Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

150 இலங்கை தமிழருடன் இன்னொரு கப்பல் நிற்கிறது அவர்கள் தொடர்பில் முடிவு இல்லை என்றார் கப்பல் கப்டன்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த  ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது.

எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி  படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும்  என  அவர்களுக்காக  வாதாடும்  சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh.

இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய குற்றவாளி என இலங்கை அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டு  உள்ளதாகவும்,விசேட அதிரடிப்படை உறுப்பினரின் பெயர் மகேஸ் இந்திகா எனவும் தெரிவித்துள்ளார்.

~~அவருக்கு 30 வயதிருக்கும், அவர் தனது குழந்தையையும் படகில் கொண்டு வந்தார், நாங்கள் புறப்பட ஆரம்பித்த வேளை அந்த குழந்தைக்கு 4 வாரங்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.; அவர் ஏன் இலங்கையிலிருந்து தப்பியோட முயன்றார்; என கேட்டதற்கு ~~ அவருக்கு அரசியல் பிரச்சினைகள் உள்ளன என அந்த பெண்மணி தெரிவித்தார்.

தங்களுடைய நோக்கம் நியுசிலாந்தை சென்றடைவதே எனவும், நாங்களே இதனை ஏற்பாடு செய்தோம், ஏனைய பயணிகளை ஏற்பாடு செய்தோம்,நியுசிலாந்து செல்ல முடியும் என நினைத்தோம், அவுஸ்திரேலியாவிற்கு ஒரு போதும் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவுஸ்திரேலிய வானொலிக்கு பேட்டியொன்றை வழங்கிய பின்னர் நான் அதிகாரிகளால் துன்புறுத்தல்களிற்கு உள்ளானேன் இதன் காரணமாக நியுசிலாந்து போன்ற வேறு ஒரு நாட்டிற்கு – பொருளாதார ரீதியாக சிறந்த வாய்புகளை வழங்க கூடிய நாட்டிற்கு செல்வதே சிறந்தது என கருதினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

~~ இரண்டு வார கடற்பயணத்திற்கு பின்னர் எங்களால் அங்கு சென்றடைய முடியாது என்பதை உணர்ந்தோம், இதன் பின்னர் நியுசிலாந்து அதிகாரிகளை செய்மதி தொலைபேசியில் அழைத்து எங்களை வந்து காப்பாற்றுமாறு கதறினோம், ஆனால் அவர்கள் தாங்கள் மிக தொலைவிலிருப்பதாக தெரிவித்தனர்’’

நாங்கள் அவ்வேளை கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகிலிருந்ததால் வேறு வழியின்றி அவுஸ்திரேலிய அதிகாரிகளை அழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் சுஜீவ சப்ரமாது குறிப்பிட்டார்.

~~நாங்கள் அவுஸ்திரேலிய கப்பலில் ஏறிய வேளை அந்த கப்பல் கப்டன் டொனி பிரட் 150 இலங்கை தமிழருடன்  இன்னொரு கப்பல் நிற்பதாகவும் அங்கு சென்று அனைவரையும் ஒரே கப்பலில் ஏற்றப்போவதாகவும் தெரிவித்தார்,’’

~~ மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்னர் டொனி பிரட் மற்றைய கப்பல் தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளதாகவும், அவர்களை என்ன செய்வது என்பது தெரியவில்லை அது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்’’

தானும் தனது 3 குழந்தைகளும் தங்களது நாயும் அவுஸ்திரேலிய கப்பலில் இருந்த வேளை தங்களை விட நாய்க்கு நல்ல உணவு வழங்கப்பட்டதாக சுஜீவ சப்ரமாது தெரிவித்தார்.

அவர்கள் நாயிடம் இரக்கம் காட்டினர், ஆனால் எங்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்,திட்டினர், கெட்ட வார்தையால் ஏசினர்

இன்னொரு பயணியான 59வயது எம் ஜி சுமணதாச- நியுசிலாந்து செல்வதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார், பணம் உழைத்து அங்கு வீடொன்றை வாங்குவதற்காக நான் இந்த பயணத்தை மேற்கொண்டேன், இதற்காக பணம் எதனையும் செலுத்தவில்லை, அ;ங்கு சென்றதும் திருப்பி செலுத்தலாம் என தெரிவித்தார்கள், அதிகாரிகள் என்னிடம் கேள்வி எதனையும் கேட்கவில்லை, இரவில் அவர்கள் எங்களை கண்டுபிடித்தார்கள் பகல என்றால் நாங்கள் அவுஸ்திரேலியா கரையை நாங்கள் அடைந்திருக்க முடியும் என்றனர் எங்களுக்கு நல்ல உணவை வழங்கினர் என தெரிவித்தார். நீர்கொழும்பை சேர்ந்த 38 வயது வாகன சாரதி தங்கள் படகு 14 நாட்கள் கடலில் தத்தளித்தாகவும் யூன் 11 ம் திகதி  புறப்பட்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் 25 ம்திகதி இடைமறித்ததாக குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109182/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அண்ணாச்சி 59 வயசில new zeland போய் உழைச்சு அங்க வீடு வாங்க போறாராம் ....

உயிருக்கு அஞ்சி அகதியாக இன்னொரு நாட்டுக்குள் தஞ்சம் கோருகின்றவர்களுக்கும், வசதியாக வாழ வளர்த்த நாயையும் கூட்டிக் கொண்டு போகின்றவர்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கு.

இப்படியானவர்கள் எல்லாம் அகதியாக தங்களை சொல்லுவதால் பாதிக்கப்படப் போவதும்/ பாதிக்கப்படுவதும் உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் உள்ள அகதிகள் தான். :(

வெள்ளைக்காறர் தாங்கள் பெத்த  பிள்ளைகளை  கட்டி பிடிச்சு கொண்டு தூங்கிறதை விட நாய்களையும் பூனைகளையும் கட்டிபிடுச்சு கொண்டு படுக்கிறதுகள்...  

அதுக்காக பிரச்சினை என்ன எண்று  விசாரணை கூட செய்யாமல்  திருப்பி அனுப்புறது எல்லாம் நல்லா இல்லை... 

எப்பிடிதான் கோத்தபாய மாதிரியே சிந்திக்கிறீங்களோ தெரியவில்லை...  :rolleyes:

தயா,

இங்கு நான் விசாரணை இல்லாமல் நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்பியதை நல்லது என்று எங்கு சொல்லியிருக்கின்றேன்?..

உயிராபத்து என்று அகதியாக கடல் கடந்து போகின்றவர்கள் தாம் வளர்த்த செல்லப் பிராணியையும் தூக்கிக் கொண்டு போகின்றார்கள் எனில் அவர்களை அகதிகள் என்று நம்புவதற்கு மிகவும் கடினம். அப்படி ஒரு நாடு நம்பினால் அவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள். அவர்களே தம் வாயால் தாம் வசதியாக வாழவும் வீடு கட்டவும் தான் போகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படியானவர்களால் தான் உண்மையான அகதிகளுக்கும் கேடு நடக்கின்றது. 

வெள்ளைக்காறர் தாங்கள் பெத்த  பிள்ளைகளை  கட்டி பிடிச்சு கொண்டு தூங்கிறதை விட நாய்களையும் பூனைகளையும் கட்டிபிடுச்சு கொண்டு படுக்கிறதுகள்...  

அதுக்காக பிரச்சினை என்ன எண்று  விசாரணை கூட செய்யாமல்  திருப்பி அனுப்புறது எல்லாம் நல்லா இல்லை... 

எப்பிடிதான் கோத்தபாய மாதிரியே சிந்திக்கிறீங்களோ தெரியவில்லை...  :rolleyes:

கனடாவுக்கு கப்பல்ல 500 பேர் வந்தபோது கனடா அரசாங்கம் பல முன்னேற்பாடுகளை செய்திருந்தது. அவர்கள் பலர் கப்பலுக்குள் இறந்திருக்கக் கூடும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் சாப்பாடு குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படக் கூடும். பலர் காயமடைந்தவர்களாக இருப்பார்கள் என பல விதமாக சிந்தித்து செய்திகளில் நாள்முழுக்க அதையே சொல்லி  கொண்டிருந்தார்கள். முன்னேற்பாடுகளும் அதற்கேற்றாற்பேல் செய்தார்கள். லாண்ட் பண்ணினதுக்குப் பிறகுதான் தெரியும் அது குறூஸ் மாதிரிவந்தது என்று.  இவை எல்லாம் ஒரு பெரியவிசயமில்லை ஆனால் வந்தவர்கள் தாம் 40 0000 டொலரஸ் குடுத்துத்தான் வந்தனாங்கள் என்று பெருமையாகப் பேட்டிகொடுத்திருந்தார்கள். அவர்களது வருகை முறையும் அவர்களது செவ்விகளும் நடவடிக்கைகளும் தாம் போரால் அனைத்தையும் இழந்த அகதிகள் இல்லை பொருளாதராம் வசதிவாய்ப்பை நோக்கி வருபவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது. உலகின் பல்வேறு பகுதிகளில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட அகதிகள் கனடாவுக்குள் வருவது இவர்களால் பாதிக்கப்பட்டது.

இவர்கள் வந்த கப்பலில் ஏறி நின்று அறிவிப்புச் செய்யும் நாட்டின் பிரதமர்

http://www.sunnewsnetwork.ca/sunnews/straighttalk/archives/2011/07/20110721-093938.html

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு அகதி என்றால் கொலிவூட் படத்தில் வருவது போல போட்டது போட்டபடி உடுத்த உடுப்போட ஓடிபரோணும் போல.

யாழிடப்பெயர்வில் நாய் பூனையோடுதான் முக்காவாசி சனம் வறணிக்குப் போனது.

உலகத்திலை இருக்கும் எந்த ஊடகமும் 100% மாக உண்மைகளை மட்டும் சொல்வதில்லை...   தாங்கள் எதை சொல்ல விருபுகிறார்களோ  இல்லை அதிகமான மக்கள் எதை கேக்க விரும்புகிறார்களோ எது பரபரப்பை உண்டு பண்ணுமோ அதை மட்டுமே பூதாகாரமாக சொல்கிண்றன... 

இறுதி போரின் இறுதி நாட்களில் காயமடந்தவர்கள் கப்பல்களின் மூலம் திருகோணமை கொண்டு வந்த போது BBC தமிழ் அவர்களை பேட்டி எடுக்கிறது...   பேட்டி கண்ட நடராஜன் கேக்கிறார்...  புலிகள் உங்களை சுட்டார்களா...??  இராணுவ கட்டுக்குள் நிண்டு அவர் கேட்க்கும் இந்த கேள்விக்கான பதில் என்ன வரவேண்டும் எண்று விரும்புகிறாரோ அதையே கேக்கிறார்... சொல்ல இருந்த பலவிடயங்களை வெட்டி விட்டு புலிகள் சுட்டார்கள் எனும் செய்தியே முன் நிறுத்த படுகிறது... 

விசயம் அவ்வளவுதான்...  

கனடாவுக்கு 2009 ஈழ போர் நிறைவின் பின்  இரண்டு கப்பல்கள் வந்தன  முதலாவது கப்பலிம் 75 பேர் வந்தனர்..  கப்பலின் பெயர் ஓசன் லேடி ...   இரண்டாவது கப்பல் சண் சீ ...  இந்த இரண்டிலும் இரண்டாவது மட்டும் தான் உந்த ஊடகங்களில் வலம் வருபன... முதலாவது கப்பலை பற்றியோ வந்தவர்கள் பற்றியோ செய்திகள் ஏதும் இல்லை... 

ஏன் இந்த பாரபட்சம்..?? 

நாங்கள் பாதுகாப்பாக வந்தாச்சு  வசதிகளையும் பெருக்கியாச்சு...  ஆனால்  வேற யாரும் அப்படி வரக்கூடாது எனும் மனநிலை எங்கை கொண்டு போய் எங்களை விடும் எண்டதை பற்றி எனக்கு நன்கு புரிகிறது... 

சொல்கிறதுக்கு அவ்வளவுதான் இருக்கு... 

Edited by தயா

நிழலிக்கு அகதி என்றால் கொலிவூட் படத்தில் வருவது போல போட்டது போட்டபடி உடுத்த உடுப்போட ஓடிபரோணும் போல.

யாழிடப்பெயர்வில் நாய் பூனையோடுதான் முக்காவாசி சனம் வறணிக்குப் போனது.

கோசான், வரணிக்கு நாய் பூனையோடு போறதும், கப்பலில் பல்லாயிரம் மைல்கள் கடந்து போறதும் ஒன்றாக உங்களுக்குத் தெரிந்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. 

நாங்கள் பாதுகாப்பாக வந்தாச்சு  வசதிகளையும் பெருக்கியாச்சு...  ஆனால்  வேற யாரும் அப்படி வரக்கூடாது எனும் மனநிலை எங்கை கொண்டு போய் எங்களை விடும் எண்டதை பற்றி எனக்கு நன்கு புரிகிறது... 

சொல்கிறதுக்கு அவ்வளவுதான் இருக்கு...

அகதியாக வந்த நாம் என்னுமொருவரை அகதியாக வரக்கூடாது என்று சொல்லவும் முடியாது தவிர அப்படி நினைப்பதே அபத்தம். அவை எனக்கு நன்கு புரியும். நான் சொல்ல வரும் விடயம் அதுவல்ல. எனது வருகை என்னுமொரு அகதியின் வருகையை பாதிக்கவிலலை. நான் கொடுத்த வாக்குமூலங்கள் என்னுமொரு அகதியின் வருகையை பாதிககவில்லை. ஆனால் இவர்களின் வருகை அதை பாதித்துள்ளது. அதற்கு இவர்கள் வந்த முறையும் அவர்கள் கொடுத்த வாக்குமூலமும் கணிசமானளவு காரணமாக உள்ளது. அவற்றையே நான் சுட்டிக்காட்டுகின்றேன். இவ்வாறான பொருளாதார அகதிகளே போரால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான தஞ்சத்திற்கு இடைஞ்சலாக இருந்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் நாம் வந்துவிட்டோம் மற்றவர்கள் வர விரும்பவில்லை என்ற கருத்தும் அகதி என்ற ஒரு அடயாளத்தின் கீழ் செய்வதெல்லாம் சரி என்றும் நியாயம் கற்பித்துக்கொண்டிருக்க முடியாது. சில விசயங்கள் பிழை என்றால் அது பிழைதான். அவற்றைச் சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் உணரவில்லை.

Edited by சண்டமாருதன்

ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் எனும் உங்கட வியாக்கியானங்கள் அகதிகளுக்கு பொருந்தும் எண்டால்  உங்களின் கனடிய அரசு ஓரிருவரை  விசாரித்து விட்டு ஒட்டு மொத்தமானவர்களுக்கும் அகதி உரிமம் கொடுக்கலாம் இல்லை திருப்பி அனுப்பலாம்  எண்டு பரிந்துரைக்கிறீர்களோ... 

ஆனால் அப்படி நடக்காமல் உங்கட அரசு ஜெனீவா அகதிகள் சாசனம் 1997 ன் படியே தனித்தனியே விசாரித்து தீர்ப்பு வளங்கி இருக்கிறது...  வளங்கி கொண்டும் இருக்கிறது... 

500 பேர் வந்த படகில்  5 பேரை பேட்டி எடுத்து விட்டு அனைவரும் அப்படியே எண்றும் நம்பும் பாமரர்களை என்ன எண்டு சொல்வது... 

இலங்கையில் பிரசினை இல்லை அங்கு தமிழர்கள் சுபீட்சமாக வாழ்கிறார்கள் எண்று சொல்பவர்களுக்கு அகதிகள் தலையிடியாக இருப்பது கூட உண்மைதான்...  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா நோக்கிய படகுப்பயணம் குறித்து அண்மைக்காலங்களில்வரும் செய்திகள் அனைத்திலும் யாழ்கள உறவுகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர், வரவேற்கப்படவேண்டியதே.

ஆனால் சிலர் தமது கடந்தகால வாழ்க்கையை மறந்துவிட்டு கருத்திடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.

எதைத் திண்டால் பித்தம் இறங்கும் என்பதுபோல் எப்பிடி வெளிநாட்டுக்குப்போய் செற்ரில் ஆகிறது எனும் நினைப்புடனேயே புலத்துத் தெருக்களில் அலைந்தது.

காணியை வீட்டை அடமானம்வைத்து ஏஜன்சிக்காரன் ஏமாத்தாம, அவன் கொண்டுபோற றூட் அடிபடாமல் இருக்க ஊரிலுள்ள கல்லுவைத்த கோவில்கள் எல்லாத்துக்கும் நேத்திவைத்தோ, அன்றேல் மாணவர் விசாவுக்காக இல்லாத சுத்துமாத்துகள் எல்லாம் செய்து காணி உறுதியிலிருந்து ஏற்கனவே வெளிநாட்டில் உள்ளவர்களது கடிதங்கள் வரைக்கும் கையைக்காலைபிடித்து ஒருமாதிரி வந்துசேர்தது நிலையெடுத்து நிரந்தர வதிவிட உரிமை தொடர்ந்து பிரஜாவுரிமை எடுத்து அப்பாடா.....

இவற்றில் ஏதாகுதல் ஒன்றையாவது இங்க கனக்கக் கதைக்கிறவை செய்திருப்பினம்.

சரி, அவுஸ்ரேலிய அரசாங்கமே உங்கள் மேதாவித்தனத்தை மெச்சி வாப்பு வாப்பு எனக்கூபிட்டுது என்றே வைச்சுக்கொள்ளுங்கோ.

இனி நான் கதைக்கப்போவது வேற விடையம்,

நானும் மேற்கூறிய கில்லாடித்தனம், திருகுதாளம், காலில் விழுதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்று இரண்டைச்செய்தோ அன்றேல் எனது கெட்டிக்காரத் தனத்தை மெச்சி நான் தற்போது வாழும் நாடே கூபிட்டது(?) எண்டாவது வச்சுக்கொள்ளுங்கோ.

ஆனால் இப்ப நாங்களும் நிலையெடுத்திட்டம், அதுக்காக எங்களுக்குப் பின்னால வாறவைகளை வரக்கூடாது எனக்கூறுவதற்கு  நாங்கள் யார்? எங்களுக்கு என்ன தகுதி இருக்குது என கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

கடந்த அறுநூறு வருடங்களுக்கு முன்பு நாடோடிகளாக ஐரோப்பா முழுவதும் வந்த ரொமேனியர் அன்றேல் இந்தியர்கள் என அழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் தற்போது நல்ல வெள்ளை நிறத்துக்கு தோல் மாறினாலும் இன்னமும் சமூகத்தால் ஒதுக்கப்படும் இனமாகவே கருதப்படுகின்றனர் (இந்த விடையத்தில் நான் இருக்கும் நாட்டையிட்டுப் பெருமைப்படுகிறேன் ஏனெனில் கொஞ்சம் மிதப்பாக நினைத்தாலும், தம்பி அடக்கிவாசி உனக்கு முதல் வந்தவயளையே நாங்கள் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என அசரீரி எப்பவும் எனது காதில் கேட்டு அலைக்களிக்கும் அதனால் நான் ஈழத்தவன் என நினைப்பதைக் கட்டாயப்படுத்தும் ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்பதற்காகவே இந்தப்பெருமை)

அப்ப கடந்தகாலங்களில் அயர்லாந்து தேசத்தின் அரசியற் குற்றவாளிகளால் நிரப்பப்பட்ட வெள்ளையன் உங்களை குளிப்பாட்டி நடுவீட்டுக்குள்ள வைப்பான் என நம்புறியள் சிரிப்பாக இல்லை.

அதுக்குள்ள எங்களது பிரதமர் எங்களது பிரதமர் என சாஜிபாவாப் பக்தர்களது பெருமைகொள் பேச்சுப்போல் புளகாங்கிதம்வேற.

அதுசரி உங்கட பிரதமர் உங்கட அவுஸ்ரேலியா அதுக்குபிறகு யாழ் களம் உங்களுக்கு எதற்கு? அங்கினைக்க சிட்னி களம் கான்பரா களம் போன்றவை இருக்கும் அங்கபோய்க் குப்பை கொட்டவேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

அடை மழை, கொட்டும் ஷெல் மழை, வீதியெங்கும் வான் தாக்குதல் அபாயம். இத்தனைகும் நடுவில் நாய் பூனையோடு இடம்பெயரலாம் எண்டா, அவுஸ்ர்ரெலியா போகும் கடல் பயணத்திற்க்கு ஏன் நாயோடு போகக்கூடாது?

சகலதையும் இழந்து வெளியேறும் நிலையில் தான் நேசித்த ஏதாவதொன்றி அல்லது எவராவதொருவரின் நியாபகமாய்க் கூட நாயை எடுத்துச் சென்றிருக்கலாம்.

அன்பே சிவம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அந்த கமல் அவுஸ்ரேலியாவுக்கு போயிருந்தா அந்த நாயை விட்டுவிட்டா போயிருப்பார்?

சில சமயங்களில் செல்லப்பிராணிகள் சிலருக்கு குடும்பத்தைவிட நெருக்கமாய் இருக்கும்.

நாயோடு வாரவனெல்லாம் அகதியாயிருக்க முடியாது எனும் stereotype based சிந்தனையில் நீங்கள் அப்படியே அபொட்டை போலிருக்கிறீர்கள்.

ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் எனும் உங்கட வியாக்கியானங்கள் அகதிகளுக்கு பொருந்தும் எண்டால்  உங்களின் கனடிய அரசு ஓரிருவரை  விசாரித்து விட்டு ஒட்டு மொத்தமானவர்களுக்கும் அகதி உரிமம் கொடுக்கலாம் இல்லை திருப்பி அனுப்பலாம்  எண்டு பரிந்துரைக்கிறீர்களோ... 

ஆனால் அப்படி நடக்காமல் உங்கட அரசு ஜெனீவா அகதிகள் சாசனம் 1997 ன் படியே தனித்தனியே விசாரித்து தீர்ப்பு வளங்கி இருக்கிறது...  வளங்கி கொண்டும் இருக்கிறது... 

500 பேர் வந்த படகில்  5 பேரை பேட்டி எடுத்து விட்டு அனைவரும் அப்படியே எண்றும் நம்பும் பாமரர்களை என்ன எண்டு சொல்வது... 

இலங்கையில் பிரசினை இல்லை அங்கு தமிழர்கள் சுபீட்சமாக வாழ்கிறார்கள் எண்று சொல்பவர்களுக்கு அகதிகள் தலையிடியாக இருப்பது கூட உண்மைதான்...

உங்களுக்கு தனித்தனியே விசாரித்து ஜெனிவா சாசனம் படி இந்த 500 பேருக்கும் அங்கீகராம் வளங்கியதுதான் தெரிகின்றது. இந்த 500 பேரால் உலகம் பூராவும் உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தெரியாது. மேலும் இவர்கள் வருகையால் இலங்கையில் பிரச்சனை என்று பிரச்சாரம் செய்ய முடியும் என்று நீங்கள் நினைப்பது அதைவிட பெரிய பகிடி. அதையேதான் நான் முன்னர் எழுதியும் உள்ளேன். இவர்கள் வந்த விதமும் அளித்த பேட்டிகளும் தங்கள் போரால் பாதிக்கப்பட்ட அகதிகள் இல்லை பொருளாதரா வசதிதேடிவந்தவர்கள் என்பதை இவர்களே வெட்டவெளிச்சமாக்கினார்கள் என்று எழுதியுள்ளேன். 

யார் வேண்டுமானாலும் வரட்டும் வராமல் விடட்டும் அது அவரவர் பிரச்சனை. வா வராதே என்று சொல்வதற்கான உரிமை அகதியாய் வந்த எங்களுக்கு கிடையாது என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளேன்.  எனது கருத்து ஒன்றுதான் இவர்கள் வந்த விதமும் செயற்பாடும் பல ஆயிரம் உண்மையாகப் பதிக்கப்பட்ட அகதிகளின் தஞ்சக் கோரிக்கையை பாதித்துள்ளது. இது நியாயப்படுத்த முடியாத வெளிப்படையான உண்மை. அதையே எனது கருத்தில் சொல்லியுள்ளேன். மற்றபடி இவர்களை வைத்து இலங்கையில் பிரச்சனை என்ற அரசியல் பித்தலாட்டங்களில் எனது கருத்து நுழையவில்லை. அதை நீங்களே செய்யுங்கள்.

500 பேராலை வந்த பாதிப்பை விட ஊருக்கு லீவுக்கு போய் வந்தவர்களால,  உங்களை மாதிரி ஏற்கனவே விசா வாங்கிய அகதிகளாலைதான் பாதிப்பு அதிகம் அண்ணோய்... 

ஊருக்கு போய் வந்து ஊர் அந்த மாதிரி இருக்கு எண்டு பயணக்கட்டுரை வேறை எழுதி குடுப்பியள்... 

 500 பேரின் வழக்குகளோடை மற்றயவை எப்போதும் சேர்க்கப்படுவதோ,  இல்லை  அதை ஆதாரமாக்க படுவதோ எங்கும்  கிடையாது...  அகதி மனுக்கள் மீதான விசாரணையின் போது வெறும் ஊர் நிலைமைகள், அரசின் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்...  இது அடிப்படை சட்ட அறிவு கொண்ட எல்லாருக்கும் விளங்கும்.. 

நிம்மதியாக வாழ முடியாத ஊரிலை இந்து கிடைக்கிற வளிகளில் ஊரில் இருந்து கிழம்புறது  வளமைதான்... !!  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மாதிரி நாடுகள் இப்படி மனிதாபமானம் இல்லாமல் நடப்பது தவறு தான்.அவஸ் மட்டும் இல்லை இன்னும் பல நாடுகளும் அகதிகள் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.இதற்க்கான பிள்ளையார் சுழியை ஆக ஆரம்பத்தில் வந்த அகதிகளான நாங்கள் தான் போட்டோம். இப்ப வாற அகதிகள் உண்மையான அகதிகளா இல்லையா என்பது ஒரு புறமிருக்க அவர்கள் வருவது இலங்கை அல்லது இந்தியாவிலிருந்து.

ஆனால் ஆரம்ப கால இலங்கை தமிழ் அகதிகள்(நான் உட்பட)பெரும்பாலும் யோ்மன் வந்து சோ்ந்த போது வரவேற்று தஞ்சம் அழித்த அந்த நாட்டில் இருந்தோமா.பிரான்ஸ் ,நோர்வே ,டென்மாக் ,சுவிஸ், பிரித்தானியா
என்று மீண்டும் மீண்டும் அகதி ஆணோம்.யோ்மணியிலிருந்தே கப்பலில் கனடாவுக்கு போணோம்.கனாடாவுக்கு போற பலன் இருக்கா என்று யோ்மனி தமிழ் சாத்திரியிடம் சாத்திரம் கேட்டோம்.

இப்படி எல்லாம் ஓடுப்பட்டு திாயுறது உண்மையில் உயிர் காக்கவா.நான் அண்மையில் ஊரில் அவதானித்ததின் படி அங்குள்ளவர்களிடம் உங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமா அல்லது வெளிநாடு போகப்போகிறீகளா என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்.பாதிக்கு மேற்பட்டவர்கள் அல்லது முழுப்பேரும் வெளிநாடு தான் என்று சொல்லுவார்கள்.என்னைப் பொறுத்த வரைக்கும் இதற்க்கு தீர்வு இங்குள்ளவர்கள் அங்கு சுற்றுலா போகக் கூடாது.ஒரேயடியாக அங்கு போய் இருக்க வேணும்.போராட்ட காலங்களில் எப்படி நாங்கள் அங்கிருந்து போராடதது பிழை என்று நினநக்கிறமோ அது போலத்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான அனுமானங்கள் சுவைபிரியன். ஜேர்மனியில் அகதியாகப் பதிந்துவிட்டு பிறகு கனடாவுக்கு அகதியாக வந்தால் ஜேர்மனியில் உயிராபத்து உள்ளது என்கிற கருத்து உண்டாகிவிடுகிறது. :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

சுவை,

இலங்கை தமிழர் மட்டுமல்ல, சிங்களவர், பறங்கியர், பாகிஸ்தானியர், வங்காளிகள் என்று விளிம்பு நிலை மக்கள் எங்கு இருந்தாலும் நாட்டை விட்டு தங்கம் கொளிப்பதாக அவர்கள் கருதும் வெளிநாட்டுக்கு வரவே விரும்புவர்.

தமிழர்களை பொறுத்த மட்டில், உயிராபத்து இலாதவரும் நாட்டில் இரண்டாம் தர பிரசையாகத்தான் வாழ்கிறார்கள். கல்வி, வேலை வாய்பு எல்லாத்திலும் ஒதுக்கப் படுகிறார்கள். எனவே எப்படியாவது ஒரு சுபீட்சமான நாட்டுக்குப் போக ஆசைப்படுகிறார்கள்.

சிலருக்கு ஸ்டூடன் வீசா ஒரு பாதை (ஸ்டூடன் விசாவில் வந்து அசைலம் அடித்தவர் பலர்)

சிலர் வெளிநாட்டில் பொண்ணு எடுத்து வீசாவை சீதனமாக வாங்குகிறார்கள்

சிலர் highly skilled migrant என்று கள்ள சேர்டிபிக்கேட் காட்டி நுழைகிறார்கள்.

இவை எதுக்கும் வழியில்லாத விளிம்பு நிலை மக்கள் படகேறுகிறார்கள்.

இது எல்லா நாடுகளுக்கும் தெரியும். எல்லா நாடுகளும் ஆயிரகணக்கில் திருப்பி அனுப்பிகிறார்கள்.

ஆனால் நீதி விசாரனையின்றி அவுஸ்ரேலியா சிறீலங்கா நேவியுடன் சேர்ந்த்ஹனுப்பியது தான் பிழை.

ஆனால் நீதி விசாரனையின்றி அவுஸ்ரேலியா சிறீலங்கா நேவியுடன் சேர்ந்த்ஹனுப்பியது தான் பிழை.

இப்படி திருப்பியனுப்பபட்டவர்கள் இலங்கையரசால் கொல்லப்பட்டோ அல்லது காரணம் இன்றி ஜெயிலில் போடப்பட்டாலோ தான் அவுசில் பிழை வரும்....அவுஸ் இதையெல்லாம் இலங்கைக்கு அறிவுறுத்தியே இவர்களை ஒப்படைத்திருக்கும்...

இலங்கைக்கும் ஐ.நா மனிதஉரிமை கழகங்களில் மேற்கு நாடுகளிலிருந்து ஒருத்தரும் ஆதரிப்பார் இல்லை..ஆகவே அவுஸ் சொல்லுவதற்கெல்லாம் இலங்கையும் தலையாட்டும்...

அவுஸ், நியூசிலாந்து...ஏன் இங்கிலாந்து கூட இனி இலங்கைக்கு ஆதரவளிக்கலாம்.....

இலங்கைக்கு தேவை பலம் பொருந்திய நண்பர்கள்...இப்போது இது இலங்கைக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்..அவுஸ் போன்ற நாடுகளை வளைப்பது.....

அவுசும் இலங்கையும் குலாவுவதை பார்த்தால்....மலிவான விபசாரதனமே தெரிகிறது....என்ன செய்வது.....

ஆகவே இந்த "அகதி கப்பல்களை" இலங்கை ஒழுங்கு செய்திருந்தால்..ஒரே கல்லில் மாங்குலையையே விழுத்தியிருகிறது...சிங்களவர்கள் இவ்வளவு அறிவாளியா..அவ்வளவு நீண்டகால திட்டம் வகுக்க கூடியவர்களா :) ? அல்லது அவர்கள் செய்வது எல்லாம் அவர்களுக்கு ஆதரவாகவே முடிகிறதா...

(மேலே ஏதேனும் மலிவான வார்த்தைகள் பாவிக்கப்பட்டது என்று யாரும் உணர்ந்தால்...மன்னிக்கவும்)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான்,

1) இலங்கை உறுதிமொழி கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த 45 பேரை அது ஒண்டும் செய்யாமலும் விடக்கூடும். ஆனால் இங்கே கேள்வி அதுவல்ல. அவுஸ் கைச்சாத்திட்ட உடன்படிக்கை படி சுயாதீன விசாரணை இன்றி திருப்பியதையே பிழை என்கிறோம். சாசனத்தில் இருந்து வெளியேறிய பின் செய்தால் ஓகே.

2) அவுஸ் கடல் எல்லைக்குள் வராமல் நியூசிலாந்து போனோரை இவர்கள் எப்படி சர்வதேச கடலில் மறித்து இலங்கையிடம் கொடுக்கலாம்? இதுவும் சர்வதேச சட்ட மீறலே.

3) அவுஸ்சின் நியாயம் விளங்காமலில்லை. அமெரிக்காவுக்கு எப்படி குவாந்தனமோ பே யோ அப்படி அவுசுக்கு இந்த படகுகள்.

சர்வதேச சட்டத்தை அவுஸ் மீறுகிறது என்பது வெளிப்படை, ஆனால் அதை தட்டிக்கேட்க எந்த நாடும் விரும்பவில்லை. இஸ்ரேல் மீறாத சர்சதேச சட்டங்களா?

4) இலங்கை செய்வது gun boat diplomacy. நீ எனக்கு சார்பாய் நடக்கிறாயா அல்லது படகுகளை அனுப்பட்டுமா என்னும் மிரட்டு ராஜதந்திரம். எது நடந்தாலும் பரவாயில்லை அகதிகள் வராட்டில் போதும் எனும் அபொட்டின் அரசியல், அவுசை இலங்கையின் காலடியில் நெடுண்சான் கிடையாக விழ வைத்திருக்கிறது. இலங்கை புலிகளுக்கு மட்டுமில்லை, ராஜதந்திரத்தில் கங்காருகளுக்கும் அப்பனானர்வர்கள் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சொறி லங்கா க்கு 30 நாள் விசால போய் அங்க இருந்து இந்தியாக்கு போய் ஏறின Pakistan Afghanistan அகதிகள் தான் அந்த 153 பேரில் அதிகமாம்......ஹா ஹா கள்ளபடகு அகதிகளுக்கு குரல் கொடுக்க வல்லநீங்கள் எல்லாம் ஓடிவாங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களுக்கு இது ஆச்சரியமானதாய் இருக்கலாம் ஆனால் பாகிஸ்தானியரும் ஆப்கானியரும் மனிதர்களே. தமிழருக்கு ரத்தமும் அவர்களுக்கு தக்காளி சட்னியும் வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொறி லங்கா க்கு 30 நாள் விசால போய் அங்க இருந்து இந்தியாக்கு போய் ஏறின Pakistan Afghanistan அகதிகள் தான் அந்த 153 பேரில் அதிகமாம்......ஹா ஹா கள்ளபடகு அகதிகளுக்கு குரல் கொடுக்க வல்லநீங்கள் எல்லாம் ஓடிவாங்கப்பா

நான் வெளிநாட்டுக்கு ஓடிவரும்  போது

எந்த வெளிநாட்டுக்காறனும் எனக்கெதிராக குரல் கொடுத்ததாக இதுவரை தெரியவில்லை

இனியும் இல்லை :(

இந்த நாட்டில் பல கடினமான காலங்களைக்கடந்திருக்கின்றேன்

விசா இன்றி 

பல வருடங்கள் இருந்திருக்கின்றேன்

பிரெஞ்சுக்காரர் உட்பட

எவரும் என்னைத்திருப்பி  அனுப்பு என்று சொன்னதில்லை

இன்னும் சில  காலம் தருகின்றோம்

உன்னை நிரூபி  என்றே  சொல்வார்கள்

சொல்லியிருக்கிறார்கள்

அதனால் தான் இன்று நான் பிரெஞ்சு பிராசா உரிமையுடன் இருக்கின்றேன்

அதை  நான் மதிக்கின்றேன்

அதே நேரம் பிரெஞ்சுக்காறரிடம் நான் படித்த மனிதாபிமானத்தையும் என்றும்

அவர்கள் தந்ததற்க்காகவாவது கடைப்பிடிப்பேன்

விசுக்கு உங்களின் காலம் வேறு..அவுஸின் நிலை வேறு.....ஆனால் சுண்டல் சொன்னதும் சரியல்ல....ஒரு ஒரிஜினல் அவுசியும் கூட அப்படி சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு உங்களின் காலம் வேறு..அவுஸின் நிலை வேறு.....ஆனால் சுண்டல் சொன்னதும் சரியல்ல....ஒரு ஒரிஜினல் அவுசியும் கூட அப்படி சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்....

அண்மையில்  ஒரு பிரெஞ்சுக்காறருடன்  காரில் போய்க்கொண்டிருந்தேன்

ஒரு பகுதியில் வீதியோரம் ருமேனியர்கள் வசித்துவந்த கூடாரங்கள் எரிக்கப்பட்டு கருகிக்கிடந்தன

அதைச்சுட்டிக்காட்டி பிரெஞ்சுக்காரர்  இதைப்பார் என்றார்

நான் சொன்னேன்

இவர்களால் தொல்லை

இப்படி வீடுகளை  அமைப்பது குற்றம்

செய்தவர்கள் நல்லதைத்தானே  செய்திருக்கிறார்கள் என்று

அதைக்கேட்ட  அவருக்கு சற்றுகோபம் வந்துவிட்டது

அவர்கள் தமக்கான பாணைத்தேடித்தானே  வருகிறார்கள்

அது அவர்களது நாட்டில் கிடைத்தால்

ஏன் இப்படியான வாழ்க்கை  வாழணும்?

என்றார்

உண்மையில் வெட்கப்பட்டு கூனிக்குறுகி நின்றேன் என்னை  நினைத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.