Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத எழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா.இங்கிலாந்து.இந்தியா. பிரான்ஸ்.டென்மார்க்.இலங்கை ஆகிய நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். மற்றும் வடலி.மலைகள் ஆகிய இணையங்களில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.நன்றி.

 

வாழ்த்துக்கள்  சாத்திரியார்

என் ஜேர்மனியில் வெளியிடவில்லை

 

  • 2 weeks later...
  • Replies 141
  • Views 23.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நூல் வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை ஆண்டுகள் இழுபறிப்பபட்டு..மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டு.391 பக்கங்களோடு திலீபன் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது எனது நாவல் ...ஆயுத எழுத்து....

 

1509679_10202022692128629_26869646747483
10730833_10202022692888648_5980982320373

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.புத்தக வெளியீடு இல்லையோ?...சகாறா அக்கா மாதிரி புத்தகத்தை ஓசியில் கொடுப்பீர்களா :D...எது எப்படி இருந்தாலும் உங்கள் நூலை வாசிக்க ஆவலாய் உள்ளேன்

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆயுத எழுத்து நாவல் வெளியான செய்தியை பதிவிட்டதும் புத்தகத்தினை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என உள் பெட்டியில் கேட்கிறார்கள்..எல்லா நாடுகளிலும் புத்தகத்தை பெற்றுக் கொள்ளும் விபரங்களும் .இணையம் ஊடாக ஒன் லைன் விபரங்களும் விரைவில் இணைக்கிறேன் .அதே நேரம் இந்த நாவலை எழுதிய பின்னர் அதனை வெளிக்கொண்டு வருவதற்கு நான் பட்ட பல சிரமங்களால் புத்தகம் வெளியிடும் யோசனையையே நான் கை விட்டபோது மீண்டும் எனக்கு உற்சாகமும் உதவியும் செய்து புத்தகத்தினை வெளிக் கொண்டு வர உதவிய nivetha uthayan.'(மோ ..சே     ). aruliniyan.. karthith meka..தமிழ் கவி ஆகியோருக்கும் நன்றிகள்


வாழ்த்துக்கள்.புத்தக வெளியீடு இல்லையோ?...சகாறா அக்கா மாதிரி புத்தகத்தை ஓசியில் கொடுப்பீர்களா :D...எது எப்படி இருந்தாலும் உங்கள் நூலை வாசிக்க ஆவலாய் உள்ளேன்

 

வெளியீடு செய்யும் ஆர்வம் இல்லை ஆனால் புத்தகம் அனைத்து நாடுகளிலும் கிடைக்க வசதி செய்யப்படும் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்தர் உங்கள் ஆக்கம் வெளிவரும்போது பலரைப்பேசத்தூண்டும் என்பதில் ஐயமில்லை.கனடாவில் எப்போது உங்கள் நூல் வெளியீடு? உங்கள் கருத்துக்களைவிட உங்கள் எழுத்தில் ஈர்ப்பு இருக்கிறது. ஒரு நூல் வெளிவருமுன்னர் விமர்சனத்தையோ குற்றச்சாட்டுகளையோ அல்லது இவர் இப்படித்தான் எழுதுவார் என்றோ கருத்திடமுடியாதுதானே..... இருப்பினும் வாசகர்களிடம் இது தொடர்பாக வாசிக்காமலே சர்ச்சை எழுவதைப்பார்க்கும்போது வாசிப்பிற்குப்பின்னால் நிச்சயம் இந்நாவல் பேசப்படுபொருளாக இருக்கப்போகிறது அந்தவகையில் எழுதிய சாத்தருக்கு பெரும் வெற்றியாக அமையும். வரவேற்போம்.

 

நன்றி ..விரைவில் கனடாவில் கிடைக்கும்

ஒரு ரோல் வடை வாங்கி கொடுக்கும் பஞ்சி போல வெளியீடு இல்லாமல் நழுவல் ...

 

கடுமையா விமர்சிக்க வேணும் ஆகவே வெளியீடு கண்டிப்பா பரிசில் வேணும் அண்ணே  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு நிகழ்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் எனக்குப் புத்தகம் கிடைக்க சாத்திரியார் ஒழுங்கு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரோல் வடை வாங்கி கொடுக்கும் பஞ்சி போல வெளியீடு இல்லாமல் நழுவல் ...

கடுமையா விமர்சிக்க வேணும் ஆகவே வெளியீடு கண்டிப்பா பரிசில் வேணும் அண்ணே:icon_idea:

வேண்டுமானால் இப்படிச் செய்யலாம் முதலில் நூலை வாங்கி வாசித்து விட்டு பாராட்டு விழா வைத்து உண்மையை எழுதி இருந்தால் பாராட்டும்,பொய்யும்,கற்பனையும் கலந்து எழுதி இருந்தால் அடியும்,உதையும் கொடுத்து விட்டு வர வேண்டியது தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்வது நன்றாக இருக்கே :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரோல் வடை வாங்கி கொடுக்கும் பஞ்சி போல வெளியீடு இல்லாமல் நழுவல் ...

 

கடுமையா விமர்சிக்க வேணும் ஆகவே வெளியீடு கண்டிப்பா பரிசில் வேணும் அண்ணே  :icon_idea:

 

கடுமையா விமர்சிக்க வேணும் எண்டு கேட்ட படியால்  குளிர் முடியட்டும் ஒரு வெளியீட்டை வைப்பம் .புத்தக விமர்சகர்களில் நீங்களும் ஒருவர் .இப்பவே பெயர் போட்டு விடுறன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆய்த எழுத்து தெரியும் ஆனால் ஆயுத எழுத்து என்றால் என்ன ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் ..இலங்கைத் தீவில் கடந்த முப்பது ஆண்டு காலம் நடந்த உள் நாட்டு யுத்தத்தில் அந்த மக்களின் தலை விதி ஆயுதங்களாலேயே எழுதப் பட்டிருக்கிறது .ஆயுதத்தால் எழுதப்பட்ட விதியின் வேறொரு பக்கம் தான் ஆயுத எழுத்து நாவல்

10345822_10202028451432608_5818400459717

 


எனது நாவல் பற்றி தமிழ் கவி

1385069_455068714611853_793396263_n.jpg?

“ஆயுத எழுத்து“ போரின் இன்னொருபக்கம். மறைந்திருந்த மறைக்கப்பட்ட பேரிடரின் மனம் ஒண்ணாப் பதிவுகள் அரசல்புரசலாக கேள்விப்பட்ட திகில்கதைகளின் பரகசியம்.இ
து நாணயத்தின் மறுபக்கம். நாக்கை அண்ணத்தில் ஒட்டவைக்கும் பயங்கரம். இன்னும் அவிழ்க்க விரும்பாத அவிழாத பல முடிச்சுகள் இளகியுள்ளன. சாத்திரியார் பழத்தை தின்று கொட்டை போட்டிருக்கிறார். ஆக கவுரவ மக்களே கற்களைப் பொறுக்கிக் கொள்ளுங்கள். உறைக்கும் பழங்களை நோக்கிவீச, கசக்கும் வேம்பின்பழம்அல்ல இதுஒட்டவைக்கும் வேம்பின் பிசின்....நாம் கழட்டமுடியாது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொண்டு அவர்கள் உதிரத்தால் எழுதப்பட்டஓவியம் வரையப்பட்டுள்ள திரையின் புறமுதுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இரண்டரை ஆண்டுகள் இழுபறிப்பபட்டு..மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டு.391 பக்கங்களோடு திலீபன் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது எனது நாவல் ...ஆயுத எழுத்து....

 

1509679_10202022692128629_26869646747483
10730833_10202022692888648_5980982320373

 

 

அவன் டைரக்டர் சங்கர்ரை படம் மாதிரி வருசக்கணக்காய் இழுபறிப்படுது......சனத்தின்ரை கையுக்கு.......... ஒரு குத்துமதிப்பாய் எப்ப வரும்????

கடுமையா விமர்சிக்க வேணும் எண்டு கேட்ட படியால்  குளிர் முடியட்டும் ஒரு வெளியீட்டை வைப்பம் .புத்தக விமர்சகர்களில் நீங்களும் ஒருவர் .இப்பவே பெயர் போட்டு விடுறன் 

கண்டிப்பா அண்ணே ..விமர்சனம் இல்லாமல் ஒரு நூல் இருக்க கூடாது அப்படி இருந்தால் அது பேசப்படும் நூலா இருக்காது ...

 

சும்மாவே நீங்க விவகாரமான ஆளு இதில புத்தகமா வேறை என்றால் களை கட்டும்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது நாவலை இந்தியாவிலும்.வெளி நாடுகளிலும் உடனடியாக இணையம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் இணைப்பு இங்கு

http://shop.velaler.com/index.php/ta_in/bookst/categories-t/bookst?route=product%2Fproduct&product_id=143

  • கருத்துக்கள உறவுகள்

இணைய அங்காடி ஒரு மார்க்கமான பெயரில் உள்ளதே சாத்திரியார்!

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தர் இணைய அங்காடியை பார்த்தபோது சிரிப்புத்தாங்க முடியவில்லை ஆமா என்னுடைய வேங்கையன் பூங்கொடியில் பண்ணையார் என்ற சொற்பதம் வந்தபோது சுட்டிக்காட்டிய சாத்திரியா இந்த இணைய அங்காடிக்குள் தன்னுடைய நூலையும் இணைத்திருக்கிறார் ஆ?

எனக்கு அனுப்புங்கோ கனேடிய உறவுகளுக்கு கொடுத்துவிடுகின்றேன் ,மிகுதி வந்தால்  கடையில் வைத்து விற்றுவிடலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
யாரவது வாசித்த பின்பு எங்காவது வீசினால் அறியத்தரவும் ..... சும்மா பொழுது போக்கிற்கு என்ன இருக்குதென்று பார்க்கலாம்.
 
ஒரு இனத்தின் விடுதலை போரை எந்த வடிவில் வியாபாரம் செய்தாலும் அதற்கு துணைபோக முடியாது. 
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஒன்லைனில் ஓடர் பண்ணும் போது எனக்கும் சேர்த்து ஒன்றை வாங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஒன்லைனில் ஓடர் பண்ணும் போது எனக்கும் சேர்த்து ஒன்றை வாங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

விற்றுத் தீர முதல் கட்டாயம் வாங்குகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அனுப்புங்கோ கனேடிய உறவுகளுக்கு கொடுத்துவிடுகின்றேன் ,மிகுதி வந்தால்  கடையில் வைத்து விற்றுவிடலாம் .

 

கனடாவில் முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழுமம் தாங்கள் வெளியிடப் போவதாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள்.விரைவில் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்

விற்றுத் தீர முதல் கட்டாயம் வாங்குகின்றேன். :)

 

தை மாதம் லண்டனில் கிடைக்கும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைய அங்காடி ஒரு மார்க்கமான பெயரில் உள்ளதே சாத்திரியார்!

 

எனது புத்தகம் வெளியானதுமே சென்னையில் இந்த அங்காடியை சேர்ந்தவர் என்னிடம் நூறு புத்தகங்களை வாங்கி ஒன் லைனில் விற்பனைக்கு போட்டு விட்டார் அதன் இணைப்பைத்தான் இங்கு இணைத்துள்ளேன் .மேலும் இரண்டு இணைய அங்காடிகளும் வாங்கியுள்ளார்கள் அவர்களும் விளம்பரம் போட்டதும் இங்கு இணைப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆயுத எழுத்து நாவலை சென்னையில் பாரதி புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்

126, Usman Rd, Postal Colony, T Nagar, Chennai, Tamil Nadu 600017,

எங்க  இங்க  புத்தகம்  வரவில்லை  ஐந்து  புத்தகம்  ஓடர்  . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.