Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்! முஸ்லிம், தமிழர்கள் முதன்முதலாக இணைவு

Featured Replies

canada%20mus%20264.jpg

இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.

http://malarum.com/article/tam/2014/06/22/3094/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.html

  • தொடங்கியவர்

து.

canada_arpadam_002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும், முஸ்லீமும் சேர்ந்தும் இவ்வளவு பேர் தான் கூடியிருக்கினம்......புலம்பெயர்ந்த முஸ்லீம்களும் சுழியன்கள் போல அதுசரி அவையளும் ஊருக்கு போகத்தானே வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாவுக்கு பின்னால நிக்கிற கண்ணாடியர எங்கேயோ கண்ட ஞாபகம்

இந்த பிரச்சினையிலை இருந்தும் அதிகூடிய  பலன் பெறும் தகுதியும்  திறனும்  சோனகர்களிடம் இருக்கிறது...   மற்றவர்களின் உதவி அவர்களுக்கு தேவை இல்லை... 

இல்லை வீரம் கூடிப்போய் ஏதாவது செய்ய வேணும் எண்டு நினைச்சால்  தயவு செய்து புலம்பெயந்தவை பிளேனை பிடிச்சு ஊருக்கு போய் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்...  :icon_mrgreen:

யாருக்கு?

இசுலாமியருக்குத்தானே?

ஏனெனில் தமிழர்களது ஆர்ப்பாட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதில்லை

எனவே தமிழர்களுக்காக உதவ மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு?

இசுலாமியருக்குத்தானே?

ஏனெனில் தமிழர்களது ஆர்ப்பாட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதில்லை

எனவே தமிழர்களுக்காக உதவ மாட்டார்கள்

இந்த புலம்பெயர்ந்தவர்கள் இங்கு சிறிலங்கா அரசை எதிர்த்து மட்டைகளை(புலிக்கொடி அல்ல) தூக்கி பிடிக்க தாயகத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்குத்தான் தேவையில்லாத பிரச்சனை வரப்போகின்றது.

மிகவும் நல்ல விடயம். அப்படியே மசூதிகளிலும் பரப்புரை செய்யலாம்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு நன்றி.

இந்த பிரச்சினையிலை இருந்தும் அதிகூடிய பலன் பெறும் தகுதியும் திறனும் சோனகர்களிடம் இருக்கிறது... மற்றவர்களின் உதவி அவர்களுக்கு தேவை இல்லை...

இல்லை வீரம் கூடிப்போய் ஏதாவது செய்ய வேணும் எண்டு நினைச்சால் தயவு செய்து புலம்பெயந்தவை பிளேனை பிடிச்சு ஊருக்கு போய் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்... :icon_mrgreen:

இல்லை இல்லை இனிமேல் , நாங்கள் இனிமேல் இஸ்லாம் மதம் பற்றும் தமிழருக்காக மட்டும் பாடுபடுவோம்.

இன்னும் சில நாட்களில் அங்கு போன தமிழார் எல்லாரையும் மதம் மாத்தி போடுவான்.

Edited by Dash

து.

canada_arpadam_002.jpg

அவரேதான் . :icon_mrgreen:

10391027_648613091874942_230082547556270

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் நடத்தும் போராட்டங்களில் தாயக, மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்குபற்ற வேண்டியது அவசியம். இது கங்கையில் குளித்து பாவங்களை கழுவுவதற்கு ஒப்பானது. அப்படி என்ன பாவம் இழைத்துவிட்டார்கள் தமிழர்கள்?

இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஐம்பதுகளிலும், எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தமிழர்மீது சிங்களவனால் வன்முறை ஏவிவிடப்பட்டது. நூற்றுக்கணக்கில் மக்கள் அழிந்தார்கள். ஆனால் முஸ்லீம்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அதனால் சில நல்ல முஸ்லீம்கள் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தார்கள். வேறு சில முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து தமிழர்களைக் கொன்றும், சொத்துக்களை சூறையாடியும் மகிழ்வு கொண்டார்கள். மிகுதிப்பேர் எனக்கென்ன என்று ஒதுங்கி நின்றார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் வீரியம் கண்டது. அப்போது, முஸ்லீம்களில் ஒரு சிலர் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கணிசமானவர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறையிலும், தமிழருக்கு எதிரான ஜிகாத்திலும் இணைந்துகொண்டார்கள். மிகுதிப்பேர் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்தார்கள்.

புலிகள் ஆயுதப்போரை முன்னெடுத்துச் செல்ல முஸ்லீம்கள் மீது கைவைக்க முடியாத நிலைமை சிங்களத்துக்கு உருவானது. ஆனல், புலிகளின் மறைவுக்குப் பின்னர், இப்போது முஸ்லீம்கள் மீது சிங்களத்தால் கைவைக்க முடிகிறது. புலிகள் போராட்டத்தை நடத்தியதால்தான் முஸ்லீம்கள் ஒரு ஆயுதப் போரை தொடங்கவில்லை. தொடங்கியிருந்தால் இவ்வளவுக்கும் ஒரு தீர்வு கிட்டியிருக்குமா இல்லையா?

இனிமேல் முஸ்லீம்கள் ஒரு ஆயுதப் போரை தொடங்கி ஒரு பத்து, பதினைந்து வருடங்கள் போராடி ஒரு தீர்வை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த தொய்வுக்கு காரணம் தமிழர்களே. ஆகவே அந்தப் பாவத்தைக் கழுவ, அறப்போரில் குதிப்பதுதான் நியாயம்.

10391027_648613091874942_230082547556270

இந்தப் பெண் போராளி ஏன் மட்டையை தூக்கிப் பிடிக்கவில்லை? :D

தமிழர்கள் பிரச்சனையில் பிரிந்து நின்றவர்கள் நிற்பவர்கள் முஸ்லிம்களின் பிரச்சனைக்கு ஒன்று கூடியது பெரிய விடயம் ,எமது அரசியலிலும் இந்த நிலை தொடரவேண்டும் என்பதுதான் பலரதும் ஆவல் 

தமிழர்களை பிரதினித்துவம் செய்யும் அனைத்து தமிழ் அரசியல்வாதிகள் ,இலக்கியவாதிகள் ,கலைஞர்கள் ,மனித உரிமை அமைப்பு ,நாடு கடந்த அரசு ,தேசிய அவை  ,சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்திருந்தார்கள் .

நான் இணைத்த படத்தில் யாழ் களத்தில் தமது அரசியலில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இவ்வளவு தான்.. கனடாவில்.. தமிழ் பேசும் மக்கள் இருக்கினமா.

கப்பல்.. பிளேன் என்று கடந்த 35 வருசமா களவாய் போய் இறங்கின ஆக்கள் எல்லாம் எங்க. குடியும் குடித்தனமும் என்று செற்றிலாகிட்டினம் போல. அவைக்கு இதெல்லாம் பாப்கோன்.. BBQ சமாச்சாரம் தானே. :lol:

காட்டுக்குள்ள போயிட்டம். செப்டம்பர்ல சந்திப்பம். :)

முஸ்லீம்கள் நடத்தும் போராட்டங்களில் தாயக, மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்குபற்ற வேண்டியது அவசியம். இது கங்கையில் குளித்து பாவங்களை கழுவுவதற்கு ஒப்பானது. அப்படி என்ன பாவம் இழைத்துவிட்டார்கள் தமிழர்கள்?

இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஐம்பதுகளிலும், எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தமிழர்மீது சிங்களவனால் வன்முறை ஏவிவிடப்பட்டது. நூற்றுக்கணக்கில் மக்கள் அழிந்தார்கள். ஆனால் முஸ்லீம்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அதனால் சில நல்ல முஸ்லீம்கள் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தார்கள். வேறு சில முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து தமிழர்களைக் கொன்றும், சொத்துக்களை சூறையாடியும் மகிழ்வு கொண்டார்கள். மிகுதிப்பேர் எனக்கென்ன என்று ஒதுங்கி நின்றார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் வீரியம் கண்டது. அப்போது, முஸ்லீம்களில் ஒரு சிலர் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கணிசமானவர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறையிலும், தமிழருக்கு எதிரான ஜிகாத்திலும் இணைந்துகொண்டார்கள். மிகுதிப்பேர் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்தார்கள்.

புலிகள் ஆயுதப்போரை முன்னெடுத்துச் செல்ல முஸ்லீம்கள் மீது கைவைக்க முடியாத நிலைமை சிங்களத்துக்கு உருவானது. ஆனல், புலிகளின் மறைவுக்குப் பின்னர், இப்போது முஸ்லீம்கள் மீது சிங்களத்தால் கைவைக்க முடிகிறது. புலிகள் போராட்டத்தை நடத்தியதால்தான் முஸ்லீம்கள் ஒரு ஆயுதப் போரை தொடங்கவில்லை. தொடங்கியிருந்தால் இவ்வளவுக்கும் ஒரு தீர்வு கிட்டியிருக்குமா இல்லையா?

இனிமேல் முஸ்லீம்கள் ஒரு ஆயுதப் போரை தொடங்கி ஒரு பத்து, பதினைந்து வருடங்கள் போராடி ஒரு தீர்வை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த தொய்வுக்கு காரணம் தமிழர்களே. ஆகவே அந்தப் பாவத்தைக் கழுவ, அறப்போரில் குதிப்பதுதான் நியாயம்.

இந்தப் பெண் போராளி ஏன் மட்டையை தூக்கிப் பிடிக்கவில்லை? :D

இசை நீங்கள் சவேந்திர சில்வாவை பற்றியா சொல்கிறீர்கள்  :D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

இசை , சீமான் ஏன்டா????? ஏன்'டா?????

நேற்று நிற்காமல் இன்றுமட்டும் மட்டையைத்தூக்கியிருந்தால் என்னிடமே நல்லா வாங்கியிருப்பா..பட் அவா நேற்றும் நின்றா இன்றும் நிற்கிறா..., நாளையும் ...... அவங்க அப்பிடித்தானாம் நிற்பார்கள் நானும் சொல்லிப்பார்த்தேன் இது உதவாது பேசாமல் நீ உன்குடும்பம் என்று உருப்படியா உன் வாழ்க்கையைப்பாத்துக்கோ என்று  கேட்க மாட்டாங்களாம். பாவம் விட்டுடுங்கப்பா. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இவ்வளவு தான்.. கனடாவில்.. தமிழ் பேசும் மக்கள் இருக்கினமா.

கப்பல்.. பிளேன் என்று கடந்த 35 வருசமா களவாய் போய் இறங்கின ஆக்கள் எல்லாம் எங்க. குடியும் குடித்தனமும் என்று செற்றிலாகிட்டினம் போல. அவைக்கு இதெல்லாம் பாப்கோன்.. BBQ சமாச்சாரம் தானே. :lol:

அர்ஜூன் விளக்கம் கொடுத்திருக்கிறார்....அதாவது தமிழர் போராட்டத்தில் பிரிந்து நின்றவர்கள் முஸ்லீம் போராட்டத்தில் ஒன்றாக இருக்கினமாம்......

தமிழர்கள் பிரச்சனையில் பிரிந்து நின்றவர்கள் நிற்பவர்கள் முஸ்லிம்களின் பிரச்சனைக்கு ஒன்று கூடியது பெரிய விடயம் ,எமது அரசியலிலும் இந்த நிலை தொடரவேண்டும் என்பதுதான் பலரதும் ஆவல்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் விளக்கம் கொடுத்திருக்கிறார்....அதாவது தமிழர் போராட்டத்தில் பிரிந்து நின்றவர்கள் முஸ்லீம் போராட்டத்தில் ஒன்றாக இருக்கினமாம்......

அவர்  அப்படித்தான் சொல்லுவார்

சொல்பவர் சொன்னால் கேட்பவன் ம...............? என்றொரு வரலாற்றுப்படிப்பு உண்டு

புலிகள் இல்லை

நாம் இணைந்துவிட்டோம் என்று படம் காட்டுகிறார்கள்

ஆனால் பக்கத்தில் சென்று பார்த்தால் தெரியும்

ஒருத்தருக்கொருத்தர் முட்டும் அளவுக்கு

தலைகள் கனமாக  இருக்கும்

வெளிப்பூச்சை  வைத்து விடுதலை அடையலாம் என்றால் எப்போ  நடந்திருக்கும்

எத்தனை  பேரைப்பார்த்திட்டம்............... :(  :(  :(

தமிழர்கள் கொல்லப் பட்டபோது முஸ்லிம்களோ அமைப்புக்களோ எத்தனைபேர் எதிராக போராடினவர்கள் ?

தமிழர்கள் கொல்லப் பட்டபோது முஸ்லிம்களோ அமைப்புக்களோ எத்தனைபேர் எதிராக போராடினவர்கள் ?

தமிழ் ஒட்டுக்குழுக்கள் எங்களை போட்டு தள்ளினாலும் நாயகம் பட்டம் கொடுத்து சால்வை போர்கிறோமே?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழரும் முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் இலங்கை முஸ்லீம்களுக்காக ஆர்ப்பாட்டம் .

இந்த நிகழ்வைப் பார்க்கும்போது இலங்கையில் அரசியல் லாபத்திற்காக
சிறு போராட்டங்களை நடத்தும் பச்சோந்தி அரசியல்வாதிகளை புலம்பெயர்ந்தவர்களும்

பின்பற்றுவது போலத் தெரிகின்றது.

யெப்பா யெப்பா புல்லரிக்குதப்பா. எங்க புலிக்கொடியைக் காணோம்? கொண்டு வந்திருந்தால் முஸ்லிமு அனுமதிச்சிருக்காதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.