Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரற்ற கணம் ஒரு கனவு - நிழலி

Featured Replies

எல்லா இடங்களிலிலும்

மனிதர்கள் மனிதர்களை

கொல்கின்றனர்

நகரங்கள், பள்ளிகள்,

கிராமங்கள் எல்லா இடங்களிலும்

மனிதர்கள்

மனிதர்களை கொல்கின்றனர்

 

எல்லா இடங்களிலும் போர்களை

நடத்துகின்றனர்

குழந்தைகளை கொல்கின்றனர்

சிறுவர்களை கொல்கின்றனர்

பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர்

குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர்

கதறும் அப்பாக்களை கொல்கின்றனர்

ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர்

 

அவர்கள் கூடிக் கூடிக்

கதைக்கின்றனர்

போர்களை நிறுத்துவதற்கு

கூடுகின்றனர்

பின் மீண்டும்

போர்களை எப்படி திறமையாக

நடத்துவது என்று கதைக்கின்றனர்

 

போரால் சிதையும் மனிதர்கள்

பற்றி கதைக்கின்றனர்

பின்

சிதையாது மிச்சமிருப்பவர்களை

கொல்வது எப்படி என்று

கதைக்கின்றனர்

 

ஒருவர் இறப்பதை கண்டு

அழுகின்றனர்

அழுதவர்களே மீண்டும்

இன்னொருவரைக் கொல்கின்றனர்

 

ஒருவர் கொல்லப்பட்டதை

ரசிக்கின்றனர்

கொன்றவர்களின் தீர்மானங்களுக்கு

வெடி கொழுத்தி மகிழ்கின்றனர்

மேசைகளில் தட்டி ஆராவாரிக்கின்றனர்

பின் அவர்களை

இன்னொருவர் கொல்லும் போது

முதலில் கொன்றவரின் மனிதர்கள்

எழுந்து நின்று ஆராவரிக்கின்றனர்

மதுக் கிண்ணங்களினை உரசி

தாளமிடுகின்றனர்

 

கொலை செய்வது மனிதர்களின் கலை

கொலை செய்வது மனிதர்களின் பண்பாடு

கொலை செய்வது மனிதர்களின் மரபு

கொலை செய்வதே மனிதர்களின்  முதல் தொழில்

 

இந்தக் கணம்

இந்த வினாடி

எங்காவது ஒரு மூலையில்

புதிய போர்களைப் பற்றி

திட்டம் தீட்டிக்கொண்டு

இருக்கின்றனர்

இன்னொரு மூலையில்

புதிய கொலைக் கருவியின்

உச்ச பலன் பற்றி

ஆராச்சி செய்கின்றனர்

நாகரீக வெளி ஒன்றில்

மனிதர்களை சித்திரவதை செய்வது

எப்படி என பாடம் நடத்திக் கொண்டு

இருக்கின்றனர்

 

எவ்வளவு பூச்சுகள் பூசினும்

தேன் வடியும் நாக்கு கொண்டு

அமைதி பேசினும்

மனிதர்கள் போர்களையே விரும்புகின்றனர்

 

மனிதர்கள்

போர் செய்திகள் கொடுக்கும் போதையை ரசிக்கின்றனர்

சாவு தாங்கி வரும் படங்களை காண அலைகின்றனர்

வல்லுறவுக்குட்படும் பெண்களின் ஒளி

நாடாக்களை ரகசியமாக காவி திரிகின்றனர்

வாயின் கடையோரத்தில் மெல்லிய

இரத்தம் கசிய போர் தின்ற

நகரங்களின் கதையை வாசிக்கின்றனர்

 

போர் ஒரு போதை

போர் ஒரு பேராசை

போர் ஒரு முடிவிலி

போரற்ற பொழுது ஒரு கனவு

 

எல்லா நாட்களிலும்

எல்லாக் கணங்களிலும்

எங்காவது ஒரு இடத்தில்

போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

 

மனிதர்கள் மனிதர்களை

அழித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்

மனிதர்கள் மனிதர்களை

கொல்கின்றனர்

நகரங்கள், பள்ளிகள்,

கிராமங்கள் எல்லா இடங்களிலும்

மனிதர்கள்

மனிதர்களை கொல்கின்றனர்

போரற்ற இடைவெளியில் இன்னொரு போரை

ஆரம்பிக்கின்றனர்

 

-நிழலி

29 July 2014

  • கருத்துக்கள உறவுகள்

போர் மட்டுமன்றி மனிதர் சக மனிதரின் உணர்வினை அழிக்கின்றனர், ஆசைகளை  அழிக்கின்றனர், 

தமக்குப் பிடிக்காதவற்றை எல்லாம் எதோ ஒருவழியில் யாரோ அழித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இதுவும் ஒருவகையில் அமைதிப்[ போர்தான் .

 

கவிதை நன்று நிழலி. பச்சை இல்லைப் போட.

 

                          

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை ' ஏக்கத்தைச்' சிந்திச் செல்லுகின்றது, நிழலி...!

 

கலிங்கத்துப் போர்க்களத்தில், குற்றுயிரும்... குலையுயிருமாகக் கிடந்தவர்களையும்... அவர்களது சொந்தங்கள் அவர்களைச் சுற்றி நின்று அழுவதையும், அரற்றுவதையும் கண்ட அசோகச் சர்க்கரவர்த்தி.... அன்றிலிருந்தே போர் செய்வதை நிறுத்தினான்....!

 

புத்த மதமே 'சிறந்த வழி' என்று.. அதனையும் பின்பற்றினான்!

 

இன்று அந்தப் புத்தனின் பெயராலேயே ' முள்ளி வாய்க்கால்' நிகழ்த்தப்பட்டுள்ளது... அது மட்டுமன்றி 'பர்மா' விலும் பொங்கி எழுகின்றது....!

 

கிறிஸ்துவத்தின் பெயரால், உலகில் நடந்த அழிவுகளுக்குக் கணக்கே கிடையாது.... சிலுவை யுத்தம் மட்டுமே பல்லாயிரம் உயிர்களைக் குடித்தது..!

 

இஸ்லாம் மதத்தால்... நடந்த அழிவுகள் பற்றி நான் கூறித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை..!

 

மனிதனுக்கு அடிபடுவதற்கும் 'போர்' புரிவதற்கும் ஏதோ ஒரு காரணம் எப்போதுமே தேவைப்படுகின்றது... எதுவும் இல்லாவிட்டால். ஏதோ ஒன்றை அவன் தேடிப்பிடிக்கிறான்!

 

வெள்ளை, கறுப்பு என்று நிறங்களை வைத்து அடிபடுபவன்.... நாள் கறுப்பெல்லாம் கொல்லப்பட்டு விட்டாலும்... தங்களுக்குள் யூதன், கிறிஸ்தவன், முஸ்லிம் என்று இன்னுமொரு காரணத்தைக் கண்டுபிடிக்கவே போகின்றான்!

 

எனவே போர் என்பது....எப்போதுமே முடிவுக்க வராது....வருவதற்கும்  அவனது 'அகங்காரம்' அனுமதிக்காது...!

 

சிப்பிக்குள் சிந்துகின்ற..,

சிறு துணிக்கைகளை,

சிப்பிகள் வெளியே துப்புவதில்லை!

 

மௌனமாக.....,

அவற்றை அடைகாக்கின்றன..!

 

நாளைய முத்துக்களாக..,

அவை அவதாரமெடுக்கவும் கூடும்!

 

 

அதே போலத்தான், உங்களது ஆதங்கக் கவிதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மன ஆதங்கத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள் நிழலி.

என்னிடம் என் 10 வயது மகன் கேட்டான் (என் மகன் பெரிதாக தமிழ் கதைக்க மாட்டான் (அது என்னுடைய இயலாமை))

 " You know what appaa ...in school they are teaching us to be kind, caring, respectful to each other, not to fight, not to bully.. if so how come grown up people are going to wars fighting and killing each other every day !!!

 

அப்பா .. பள்ளிக்கூடத்தில் அன்பு, கருணை, மரியாதை பற்றி தினமும் போதிக்கிறார்கள், சண்டை பிடிக்கக் கூடாது, பிரச்சினைகளை பேசித்தீர்க வேணும், ரௌடித்தனம் கூடாது இப்படி எல்லாம் சிறுவர்கள் எங்களுக்கு சொல்கிறார்களே ..அது என்ன வளர்ந்த பெரியவர்கள் மட்டும் தினமும் யுத்தம், சண்டை, என்று அடித்துக்கொண்டு சாகிறார்களே என்றான்...

என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை ... தடுமாறிப்போனேன்.

 

போர் ஒரு போதை

போர் ஒரு பேராசை

போர் ஒரு முடிவிலி

போரற்ற பொழுது ஒரு கனவு

 

நிதர்சனமான வரிகள்...

 

  • கருத்துக்கள உறவுகள்

-------

அவர்கள் கூடிக் கூடிக்

கதைக்கின்றனர்

போர்களை நிறுத்துவதற்கு

கூடுகின்றனர்

பின் மீண்டும்

போர்களை எப்படி திறமையாக

நடத்துவது என்று கதைக்கின்றனர்

 

போரால் சிதையும் மனிதர்கள்

பற்றி கதைக்கின்றனர்

பின்

சிதையாது மிச்சமிருப்பவர்களை

கொல்வது எப்படி என்று

கதைக்கின்றனர்

------

 

அத்தனையும்.... உண்மையான வரிகள்.

ஐ.நா. உட்பட... அத்தனை நாடுகளும் வேடதாரிகள்.

இந்த உலகம், இவர்களின் போரால்... அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

முப்பதுவருடமாக போரை நடாத்தியவர்களை,  நடத்தியவர்களை நியாயபடித்தியவர்களில் சிலர் இப்ப ஞானஸ்நானம் பெறுவதே பெரிய விடயம் .


போரை ரசித்தவர்கள் என்ற வரியும் அதில் அடங்கும் .

நாங்கள் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இரண்டாயிரத்து ஒன்பது வரை திரும்ப திரும்ப சொன்ன விடயங்கள் இவை .

போரில் வெல்ல போகின்றோம் என்ற மமதையில் அழிவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தோல்வியின் பின் அழிவின் உக்கிரத்தில் உயிர் இழப்பின் மகோத்தவம் பேசுகின்றார்கள் .


ஒரு சின்ன விடயத்தை விளங்க இவ்வளவு உயிர் இழப்பு வேண்டியிருக்கு . :(

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதுவருடமாக போரை நடாத்தியவர்களை,  நடத்தியவர்களை நியாயபடித்தியவர்களில் சிலர் இப்ப ஞானஸ்நானம் பெறுவதே பெரிய விடயம் .

போரை ரசித்தவர்கள் என்ற வரியும் அதில் அடங்கும் .

 

அர்ஜூன்... நாம் போரை நடத்தவில்லை. எம் மீது போர்.... சிங்களத்தால் வலிந்து திணிக்கப் பட்டது.

எமது ஆரம்ப கால நடவடிக்கைகள் 1958´ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்றவை என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும்.... அதனை லாவகமாக மறைத்து, புலி வாந்தி எடுப்பதே உங்கள் குறிக்கோள் என்பது,  வெளிப்படை. :)

 

எதிரி... எந்த ஆயுதத்தை தெரிவு செய்கின்றானோ, அதனையே....  நாமும், கையில்  எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

-மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போர், மனித நாகரிகத்துடன் வளர்ந்த ஒன்று. போரற்ற கணம் எப்போதும் கனவாகவே மட்டும் இருக்கும். போர், ஆயுதங்கள் தொழில்நுட்பம் சார்ந்து ஒரு மிகப்பெரும் வியாபாரமே இருக்கிறது. நாடுகள் கூட கல்வி சுகாதாரம் என்ற ஊருப்பட்ட பிரச்சனைகள் இருக்க பாதுகாப்புத் துறைக்கே அதிக நிதியை தமது வரவு  செலவு திட்டத்திலே ஒதுக்குகின்றன. இருக்கும் ஆயுதங்களை நவீனப்படுத்தவும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கும் வாரி வழங்குகின்றன. இணையத்திலிருந்து பெட்ரோல் வரை ஆயுத இராணுவ ஆராய்ச்சியின் பலனாகக் கண்டுபிடிக்கப்பட்டவை ஏராளம். புதிய கண்டுபிடிப்புகளும் முதலிலே இராணுவத் தேவைக்குப் முடியுமா என்றுதான் பார்க்கிறார்கள். பிழையானவர்களின் கைகளுக்கு இவை போய்விடாமல் தடுப்பதற்கும் அதிகம் செலவழிக்கிறார்கள். உதாரணமாக இராக் தீவிரவாதிகளிடம் ஒரு BUK போய் விட்டால் ஆசிய - ஐரோப்பிய விமானப்பயணங்களுக்கு குட் பை.

அருமையான சிந்தனையை தூண்டும் கவிதை.

இது இயற்கையின் விளையாட்டு. ஒவ்வொரு மிருகமும் தனது எல்லையை காக்கும். இன தொகை கூடும்போது எல்லையை விரிவாக்க முற்படும்.

தேனீக்களும் விதிவிலக்கல்ல. தமது எல்லையை பாதுகாக்கும் ஆனால் உணவு தட்டுபாடு என்றால் புலனாய்வு தேனீக்கள் இராணிக்கு தம்மிலும் பலவீனமான கூடுகளை காட்டி கொடுக்கும். பின் குழுவாக சென்று பலவீனமான கூட்டை அடித்து தேனை சூறையாடும். தப்பிய தேனீக்கள் வேறு தேன் நிறைந்த கூடுகளில் அகதியாக குடியேறும்.

பிரச்சினை என்னவென்றால் மனிதர் எம்மை மிருகங்களாக பார்ப்பதில்லை. போலி பொலிடிகல் கரக்ட்னெஸ் உலகத்தில் ஒழிந்திருக்கிறோம்.

இப்பவே கண்ணை கட்டினால் வர போகும் அழிவை எப்படி தாங்க போகிறமோ தெரியாது.

நீங்கள் கட்டாயம் Surviving Progress என்ற விவரண படத்தை பார்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

வந்து வாசித்து கருத்திட்ட சுமே, புங்கையூரன், சசிவர்ணம், அர்ஜுன், தமிழ் சிறி, தும்பளையான், விவசாயி விக் மற்றும் விருப்புகளை இட்ட அனைவருக்கும் என் நன்றி.

நாங்கள் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இரண்டாயிரத்து ஒன்பது வரை திரும்ப திரும்ப சொன்ன விடயங்கள் இவை .

போரில் வெல்ல போகின்றோம் என்ற மமதையில் அழிவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தோல்வியின் பின் அழிவின் உக்கிரத்தில் உயிர் இழப்பின் மகோத்தவம் பேசுகின்றார்கள் .

ஒரு சின்ன விடயத்தை விளங்க இவ்வளவு உயிர் இழப்பு வேண்டியிருக்கு . :(

வன்முறையே வடிவமாகவும் அடக்குமுறையே ஆட்சியாகவும் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கெதிராக நிராயுதபாணியாகத் தான் போராடுவோம் என்பது தற்கொலைக்கு சமமானது...

நீதிமன்றில் நெல்சன் மண்டேலா

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இரண்டாயிரத்து ஒன்பது வரை திரும்ப திரும்ப சொன்ன விடயங்கள் இவை .

போரில் வெல்ல போகின்றோம் என்ற மமதையில் அழிவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தோல்வியின் பின் அழிவின் உக்கிரத்தில் உயிர் இழப்பின் மகோத்தவம் பேசுகின்றார்கள் .

ஒரு சின்ன விடயத்தை விளங்க இவ்வளவு உயிர் இழப்பு வேண்டியிருக்கு . :(

 

உலகில் உயிர் தோன்றிய காலம் முதல் யுத்தம் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. மனித இனம் எத்தனையோ அழிவுகளை சந்தித்த பின்னரும் கூட இன்றும் தொடர்ந்து போரை நடத்திக்கொண்டு தான் இருக்கின்றது. போரின் பிரதிபலன் அழிவு மட்டுமே. ஆனால் ஒரு மனிதன் தான் தாய் நாட்டையும் , தான் இனத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் காக்கும் பொறுத்து ஒரு யுத்தத்தை நடத்துவது அது அவனுடைய கடமையும் தர்மமும் கூட ஆகின்றது. நாம் வாழும் இந்த உலகத்தில் அதர்மம் மற்றும் அநியாயம் நிகழும் போதெல்லாம் அதை எதிர்த்து நிக்கவேண்டிய தேவையும் இருக்கின்றது. நடக்கும் அநியாயங்களை வெறும் வீணராய் பார்த்து ஒதுங்கிஇருப்பதும் மனித இனத்துக்கு சாத்தியம் இல்லாத ஒன்று.

கொலை செய்வது மனிதர்களின் கலை

கொலை செய்வது மனிதர்களின் பண்பாடு

கொலை செய்வது மனிதர்களின் மரபு

கொலை செய்வதே மனிதர்களின்  முதல் தொழில்

 

எத்துனை இயல்பான வரிகள். ..மாந்தர்களின் பண்பாட்டுக்கு முந்தையகாலம் தொட்டு நாகரீகம் கண்டுவிட்டதாக பிதற்றிக் கொள்ளும் இன்றை வரை இந்த இயல்பு மட்டும் மாறவில்லை. என்ன ஒரே ஒரு கவலை கவிதை வட்டத்துக்கு வெளியே பேசிக்கொண்டிருக்கிறது நாங்கள் எங்கள் வட்டத்துக்குள் அதனை உள்ளடக்கி கொள்கிறோம் எங்கள் வசதிக்காக.... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.