Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், அவுஸ்திரேலியப் பிரஜையாக பரீட்சை எல்லாம் இல்லையா? அதில ஒருவர் சொல்லும் கருத்து அவரது கருத்துச் சுதந்திரத்தில் அடக்கம், அவரை சிறி லங்கா மாதிரி ஜெயிலில் எல்லாம் கருத்துக்காக அடைக்க முடியாது எண்டு அறிய வரேல்லையோ? அல்லது அந்தப் பரீட்சையும் "போர்" எண்டு போட்டு "பிற்" அடிச்சுப் பாஸ் பண்ணினிங்களோ? <_<

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கள்ள கடத்தல் காரருக்கும் ஆள் கடத்தல் காரருக்கும் ஆதரவளிப்பது எல்லாம் கருத்து சுதந்திரத்துக்குள்ள வராது அண்ணே...:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அவுஸ்ரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு எதாவது ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருக்கின்றதா? கள்ள சான்றிதழுடன் குடிபெயர்ந்த பலநாட்டவர்கள் உண்டு....மூன்றுமாதம்,ஆறுமாதம் பயிற்சி களை இரண்டு வருட மூன்றுவருட பயிற்சி என சான்றிதழ்கள் பெற்று பலநாட்டவர்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனர்.முக்கியமாக தொழில்பயிற்சிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்க அகதியா போட்ல வந்ததில ஒண்டு எதோ பிரச்சனையில நேர ஒரு பாடசாலைக்கு போய் ஒரு டீச்சர்ர அடிச்சு போய்ட்டுது ஆழ தூக்கி உள்ள போட்டாச்சு பிறகு ஒண்டு கண் தெரியாத வெள்ளைக்கார பொண்ணோட காச பறிச்சிட்டு ஓடினதோட இல்லாம அந்த பொண்ணோட சேட்டையும் விட்டு இருக்கு இப்பிடியான கொசப்பு கூட்டங்கள் தான் அகதிகள் என்ற பேர்ல இங்க வந்து சண்டித்தனமும் ரவுடித்தனமும் செய்துகள் உதுகள பாத்திட்டு தான் அவனும் பாவம் பாக்கிறான் இல்லை.....

A Sri Lankan asylum seeker will have his visa revoked after being charged over the indecent assault of a primary teacher at a school in Sydney’s north west.

The alleged attack happened at a Quakers Hill primary school just after 4pm last Wednesday.

Police from Quakers Hill attended the school and arrested a 39-year-old Toongabbie man, who is currently on a bridging visa.

Immigration Minister Scott Morrison told 2GB radio the man’s visa would be withdrawn.

“The individual you are referring to is a Sri Lankan national that arrived illegally by boat and was on a bridging visa,” the minister said.

“He was charged with assault with an act of indecency. He’s been retained and he’s on his way to Villawood.”

The man will appear at Blacktown local court on July 16.

 

சுண்டலுக்கு அவுஸ் அரசாங்கம் ஏதாவது கௌரவ பட்டம் வழங்கியுள்ளதா? இந்த மாய் மாய்கின்றார். :D 

அவுசிலை இருக்கின்ற வேறை நாட்டவர்கள் இப்படிச் செய்வதில்லையா?

அல்லது அகதியாக வந்த எல்லாத் தமிழரும் அங்கே  இதே தொழிலாக இருக்கின்றார்களா? :)

நாம் சுகமே இருந்தால் காணாது

அடுத்த வீட்டிலை அடுப்பு எரியுதா என்று பார்ப்பவன் தான் நல்ல  மனிதன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவுரவ பட்டம் வழங்கினால் மட்டும் தான் பேசணும் எண்டில்ல ஒரு Australia பிரஜைக்கு இதைப்பற்றி பேச உரிமையும் சுதந்திரமும் உண்டு......சட்ட விரோத படகு பையனாம் உண்மையான அகதிகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னுக்கு வார ஒரு முயற்சி இவர்களை திருப்பி அனுப்பவதே சரியான முடிவு அதை தான் Australia செய்து......

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சொல்வது .......பயங்கரமான கடல் பயணத்தில் வரவேண்டாம் என்றுதான்.....சிட்னியில் நான் இருக்கும் பகுதியில் கடந்த நாலு வருடத்தில் பல இந்தியர்கள் வந்து குடிஏறியுள்ளார்கள் அநேகர் குடியுரிமையும் பெற்றுள்ளனர்....அதாவது அவுஸ்ரேலியா பல இந்தியர்களுக்கு விசா கொடுத்துள்ளது வ்ந்தவர்கள் எல்லாம் ஐ.டி துறையினரல்ல....தொழில்சாலைகள்,மற்றும் சாதாரணகடைகளில்தான் பணிபுரிகின்றனர்.ஆகவே அவுஸ்ரேலியா கறுப்பன்களுக்கு விசா கொடுக்கவில்லை என்று சொல்வது பிழை...

 

புத்தன் ஏன் இவர்கள் நியுசிலாந்து போக முடியாதா? அல்லது தாங்கள் நியுசிலாந்துக்கு தான் போகின்றோம் என நிறுவ முடியாதா? நியுசிலாந்தும் அவுஸ் போன்ற நாடுதானே?அது அவ்வளவு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லையே? அல்லது அங்கு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் அகதிகள் அங்கு போக விரும்புவதில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பா இன்றும் அகதிகளை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நடுக்கடலில் தத்தளிக்க விடவில்லை. அந்தவகையில் மனிதாபிமானமுள்ளவர்களாக திகழ்கின்றார்கள்.

 

லண்டனிலும் அவுஸ்ரேலியாவிலும் அரைகுறைப்படிப்போடு வந்த எம்மவர்கள் தான் எம் இனத்திற்கு விரோதிகள்.

 

அவர்கள் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில். நம்மவர்கள் கண்டு கொள்ளுங்கள்.. :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாப்பா ஆமா நடுக்கடலில் அந்த கப்பலில் ஏறி அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்களிடம் விசாரணை செய்த கஸ்டம்ஸ் ஆபிசர் சொல்லுறார் எல்லாரும் கேட்டுகோங்கப்பா......:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாவுக்கு  எங்கடைசனம் வாறதாலை உங்களுக்கு எங்கையும் முட்டுதே? வியட்னாம்,பிலிப்பையின், இந்தோனேசியா,இந்தியர்.ஐரோப்பியர் எல்லாரும் வருகினம் அதெல்லாம் பிரச்சனையில்லை.....எங்கடையளை கண்டால் மட்டும் சிங்கனுக்கு பொத்திக்கொண்டு வருதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அவுஸ் செய்திருந்தால் அது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்.

ஒருவர் அகதி அந்த்ஹஸ்து கோரினால் அவரை விசாரணை செய்து, அகதி இல்லை என்று தெரிந்த பின்பே தான் நாட்டுக்கு அனுப்பலாம். இதைத்தான் 1951 ஐநா அகதிகள் பிரகடனம் சொல்லுது. கனடா, ஐரோப்பா, யூகே எல்லாம் செய்வது இதைத்தான்.

அதை விட்டுவிட்டு, தஞ்சம் கோரி வருபவரை நாட்டை அடையுமுன்னரே "கடத்தி", எந்த்ஹவிசாரணையும் இன்றி, யாரிடம் இருந்து தப்பி வந்தார்களோ அவர்களிடமே ஒப்படைப்பது மிலேச்சத்தனம்.

வட ஆபிரிக்காவில்,இருந்து கடல் வழியேயும், துருக்கி வழியாக தரை வழியும் இன்னும் தினமும் ஆப்கானியர் பலர் ஐரோப்பா வருகீனம். ஆனால் யாரும் அவையை துருக்கி பாலைவனத்தில் போப் பிடித்து ஆப்கன் அரசிடமோ தலிபானிடமோ ஒப்படைப்பதில்லை.

இதற்கு ஆபத்தான படகுப்பயணம் என்னும் சாக்கு வேற. இதுக்கு பல தமிழ்தேசிய, மண்டையன் குழு ஆதரவாளரும் ஒத்தூதீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்ப்போல இசையோடு கருத்து உடன் படுகிறேன்.

Whether the people on the boat are genuine asylum seekers or not is a point an Australian court of law should decide, after hearing evidence. This arbitrary action by Australian navy in the high seas is nothing short of mordern day piracy.

By doing this Australia has shown once again that it is miles behind the EU, Canada and UK when it comes to human rights law and due process.

Shame on you Australia and shame on you Tamil Australians who defend this indefensible injustice.

ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறன். எங்கட தமிழ் அவுசீசிக்கு விழங்கட்டும் எண்டு.

இந்த boat people பிரச்சினைக்கு ஒரே தீர்வு, அவுஸ் நேவி கப்பலில் நெடுக்கர ஏத்துறதுதான். அண்ணை ஒரு பார்வையிலயே சொல்லிப்போடுவர் யார் உண்மையான அகதி யார், economic migrant எண்டு. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாலிக்கு வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை அவர்கள் நடுக்கடலிலேயே வைத்து பட,பல நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணத்திற்கு மூழ்கடிக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. காரணம் மனிதாபிமானம்.யாராக இருந்தாலும் உள்ளே வரவேற்று விசாரணை செய்வார்கள். அவர்களின் சட்டதிட்டங்களுக்கு அமையாதவர்களை திருப்பியனுப்புவது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக கு. சா.

பிரான்ஸில் வருடக்கணக்காக வாழ்ந்து பின் யூகே வருபவர்களை கூட விசாரிக்காமல் சொந்த நாட்டுக்கோ அல்லது பிரான்சுக்கோ கூட திருப்பி அனுப்புவதில்லை.

பூர்வாங்க விசாரணை கூட இல்லாமல் திருப்பி அனுப்பியது மிருகத்தனம். இதில் தேடப்படும் ஒரு முன்னாள் போராளி இருந்து இப்போது அவர் 4ம் மாடியில் இருந்தால் அவரின் நிலை என்ன? சுண்டல் போன்றவர்கள் அப்போ என்ன சொல்லுவார்கள்?

மலேசியா, சீனா தாய்லாந்து போல் பூகோளரீதியிலும், மனிதாபிமான நீதியிலும் தான் ஒரு பிற்போக்கு 3ம் உலக ஆசிய நாடே என்பதை அவுஸ்ரேலியா மீண்டும் நிறுவியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.spiegel.de/international/europe/european-refugee-crisis-worsens-in-mediterranean-a-964304.html

ஈயூ, யூகே கனடாவில் இப்படி ஒரு செயலை செய்யும் படி சொல்லும்கட்சிகள், நவனாஜிகள் அல்லது bnp போன்ற இனவாத கட்சிகளாய் இருக்கும், ஆனால் அவுசிலோ பிரதான ஆல் உக் கட்சியே இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பது, அந்த நாடு எவ்வளவு ஜனநாயக விழிமியங்களில் பிந்த்ஹங்கியுள்ளதையே சுட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான்,

 

அவரை விடுங்கள். ஏதோ தான் மட்டும்தான் அவுஸ்த்திரேலியாவில ஒரே பிரஜாவுரிமை பெற்ற அவுஸ்த்திரேலியன் (தமிழன்) என்று நினைத்து சட்டம் கதைக்க வெளிக்கிட்டிட்டார். மற்றவை எல்லோரும் படகில வந்த ஆட்கள் அல்லது படகுகளை ஒழுங்குபடுத்துகிற ஆட்கள் என்று அவர் நினைக்கிறார். பகிடி என்னவெண்டால் அவரே இன்னொரு விசாவில வந்து ஆறுதலா பிரஜாவுரிமை எடுத்தவர். அதெல்லாம் இப்ப மறந்து போச்சுது. அதனால இப்ப அவுஸ்த்திரேலியன் அரசங்கத்தின்ர உத்தியோகபூர்வ பேச்சாளராக மாறியிருக்கிறார். அவுஸ்த்திரேலியன் பிரதமருக்கு இப்படியொருவர் தங்களுக்காக (தனது சொந்த இனம் கஷ்ட்டப்படுகிறதைப் பார்த்துக்கொண்டே) மாய்கிறது தெரியுமோ தெரியாது.

 

கருத்தாடத் தொடங்கும்போதே வேஷம் போட்டாச்சுது, இனிக் குலைக்கிறதைத்தவிர வேற வழியில்லை. வேஷம் கலைஞ்சால், கெளரவக் குறைச்சல்.

 

அவுஸ்த்திரேலியன் அவுஸ்த்திரேலியன் என்று மார்தட்டும் உவர், 200 வருடங்களுக்கு முன்னர் அபொரிஜின் மக்களுக்கு உவற்ற அவுஸ்த்திரேலியன் வந்தேறு குடிகள் செய்த அநியாயத்தையும் கேடுப் பார்க்கட்டும். அப்போது இன்னும் அதிகமாகப் பெருமைப்படலாம்.


பகிடி என்னவென்றால், அவுஸ்த்திரேலிய அரசாங்கம் செய்வது பிழை என்று எல்லா எதிர்க் கட்சிகளும், அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிச் செய்திகளும் குற்றம்சாட்டும் போதும் கூட, உவர் பலமாகக் குத்தி முறிவது ஏன் என்று விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கொஞ்ச பேர் குத்தி முறிரத பாத்தா சர்வதேச ஆள் கடத்தல் காரர் மூலம் சட்டவிரோதமா தங்கள் உறவினர்களையும் கப்பலில் அனுப்பி எங்கே தங்கள் காசு போய் விடுமோ என்ற பயத்தில் இருப்பதாக தெரிகிறது....

Edited by SUNDHAL

தமிழர்களை அவுஸ்ரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு எதாவது ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருக்கின்றதா? கள்ள சான்றிதழுடன் குடிபெயர்ந்த பலநாட்டவர்கள் உண்டு....மூன்றுமாதம்,ஆறுமாதம் பயிற்சி களை இரண்டு வருட மூன்றுவருட பயிற்சி என சான்றிதழ்கள் பெற்று பலநாட்டவர்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனர்.முக்கியமாக தொழில்பயிற்சிகள் .

 

நிச்சயமாக வரலாம்..ஆனால் காலம் எடுக்கும்...நிறைய srilankans (thamils and singalese) skilled immigrant ஆக வந்துள்ளார்கள்....கனடாவுக்கும் செல்லலாம்.....இந்தியர் சீனர்கள் ( :) ஒரு கணிசமானவர்கள்)  பொய் சான்றிதழும் கொடுத்து வந்து எல்லா இடமும் எல்லாரையும் சந்தேகத்தோடு பார்கிறார்கள்....நீங்கள் வேளையிலும் எவ்வளுவுக்கு எவ்வளவு genuine மக்களை சந்திகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சுற்று மாற்று ஆட்களையும் சந்திப்பீர்கள்....

 

சிலவேளை நான் இப்படியும் சிந்திப்பதுண்டு...

400 ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய என்று வந்து அங்கு வாழ்ந்த மக்களின் நல்ல குணங்களையும் அப்பாவித்தனத்தையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து அந்த நாடுகளை அடிமைப்படுத்திய வெள்ளைக்கார்களிடம் இருந்து தானே இப்போது இந்தியர்களும் சீனர்களும் நாங்களும் எடுக்கின்றோம்....ஆகவே

இது எங்களின் காலம்...இப்போதுள்ள வழி இது..  60 களுக்கு முன் இந்த விசா விளையாட்டு ஒன்றும் இல்லை....ஐரோப்பியர் தாம் பிடித்த இடங்களை தாங்களே அனுபவிக்க கொண்டு வந்தது தான் இந்த rules and regulations......இந்தியாவும் சீனாவும் பலம் பெற பெற நாங்கள் இங்கே அதிகாரங்களை மேற்கொள்ளலாம் (எம்மவர்கள் நிறைய பேர் இருந்தால்)

 

ரஷ்யாவை பார்க்கவில்லையா...ரஷ்யர்களை குடியேற்றிய படியால்....உக்ரைன், ஜோர்ஜியா வை பிரித்தார்கள்...

மோல்டோவா..க்ளானின்கிராத் என்று ஐரோப்பாவில் தேவையான இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள்....

Edited by naanthaan

புத்தன் ஏன் இவர்கள் நியுசிலாந்து போக முடியாதா? அல்லது தாங்கள் நியுசிலாந்துக்கு தான் போகின்றோம் என நிறுவ முடியாதா? நியுசிலாந்தும் அவுஸ் போன்ற நாடுதானே?அது அவ்வளவு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லையே? அல்லது அங்கு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் அகதிகள் அங்கு போக விரும்புவதில்லையா?

 

பாதி கீவிஸ் அவுஸ்திரேலியாவில் தான் வேலை :) அங்கே நிறைய இடம் இருக்கு....ஆனால் பணம் இருக்க தெரியாது.....அவுஸ்திரேலியாவுக்கும் மக்கள் வருவது கிறிஸ்மஸ் தீவு இந்தோனேசியாவுக்கு அருகில் இருப்பதால் தான்...இல்லை என்றால் கப்பல் பயணம் எவ்வளவு ஆபத்தானது....என்று இப்போ தெரியுது தானே....

 

கப்பல்களில் வந்து நிலத்தை தொடுமுன் கைது செய்யப்படுவதால் தான் அவர்களை மனுஸ் தீவு போன்ற இடங்களுக்கு அனுப்புகிறார்கள்....அவர்கள் plane மூலம் வந்து இறங்கினால் அவர்களை வெளியே அனுப்ப முடியாது..இப்போதுள்ள சட்டங்களின் படி....

  • கருத்துக்கள உறவுகள்
அகதிகளை அவுஸ்ரேலியா இடைமறித்தது குறித்து யுஎன்எச்சிஆர் விசனம்! 
[Friday 2014-07-04 07:00]
 
அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிச் சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்டது குறித்து யுஎன்எச்சிஆர், அதிருப்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற 153 இலங்கை தமிழ் அகதிகளும் இடைமறிக்கப்பட்டமை குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தலையோ அல்லது மறுப்பையோ வெளியிடவில்லை. இந்தநிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை வீடியோ மூலம் குறித்த படகு அகதிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் சிலர் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  
எனினும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள யுஎன்எச்சிஆர், படகுகளை இடைமறிக்கும் போது சர்வதேச நியமங்கள் மற்றும் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சாதாரணமாக படகு ஒன்றை இடைமறிக்கும் நாடு அந்த படகை தமது கடல் எல்லைக்குள் வைத்தே இடைமறிக்க வேண்டும் என்ற அடிப்படை அகதிகள் நியமம் உள்ளமையை யுஎன்எச்சிஆர் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ஒரு நாட்டில் இருந்து பயம் காரணமாக வெளியேறும் ஒருவர் மீண்டும் அந்த நாட்டுக்கு பலவந்தமாக அனுப்பப்படுகின்றமை சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் யுஎன்எச்சிஆர் குறிப்பிட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=112491&category=TamilNews&language=tamil

ஐரோப்பா இன்றும் அகதிகளை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நடுக்கடலில் தத்தளிக்க விடவில்லை. அந்தவகையில் மனிதாபிமானமுள்ளவர்களாக திகழ்கின்றார்கள்.

 

லண்டனிலும் அவுஸ்ரேலியாவிலும் அரைகுறைப்படிப்போடு வந்த எம்மவர்கள் தான் எம் இனத்திற்கு விரோதிகள்.

 

அவர்கள் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில். நம்மவர்கள் கண்டு கொள்ளுங்கள்.. :D  :icon_idea:

 

அப்படி வரும் ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கை தரம் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் எப்படியுள்ளது???

 

இப்படி பார்த்தால்...இந்தியா இவை எதையும் செய்யவேண்டிய கடமை இல்லாமலேயே நல்லது செய்கிறது.... :)

மற்றது இந்த கப்பல் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கடலுக்குள் வருவதற்கு முன்னேயே பழுதாகி விட்டது ஆகவே தான்..அந்த கப்பலுக்கும் எந்தா நாடும் பொறுப்பு எடுக்க தேவையில்லை.....அவுஸ்திரேலியா அவர்கள் 250km வெளியே தான் இருக்கிறார்கள் என்று கூறியது....கப்பலில் வந்தவர்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவு நோக்கி போகிறோம் என்று கூறியபடியாலேயே இவ்வளவு பிரச்னையும்....

 

ஒருவருக்கும் ஒரு உண்மையும் தெரியாது.....அவுஸ்திரேலிய அரசு மூர்க்கமாக அனுப்புவதால் அவர்களுக்கும் சட்டரீதியாக ஒரு பிரச்சனையும் இல்லை போலுள்ளது.....இந்தியாவிலிருந்து வெளிகிட்டிருந்த படியால் இவர்களை இந்தியாவுக்கு அனுப்பினால் இவர்களை இந்தியா கைது செய்து கொடுமைபடுத்தவும் இடமிருக்கு.....

கடந்த அரசாங்கத்தின் (லேபர்) மேல் ரூபர்ட் மேடோர்க் போன்ற மீடியா முதளாலிகளுக்கு விருப்பம் குறைவு. லிபரல் ஆட்சியில் இவர்கள் பல நன்மைகளை அனுபவித்த்வர்கள்.  
 
லேபர் ஆளும் போது அகதிப் படகுகள் பெருமளவில் வரத் தொடங்கி விட்டன‌. அதை இந்த மீடியாக்கள் லேபருக்கு எதிராக பயன்படுத்தி வெள்ளை இனமக்களின் இனவாதத்தை தூண்டி இனவாத நெருப்பை எண்ணை ஊற்றி வளர்த்தார்கள்.
 
விளவு லேபர் போனது. லிபரல் வந்தது.
 
இனவாதம் தொடர்ந்து பற்றி எரிகிறது. இனவாதிகளிடம் மனிதாபிமானம் பார்க்க முடியாது.

அவுஸ்திரேலியாவுக்கு உலகில் இருந்து 50million அகதிகள் என்கிற போர்வையில்  வரவிரும்புகிறார்கள் என்றால் அவர்கள் எல்லரையும் உள்ளே விட வேண்டுமா?? அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர விரும்பும் எண்ணற்றோர்கள் உலகம் முழுக்க உள்ளார்கள்...அவர்களை அவுஸ்திரேலியா எப்படி கட்டுபடுத்த முடியும் என்றும் சிந்திக்க வேண்டும்....

 

சும்மா குடியேற என்று விண்ணப்பிவனிடம் $2500 அறவிடுகிறது.....ஆனால் அகதி என்று இங்கே வந்தால் அவர்களுக்காக $50000+ மேல் அவுசுக்கு செலவு என்றால் இதை எப்படி கையாளுவது??????

 

எங்காவது பொட்டல் வெளியில் காணி தருகிறோம்...தோட்டம் செய் என்றாலும்...மனிதஉரிமையை கூப்பிட்டால்..அவ்ஸ் என்ன செய்ய முடியும்? :) அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.