பட செலவு மிக்க மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்கிறதா இல்லையா?
  • இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது போல JVP கிளர்ச்சியின் போது சிங்களவர்களும் பெரும் தொகையில் கொல்லப்பட்டார்களே? அதை எந்த இனவழிப்பு என்று கூறுவீர்கள்?
விசுகு,

இந்த போராட்டம் காரணமாக நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். உறவுகளை இழந்திருக்கிறேன். இந்த இழப்புகள் தொடரக்கூடாது. இதனை முடிவுக்கு கொண்டுவர முதலில் தேவையானது உண்மையும், நேர்மையும், அறிவார்ந்த அணுகுமுறையும் ஆகும்.

முடிந்தால், நேர்மையும், உண்மையும் உங்கள் பண்பாடாக இருந்தால், மேலுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள் பார்க்கலாம்?

ஐயா

ஒரு  இனத்தின் மீதான அடுக்குமுறை தொடர்ந்து நிகழும் ஒரு நாட்டினை

எவருடனும் ஒப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது

ஒடுக்கப்படும் அந்த இனம் கணக்கு வழக்கு பார்த்து  போராட  எதிரி இடம் கொடுக்கணுமே??

மற்றும் நீங்கள் எழுதிய  சலுகைகள் எதிரி  எம்மீதான தனது பிடியைக்காப்பாற்ற  செய்வது

அதை விட்டால் நாம் பிரிந்துவிடவோம்....

1977  இலிருந்து  தமிழர்கள் இந்த ஆதிக்கத்தை புறந்தள்ளியே  வருகின்றனர் ஐனநாயகவழிகளில்.

மற்றும்

உண்மை 

நேர்மை

அறிவார்ந்த அறிவுமுறை......

இவற்றையெல்லாம் சேர் பொன் ராமநாதன் காலத்திலிருந்தே  செய்து வருகிறார்கள் தமிழர்கள்

ஏன் இன்றைய  ஆனந்தசங்கரியால்

 டக்லசால் என்ன  செய்யமுடிந்தது.............???

நேரமிருந்தால் மேலே நவம் அண்ணா எழுதியவற்றை  கொஞ்சம் வாசியுங்கள்

நன்றி

அப்ப இந்திய கொங்கிரஸ் 8000 தமிழரை கொன்றது இந்திய இராணுவத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கவில்லையா?

உங்கட பப்புரை யுக்தி பலகாலமாக ஒன்று தான்.

தமிழர் செய்வது எல்லாம் தவறு, சிங்களவர், கொங்கிரஸ் கூட்டம் செய்வதெல்லாம் சரி என்று அரைக்கிறீர்கள்.

இந்த யுக்தி 2009 பின் படுதோல்வி அடைந்துவிட்டது.

பயங்கரவாத தடை பெறாத ராஜபக்சே ஏன் டொரோண்டோ, லண்டன், சென்னை வர பம்முறார்?

உங்கள் புலி வெருட்டல் புரளிகள் தொடரட்டும்.

நாடி நலம்பெல்லாம் ஊறிப்போன  அடிமை தனத்தின் ஒரு வெளிப்பாடு இது  கண்டியளோ ...  

எசமானார் எதை செய்தாலும் சரி எனும் உண்ரவு இது...    சில அடிமைகள் தாங்கள் அடிமைகளாக தான் சிந்திப்போம் எண்று அடம்பிடிப்பார்கள்...   அதில் இருந்து வெளியில் வர எப்போதும் மாட்டார்கள்...  

வந்தால் எசமான் கோவித்துக்கொள்வார்... 

நான் எழுதியதில் மேலே பச்சையில் உள்ளதை, முற்றிலும் தலை கீழாக புரட்டி, நான் எழுதியதாக கூறி, தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவதற்காக நீங்கள் எழுதியது கீழே சிவப்பில் இருக்கிறது. எவ்வளவு கீழ்த்தரமான பொய்மை?

 இதில் இருந்து தெரிவது ???? பொய்யும், புனைகதையும், திரிபுகளும், புரட்டுகளும் ....

நீங்கள் தான் தேவை இல்லாத திசையிலையும் பொய்களையும்  இங்கு திரிக்கிறீர்கள்...  நீங்கள் சொன்ன பிலிப்பைன்ஸ்  சுதந்திரம் என்பதுக்கு பிறகும் அங்கு இரத்தம் ஓடுகிறது... 

நான் எதையும் திரிக்கவில்லை... 

அமெரிக்காவில் இருந்து 3700 கிலோ மீற்றர் தொலைவில் அமெரிக்காவின் ஆழுக்கையில் இருக்கும் ஹவாய் தீவுகளுக்கு  போய் மூண்டு வருடங்கள் வாழ்ந்து  சிறுநீரகம் கெட்டுப்போன காரணத்தால் 1989 ம் ஆண்டு  மார்க்கோஸ் ஹவாயிலேயே செத்துப்போனார்...   அதை தான் அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்தார் என்கிறீர்களா....?? 

மார்கோசிடம் இருந்த பணம் , அவர் மனைவியிம் இருந்த 2700  பாதணிகள் எண்டு செய்யப்பட்ட கதைகளின்படி பார்த்தால்  ஒரு சிறிநீரகம் வாங்கி பொருத்தும் வசதி கூட இல்லாத் மார்க்கோஸ் எண்றா சொல்ல வருகிறீர்கள்... ?? 

அமரிக்காவின்  விருந்தாளிக்கு நடக்க கூடிய விடயம் இது எண்டு நிறுவ போகிறீர்களாக்கும்... 

அமெரிக்க பிடியில் இருந்து  பிலிப்பைன் ஏதோ  சுதந்திரம் பெற்றது போல காட்ட முனைக்கிறீர்களா...?? 

அப்படி எண்றால் மார்க்கோஸ் இருக்கும் வரை அமைக்காத அமெரிக்க படைத்தளங்கள் ஏன் மார்க்கோஸ் மறைந்த பின் 1990 ல் அமெரிக்காவால் அமைக்க முடிந்தது எனும் வரலாற்றை சொல்லுங்களேன்...?? 

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும்

உண்மை 

நேர்மை

அறிவார்ந்த அறிவுமுறை......

இவற்றையெல்லாம் சேர் பொன் ராமநாதன் காலத்திலிருந்தே  செய்து வருகிறார்கள் தமிழர்கள்

ஏன் இன்றைய  ஆனந்தசங்கரியால்

 டக்லசால் என்ன  செய்யமுடிந்தது.............???

விசுகு,

அறிவார்ந்த அணுகுமுறை இராமநாதன் காலத்தில் பிழைத்து போய், ஆயுத அணுகுமுறை 30 ஆண்டுகள் தொடர்ந்து அதுவும் பிழைத்து போய்விட்டது. அறிவார்ந்த அணுகுமுறை காலத்தில் உண்டான உயிர் உடமை இழப்புகளிலும் பார்க்க ஆயுத அணுகுமுறையில் ஏற்பட்ட உயிர் உடமை இழப்புகள் எத்தனயோ ஆயிரம் மடங்கு அதிகம்.

ஐயா

ஒரு  இனத்தின் மீதான அடுக்குமுறை தொடர்ந்து நிகழும் ஒரு நாட்டினை

எவருடனும் ஒப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது

ஒடுக்கப்படும் அந்த இனம் கணக்கு வழக்கு பார்த்து  போராட  எதிரி இடம் கொடுக்கணுமே??

இந்த இழப்புகளை கணக்கு வழக்கு பார்க்காமல் தொடரும் போராட்டத்தில், இழப்புகளும் கணக்கு வழக்கு இல்லாமல் கூடிக் கொண்டே போகும். வெற்றியின் சாத்தியத்தை கணக்கு வழக்கு பார்க்காமல் தொடரும் போராட்டம், தோற்றுப்போவது எதிர்பார்க்கப்பட வேண்டியதே.

ஆகவே, நின்று நிதானித்து, இழப்புகளையும் வெற்றியின் சாத்தியத்தையும் கணக்கு வழக்கு பார்த்து தொடரும் போராட்டமே வெற்றி பெறும் சாத்தியத்தை கொண்டிருக்கும். "எதிரி இடம் கொடுக்க" இல்லை என்று காரணம் காட்டி, அதனால் நாம் தோற்று அழிந்து போவோம் என்றும் முடிவு எடுப்பது தவறானது.

ஏன் இன்றைய  ஆனந்தசங்கரியால்

 டக்லசால் என்ன  செய்யமுடிந்தது.............???

விசுகு,

நான் எழுதியது

"உண்மை 

நேர்மை

அறிவார்ந்த அறிவுமுறை......" பற்றி.

இவர்கள் தான் உண்மையும், நேர்மையும் கொண்ட, அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள் என்று நீங்கள் கருதினால், ஒரு திருத்தம்: நான் அவர்களை அப்படி கருதி என்றும் எழுதியதில்லை.

இன்று அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றுபவர்களில்:

  • முதன்மையான தலைவர் ஆனந்தி சசிதரன்.
  • அவரை அடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
  • இவரை களத்தில் இறக்கிய சம்பந்தனும்,சுமேந்திரனும் இவர்களை தொடர்ந்து வரும் அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள்.
  • யாழ் மற்றும் மன்னார் கத்தோலிக்க ஆயர்களும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குருபரனும் இவ்வாறாக அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள்.
இப்படி பலர்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது.

 மேலே உள்ளது நான் எழுதியது.

அமெரிக்க ஆதரவோடை  பிலிப்பீன்சை மக்கள் ஸ்பானில காலணித்துவ ஆதரவு கொண்ட  மாக்கோசை வெளியேற்றினார்கள் எனும் மேற்கத்திய திரைக்கதையை மட்டும் சொல்கிறீர்கள்...

இது நான் எழுதியதாக உங்கள் புரட்டு. நான் இதை எழுதவில்லை. இதை நான் எங்காவது எழுதியிருந்தால், அதாவது, இது உங்கள் புரட்டு இல்லையென்றால், நான் எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம்?

நீங்கள் தான் தேவை இல்லாத திசையிலையும் பொய்களையும்  இங்கு திரிக்கிறீர்கள்...  நீங்கள் சொன்ன பிலிப்பைன்ஸ்  சுதந்திரம் என்பதுக்கு பிறகும் அங்கு இரத்தம் ஓடுகிறது...

நான் எங்கே எழுதினேன் பிலிப்பைன்ஸ் நாட்டில் இரத்தம் ஓடவில்லை என்று? நான் காட்டியதெல்லாம் இரத்தம் சிந்தாத புரட்சிக்கு உதாரணம் மட்டுமே. அந்த உதாரணம் மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அகிநோவை பதவியில் அமர்த்திய புரட்சி பற்றியது மட்டுமே. அதை நீங்கள் புரட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏனைய பிரச்சினைகள் பற்றி நான் எழுதியதாக புனைகதை செய்து அதற்கு எதிராக வாதாடுகிறீர்கள். எவ்வளவு நேர்மையீனமான செயல் இது?

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி அண்ணா.மு.வாய்க்கால் தான் போரின் உச்ச கொடூரம்.ஆனால் அங்கு வன்னியில் போர் நடக்கும் போது யாழிலோ,கிழக்கிலோ,அல்லது கொழும்பிலோ இருக்கும் தமிழர்கள் பார்த்திட்டு சும்மா தான் இருந்தவர்கள்.அவர்கள் தனிய அரசுகு எதிராக மட்டும் போராட்டம் செய்திருக்க தேவையில்லை.இரு தரப்பையும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி குறைந்த பட்சம் அமைதியான முறையிலாவது ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம் தானே!.இந்த கொடூரத்தை பார்த்திட்டு பேசாமல் இருந்தவர்கள் இனி மேலா எழுச்சி கொள்ளப் போகிறார்கள்...தலைவரால் கூட போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியவில்லை.நீங்கள் எழுதி இருந்தீர்கள் மு.வாய்க்கால் சிங்களவனின் அதி உட்ச கொடூரம் என்று நான் சொல்கிறேன் சிங்களவன் இப்ப செய்கின்ற/செய்யப் போகின்றது தான் அதி உச்ச கொடூரமாகத் தான் இருக்கும்.இலங்கை என்ட நாடு பெளத்தருக்கு சொந்தமாக்கி,தமிழர் என்ட இனமே ஊரில் இல்லாமல் செய்வான்.இது அவனது நீண்ட கால நோக்கமாக இருந்தது/இருக்கும்.இப்படியான நிலைக்கு மக்களை கொண்டு வந்ததிற்கு புலிகளே காரணம்.புலிகளால் தான் எமது போராட்டத்தை உலகம் தெரிந்து கொண்டது.அதே புலிகளால் தான் எமது மக்கள் இவ்வளவு அழிவு நிலைக்குப் போனார்கள்.

நீங்கள் எழுதின மாதிரி பொருளாதார சிக்கல்களை சிங்கள அரசு எதிர் கொள்ளலாம்.சீனா கை விட்டால் அமெரிக்கா,அமெரிக்கா இல்லா விட்டால் இந்தியா.அவர்கள் என்ன ஒரு நாட்டை நம்பியா இருக்கிறார்கள்.தவிர புலியை,தமிழனை அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்ட அவர்களுக்கு எப்படி பொருளாதார பிரச்சனையில் இருந்து நாட்டை காப்பது என்றும் தெரியும்.சரி அப்படித் தான் நீங்கள் சொல்கின்ற பிரச்சனைகள் நாட்டில் வந்தாலும் கூட திரும்ப,திரும்ப இன்னொரு இனவாதி தான் நாட்டை ஆளப் போறான்.அல்லது இன்னொரு நாடு தலையிட்டு தமிழனோடு சேர்ந்து சிங்களவனையும் அடிமையாக வைச்சிருப்பான்.அது தான் நடக்கும்.

ஏன் புலிகள் தற்கொலை தாக்குதல் கடைசி நேரத்தில் செய்யவில்லை எனக் கேட்டு இருந்தீர்கள்.செய்து இருக்கலாம்.செய்ய வேண்டாம் என்பது மேலிடத்து[புலித் தலைமை இல்லை] உத்தரவாக இருக்கலாம்.கப்பல் வரும் காப்பாற்றும்.எங்கட மக்கள் கொஞ்சம் அதிகமாக இறந்தால் தான் உலக நாடுகள் எங்களை திரும்பி பார்க்கும்.ஒரு தீர்வு வரும்.என்பதெல்லாம் கடைசி நேரத்தில் நடந்தது தானே!...நியாயமும்,மண்ணாங்கட்டியும் கடைசி நேரத்தில் தற்கொலை தாக்குதல் மூலம் கொஞ்சப் பேரையாவது சாகடிச்சிருந்தால் மு.வாய்க்காலில் செத்த ஆன்மாக்கள் நிம்மதியாய் சாந்தியடைந்திருக்கும்.

புலம் பெயர் எதிர்கால சந்ததியினர் எதாவது சாதீப்பார்கள் என நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள் அண்ணா ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.மிஞ்சி,மிஞ்சிப் போனால் எமது அடுத்த எதிர்கால சந்ததி புலத்தில் போராடலாம்.ஆனால் அதற்கு அடுத்த சந்ததி போராடுமோ?...போராட்டால் நேரடியாக பாதிக்கப்பட்டு புலத்திற்கு வந்தவர்களாலேயே ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

புலிகளால் தான் எமது பிரச்சனை வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.அவர்களது அர்பணிப்பும்,தியாகமும் மறக்கப் படக் கூடாது[வீண் போகக் கூடாது.] அதே புலிகளால் அழிவும் அதிகம் வந்தது என்பதை மறுக்கக் கூடாது.

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 40,000 பேர் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து மக்களுக்கு அழிவைத் தேடித் தந்துவிடவில்லை. ஒன்றிரண்டாய் சேர்ந்து அவர்கள் உருவானபோது அவர்களை அடைகாப்பதுபோல வளர்த்து எடுத்தவர்கள் மக்கள். பலர் சரீர உதவி, பண உதவிகள் செய்யாவிடினும் மானசீகமாக மனதுக்குள்ளாவது தமது ஆதரவை வழங்கியிருப்பார்கள்.

அப்படி மக்களால் உருவான ஒரு இயக்கம் மக்கள் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பது புதுமையாக உள்ளது. :D

தமிழ் மக்கள் மடியக் காரணம் தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள். நின்று கொன்றது அவர்கள்தான்.

பதிலுக்கு நன்றி அண்ணா.மு.வாய்க்கால் தான் போரின் உச்ச கொடூரம்.ஆனால் அங்கு வன்னியில் போர் நடக்கும் போது யாழிலோ,கிழக்கிலோ,அல்லது கொழும்பிலோ இருக்கும் தமிழர்கள் பார்த்திட்டு சும்மா தான் இருந்தவர்கள்.அவர்கள் தனிய அரசுகு எதிராக மட்டும் போராட்டம் செய்திருக்க தேவையில்லை.இரு தரப்பையும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி குறைந்த பட்சம் அமைதியான முறையிலாவது ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம் தானே!.இந்த கொடூரத்தை பார்த்திட்டு பேசாமல் இருந்தவர்கள் இனி மேலா எழுச்சி கொள்ளப் போகிறார்கள்...தலைவரால் கூட போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியவில்லை.நீங்கள் எழுதி இருந்தீர்கள் மு.வாய்க்கால் சிங்களவனின் அதி உட்ச கொடூரம் என்று நான் சொல்கிறேன் சிங்களவன் இப்ப செய்கின்ற/செய்யப் போகின்றது தான் அதி உச்ச கொடூரமாகத் தான் இருக்கும்.இலங்கை என்ட நாடு பெளத்தருக்கு சொந்தமாக்கி,தமிழர் என்ட இனமே ஊரில் இல்லாமல் செய்வான்.இது அவனது நீண்ட கால நோக்கமாக இருந்தது/இருக்கும்.இப்படியான நிலைக்கு மக்களை கொண்டு வந்ததிற்கு புலிகளே காரணம்.புலிகளால் தான் எமது போராட்டத்தை உலகம் தெரிந்து கொண்டது.அதே புலிகளால் தான் எமது மக்கள் இவ்வளவு அழிவு நிலைக்குப் போனார்கள்.

நீங்கள் எழுதின மாதிரி பொருளாதார சிக்கல்களை சிங்கள அரசு எதிர் கொள்ளலாம்.சீனா கை விட்டால் அமெரிக்கா,அமெரிக்கா இல்லா விட்டால் இந்தியா.அவர்கள் என்ன ஒரு நாட்டை நம்பியா இருக்கிறார்கள்.தவிர புலியை,தமிழனை அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்ட அவர்களுக்கு எப்படி பொருளாதார பிரச்சனையில் இருந்து நாட்டை காப்பது என்றும் தெரியும்.சரி அப்படித் தான் நீங்கள் சொல்கின்ற பிரச்சனைகள் நாட்டில் வந்தாலும் கூட திரும்ப,திரும்ப இன்னொரு இனவாதி தான் நாட்டை ஆளப் போறான்.அல்லது இன்னொரு நாடு தலையிட்டு தமிழனோடு சேர்ந்து சிங்களவனையும் அடிமையாக வைச்சிருப்பான்.அது தான் நடக்கும்.

ஏன் புலிகள் தற்கொலை தாக்குதல் கடைசி நேரத்தில் செய்யவில்லை எனக் கேட்டு இருந்தீர்கள்.செய்து இருக்கலாம்.செய்ய வேண்டாம் என்பது மேலிடத்து[புலித் தலைமை இல்லை] உத்தரவாக இருக்கலாம்.கப்பல் வரும் காப்பாற்றும்.எங்கட மக்கள் கொஞ்சம் அதிகமாக இறந்தால் தான் உலக நாடுகள் எங்களை திரும்பி பார்க்கும்.ஒரு தீர்வு வரும்.என்பதெல்லாம் கடைசி நேரத்தில் நடந்தது தானே!...நியாயமும்,மண்ணாங்கட்டியும் கடைசி நேரத்தில் தற்கொலை தாக்குதல் மூலம் கொஞ்சப் பேரையாவது சாகடிச்சிருந்தால் மு.வாய்க்காலில் செத்த ஆன்மாக்கள் நிம்மதியாய் சாந்தியடைந்திருக்கும்.

புலம் பெயர் எதிர்கால சந்ததியினர் எதாவது சாதீப்பார்கள் என நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள் அண்ணா ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.மிஞ்சி,மிஞ்சிப் போனால் எமது அடுத்த எதிர்கால சந்ததி புலத்தில் போராடலாம்.ஆனால் அதற்கு அடுத்த சந்ததி போராடுமோ?...போராட்டால் நேரடியாக பாதிக்கப்பட்டு புலத்திற்கு வந்தவர்களாலேயே ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

புலிகளால் தான் எமது பிரச்சனை வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.அவர்களது அர்பணிப்பும்,தியாகமும் மறக்கப் படக் கூடாது[வீண் போகக் கூடாது.] அதே புலிகளால் அழிவும் அதிகம் வந்தது என்பதை மறுக்கக் கூடாது.

புலம் பெயர்ந்த தலைமுறை போராடும் என்று நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
பேராட்டம் என்கிறது வீதியில் நின்று கொடுபிடித்து ஆர்பாட்டம் செய்வது மட்டும் அல்ல.நான் எனது பதிலில் நமது அடுத்த தலைமுறை சிங்களம் நினைத்துப் பார்க்க முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறது. என்று குறிப்பிட்டேன்.அதாவது அவர்களது சிந்தனைத் தளம் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு விரிவடைந்து சென்றுகொண்டிருக்கிறது.
நம்முடைய பிள்ளைகள்  இலத்திரனியல் அரசியல் விஞ்ஞானம் சமூகவில் தத்துவம் பொருளாதாரம் சட்டம் விண்ணியல் என்று எல்லா துறைகளிலும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளனர். 
லண்டனை எடுத்துக்கொண்டால் அங்கே சுமார் எமது இனத்தை சேர்ந்த 3000 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.அதேயளவுக்கு சற்று அதிகமான பொறியியலாளர்கள் இருக்கிறார்கள்.அனால் அவர்கள் எல்லாம் உதிரிகளாகவும் தனியாகவும் சில பல நிறுவனங்களிலும் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள்.என்னுடைய தலைமுறையையும் அதற்கு முந்திய தலைமுறையையும் சேர்ந்த இவர்கள் தொழில் துறை கல்வியை கற்றாலும் அதில் உச்சத்தை தொடவில்லை.
மருத்துவமனைகள் மருத்துவ ஆராட்சி நிறுவனங்கள் கட்டுமான பொறியில் நிறுவனங்கள் வங்கி பெருவணிகம் போக்குவரத்து நிறுவனங்கள் என்பவற்றை உருவாக்கி உலகப் பொருளாதார வலையமைப்பில் கால்பதிக்க முயல வில்லை. 
ஆனால் நமது அடுத்த தலைமுறையினர் இது பற்றி சிந்திக்க ஆரம்பித்தள்ளனர்.துறைசார் ரீதியாக அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்
இந்த தியாகி எதிர் துரோகி அரசியலுக்கு அப்பால் இதற்குள் சிக்கமால் ஒரு தலைமுறையினர் அதி உயர் கல்வி அதி உச்ச மொழி மற்றும் தொழில் நுட்ப அறிவு என்பவற்றை பெற்று அவற்றை மூலதனமாக்கிக் கொண்டு சுயதம்பட்டமும் சுயவிளம்பரமும் செய்யாமல் நகர ஆரம்பித்துள்ளனர்
இவர்களுடைய திறமை இவர்களுக்கு இருக்கும் தங்களது சுய அடையாளம் பற்றிய புரிதல்  என்பன இவர்களை அதி உச்ச இலக்கை அடைய வைக்கும்.
இந்த உலகின் சந்தை பொருளாதார வலைப்பின்னலில் எங்கள் இனத்தின் இருப்பை தவிர்க்க முடியாதபடி தக்க வைத்துக்கொள்கிற போது இந்த உலக ஒழுங்கு எங்களுக்கு சாதகமாக மாறும்.
அதுவரை தாயகத்தில் எங்கள் இனம் அழித்தொழிக்கப்பட்டுவிடுமே என்ற கேள்வி எழலாம்.
சிங்களம் இனி நீண்ட நாளைக்கு அதை செய்ய முடியாது.
முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் வளர்ச்சி- ஒரு முரண்பாடு தீரும் போது அது இன்னொரு முரண்பாட்டை தோற்றுவித்துவிட்டே தீரும் என்ற இயங்கியல் விதியின் படி சிங்களத்தின் அரசியல் இருப்பு ஏற்கனவே ஆட்டங்காண ஆரம்பித்துள்ளது.
எமது அடுத்த தலைமுறை சிறீலங்காவை புறக்கணிக்காது.அதனுடன் பொருளாதார ரீதியாக வணிக ரீதியாக அரசியல் இராசதந்திர ரீதியாக போட்டியிட்டு அதனை சட்டபூர்வமாக தேற்கடிக்கும் என்ற அசைக்க முடியதா நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எமது ரதியா இப்படி எழுதுவது நம்பவேமுடியவில்லை .

கடலில் நடப்பவர்களுக்கும் தரையில் நடப்பவர்களுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.