Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்: நிழலி

Featured Replies

கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்
------------------------------------------------------------------

அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்

 

 

இறக்கும் போது அக் குழந்தைகள்
எதை கனவு கொண்டு இருந்திருக்கும்..

வெடிகுண்டு சத்தம் கேட்காத
ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு
தாயின் மடியில் தலை வைத்தும்
அப்பாவின் மடியில் கால் நீட்டியும்
படுப்பதாய் கனவு கொண்டிருக்கும்

 

ஒரு சின்ன பொம்மையுடன்
கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும்
தங்கள் வளர்ப்பு நாயின்
குட்டிகள் மழையில் நனைந்துடுமோ
என்று கவலைப்பட்டுக் கொண்டு
இருந்ந்திருக்கும்

 

தெருவில் தொலை தூரத்தில்
வரும் ஐஸ் கிறீம் காரனின்
பாம் பாம் எனும் ஹோர்னைக் கேட்டு
நாவூற காத்திருந்து கொண்டு இருந்திருக்கும்

 

ஆனால் எல்லா போர் நகரங்களிலும்
அழித்தொழிக்கப்படும் குழந்தைகளின்
கனவுகள் போல
அவர்களின் கனவுகளும்
அழிந்து போயிருக்கும்

 

எங்கள் ஊர்களிலும் ஊர்ந்த
டாங்கிகளின் கீழும்
வீழ்ந்த ஷெல்களின் கீழும்
விமானக் குண்டுகளின் ஆழத்திலும்
ஆயிரமாயிரம்
எம் குழந்தைகளின்
கனவுகள் புதைக்கப்பட்டன

 

கொல்லப்படும் தறுவாயில்
ஒரு குழந்தையின்
ஓலம் எப்படிப்ப்ட்டது
தெரியுமா
அதன் கண்கள் எப்படி
சொருகிப் போகும் என
அறிவீர்களா
அது சாகும் போது
அருகிருக்கும் தாயின்
கதறல் எத்தகையது
எனக் கேட்டிருக்கின்றீர்களா

 

 

போரில் கொல்லப்படும் எல்லாக்
குழந்தைகளையும் போல
அவர்கள்
கொல்லப்படுகின்றனர்

கொல்லப்பட்ட எல்லாக் குழந்தைகளின்
கனவுகள் போலவே அவர்கள்
கனவும் சிதைக்கப்படுகின்றன

கொல்லப்படும் உயிர்களைப் போன்றே
கண்களின் ஓரத்தில் துளி கண்னீரை
சிந்தி சாகின்றனர்

 

அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்
சிதைந்த குழந்தைகளின் உடல்கள்
மீது கொடிகளை பறக்க விடுகின்றனர்.

 

நிழலி

31/July/2014

 

 

செய்தி: காசாவில் இஸ்ரேலால் பல நூறு சிறுவர் சிறிமியர் கொல்லப்படுகின்றன்ர்

 

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்படும் தறுவாயில்

ஒரு குழந்தையின்

ஓலம் எப்படிப்ப்ட்டது

தெரியுமா

அதன் கண்கள் எப்படி

சொருகிப் போகும் என

அறிவீர்களா

அது சாகும் போது

அருகிருக்கும் தாயின்

கதறல் எத்தகையது

எனக் கேட்டிருக்கின்றீர்களா

 

 

இதயங்களை 'அடகு' வைத்துவிட்டவர்கள் தானே, இப்படியான கொலைகளைப் புரிபவர்கள்? :o

  • தொடங்கியவர்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்காகவும்

இவர்களுக்காகவும்

நான் மன்றாடுகின்றேன்

துதிக்கின்றேன்

அஞ்சலி  செய்கின்றேன்

 

ஆனால் ஒன்றை  மட்டும் மறக்கவில்லை

நான் துடித்தபோது

நான் அழுதபோது

நான் அழிக்கப்பட்டபோது

இவர்களும் வரவில்லை என்பதுடன்

அழித்தவனை  ஆதரித்தார்கள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான வரிகள் நிழலி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நாம் அழுதபோது...
பலஸ்தீனம் அழவேயில்லை.... :huh:
  • கருத்துக்கள உறவுகள்

மனதை கனக்க வைக்கும் கவிதை, எத்தனை குழந்தைகளை முள்ளிவாய்க்காலில் இழந்தோம். உலகு தன்முகத்தை இறுக மூடிகொண்டது அழிவு முடியும் வரை. இதிலும் அப்படியே செய்வார்கள், எல்லாம் வேஷதாரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தது முஸ்லீம் குழந்தைகள் என்ற படியால்...
கவிதையை பாராட்ட மனம் வரவில்லை.

காஸாவில் மட்டுமா??? எம்மண்ணிலும் தானே, வலியை அனுபவித்தவர்களுக்கு தான் ரணம் புரியும். சில நேரங்களில் எங்கே என்ன நடந்தாலும் மனசில் வலி தோன்றமாட்டேங்குது.மனசு சந்தோசப் படுது. சில நேரம் மனசில் தோன்றும், நான் என்ன இவ்வளவு கொடூரமா மாறிட்டனே என்று. யோசித்துப் பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு வேதனைப் பட்டோம், எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்கள். அதனால் எல்லோரும் அனுபவிக்கட்டும்  என்று ஒரு குரூர மனம் எனக்கும் வந்திட்டுது என்று தோன்றும். அந்த நினைப்பில் தப்பு இருப்பதாக மனம் ஒப்பமாட்டேங்குது. யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெற வேணும் என்று அப்பப்போ தோன்றும். இது தப்பு என்று மனச்சாட்சி சொன்னாலும் அப்படி எல்லோருக்கும் நடக்க வேணும் என்று அடி மனசில் எழும் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் எல்லோரும் சாதாரண மக்கள் தானே. கடவுள் இல்லையே பரந்த மனத்துடன் இருக்க.... :(  

 

எனது கருத்து எப்படி என்றாலும், நிழலியின் கவிதை அருமை, 

 

"ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு
தாயின் மடியில் தலை வைத்தும்
அப்பாவின் மடியில் கால் நீட்டியும்
படுப்பதாய் கனவு கொண்டிருக்கும்"

 

மனதைத் தொட்டவரிகள் இவை...

 

"கொல்லப்படும் தறுவாயில்

ஒரு குழந்தையின்
ஓலம் எப்படிப்ப்ட்டது
தெரியுமா
அதன் கண்கள் எப்படி
சொருகிப் போகும் என
அறிவீர்களா
அது சாகும் போது
அருகிருக்கும் தாயின்
கதறல் எத்தகையது
எனக் கேட்டிருக்கின்றீர்களா"

 

மனசை அறுக்கும் வரிகள் இவை...

 

 

 

 

Edited by nivethitha

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் 

 

முஸ்லிம் நாடுகளே வேடிக்கை பார்க்கும் போது நாம்???

 

 

நிழலி உங்களால்முடிந்தால் காஷாவில் இறந்த குழந்தைகளின் படங்களை  அஸ்வர் எம்பியின் மெயிலுக்கு   அனுப்பிடுங்கோ .அப்ப என்ன சொல்லுவ்வார் தெரியுமோ அந்த கிழடு இதெல்லாம் போலியோ அட்டக்லதான் செத்த குழந்தை என்பான் <_< 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நிறைய உலக செய்திகளை பார்கின்றிர்கள் போல இருக்கு.
அதன் வாயிலாக வெளிப்படும் அனுதாபம், ஆற்றாமை, மன உளைச்சலின் விளைவே இந்த அழகிய கவிதை வெளிப்பாடுகள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

 

என்ன தான் நாங்கள் ஆயிரம் ஆய்ரமாய் எம் சொந்தங்களை இழந்து இருந்தாலும் ... குறிப்பாக குழந்தைகள்,  சிறுவர்கள், பெண்கள் போன்றவர்களுக்கு இதே அழிவு நிகழ்காலத்தில் நடத்தப்படுவதை ஞாயப்படுத்த முடியாது. போரில் மரணமடைபவர்கள் அனேகர் வெறும் அப்பாவிகளே...
மனிதர் மரிக்கலாம் ...மனிதம் மரிக்கக்கூடாது...

More evidence, about which I hope to write at length, is piling up that Europe has acquiesced to Washington’s drive to war with Russia, {a war that is likely to be the final war for humanity. }

By Russia’s low key and unthreatening response to Washington’s aggression, thereby giving the West the mistaken signal that Russia is weak and fearful, the Russian government has encouraged Washington’s drive to war.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143910#entry1031147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.