Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்

Featured Replies

செல்வா, இந்திய பாகிஸ்தானிய சட்டத்தை கொண்டுவந்த UNP விட்டு விலக மறுத்த "இலங்கை (கவனிக்கவும்- "இலங்கை" மட்டுமே அந்த கட்சியின் கொள்கை-  இந்திய அல்ல) தமிழ் காங்கிரசை" விட்டு வந்து தமிழ் அரசு கட்சி ஆரம்பித்தார். (கவனிக்கவும் இந்து-கிறிஸ்தவ அரசுக்கட்சி அல்ல). கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு முஸ்லீமையும் தமிழர் என் உணரவைக்க முயன்றார். முடிவு பதியுதின் தமிழருக்கு தரப்படுதலை கொண்டுவந்தார். பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின.  இதில் யாரிடம் தமிழர் எதற்கு மன்னிப்பு கேடக வேண்டும். பதியுதினின் நடவடிக்கையால் தோன்றிய இயக்கங்கள் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டி வருகிறது?

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப் பட்டமை தமிழர்களை இனவாத அரசிற்கெதிராகப் போராடத் தூண்டியிருந்தாலும் தொடர்ச்சியான தமிழர் மீதான இனக் கலவரங்கள், சிங்களம் மட்டும் சட்டம், சிங்கள சிறி எதிர்ப்பு போராட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்கள் மற்றும் கல்வியில் தரப் படுத்தல் போன்றனவே இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளியிருந்தன. இலங்கையின் அரசுத் தலைவர்கள் எவருமே தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிறீமா காலத்தில் கல்வியமைச்சராகவிருந்த "பதியுதீன் தரப்படுத்தலைக் கொண்டு வந்தார் அதனால் விடுதலை இயக்கங்கள் தோன்றின" என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

சக இனங்களிலிருந்து கோரப்படும் அழைப்புகளை நாம் தீர விசாரிக்காது அப்பாவித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. அதற்காக பச்சை இனவாதக் கருத்துக்களை வைப்பது எந்த வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை.

uk_5_5_2014_12.jpg

  • Replies 84
  • Views 5.7k
  • Created
  • Last Reply

இலக்கு எதிரி மட்டுமே .

எமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் என்று பார்த்தால் பட்டியல் மிக நீளம் .இவர்கள் எல்லோரையும் வெறுத்து எதையும் இன்று நாம் சாதித்துவிடமுடியாது .

நம்ப நட நம்பி நடவாதே என்று இருந்திருந்தால் எவருடனும் பிரச்சனை படதேவையில்லை ,இன்னொருவரை நம்பி நாம் போராட்டம் நடத்தமுடியாது .

நாம் நம்பி போராட தேவையில்லை ஆனால் சேர்ந்து பொது எதிரியை அடக்க முற்படலாமே?

அதைத்தான் நானும் எழுதியுள்ளேன் .இலக்கு எதிரி மட்டுதான் என்று . :icon_mrgreen:

ஓகே. நானும் அண்ணரும் இசுலாமிய சகோதரங்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்கிறோம்.

ஆதரவு கொடுக்க கூடாது என்போர்:

இசுலாமியர் உதவவில்லை, மதமாற்றம் செய்துவிடுவார்கள் என்பதை தவிர கை கோர்ப்பதால் வரும் பாதகங்கள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப்பாடங்களை  மறந்த  போராட்டமும்

வாழ்க்கையும்

வீண்................ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே. நானும் அண்ணரும் இசுலாமிய சகோதரங்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்கிறோம்.

ஆதரவு கொடுக்க கூடாது என்போர்:

இசுலாமியர் உதவவில்லை, மதமாற்றம் செய்துவிடுவார்கள் என்பதை தவிர கை கோர்ப்பதால் வரும் பாதகங்கள் என்ன?

இல்லாத பிள்ளைக்கு என்ன பெயர் சூட்டுவது?

எமது போராட்டம் தமிழருக்கா அல்லது சைவம்/இந்துக்களுக்கானதா என்று சிலர் குழம்பியுள்ளனர்.

முஸ்லிம்களின் நோக்கம் தெளிவானது. முஸ்லீம்களுக்கு தமிழர்களின் உதவி தேவையில்லை. தமிழர்களின் ஆதரவு தற்காலிகமாக அல்லது அவர்களின் நோக்கத்திற்கு உறுதுணையாகத் தேவைப்படலாம்.

இதில் தமிழர் தரப்பு எவ்வாறு தமக்கும் இலாபத்தைத் தேட முடியும் என்பதைப் புத்தி சாதுரியத்துடன் கணிக்க வேண்டும். விரும்பாவிட்டாலும் கூட, முஸ்லிம் தரப்பு இல்லாமல் தமிழர்கள் சாதகமான எந்த ஒரு தீர்வையும் சிங்களத்திடம் இருந்து பெற முடியாது. மாறாக, சர்வதேசத்திடம் இருந்து ஏதாவது தீர்வு கிடைக்க முடியுமானால் அதனை முஸ்லிம்கள் மூலம் சிங்களம் குழப்ப முயலும்.

இன்னும் மீசையை முறுக்கிக் கொண்டிருப்பவர்களுக்காக : இலங்கையில் இன விகிதாராத்தின்படி சிறுபான்மை இனத்தவர்களில் விரைவில் தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இரண்டாம் இடத்துக்கு நகர்த்தப்படுவார்கள்.

முடியல ...............அப்பிடி இன்று நடக்குமாயின் அது உலக அழிவிற்கு சமன் ..............பூர்வ ஜென்மமுள்ள இந்துக்களாகிய தமிழர்களுக்குக்கே அலவாங்கடித்துக்கொண்டிருக்கும் சிங்களம் வந்தான் வரத்தான் ஆகிய முஸ்லிமுக்கு என்ன அடிக்கும் என்று தெரியாத முட்டாள்கள் நாங்களில்லை .நன்றி  :D

முதலில் யாரும் இந்த போராட்டம் சைவ/இந்து போராட்டம் என்று குறிப்பிடவில்லையே, எப்படி நீங்கள் அதை அப்பொருளில் எடுத்தீர்கள்,முஸ்லீம் தெளிவாகத் தான் இருக்கிறான் தமிழன் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதெ அவன் நோக்கம், ரிஷாத் பதிருதீன் செய்வதில் இருந்தே இது புலனாகும், அவன் எங்கட நிலங்களில் ஆக்களை பலவந்தமாக குடியேற்றுவான் நாங்கள் எல்லாத்தையும் அவனிடம் ஒற்றுமை என்ற பெயரில் தூக்கிக் கொடுத்துப் போட்டு இருப்பம், சரி இன விகித்ததில் இருந்து தமிழன் 3ம் இடத்திற்கு போய் விடுவான் என்று சொல்லுறியள் அதுக்குத் தான் நாங்கள் தமிழ் ஈழத்தை விட வேறு எந்த தீர்வும் சரிவராது என்று கூறூகிறோம். ஏன் என்றால் முஸ்லீமுக்கு நல்லாய்த் தெரியும் சிறீலங்காவில் தான் தாங்கள் பலமாக இருக்கலாம்,ஆனால் எப்போது தமிழ் ஈழம் அமைக்கப்படுகிறதோ அன்றைகே தமது பலம் முழுவதும் போய் விடும் என்று அவர்களுக்குத் தெரியும், அதானால் தான் தெளிவாக இருந்து தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட அழிவுக்கு துணை போனர்கள், ஒரு வேளை தென் இலங்கையில் இருந்து விரட்டினால் தமிழனின் பிரதேசம் இருக்கு அங்கு போய் குடியேறலாம் என்று அவங்களுக்குத் தெரியும். அதைத் தான் ரிசாத் செய்கிறான், தமிழனும் இழிச்ச வாயன் என்று அவனுக்குத் தெரியும். அது சரி ஏன் அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமிழனை அழிக்கிறியள்

முடியல ...............அப்பிடி இன்று நடக்குமாயின் அது உலக அழிவிற்கு சமன் ..............பூர்வ ஜென்மமுள்ள இந்துக்களாகிய தமிழர்களுக்குக்கே அலவாங்கடித்துக்கொண்டிருக்கும் சிங்களம் வந்தான் வரத்தான் ஆகிய முஸ்லிமுக்கு என்ன அடிக்கும் என்று தெரியாத முட்டாள்கள் நாங்களில்லை .நன்றி  :D

இலங்கை சுதந்திரம் அடையுமுன் (1946) இலங்கைச் சனத் தொகைக் கணிப்பீடு

சிங்களவர்: 69.41%

இலங்கைத் தமிழர்: 11.02%

முஸ்லிம்கள்: 5.61%

மலையகத் தமிழர்: 11.73%

2011ம் ஆண்டு இலங்கைச் சனத் தொகைக் கணிப்பீடு

சிங்களவர்: 74.88%

இலங்கைத் தமிழர்: 11.21%

முஸ்லிம்கள்: 9.23%

மலையகத் தமிழர்: 4.16%

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் மலையகத் தமிழர்கள் பலர் குடியுரிமை பறிக்கப் பட்டு இந்தியாவிற்கு அனுப்பப் பட்டதனாலும் ஏனைய பலர் குடியுரிமை பெற்றதும் நகர்ப்புறங்களுக்கும் இலங்கைத் தமிழர் பகுதிகளுக்கும் நகர்ந்து தம்மை இலங்கைத் தமிழராக அடையாளப் படுத்தியமையும் அவர்களது சனத்தொகை விகிதத்தை வெகுவாகக் குறைத்தது.

போரினால் கொல்லப் பட்ட இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையும் நாட்டை விட்டு இடம் பெயர்ந்த தமிழரின் எண்ணிக்கையும், அவர்களது இயல்பான வளர்ச்சி இருந்தும், விகிதாசாரத்தில் பெரியளவில் மாற்றத்தைக் கொண்டு வராதிருக்க சிங்களவரும் முஸ்லீம்களும் சனத் தொகை வளர்ச்சியடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த இலங்கையில் (சிங்களவர், தமிழர்) 7.4% ஆனவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை பலரும் வசதியாக மறந்து விடுகிறீர்கள்.

Edited by Alternative

தரவுக்கு நன்றி சகோ ........ஆனால் கிறிஸ்தவர்கள் ,இந்துக்கள் என்று தமிழர்களை பிரித்து பார்த்ததை வரலாறு ஈழத்தில் இல்லை ....முஸ்லிம்கள் தம்மை பிரித்துக்கொண்டே இன்றுவரை நகர்ந்து கொண்டிருக்கிற்றார்கள் என்பதே வரலாறும் யதார்த்தமும் ...நீங்கள் எந்த குட்டையை குழப்பி என்னை குழப்புகிறீர்கள் என்பதை நான் இனம் காணுகிறேன் .....ஆனால் உண்மை என்பது நான் பைபிளில் ஆழமாய் படித்துள்ளேன் ........நீங்கள் பாவம் ........நெருப்பில் எரிய வேண்டியவர்களில் ஒருவர் .நான் சொல்லல .பைபிள் சொன்ன பாடத்தை வைத்து கணிப்பிட்டது ,,,,,,,,,,,,,,,,,,,,நன்றி வணக்கம் ........தமிழரின் தாகம்.................... :D

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் தமிழருக்கா அல்லது சைவம்/இந்துக்களுக்கானதா என்று சிலர் குழம்பியுள்ளனர்.

முஸ்லிம்களின் நோக்கம் தெளிவானது. முஸ்லீம்களுக்கு தமிழர்களின் உதவி தேவையில்லை. தமிழர்களின் ஆதரவு தற்காலிகமாக அல்லது அவர்களின் நோக்கத்திற்கு உறுதுணையாகத் தேவைப்படலாம்.

இதில் தமிழர் தரப்பு எவ்வாறு தமக்கும் இலாபத்தைத் தேட முடியும் என்பதைப் புத்தி சாதுரியத்துடன் கணிக்க வேண்டும். விரும்பாவிட்டாலும் கூட, முஸ்லிம் தரப்பு இல்லாமல் தமிழர்கள் சாதகமான எந்த ஒரு தீர்வையும் சிங்களத்திடம் இருந்து பெற முடியாது. மாறாக, சர்வதேசத்திடம் இருந்து ஏதாவது தீர்வு கிடைக்க முடியுமானால் அதனை முஸ்லிம்கள் மூலம் சிங்களம் குழப்ப முயலும்.

இன்னும் மீசையை முறுக்கிக் கொண்டிருப்பவர்களுக்காக : இலங்கையில் இன விகிதாராத்தின்படி சிறுபான்மை இனத்தவர்களில் விரைவில் தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இரண்டாம் இடத்துக்கு நகர்த்தப்படுவார்கள்.

முறுக்கும் அளவுக்கு மீசை இன்னும் வைக்கவில்லை!

நாங்கள் கற்று அறிந்த பாடத்தின்படி குதிரைக்குக் கொம்பு இல்லை, இனியும் முளைக்காது என்கின்றோம். இல்லை கொம்பு இருக்கு முளைக்கும் என்கிறீர்கள். இனி என்ன கொம்பு முளைக்கேக்க பார்ப்பம்!

ஓகே. நானும் அண்ணரும் இசுலாமிய சகோதரங்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்கிறோம்.

ஆதரவு கொடுக்க கூடாது என்போர்:

இசுலாமியர் உதவவில்லை, மதமாற்றம் செய்துவிடுவார்கள் என்பதை தவிர கை கோர்ப்பதால் வரும் பாதகங்கள் என்ன?

விக் அண்ணா, சில காலத்துக்கு முன்னர் இல் ஒரு கட்டுரை வந்தது அதாவது அம்பாறையில் இஸ்லாம் மததிற்கு மாறிய தமிழருக்காக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாம், இதை விட வேறு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன், http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35657 இதை தயவு செய்து வாசிக்கவும்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் நடக்கும் போராட்டம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். இது இனங்கள் இடையே நடக்கும் போராட்டம்; மதங்களுக்கு இடையே இல்லை..

இதுக்குள் பக்கத்து இலைக்கும் பாயசம் கேட்பதுபோல் மரிக்கார் தன்னுடைய மதப் பிரச்சினையையும் எடுத்து வருவாரானால் அது போராட்டத்துக்குள் அடங்காது. இவ்வகையானவை வெறும் பிரச்சினைகளே.. நீதி மன்றங்களின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். நீதியமைச்சர் ஹக்கீம் துணைக்கு வருவார்.. :D

இவற்றை யாழுக்குள்ளேயே வைத்திருங்கள் வெளியில் போய் சொன்னால் சந்தி சிரித்துவிடும் .

சுதந்திரத்திற்கு முதல் நடைபெற்ற 1947 இல் தேர்தலில் இலங்கை தமிழர்கள் 12 பிரதிநிதிகள் இந்திய வம்சாவளியினர் 7 பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றனர் .இலங்கை சுதந்திரம் அடைய அதுவரை இந்திய பிரஜைகள் வாக்குரிமை பற்றி வாய் திறவாது இருந்த டி எஸ் சேனநாயக்கா சுதந்திரம் கிடைத்ததும் 1948 ஆகஸ்ட்டிலே அவர்களின் வாக்குரிமையில்  கை வைத்தார் .அதற்கு தமிழ் முஸ்லிம் இந்திய தமிழ் பிரதிநிதிகள் ஆதரவு அளித்தனர் .(ஜி ஜி ,அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ,கனகரட்னம், நல்லையா ,எதிர்மனசிங்கம் ராமலிங்கம் ,தம்பிஐயா ,இஸ்மாயில் ,சின்னலேப்பை ,ஐயாவு )

அதை எதிர்த்தவர்களில்  செல்வநாயகம் ,வன்னியசிங்கம் தொண்டைமான் முக்கியமானவர்கள் .

இது நடந்தது 1948 ,

பின்னர் 1970 இல் சிறிமா சுதந்திர கட்சி இடதுசாரிகளுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது .இந்த ஆட்சியில் தான் பதியுதீன் கல்வி அமைச்சராக வந்தார் .

1948 -1070 இருபத்தியிரண்டு வருடங்கள் எத்தனையோ அரசியல் மாற்றங்களுடன் ஓடியிருக்கு .பண்டா அரசியல் பிரவேசம் ,தனி சிங்களசட்டம்,சிங்கள சிறி சட்டம் ,பண்டா கொலை .

இவ்வளவும் இடையில் நடந்திருக்கு மல்லை தரப்படுத்தலை இதற்குள் எப்படி செருகினார் என்று விளங்கவில்லை ,

அதைவிட பெரும்பகிடி சிறிமா அரசு கொண்டுவந்த தரப்படுத்தலை கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் தலையில் போடுவது .தரப்படுத்தலை கொண்டுவந்தது சிறிமா அரசா ?அல்லது பதியுதீன் என்ற முஸ்லிம் அமைச்சரா?

ஒரு சிங்கள அமைச்சர் கல்வி அமைச்சராக இருந்திருந்தால் தரப்படுத்தல் வந்திருக்காதா ?

இவை எல்லாவற்றையும் விட பெரும் பகிடி இது "

பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின. "

சிங்களவன் ரொம்ப நல்லவன் .சிங்கள அரசுக்கு அடக்குமுறை என்றால் என்னவென்று தெரியாது .பதியுதீனின் தரப்படுத்தல் மட்டுமே விடுதலை இயக்கங்களை தோற்றுவித்தது .

நிறைய எமது போராட்ட வரலாற்று புத்தகங்கள் இருக்கு வாங்கி படியுங்கள் .சுதந்திரத்திற்கு முன்னரே எமது மூதாதையார் செய்த போராட்டங்களும் துரோகங்களும் பதிவில் இருக்கு .

"எனக்கு விளங்கவில்லை, பச்சை குத்தியனவர்கள் விளங்கப்படுத்துங்கோ"  என்று பச்சை குத்தியவர்களையும், சரக்கு இல்லாமல், பேயராக்க முயன்ற நடிப்போடு விட்டிருக்கலாம், இப்படி சொதப்பாமல். அது நடிப்பென்று எல்லோருக்கும் விளங்கினாலும், காலில் பட்ட அழுக்கை கண்டுபிடிக்க தொட்டு மூக்கில் பூசிய மூடத்தனமாகாது.   ஐயரின் புத்த்கத்தில் வாசித்துவிட்டு செல்வாவின் அரசியலை விவாதிப்பது நகைச் சுவை.

செல்வா வழக்கு விசாரிக்கும் கனவான் தகமைகளை பற்றி நான் அந்த நாளையில் விரகேசரில் படித்த கட்டுரை ஒன்றின் சாரம். G.G. வழக்குகளை உடைப்பதில் திறமைசாலியாக அறியப்பட்டிருந்தவர். அந்த கட்டுரையை எழுதியிருந்த நீதிபதின் கணிப்பு இப்படித்தான் இருந்தது. குற்றவியல் சட்டத்தரணிகள் பெரும்பாலும் சட்டப்புத்தகங்களை மற்றவர்கள் அளவுக்கு தெரிந்து வைத்திருப்பதில்லை. சாட்சிகளை குழப்புவதினாலே அவர்கள் பெரும்பாலும் வெற்றி அடைவது. செல்வா வழமையில் குற்றப்பகுதி வழக்குகளுக்கு போவதில்லை. ஆனால் தனது முன்னிலையில் ஒரு தடவை ஒரு வழக்கில் வந்தாராம். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய நேரம். தான் நேரத்தை ஒதுக்கி குறுக்கு விசாரணையை ஆரம்பிக்க சொன்னாரம். செல்வா அது தேவை இல்லை என்று தொகுப்புரை வழங்கி முடிக்க போகிறேன் என்றாராம். தான் இவருக்கு இந்த வ்ழக்குகள் சரிப்படாது என்று நினைத்துக்கொண்டு அவரின் விருப்படியே விட்டாராம். செல்வா தொகுப்புரையை முடிக்க யூரர்கள் செல்வாபக்கம் வாக்களித்தார்களாம். அவ்வளவு அருமையான தொகுப்புரை. மேலும் அவர் சொன்னது செல்வா மற்ற வழக்குகளில் கூட அதிகம் பிரசன்னமாக மாட்டாரம். அவர் அந்த நாட்களில் வருடம் ஒரு இலடசம் வரை ஈட்டுவாராம். எப்படி என்றால் அவர் செய்வது சட்டத்தணிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதில்தான். சட்டத்தரணிகள் தொலை பேசியை எடுத்த்தால் NLR. Vol.3 Page 23 Sec 1.16 என்று இடாப்பின் அடையாளத்தை மட்டும் குறித்துக்கொடுத்து பில் அனுப்பு வதுதான் அவர் செய்வது என்று கூறியிருந்தார். ஆந்த Encyclopedia மாதிரி வக்கீல்களின் அரசியலை துரோகம், பேராசை. காட்டிக்கொடுப்பு, போரில் தோற்கமுதல் ஓடிவந்து புத்தகம் எழுதும் ஐயரின் அறுவைகளை வாசித்துவிட்டு விவாதிக்க வருகிறார் அருசுன். 

நான் சட்டப்புத்தகம் எழுத வரவில்லை. நான் சட்டத்தரணியும் அல்ல. பதியுதின் சிறிமா செய்தா என்றால் செல்வா மாதிரி ஏன் பதவி விலகவில்லை என்றுதான் கேள்வி எழுப்பினேன். இந்திய பாகிஸ்தானியர் சட்டத்தில் இரண்டு படிகள் உண்டு; அது சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்ததிற்கு பின்னரும் இழுபட்டது. இதில் செல்வாவையே துரோகி என்றவர்களும் உண்டு.   குடியுரிமை இல்லாமல் தோட்டத்தில் கூட வேலை பெற முடியாமல் இருந்தவர்களை இந்தியா அனுப்ப வந்த உடனபடிக்கையை அவர் ஆதரித்தார். அரசியல் விளங்காத்தாவர்கள். வாழ்க்கையின் வலியை விளங்காமல் எழுதுபவர்கள் அவரை குறை கூறினார்கள்.  ஆனால அவர் இந்திய பாகிஸ்தானிய சட்டந்தை கொண்டுவந்த UNP யை G.G. விட்டு விலக் வேண்டும் என்றார். G.G. மந்திரி பதவியை விட தயார் இல்லாததால் 1949 ஆண்டு அவர் விலகி வந்து தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். 

ஐயரின் புத்தகத்தில் அல்ல விக்கி பீடியாவில் இருப்பது இது. 

Today there are two groups of Tamils in Sri Lanka. The first are the Sri Lankan Tamils, who either descended from the Tamils of the old Jaffna kingdom or who migrated to the east coast. The second are the Indian Tamils or Hill Country Tamils, who are descendants of bonded labourers sent from Tamil Nadu to Sri Lanka in the 19th century to work in tea plantations.[3] Sri Lankan Tamils mostly live in the Northern and Eastern Provinces and in the capital of Colombo, whereas Hill Country Tamils largely live in the central highlands.[2] The Hill Country Tamils and Ceylon Tamils historically have seen themselves as separate communities. In 1949, the United National Party (UNP) government, which included G. G. Ponnambalam, a leader of the Tamil Congress and of the Sri Lankan Tamils, stripped the Indian Tamils of their nationality, including their right to vote. Prominent Tamil political leaders such as S. J. V. Chelvanayakam and his Tamil opposition party opposed this move.[4]

Under an agreement between the Sri Lankan and Indian governments in the 1960s, around 40% of Hill Country Tamils were granted Sri Lankan nationality, and many of the remainder were repatriated to India.[5] However, the ethnic conflict has led to the growth of a greater sense of common Tamil identity, and the two groups are now more supportive of each other.[6] By the 1990s most Indian Tamils had received Sri Lankan citizenship.[5]

பொய்யுக்கு மேல் பொய்யை திரித்த இன்றை போட்டி புத்தங்களில் இருந்தது அல்ல.  யாழ்ப்பாணத்தில் நடந்த பதியுதினுக்கு எதிர்ப்பான ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள். போனோம். எல்லோர் மனத்திலும் இனி ஒன்று செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தது. அதனால் தமிழ் மாணவர் பேரவை உருவானது. அதன் பின்னர் அரியரத்தினம் அடிக்கடி பாடசாலைக்கு வந்து மதிய உணவு நேரம் பேசுவார்.நாங்கள் நண்பர்களை அழைத்துகொண்டு போவோம். நாம் ஐயரின் புத்தகத்தை வாசித்துவிட்டு தூக்கி அடிக்க வேண்டிய தேவையில் இல்லை. 1975 ஆண்டின் ஆரம்பத்தில் தான் கொழும்பு போக நேர்ந்தது.  

"பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, " அரசியல் தெரிந்தால் பேச வேண்டும். இதற்கு முதல் யாப்பாணத்தில், வீடுகளில் பாடசாலையில் மாணவர்கள் அரசியல் பேசினால் தணடணைக்குரிய குற்றம் என்றளவில் இருந்ததை அருச்சுன்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.

யாழுக்கு வெளியேதான் எமது செயல்பாடுகள். அதை அறியாததால் அரசுன் விடும் நகைசுவை இது யாழுக்கு வெளியே போகக் கூடாது என்பது. 

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப் பட்டமை தமிழர்களை இனவாத அரசிற்கெதிராகப் போராடத் தூண்டியிருந்தாலும் தொடர்ச்சியான தமிழர் மீதான இனக் கலவரங்கள், சிங்களம் மட்டும் சட்டம், சிங்கள சிறி எதிர்ப்பு போராட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்கள் மற்றும் கல்வியில் தரப் படுத்தல் போன்றனவே இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளியிருந்தன. இலங்கையின் அரசுத் தலைவர்கள் எவருமே தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிறீமா காலத்தில் கல்வியமைச்சராகவிருந்த "பதியுதீன் தரப்படுத்தலைக் கொண்டு வந்தார் அதனால் விடுதலை இயக்கங்கள் தோன்றின" என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

சக இனங்களிலிருந்து கோரப்படும் அழைப்புகளை நாம் தீர விசாரிக்காது அப்பாவித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. அதற்காக பச்சை இனவாதக் கருத்துக்களை வைப்பது எந்த வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை.

uk_5_5_2014_12.jpg

எழுதியிருப்பதை படித்துவிட்டு எழுதுங்கள். 1944 ல் சோல்பரி கமிசன் முன்னர் 50:50 வைக்க முன்னரே, தமிழரால் இனவாதத்தை தணிக்க டொனமூரிடம் 1/3 பங்கு குறைந்தளவு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து "Donomore has come  hame Do no more Tamils" என்று தமிழர்கள் கோசம் எழுப்பியதை மறக்க வேண்டம். G.G 50:50 கேட்டு சோல்பரி கமிசன் முன்னர் 9 மணித்தியாலங்கள் பேசினார். சோல்பரி பிரபு G.G தனது Flourishing English"  காட்டி ஜனநாயத்தை முடக்க பார்க்கிறார் என்று குறை சாட்டினார். G.G. சேர் பொன் அருணாசலம் பாணியிலேயே 'Soulbury has come to bury Tamils soul"

என்றார்.  தமிழர் தங்கள் போராட்டதை என்றோ ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் எழுதியிருப்பது இந்திய பாகிஸ்தானிய சட்டத்தின் பின்னர்தான் தமிழர்கள் போராடினார்கள் என்பது அல்ல. எழுதியிருப்பதை படித்துவிட்டு எழுதுங்கள்.

"எனக்கு விளங்கவில்லை, பச்சை குத்தியனவர்கள் விளங்கப்படுத்துங்கோ"  என்று பச்சை குத்தியவர்களையும், சரக்கு இல்லாமல், பேயராக்க முயன்ற நடிப்போடு விட்டிருக்கலாம், இப்படி சொதப்பாமல். அது நடிப்பென்று எல்லோருக்கும் விளங்கினாலும், காலில் பட்ட அழுக்கை கண்டுபிடிக்க தொட்டு மூக்கில் பூசிய மூடத்தனமாகாது.   ஐயரின் புத்த்கத்தில் வாசித்துவிட்டு செல்வாவின் அரசியலை விவாதிப்பது நகைச் சுவை.

செல்வா வழக்கு விசாரிக்கும் கனவான் தகமைகளை பற்றி நான் அந்த நாளையில் விரகேசரில் படித்த கட்டுரை ஒன்றின் சாரம். G.G. வழக்குகளை உடைப்பதில் திறமைசாலியாக அறியப்பட்டிருந்தவர். அந்த கட்டுரையை எழுதியிருந்த நீதிபதின் கணிப்பு இப்படித்தான் இருந்தது. குற்றவியல் சட்டத்தரணிகள் பெரும்பாலும் சட்டப்புத்தகங்களை மற்றவர்கள் அளவுக்கு தெரிந்து வைத்திருப்பதில்லை. சாட்சிகளை குழப்புவதினாலே அவர்கள் பெரும்பாலும் வெற்றி அடைவது. செல்வா வழமையில் குற்றப்பகுதி வழக்குகளுக்கு போவதில்லை. ஆனால் தனது முன்னிலையில் ஒரு தடவை ஒரு வழக்கில் வந்தாராம். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய நேரம். தான் நேரத்தை ஒதுக்கி குறுக்கு விசாரணையை ஆரம்பிக்க சொன்னாரம். செல்வா அது தேவை இல்லை என்று தொகுப்புரை வழங்கி முடிக்க போகிறேன் என்றாராம். தான் இவருக்கு இந்த வ்ழக்குகள் சரிப்படாது என்று நினைத்துக்கொண்டு அவரின் விருப்படியே விட்டாராம். செல்வா தொகுப்புரையை முடிக்க யூரர்கள் செல்வாபக்கம் வாக்களித்தார்களாம். அவ்வளவு அருமையான தொகுப்புரை. மேலும் அவர் சொன்னது செல்வா மற்ற வழக்குகளில் கூட அதிகம் பிரசன்னமாக மாட்டாரம். அவர் அந்த நாட்களில் வருடம் ஒரு இலடசம் வரை ஈட்டுவாராம். எப்படி என்றால் அவர் செய்வது சட்டத்தணிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதில்தான். சட்டத்தரணிகள் தொலை பேசியை எடுத்த்தால் NLR. Vol.3 Page 23 Sec 1.16 என்று இடாப்பின் அடையாளத்தை மட்டும் குறித்துக்கொடுத்து பில் அனுப்பு வதுதான் அவர் செய்வது என்று கூறியிருந்தார். ஆந்த Encyclopedia மாதிரி வக்கீல்களின் அரசியலை துரோகம், பேராசை. காட்டிக்கொடுப்பு, போரில் தோற்கமுதல் ஓடிவந்து புத்தகம் எழுதும் ஐயரின் அறுவைகளை வாசித்துவிட்டு விவாதிக்க வருகிறார் அருசுன். 

நான் சட்டப்புத்தகம் எழுத வரவில்லை. நான் சட்டத்தரணியும் அல்ல. பதியுதின் சிறிமா செய்தா என்றால் செல்வா மாதிரி ஏன் பதவி விலகவில்லை என்றுதான் கேள்வி எழுப்பினேன். இந்திய பாகிஸ்தானியர் சட்டத்தில் இரண்டு படிகள் உண்டு; அது சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்ததிற்கு பின்னரும் இழுபட்டது. இதில் செல்வாவையே துரோகி என்றவர்களும் உண்டு.   குடியுரிமை இல்லாமல் தோட்டத்தில் கூட வேலை பெற முடியாமல் இருந்தவர்களை இந்தியா அனுப்ப வந்த உடனபடிக்கையை அவர் ஆதரித்தார். அரசியல் விளங்காத்தாவர்கள். வாழ்க்கையின் வலியை விளங்காமல் எழுதுபவர்கள் அவரை குறை கூறினார்கள்.  ஆனால அவர் இந்திய பாகிஸ்தானிய சட்டந்தை கொண்டுவந்த UNP யை G.G. விட்டு விலக் வேண்டும் என்றார். G.G. மந்திரி பதவியை விட தயார் இல்லாததால் 1949 ஆண்டு அவர் விலகி வந்து தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். 

ஐயரின் புத்தகத்தில் அல்ல விக்கி பீடியாவில் இருப்பது இது. 

Today there are two groups of Tamils in Sri Lanka. The first are the Sri Lankan Tamils, who either descended from the Tamils of the old Jaffna kingdom or who migrated to the east coast. The second are the Indian Tamils or Hill Country Tamils, who are descendants of bonded labourers sent from Tamil Nadu to Sri Lanka in the 19th century to work in tea plantations.[3] Sri Lankan Tamils mostly live in the Northern and Eastern Provinces and in the capital of Colombo, whereas Hill Country Tamils largely live in the central highlands.[2] The Hill Country Tamils and Ceylon Tamils historically have seen themselves as separate communities. In 1949, the United National Party (UNP) government, which included G. G. Ponnambalam, a leader of the Tamil Congress and of the Sri Lankan Tamils, stripped the Indian Tamils of their nationality, including their right to vote. Prominent Tamil political leaders such as S. J. V. Chelvanayakam and his Tamil opposition party opposed this move.[4]

Under an agreement between the Sri Lankan and Indian governments in the 1960s, around 40% of Hill Country Tamils were granted Sri Lankan nationality, and many of the remainder were repatriated to India.[5] However, the ethnic conflict has led to the growth of a greater sense of common Tamil identity, and the two groups are now more supportive of each other.[6] By the 1990s most Indian Tamils had received Sri Lankan citizenship.[5]

பொய்யுக்கு மேல் பொய்யை திரித்த இன்றை போட்டி புத்தங்களில் இருந்தது அல்ல.  யாழ்ப்பாணத்தில் நடந்த பதியுதினுக்கு எதிர்ப்பான ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள். போனோம். எல்லோர் மனத்திலும் இனி ஒன்று செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தது. அதனால் தமிழ் மாணவர் பேரவை உருவானது. அதன் பின்னர் அரியரத்தினம் அடிக்கடி பாடசாலைக்கு வந்து மதிய உணவு நேரம் பேசுவார்.நாங்கள் நண்பர்களை அழைத்துகொண்டு போவோம். நாம் ஐயரின் புத்தகத்தை வாசித்துவிட்டு தூக்கி அடிக்க வேண்டிய தேவையில் இல்லை. 1975 ஆண்டின் ஆரம்பத்தில் தான் கொழும்பு போக நேர்ந்தது.  

"பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, " அரசியல் தெரிந்தால் பேச வேண்டும். இதற்கு முதல் யாப்பாணத்தில், வீடுகளில் பாடசாலையில் மாணவர்கள் அரசியல் பேசினால் தணடணைக்குரிய குற்றம் என்றளவில் இருந்ததை அருச்சுன்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.

யாழுக்கு வெளியேதான் எமது செயல்பாடுகள். அதை அறியாததால் அரசுன் விடும் நகைசுவை இது யாழுக்கு வெளியே போகக் கூடாது என்பது. 

இங்கு உள்ள பலர் போல (உங்களையும் சேர்த்து வெறும் வாயை நான் மெல்லவில்லை).

ஐயர் புத்தகம் வாசித்து போராட்டம் பற்றி அறியும் தேவை அவர்களுக்குத்தான் உண்டு .

ஐயரின்  புத்தககத்தில் இருக்கும் முக்கால்வாசி போராளிகளுடன்  ஒன்றாக இருந்தவன் திரிந்தவன் .அவர்களுடன் நடந்த பல விடயங்கள் அவர்கள் வாயாலேயே கேட்டவன்  .எமது போராட்டத்தை பற்றி விக்கிபிடியாவோ ஐயர் புத்தகம் வாசித்தோ நான் அறியதேவையில்லை .அதில் சம்பந்தபட்ட பலருடன் இன்னும் தொடர்பில் உள்ளவன் .

எமது போராட்டம் தமிழருக்கா அல்லது சைவம்/இந்துக்களுக்கானதா என்று சிலர் குழம்பியுள்ளனர்.

முஸ்லிம்களின் நோக்கம் தெளிவானது. முஸ்லீம்களுக்கு தமிழர்களின் உதவி தேவையில்லை. தமிழர்களின் ஆதரவு தற்காலிகமாக அல்லது அவர்களின் நோக்கத்திற்கு உறுதுணையாகத் தேவைப்படலாம்.

இதில் தமிழர் தரப்பு எவ்வாறு தமக்கும் இலாபத்தைத் தேட முடியும் என்பதைப் புத்தி சாதுரியத்துடன் கணிக்க வேண்டும். விரும்பாவிட்டாலும் கூட, முஸ்லிம் தரப்பு இல்லாமல் தமிழர்கள் சாதகமான எந்த ஒரு தீர்வையும் சிங்களத்திடம் இருந்து பெற முடியாது. மாறாக, சர்வதேசத்திடம் இருந்து ஏதாவது தீர்வு கிடைக்க முடியுமானால் அதனை முஸ்லிம்கள் மூலம் சிங்களம் குழப்ப முயலும்.

இன்னும் மீசையை முறுக்கிக் கொண்டிருப்பவர்களுக்காக : இலங்கையில் இன விகிதாராத்தின்படி சிறுபான்மை இனத்தவர்களில் விரைவில் தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இரண்டாம் இடத்துக்கு நகர்த்தப்படுவார்கள்.

இதில் எதுவும் இல்லை.வழமையாண இணையவின் கருத்து. 

"இன்னும் மீசையை முறுக்கிக் கொண்டிருப்பவர்களுக்காக :" இது ஒன்றுதான் கருத்து எழுததக்க உள்கிடக்கை உள்ளதொன்று. துணிவாக கருத்து எழுதுபவர்களை இவர்கள் தோற்பார்கள் என்று தீர்கதரிசனம் கண்டு மீசை முறுக்கிகள் என்று நையாண்விடும் இணையவன் துணிந்து போராட போனவர்களை பற்றி என்ன எல்லாம் என்ன நையாண்டிகள் நினைத்து உள் மகிழ்வாரோ? 

இந்த கருத்து அரிச்சுன் பச்சை குத்ததான் லாயக்கு. 

இங்கு உள்ள பலர் போல (உங்களையும் சேர்த்து வெறும் வாயை நான் மெல்லவில்லை).

ஐயர் புத்தகம் வாசித்து போராட்டம் பற்றி அறியும் தேவை அவர்களுக்குத்தான் உண்டு .

ஐயரின்  புத்தககத்தில் இருக்கும் முக்கால்வாசி போராளிகளுடன்  ஒன்றாக இருந்தவன் திரிந்தவன் .அவர்களுடன் நடந்த பல விடயங்கள் அவர்கள் வாயாலேயே கேட்டவன்  .எமது போராட்டத்தை பற்றி விக்கிபிடியாவோ ஐயர் புத்தகம் வாசித்தோ நான் அறியதேவையில்லை .அதில் சம்பந்தபட்ட பலருடன் இன்னும் தொடர்பில் உள்ளவன் .

நாங்களும் இன்னும் யாழுக்கு வெளியேசெயல்பாட்டுடன் தான் இருக்கிறோம். வெறும் வாயை மட்டும் மெல்லவில்லை. கக்கீம், பதியுதின், அஸ்வார் போன்ற குப்பையில் குப்பைகளுக்கு உதவி, ஒரு உதவி வாங்கலாம் என்ற நப்பாசை எங்களுக்கு எள்ளவும் இல்லை. ஆனால் நாங்களும் செயல்ப்பாட்டுடன் இருப்பத்தால் உங்களிடமும் உதவிக்கு வர வேண்டி நேரலாம். எனவே தெரிந்து வைத்திருங்கள் என்று சொல்கிறேன். 

Edited by மல்லையூரன்

ஐயரின் புத்தகத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் உள்ளேன் என்று எழுதியதை பிழையாக விளங்கிகொண்டுவிட்டீர்கள். 

நாங்கள் இப்போது ஒரு செயற்பாட்டிலும் இல்லை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் .

பழைய உடுப்புகள் ஏதும் வேண்டுமென்றால் உதவிக்கு வரலாம் :icon_mrgreen: .

இஸ்லாமியத் தமிழர்கள் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட முற்படும்போது ஏனைய தமிழர்கள் அதில் பங்குபெறுவது குறித்து இஸ்லாமியத் தமிழர்கள் தான் முடிவுசெய்யவேண்டும். ஏனைய தமிழர்களும் அதில் பங்கெடுப்பதென்று புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடித்துவிட்டால் யாழில் இருந்து பல்லாயிரம் மக்களை ஒரே நாளில் அகதியாக்கியதற்கும் காத்தான் குடியில் படுகொலையும் எவ்வாறு அணுகப்படும் என்பது கேள்விக்குறியானது. எதிர்வரும் காலங்களில் இஸ்லாமியத் தமிழர்களே இலங்கையில் சிங்களவர்களுக்கு அடுத்த பெரும்பான்மை என்ற நிலையில் அவர்கள் தமது போராட்டத்தை தமக்குள்ளாகவே வலுப்படுத்த முற்படுவார்கள். தவிர உலகின் பல இஸ்லாமிய நாடுகள் அவர்களுக்காக குரல்கொடுக்க முன்வரும். மதம் அவர்களை வலுவான சக்தியாக ஒன்றிணைக்கின்றது. இதில் முரண்பாடுகளின் சுய உருவமாகவும் உலகின் எந்த ஒரு நாட்டின் அனுசரணைக்கும் அப்பாற்பட்ட தமிழர்கள் இவ்வாறான போராட்டங்களில் மூக்கை நுளைக்கும்போது இஸ்லாமியத்தமிழர்களின் போராட்டம் பலவீனமாகவே சந்தர்ப்பம் உண்டு.  பெரும்பான்மையாகவும் பிரதான சக்தியாகவும் உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழ்ச்சமூகம் தான் அவர்களின் போராட்டத்தில் ஏனைய தமிழர்களை இணைப்பதா இல்லையா என்பதை முடிவுசெய்யவேண்டுமே தவிர ஏனைய தமிழர்கள் இல்லை.

பவுத்தம் பரவ வேண்டும் என்று எழுதிய பண்டிதர்கள் அடிவிழுந்த பின்வளத்தை மூடி புக்கை கட்டி மறைத்துக்கொண்டுவந்து விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையாம்.

இந்துக்கள் புத்த சமயத்துக்கு மாற்றப்பட்ட வேண்டும் என்று எழுதியவர்கள் இப்போது இந்துக்களும் பவுத்தகர்காளாமாறினால் என்ன நடக்கும் என்று நடுக்கம் எடுத்தவர்களாக கருத்து வைக்கிறார்கள். புத்தம் பரவேண்டும் என்றவர்களுக்கு அல்லா BBS யைக் கொடுத்து பிராத்தனைக்கு பதில் அளித்திருக்கிறார்.  ஒற்றுமையாக அஸ்வார், பதியுதின், பௌசி, கக்கீம், அதவுல்லா எல்லோரும் முடிவெடுத்து இடைக்கிடை BBS ஐ கனவில் கண்டவுடன் TNA ஓடிவா என்று அலறி அலறி அறிக்கைகள் விட்டுவிட்டு மீசையில் மண்படவில்லை என்று நடிக்கும் நாளும் தொலைவில் இல்லை.

முதல் அடி தங்காலை மசூதிக்கு விழுந்தவுடன், நாங்கள் எப்போதுமே கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருந்தோம்; கூட்டமைப்புதான் வரவில்லை என்று கதறிக்கதறி அறிக்கை விட்டவர் சண்டியன் பதியுதின். ஆறுமாதத்திற்கு முதல் கசன் அலி நாங்கள் கூட்டமைப்புடன் சேரும் நேரம் வந்து விட்டது என்று அறிக்கைவிட்டவர். NPC தேர்தலில் கூட்டமைப்புடன் சேர வேண்டும் என்றவர்.கக்கீம் தான் சரியான நேரத்தில் சரியானதை செய்வேன் என அறிக்கை விட்டவர். இன்னும் ஒருதொகை "விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை" அறிக்கைகள் வெளிவர  இருக்கிறது. யாழில் காவல் இருந்தால் மிகவிரைவில் ஒவ்வொன்றாக வாசிக்கலாம். யார் வாசிக்க மறந்தாலும் நாங்கள் வாசிக்கும் படி நினைவூட்டவும் மறக்க மாட்டோம்.

முஸ்லீம் பெண் றொசினா கொலையில் இலங்கை அரசர் காசு கொடுத்து சவுதி இளவரசர் கொடுப்பதாக அதவுல்லா நாடகம் அரங்கேற்றியவர். என்னவோ முஸ்லீம் நாடுகள் மெல்ல பள்ளி வாசல்கள் கட்டி இலங்கையை வாங்குவதை BBS கண்டும் இருக்கிறது.  

பொய்ப் புள்ளி வியபரத்தை கொடுத்து முஸ்லீம்கள் தொகை பெருகியிருக்கு என்று அரசு கொடுத்ததே பொதுபல சேனையை அமைக்கத்தான். முஸ்லீம்கள் சனத்தொகையில் பெருகியிருப்பது மட்டும் மல்ல ஒரு மில்லியன் சிங்கள பெண்கள் கருத்தடை மருத்துககளால் கற்பம் கலைக்கப்பட்டதாவும் சிங்கள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன். வேண்டுமென்றே காதல் போல் நடித்து சிங்கள் பெண்களை புவுத்த பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவிடாமல் முஸ்லீம் பிள்ளைகளை பெற வைப்பதாவும் குற்றம் சாட்டப்படுகிறது. முஸ்லீம் கடை பாசன் பக் அடித்து நொறுக்கப்பட்டதே பவுத்த பெண்ணை ஏமாற்றியதால் என்பதுதான் அறிக்கைகள் சொல்வது. 

அடியின் உருசை, போராட்டம் இலங்கிலாந்தில் நடக்க முதல் உலாமாகள் சபை "உன்னாணை நாங்கள் உதுக்கை இல்லை" என்றுவிட்டார்கள். உலமாக்கள் சபை சொன்னால், இலங்கை முஸ்லீம்கள் முழுவதும் அந்த போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தாலும், அதில் எந்த முஸ்லீம் பங்கு பற்றியத்தாக அல்லா  ஏற்றுகொள்ள் மாட்டார். எனவே விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை மட்டும் அல்ல, உலாமாக்களின் உந்த பழம் புளிக்கும் நரிக்கதை கூட இதில் இருக்கு. 

Edited by மல்லையூரன்

பௌத்தம் தமிழர் பகுதிகள் எங்கும் பரவுவதை ஆதரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் கிருத்தவத்தின் வளர்ச்சியும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மையாவதும் தமிழ்த்தேசீயத்துக்கு இலங்கையில் தலமையேற்பதும் தவிரக்க முடியாத எதிர்கால விதி. இவைகளை எல்லாம் ஆதரிப்பதற்கான ஒரே காரணம் இந்துத்துவம் இலங்கையில் கருவறுக்கப்டவேண்டும். இன்று ஒவ்வொரு தமிழனும் சுயமரியாதை இன்றி அடிமையாய் இரண்டாந்தரப் பிரஜையாய் இருப்பதற்கான அடிப்படை காரணம் இந்துத்துவமும் அதை தாங்கிப்பிடிக்கும் மையவாதமும். இவை இரண்டும் அழிக்கப்படாமல் தமிழனுக்கு எந்த ஜென்மத்திலும் விடுதலை இல்லை. உள்ளிருந்து  அழிக்க முடியாத இந்துத்துவ விசச் செடியை பிற சக்திகளாக பௌத்தம் இஸ்லாம் கிருத்தவத்தின் வளர்ச்சியாலே தான் அழிக்கமுடியும். அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை ஏனெனில் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மையவாதக் கோட்பாட்டுக்கு கீழே மக்கள் ஐக்கியப்படுவதோ இல்லை தலமைகள் உருவாவதோ இல்லை உருவான தலமைகள் வெற்றிபெறுவதோ இனம் கட்டமைக்கப்படுவதோ தேசியம் வலுப்படுவதோ கற்பனையிலும் நடக்கமுடியாத காரியம் என்பதை வரலாறும் நடைமுறையும் யதார்த்தமும் சொல்லி நிற்கின்றது.

தமிழரை மிரட்டி முஸ்லிம்களிடம் அடிபணிய வைக்கும் முயற்சி இது !!! இதன் பின்னால் பலர் இருகின்றனர் , இவர்கள் ஒரு விடயத்தை திருப்பி திருப்பி குறிப்பிடுகின்றனர், அதாவது தமிழார் சிறுபான்மை என்பது தான், ஆனால் தனி தமிழ் யென்று வரும் போது முஸ்லிம் சிறுபான்மை என்று மறந்து விடுகின்றனர்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது முஸ்லிம்களையும் அடக்கியதாக இருந்தபோது முஸ்லிம்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. தமிழரிடமிருந்து பிரிந்து நின்றே சிங்களவருடன் இணைந்து செயற்பட்டார்கள். அதுவும் படித்த முஸ்லிம்கள் தமிழருக்கு எதிராக ஆயுதமேந்திச் செயற்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழர் பட்ட அவஸ்தை முஸ்லஸம்களால்தான் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.