Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 பேர் விடுதலையில் திடீர் திருப்பம்: வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. இதில், அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், 5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம்
தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மீதான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27228

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன  

அரசியல் சாசன அமர்வு ????
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாசன அமர்வு மாற்றத்துக்கு அரசியல் குறுக்கீடு காரணமா? அற்புதம்மாள் பேட்டி

 

சென்னை: தனது மகன் உள்பட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் குறுக்கீடு காரணமாக இருக்கலாமோ என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி திடீரென உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், எனது மகன் விடுதலைக்காக எனது போராட்டம் மீண்டும் தொடரும். இனி அதிக பலத்தோடு போராட்டம் நடத்துவேன். முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஊடகங்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. எனது மகனை முதலமைச்சர் காப்பாற்றுவார்.

எனது மகன் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு தள்ளிபோனதற்கு அரசியல் குறுக்கீடுதான் காரணமோ என்று நினைக்கிறேன். நீதி எங்கள் பக்கம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எத்தனை காலத்திற்குதான் இந்த வழக்கை சொல்லி அரசியல் பண்ணுவார்கள்.

ஒரு பரோல் கூட இல்லாமல் 23 வருடங்களாக சிறைக் கொடுமையை அனுபவிக்கிறார்கள். எனது மகனுக்கும், ராஜீவ் கெலைக்கும் சம்பந்தம்  இல்லை என்று எனது மகனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே சொல்லிவிட்டது எங்கள் பலத்தை கூட்டி விட்டது. எவ்வளவுதான் அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் என் மகனை சட்டப்படி மீட்பேன்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27230

 

அதென்ன  

அரசியல் சாசன அமர்வு ????

 

 

நீதி மன்றத்தின் நடவடிகைகள், தீர்ப்புகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக போகும் சந்தர்ப்பங்கள் இருந்தால் அது பற்றி மேலும் விரிவாக அரசியல் சாசனம் பற்றி நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஆராய்வது என்று தான் நான் விளங்கிக் கொண்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

 

சென்னை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்கள் வழக்கில் இன்று (25ஆம் தேதி) தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, மேற்கூறிய வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக வழங்கி உள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

ஏனெனில், இந்த ஏழு பேருமே ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் துளியும் தொடர்பு இல்லாத குற்றம் அற்ற நிரபராதிகள் ஆவர். ஏறத்தாழ 23 ஆண்டுகளாகச் சிறையில் மனதளவில் சித்திரவதைக்கு ஆளாகி வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

எனினும், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வில், இவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெறும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படிக் கிடைத்தாலும் அது காலம் கடந்த நீதிதான்'' எனக் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27250


--------------------------------

 

 

7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கோரிக்கை!

 

சென்னை: "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளுக்கு  உட்பட்டு பொருத்தமான அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள சட்டங்களின்படி தான் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதுமட்டுமின்றி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய  ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும். இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன. இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில்(பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27236


---------------------------

 

7 பேர் விடுதலை வழக்கு: அரசியலாக்க கூடாது என்கிறார் ஞானதேசிகன்

 

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் நிரபராதி என்பதை ஏற்க முடியாது என்றார்.

மூன்று மாதங்களுக்குள் அரசியல் சாசன அமர்வு அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று கூறிய ஞானதேசிகன், இந்த வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27245

  • கருத்துக்கள உறவுகள்

நீதி மன்றத்தின் நடவடிகைகள், தீர்ப்புகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக போகும் சந்தர்ப்பங்கள் இருந்தால் அது பற்றி மேலும் விரிவாக அரசியல் சாசனம் பற்றி நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஆராய்வது என்று தான் நான் விளங்கிக் கொண்டேன்.

 

 

அப்படியானால் காலம் இழுக்குமே... :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

23 வருடங்கள் பொறுத்துவிட்டார்கள்.. இன்னும் ஒரு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

 

அதென்ன  

அரசியல் சாசன அமர்வு ????

 

 

பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும்போது Single Bench தான் இருக்கும் அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதியே தீர்ப்பு வழங்குவார். சற்றுச் சிக்கலான தீர்வுகளுக்கு Constitutional Bench அமைக்கப்படும். இங்கு ஒற்றை எண்ணிக்கையில் மூன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் இருப்பர். பெரும்பான்மையானோரின் முடிவு தீர்ப்பாக ஏற்கப்படும்.

 

அரசியல் என்ற சொல் மொழிபெயர்ப்பு மயக்கம் என நினைக்கின்றேன்

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் வேண்டுமென்றே இழுத்தடிக்கினம்...!

 

இன்று ஓய்வில போறவர் தமிழ்மக்கள் வயித்தில பால் வார்த்துட்டுப் போய் காலாட்டிக் கொண்டிருக்கிறதை விட்டிட்டு, அங்கால மாத்திட்டு போறாராம்...!!

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சதாசிவம் ஐயா அவர்கள் இத்தனை தடைகளையும் அழுத்தங்களையும் தாண்டி மரணதண்டனையை இரத்து செய்ததே பெரிய விடையம் ஆக இப்பொழுது அவர்களுடைய இருப்பு உறுதிப்படுத்த பட்டுவிட்டது..... இனி விடுதலை சற்று கால தாமதமாகலாம்.... ஆனாலும் உறுதியுடன் போராடினால் அதையும் சாத்தியமாக்கலாம்.... மத்தியிலே காங்கிரஸ் அரசை வைத்துக்கொண்டு அதற்க்கு எதிராகவே தீர்ப்பு சொல்லுவது என்பது சாதாரண விடையம் அல்ல ஆனாலும் அதை துணிந்து செய்து நாளையுடன் ஓய்வு பெரும் சதாசிவம் ஐயா அவர்கள் அவருடைய ஓய்வு கால வாழ்கையை மகிழ்ச்சியுடனும் திருப்த்தியுடனும் கழிக்க வாழ்த்துக்கள்.....

சானேற திரும்பவும் முழம் சறுக்கியிருகிறது. இப்படித்தான் ஈழ விடுதலைப்போரட்டமும் தோல்வியுற்றது.

 

சாந்தன் முருகன், பேரறிவாளன் மூவரும் மத்திய அரசால் தண்டிகப்பட்டவர்கள் என்றும், மற்றய நால்வரும் ராஸ்டிரபதியால் ஏற்கனவே ஒருமுறை மன்னிப்பு பெற்றவர்கள் என்றும் ஆகையால் இவர்களை மாநில அரசு விடுதலை செய்ய 432,433 குற்றவியல் சட்ட பிரிவுகள் வெளிப்படையாக அனுமதி அளிக்கவில்லை என்று மேடைகளில் தமிழ்நாட்டுக் காங்கிரசாரும், கோட்டில் மத்திய அரசும் வாதிட்டிருந்தனர்.  தமிழக தேர்தலை பாதிக்காதிருக்க வேண்டுமென்றே மத்திய அரசும், கருணாநிதியும் வழக்கு முடிவை தள்ளிப்போடுவித்திருந்தனர்.

 

நீதியரசர் சதாசிவம் தான் பதவி விலகும் நாளன்று மானில, மத்திய அரசுக்கிடையில் போட்டி ஏற்படத்தக்க வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிவிட்டு போக விரும்பவில்லை. இதனால் மத்திய அரசின் வக்கீல்கள் குற்றம் சாட்டியபடி மானில அரசு மத்திய அரசின் எல்லைக்குள்(அதனால் சிறையில் போட்டவர்கள் தனது விருப்பப்படி விடுதலை செய்து) உள்ளடுகிறது என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்க, நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு வேண்டும் என்றும் நீதியரரும் மேலும் இருவருமாக மூவர் இந்த அப்பீலை விசாரிக்க முடியாது என்ரும் வைத்த மத்திய அரசின் வக்கீல்களின் வாதத்தை ஏற்று தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இனி விவாதம் மாநில அரசின் அதிகாரம் சம்பந்தமாக இருக்க போகிறதே அல்லாமல் ராஜீவ்காந்தி கொலைவழக்கின் குற்றம், விடுதலை போன்றவற்றில் அதிகம் தங்காது. இதன் 100% பொறுப்பும் தமிழக அரசின் மீதுதான் சாரும். 

 

நல்ல காலம் கருணாநிதி பதவியில் இல்லை. ஏற்கனவே தான் தோற்காமல் இருக்க வழக்கின் தீர்ப்பை  மான ரோசம் இல்லாமல் தேர்தலுக்கு பின்னால் போடவேண்டும் என்று கேட்டவர். உச்ச நீதி மன்றம் சந்தர்பவசமாக தன்னும் தேர்தலுக்கு முதல் அவர்களை விடுதலை செய்ய கூடாது என்று விரும்பினார். தனது முதலமைச்சர் பதவிக்காலம் முழுவதும் தான் மத்தியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் என்ற கேடியை திருப்தி படுத்த அப்பாவிகளை சிறையில் அடைத்துவைத்திருந்து விபசாரி வாழ்க்கை வாழ்ந்தவர். அற்புதம்மாள் கருணாநிதி தனது பதவிக்கும் பணத்திற்குமாகத் தான் பெற்றுவளர்த்த பிள்ளையை இற்றைவரையும் சிறையில் வைத்திருந்த்துவிட்டார் என்று வெளிப்படையாக கூறி தனது மனத்தை ஆற்றப் பயப்படுகிறார். இதைத்தான் அறுபுதம்மாள் வழக்கு(இனிமேல்த்தான்) அரசிலாக்கப்படுவதாக குறிப்பிடுகிறார். 

 

 

மோடி மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை திருடுவதாக சொல்வதை நீதியரசர் தனது கவனத்தில் எடுத்திருந்திருக்கலாம். எனவே மோடி பதவிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில் தனக்கு பின்னர் வழக்கில் மத்திய அரசின் அழுத்தம் குறைவாக இருக்கவும், வழக்கு சட்டத்தை தழுவி செல்லும் என்றும் எதிர்ப்பார்த்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் போல்ப்படுகிறது. வை கோ தேர்தலில் வென்றால் மத்திய அரசில் ஒரு இடம் கிடைக்கும். இது மத்திய அரசு மாநில அரசு மீது போடத்தக்க அழுத்தத்தை குறைக்கத்தக்க மோடியுடன், வழக்கு மீதும் மத்திய அரசு போடத்தக்க அழுத்தத்தை குறைக்கத்தக்க வைகோ இணைவதாகிறது.

 

முன்னர் மூவர் அடங்கிய பெஞ்ச் மாநில அரசுக்கு விடுதலை செய்ய அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்கள். வெளியே இருந்து பார்க்கும் போது முவர் ஏகமனதாக வெளிவிட்ட இந்த அபிப்பிராயம், காங்கிரஸ் அரசியல் வாதிகள் தேர்தலுக்கக்க கண்டுபிடித்த "அப்படி விடுவிக்க அதிகாரம் இல்லை" என்ற கண்டுபிடிப்பை விட சரியாக இருக்கும் சந்தர்ப்பம்தான் அதிகம். கருணாநிதி வழக்கின் தீர்ப்பு மீதுகாட்டிய பயமும் இதைதான் சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மல்லையூரான்.வரும் போது பெரிய கட்டுரையுடன் வந்து உள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாநில அரசுககுள்ள அதிகாரம் என்ன என்பதை இந்த அரசியல் சாசன அமர்வு சொல்ல வேண்டும்.ஜெயா அரசியலுக்காக இந்த விடயத்தைக் கையாண்டாலும். இதில் ஒரு நன்மை இருக்கிறது.சதாசிவம் ஜயா முன் வந்த இந்த வழக்கு இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கா இல்லையா என்பதைத் தவிர குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் விடுதலையைப் பற்றியதல்ல.அது பற்றிய தீர்ப்பை அவர் ஏற்கனவே வழங்கி விட்டார்.

எல்லாம் தேர்தல் பரப்புரை நாடகங்கள். 22 வருசமா தீர்ப்பு குடுக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.