Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்து - கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்­பாணம் இந்து மற்றும் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரி­க­ளுக்­கி­டை­யே­யான  "சிவ­கு­ரு­நாதன் கிண்­ணத்­துக்­கான" இருநாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆனந்­தாக்­கல்­லூரி மைதா­னத்தில் இன்று வெள்­ளிக்­கி­ழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

யாழ் இந்­துக்­கல்­லூ­ரியின் பழைய மாண­வரும் ஆனந்தா கல்­லூ­ரியின் முன்னாள் ஆசி­ரி­ய­ரு­மான வீ.ரீ.எஸ். சிவ­கு­ரு­நாதன் ஞாப­கார்த்­த­மாக இப்­போட்­டிக்கு சிவ­கு­ரு­நாதன் கிண்ணப் போட்டி என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

3 ஆவது தட­வை­யாக இச்­சுற்­றுப்­போட்டி நடை­பெ­று­கி­றது.  இதற்கு முன் நடை­பெற்ற இரு போட்­டி­க­ளிலும் இரு அணிகளும் தலா ஒரு தடவைவென்றமை குறிப்பிடத்தக்கது.

 

5251ananda1.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5251#sthash.fJaOeDXg.dpuf

யாழ் இந்துக் கல்லூரியுடனான போட்டியில் ஆனந்தா கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி
2014-04-28 10:25:11

யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான இரண்டுநாள் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களால் ஆனந்தா கல்லூரி வெற்றி பெற்றது.


சிவகுருநாதன் கிண்ணத்துக்கான இப்போட்டி ஆனந்தா கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளி, சனி தினங்களில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்தா கல்லூரி அணி 8 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 45 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. 209 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்த நிலையில் பொலோ  ஒன் நிலைக்குத் தள்ளப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.


இரண்டாவது இன்னிங்ஸில் அவ்வணி 9 விக்கெட் இழப்புக்கு 83 ஒட்டங்களைப் பெற்றிருந்த நிலiயில் முதல்நாள்ஆட்டம் நிறைவடைந்தது.
இரண்டாவது யாழ் ஆட்டம் ஆரம்பமானவுடன் மேலும் 9 பந்துகள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் மேலதிக ஓட்டம் எதையும் பெறாமல் இறுதி விக்கெட்டையும் யாழ் இந்துக் கல்லூரி அணி இழந்தது.

3 ஆவது தடவையாக இப்போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5273#sthash.VJaIYs4l.dpuf

யாழ் இந்து படுதோல்வி .

போதிய பயிற்சிகள் எடுத்து முன்னேறினால் தான் இலங்கை அணியில் ஒருசிலராவது இடம் பிடிக்கமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தாவுக்கு நேர விரயம்!  :o  :D

வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் உண்மையான விளையாட்டு என்று என்னதான் சமாதானம் சொன்னாலும், ஒரு சிங்கள பாடசாலையிடம் இப்படி மோசமாக தோற்றுப் போனதைக் கேட்க வெறுப்பாக இருக்கு.

 

 

தொடங்கீட்டினம்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தா போன்ற அணிகளின் ஆடுகளங்களில் ஆடுமளவுக்கு யாழ் இந்துவின் கிரிக்கட்டின் தரம் இல்லை. இந்துவின் கிரிக்கட் தரம் உயரவேண்டுமாயின் பன்னாட்டுத் தரத்திற்கமையாவான ஆடுகளம் (Turf) அமைக்கப்படவேண்டும்.  இந்துவின் பழைய மாணவர்கள் உதவ முன்வரவேண்டும்

நல்லவிடயம் வாலி ,

Turf  பற்றி , அதை பரீட்சித்துபார்க்க ஏன் யாழில் எந்த கல்லூரியும் முயற்சிக்கவில்லை என்று நானும் நினைத்ததுண்டு .

எதற்கும் ஐங்கரநேசனிடம் கேட்டுபார்ப்போம் .முடியுமென்றால் நிட்சயம் அடுத்த அலுவல் அதுதான் .

 

பத்து வருடங்களுக்கு முன்பு பிட்சும் (மற்ரிங்) அதைவிட கிரிக்கெட் உபகரணங்களும் வாங்க நண்பர்கள் சிலர் சேர்ந்து பணம் அனுப்பினோம் .

யாழ் இந்து (கனடா ) இதுவரை செய்தது பற்றி ஒரு ஆக்கம் எழுதத்தான் வேண்டும் .

நவீனனை coach ஆய் போட்டால் சரி பிறகு  இலங்கையில் அணியில் முழுப்பேரும் யாழ் இந்துவாய் தான் இருக்கும்!!!


:D  :D

நவீனனை coach ஆய் போட்டால் சரி பிறகு இலங்கையில் அணியில் முழுப்பேரும் யாழ் இந்துவாய் தான் இருக்கும்!!!

:D:D

ஏன் அலை இலங்கை அணி நல்லா இருக்கிறது வெறுப்பாக இருக்குது போல

நெடுக்கரை இந்தப் பக்கம் காணம்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை இந்துக்கல்லூரி நல்ல டீம் இல்லை. சென்டல் இடமும் , சென் ஜோன் இடமும் முறையாக தோற்றது.

மற்றது, புத்தரை எந்தளவிற்கு சரி வரும் என்று தெரியவில்லை. ஒன்று இரண்டு பாடசாலையில் போடுவதால், அவர்களுக்குதான் கரைச்சல்..அவர்களால் மற்ற - கயிற்றுபாய் விரித்து விளையாடும் ஆடு இடத்தில் விளையாடுவது கடினம்...ஒரு 10-15 பள்ளிக்கொடங்களுக்கு இந்த வசதி செய்ய வாய்ப்பு இருக்கோமோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரை இந்தப் பக்கம் காணம்??

 

யாழ் கோட்டைக்குள்.. பரியோவான் கல்லூரி சிங்களப் படைகளுடன் கால்பந்து விளையாடி தான்.. அதன் திறமை வெளிப்படனும் என்று விரும்பின ஆக்கள் தான்.. இதையும் ஏற்பாடு செய்திருப்பினம்.

 

எங்கட இனம் இருக்கே.. அதுக்கு.. ஒரு சூடு சொரணை கிடையாது. சிங்களவன விட்டா அதுக்கு தன்ர திறமையைக் காட்ட வளர்க்க போக்கிடம் இல்ல.. என்று அற்பத்தனமான சிந்தனைகள்.

 

இதில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

 

எங்க போய் எப்படி முடியுதுன்னு பார்க்கிறதை தவிர.. உதுகளுக்கு சொல்லி கேட்கிற அளவிற்கு அதுகளுக்கு கேள் புத்தி இல்ல. அதால.. இந்தப் பக்கம் வரேல்ல.

 

யாழ் இந்து வென்றாலும்.. தோற்றாலும்.. இந்த வடக்குத் தெற்கு பாலம்.. பம்பாந்தில் எங்களுக்கு கிஞ்சிதமும் நம்பிக்கை இல்லை. முள்ளிவாய்க்காலும்.. கோப்பாயில் எமது கல்லூரி மாணவர்களை ஹெலியை இறக்கி சுட்டுக் கொன்ற சம்பவங்களுமே கண் முன்னால் வந்து போகிறது.

 

வெளிநாட்டுக்கு ஓடி வந்து விசிலடிக்கிற குஞ்சுகளுக்கு.. இந்த ரணங்கள் புரிய வாய்ப்பில்லை. அதேபோல் உள்நாட்டில் எதிரியின் கூடாரத்துக்குள்ளேயே சுறுண்டு கிடந்து காட்டிக்கொடுத்து வாழ்ந்ததுகளுக்கும்.. அந்த வலி தெரியாது. தெரிந்தாலும்... உணராது. விடுங்க.. விட்டிடுங்க. நாங்க எங்க வழி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையாளர்களில் பலர் ஆனந்தாவைச் சேர்ந்த சிங்களவர்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் உண்மையான விளையாட்டு என்று என்னதான் சமாதானம் சொன்னாலும், ஒரு சிங்கள பாடசாலையிடம் இப்படி மோசமாக தோற்றுப் போனதைக் கேட்க வெறுப்பாக இருக்கு.

 

இப்ப யாழ் இந்து சமூகத்துக்கு  ஆனந்தா சிங்களப் பெடியள் சகோதரங்கள் மாதிரி.

அதாலை இந்தத் தோல்வியைத் தங்கள் வெற்றியாகத் தான்  பாப்பினம்

வெற்றி தோல்வியிலை என்ன இருக்கு

ஒரு பக்கம் விளையாட்டு நடக்க மற்றப்பக்கத்திலை தண்ணி அடிச்சுப்போட்டு  கூத்தும் கும்மாளமும்  அல்லோ முக்கியம்  :D  

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழ் இந்து சமூகத்துக்கு  ஆனந்தா சிங்களப் பெடியள் சகோதரங்கள் மாதிரி.

அதாலை இந்தத் தோல்வியைத் தங்கள் வெற்றியாகத் தான்  பாப்பினம்

வெற்றி தோல்வியிலை என்ன இருக்கு

ஒரு பக்கம் விளையாட்டு நடக்க மற்றப்பக்கத்திலை தண்ணி அடிச்சுப்போட்டு  கூத்தும் கும்மாளமும்  அல்லோ முக்கியம்  :D  

 

 

சந்திரிக்கா அம்மையார் நாகர் கோவிலில் பள்ளிக்கூடம் மீது விமானக் குண்டு போட்டு பள்ளிக் குழந்தைகள் 17 பேர் வரை கொன்ற பின்.. கொழும்பில்.. முக்கிய பள்ளிகளுக்கு முன்னாள் இராணுவத்தை சென்ரி போட்டு நிறுத்தி வைச்சிருந்தவா.

 

அந்தக் காலத்தில்.. பொரளையால பள்ளிக்கூடம்.. போகேக்க.. ஆனந்தா தாண்டிப் போறது.  முன்னாள முழியவிழத்துக்கு ஆமிக்காரன் தான் நிற்பான். சில நேரம் பஸ்களை மறிச்சு ஆக்களை இறக்கி செக் பண்ணுவான்.

 

அப்புறம்.. புலிகளின் வெடிகுண்டு பஸ் கொழும்புக்கு வந்திட்டாம் என்று மூடின பள்ளிக்கூடங்களில் ஆனந்தா முக்கியமானது. மிகவும் மோசமான சிங்கள பேரினவாதிகளை உருவாக்கிய பள்ளிக்கூடங்களில் ஆனந்தா முக்கியமானது. :icon_idea:

 

இவை என்ன தான்.. பாலம் போட்டாலும்.. கூடச் சேர்ந்து தண்ணி அடிச்சாலும்.. சிங்களவன்.. உதுக்களை லேசில மறக்கமாட்டான். ஆனால் நாங்கள் மறந்திடுவம். சகோதர பாசத்தில பின்னில் பிடல் எடுத்திடுவம். :lol:

தமிழினப் படுகொலையாளர்களில் பலர் ஆனந்தாவைச் சேர்ந்த சிங்களவர்கள். :icon_idea:

 

 

 

உண்மை.
 
பிற்போக்கு சிங்கள இனவாதச் சிந்தனை கொண்டவர்கள் தான் ஆனந்தா கல்லூரி மாணவர்கள். சிங்களக் காடையர்கள் என்பவர்கள் தான் இவர்கள்.
 
83 கலவரத்தில் இவர்கள் கொலை, பாலியல் வன்முறை போன்றவற்றில் ஈடுபட்டார்கள். பின் சிங்களப் படையில் இணைந்தார்கள்.
 
ஆனந்தாவுடன் மட்ச் ஆடப் போய் யாழ் இந்துவின் மரியாதை போய்விட்டது.

சமூக நல்லிணக்கத்திற்கு யாழ் இந்து எப்பவும் முன் உதாரணம் தான் .

தமிழின படுகொலையாளர்கள் என்று நீங்கள் சொல்பவர்களையும் பயங்கரவாதிகள் என்று அவர்கள் சொல்பர்களும் அதிகம் படித்த பாடசாலைகள் இவை இரண்டும் .

இந்த இரண்டிற்கும் மாட்ச் வைப்பதன் மூலம் பல பிரச்சனைகள் தீரும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாத இனப்படுகொலையாளர்களோடு மட்ச் விளையாடுவதன் மூலம்.. தமிழ் மக்கள் மீதான பல்வேறு அழிவுகளுக்கு காரணமானவர்களை மன்னிக்கவோ.. உறவு கொண்டாடவோ.. யாழ் இந்துக் கல்லூரிக்கு உரிமை கிடையாது. சிங்களவர்கள் பயங்கரவாதத்தை உச்சரிக்க முன்னரே.. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டாயிற்று. அதன் பின்னணிகளில் எல்லாம்.. ஆனந்தா இனவெறியர்கள் இருந்துள்ளனர்.

 

யாழ் இந்துக் கல்லூரி.. தான் சார்ந்த சமூகத்திற்கு....கல்வி போதிக்கும் இடமே தவிர.. போலி இன நல்லிணக்க அரசியல் செய்யும்...தளம் அல்ல.

 

கல்லூரியை தவறான நோக்கங்களுக்காக யார் பயன்படுத்தினாலும்.. அதனை எந்த வாதத்தாலும் சரிக்கட்ட முடியாது. அதற்கான விலையை அவர்கள் ஓர் நாள் கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் ஆனந்தாவுடன் இந்து கிரிக்கட் ஆடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் இந்துவின் கிரிக்கட் தரம் சர்வதேச அளவில் உயரவேண்டும் என்பதில் பெருவிருப்பு உடையவன். அதற்கு நிச்சயம் Turf களில் ஆடிய அனுபவம் தேவை.

 

மேலே சொன்னது எனது தனிப்பட்ட கருத்து, ஆனால் இந்துவில் விளையாடும் ஒவ்வொரு வீரரின் கனவும் இலங்கை தேசிய அணியில் விளையாடுவதாகவே இருக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் சம்மதம் தெரிவிப்பார்கள். இது இந்துக் கல்லூரிக்கு மட்டுமல்ல மற்றைய கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஆனந்தாவுடன் விளையாட எந்தவொரு வீரரோ அல்லது பெற்றோரோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்தமுறை இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆட்டம் நடந்தபோதுகூட எவரும் எதிர்ப்புக் காட்டவில்லை.

 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த போர் எம் மக்களுக்கான நியாயமான பல உரிமைகளைத் தவறிவிடச்செய்திருக்கிறது. உரிமை என்பதன் கருத்து இலங்கை தேசிய அணியில் இடம்பெறுவது என்பது அல்ல. மாறாக உயர்த்தப்படவேண்டிய தரத்தின் அளவு இன்னமும் அதே 30 வருடங்களுக்கு முந்திய நிலையில் அல்லது ஒரு சிறு முன்னேற்றம் மட்டுமே கண்டிருக்கிறது. இது விளையாட்டுத் துறைக்கு மட்டுமின்றி இதர துறைகளுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
மேலே சொன்னது எனது தனிப்பட்ட கருத்து, ஆனால் இந்துவில் விளையாடும் ஒவ்வொரு வீரரின் கனவும் இலங்கை தேசிய அணியில் விளையாடுவதாகவே இருக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் சம்மதம் தெரிவிப்பார்கள். இது இந்துக் கல்லூரிக்கு மட்டுமல்ல மற்றைய கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஆனந்தாவுடன் விளையாட எந்தவொரு வீரரோ அல்லது பெற்றோரோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்தமுறை இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆட்டம் நடந்தபோதுகூட எவரும் எதிர்ப்புக் காட்டவில்லை.

 

 

 

சிறீலங்கா சிங்கள அணியில் விளையாடனுன்னு யாழ் இந்துக் கல்லூரியில் உள்ளவர்கள் கனவு காண்கிறார்கள் என்பது கொஞ்சம் இல்ல.... ரெம்பவே ஓவர். சிறீலங்கா சிங்கள அணியில் வீரர்கள் உள்ளெடுக்கப்படும் முறை குறித்து அறிந்தவர்கள் எவருமே இந்தக் கனவு காணமாட்டார்கள்.

 

சிறீலங்கா வரலாற்றில்.. மலையத்தில் இருந்து முரளிதரனும்.. அதற்கு முன் ஒரு சிலரும் என்று வெகு சிலரே அந்த அணியில்.. தமிழர் என்ற பின்னணியோடு.. சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அதை விட யாழ் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு வரலாற்றில்.. இப்படி ஒரு அதியசம் நிகழ்ந்ததில்ல. நிகழவும் வாய்ப்பில்லை. அதற்காக யாழ் இந்துக் கல்லூரியில்.. திறமையான வீரர்கள் இல்லை என்றில்லை. இருக்கிறார்கள். ஆனால்.. அவர்கள் வடக்குக் கிழக்கு தமிழர்கள் என்ற மூலப் பிரச்சனை அங்குள்ளது. அதைத் தாண்டி திறமை சிங்கள தேசத்தில் வெளிப்பட முடியாது.

 

இன்று தமிழர்கள் உலகம் பூராவும் உள்ளனர். இங்கிலாந்தில் பலமான யாழ் இந்து அமைப்புக்கள் உள்ளன. இங்கிலாந்தில் பல கவுண்டிகளில்.. கிரிக்கெட் நிகழ்கிறது. குறைந்தது அவற்றிலாவது விளையாடக் கூடிய அளவுக்கு வீரர்களை உருவாக்கலாமே.

 

அதுபோக.. இப்போ.. ஐ பி எல் உள்ளது. தமிழகம் சார்ந்த அணிகளில் விளையாடக் கூடிய அளவுக்கு ஒரு தகுதி பெறலாமே.

 

அதுபோக... தமிழீழ கிரிக்கெட் அணியை ஸ்தாபித்து.. கிளப் போட்டிகளில் நாட்டுக்கு வெளியில் விளையாடலாம்.

 

அதுபோக.. உள்ளூரில்.. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு என்று ஒரு பொதுவான கிரிக்கெட் கிளப்பை உருவாக்கலாம். வடக்கில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில்.. ஜொலிஸ்ரார்.. ஜொனியன்ஸ்.. சென்ரலைன்ஸ்.. பற்றீசியன்.. என்று பல கிரிக்கெட் கிளப்புகள் இருந்தன. ரோட்டறிக் கிளப் ஆதவரவில்.. வருடாந்த போட்டிகளும்  நடத்தப்பட்டன. கோப்பைகளும் வழங்கப்பட்டன.

 

ஏன்.. சிங்களவனைத் தாண்டி தமிழர்களுக்கு கிரிக்கெட் அமைய முடியாதோ..????????????????????!

 

சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு மாணவர்களை பயிற்றனுன்னா.. வளமும் சர்வதேச தர பயிற்சியாளர்களும்.. தான் கல்லூரிக்கு தேவையே தவிர.. சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடுவது தான் அவசியம் என்றில்லை..!

 

இங்கிலாந்தில் இருந்து கூட கிரிக்கெட் பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அங்கு அனுப்பி பயிற்றுவிக்கலாம். சிங்கள அணிக்கு இங்கிலாந்தவர்கள் தானே பயிற்றுவிப்பாளர்களாக உள்ளனர். இதனை வடக்கு மாகாண சபை.. மற்றும் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அமைப்புக்கள் இணைந்து மேற்கொள்ளலாம்.

 

ஆனந்தாவோடு கிரிக்கெட் விளையாடித்தான்.. யாழ் இந்துக் கல்லூரி சர்வதேச தரத்தை அடையனும் என்ற நியதி ஒன்றும்.. அதற்கு எழுத வேண்டியதில்லையே. எத்தனையோ மார்க்கம் இருக்க.. சிங்களவன்ர கோடிக்க தான் கிரிக்கெட் விளையாடுவம் என்று நிற்கிறது.. வறுத்தெடுத்த சிங்கள அடிமைத்தனத்தை சிலர் யாழ் இந்து மீது திணிப்பதன் எதிரொலிதான் இந்த போட்டிகள். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.