Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

புங்குடுதீவில்  மக்களின் வாழ்வாதாரங்களை   மேம்படுத்தும் நோக்குடன்

முக்கியமாக மக்களின் கல்வி  வளர்ச்சிக்கு உதவும் முகமாக 

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பல வளர்ச்சித்திட்டங்களை  கடந்த பல வருடங்களாக  செய்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

அந்தவகையில் புங்குடுதீவு  மத்தியில் அமைந்திருக்கும்

உயர்தர மாணவர்கள் பயிலும் உயர்தரப்பாடசாலையான மகாவித்தியாலயத்தை 

தரம் மற்றும் பலன் உயர்த்தும் நோக்குடன் புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் அவர்களால் நீண்ட நாட்களாக விடப்பட்ட  கோரிக்கையை  ஏற்று செயற்படுத்த France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் ஆரம்பித்துள்ளதை இத்தால் அறியத்தருவதில் France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  பெருமை கொள்கிறது.

இத்திட்டம்

60 லட்சம் ரூபாக்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு

ஒப்பந்தக்காரரும்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியமும்

அதிபர் 

அத்துடன்

இலங்கை சர்வோதய  அமைப்பை இடை கண்காணிப்பாளராக இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு

வடஇலங்கை கல்வி அதிகாரியின் ஒப்புதலும் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வேலைத்திட்டத்துக்கான 1/3  பணம் செலுத்தப்பட்டு

வேலைகள் நடைபெற்று வருகின்றன  என்பதை அறியத்தருவதுடன்

வேலைத்திட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் படங்களையும் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

வரம்புயர என்ற வரிகளைச்சுமந்து

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்

என்றும் முன்மாதிரியாக முன் செல்லும் என்பதை சொல்வதில் பெருமை கொள்கின்றோம்.........

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய எமது மத்தியகுழு உறுப்பினர் திரு கிருஸ்னபிள்ளை

அவர்கள் புங்குடுதீவு சென்றபோது எமது மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் கட்டுமானம் விடயமாக எடுத்துவந்த நிழல்படங்கள் .

சுற்றுமதில் ஆரம்பகட்டப் பணிகள் படங்கள்

https://drive.google.com/folderview?id=0Bw7bWUHiJSgEclNwelVQUFhiSUU&usp=sharing

http://www.pungudutivu.fr/2014/08/blog-post_24.html

நன்றி.

  • Replies 104
  • Views 10.2k
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி ,பாராட்டுகள் .

லாசப்பலில் 15 வருட நிறைவை கொண்டாடிய புங்குடுதீவைச் சார்ந்த தொழிலதிபர் 10,000 euro நன்கொடை வழங்கியதாக அறிந்தேன் .பாராட்டுக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ,பாராட்டுகள் .

லாசப்பலில் 15 வருட நிறைவை கொண்டாடிய புங்குடுதீவைச் சார்ந்த தொழிலதிபர் 10,000 euro நன்கொடை வழங்கியதாக அறிந்தேன் .பாராட்டுக்கள் .

உண்மைதான்

அவரது விழா  நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் தான்  இது சம்பந்தமாக 

ஒப்பந்தத்தை செய்து பணம் சேர்க்கத்தொடங்கியிருந்தோம்

அவரது விழாவுக்கு

புங்குடுதீவு மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகள் பலரும்

உறவுகள் என்றரீதியில் அழைக்கப்பட்டிருந்தோம்

நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை  பார்த்த  எமது மனதில் ஒரு கேள்வி  உருவாகியது

இந்த விழா நாயகனிடம் எமது திட்டத்தை  சொன்னால் என்ன என?

சொன்னோம்

எமது  திட்டத்தை முதலிலேயே  அறிந்திருந்த அவர்

எந்த தயக்கமும் இன்றி 10 ஆயிரம்  ஈரோக்களை தருகின்றேன் என்றார்.

இங்கு மேடையில் அறிவிக்கப்போகின்றோம் என்றோம்  சந்தோசமாக .

மறுத்துவிட்டார்

ஆனால் பொன் சுந்தரலிங்கம் அண்ணா உட்பட  பலரையும் மேடைக்கு அழைத்து

எல்லோர் முன்னிலையிலும் இதை அறிவித்தோம்

காரணம்

ஊக்குவிக்கணும்

மற்றவர்களும் உணரணும்.....

அந்தவகையில் எமது திட்டத்தை  இலகுவாக முடிக்க உதவிய அந்த பெருந்தகை

கோபாலபிள்ளை கோபு  அவர்களுக்கு

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் தலைசாய்த்து நன்றி  சொல்லி நிற்கிறது.

நீங்கள் எவ்வாறு  இச்செய்தியை  அறிந்தீர்கள் என்பதை அறியத்தரமுடியுமா??

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல செய்தி.விசுகர்.உங்களை மாதிரி தாயகத்தின் மீது தீராத காதல் கொன்டவர்கள் இந்த அரசியலில் இருந்து விலகி மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா.மீன்டும் உங்களுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் நன்றி.மற்றது கரியும் உங்களை மாதிரித்தான் ஒரு வள்ளல்.ஆனாலும் இடைக்கிட இந்த அரசியல் சாக்கடையில் வந்து குளிப்பார்.இரன்டு பேரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் உலகிற்கு எம்மக்களிற்கு இதுவும் ஓர் முன்னூதாரண செயல்.வணக்கம் விசுகர்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் என்று நான் சொல்லக்கூடாது!

நன்றிகள் விசுகர் என்றே சொல்கிறேன்!

நன்றிகள் விசுகர்!

வணக்கம் சுவைப்பிரியன்....

இது புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்திற்காக  பதியப்பட்டது

எனவே  என்னை  முன்னிறுத்தாது

அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லுங்கள்

தனி  ஒருவர் எதையுமே சாதித்துவிடமுடியாது

ஆனால் நாலு பேர் சேர்ந்தால்

கோடியையும் இலகுவாக  செய்துவிடலாம்  என்பதை பலரும் அறியணும் என்பதற்காகவே இவற்றை  இங்கு பதிகின்றேன்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய  பிரதிநிதிகளுக்கு இந்த திரியின் இணைப்பை கொடுத்துள்ளேன்.

அவர்களை  வரவேற்று

ஊக்குவித்து

யாழுடனும் சேர்த்துக்கொள்ளவேண்டியது யாழ் உறவுகளின் அக்கறையாக இருக்கணும் என்பதே

யாழ் உறவு என்றவகையிலும்

ஒன்றிய  உறுப்பினர் என்றவகையிலும் எனது பேரவாவாகும்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பணி செய்யும் அனைத்து புங்கையூர் மக்களுக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

நன்றி  ராசவன்னியன்  ஐயா

ஆரம்பத்திலிருந்தே புங்குடுதீவு பண்ணை  என என்னை அழைப்பீர்கள்

அப்பொழுதெல்லாம் எனக்கு பெருமையாக இருக்கும்

தமிழகத்து அதிலும்  வீரத்துக்கு பெயர் போன மதுரை உறவுக்கு

எனது ஊர் தெரிந்திருக்கே என.

உங்கள் வாழ்த்தும்

பாராட்டுக்களும் ஆலோசனைகளும் மிகப்பெரும் பலம் எமக்கு...

ஐயா

நீங்கள் குறிப்பிட்ட மரங்களும் எமது தெரிவில் உள்ளன

முக்கியமாக வேப்பமரம்.

முதலில் நல்ல பசளை மண்ணுடன் புதைக்கப்பட்டு

பின்னர் எமது ஊர் மண்ணில் வேரூன்றக்கூடிய மரங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

மதில் வேலைகள் முடிவடைந்து

கட்டாக்காலி கால்நடைகளின்  உள்வரவு கட்டுப்படுத்தப்பட்டதும்

மரநடுகை ஆரம்பமாகும்..

படங்கள் இங்கு பிரசுரிக்கப்படும்

அத்துடன் விளையாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளும்

நவீன முறையில் செய்து கொடுப்பது அடுத்த திட்டமாகும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகிற்கு எம்மக்களிற்கு இதுவும் ஓர் முன்னூதாரண செயல்.வணக்கம் விசுகர்!

நன்றி  குமாரசாமியண்ணா...

எனது  தகப்பனார் படித்தபோதும்

நான் படித்தபோதும்

தற்பொழுதும்...

காலையில் வந்தால் கால்நடைகளை  கலைத்துவிட்டே இடம் பிடிக்கும் இடமாக இப்பாடசாலை இருக்கிறது.

ஊர் மக்களுக்கு என்னைப்போல் ஒரு குத்துதல் இருந்தது

பிறந்த மண்ணுக்கு என்ன செய்தோம் என்று.

இதோ ஒன்று

வரலாற்றில் இருக்கும்படியாக.........

நிச்சயம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முன்னுதாரணமாக விளங்கும்....

முன்னால்  நடக்கும்...........

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

பூவரச மரத்துக்கு, மசுக்குட்டி வரும்.

வேப்பமரம், மாமரம் போன்றவை நல்லது.

மறந்து போயும்...அரச மரத்தை நட்டு விடாதீர்கள்.

அது... சொந்தக் காசிலை... சூனியம் வைச்ச மாதிரி இருக்கும்.buddha-3753.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவரச மரத்துக்கு, மசுக்குட்டி வரும்.

வேப்பமரம், மாமரம் போன்றவை நல்லது.

மறந்து போயும்...அரச மரத்தை நட்டு விடாதீர்கள்.

அது... சொந்தக் காசிலை... சூனியம் வைச்ச மாதிரி இருக்கும்.buddha-3753.gif

நன்றி  சிறி

அரசமரம்

அந்தப்பக்கத்தில்  வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனையும்...

வராது

நாம் இருக்கிறோம்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்துக்கும் , உங்களின் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்...!

லட்சம் வார்த்தைகளைவிட  பாதையில் கிடக்கும் ஒரு முள்ளை எடுத்து அப்பால் போடுதல் மிகச் சிறந்தது...!

உண்மைதான்

அவரது விழா  நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் தான்  இது சம்பந்தமாக 

ஒப்பந்தத்தை செய்து பணம் சேர்க்கத்தொடங்கியிருந்தோம்

அவரது விழாவுக்கு

புங்குடுதீவு மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகள் பலரும்

உறவுகள் என்றரீதியில் அழைக்கப்பட்டிருந்தோம்

நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை  பார்த்த  எமது மனதில் ஒரு கேள்வி  உருவாகியது

இந்த விழா நாயகனிடம் எமது திட்டத்தை  சொன்னால் என்ன என?

சொன்னோம்

எமது  திட்டத்தை முதலிலேயே  அறிந்திருந்த அவர்

எந்த தயக்கமும் இன்றி 10 ஆயிரம்  ஈரோக்களை தருகின்றேன் என்றார்.

இங்கு மேடையில் அறிவிக்கப்போகின்றோம் என்றோம்  சந்தோசமாக .

மறுத்துவிட்டார்

ஆனால் பொன் சுந்தரலிங்கம் அண்ணா உட்பட  பலரையும் மேடைக்கு அழைத்து

எல்லோர் முன்னிலையிலும் இதை அறிவித்தோம்

காரணம்

ஊக்குவிக்கணும்

மற்றவர்களும் உணரணும்.....

அந்தவகையில் எமது திட்டத்தை  இலகுவாக முடிக்க உதவிய அந்த பெருந்தகை

கோபாலபிள்ளை கோபு  அவர்களுக்கு

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் தலைசாய்த்து நன்றி  சொல்லி நிற்கிறது.

நீங்கள் எவ்வாறு  இச்செய்தியை  அறிந்தீர்கள் என்பதை அறியத்தரமுடியுமா??

நன்றி

நேரம் கிடைக்கும் போது தனிமடலில் அறியத்தருகின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது தனிமடலில் அறியத்தருகின்றேன் .

நன்றி  உங்களது நேரத்துக்கு  தம்பி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் என்று நான் சொல்லக்கூடாது!

நன்றிகள் விசுகர் என்றே சொல்கிறேன்!

நன்றிகள் விசுகர்!

வணக்கம் அண்ணா...

எல்லாம் அறிந்தவர் தாங்கள்..

இந்த மதில் கட்டுவது என்று தீர்மானித்தவுடன்

செலவுக்கான கேள்விக்கோரல்கள் தேவைப்பட்டபோது

எனக்கு உடனே  ஞாபகம் வந்தது இந்த புங்கையூரான் என்னும் மனிதர்தான்...

தொடர்பு கொண்டு   கேட்டபோது

உங்களால்  முடிந்ததை செய்தீர்கள் 

எல்லாம் பதிவில் உள்ளது அண்ணா...

வீட்டைக்கவனிக்காதவனால்

நாட்டை யோசிக்கமுடியுமா???

அதனைத்தான் செயலில் காட்டி நிற்கின்றோம்  உங்கள் போன்றவர்களின் ஆசீர்வாதத்துடன்....

நன்றியண்ணா

உங்கள் முகவரியை  நாம் நிச்சயம்  அணையவிடோம்... :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊர் ஒன்றியத்தின் பணிகளுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்.ஒவ்வொரு ஊர்களின் ஒன்றியங்கள் முன்வந்தால் ஏழ்மை வறுமை எங்கள் இனத்தை அண்டாது. முன்னேற்றம் மிக்க சமூகம் ஒன்றை விரைவில் உருவாக்க ஏதுவாக அமையும்.

  • 3 weeks later...

மிக மிக நல்ல செய்தி.விசுகர்.உங்களை மாதிரி தாயகத்தின் மீது தீராத காதல் கொன்டவர்கள் இந்த அரசியலில் இருந்து விலகி மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா.மீன்டும் உங்களுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் நன்றி.மற்றது கரியும் உங்களை மாதிரித்தான் ஒரு வள்ளல்.ஆனாலும் இடைக்கிட இந்த அரசியல் சாக்கடையில் வந்து குளிப்பார்.இரன்டு பேரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்களுடைய ஆதங்கம் விளங்குகின்றது .அனால் சாக்கடைக்குள் இறங்கினால் தான் எங்களால் முடியுமானவரை சுத்தம் செய்யலாம் .எங்களுடைய மக்களுக்கு நாங்கள்தான் உதவிக்கரம் நீட்டவேண்டும் .இது எங்களுடைய கடமை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

தொடர்ச்சி

65 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன

80 வீதமான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டன....

இத்துடன் மலசலகூடத்தை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது...

மேலதிக  படங்கள்.

PMO_LE_09_2014.jpgPMO_LE_09_2014_2.jpgPMO_LE_09_2014_3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

தொடர்ச்சி

65 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன

80 வீதமான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டன....

இத்துடன் மலசலகூடத்தை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது...

மேலதிக  படங்கள்.

PMO_LE_09_2014_2.jpg

அண்ணை..

கேக்கிறன் என்று கோவிக்காதைங்கோ

உந்த சுற்று மதில் கட்டவோ 60 இலட்சம் தேவை? 

எங்கோ உதைக்குதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் தப்பில்லை

எங்களுக்கும்   முதலில் அவ்வாறு தான் இருந்தது

நாங்கள் 25 லட்சமே  முதலில் நினைத்திருந்தோம்

ஆனால்  கேள்விக்கோரல் செய்தபோது

ஒரு   இடத்திலிருந்து

77 லட்சமும்

இன்னொரு இடத்திலிருந்து 56 லட்சமும் கோரப்பட்டது

அதிபருடனும்

சர்வோதய  அமைப்புடனும் தொடர்பு கொண்டு

56 லட்சத்தை தெரிவு செய்தோம்..

அத்துடன்  மலசலகூட வசதியுடன் 60 லட்சம் மதிப்பிட்டோம்....

(மதில் 600 அடி நீளமானது.  எட்டு அடி உயரமானது. அத்துடன் அத்திவாரம்  உவர் தண்ணீருக்கு பழுதாகாமலும்  நீண்ட காலம்  இருக்கக்கூடியவாறும் விசேச ஏற்பாட்டுடன் பதியப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கத்தில் குளம் இருப்பதால் அந்த இடத்துக்கு மட்டும் 18 லட்சம் முடிகிறது)

இதற்கான கடிதப்போக்குவரத்துக்கள் ஒப்பந்தங்கள் என்பன 

3 பகுதியிடமும் உண்டு.

தேவையானால்  இங்கு பதியப்படும்....

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே, யாரையும் குறைசொல்ல முனையவில்லை.

இவ்வளவு காசைச் செலவுசெய்து இந்தச் சுற்றுமதிலைக் கட்டவேணுமா?

இதற்குப்பதிலாக பாடசாலை எல்லையில் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய மரங்களை வைத்து உண்டாக்கலாம்தானே அதன்மூலம் பாடசாலைச் சூழல் பசுமையானதாகவும் சுவாத்தியம் மிகுந்ததுமாக இருக்குமே.

மரங்களுடன்கூடிய வேலி சிலவேளை பராமரிப்புக்கு செலவுவைக்குமென நீங்கள் கருதலாம், ஆனால் கிடைத்தபணத்தை வங்கியில் வைப்பிலிட்டால் பராமரிப்பதுபோக வட்டிக்காசாகவே மாதாந்தம் நிறைய வருமானம் வரும் அதைவைத்து ஏழைப்பிள்ளைகளுக்கு கல்வியறிவூட்டலாமே.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

இப்போது யாழ்குடாநாட்டில் வேலிகளை எல்லாம் வெட்டியெறிந்துவிட்டு அலிமேனியத் தகரத்தை கொங்கிறீட்டுத் தூணிலை எல்லைகளில் பொருத்தி அழகு பாக்கினம் ஆனால் நல்ல வெய்யிலுக்கு வீட்டுக்க இருந்து வெளியாலை பாக்கமுடியாது கண்ணைப்பறிக்கும் தவிர வெக்கை எண்டால் போறணைகணக்கா இருக்குது. ஏன் எண்டு கேட்டால் செலவுச்சுருக்கம் எண்டினம். இதன்காரணமாக பயிர் பச்சைகளுக்கு வாத்த தண்ணீரெல்லாம் கூடிய கெதியிலையே ஆவியாகி வரண்டு போகுது.

குடாநாட்டில் இப்போதெல்லாம் வேலிக்கருகில நிண்ட கள்ளிச்செடிகளே இந்த அலுமேனியத் தகடு கொங்கிறீற் சுவர் இவைகளால் வரும் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் வெந்து சருகாகிப்போகுதுகள்.

காசு இருக்குது அதுகும் ஊரவர் காசு என்பதற்காக கண்டபடி செலவளிக்காதையுங்கோ. கவலைப்படுவியள்.

மேற்கூறிய எனது கருத்துகளை வாசிச்சால் எனக்குச் செருப்பால அடிக்கவேணும் எண்டுதான் உங்களுக்கு இருக்கும்

ஆனால் "யாமார்க்கும் குடியல்லோம்"

Edited by Elugnajiru

அண்ணே கோவிக்க கூடாது எனக்கும் ஒரு சந்தேகம் பள்ளிக்கூடம் அரச சொத்து அதுக்கு எதுக்கு நாங்கள் சுற்றுமதில் கட்டவேணும் அதாவது பாடசாலை நிர்வாகம் இது சம்மந்தமா பாதுகாப்பு இல்லை சுற்றி மதில் கட்டவேணும் அல்லது வேலி போட வேணும் என்று கல்வித்திணைக்களம் ஊடாக கல்வி அமைச்சுக்கோ அல்லது அது சம்மந்தமான நிர்வாகத்துக்கோ தொடர்பு கொண்டு கேட்டதா அப்படி கேட்டு மறுகப்பட்டதா ..

ஒரு அரசு செய்யும் வேலையை எதுக்கு நாம் செய்ய வேணும் என்பதுதான் கேள்வி அதுபோக ...இந்த அறுபது லட்சம் பணத்தில் அங்கு இருக்கும் முன்பள்ளி குழந்தைகளுக்கு வங்கியில் போட்டுட்டு ஒவ்வெரு நாளும் சத்துணவு கொடுத்து இருக்கலாம் பாலும் பயறுமா ..

இவ்வாறு இலட்சம் செலவு செய்து செய்யும் திட்டங்களை மக்கள் நலனுக்கு செய்யுங்கள் சுயதொழில் ...நாலு தையல் மிசின் ...ஒரு மூணுபேருக்கு ஆட்டோ ...இருவருக்கு சைக்கிள் என்று நன்மை அளிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர் முன்னேற பள்ளியின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு சுற்றுமதில் அவசியம். அங்கு படிக்கும் சில பிள்ளைகள் வகுப்பு நேரத்தில் வெளியில் சென்று ஏதாவது நடந்தால், அந்த நேரம் எத்தனை கேள்விகள் பள்ளி நிர்வாகத்தை நோக்கி சுட்டுவிரலை நீட்டுவார்கள்.

அரசங்கம் செய்யுவரை காத்திருந்தால் எந்த முன்னேற்றமும் காண முடியாது. எத்தணையோ பழைய மாணவர்கள் சங்கம் தங்கள் பாடசாலைக்கு நிதி அள்ளிக்கொடுப்பதை கேட்டதில்லையா. விளையாட்டு உபகரணங்களிருந்து வகுப்பறை கட்டுவது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது முதல் பல உதவிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கு.

மதில் கட்டியிருந்த மானிப்பாய் இந்துவிலேயே எத்தனை தரம் பாச்சிருக்கம் அதனால் அந்த ஆசிரியர்களுக்கு எத்தனை தலையிடி ஊரவர்களால். அவர்களை ஒழுங்காக படிப்பிக்க விட்டால்தானே.

கேள்விகள் கேட்பது சுகம் அதில் நுழைந்து செய்து பார்த்தால்தான் அதன் விளைவு தெரியும். அதே பயறும் பாலையும் யாருக்காவது ஒரு நாள் உங்களால் கொடுத்திருந்தால் மனம் திறந்து உங்களை பாராட்டலாம். செயலில் காட்டுங்கள்.

சிங்கள அரசு செய்யும் என காத்திருந்தால், அது இன்னும் 20 வருடத்திற்கு மேலாகும்.

விசுகு நன்றி உங்கள் தொடர் சேவைக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.