Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு.

15-ltte2-300.jpg

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.

2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை.

ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.

தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா? என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/india/govt-extends-ban-on-ltte-5-years-union-home-ministry-201071.html

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அளவுக்கு அரசியல் புகுந்து விளையாடுது என்பது தெரிகிறது.. :huh: தமிழகத்தின் கையில்தான் நிறைய தங்கியுள்ளது என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது..  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சனியனுக்கு தான் வரமுடியாது என்று நிச்சயமாக  தெரிந்துவிட்டது போல.....

:(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அளவுக்கு அரசியல் புகுந்து விளையாடுது என்பது தெரிகிறது.. :huh: தமிழகத்தின் கையில்தான் நிறைய தங்கியுள்ளது என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது..  :rolleyes:

நோ காமன்ட்ஸ்! :D :D

Spoiler
பாஜக ஆட்சியமைத்தால் மத்திய மந்திரிசபையில் திமுக இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நோ காமன்ட்ஸ்! :D :D

Spoiler
பாஜக ஆட்சியமைத்தால் மத்திய மந்திரிசபையில் திமுக இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை!

தலிவருக்கு இடம் கிடையாது.. அம்மாதான் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் செல்வாக்குடன் இருக்கப் போறா.. இந்தியப் படையும் போகப்போகுது.. கவனம்..  :wub:

ஐந்து ஆண்டுகள் இல்லை ஐம்பது ஆண்டுகள் போனாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் இதே நிலைதான் .

தலிவருக்கு இடம் கிடையாது.. அம்மாதான் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் செல்வாக்குடன் இருக்கப் போறா.. இந்தியப் படையும் போகப்போகுது.. கவனம்..  :wub:

தலிவர் போனால் கூட பிரச்சனையில்லை. அம்மா போனால் புலிகள் என்ற பெயரை உச்சரிக்க கூட தடை போட்டாலும் போடுவார்.  அம்மாவின் செல்வாக்கால் இலங்கை மீது ஓரளவுக்கு கடும் போக்கை கடைப் பிடிக்க வாய்ப்புகள் இருக்கு, ஆனால் கண்டிப்பாக அது புலிகளுக்கான ஆதரவாக மாற்றம் அடையாது.

சில நேரங்களில் அடுத்த 5 வருடங்கள் முடிய நாங்கள் கருணாநிதியின் மகன் ஸ்ராலின் வந்தால் நல்லம் என்று பேசிக் கொள்வோம்.

இல்லாத புலிகளுக்கு ஆதரவான மாற்றம் இனிமேல் தேவையில்லை. ஆனால் புலிகளை வைத்து செய்யும் அரசியல் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஐந்து ஆண்டுகள் இல்லை ஐம்பது ஆண்டுகள் போனாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் இதே நிலைதான் .

கொள்கை என்பது ஒரு வாழும் பத்திரம்.

Policy is a living document which molds with real time internal and external factors.

அதுவும் வெளியுறவு கொள்கை தொடர்ந்து மாறும்.

நீங்கள் எதோ ராமர் கல்லில் செதுக்கிய கொள்கை போல் கூறுவது உங்களுக்கு கொள்கை வகுப்பை பற்றி ஒன்றும் தெரியாது என்று காட்டுகிறது.

ஈழ தமிழர் தொடர்ந்து லொபி பண்ணி மாற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத புலிகளுக்கு ஆதரவான மாற்றம் இனிமேல் தேவையில்லை. ஆனால் புலிகளை வைத்து செய்யும் அரசியல் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இந்த அருமையான சிந்தனை இந்திய மற்றும் தமிழக அரசியல் களாங்களுக்கு மட்டுமல்ல இலங்கை மற்றும் புலம்பெயர் அரசியல் களங்களுக்கும் சாலப் பொருந்தும்!!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஆட்சிக்கு வந்ததும் தற்போது வெளியேறும் அவசரத்தில் காங்கிரஸ் கிருமிகள் எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும்.. குறிப்பாக இந்திய இராணுவ தளபதி நியமனம் உள்ளிட்டவை.. செய்திகள் வெளியாகியுள்ளன.

இது காங்கிரஸ் கிருமிகளின் தமிழர் விரோதப் போக்கின்... உச்சக்கட்டம்..!

வை.கோ போன்ற தலைவர்கள்.. நிச்சயமாக இந்தத் தடைக்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுத்து புதிய அரசியல் புதிய தீர்மானங்களை எடுக்க வலியுறுத்துவார்கள் என்று நம்பலாம்.

இந்தியாவின் பாதுகாப்பே.. இலங்கையில் தமிழீழம் அமைவதில் தான் உள்ளது. :icon_idea:

இந்த அருமையான சிந்தனை இந்திய மற்றும் தமிழக அரசியல் களாங்களுக்கு மட்டுமல்ல இலங்கை மற்றும் புலம்பெயர் அரசியல் களங்களுக்கும் சாலப் பொருந்தும்!!
 
புரியல்ல...

புலிகள் முன்னெடுத்ததும்.. தமிழ் மக்கள் முன்னெடுப்பதும்.. வேறு வேறு என்பது போல இருக்கு உங்கட கதை. எல்லாம் தமிழர்களின் அரசியல்.. வாழ்வுரிமை சம்பந்தப்பட்டது தான்.

புலிகள் என்ற பதம் அல்ல பிரச்சனை. தமிழர்களின் உரிமை என்பதை புலிகளின் பதத்துக்குள் அடக்கி இந்தத் தடைகள் மூலம் அதை நசுக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல்..  புலிகள் என்ற பதத்தை தவிர்ப்பதாக இதனைக் காட்டிக் கொண்டிருப்பதில் தமிழர்களுக்குத்தான் நட்டம். புலிகளுக்கு அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

மோடி ஆட்சிக்கு வந்ததும் தற்போது வெளியேறும் அவசரத்தில் காங்கிரஸ் கிருமிகள் எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும்.. குறிப்பாக இந்திய இராணுவ தளபதி நியமனம் உள்ளிட்டவை.. செய்திகள் வெளியாகியுள்ளன.

இது காங்கிரஸ் கிருமிகளின் தமிழர் விரோதப் போக்கின்... உச்சக்கட்டம்..!

வை.கோ போன்ற தலைவர்கள்.. நிச்சயமாக இந்தத் தடைக்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுத்து புதிய அரசியல் புதிய தீர்மானங்களை எடுக்க வலியுறுத்துவார்கள் என்று நம்பலாம்.

இந்தியாவின் பாதுகாப்பே.. இலங்கையில் தமிழீழம் அமைவதில் தான் உள்ளது. :icon_idea:

முக்கியமா சூப்பிரமணி சுவாமியை கவனிக்கவேண்டும்.

சகுனி ராஜபக்சேவிடம் பெட்டி வாங்கி பிழைக்க திட்டம் போடுது.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமா சூப்பிரமணி சுவாமியை கவனிக்கவேண்டும்.

சகுனி ராஜபக்சேவிடம் பெட்டி வாங்கி பிழைக்க திட்டம் போடுது.

சுப்பிரமணியம் சுவாமி.. அரசியல் ரீதியில் செல்வாக்குள்ள நபர் அல்ல. அவர் எந்த ஒரு பிரதிநிதித்துவத்தையும்.. பா.ஜ.க வுக்காக இந்திய நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப் போவதில்லை.

அந்த வகையில்.. அவர் வழமை போல.. கத்தத்தான் முடியே தவிர.. முடிவுகளை எடுப்பதில் செல்வாக்குச் செய்ய முடியாது.

ஆனால்.. வை.கோ.. மதிமுக அடையும் வெற்றிகள் என்பது.. முக்கியமானது. அதுவும் ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றால்.. இவர்களின் செல்வாக்கு கூடியதாக இருக்கும். :icon_idea:

ஈழ தமிழ் ஆதரவு இயக்கங்கள் ஆனானப்பட்ட சிதம்பரத்தாரையே கவிழ்த்தார்கள்.

மற்றும் கொங்கிரசை தமிழ் நாட்டில் இருந்து ஒதுங்க செய்து கொங்கிரசின் நம்பிக்கையை உடைத்தார்கள்.

நன்றி கடனா கிடைக்க வேண்டியதை நாசுக்காக பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தடை செய்தால் அடுத்த தேர்தல் வரை இருக்கும் என்பது காங்கிரசின் கணிப்பு. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து ஆண்டுகள் இல்லை ஐம்பது ஆண்டுகள் போனாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் இதே நிலைதான் .

தனித்துவமாக சுதந்திரமாக ஈழத்தமிழன் வாழக்கூடாதெண்டு முடிவே எடுத்துட்டியள் போலை கிடக்கு

தனித்துவமாக சுதந்திரமாக ஈழத்தமிழன் வாழக்கூடாதெண்டு முடிவே எடுத்துட்டியள் போலை கிடக்கு

புலிகளின் தடைக்கும் தமிழன் சுதந்திரமாக வாழுவதற்கும் என்ன சம்பந்தம்?????

(புலிகளின் தடை என்று போட்டு "தமிழீழ கொடி" போட்டிருக்கு...அதை பார்த்து பயந்துட்டியல் போல இருக்கு :rolleyes: )

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் தடைக்கும் தமிழன் சுதந்திரமாக வாழுவதற்கும் என்ன சம்பந்தம்?????

(புலிகளின் தடை என்று போட்டு "தமிழீழ கொடி" போட்டிருக்கு...அதை பார்த்து பயந்துட்டியல் போல இருக்கு :rolleyes: )

மற்ற இயக்கங்கள் என்னத்தை புடுங்கிப்போட்டு இப்ப காய்ஞ்சு கொண்டிருக்கினம்?  :rolleyes:

மற்ற இயக்கங்கள் ஏதாவது புடுங்கினார்கள் என்று யாரவது இங்கு ஏதாவது சொன்னதுண்டா?

(புலிகள் கொல்லாமல் விட்டிருந்தாலே..அவர்கள் கலைந்திருப்பார்கள் ஏனென்றால்..பாலகுமாரை தவிர மற்றவர்கள் மக்களை பற்றி எண்ணியதாக அறியவில்லை...ஆயுதம் தூக்கிய படியால் தாங்களும் "கடவுளின்" ஒரூ அவதாரம் என்ற நினைப்பு :) :) )

இந்த இயக்கங்கள் தோன்றாமல் இருந்திருந்தாலே..நாங்கள் "இப்போதுள்ள நிலையிலும்" பார்க்க ஆயிரம் மடங்கு நன்றாக இருந்திருப்போம் என்பது எனது எண்ணம்

உண்மைதான் நான்தான் .

இது அனைத்து தலமைகளுக்கும் பொருந்தும் .பாலகுமார் ஒன்றும் நல்லவரில்லை .பச்சோந்தி அரசியல் செய்தவர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் தடைக்கும் ஈழத்தமிழன் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

புலிகளின் தடை அதிகாரத்தை வைத்தே சிறிலங்காவில் அவசியமற்ற கைதுகளும் மனிதத்தன்மை மீறிய கொலைகளும் நடைபெறுகின்றன என்பதை தாங்களும் அறிந்திருப்பீர்கள் என் நம்புகின்றேன். 

அது புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக (கப்பம், ஆட்கடத்தலுக்கு)....இது புலி தடை செய்யபட்டிருந்தாலும் இல்லை என்றாலுமே நடக்கக் கூடியது...

..இப்போது ஆயிரக்கணக்காக பொது மக்கள் கைது  செய்யப்படுவது இல்லை...

மற்றது இலங்கையும், இந்தியாவும், மற்ற நாடுகளும் ஈழ தமிழருக்கு சொல்கின்றனவாக்கும் "ஈழ தமிழரின் பிரதிநிதியாக புலிகளை அங்கீகரிக்க மாட்டோம் என்று..." ...அப்படி என்றால் என்ன செய்ய போகுறீர்கள்???

எங்களுக்கு தான் அவர்களின் தயவு தற்போது தேவையே தவிர மற்ற மாதிரி இல்லை...

நீங்கள் தேவை என்றால் சொல்லலாம்..ஈழ பிரதேசத்தில் இப்போது இராணுவம் புலியை சாட்டி தான் உள்ளது என்று...அப்படியென்றால் அப்போது தான் நாம் புலியை இன்னும் கூட உதற வேண்டும்.... எப்படி பார்த்தாலும் நாளுக்கு நாள் அதிகம் இழப்பது நாங்களே...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமனித கப்பம், ஆள்கடத்தல்கள் விடுதலைப்புலிகளின் ஆட்சியில் நடக்கவில்லை.

விடுதலைபுலிகளுக்கு உலகம் முழுக்க (முக்கிய நாடுகளில்) தடை.....

போகோ கரம் என்னும் நைஜீரிய குழுவும் இது மாதிரி ஆயிரம் நல்ல விடயங்கள் செய்யும் (அவர்களை பொறுத்த வரை).... ஆனால் இப்போ உலகு அவர்களை பற்றி என்ன சொல்லுகிறது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப்புலிகளின் தடைக்கு முக்கிய காரணம் அவர்களின் அபாரித வளர்ச்சி மட்டுமே.
 
நல்லது கெட்டதை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திசைதிருப்பி புண்ணியம் தேடுவதில் முக்கிய நாடுகள் கில்லாடிகள்தான்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.