Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேள்வியை கோசானிடம் கேட்டேன். அவர்  இக்கேள்விக்கு பதிலளிக்க விருப்பம் இல்லாது மற்றையவர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்க தனது  பொன்னான  நேரத்தை ஒதுக்கி பதிளித்து வருகிறார். அதனால் இக்கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் பதில் தேடுவது அறிவுபூர்வமான உரையாடலுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்.

கோசான்....  தனது, மண்டையில் வைச்சுக் கொண்டா, வஞ்சகம் பண்ணுகிறார்.

"பானையில்... உள்ளது தானே.... அகப்பையில் வரும்."

அவருக்குத் தெரிந்தது... புலிக்காய்ச்சல் மட்டுமே.... மற்றதை. கேட்டால்,.விரல் சூப்பிக் கொண்டிருப்பார். :icon_idea:

  • Replies 102
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும் துல்ஸ். உங்க கேள்விய வேணுமெண்டே புறக்கணிக்கவில்லை.

கூட்டமைப்பை ஒரு கட்சியா பதிவு செய்ய தமிழரசு கட்சிக்காரருக்கு விருப்பமில்லையாம்.

நான் ஒன்றும் தமிழரசுக் கட்சிகாரனில்லை, ஆனால் ஒரு கட்சியாக பதிந்து என்னாகப் போகிறது என்று எனக்கும் புரியவில்லை.

சுரேஸ் போன்ற சிலரின் அரசியல் எதிர்கால நன்மையை விட இதில் வேறேதும் இருப்பதாய் எனக்குத்தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் தேசிய விசேட நிகழ்வுகள் அடங்கிய பட்டியல் இங்குண்டு. பிரிட்டனைப் பற்றிய நூல்களை இதுக்குத்தான் படிக்கனும் என்றது. கூகிள் ஆண்டவர் எல்லாத்துக்கும் உதவி செய்யமாட்டார். :lol::D

http://resources.woodlands-junior.kent.sch.uk/customs/holidays.html

STF என்பது சிங்கள விசேட அதிரடிப்படை. அது சிவில் பொலிஸ் பிரிவு அல்ல. பயங்கரவாத தடுப்பு விசேட பிரிவில் உள்ளது. இது அண்மை வரை.. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ஒன்று. அவர்களுக்கு உள்ள சீருடை பொலிஸினது அல்ல. இராணுவத்தினதும் அல்ல. விசேட சீருடை உண்டு. மேலே படத்தில் உள்ளது போன்றது. பச்சை என்பது.. சிங்கள  இராணுவ சீருடையின் ஒரு வகை. இதில விதண்டாவாதம் வேற...! :lol::D

ஆர் மொக்குக்கூட்டம் எண்டு படிக்கிறவைக்கு விழங்கும். தேசிய நிகழ்வு எண்டு ஒரு கோதாரியுமில்லை. வரும் மக்களின் அளவு நிகழ்வின் தன்மையை குறித்து எவ்வளவு போலிஸ் தேவை என்ற நிர்ணயம் இருக்கும். அறப்படிச்ச புத்தகப் புழுக்களுக்கு இது விளங்காதது வியப்பில்லை.

STF of Sri Lanka police என்பதுதான் அவர்களின் பெயரே. அவர்கள் பொலிசின் ஓரங்கமே. எல்லோர்கும் IGP ஒருவர்தான். DIGகள் வேற்படுவர். அவர்கள் அணியும் சீருடைக்கும் ராணுவ சிஉருடையும் ஒன்றே, சின்னக்கள்தான் வேறுபடும்.

அதுசரி, யாழ்ப்பாணத்தில இருந்து சப்பித் துப்பி போட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவந்த புத்தக பூச்சிகளுக்கு கூகிள் மட்டும்தானே பொது அறிவு இருக்க முடியும்.

மன்னிக்கணும் துல்ஸ். உங்க கேள்விய வேணுமெண்டே புறக்கணிக்கவில்லை.

கூட்டமைப்பை ஒரு கட்சியா பதிவு செய்ய தமிழரசு கட்சிக்காரருக்கு விருப்பமில்லையாம்.

நான் ஒன்றும் தமிழரசுக் கட்சிகாரனில்லை, ஆனால் ஒரு கட்சியாக பதிந்து என்னாகப் போகிறது என்று எனக்கும் புரியவில்லை.

சுரேஸ் போன்ற சிலரின் அரசியல் எதிர்கால நன்மையை விட இதில் வேறேதும் இருப்பதாய் எனக்குத்தெரியவில்லை.

இல்லை கோசான் ஒரு கட்சியாக பதிவு செய்வதன் மூலம் சுரேஸ் எப்படி நன்மை பெறுவார் என்று எனக்கு விளங்கவில்லை புதிய கட்சி ஜனநாயக முறைப்படி மாவட்டரீதியாக உறுப்பினர்களை கொண்டு தெரிவு செய்யபட்ட பொதுக்குழுவை கொண்டிருந்த்தால் எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் விருப்பம் சார்ந்து இருக்கும் தானே. அதை தானே எல்லோரும் விரும்புவர். அது சரியானது தானே. அங்கு சர்வாதிகாரம் இருக்காது. நீங்கள்தானே கூறினீர்கள் தனிமனித சர்வாதிகாரம் கூடாது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

-----

STF என்பது சிங்கள விசேட அதிரடிப்படை. அது சிவில் பொலிஸ் பிரிவு அல்ல. பயங்கரவாத தடுப்பு விசேட பிரிவில் உள்ளது. இது அண்மை வரை.. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ஒன்று. அவர்களுக்கு உள்ள சீருடை பொலிஸினது அல்ல. இராணுவத்தினதும் அல்ல. விசேட சீருடை உண்டு. மேலே படத்தில் உள்ளது போன்றது. பச்சை என்பது.. சிங்கள  இராணுவ சீருடையின் ஒரு வகை. இதில விதண்டாவாதம் வேற...! :lol::D

அட.... ஸ்ரீலங்காவின் அதிரடிப்படை,  பாலியல் வன்கொடுமை, களவு, ஆட்கடத்தல் போன்றவற்றில் பிரசித்தம் பெற்றது. இந்தக் கூட்டம் ஏன்... நல்லூர் திருவிழாவுக்கு?

எமக்கு.... காக்கி உடுப்பெண்டால் பொலிஸ்.

பச்சை உடுப்பெண்டால்.... இராணுவம்  எண்டு தெரியும்.

கோசான்.... ஸ்ரீலங்கா காவல் துறையின், உடை வடிவமைப்பாளர் என்று,

இன்று..... தெரிந்து கொண்டது புதிய செய்தி. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ், பல்வேறு கட்சிகளின் கூட்டாக இருந்தால் ஒரு plurality இருக்கும். ஒரு கட்சி என்றில்லாமல் தமிழரை பிரதிநிதிதுவம் செய்யும் பல கட்டிகளின் குரலாய் கூட்டமைப்பு இருக்கும்.

ஒரே கட்சியாய் இருந்தாலே ஸர்வாஅதிகாரம் கூடும். கஸ்மீரிலும் ஹூரியத் என்பது இப்படி பட்ட அமைப்பே. கூடமைப்பை ஒரு கட்சியாக்கினால் தமிழரின் அடுத்த பெரிய கட்சி எனும் பெயர் தானாகவே ஈபிடிபிக்கு போகும்.

இப்போ பத்தோடு பதினொன்றாக இருக்கும் சுரேசுக்கு எதோ ஒரு பதவி போகும், மண்டையன் குழுதலைவருக்கு இது தேவையில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

fantasy-0065.gif

ஹ...ஹா...ஹ...
"கூரை ஏறி, கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில்..... வைகுண்டம் ஏறப் போறானாம்" :lol:  :icon_mrgreen: 

துல்ஸ், பல்வேறு கட்சிகளின் கூட்டாக இருந்தால் ஒரு plurality இருக்கும். ஒரு கட்சி என்றில்லாமல் தமிழரை பிரதிநிதிதுவம் செய்யும் பல கட்டிகளின் குரலாய் கூட்டமைப்பு இருக்கும்.

ஒரே கட்சியாய் இருந்தாலே ஸர்வாஅதிகாரம் கூடும். கஸ்மீரிலும் ஹூரியத் என்பது இப்படி பட்ட அமைப்பே. கூடமைப்பை ஒரு கட்சியாக்கினால் தமிழரின் அடுத்த பெரிய கட்சி எனும் பெயர் தானாகவே ஈபிடிபிக்கு போகும்.

இப்போ பத்தோடு பதினொன்றாக இருக்கும் சுரேசுக்கு எதோ ஒரு பதவி போகும், மண்டையன் குழுதலைவருக்கு இது தேவையில்லை என்பது என் கருத்து.

கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியை  மண்டையன் குழு தலைவர் என்று கூறுவது நாகரீகமானதல்ல.  இன்று அவர் மக்களால் ஏற்று கொள்ளபட்ட தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அவர் 1987-90 வரை அவர் அங்கம் வகித்த கட்சி தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு (அகிலன் அண்ணா கொலை உட்பட) பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும். அதன் பின் மண்டையன் குழு விமர்சனத்தை நானும் கைவிடுவேன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பதால் மகிந்தவை நீங்கள் சும்மா விடுவீர்களா?

மகி்ந்தவை நான் என்ன செய்ய. அவரை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அவருக்கு தண்டனை கிடைத்தாலென்ன விட்டாலென்ன. நான் விரும்புவது எதிர்காலத்தின் சிங்கள அடக்குமுறைக்கு உள்ளாகாத  நிரந்தரமான அரசியல் தீர்வே. அதற்காகவே இவ்வளவு இளம் போராளிகள் பாரிய அர்பணிப்பை செய்தார்கள். நான் கூறியது புலிகள் உட்பட அனைத்து இயக்க உண்மைப்  போராளிகளையும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு செய்தியின் படி கோவில் நிர்வாகத்தின் அழைப்பினாலேயே அவர்கள் வந்தார்கள். இராணுவம் வந்திற்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும்.

கோசான் சுரேஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. அதை என்னால் இப்போது நிருபிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பவதும் அதையே. ஆனால் பொறுப்புகூறல் மிக முக்கியம்.

எல்லா போராளிகளும், புலிகள் உட்பட எம் பிள்ளைகளே. யாரும் சக தமிழனை கொல்லவென வீட்டை விட்டுப் போராட போகவில்லை.

ஆனால் எல்லோரும் தப்பிழைத்தார்கள், அகிம்சவாதிகள் உட்பட.

இது எல்லோரும் தம் கடந்தகால பிழைகளுக்கு பொறுப்பு கூறி, மன்னிப்புக் கேட்டு முன்செல்ல வேண்டிய நேரம்.

கடந்தகால பிழைகளை மூடி மறைப்பதோ, புலிகள் தப்பே செய்யவில்லை அவர்கள் பாணியில் தொடர்ந்தும் செயல்படுவோம் என்பதோ முன்னேற்றத்துக்கான வழியாகாது.

மீரா அப்படியாய் இருப்பின், ஆதாரம் தந்தால் - என் விமர்சனமும் கைவிடப்படும். ஆனாலும் ஒரு முக்கிய பொறுப்புக்கு சுரேஸ் தகுதிவாய்ந்தவரா எனும் என் சந்தேகத்தில் மாற்றமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

TNA ஆரம்பித்த போது வழங்கிய பேட்டிகளில் இருக்கலாம்?

நீங்கள் கூறியதை ஏற்று கொள்கிறேன் கோசான். இங்கு ஒரு சிலரின் பதிவுகளுக்கு பதில் சொல்லும் பாங்கில் அர்பணிப்புகள் புரிந்த போராளிகளை அவமதிக்கும் உங்கள் போக்கை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இது தனிப்பட்ட உரையாடல் அல்ல. பல்லாயிரம் வாசகர்கள் இதை வாசிக்கிறார்கள். ஆகவே தனிப்பட்ட நபர்களின் சீண்டல்களுக்கு வீட்டு வரவேற்பறையில் நின்று பதிலளிக்கும் பாணியில் நீங்கள் செய்வது சரியானதல்லை. அவ்வாறு நீங்கள் செய்வது சரி என்று நீங்கள் கருதுவீர்களானால் அவர்கள் நிலையில் அவர்கள் செய்வதும் சரியே. இது நாகரீகமான தளமாகவும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கிறேன் துல்ஸ். சிலசமயங்களில் உண்மைகள் நாகரீகமில்லாதவையாய்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
அது அநாகரீகம் ஆனவர்களுக்கு.....
நாகரீகம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கிறேன் துல்ஸ். சிலசமயங்களில் உண்மைகள் நாகரீகமில்லாதவையாய்தான் இருக்கும்.

உண்மை என்பதை அப்பளுக்கற்றது என்போம்

அதாவது உண்மை எப்பொழுதும் 

மாறாததாகவும்

தூய்மையானதாகவும்

பிறர் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கும்...

அதையே  நாம் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றோம்

எமது குறிக்கோளுக்கு தேவையானவற்றை

அடுத்த சந்ததிக்கு   தேவையானதை

நாம் தொடர்ந்து எழுதி  வருகின்றோம்

செய்தும் வருகின்றோம்

எமது வருகைக்கு ஒரு   நோக்கம் உண்டு

நிச்சயமாக

டக்லசுக்கோ

முரளிதரனுக்கோ  தொழில் செய்யவழி  அமைக்க நாம் இங்கு மினக்கெடவில்லை

அப்படி செய்வதென்றால்

நாமே கோடிக்கணக்கில் இந்த நேரத்தை செலவளித்து உழைத்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனாலும் ஒரு முக்கிய பொறுப்புக்கு சுரேஸ் தகுதிவாய்ந்தவரா எனும் என் சந்தேகத்தில் மாற்றமில்லை.

டக்கிளஸுக்கு தகுதியிருக்கு என்றால் நிச்சயம் சுரேஸுக்கும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸுக்கு தகுதியிருக்கு என்றால் நிச்சயம் சுரேஸுக்கும் இருக்கு

டக்ளசுடன் சேருந்தால்  மட்டுமே

சுரேசுக்கு அந்த தகுதி  வரலாம்... :(

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசுடன் சேருந்தால்  மட்டுமே

சுரேசுக்கு அந்த தகுதி  வரலாம்... :(

ஒரு காலத்தில் சேர்ந்து இருந்தவையள் தானே..........அவன் என்ட தளபதி.... :D என்று ட்க்கிளஸ் சொல்லுவார்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் சேர்ந்து இருந்தவையள் தானே..........அவன் என்ட தளபதி.... :D என்று ட்க்கிளஸ் சொல்லுவார்

அதைத்தான் சொல்லவந்தேன்

அவர்    கூட்டமைப்பைவிட்டு வெளியேறி

தனது பழைய  இடத்துக்கு வரணும்

ஒருத்தரும் திருந்தினால் எங்களுக்கு பிடிக்காது

புலிகளைத்தவிர.......

:(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மாதிரி கொஞ்ச "புலம் பெயர் well established :)இன்டர்நெட் தேசிய போராளிகள் " வாங்கின வக்காலதிலே..புலிகள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் இதுக்கு அதா ...அதுக்கு இதா என்று தெரியல்ல கோன்பியுஸ் ஆயிட்டேன்.... sorry

நாந்தான், நான் என்னை புலம்பெயர் தேசியப்போராளிகள் என்று அறிமுகப்படுத்தபவில்லை ... அப்படியிருக்க நீங்களாக கற்பனை படுத்தி confuse ஆனதற்காக வருத்தபடுகிறேன்...

நான் யாருக்கு வக்காளத்து வாங்கினேன் என்று தெளிவு படுத்தமுடியுமா...please note, I have no idea who is Nedducs... and had lots of hart time with... Tigers...but me or my family never hate them

எல்லாற்றையும் உங்களுக்கு சொன்னதாக எடுக்க வேண்டாம்...இது இரு தரப்பின் பொழுது போக்கு...மாறி மாறி ஒரு தரப்பு மற்ற தரப்பின் மேல் கண்ட மேனிக்கு சேறு அடிப்பது எங்கள் வாடிக்கை....ஆகவே எதையும் தனிப்பட்ட முறையில் எடுக்கவேண்டாம்...ஒரு பொழுதுபோக்காக ஏதாவது ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்து..அதனை பலப்படுத்தவும் உங்களுக்கு தெரிந்த தரவுகளோடு அல்லது உங்களின் அனுபவங்கள் ஊடாக.......

நீங்கள் கூறிய இரு தரப்பிலும் சேர எனக்கு இஷ்டம் இல்லை. தயவு செய்து என்னை அந்த தரப்புகளுள் சேர்த்து சேறு அடித்து விடாதீர்கள். நான் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாற்றையும் உங்களுக்கு சொன்னதாக எடுக்க வேண்டாம்...இது இரு தரப்பின் பொழுது போக்கு...மாறி மாறி ஒரு தரப்பு மற்ற தரப்பின் மேல் கண்ட மேனிக்கு சேறு அடிப்பது எங்கள் வாடிக்கை....ஆகவே எதையும் தனிப்பட்ட முறையில் எடுக்கவேண்டாம்...ஒரு பொழுதுபோக்காக ஏதாவது ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்து..அதனை பலப்படுத்தவும் உங்களுக்கு தெரிந்த தரவுகளோடு அல்லது உங்களின் அனுபவங்கள் ஊடாக.......

நாந்தான், எனது பிரசன்னமானது... பொழுதை போக்குவதற்காக அல்ல... ஏதாவது என்னால் உருப்படியாக எல்லாரையும் ஒருங்கிணைத்து ஏதாவது.. செய்யலாமா. என்பது தான்... I have been reading yarl for past 7 years... And get angry when people fight with each other... This is our enemy wants... . If I can't change any thing I won't come back...here.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.