Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு அன்னையின் ஆவனித் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று (15.08.14) காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில், இலங்கை கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருபபலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு அன்னையின் ஆவனித்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(15) திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது இத்தாலி ஆயர் மன்ற பிரதிநிதிகள், கத்தோழிக்க குருக்கள், அருட்சகோதரிகள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்ததோடு அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை மடுத்திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by பிழம்பு

https://www.youtube.com/watch?v=tjLFklzavsM

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடரிலும்இ துயரிலும் உதவாத இந்த உதவாக்கரை மாதாவிற்கு கூடுகிற இவ்வளவு மக்கள்இ மிக அருகே சகோதரங்கள் அழிபட்டு சாகையில் வீதிக்கு வரவில்லை.

பின்னே எவன் கொடுப்பான் சுதந்திரம்?

எந்த நன்மையும் இல்லாவிடினும் கூட மக்கள் மட்டும் எவ்வளவு நன்றியுடன் இருக்கின்றார்கள்....... பாவம்.

 

தங்களை பேரழிவிலிருந்து காப்பாற்றத் தவறிய நல்லை முருகனையும், வற்றாப்பளை அம்மனையும், மடு மாதாவையும்  இன்னமும் வருடம் தோறும் அலங்கரித்து, சோடனை செய்து, பணம் கொட்டி விழாக்கோலம் காட்டி வழிபடுகின்றனர்.

 

தெய்வங்கள் கைவிட்டாலும் தெய்வங்களை மக்கள் கைவிடாமல் காக்கின்றனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடரிலும், துயரிலும் உதவாத இந்த உதவாக்கரை மாதாவிற்கு கூடுகிற இவ்வளவு மக்கள், மிக அருகே சகோதரங்கள் அழிபட்டு சாகையில் வீதிக்கு வரவில்லை.

பின்னே எவன் கொடுப்பான் சுதந்திரம்?

 

:o:):rolleyes::wub::huh::icon_idea:

 

இது நல்லூருக்கு நான் போட்ட குரலாச்சே...? :)

நல்லூரில் ஒலித்த குரல், மடுவிலும் எதிரொலிப்பது, சரிதான்..! :icon_mrgreen:

அடுத்து காத்தான்குடிக்கும் வருமோ? :o

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க நல்லுரில போட்டது மடுவில நிக்குது இப்ப

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க நல்லுரில போட்டது மடுவில நிக்குது இப்ப

 

 

2cprkaq.jpg

 

ஏம்மா.. பத்து வருசமா ரொம்பக் கம்மியா ஒலிக்கிறீங்களே...? :)

 

கொஞ்சம் சத்தமா அடிக்கடி வெளியே வந்து குரல்கொடுங்கோ..! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களுக்குள் பல்வேறு குழுக்களை உருவாக்கிக் கொண்டு அடிபட்டு, தாங்களுக்கு தாங்களே எல்லாவித பேரழிவுகளையும் தேடிக்கொண்டு ஏன் தெய்வங்ளை குறை கூறுகிறீர்கள்? மக்களுக்கு இறை நம்பிக்கை மன சமாதனத்தை கொடுக்கின்றது அவ்வளவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தெய்வ சிந்தனைகள்,வழிபாடுகள் மனதை ஒருவழிப்படுத்துவன.நல்லதை செய்ய வழி வகுப்பவன.
 
மோட்டுத்தனமான குறுக்கு கேள்விகளால் உங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளாதீர்கள்.
 
வாழைப்பழத்தை தரவும் வேண்டும்.
தோலை உரித்தும் தர வேண்டும்.
கடித்தும் தர வேண்டும்.....இதுதான் ஆறறிவை கொடுத்த மனிதனின் வேண்டுதல்.
 
நேரம் கிடைக்கும் போது மிருகங்கள்,பறவைகள் சம்பந்தப்பட்ட விவரண தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையாவது பாருங்கள். :icon_idea:  :(
  • கருத்துக்கள உறவுகள்

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை மார்க்கங்கன்களை வகுத்துத் தந்தது மதம்!

 

ஆனால் சரியையிலும், கிரியையிலும் மட்டுமே தனது வாழ்நாட்களை மக்கள் வீணடித்து விடுகிறார்கள்!

 

ஒரு யோகர் சுவாமியையோ, ஒரு விவேகானந்தரையோ உருவாக்குவதில், இந்த வழிபாட்டுத் தளங்களின் பங்களிப்பு மிகவும் குறைவானதே!

 

ஒரு கச்சான் வியாபாரியையோ, ஒரு பூசாரியையோ அல்லது ஒரு ஐஸ்பழ வியாபாரியையோ, அல்லது ஒரு கொத்து ரொட்டிக் கடையையோ உருவாக்குவதில் இவற்றின் பங்களிப்பு அளவிட முடியாதது!

 

மனித மேம்பாட்டுக்குப் பாதை வகுக்க வேண்டிய மதங்கள், தமது உண்மையான நோக்கத்தை, மறந்தது மட்டுமன்றி, ஒரு தடைக்கல்லாக ஆகிப்போனதே எமது வரலாறாகி விட்டது!

 

இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில், பப்புகள் செய்கிற அதே வேலையையே எமது மதங்களும் செய்கின்றனவோ என்ற எண்ணமே லோங்குகின்றது!

 

அதாவது சந்தித்துக் கலகலப்பதற்குத், தங்கள் 'பகட்டுகளை' வெளிப்படுத்துவதற்கு, ஒரு இடம் தேவை!

 

உண்மையான பக்தனுக்கு 'விழாக்கள்' தேவையில்லை! 

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.