Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரும் அப்பே அளுவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்.பத்திரிகைகள் வாசிப்பேன் .அப்பா அரச உத்தியோகம் என்றபடியால் பல இடங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ,அவரது நண்பர்கள் அநேகர் அரச உத்தியோகத்தர்கள்.அவர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடுவார்கள் இல்லையெனில் நாங்கள் அவர்கள் வீடுகளில் ஒன்று கூடுவோம்.பலர் சைவத்தமிழர்கள், ஒரு சிலர் கிறிஸ்தவர்கள்.எல்லொருடைய வீட்டின் வாசலிலும் ஒரு பிள்ளையார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும் .இதை சகல சைவத்தமிழர்களின் வீட்டிலும் அன்றைய காலகட்டத்தில் காணலாம்.வீட்டின் உள்ளே இன்னோரு அறையில் சிவன்,உமாபதியார், முருகன் ஒரு மூலையில் குடி கொண்டிருப்பார்கள் .வரவேற்பறையில் யோகசுவாமிகளின் படம் தொங்கிகொண்டிருக்கும்.இவரைப்பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அநேகர் அறிந்திருப்பீர்கள்.தலையில் ஒரு கொண்டை,வெள்ளைத்தாடி,வெள்ளைவேஸ்டி அணிந்து வெள்ளைச்சால்வையால் மேலுடமைப்பை பொர்த்தி சப்பாணிகட்டி அமர்ந்திருப்பார்.பல வீடுகளில் இந்த கறுப்பு வெள்ளை படம்தான் இருந்தது. திருநீற்று குறி அவரை ஒரு சைவ குரு என சமுகத்திற்கு அடையாளப்படுத்தியது. இதுவரை நான் யோகசுவாமிகளின் வர்ணப்படத்தை காணவில்லை

சிவதொண்டன் நிலயங்களின் பிதா இவர் என்று சொல்லலாம். யாழ்ப்பாண சிவதொண்டன் நிலையம்தான் யோகசுவாமிகளின் கருத்துருவாக்க மையம் ,சுவாமிகளின் கருத்துக்களை நற்சிந்தனை என்ற சஞ்சிகை மூலம் பிரசுரித்து கொண்டிருந்தார்கள்.

இதே காலகட்டத்தில் இருபதைந்து வயது மதிக்க தக்க சிலுப்பாதலையுடன் ஒரு இளைஞனின் கறுப்பு வெள்ளை நிழற்படம் இந்த அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களில் அறிமுகமாகிறது. எனது அம்மாவிடமும் ஒரு புகைப்படம் கிடைக்கின்றது.

"இஞ்சாருங்கோ இவரின்ட படத்தில இருந்து விபூதி,கும்குமம்,தீர்த்தம் எல்லாம் வருகின்றாதாம் ,சுசிலா இதை தந்தவ"என்று சொல்லி அப்பாவிடம் காட்டினார்.

"உவங்கள் கள்ளச்சாமிகள் உவங்களை நீரும் நம்பிகொண்டிருக்கிறீரோ?"

"எனக்கு நம்பிக்கை இருக்கு "அம்மா அப்படி சொன்னபின்பு அப்பா எதிர்த்து ஒன்றும் சொல்லாமல் உம்மட இஸ்டம் என்றார்.

அந்த படத்தை அம்மா அழகான ஒரு பிறேம் போட்டு சாமியறையில் மாட்டிவிட்டார்

சுசிலாவும் கணவனும் இந்த இளைஞனின் புகைபடத்தில் அதிகமாகவே ஈடுபாடு கொள்ளதொடங்கிவிட்டார்கள் .அவரின் படம் போட்ட கலண்டர்கள் அடித்து நன்கொடை பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் இருந்தனர் .இருவருக்குமிடையே ஒரு வயது வித்தியாசம்தான் இருந்தது.இந்த சிறுவர்கள் இருவரும் பெற்றோரின் வழிகாட்டலில் அந்த இளைஞனின் புகைப்படத்தை வணங்கி பஜனை பாடல்கள் பாடி வழிபட்டுக்கொண்டு வந்தனர்.

நாங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு இரு குடும்பத்தலைவர்களின் வேலை நிமித்தம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.சுசிலாஅன்ரி குடும்பம் தலைநகர் கொழும்புக்கு மாற்றலாகி சென்றனர் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்தோம்.

யாழ்ப்பாணத்தில் அந்த இளைஞனின் பக்தர்கள் சிறுசிறு குழுக்களாக உருவாகி கொண்டிருந்தனர். பஜனைகள் பாடி வீதியில் செல்வார்கள்.அநேகமாக வீடுகளில் பஜனை வைப்பார்கள எனது நண்பர்களின் வீடுகளிலும் இந்த பஜனை நடைபெறும் சுண்டல் சாப்பிடுவதற்காக நான் இதில் கலந்து கொள்வேன். எனது அப்பா மனித தெய்வங்களில் அதிக நாட்டமில்லாத காரணத்தால் எனக்கும் அதில் நாட்டமிருக்கவில்லை.....

உயர்தர பரீட்சை முடித்தவுடன் எனது மாமா கொழும்பில் வசித்தபடியால் விடுமுறைக்கு சென்றேன்.அவர் ரமணமகரிஷியின் பக்தர். திருவண்ணாமலைக்கு அதிகம் சென்றுவருவார். ரமண்மகாரிஷியை நேரில் கண்டு உரையாடியவர். இவர் தனது குருவுக்கு பஜனை வைத்தார் .

திருவண்ணாமலையில் ரமணமகாரிஷியின் ஆச்சிரமம் இருக்கின்றது அங்கிருந்து ரமணரின் கருத்துக்களை மவுடன்பாத் என்ற சஞ்சிகை மூலம் உபதேசித்து வந்தனர் . தலை முடியை மிகவும் குட்டையாக வெட்டி கோமணத்துடன் நிற்க்கும் படங்கள் மக்களிடையே இவரை சாமியார் என அடையாளம் காட்டியது. சில பிரதிகளை மாமா கொண்டுவந்து வீட்டுக்கு வருவோரிடம் கொடுப்பார்.

பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன்,அங்கு சுசிலா அன்ரியும் கணவனும் வழிபட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை .நான் அருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.மிகவும் சந்தோசப்பட்டனர் , அடுத்த நாள் வீட்டில் பாபா பஜனை நடைபெறுமாம் வரும்படி சொன்னார்கள்.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாபா படம்.சிலுப்பாதலை விலையுயர்ந்த பட்டு காவியாலான உடம்பை மறைத்த ஆடை .கையை உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பது போன்ற ஒரு தோற்றம். .

ஜம்பது பேரளவில் அங்கு கூடியிருப்பார்கள் சகலரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.வங்கி,சுங்க இலாகா,தனியார் நிறுவனக்களில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள்.குடும்பமாக சமுகமளித்திருந்தனர்.பஜனை முடிந்தவுடன் சுசிலா அண்ரி சொற்பொழிவாற்றினார் தான் புட்டபக்திக்கு சென்று சுவாமியை தரிசித்ததாகவும்,அவரின் கையால் எடுத்த விபூதி என வந்திருந்த எல்லொருக்கும் விபூதியும்,பாபாவின் போட்டோவும் அன்பளிப்பு செய்தார்.எனக்கும் அன்பளிப்பு கிடைத்தது.அத்துடன் பஜனாவளி என்ற புத்தகமும் எனக்கு கிடைத்தது.

இரு பெண்பிள்ளைகளும் நன்றாக பஜனை பாடினார்கள் அவர்களுக்கு தேவாரம் தெரியாது பஜனைகள் நன்றாகவே தெரியும் . காலங்கள் கரைந்தொடின பெண்கள் இருவரும் கணக்காளராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்கினார்கள் .

திருமணமாகி இரு பெண்களும் அவுஸ்ரெலியா புலம் பெயர்ந்தனர் .அவர்களின் கணவன்மார்களும் கணக்காளரும்,பொறியியளாலருமாகும்.

சுசிலா அன்ரியும்,கணவனும் தீவிர சாய்பாபா பக்தர்களாகி ஒவ்வோருவருடமும் புட்டபத்தி சென்று வருவார்கள் கலப்போக்கில் அவர்களும் பாபாவின் அடிசேர்ந்தார்கள்.இவர்களின் இரு பெண்பிள்ளைகளும் அதே தீவிரத்துடன் பாபா கருத்துக்களையும்,அடையாளங்களையும் அவுஸ்ரேலியா வாழ் புலம்பெயர்ந்த தமிழ்மக்களியடேயே பரப்பி வந்தனர். கடைப்பிடித்தனர் என்று சொல்வதை விட பரப்பினர் என்பதே சாலச் சிறந்தது. இவர்களின் வாரிசுகள் நாங்கு பேர்கள்.அவர்களும் பாபாவின் பக்தர்கள் புட்டபத்திக்கு அதிகம் செல்வார்கள்.பாபா யுத் செர்க்கில் (பாபா இளைஞர் வட்டம்)என்ற அமைப்பில் அங்கத்துவராக இருக்கின்றனர். புட்டபத்தியின் பிதாவின் கருத்துக்களையும்,அவரின் அடையாளங்களையும் எனைய இளைஞர்களுக்கு காவிசெல்கின்றனர்.

இன்று தாயகத்தை சேர்ந்த யோகசுவாமிகளின் வேஸ்டி, விபூதி இட்ட கறுப்பு வெள்ளை நிழற்படத்தையோ ,மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த கோமணத்துடன் ரமணமகாரிஷியின் ஆண்டிக்கோல படத்தையோகாணமுடிவதில்லை அல்லது அரிதாக காணக்கிடைக்கும். ஆனால் புட்டபத்தி பாபாவின் கலர்புல் போட்டொக்கள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும். இந்த பாபா குருவை மிஞ்சிய சிஸ்யன் என்றே சொல்லலாம்.இவரின் குரு சிரடி சாய்பாபா .சிரடிக்கு இருந்த பக்தர்களைவிட புட்டபத்திபாபாவுக்கு இருந்த ,இருக்கின்ற பக்தர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இன்று இருந்திருப்பார்....

மீண்டும் தாயக நினைவுக்கு சென்றால் அதாவது 40வருடத்திற்கு முன்பு சைவர்களின் வீடுகளின் வாசலில் ஒரு பிள்ளையார் படம் இருக்கும் . என்பதின் பிற்பகுதியில் கொழும்பில் ஆஞ்சநேயரின் அறிமுகம் மெல்ல தொடங்கியது.இன்று ஆஞ்ச நேயர் சகல வீடுகளின் வாசலில் பிள்ளையாருக்கு பக்கத்தில் இருக்கின்றார்.....இந்த மாற்றங்களை மக்களே மக்களுக்கு புகுத்துகின்றனர் .....புத்தரும் தமிழரின்ட வீடுகளில் குடி கொண்டிருப்பார் இராணுவம் ஆயுதம் மூலம் புத்தரின் கருத்தையும்,சிலையையும் திணிக்காமல் விட்டிருந்தால்.... புத்தரும் அப்பே அளுவா ... என எம்மவர்கள் வழிபட்டிருப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளி இட்ட புங்கையூரானுக்கு நன்றிகள்......வை நோ பின்னூட்டம்...புங்கை ?:D

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத் தான் இருந்தது ஆனால் தேவையில்லாமல் புத்தரை வம்புக்கிழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன:D...எனக்கொரு சந்தேகம் எனக்குத் தெரிந்து பாபாவை படித்தவர்களும்,பணக்காரர்களும் தானே அதிகம் கும்பிடுகிறார்கள்! அது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத் தான் இருந்தது ஆனால் தேவையில்லாமல் புத்தரை வம்புக்கிழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன:D...எனக்கொரு சந்தேகம் எனக்குத் தெரிந்து பாபாவை படித்தவர்களும்,பணக்காரர்களும் தானே அதிகம் கும்பிடுகிறார்கள்! அது ஏன்?

 

அது மில்லியன் டொலர் கேள்வி...பதில் இன்னும் கிடைக்கவில்லை.....ஒருத்தரும் பின்னூட்டம் எழுதாமல் விட்டதற்கு காரணம் புத்தரை இழுத்தமைதானோ? நான் நினைத்தேன் எனது கிறுக்களுக்கு மவுசு குறைந்து விட்டது என்று.:D நன்றிகள் ரதி..... .....படித்தவர்கள் வழிபட காரணம் தரகர் இல்லாமல் பூஜை செய்லாம்,அலங்கரிக்கலாம் போன்றவையாக இருக்கலாம்...மற்றும் பிரபலமடைய இலகுவான முறையும் கூட...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றங்களை மக்களே மக்களுக்கு புகுத்துகின்றனர் .....புத்தரும் தமிழரின்ட வீடுகளில் குடி கொண்டிருப்பார் இராணுவம் ஆயுதம் மூலம் புத்தரின் கருத்தையும்,சிலையையும் திணிக்காமல் விட்டிருந்தால்.... புத்தரும் அப்பே அளுவா ... என எம்மவர்கள் வழிபட்டிருப்பார்கள் 

 

தமிழேண்டா.. :D 

மீண்டும் ஒரு முறை உங்களின் கிறுக்கல் மனதை கவர்ந்துவிட்டது.

உங்களின் கிறுக்கல்களை வாரம் ஒரு முறையாவது தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கிறுக்கல் தொடரட்டும். வாழ்த்துக்கள் புத்தா. 

உங்களது ஞாபகங்களை எங்களையும் கூட்டிக்கொண்டு மீட்டிப் பர்ர்த்திருக்கிறீர்கள். உங்கள் பழைய ஞாபகங்களை நாங்களும் பார்க்க முடிந்தது. பகிர்விற்கு நன்றி.
சுசீலா அன்ரியின் வீடு சார்ந்து நீங்கள் பகிராத பதிவுகளும் உங்களிற்குள் இருக்குமோ என்று ஏனோ தோன்றியது  :)
 
நான் வாசித்தவரை இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிபாட்டுமுறைகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது உங்கள் பதிவின் கருத்து என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியாயின், அந்தக்கோரிக்கைக்கான உங்களது காரணங்கள் என்ன என்பதையும் இவ்வாறான உங்களது தொடரும் பதிவுகளில் உள்ளடக்கினீர்களாயின் பதிவு கனதியாகும். இதற்கு முன்னரும் உங்களது சில பதிவுகளில் அவதானித்துள்ளேன், பொதுவாக யாரோ அழைத்ததன் நிமித்தம் (உதாரணம் சுசீலா அன்ரி - பஜனை, வேறு யாரோ - தேர் தீத்தம் அன்னதானம்) ஏதோ ஒரு நிகழ்வில் கலந்துவிட்டு வந்து அந்நிகழ்வு புறக்கணிக்கப்படவேண்டும் என்ற தொனியில் பொதுவாக உங்கள் பதிவுகள் இருக்கும். நிச்சயமாக அத்தகைய புறக்கணிப்பு எண்ணம் உங்களிற்குள் எழுவதற்குக் காரணங்கள் இருக்கும். ஆனால் ஏனோ உங்களின் எந்தப் பதிவிலும் அந்தக் காரணங்களைக் காணமுடிவதில்லை. உங்களது எதிர்வரும் பதிவுகளில் இந்தக் காரணங்களையும் ஆராய்ந்து உள்ளிற்குள்ளிருந்து எடுத்துச் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களிற்கும் உங்கள் பதிவைப் படிப்பவர்களிற்கும் உபயோகமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்..
 
எனக்கும் சகமனிதனைக் கடவுளாக்குவதில் உடன்பாடில்லை--எனது காரணங்கள் என்னைச் சார்ந்தவவை மட்டும். ஆனால், சாமி என்ற விம்பத்தை நீக்கிவிட்டு சில மனிதர்களின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துகள் சார்ந்து ஆராயும் ஆவல் நிறைய உள்ளது (ஒரு உதாரணம் புத்தர்). யோகர், செல்லப்பா போன்ற மனிதர்களை யாழ் இந்துவில் அறிமுகம் செய்தார்கள். இதில் ஒருவர் (எனது ஞாபகம் சரியாயின் செல்லப்பா என்று நினைக்கிறேன்) சார்ந்து ஒருநாள் ஆசிரியர் பாடம் எடுத்தபோது எனக்கு அகோரபசியாய் இருந்தது. எப்படா மணியடிப்பர் கொண்டுவந்த சாப்பாட்டை ஒரு கட்டுக் கட்டலாம் என்று தவித்திருந்த வேளையில், ஆசிரியர் எடுத்த பாடத்தில் பின்வரும் கதை வந்தது:
 
செல்லப்பாச் சாமி அல்லது குடைச்சாமி, சரியாக ஞாபகமில்லை, ஆரோ ஒருவர், நல்லூரில் இருந்தாராம். அவரிற்கு அதிகம் பசிக்குமாம். இவர் சில நாட்களில் ஒரு வினோதவேலை செய்வாராம். காலையில் எழுந்து நல்லூரில் இருந்து மட்டுவிலிற்கு ஓட்டமும் நடையுமாகக் குறுக்குவழிகளால் நல்ல பசியோடு சென்றடைவாராம். மட்டுவிலில் இரண்டே இரண்டு கத்தரிக்காய்களை ஆரேனும் தோட்டக்காரரிடம் வாங்குவாராம். பின்னர் அந்த இரண்டு கத்தரிக்காய்களையும் கொண்டு நல்லூரிற்கு மீண்டு, ஒரு சட்டியில் சோறும் பிறிதொரு சட்டியில் அந்தக் கத்தரிக்காய்களையும் சமைப்பாராம். நேரம் மாலையாகிவிடுமாம். ஏற்கனவே பசி மிகும் அந்த மனிதரிற்கு மட்டுவில் போய்வந்த கழைப்பில் பசி காதடைக்குமாம். சோறும் கத்தரிக்காயும் சமைந்து உண்பதற்குத் தயார் என்ற நிலை வந்ததும், பசி காதை அடைக்கும் நிலையில், அந்த மனிதர் அவற்றை உண்பதற்குப் பதில், கவிட்டு அடுப்பிற்குள் அவற்றைக் கொட்டி விட்டு, பாத்திரத்தை எறிந்து விட்டுப் படுத்துக் கொள்வாராம்.
 
எப்படா மணியடிக்கும் என்று பசி காதடைக்கப் பாடவேளைக்குள் பிரவேசித்த எனக்குள் பசி சார்ந்த இந்தக் கதை அதன் அத்தனை நுணுக்கங்களோடும் வீச்சோடும் படம்போலப் பதிவாகிவிட்டது. அந்த மனிதரைச் சாமியாகக் கும்பிடத் தோன்றவில்லை. ஆனால் மனிதனின் மனம் என்ற விடயம் சார்ந்து பிரமிப்பைத் தத்ரூபமாக விதைத்துவிட்டது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளி இட்ட புங்கையூரானுக்கு நன்றிகள்......வை நோ பின்னூட்டம்...புங்கை ? :D

உண்மையான காரணம் என்னவெண்டால் புத்தன், மச்சான் புதுவீடு வாங்கினவர்!

 

அது தான், சாமான் சக்கட்டையை ஏத்தி இறக்கிறதுக்குக் கூப்பிட்டவர்...ஹி....ஹி...! :D

 

யோகர் சுவாமிகள் மீது எனக்கு எப்பவுமே ஒரு அளவு கடந்த பயமும் மரியாதையும் உண்டு..!

 

அவர் வாழ்ந்த காலத்திலேயே, 'யாழ்ப்பாணம் உழுது விதைக்கப் படும்' என்று ஒரு முறை கூறியவர்!

 

என்ன விதைக்கப்படபோகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்! :o

 

புத்தனின் கிறுக்கல், வழமையை விடவும் இந்த முறை கொஞ்சம் 'தூக்கல்' அதிகம் தான்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு அபே ஸ்குல் புத்தா, தொடருங்கள் கிறுக்கலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றங்களை மக்களே மக்களுக்கு புகுத்துகின்றனர் .....புத்தரும் தமிழரின்ட வீடுகளில் குடி கொண்டிருப்பார் இராணுவம் ஆயுதம் மூலம் புத்தரின் கருத்தையும்,சிலையையும் திணிக்காமல் விட்டிருந்தால்.... புத்தரும் அப்பே அளுவா ... என எம்மவர்கள் வழிபட்டிருப்பார்கள் 

 

தமிழேண்டா.. :D 

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் விசுகு

மீண்டும் ஒரு முறை உங்களின் கிறுக்கல் மனதை கவர்ந்துவிட்டது.

உங்களின் கிறுக்கல்களை வாரம் ஒரு முறையாவது தாருங்கள்.

 

நன்றிகள் பகலவன்....மாதத்திற்கு ஒன்று நிச்சயம்...உங்கள் போன்றோரின் ஊக்கம்தான் எங்களுக்கு ஆக்கத்தை தர துணை புரிகின்றது

புத்தனின் கிறுக்கல் தொடரட்டும். வாழ்த்துக்கள் புத்தா. 

 

நன்றிகள் சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்கல் புத்தன் தொடர்ந்தும் கிறுக்க வாழ்த்துக்கள்
இப்ப சில பேருக்கு பாபா கனவில் வந்து அருள் செய்கின்றாராம்.
வாரிசு இல்லாமல் இருப்பதால் அடுத்த வாரிசைத் தேடிப் பேயாக அலைகின்றாராம் :D:lol:

புத்தன்,

 

இடையில் கதைக்குரிய மொழியில் இருந்து விலகி கொஞ்சம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மாதிரி போய் கடைசியில் கதை என்றும் இல்லாமல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்றும் இல்லாமல் இருக்கின்றது உங்களின் இந்த பதிவு.

 

ஒரு கதைசொல்லியாக "அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்..." என்று தொடங்கும் போது உங்கள் அனுபவம் ஒன்றை சொல்வது போல இருந்தது. பின் இறுதியில் "இன்று தாயகத்தை சேர்ந்த யோகசுவாமிகளின்.." என்று ஒரு கட்டுரையின் குறிப்பு போல மொழி மாறிப் போய் உள்ளது.

 

ஆரம்பத்திலேயே சிலுப்பை தலை என்று பூடகமாக குறிப்பிட்டு அவர் எவர் என்பதை வாசகரின் தெரிவுக்கு விட்டுவிட்டு ஏன் பின் பாபா என்று பெயர் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது புரியவில்லை.

 

பதிவுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் வாசித்தவரை இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிபாட்டுமுறைகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது உங்கள் பதிவின் கருத்து என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியாயின், அந்தக்கோரிக்கைக்கான உங்களது காரணங்கள் என்ன என்பதையும் இவ்வாறான உங்களது தொடரும் பதிவுகளில் உள்ளடக்கினீர்களாயின் பதிவு கனதியாகும். இதற்கு முன்னரும் உங்களது சில பதிவுகளில் அவதானித்துள்ளேன், பொதுவாக யாரோ அழைத்ததன் நிமித்தம் (உதாரணம் சுசீலா அன்ரி - பஜனை, வேறு யாரோ - தேர் தீத்தம் அன்னதானம்) ஏதோ ஒரு நிகழ்வில் கலந்துவிட்டு வந்து அந்நிகழ்வு புறக்கணிக்கப்படவேண்டும் என்ற தொனியில் பொதுவாக உங்கள் பதிவுகள் இருக்கும். நிச்சயமாக அத்தகைய புறக்கணிப்பு எண்ணம் உங்களிற்குள் எழுவதற்குக் காரணங்கள் இருக்கும். ஆனால் ஏனோ உங்களின் எந்தப் பதிவிலும் அந்தக் காரணங்களைக் காணமுடிவதில்லை. உங்களது எதிர்வரும் பதிவுகளில் இந்தக் காரணங்களையும் ஆராய்ந்து உள்ளிற்குள்ளிருந்து எடுத்துச் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களிற்கும் உங்கள் பதிவைப் படிப்பவர்களிற்கும் உபயோகமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
.வருகைக்கும் நீண்ட பதிவிட்டமைக்கும் நன்றிகள்.மனிதர்களை கடவுளாக வழிபடுவதை எனது மனம் எனோ ஏற்கவில்லை....மற்றது காலத்திற்கு காலம் மனிதர்கள்... கடவுளை,மனிதகடவுளை மாற்றிகொண்டு போவதையும்,வழிபாட்டு முறைகளை மாற்றிகொண்டு போவதையும் அவதானித்தபடியால் சும்மா கிறுக்கவேணும் போல இருந்தது கிறுக்கினேன்.எனது மனம் தான் ஏற்கவில்லை ஆனால் நான் சார்ந்த சமுகத்தின் பெரும்பான்மையினரின் மனம் ஏற்றுகொள்கிறது.ஆகவே அதை பிழை என்று நான் சொன்னால்,தோல்வி அடைபவன் நான் தான்."நான்"என்பதும் ஒரு எண்ணம்தான்...........பக்தி என்ற கருத்தியல் சமுதாயத்தை பல விதத்தில் ஆட்டிபடைக்கின்றது.என்னையும் சேர்த்து .முதலாம் உலகநாட்டவரை விட மூன்றாமுலகநாட்டவர் பக்திகருத்தியலில் அதிகமாக மூழ்கி போயுள்ளனர்.பக்தியில் தீவிரமாக,அரசியலில் தீவிரமாக,போராட்டத்தில் தீவிரமாக இருந்தோரின் மனம் திடிரென எதிர்மறையாக மாறினதை நாம் கண்டோம்.....மீண்டும் நன்றிகள்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு அபே ஸ்குல் புத்தா, தொடருங்கள் கிறுக்கலை

 

நன்றிகள் உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

நல்ல கிறுக்கல் புத்தன் தொடர்ந்தும் கிறுக்க வாழ்த்துக்கள்

இப்ப சில பேருக்கு பாபா கனவில் வந்து அருள் செய்கின்றாராம்.

வாரிசு இல்லாமல் இருப்பதால் அடுத்த வாரிசைத் தேடிப் பேயாக அலைகின்றாராம் :D:lol:

 

அவர் அலைய வேண்டிய அவசியமில்லை சனம் ஒரு வாரிசை தேடிப்போடும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

 

இடையில் கதைக்குரிய மொழியில் இருந்து விலகி கொஞ்சம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மாதிரி போய் கடைசியில் கதை என்றும் இல்லாமல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்றும் இல்லாமல் இருக்கின்றது உங்களின் இந்த பதிவு.

 

ஒரு கதைசொல்லியாக "அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்..." என்று தொடங்கும் போது உங்கள் அனுபவம் ஒன்றை சொல்வது போல இருந்தது. பின் இறுதியில் "இன்று தாயகத்தை சேர்ந்த யோகசுவாமிகளின்.." என்று ஒரு கட்டுரையின் குறிப்பு போல மொழி மாறிப் போய் உள்ளது.

 

ஆரம்பத்திலேயே சிலுப்பை தலை என்று பூடகமாக குறிப்பிட்டு அவர் எவர் என்பதை வாசகரின் தெரிவுக்கு விட்டுவிட்டு ஏன் பின் பாபா என்று பெயர் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது புரியவில்லை.

 

பதிவுக்கு நன்றி.

 

நன்றிகள் நிழலி...தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு ,மேலும் நான் ஒரு சிறந்த எழுத்தாளன் அல்ல ....மனதில் எண்ணியவைகளை கிறுக்குகின்றேன்.....பிழைகளை சுட்டிக்காட்டுங்கள் தொடரும் பதிவுகளில் திருத்திக்கொள்கிறேன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.