Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் இலங்கை அரசு என்பது government எனும் அர்தத்தில் சொன்னது. State எனும் அர்த்தத்தில் அல்ல. அரசாங்கம் என்று சொல்லியிருந்தால். பொருத்தமாயிருந்த்ஹிருக்க்கும்.

தற்போதய யாப்பினை மாற்றி, இனவாதமற்ற அல்லது இனவாத தாக்கம் குறைந்த ஒரு புதிய சமஸ்டி அலகை நாம் எமெக்கென உருவாக்க முயற்சிக்கலாம். கிட்டத்தட்ட நீலனும் பீரிசும் 1995இல் சமர்ப்பித்த முதல் தீர்வுபொதிபோல.

தமிழரசு கட்சியை செல்வநாயகம் 1949 இல் ஆரம்பித்ததே இப்படியான சமஸ்டி கோரிக்கைக்காக. அது அன்றும் சாத்தியமல்ல. 1995 இல் மட்டுமல்ல இன்றும் அது சாத்தியமில்லை. பிரீஸ் இன்றும் அமைச்சர். புலிகள் இன்று இல்லை. சமஸ்டி ஆட்சியை நடைமுறை படுத்த எந்த தடையும் அரசுக்கு இல்லை. ஏன் நடைமுறைக்கு வரவில்லை?

நீங்கள் இதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவீர்கள்?

மக்களின் அரசியல் உரிமையை மறுதலித்து நடக்க முடியாதததை 65 வருடங்களுக்கு பிறகும் பிடித்துக்கொண்டிருக்கும் நீங்களா அல்லது அவர்களா நட்டு களண்டவர்கள்?

Edited by Jude

சிங்களவர்கள் எப்பவோ சமஷ்டியை வழங்கியிருப்பார்கள்.. ஆனால் தனிநாட்டுக் கொரிக்கை வைப்பவர்களைக் கண்டு பயப்படுகிறார்கள். அதுதான் தரவில்லை..  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் என்பவரை.... கொஞ்சம் அரசியல் தெரிந்தவர் என்று, நினைத்திருந்தேன். :) 
ஆனால்... இப்படி, ஞான சூனியமாக இருப்பார் என்று....நினைக்க அதிர்ச்சியாக உள்ளது. :o

வணக்கம் நாரதர்

தமிழ்  மக்களுக்கு ஏதாவது செய்யணும் எனத்துடிக்கும் ஒரு உறவு தாங்கள்

அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி  எழுதலாம் என  நினைக்கின்றேன்

நான் இதுவரை  இங்கு

எவரையும் துரோகிகள் என்றோ

தமிழினவிரோதிகள் என்றோ

எட்டப்பர்கள் என்றோ  எழுதியதில்லை

காரணம் எனது அனுபவம்

எனது பொதுச்சேவையின்   காலம்....

இது ஒரு முகமறியாக்களம்

இங்கு எழுதப்படும் கருத்துக்களை  வைத்தே

ஒருவரது கொள்கையை   அல்லது அவரது நோக்கத்தை அறிய  முடியும்

அந்தவகையில் ஒருவர்
தொடர்ந்து 
தமிழர் அமைப்புக்கள்
தமிழரது இயக்கங்கள்
போராளிகள்
மாவீரர்கள்
புலம் பெயர் அமைப்புக்கள்
என்பனவற்றுக்கு எதிராக
அவற்றை ஒன்றுடன் ஒன்று முரண்பட வைக்கும்படியாக
அல்லது  நேரத்துக்கு ஏற்றது போல் 
ஒன்றை  உயர்த்தி
ஒன்றைத்தாழ்த்தி...
 
என்றுமே தமிழருக்கான தீர்வு பற்றி  எழுதாது
சிங்களத்தினது  அராயகங்களை கேள்வி கேட்காது

சிங்களத்தின் இந்த நிலைக்கு தமிழர்  தான் காரணம்  என்பது போன்று தொடர்ந்து எழுதுவார்களாயின்

அவர்களைப்பற்றி  எம் மனதில் என்ன  விம்பம் ஏற்படும்........???

சிலரது எழுத்துக்களை

உதாசீனங்களை

முட்டையில் மயிர் பிடுங்குதல்களை  பார்த்தாலே புரியும்

அவர்களது வாழ்வில் 

அவர்கள் எந்தவித பொதுக்காரியங்களிலும் உழைத்திருக்க வாய்ப்பில்லை  என்று.

எனக்கு இங்கு சிலர் மீது இவ்வாறானதொரு கருத்து உள்ளது.

மற்ற  யாழ் உறவுகளுக்கு வேறு கருத்து இருக்கலாம்......

இங்கு தமிழச்சி  பற்றி  எழுதணும்

அவர் இங்கு சில  கருத்துக்களுக்கு விருப்பு வாக்கு போட்டுள்ளதால்....

தாயகப்பற்றுள்ள

ஏதாவது செய்தாகவேண்டும் எம்மவருக்கு என்ற தூரநோக்குள்ள 

துடிப்புள்ள

இன்றைய  தலைமுறைப்பெண் ...

எம்மவரின் தூக்கம் கண்டு கொதித்துப்போயுள்ளார்

அவரது புரிதலை  நானும் விளங்கிக்கொள்கின்றேன்...

விசுகு,

உங்கள் புரிதலுக்கு நன்றி.  நானும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் உள்நுழைந்து ஏதாவது செய்யலாம் எனப் பலமுறை முயன்றேன்.   பிரதமருடன் தனியாகக்கூட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.  நான் மட்டுமின்றி, என் போன்ற பலரும் அவருடன் பேசினார்கள்.  அனைத்தையும்அவர் விழலுக்கிறைத்த நீராக்கி விட்டார்.  (மக்களால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தேசப்பற்றோடு உழைக்கக்கூடியவர்களை உதாசீனம் செய்து விட்டார்கள்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் எவ்வாறானவர்கள் என்பது மட்டுமின்றி அவர்களது நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும்.  அதனால்தான் கோசனின் கருத்திற்கு லைக் போட்டேன்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டிகள் கட்டிய மடம்.   தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள இவ்வாறான சில அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.  அரசியலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் வெகு தூரம்.  இது அதன் பிரதமருக்கும் பொருந்தும் என்பது நான் கண்கூடாகப் பார்த்த விடயம்.  

ஆனால், எனது பயணம் தொடர்கிறது.  இதுவரை நான் தேடிக் கொண்டிருந்த துணை எனக்குக் கிடைத்து விட்டது.  அவரின் துணையுடன் எனது பயணம் மேலும் தொடரும்.  சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும் என்பதற்கேற்ப சில செயற்பாடுகள் பூர்த்தியாகியபின் பகிரங்கப்படுத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

செல்வாவின் சமஸ்டிக் கனவு எப்போதோ நிறைவேறி இருக்கும், 1995 காலப்பகுதியில் புலிகள் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்திருந்த்ஹால்.

சிங்களர்வர்களை அனுசரித்து, அவர்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை ஊக்குவித்து ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை தெற்க்கில் ஏற்படுத்துவதை தவிர எமக்கு வேறுவழியில்லை.

நான் சொல்வது நடக்க கடினமானது.

தனிநாடு என்பது நடக்கவே முடியாதது.

ஒப்பீட்டளவில் அவர்களே நட்டுக் கழண்டவர்கள்.

கோசான் இந்த சிங்கள முற்போக்கு சக்திகளை ஊக்குவித்தல் என்பதை கிட்ட தட்ட 30 வருடம் அரசியல் செய்த அகிம்ஷாவாதிகளான தமிழரசு கட்சியினரால் செய்ய முடியாத போனதேன்?  அவர்ககளில் மிக மிக அதிகம் படித்தவர்கள் இருந்தார்களே?  அவர்களும் நட்டு கழண்டவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

உங்கள் புரிதலுக்கு நன்றி.  நானும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் உள்நுழைந்து ஏதாவது செய்யலாம் எனப் பலமுறை முயன்றேன்.   பிரதமருடன் தனியாகக்கூட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.  நான் மட்டுமின்றி, என் போன்ற பலரும் அவருடன் பேசினார்கள்.  அனைத்தையும்அவர் விழலுக்கிறைத்த நீராக்கி விட்டார்.  (மக்களால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தேசப்பற்றோடு உழைக்கக்கூடியவர்களை உதாசீனம் செய்து விட்டார்கள்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் எவ்வாறானவர்கள் என்பது மட்டுமின்றி அவர்களது நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும்.  அதனால்தான் கோசனின் கருத்திற்கு லைக் போட்டேன்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டிகள் கட்டிய மடம்.   தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள இவ்வாறான சில அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.  அரசியலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் வெகு தூரம்.  இது அதன் பிரதமருக்கும் பொருந்தும் என்பது நான் கண்கூடாகப் பார்த்த விடயம்.  

ஆனால், எனது பயணம் தொடர்கிறது.  இதுவரை நான் தேடிக் கொண்டிருந்த துணை எனக்குக் கிடைத்து விட்டது.  அவரின் துணையுடன் எனது பயணம் மேலும் தொடரும்.  சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும் என்பதற்கேற்ப சில செயற்பாடுகள் பூர்த்தியாகியபின் பகிரங்கப்படுத்தப்படும்.

சில காலம் முன்பு......
நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள் என்று நான் எழுதியதற்கு. மிகவும் பொறுமையுடன் நீண்ட பதில் எழுதி இருந்தீர்கள். அதை ஒரு விமானநிலையத்தில் இருந்துதான் வாசித்தேன் வந்து பதில் எழுத வேண்டும் என்று நினைத்துவிட்டு பின்பு அது மறந்து போய்விட்டது.
உங்களுடைய உழைப்பு ... சேவை மதிப்பிற்கு உரியது.
 
இதில் இன்னொரு பக்கமும் உண்டு .... அதயும் பார்க்கலாம்.
எனது மாமனார் ஒருவர் சுவிசில் வசிக்கிறார். யாழ் களத்தில் இருக்கும் அர்ஜுன் வர்களை இன்னொரு பிரதி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒருவர். தனக்கு எல்லாம் தெரியும் என்று பில்டப் கொடுக்க தெரியுமே தவிரே எதுவும் தெரியாது என்பது கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்தாலே புரிந்துவிடும். இவர் ஒருமுறை நான் சுவிட்சிட்கு போனபோது அங்கிருக்கும் புலிகளை பற்றி பொழிந்து தள்ளிக்கொண்டு இருந்தார். காரணம் இவர் எதையோ முன்னின்று செய்ய முயற்சி செய்யும்போது அவர்கள் அதை அசட்டை செய்து விட்டு அவர்களே வந்து செய்துவிட்டு போய்விட்டார்கள். அது இவருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. எண்ணம் மக்களுக்கு ஆனது என்றாலும் எல்லோரையும் உள்வாங்கி கொண்டு பகிரங்கமாக ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலில் இருக்கும் ஒரு அமைப்பின் பிரதியாக இருக்க முடியாது. 
தவிர அவர்களுக்கு ஆப்பு இறுக்க  என்றே உதவி செய்பவர்கள் போல் வேடம் போட்டு வேவு பார்க்க பலபேர்கள்  முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்னொரு விடயம் அவர்கள் இருந்தால் போல் பிரபல்யம் ஆகவில்லை............ எனக்கு தெரிய 1990களில்  சுவிசில் அப்துல்லா என்று ஒருவர் இருந்தார் குளிர் மழைக்குள்ளும் எல்லா அப்பார்ட்மெண்டிலும் ஏதும் தமிழ்  பெயர் இருக்கிறதா என்று தேடி தெரிவார். வீடு வீடாக ஏறி மணி அடித்து கதவு தட்டி காசு சேர்த்தார்கள்.
இதில் பிளாட் ஈஎப்பி என்று இருந்த கொலைகார கும்பல்கள் மக்களின் காசை திருடி கொண்டு ஏஜென்சிக்கு  காசு கட்டி  வந்திருந்தார்கள். அவர்கள் 24 மணி நேரமும் வெறியில்தான் இருப்பார்கள் இவர்கள் புலிக்கு காசு கேட்க போய்  பல பிரச்சனைகள் பட்டே திரும்பி வருவார்கள். இப்படிதான் அவர்கள் போராட்டத்தை இங்கு இருந்து வளர்த்தார்கள்.
பின்பு அவர்கள் நன்றாக வளர்ந்தது மேடை போட்டு மக்கள் கூட்டம் பின்னால் செல்ல தொடங்கவே ....
இவங்களுக்கு என்ன தெரியும் என்று மேடை ஏறும் அவாவில் எனது மாமா போன்று பலர் கிளம்பினார்கள்.
அப்போதும் எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்ய கூடிய நிலை இருக்க வில்லை. எல்லோரையும் அவர்களால் உள்வாங்கவும்  முடியாது.
 
நாடு கடந்த அரசு பிரதமரை .............
அமெரிக்க அரசு கைது செய்து சிறையில் போட்டால்........... நானும் நீங்களும் ஏதாவது செய்ய போகிறோமா ??
கத்தியில் கால் வைத்து கொண்டு நடப்பதுதான் அவர்களுடைய பயணம். அதில் உண்மை உள்ளவர்களையும்   உன்களை போன்றவர்களையும்   தட்டி கழிக்க சாத்தியம் இருக்கலாம்.
நாடு கடந்த அரசு அமெரிக்க சி ஐ ஏ வின் நிகழ்ச்சி நிரலில் கூட இயங்கி கொண்டு இருக்கலாம்.
இதை கே பி தான் நிறுவினார் என்பதை நாம் மறந்து விட முடியாது.
 
வீண் காழ்ப்புணர்வுகளை  கொட்டி கொண்டு இருக்காது (நீங்கள் அப்படி செய்வதில்லை) நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். உண்மை உள்ளவர்களை எந்த பாதையால் சென்றாலும் ஓரிடத்தில் சந்திக்கலாம். மற்றவர்கள் காணமால் போய்விடுவார்கள்.
 
எல்லாம் தமிழர்கள்தான் பந்தா காட்டுவது மற்றவர்களை தள்ளி விடுவது என்பதை புலிகளால் கூட முற்றாக தடுக்க முடியவில்லை. இது எந்த திசையில் திரும்பினாலும் சாதாரணமாக இருக்கும் ஒன்று. உண்மையானவர்கள்   இதையும் கடந்து போக வேண்டும் என்பது விதி.
தலைவர் பிரபாகரன் சொல்லி இருந்தார் தன்னை போராளி என்று சொல்வதில்தான் பெருமை என்று. காரணம்  போராளியாக வாழ்வது என்பது அவளவு கடினமான ஒன்று. தலைவராக இருப்பதிலும் கடினமானது அது. இறுதிவரை ஒரு போராளியாகவே இருந்தார் என்பது அவருடைய தனிப்பெரும் சிறப்பு.
  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் எப்போதும் எதுவும் அப்படியே இருந்து விடுவதில்லை. எத்தனை வருட அடக்குமுறைக்குப் பின் தென்னாபிரிக்காவில் வெள்ளையினத்தவரிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டது ?

300 வருட சாம்ராஜ்ய மனோநிலையில் இருந்து எத்துணை சீக்கிரம் இங்கிலாந்து விடுபட்டது?

58, 83 மனநிலையில் இப்போ சின்ஹ்களவர்கள் இல்லை. முன்பு எமக்கு அடிவிழுந்தபோது வெளிவராத குரல்கள் இப்போ முசுலீம்களுக்கு அடிவிழும் போது கேட்க்கிறது.

இந்த குரல்களை நசுக்கி மேலும் குரோதம் வளர்க்கவே இனவாதிகள் முயல்கிறனர். பிரிவினைவாதிகள் அவர்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம்.

செல்வாவின் சமஸ்டிக் கனவு எப்போதோ நிறைவேறி இருக்கும், 1995 காலப்பகுதியில் புலிகள் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்திருந்த்ஹால்.

புலிகள் எப்படியான் நெகிழ்வு போக்கை கடைப்பிடிச்சு இருக்க வேணும் என்கிறீர்கள்...??? 

மீள் கட்டுமானம்,  மீள் குடியேற்றம்,  பொருளாதார தடை ,  மீன்பிடி தடை  எல்லாம்  ஒப்பந்த அளவில் இருந்ததை வைத்து கொண்டு எதையும் நடை முறைப்படுத்தாமல் இருந்ததை வரவேற்று கொண்டு இருந்து இருக்க  வேண்டுமா...???   

பயங்கரவாதை தடை சட்டம் மூலம் அப்பவிகளின் கைதுகள் காணாமல் போதல் கூட நிறுத்தப்பட்டு இருக்கவில்லை...   

போர் நிறுத்த உடன்படிக்கையில்  பேசப்பட்ட  விடயங்களில் எதுவும் நிறைவேற்ற முயற்சி கூட எடுக்காத அரசாங்கம் உங்களுக்கு சமஸ்ரியை தட்டிலை வைத்து தந்து இருக்கும் எண்டது  ஆச்சரியம் தான்... 

எந்த வித நடுநிலை கண்காணிப்பாளர்களும், அனுசரனையாளர்களும் இல்லாது  இலங்கை அரசின் அடக்குமுறைகள் புலிகளின் நெகிழ்வு போக்கால்  தடம் மாறி இருக்கும் எண்று உங்களை போண்றவர்களால்  மட்டும் தான் கனவு காண  முடியும்.. 

ஒரு அறுப்பும் தெரியாமல் உளறுவது என்பது இது தானா?

தென் ஆபிரிக்க அரசு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்கு உள்ளானது.அந்த அரசைத் தாங்கி நின்ற பிரித்தானிய அரசு உள் ஊரில் பலத்த நெருக்கடியைச் சந்தித்தது. பிரித்தானிய நிறுவனங்கள், வங்கிகள் முதலீட்டாளர்கள் பெருத்த நெருக்கடியைச் சந்தித்தன. தென் ஆபிரிகாவில் பாரிய ஒத்துழையாமைப் போராட்டங்களும் வன்முறைப் போராட்டங்களும் உருவாகி நாட்டை ஆளமுடியாத நிலமை ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் சமாளிக்க மேற்குலகம் குடுத்த நெருக்கடியிலையே அங்கே கறுப்பின ஆட்சி ஏற்பட்டது, மண்டேலாவுடன் உடன்படிக்கை போட்டு மேற்குலகம் தமது முதலீடுகளைப் பாதுகாத்துக் கொண்டன. அங்கே வெள்ளையர் மனனிலை மாறி கருப்பரிடம் ஆட்சியைக் கொடுத்தனர் என்று சொல்பவருக்கு மனநலக் குறைவு இருக்க வேண்டும்.

யார் குற்றியாவது அரிசியானால் சரி, வாழ்த்துக்கள்

சில காலம் முன்பு......
நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள் என்று நான் எழுதியதற்கு. மிகவும் பொறுமையுடன் நீண்ட பதில் எழுதி இருந்தீர்கள். அதை ஒரு விமானநிலையத்தில் இருந்துதான் வாசித்தேன் வந்து பதில் எழுத வேண்டும் என்று நினைத்துவிட்டு பின்பு அது மறந்து போய்விட்டது.
உங்களுடைய உழைப்பு ... சேவை மதிப்பிற்கு உரியது.
 
இதில் இன்னொரு பக்கமும் உண்டு .... அதயும் பார்க்கலாம்.
எனது மாமனார் ஒருவர் சுவிசில் வசிக்கிறார். யாழ் களத்தில் இருக்கும் அர்ஜுன் வர்களை இன்னொரு பிரதி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒருவர். தனக்கு எல்லாம் தெரியும் என்று பில்டப் கொடுக்க தெரியுமே தவிரே எதுவும் தெரியாது என்பது கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்தாலே புரிந்துவிடும். இவர் ஒருமுறை நான் சுவிட்சிட்கு போனபோது அங்கிருக்கும் புலிகளை பற்றி பொழிந்து தள்ளிக்கொண்டு இருந்தார். காரணம் இவர் எதையோ முன்னின்று செய்ய முயற்சி செய்யும்போது அவர்கள் அதை அசட்டை செய்து விட்டு அவர்களே வந்து செய்துவிட்டு போய்விட்டார்கள். அது இவருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. எண்ணம் மக்களுக்கு ஆனது என்றாலும் எல்லோரையும் உள்வாங்கி கொண்டு பகிரங்கமாக ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலில் இருக்கும் ஒரு அமைப்பின் பிரதியாக இருக்க முடியாது. 
தவிர அவர்களுக்கு ஆப்பு இறுக்க  என்றே உதவி செய்பவர்கள் போல் வேடம் போட்டு வேவு பார்க்க பலபேர்கள்  முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்னொரு விடயம் அவர்கள் இருந்தால் போல் பிரபல்யம் ஆகவில்லை............ எனக்கு தெரிய 1990களில்  சுவிசில் அப்துல்லா என்று ஒருவர் இருந்தார் குளிர் மழைக்குள்ளும் எல்லா அப்பார்ட்மெண்டிலும் ஏதும் தமிழ்  பெயர் இருக்கிறதா என்று தேடி தெரிவார். வீடு வீடாக ஏறி மணி அடித்து கதவு தட்டி காசு சேர்த்தார்கள்.
 
நானும் திடீரென்று முளைக்கவில்லை.  22 வருட அனுபவத்தோடுதான் இதனை முன்னெடுக்கிறேன்.  20 வருடங்களுக்கு முன்னரே நானும் அவரைப் போன்று வீடு, வீடாகச் சென்று கதவைத் தட்டி பணம் சேர்த்திருக்கிறேன்.  
 
இதில் பிளாட் ஈஎப்பி என்று இருந்த கொலைகார கும்பல்கள் மக்களின் காசை திருடி கொண்டு ஏஜென்சிக்கு  காசு கட்டி  வந்திருந்தார்கள். அவர்கள் 24 மணி நேரமும் வெறியில்தான் இருப்பார்கள் இவர்கள் புலிக்கு காசு கேட்க போய்  பல பிரச்சனைகள் பட்டே திரும்பி வருவார்கள். இப்படிதான் அவர்கள் போராட்டத்தை இங்கு இருந்து வளர்த்தார்கள்.
பின்பு அவர்கள் நன்றாக வளர்ந்தது மேடை போட்டு மக்கள் கூட்டம் பின்னால் செல்ல தொடங்கவே ....
இவங்களுக்கு என்ன தெரியும் என்று மேடை ஏறும் அவாவில் எனது மாமா போன்று பலர் கிளம்பினார்கள்.
அப்போதும் எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்ய கூடிய நிலை இருக்க வில்லை. எல்லோரையும் அவர்களால் உள்வாங்கவும்  முடியாது.
 
இவற்றை நானும் நன்கே உணர்ந்திருக்கிறேன்.   இந்த விடயத்தில் நாமும் மிகவும் கவனமாகவே இருக்கிறோம்.  
 
நாடு கடந்த அரசு பிரதமரை .............
அமெரிக்க அரசு கைது செய்து சிறையில் போட்டால்........... நானும் நீங்களும் ஏதாவது செய்ய போகிறோமா ??
 
அப்படிச் செய்வதாக இருந்திருந்தால் அவரை 2000 ஆண்டுகளிலேயே  தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததற்காகக் கைது செய்திருக்க வேண்டும்.  2009இற்குப் பின்னர் அதற்குரிய தேவை அற்று விட்டது.  
 
கத்தியில் கால் வைத்து கொண்டு நடப்பதுதான் அவர்களுடைய பயணம். அதில் உண்மை உள்ளவர்களையும்   உன்களை போன்றவர்களையும்   தட்டி கழிக்க சாத்தியம் இருக்கலாம்.
நாடு கடந்த அரசு அமெரிக்க சி ஐ ஏ வின் நிகழ்ச்சி நிரலில் கூட இயங்கி கொண்டு இருக்கலாம்.
இது மக்களை ஏமாளியாக்கும்  தந்திரத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு உபாயம்.  இப்படித்தான் 2009இற்கு முன்னர் இரகசியக் காப்பு என்ற போர்வையில் பல நாடகங்கள் நடந்தேறின.  
 
இதை கே பி தான் நிறுவினார் என்பதை நாம் மறந்து விட முடியாது.
 
 கே.பி. பரிந்துரைத்தது மட்டும்தான்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவியது உருத்திரகுமாரனின் தலைமையிலான குழு.  இப்படியே முத்திரை குத்திக் கொண்டு போனால் யார் என்ன செய்தாலும் சரியாக இருக்க முடியாது. நாம் சரியான பாதையில் செல்லும்போது மக்களின் ஆதரவு கிடைக்கும்.  எமது நேர்மையான நடவடிக்கைகளைப் பொறுத்து மக்களின் ஆதரவு தொடர்ந்து நிலைக்கும்.
 
வீண் காழ்ப்புணர்வுகளை  கொட்டி கொண்டு இருக்காது (நீங்கள் அப்படி செய்வதில்லை) நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். உண்மை உள்ளவர்களை எந்த பாதையால் சென்றாலும் ஓரிடத்தில் சந்திக்கலாம். மற்றவர்கள் காணமால் போய்விடுவார்கள்.
 
உண்மைதான்.  அப்படித்தான் நானும் எனது துணையும் சந்தித்துக் கொண்டோம்.  நாம் சந்தித்ததுகூட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில்தான்.  எம்மைப் போன்ற மேலும் சிலரையும் நான் அங்கு சந்தித்தேன்.  அவர்களோடு மேலும் பலர் வருவார்கள் என்பதும் நிச்சயம்.  இதற்கு மேல் எழுதுவது ஆரோக்கியமானதல்ல.  
 
எல்லாம் தமிழர்கள்தான் பந்தா காட்டுவது மற்றவர்களை தள்ளி விடுவது என்பதை புலிகளால் கூட முற்றாக தடுக்க முடியவில்லை. இது எந்த திசையில் திரும்பினாலும் சாதாரணமாக இருக்கும் ஒன்று. உண்மையானவர்கள்   இதையும் கடந்து போக வேண்டும் என்பது விதி.
தலைவர் பிரபாகரன் சொல்லி இருந்தார் தன்னை போராளி என்று சொல்வதில்தான் பெருமை என்று. காரணம்  போராளியாக வாழ்வது என்பது அவளவு கடினமான ஒன்று. தலைவராக இருப்பதிலும் கடினமானது அது. இறுதிவரை ஒரு போராளியாகவே இருந்தார் என்பது அவருடைய தனிப்பெரும் சிறப்பு.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் உங்கள் வார்த்தைகளில் வழக்கம் போல கண்ணியம் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் உங்கள் மற்றய பதிவுகளை போலல்லாது இதில் கொஞ்சம் கருத்தும் இருப்பதால் இதற்க்குப் பதிலிடுகிறேன்.

நீங்கள் சொன்ன அத்தனையும் சரிதான், ஆனால் இந்த அழுத்தங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவரிடையே apartheid has no future எனும் புரிந்துணர்வை விரும்பியோ விரும்பாமலோ ஏற்ப்படுத்தியது. இதே போல் ஓர் நிலைமையை தென்னிலங்கையிலும் ஏற்படுத்தவே சர்வதேச சமூகம் முயல்கிறது. இதில் கூட்டமைப்பின் வகிபாகத்தை சம்பந்தன், விக்கி சுமந்திரன் தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள்.

புலம்பெயர்தமிழரின் வகிபாகத்தைதான் சீண்டுவார் இல்லை. நாம்தான் தனிநாட்டு மனப்பாலில் வயிறு முட்டிப் போயியுள்ளோமே.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு சந்த்ஹோசமே இல்லை.

எங்கே எதை நிறுத்தவேண்டும், ஒரு போராட்டத்தின் viability என்ன என்று சிந்திக்க தெரியாமல், எத்தனையோ இழப்புகள் எத்தனையோ தியாகங்கள் அத்தனையையும் பூஜ்ஜியத்தால் பெருக்கி, எமது இனத்தின் எதிர்கால இருப்பையே அடகுவைத்து விட்டு தமிழன் தோத்துப் போனதில் எனக்கு எந்த சந்த்ஹோசமுமில்லை.

கோசன் உங்கள் இந்த கருத்துடன் நான் நூறுவீதம் உடன் படுகிறேன். எனது கருத்தும் அதுவே. ஆனால் அதற்காக தியாகம் அரப்பணிப்புகளை செய்த எந்த இயக்க போராளிகளையோ, போராளித் தலைவர்களையோ திட்டியோ கேலி செய்தோ கருத்து தெரிவிக்க மாட்டேன். ஏனெனில் சிறந்த கல்வியறிவு சட்ட ராஜதந்திர அறிவு இருந்தும், பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டு, இனப்பிரச்சினையை தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தியே தமது வாழ்நாளை அனுபவித்து முடித்தவர்களை நாம் திட்டுவதில்லை என்பதால்.

" ஆங்கிலேயருடன் சேர்ந்து சிங்களரை வதைத்த தமிழ் துரைமாரை காட்டித்தான், படம் ஓட்டினார்கள்.

இன்று அந்த இடத்தை புலம்பெயர் தமிழர் நிரப்புகிறார்கள்.

சிங்களவரை வதைத்த ஆங்கிலேயர் கால தமிழ் துரைமாருடன் புலம் பெயர் தமிழ்மக்களை ஒப்பிடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. புலம் பெயர் தமிழ் மக்கள் என்றும் இனவாத கண்ணோட்டதுடன் சிங்களவரை வதைக்கவும் இல்லை சிங்கள இனத்திற்கெதிராக கருத்தியல் போராட்டத்தை நடத்தவும் இல்லை.

Edited by tulpen

புலம்பெயர் புண்ணாக்கு என்று திட்டி எழுதுவது கண்ணியமானதா? இத் தகைய எழுத்துக்கள் தமது பணம், நேரம் என்பவற்றை பொது நோக்கிற்காக தாயக மக்களுக்காகச் செலவு செய்து உண்மையாக வேலை செய்யும் எவரையும் பாதிக்கும். இப்படி எழுதுபவர் கண்ணியம் பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படித் தான் திருப்பி எழுதுவோம்.இங்கு வந்திருந்து எதுவுமே செய்யாது கணணி முன் இருந்து எழுதுவோருக்கு இந்தக் கஸ்டங்கள், பிரச்சினைகள்,வலிகள் தெரியாது.இவர்களை இவர்கள் எழுதுக்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களுக்கு போராட்டங்கள் மேல் எந்த நம்பிக்கையும் இல்லை.அவர்கள் இந்திய அரசையே நம்பி உள்ளார்கள். தெனாபிரிக்க மக்கள் எந்த அரசையும் நம்பிப் போராடவில்லை. அங்கு இருந்தவர்களும் சரி உலகெங்கும் இருந்த கறுப்பு இன மக்களும் சரி தெருவில் இறங்கிப் போராடினர். அதன் மூலமே அவர்களுக்கு விடுதலை கிட்டியது.

சம்பந்தன், சுமத்திரன் போன்றவர்கள் நிச்சயமாக முகவரி அற்றுப் போய்விடுவர். அவர்களையும் மீறி வேறு போராட்ட குணம் உள்ள சக்திகள் முன்னுக்கு வரும்.   

நாடு கடந்த தமிழீழ அரசு, ஒன்றும் செய்யவில்லை என்று கூறியவர்கள்.....

இனி முகத்தை எங்கே.... கொண்டு போய் வைக்கப் போகின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசின், முதல்வர் உருத்திரகுமாரனுக்கு நன்றி.

ஜூட் இலங்கை அரசு என்பது government எனும் அர்தத்தில் சொன்னது. State எனும் அர்த்தத்தில் அல்ல. அரசாங்கம் என்று சொல்லியிருந்தால். பொருத்தமாயிருந்த்ஹிருக்க்கும்.

தற்போதய யாப்பினை மாற்றி, இனவாதமற்ற அல்லது இனவாத தாக்கம் குறைந்த ஒரு புதிய சமஸ்டி அலகை நாம் எமெக்கென உருவாக்க முயற்சிக்கலாம். கிட்டத்தட்ட நீலனும் பீரிசும் 1995இல் சமர்ப்பித்த முதல் தீர்வுபொதிபோல.

The Problem Is Greater Than The Excesses Of A War

| by Kishali Pinto-Jayawardena

Crudely militarized state apparatus

Shadowy men continue to tail the head of the country’s Bar Association for the second week while law enforcement authorities stay mute. Unprecedentedly, unruly mobs protest without hindrance outside the media industry run Sri Lanka Press Institute (SLPI) office in central Colombo against the holding of innocuous training programmes for journalists.

In the north and east, the Tamil people remain under routinely intrusive military surveillance. In garrisoned towns, abuses become inevitable. Last month’s report of an abduction and rape of an eleven year old village girl allegedly by navy officers attached to the Karainagar base was just one such incident. Just how are we expected to react towards such an incident? Whom exactly are we expected to believe?

Meanwhile, the Bodu Bala Sena has been allowed to fade away to relative obscurity, even as we brace ourselves for the next obscene anti-Muslim attack which, as we saw in Aluthgama and Beruwala, will be meticulously planned. These are eminently dangerous signs of a collapsed democratic State over which a military regime has been superimposed.

And as much as the militarized drive may be framed against civil society organizations, there is a singular reluctance to use existing law to separate the bad eggs from the good, as it were. Instead, ministerial directives are issued without legal validity, couched in ungrammatical and unacceptably broad terms.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143727#entry1030219

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.