Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தி அதிக லாபமீட்டும் கற்றாளை செய்கை! முருங்கனில் வெற்றி (படங்கள்,வீடியோ)

Featured Replies

 
 
murugkan%2044889557.jpg
 
குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டத்தக்க வகையில் கற்றாளைச் செய்கைகை மன்னாரில் விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மன்னார், முருங்கனில் உள்ள நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதம வதிவிடப் பொறியியலாளர் காரியாலயத்தில் பரீட்சார்த்தமாக இந்த கற்றாளைச் செய்கை சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
 
ஒரு வருடகாலத்தில் கற்றாளை பழம் அறுவடைசெய்ய கூடியதாகவுள்ள இவ் செய்கையில், சுமார் 25 வருடங்கள் வரை அதன் பயனை பெற்றுக்கொள்ளமுடியும். இங்கு அறுவடை செய்யப்படும் கற்றாழைபழம் ஒரு கிலே 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முருங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து கார்கில்ஸ் நிறுவனத்தின் அனுராதபுர கிளைக்கு கற்றகழைபளம் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. அத்துடன் கற்றாளைச் செய்கையை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் பொருட்டு கற்றாளைப் பயிர் துண்டம் ஒன்று 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படடு வருகிறது. இதேவேளை இங்கு திராட்சைப்பழம், அம்பர்லா காய், மாதுளை போன்ற பழ வகைகளும் செய்கை பண்ணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. -
 
murugkan%2044889560.jpg
 
murugkan%2044889556.jpg
 
 
http://malarum.com/article/tam/2014/08/24/4824/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-i-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-i-.html#sthash.uJCAivk2.dpuf
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையில் ஒரு பழம் வரும்.. அதை சாப்பிடலாம் (??) என்று இப்பத்தான் அறிகிறேன்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பழம் மாத்திரமில்லைங்க உலகப்புகழ் சோமபாணம் Tequila வும் நீலக்கத்தாழையில் இருந்துதான்.

Agave_tequilana0.jpg

வல்லிபுரக்கோயில் பகுதியில் நீலக்கத்தாழை கூடுதலாக காணப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி பெருமாள்.. :D சோமபான செய்முறை பற்றி ஏற்கனவே அறிந்துள்ளேன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையில் இருந்து குளிர்பானம்(alovera)gel,cream அழகுசாதனப்பொருட்கள் மருந்துகள் என்பனவும்தயாரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையில் ஒரு பழம் வரும்.. அதை சாப்பிடலாம் (??) என்று இப்பத்தான் அறிகிறேன்.. :huh:

 

நமக்கு..... வாழைப்பழம், மாம்பழம், பிலாப்பழம் என்று முக்கனிகள் இருக்கும் போது,

கத்தாளைப் பழம் எதற்கு? :D

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாழையின் பயன்கள் :

 
       

கற்றாழையின் பயன்கள் :

           

aloe-vera-plant.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பயன்படுத்தும் முறைகள்:
தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும்.அடுத்து என்ன கேக்கரிங்கனு புரியுது!!ஏன் கழுவனும்தானே...கற்றாழை சோற்றில்Aloin என்ற வேதிப்பொருள் இருக்குங்க, கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுமுங்க!!
 
மருத்துவ பயன்கள்;
1. கற்றாளை சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
2. குமரி பூச்சு - அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.
3. குமரி களிம்பு - முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும்  நான் சேருகிறேன். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.
4. குமரி பக்குவம் - இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.
5. குமரி எண்ணெய் - என்னுடைய சோற்றை,எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி,தலைக்கு தேய்த்து வர முடி  நன்றாக கருமையாக வளரும்.தூக்கம் சிறப்பாக வரும்.
6.என்னைக்கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும்.
 
 
 
Kaththalai.jpg
 
மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை!.

        மருத்துவக் குணங்கள்

1.       கற்றாழை ஜெல்லை (சோறுசுத்தமான நீரில் 7 முறைகழுவி சுத்தம் செய்து,
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள்இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2.             உடலில் கஸ்தூரி மணம் வீசும்சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3.         கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள்வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.
4.          இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால்முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5.         கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்துஅதை தேங்காய்எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதைதலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள்தலைமுடி நன்குசெழித்து வளரும்   
6.          .காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம்சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்உடல்பருக்காமலே.பலகீனம் மறையும்   தாதுவிருத்தி ஏற்படும்.பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;
 
7.     சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமானஅளவுகளில்காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்வயிறுதொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .
 
.
8.     கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்புநீர்தாரைஎரிச்சல்மாதவிடாய் கோளாறுகள்உடல் வெப்பம்உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்குசோற்றுக் கற்றாழைஉள்ள நுங்கு (சோறுபோன்ற சதையை எடுத்து சுத்தமானநீரில் அலசிக் கொள்ள வேண்டும்பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை,மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.இதனால் உடல் உஷ்ணமும்எரிச்சலும் குறையும்.
9.     வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகிகண்கள் சிவந்து விடும்அப்போது,கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்துகண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும்இப்போது கண் எரிச்சல்குறைவதோடுசிவந்தநிறமும் மறைந்து விடும்.
10.       இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடுஉடலுக்கு பலநன்மைகளும் கிடைக்கும்.
11.    சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில்நெருப்பை மிதித்ததுபோலஎரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம்பாத எரிச்சல் குறைவதோடுபாதவெடிப்புகளும் குணமாகும்.
12.   சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத்தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும்எரிச்சலும் குறைந்துஉடல் குளிர்ச்சியடையும்உடலில் எந்தப் பிரச்சினையும்இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத்தடவி வரலாம்.
13.  வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத்தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைஏற்படுவதோடுஉடல் வனப்பும் ஏற்படும்இந்த சோற்றுக்கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயேதயாரிக்கலாம்.
14.  சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ,விளக்கெண்ணெய் 1 கிலோபனங்கற்கண்டு அரை கிலோ,வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக்கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிஇரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம்,வயிற்று வலிபசியின்மைகுன்மக் கட்டிரணம்,புளியேப்பம்பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்தமலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15.    செரிமான சக்தியை அதிகரிக்கும்பசியை உண்டாக்கும்.

 

16.  இதுமட்டும் ல்லாமல் பெரும் ஏப்பம்பசியின்மை,குன்மம்தண்டு வலிவயிற்றுப் பொருமல்அடிவயிறுவீக்கம்மலச்சிக்கல்நரம்புச் சூடு தணியும்.
17.  இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளைகுடித்து காரம்புளி உள்ள உணவு வகைகளை நீக்கிசாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18.  எரிச்சல்நீர்க்கசியும் கிரந்திஅரிப்புதினவுமஞ்சள் மற்றும்சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல்தாது இழப்புஅரையாப்பு,தொடைக்கட்டிஅக மற்றும் புற உறுப்புகளில் உள்ளஇரணங்கள்சீழ் வடிதல்மலச்சிக்கல்குணமாகும்.வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக்குணமாகும்மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும்,புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19.  வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்குஇடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால்மூட்டுவலி ஏற்படுகிறதுஇவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்தமுடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
 

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த்டிரிங்க்உதவும்.

 
     இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில்குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள்சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்றதிரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில்மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லாவகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம்அளிக்கிறது.

 

     20)  இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின்     தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான்இதன்சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்  சர்மநோய்களையும் குணப்படுத்துகிறது.
 
21) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள்உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிதுகற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து  காலையில்வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.
 
   22)தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
  23) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாககற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியதுவைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறுசருமத்திலுள்ளகொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன்கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
      மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவைஒழுங்குபடுத்தும்கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்துஇதில் சிறிதுபடிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும்இதில்வெண்ணெய்கற்கண்டுவால் மிளகுத் தூள் சேர்த்து,சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம்மேக நோயால் ஏற்பட்டவெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்தசோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்து  கொண்டுஇதில்சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்துவிளக்கெண்ணெய் 300 கிராம்பனங்கற்கண்டு 300 கிராம் இவையாவையும் ஒன்று சேர்த்து  அடுப்பில் வைத்து சிறு தீயாகலேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை,மாலைஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்துவகையான வயிற்று வலியும்வயிற்றுப் புண்களும்குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்தசோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத்துண்டுகளை நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும்மடல்துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை,காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும்மூன்று நாள்உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்றுவிடும்இதே முறையில்மூன்று தினங்கள் சாப்பிட்டால்நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்கழுவிச் சுத்தம் செய்தகற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டுஇதில் சின்னவெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக்குறையாமல் சேர்த்துக் கொண்டுஇந்த கற்றாழைச் சோற்றில்கலந்துகடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து,எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடிவத்தால்கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும்.இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணிநேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும்தாராளமாக சிறுநீர்வெளியேறிவிடும்.

புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம்பசும் பாலில் கலந்து காலைமாலை சாப்பிட்டு வந்தால் பத்துதினங்களில் மூலச் சூடு தணியும்சொறிஅரிப்பு நீங்கும்.விந்து உற்பத்தி அதிகரிக்கும் 

பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழைமடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்றுதேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடிநூலால் கட்டிஇரவு கூரைமேல் வைத்து எடுத்தால்மூன்றாவது நாளில்பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும்.இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள்சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளை நோய்குணமாகும்.

 

கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின்சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துஇதில்சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால்சோற்றுப்பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்இந்த நீருக்குச்சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்துநீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டுதினசரிதலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்நல்லதூக்கம் வரும்
..கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோஇதரகாரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச்சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்.மூன்று தினங்களில் நோய் குணமாகும்கற்றாழைச் சோற்றில் சிறிதுபடிக்காரத்தூள் சேர்த்துஒரு துணியில் முடிச்சுக் கட்டிதொங்கவிட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்துஎடுத்துக்கொண்டுஇதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டுவந்தால்கண்நோய்கள்கண்களில் அரிப்புகண் சிவப்பு மாறும்.குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய்தயாரிக்கசோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோதயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்எண்ணெய்பசுமை நிறமாக மாறிவிடும்இதில் தேவையான வாசனையைக்கலந்து வைத்துக் கொண்டுகுளியலுக்குப் பயன்படுத்தினால்குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

 

 
 
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைபயன்படுத்தலாம்.
 
கேசப் பராமரிப்பில் தலைக்கு கருப்பிடவும்  கேசத்தின்வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறதுதலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை  நீக்குகிறதுதோல் இறுக்கத்திற்கு  சுகமளிக்கும் மருந்தாகிறது    சோற்றுக் கற்றாழை  சோற்றை  எடுத்து  எண்ணெயிலிட்டுக் காய்ச்சித்தலைமுழுகி  வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.
 
 
 
தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களைவெட்டிசிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்துஇட்லிப்பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால்ஆவியில் வேகவைத்து எடுத்துநன்கு காயவைத்துப் பொடி செய்துவைத்க்து கொண்டுதினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்துசாப்பிட்டு வந்தால்தாம்பத்திய உறவு மேம்படும்தாம்பத்தியஉறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்துதயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச்செயல்படுகிறதுசருமத்தின் ஈரப் பசையைப் பாதுகாக்கிறது .சருமநோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது.
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

drachenfrucht_2Than_Long_Green_Gragon.jp

 

13-03-27-drachenfr%C3%BCchte-markt.jpg

 

180px-Drachenfrucht.jpg

10_b692466eb8f102510b26e405f0b37ff8.jpg

 

 

வியட்னாமில் இந்தப்பழம் அதிகமாக விளைகின்றது என நினக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்தி கள்ளி / நாகதாளிப்பழம் -

 

cactus-4.jpeg

 

 

இந்த பழம்தான் ஊரில் சாப்பிட்டுள்ளேன், எங்கள் ஊரில் தாராளமாக கிடைக்கும். சாப்பிடும் போது கவனமாக முள்ளை எடுக்க வேண்டும் அல்லது நாக்கு முழுக்க முள்ளாகதானிருக்கும். இங்கு வந்தபின் இங்கும் அதை ஒரு கடையில் விற்பதை பார்த்தேன், அந்தக்கடைக்குப்போனா முதலில் தேடுவது இதைத்தான், கிடைப்பது அரிது.

 

மேலே முருங்கனில் பயிரிடப்படும் கற்றாளை ஊரில் கணக்கற்று இருக்கும், வெட்டியெறிவது வழக்கம், இப்பதான் தெரியும் இதன் பழமும் சாப்பிடலாமென்று, தவறவிட்டுவிட்டேன். இதன் முள்ளுக்குத்தினால் வழி தாங்க முடியாது. முருங்கனில் உள்ள கற்றாளையை நாங்கள் பெயர்பதிக்கதான் அதிகம் பயன்படுத்தியுள்ளோம் :lol:

 

சோற்றுக் கற்றாளை இங்கு வீட்டிலிருக்கு, சவரம் செய்தபின் தடவினால் அந்த மாதிரி குளிரும், சருமமும் மென்மையாக வரும்


பழம் மாத்திரமில்லைங்க உலகப்புகழ் சோமபாணம் Tequila வும் நீலக்கத்தாழையில் இருந்துதான்.

Agave_tequilana0.jpg

வல்லிபுரக்கோயில் பகுதியில் நீலக்கத்தாழை கூடுதலாக காணப்பட்டது.

 

இதன் முள்ளுக்குத்தினால் வலிதங்க முடியாது, பயங்கர வலி

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையில் ஒரு பழம் வரும்.. அதை சாப்பிடலாம் (??) என்று இப்பத்தான் அறிகிறேன்.. :huh:

இந்தாங்கோ, இசை!

 

சின்ன வயதின்போது கடற்கரைகளில் நிறைய கத்தாழைப்பழம் சாப்பிட்டுள்ளேன்!

 

கொஞ்சம் முள்ளிருக்கும்.. ஒரு கல்லில் உரஞ்சிப்போட்டுச் சாப்பிட... அந்த மாதிரி! :D

 

என்ர சிவப்பு நிறத்துக்கு, இந்தக் கத்தாழைப் பழமும் ஒரு காரணம் என்று இன்னும் நம்புகிறேன்! :icon_idea:

Opuntia_dillenii_(Los_Sauces)_03_ies.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவல்களுக்கு.. :D குமாரசாமியண்ணை இணைச்ச பழத்தை இங்கே கடைகளில் வாங்கலாம். அடுத்தமுறை வாங்கிப் பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளை

நாகதாளி..

 

இரண்டும் வேறு வேறல்லவா......?

இவை  இரண்டும் எனது வீட்டைச்சுற்றி  வளர்பவை..

 

இவற்றில் பெரும் பலன்கள் இருப்பவை பிரான்சுக்கு வந்திபின் தான் தெரிந்து கொண்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்குமட்டும் இதன் அருமை பெருமை தெரியாது இங்கு அதே கத்தாளையை "அலேவீரா சுவீட் டிரின்ங்ஸ்" என்று vat ஜ செலுத்தி உடம்பிற்க்குள் ஊத்திரம்.

 

NEW-Grace-Aloe-Vera-Range-Plain-Strawber

  • கருத்துக்கள உறவுகள்

யுகேயில் http://www.wholesalefruitvegetableflowers.co.uk/ இரவு நேர காய்கறி சந்தையில் கத்தாளை 1kg சுமார்£6லிருந்து £8 க்குள்ஏறி இறங்குவதுன்டு தற்போதைய எபோலா பிரச்சினையால் ஆபிரிக்கன் சப்பிளைகள் குறைவு நம்மாட்களின் விலை ரூ 400.00kg clo-lhr விமான சரக்கு எமிரேட்ஸ் ,ஓமான் air சராசரி $1.8 kg பொதியிடல் போக்குவரத்து லாபம் என பார்த்தால் அடக்கவிலை £3.65க்குள் தான் நம்மாட்கள் முயற்ச்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Drachenfrucht.jpg

இந்த பழம் ஆம்பிளையளுக்கு நல்லதெண்டு ஒரு வியட்னாம் பெடியன் சொன்னவன். அப்பப்ப வாங்கி சாப்பிடுறானான்... :)  முட்டுக்காய் பருவம் இன்னும் வேசேசமானது  :D

  • கருத்துக்கள உறவுகள்

கு சா - விசேசமானது என்பதை வேறு அர்த்தம் வாறமாரி எழுதியிருக்கிறீர் ;)

  • கருத்துக்கள உறவுகள்

------

என்ர சிவப்பு நிறத்துக்கு, இந்தக் கத்தாழைப் பழமும் ஒரு காரணம் என்று இன்னும் நம்புகிறேன்! :icon_idea:

------

 

அவுசில்..... ஒரு, யாழ்கள சந்திப்பு நிகழ்ந்தால், உங்கடை நிறம் வெளிச்சமாயிடும் :icon_idea:

அது வரை.... நீங்க என்ன, பீலா... விட்டாலும், நாங்க கேட்க வேண்டும் என்ற நியதி இல்லை. புங்கை. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பழம் ஆம்பிளையளுக்கு நல்லதெண்டு ஒரு வியட்னாம் பெடியன் சொன்னவன். அப்பப்ப வாங்கி சாப்பிடுறானான்... :)  முட்டுக்காய் பருவம் இன்னும் வேசேசமானது  :D

 

குமாரசாமி அண்ணே..... உங்களுக்கு, இப்போ.....

சின்ன வெங்காயமும், முருக்கக்காயும்...  எதிரி பார்த்த பலனை,  தருவதில்லையா?

நாசமறுந்தவங்கள்....  அதிலையும்,  கலப்படம் செய்ய வெளிக்கிட்டங்கள். :o 

 

boycott-sri-lanka-04-dollar.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா ஆதவன் இணைத்த இந்த பிரையோசமான திரியும் எரியுது என்று பார்த்தால் இப்படி போகுது.சரி வந்திட்டன் ஏதும் பிரையோசனம் விசேடமாக இருந்தால் எனக்கும் சொல்லுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளை

நாகதாளி..

 

இரண்டும் வேறு வேறல்லவா......?

இவை  இரண்டும் எனது வீட்டைச்சுற்றி  வளர்பவை..

 

இவற்றில் பெரும் பலன்கள் இருப்பவை பிரான்சுக்கு வந்திபின் தான் தெரிந்து கொண்டேன்...

இதில் சொல்லப்பட்ட கத்தாளையை தாய்லாந்தில் பல இடங்களில் அவதானித்துள்ளேன்!

 

அநேகமாகக் காலை உணவின் போது பரிமாறுவார்கள்! துப்புரவுக்கு 'இனிப்பு' சுவை இல்லாதது!

 

ஆங்கிலத்தில் இதனை  Dragon Fruit  என்று அழைப்பார்கள். உடம்புக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள்!

 

அவுசில் மிகவும் விலை அதிகம்! :o

 

இதுவும் கத்தாளைக் குடும்பமாக இருக்கலாம்!

 

ஆனால், நம்ம ஊர் நாகதாளிப் பழத்தின் இனிப்பு சுவையை, வேறு எந்த வகைக் கத்தாளையிலும் இதுவரை காணவில்லை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில்..... ஒரு, யாழ்கள சந்திப்பு நிகழ்ந்தால், உங்கடை நிறம் வெளிச்சமாயிடும் :icon_idea:

அது வரை.... நீங்க என்ன, பீலா... விட்டாலும், நாங்க கேட்க வேண்டும் என்ற நியதி இல்லை. புங்கை. :D

எங்கள் அண்ணர் காத்துப்போன ட்ராக்டரில நின்டு படம் ஒண்டு எடுத்தவர் .அதை நீங்க பாக்கேல்லயா சிறியர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் அண்ணர் காத்துப்போன ட்ராக்டரில நின்டு படம் ஒண்டு எடுத்தவர் .அதை நீங்க பாக்கேல்லயா சிறியர்

 

டயரேயில்லாமல் றிம்மிலை நிக்கிற மிசினுக்கு அண்ணன் போஸ் குடுக்கிறார்........நீங்க வேறை  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டயரேயில்லாமல் றிம்மிலை நிக்கிற மிசினுக்கு அண்ணன் போஸ் குடுக்கிறார்........நீங்க வேறை  :D  :lol:

அண்ணரும் பாத்தாச்சா?  :o

 

ஒண்டும் வித்தியாசமா நினைக்காதீங்க அண்ணை  .....அந்தப்படம் மார்கழி மாதம் எடுத்தது.... எங்கட ஊர் சூரியனைப்பற்றி உங்களுக்குத் தெரியும் தானே..!

 

அது தான் கொஞ்சம் நிறம் மங்கித் தெரியுது..! :icon_idea:

 

hot-enough-to-fry-an-egg-on-the-sidewalk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணரும் பாத்தாச்சா?  :o

 

ஒண்டும் வித்தியாசமா நினைக்காதீங்க அண்ணை  .....அந்தப்படம் மார்கழி மாதம் எடுத்தது.... எங்கட ஊர் சூரியனைப்பற்றி உங்களுக்குத் தெரியும் தானே..!

 

அது தான் கொஞ்சம் நிறம் மங்கித் தெரியுது..! :icon_idea:

 

hot-enough-to-fry-an-egg-on-the-sidewalk

 

 

அவுஸ்ரேலியா வெக்கையை பத்தி எங்களுக்கு தெரியும் தானே..... :)
என்ன இது.... :(
இதுக்குப்போய் முட்டை பொரிக்கிற படமெல்லாம் போட்டு சத்தியம் செய்யுறியள்.... :o
உங்களை கறுப்பு எண்டு சொல்லுறவனை கட்டாயம் கண் டாக்குத்தரிட்டை அடிச்சு கலைக்க வேணும்  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

அவுஸ்ரேலியா வெக்கையை பத்தி எங்களுக்கு தெரியும் தானே..... :)
என்ன இது.... :(
இதுக்குப்போய் முட்டை பொரிக்கிற படமெல்லாம் போட்டு சத்தியம் செய்யுறியள்.... :o
உங்களை கறுப்பு எண்டு சொல்லுறவனை கட்டாயம் கண் டாக்குத்தரிட்டை அடிச்சு கலைக்க வேணும்  :icon_idea:

 

 

எமது ஊரில் எந்த இடம்  என்று சொன்னால் நான் நிறத்தை சொல்லுவன்...

அந்தவகையில் 

புங்கையண்ணா

தமிழரின் நிறம்

இதில் மாற்றுக்கருத்தே இல்லை... :D

அந்த பெருமைதானே முக்கியம்

இல்லையா புங்கையண்ணா....? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.