Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிப்பார்வை'யில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம்: இயக்குநர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

 'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார்.

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன.

தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

 

"'புலிப்பார்வை'யில் தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்படும். அக்காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தில் இணைப்போம்.

முழுவதுமாக படம் முடிந்தவுடன், தமிழ் அமைப்புகளுக்கு திரையிட்டு காண்பிப்போம். அவர்களின் ஆதரவோடு இப்படம் வெளியாகும்" என்று இயக்குநர் பிரவீன்காந்தி கூறினார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மதன், "'புலிப்பார்வை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். தமிழர்களின் எதிராக எந்த ஒரு படத்தையும் வேந்தர் மூவிஸ் தயாரிக்காது.

மீண்டும் படப்பிடிப்பு நடத்தி தயாராகும் படத்தை தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் படத்தை வெளியிட மாட்டோம். தமிழ் உணர்வாளர்களுக்கு மதிப்பு கொடுப்போம்" என்றும் கூறினார்.

இதன் மூலம் 'புலிப்பார்வை' படத்தின் பிரச்சினை முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6335128.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

----

இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன.

தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

 

"'புலிப்பார்வை'யில் தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்படும். அக்காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தில் இணைப்போம்.

-----

 

அப்பாடா..... ஒரு மாதிரி, எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பபோதும்  சீமான் உயர்ந்து தான் நிற்கின்றார்.
தான் போராடாமல்  மக்களைப் போராட வைத்து வெற்றியும் கண்டுவிட்டார்

பலரின் வேஷம் தெரிந்து போனது இதனால் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பபோதும் சீமான் உயர்ந்து தான் நிற்கின்றார்.

தான் போராடாமல் மக்களைப் போராட வைத்து வெற்றியும் கண்டுவிட்டார்

எந்த இடத்தில் உயர்ந்தார் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கோ,மாணவர்களுக்கு அடி விழும்போது மேடையில் சீமான் இருந்து ரசித்ததை சொல்லுறீங்களா
  • கருத்துக்கள உறவுகள்

6fa0e7126f02b893b984a2ba4603984c

 

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

VaakaiTV 19.08.2014

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கடுமையா போராட்ங்கள் வெடிக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில தி.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக 51 பேர் ஆரதரவு வழங்கியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு பின் விடுக்கப்பட்ட செய்தியறிக்கை கீழே தரப்படுகிறது.

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாகக் கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனச்சாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

ஏனெனில்

1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.

2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.

3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.

7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.

8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கத்தி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

தமிழ்த திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்ற சப்பை கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத்தமிழர்தான் சந்தேகம் இல்லை.

ஆனால் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுக்குண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஸபக்ச கும்பலிடம் செல்வாக்குக் கொண்ட இன்னொரு டக்ளசும் கருணாவும் தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத்தமிழினம் நன்கறியும்.

முருகதாஸ், விஜய் ஏன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.

இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.

ஆதரவு தரும் கட்சிகள், இயக்கங்கள் பெயர் பட்டியல்

01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி

02. விடுதலைச் சிறுத்தைகள்

03. மனித நேய மக்கள் கட்சி

04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

05. கொங்கு இளைஞர் பேரவை

06. புரட்சி பாரதம்

07. எஸ்.டி.பி.ஜ

08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி

10. தமிழ்நாடு மக்கள் கட்சி

11. திராவிடர் விடுதலைக் கழகம்

12. தமிழ்த் தேசிய முன்னணி

13. மே 17 இயக்கம்

14. இளந்தமிழர் இயக்கம்

15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

16. தமிழர் எழுச்சி இயக்கம்

17. தமிழர் முன்னேற்றக் கழகம்

18. தமிழத் தேசப் பேரியக்கம்

19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்

20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்

21. நாகை திருவள்ளுர்

22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்

23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு

24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்

25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு

26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்

27. ஆதியமான்

28. மு.களஞ்சியம் இயக்குநர்

29. மருத்துவர் எழிலன்

30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்

31. தமிழர் படை – ஜோதிலிங்கம்

32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்

33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்

34. ராச்குமார் பழனிச்சாமி

35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்

36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி 

37. தமிழ்நாடு வணிகர் பேரவை

38. இயக்குநர் கீரா – களம்

39. காஞ்சி மக்கள் மன்றம்

40. மனித உரிமைகள் கழகம்

41. ராஜா ஸ்டாலின்

42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்

43. புலமைப்பித்தன்

44. மீனவர் வேங்கைகள்

45. தமிழக மீனவர் அமைப்பு

46. தமிழ்நாடு மீனவர் பேரவை

47. டி.எஸ்.எஸ். முணி

48. பத்திரிகையாளர்கள்

49. சுன்னத் ஜமாத்

50. பாப்புலர் ஆப் இண்டியா

51. வின் டிவி தேவநாதன்

52. கோவை ராமகிருட்டிணன் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

fb

சீமான் தன் வாயாலெயே சொன்னரே மாணவர்கள் காசு வாங்கப் போராடுகிறார்கள் என்று? இதில் என்ன உயர்ச்சி சீமானுக்கு இருக்கிறது?

 

சீமானிடம் எனக்கு எதிர்பார்புக்களும் நம்பிக்கைகளும் இருந்தன.ஆனால் அவர் பத்திரிகைக்காரர்களுக்கு பதில் சொல்லிய விதம் ,மாணவர் போராட்டத்தைக் கொச்சைப்படுதியமை என்பவற்றை நேரே காணொளியாகப் பார்த்தபின் இவருடம் தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்நாட்டில் முன் எடுப்பதற்கான தலமைத்துவப் பண்புகளோ அரசியற் தெளிவோ இல்லை என்று தெரிந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.. தேசிய தலைவரை விட்டிட்டு.. கன்னடப் பெரியாரை தூக்கிப் பிடிச்சால் சிலர் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்..! எப்ப சீமான் கன்னடனான.. பெரியாரை தேசிய தலைவருக்கு பின்னாடி போட்டாரோ அப்ப இருந்தே இன்னொரு குறூப் சீமான் மேல கடுப்பில இருக்கினம்.

 

பத்திரிகையாளர் என்ற அடையாளம் இன்றி... சிலர் விசத்தனமான கேள்விகளை.. பதிலளித்த பின்னும் மீண்டும்.. மீண்டும்.. கேட்ட இடத்தில் கூடி இருந்த மக்கள் தான் அண்ணன் சீமானை கேள்வி கேட்டவரை நோக்கி.. நீ யார் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். சிலர் காணொளிகளை சரியாகக் காணாமல்.. சீமானின் சீரிய முயற்சிகளை ஊக்கப்படுத்தாமல்.. வழமை போன்று.. பக்கவாதம் செய்கிறார்கள். அது அவர்களின் கடந்த காலமும் கூட..! ஆச்சரியமும் இல்லை..! :lol::icon_idea:

 

மேலும் மாணவர் அமைப்புக்கள் குறிப்பிட்ட கூட்டத்தில் சீமானிடம் எழுத்துமூலமாக தமது கோரிக்கைகளை வைத்திருக்கலாம். அதனை புலிப்பார்வை படக் குழுவினரிடம் அவர் மூலம் கொண்டு சென்றிருக்கலாம். அங்கு கூச்சல் குழப்பம் செய்ததில்.. அவர்களின் செயலிலும் தவறுள்ளது. மாணவர்கள் ஆக்கிரோசமாக போராடுவதை மட்டுமல்ல..  சூழ்நிலைக்கு ஏற்ப.. அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எதிர்காலத்தில். :icon_idea:

Edited by nedukkalapoovan

சீமானும் நாம் தமிழரும் தாம் பெரியார் பற்றி அவதூறாகக் கூறவில்லை. அவர் தான் தமது இயக்கத்தின் தந்தை என்று விளக்கம் சொல்லி , மன்னுப்பும் கோரி விட்டார்கள். எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது விமர்சினம் வைப்பது அவர்களின் எதிர்கால நலன் கருதேயே அன்றி. சீமானை நம்பி களத்தில் நிற்க்கும் ஆயிரம் இளயோரை அவர் ஏமாற்றாமல் , தன்னை அவர் வைத்திருப்பாரா? இப்போதே இப்படி இருப்பவர் , பதவிகள் வந்த்த பின் எவ்வாறு மாறுவார்?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படக்கதை முடிச்சு இப்ப சீமான் கதை ஆரம்பம்.... வாழ்க வளமுடன்...!

  • கருத்துக்கள உறவுகள்

படம் தமிழத்தேசிய விடுதலைப் போராட்டம் பற்றீயது. போராட்டம் பற்றீய தவறான பார்வையை வழங்கிய படம் சம்பந்தமாக , ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளாராக தன்னை முன் நிறூத்தும் சீமானின் நிலைப்பாடு கருத்துக்கள் தொடர்பாக விமரிசனம் வைப்பதற்கு ஈழப் போராட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்த வல்லது. விமரிசனம் அற் றா அரசியல் இயக்கங்கள் அழிவையே சந்திக்கும்.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் கேக்கிற கேள்விகளுக்கு இணைய தேசிய வாதிகள் பதில் சொல்வாா்களா?


இது சீமானுக்கு ஆதரவல்ல நியாயம் என்று பட்டதை சொல்லுறம்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தன் வாயாலெயே சொன்னரே மாணவர்கள் காசு வாங்கப் போராடுகிறார்கள் என்று? இதில் என்ன உயர்ச்சி சீமானுக்கு இருக்கிறது?

 

சீமானிடம் எனக்கு எதிர்பார்புக்களும் நம்பிக்கைகளும் இருந்தன.ஆனால் அவர் பத்திரிகைக்காரர்களுக்கு பதில் சொல்லிய விதம் ,மாணவர் போராட்டத்தைக் கொச்சைப்படுதியமை என்பவற்றை நேரே காணொளியாகப் பார்த்தபின் இவருடம் தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்நாட்டில் முன் எடுப்பதற்கான தலமைத்துவப் பண்புகளோ அரசியற் தெளிவோ இல்லை என்று தெரிந்து விட்டது. 

 

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தவறுதலானபுரிதல் அண்ணன் சீமான் சொன்னார் , ஒரு சில மாணவர் கத்தி படக் குழுவினரிடம் காசு கேட்டதாக்க , அந்த காணொளியும் இணைய தளத்தில் வந்தது...இதில் நீங்கள் இன்னொன்றை புரிந்து கொள்ளனும், புலிப் பார்வை ஆடியோ வெளியிட்டு விழாவில் பல மாணவர்கள் கலந்து கொண்டவை , அதில் ஒரு மாணவன் தான் நாம் தமிழர் தங்களை தாங்கினார் என்று சொன்னார் , மற்ற மாணவர்கள் நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று கூட சொல்ல வில்லை..........நாம் தமிழர் தாக்கினால் மற்ற மாணவர்களும் எல்லோ சொல்லி இருக்க வேனும் , நாம் தமிழர் தான் தங்களை தாக்கினார் என்று சொன்ன மாணவன் தான் கத்தி படக் குழுவிடம் காசு கேட்டதாக்க காணொளியில் பார்த்தேன் உண்மை பொய்யோ யாருக்கு தெரியும்.............தமிழ் நாட்டு அரசியலை கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ அண்ணா எதுக்கு எடுத்தாலும் அவனில் நம்பிக்கை போட்டுது இவனில் நம்மிக்கை போட்டுது என்று எழுத முதல்.......இந்தக் காணொளியை பாருங்கோ எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்...........

Edited by பையன்26

சீமானின் பேட்டியில் சில தகவற் பிழைகள் இருக்கின்றான ,

லைக்கா நிறூவனம் தமிழர்களீன் வாடிக்கையில் இங்கிலாந்த்திலோ  அய்ரோப்பவிலோ தங்கி இருக்கவில்லை.

லைக்கா நிறூவனம் ராசபக்சவுடன் கூட்டுச் சேர்ந்த பின் அவர்களூக்கு எதிராக பல போராட்டங்கள் புலத்தில் மேற்கொள்ளாப்பட்டன.

தமிழர்களீன் மத்தியில் லைக்கா தற்போது தனிமைப்படுத்தப்பட்டே இருக்கிறாது.

 

தமிழ்நாட்டிலும் லைக்கா புறாக்கணீக்கப்படுவது அவர்களூக்கு இன்னும் ஒரு பாடம். கத்தி, விஜேய் முருகதாஸ் என்னும் நட்சத்திரப் பின்னணீ அவர்களூக்கு இந்த தனிமைப்படுத்தலை முறீயடிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். தற்போது மானாவர் போராட்டத்தால் இந்தச் சதி முடிக்கப்பட்டிருக்கிறாது.

லைக்கவுடனான ராஜபக்சவின் உறாவை அம்பலப்படுதியவை இங்கிலாந்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களூம் ஒரு ஆங்கில நாளேடுமே. அதுவரை இவர்களீன் தொடர்புகள் வெளீயில் தெரியாமலே இருந்தன.

சீமான் இது பற்றீ முன்னர் தனக்கு தெரிந்து இருக்கவில்லை என்றூ சொல்லி உள்ளார். அதனை ஏற்றூக் கொண்டது நல்ல விடயமே. அவர் இங்கு நடந்த போராட்டங்கள் பற்றீயும் தெரிந்து கொண்டு பேச வேண்டும். சிரீலாங்காவைப் புறாக்கணீக்கும் போராட்டத்தை இங்கு இருக்கும் அமைப்புக்கள் பெரிய அளாவில் செய்ய வில்லை என்னும் விமரிசனம் நியாயமானது. இது தொடர்பாக இங்கிருக்கும் அமைக்களீடம் பலதடவை  கூறீ உள்ளேன், இனியாவது அவர்கள் சிந்திக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் கருத்து கத்தி,புலிபார்வை எதிர்ப்பு?
1)தேவைதான் 30%பேர் 
2)அதிதீதம்10%
3)புறக்கணிக்கபடவேண்டும் 60%
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் பேட்டியில் சில தகவற் பிழைகள் இருக்கின்றான ,

லைக்கா நிறூவனம் தமிழர்களீன் வாடிக்கையில் இங்கிலாந்த்திலோ  அய்ரோப்பவிலோ தங்கி இருக்கவில்லை.

லைக்கா நிறூவனம் ராசபக்சவுடன் கூட்டுச் சேர்ந்த பின் அவர்களூக்கு எதிராக பல போராட்டங்கள் புலத்தில் மேற்கொள்ளாப்பட்டன.

தமிழர்களீன் மத்தியில் லைக்கா தற்போது தனிமைப்படுத்தப்பட்டே இருக்கிறாது.

 

தமிழ்நாட்டிலும் லைக்கா புறாக்கணீக்கப்படுவது அவர்களூக்கு இன்னும் ஒரு பாடம். கத்தி, விஜேய் முருகதாஸ் என்னும் நட்சத்திரப் பின்னணீ அவர்களூக்கு இந்த தனிமைப்படுத்தலை முறீயடிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். தற்போது மானாவர் போராட்டத்தால் இந்தச் சதி முடிக்கப்பட்டிருக்கிறாது.

 

2007ம் ஆண்டு மாா்ச் மாதம் லைக்கா ஸ்கை நெற் என்ற மகிந்தாின் உறவினரான ஹிமல் லலிந்த கொட்டியராச்சியின் (Himal Lalindra Hettiarachchi) நிறுவனத்தை லைக்கா குழுமத்தை சோ்ந்த நிறுவனம் வாங்கியுள்ளதான இணையத் தகவல் ஒன்று தொிவிக்கிறது. அப்படியானால் போராட்ட காலத்தில் தமிழ்த் தேசிய வாதிகளின் அனுசரனையோட இந்நிறுவனம் வாங்கப்பட்டது? அவா்களின் முதலீடு சிறிலங்காவில் செய்யப்பட்டது? 

லைக்காவுக்கு எதிரான போராட்டம் என்ன... அறிக்கை விடக்கூட தயாராய் இல்லை புலம்பெயா்ந்த எமது நாடுகளில் வாழும் தேசிய வாதிகள்... இதில் சீமான் போராட வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?   லெபராவினால் விலைக்கு வாங்கப்பட்ட இணையங்களும்.. சிறு குழுமமும் தற்போது லைக்காவை எதிா்பாதாக பாவனை காட்டுகின்றது. 

 

ஏன் எனில் தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறை அல்ல... சிறிலங்காவில் தம்மால் முதலீடு செய்ய முடியாதுள்ளது என்ற ஏக்கமே இந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தனவேயன்றி... தமிழ்த் தேசிய வாதிகள் என்று சொல்லுபவா்களின் நடவடிக்கை அல்ல. 

தமக்குள் இருக்கும் பிரச்சினைகளை கையளமுடியாத அளவுக்கு தமிழ்த் தேசியத்தின் பெயாில் இயங்கும் அமைப்புக்கள்  நழிவடைந்துள்ளன. 

ஒன்றுமை... போராட்டம் என்பது இங்கு வெறும் கோசங்களாகி போனது சோகம்...!

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் கருத்து கத்தி,புலிபார்வை எதிர்ப்பு?

1)தேவைதான் 30%பேர் 

2)அதிதீதம்10%

3)புறக்கணிக்கபடவேண்டும் 60%

 

 

பையன்... நீங்க பையனாகவே இருக்கிறீங்க... நாங்கள் இப்பிடி எத்தினை கருத்துக்கணிப்பை எமது கருத்துக்களுக்கு ஏற்றவகையில் மாற்றினாங்கள் என்பது பலருக்கு தொியும்...!  

//அப்படியானால் போராட்ட காலத்தில் தமிழ்த் தேசிய வாதிகளின் அனுசரனையோட இந்நிறுவனம் வாங்கப்பட்டது? அவா்களின் முதலீடு சிறிலங்காவில் செய்யப்பட்டது? //

 

2009 ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு நிறூவனம் வாங்கப்பட்டால், இங்கு நீங்கள் தமிழத் தேசிய வாதிகள் என்பவர்கள் விடுதலைப் புலிகளே. அப்படியானால் நீங்கள் புலிகளீடமா இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை புலிகள் தமது இராணூவ நோக்கங்களூக்காக பல இத் தகைய முதலீடுகளைச் செய்து இருக்கிறார்கள்> அவ்வாறான ஒரு பாதையாக இது இருந்திருக்கக் கூடும். ஏனெனில் லைக்கா குழுமம் அப்போது மிக நெருக்கமாக வேலை செய்ததாகவே அறீகிறேன். புலிகளீன் அழிவின் பின்னர் அவர்கள் தமது முதலீடுகப் பெருப்பிக்கும் நோக்குடன் ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து இருக்க முடியும். 2009 ஆம் ஆண்டின் பின்னர் சிரீலங்காவில் எந்த முதலீடும் செய்யப்படாமல் அது புறாக்கனீக்கப்படிருக்க வேண்டும். தமிழத் தேசிய விடுதலைப் போருடன் நின்றா பலர் புலிகளீன் அழிவின் பின்னர் அரசுடன் கூட்டுச் சேர்ந்தனர்.  

 

//லைக்காவுக்கு எதிரான போராட்டம் என்ன... அறிக்கை விடக்கூட தயாராய் இல்லை புலம்பெயா்ந்த எமது நாடுகளில் வாழும் தேசிய வாதிகள்... இதில் சீமான் போராட வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?//

 

புலம் பெயர் தமிழர் இல்லாமல், புலம் பெயர் அமைப்புக்கள் இல்லை. அவை தவறூ செய்தால் அதைத் திருத்த வேண்டிய பொறூப்பு எம்மிடமே இருக்கிறாது. அது உங்களீடமும் இருக்கிறாது என்னிடமும் இருக்கிறாது. மற்றாவர் மீது ஒரு விரல் நீளூம் போது நான்கு விரல்கள் எம்மை நோக்கி இருக்கின்றான. அதனாலேயே சீமானின் விமரிசனத்தை ஏற்றூக் கொள்கிறேன் என்றூ எழுதி இருக்கிறேன்.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருத்தரும் அங்க உள்ள சனத்தை பற்றி யோசிக்க மாட்டீங்களா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையாலாம்.அங்கை சுவரே ஆட்டம் கானுது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அருமை பையா.. இணைப்பிற்கு நன்றி.. :D நான் நினைத்தமாதிரி இந்த பிரவீன் காந்திதான் அரைகுறை விளக்கத்துடன் படம் எடுத்துள்ளார். குறை காணுகிறவர்கள் ஒருமுறை இக்காணொளியைப் பார்ப்பது நல்லது. :D ஆனால் பார்க்கமாட்டார்கள்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.