Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்ததினம் இன்று

Featured Replies

தொடங்கி விட்டார்கள் பிரசங்கம் வைக்க ,உது எல்லாம் தெரியாமலா விடுதலை போரட்டம் தொடங்கினார்கள் .

 

எமது விடுதலைக்கு நாம் என்ன செய்து இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு நாம் பேசும் விடயம் இந்தியா பற்றிய வியாக்கியானம் அல்ல.

  • Replies 67
  • Views 3.3k
  • Created
  • Last Reply

இலவங்கை இந்திய ஒப்பந்தம் தமிழரின் அபிலாஷைகளை தீரக்காது என்று கூறி எதிர்த்து புலி இந்தியாவை தனக்கு எதிரியாக்கியது. உண்மைதான். புலி இருக்கும் வரை புலிதான் எனக்கு எதிரி . தமிழ்மக்கள் அல்ல. தமிழ்மக்களுக்கு கெளரவமான உரிமை கிடைக்க உதவ காத்திருக்கிறோம். புலிதான் அதற்கு இடைஞ்சலாக உள்ளது என்று இந்தியா கதையளந்தது. புலிகள் இல்லாத 5 வருடமாகியும் தனக்கு விசுவாசமான தன்னுடன் எல்லாவகையிலும் ஒத்துழைக்க தயாராக உள்ள ப்ரம் சாதுக்கள் தமிழரை பிரதிநிதித்துவம் செய்தும் மாகாணசபை மேசை துடைக்கும் அதிகாரத்தை கூட வழங்காத நிலையே காணப்படுகிறது.

மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு ரயர் வாங்கும் அதிகாரம் மட்டுமே இருப்பதாக ஐங்கரநேசன் அவர்களே கூறியுள்ளார். மற்றய மாகாணங்களில் அமுலில் உள்ள நிதி நியதி சட்டங்களையே வடமாகாண சபைக்கு வழங்க மறுக்கிறார்கள் கேட்டால். மத்திய அரசுடன். இணக்க அரசியல் செய்தால் மட்டுமே வடமாகாணசபை சுயமாக செயற் பட முடியுமாம் அது சரி என்று கூட சில ஜால்ரா கோஸ்டிகள் கூறுகின்றன. அதாவது மத்திய அரசுடன் இணங்கி போனால்தான் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க முடியும் என்ற தொனிப்பட பகீரங்கமாகவே கூறுகிறார்கள்.

இன்னும் எவ்வளவு கீழே இறங்கினாலும் தமிழருக்கு தன்னிச்சையாக உதவும் நல்மனம் இந்திய அதிகார வர்க்கத்தின் இல்லை என்பதே ஜதார்த்தம். இந்தியா எமக்கு உதவும் என கூறுவௌருக்கும் அது தெளிவாக தெரியும். அதனால் தான் லொபி பண்ண வேண்டும். அது இது என்று சாட்டு சொல்ல புலிகள் இல்லாத்தால. தற்போதய தமிழர் தரப்பு இந்தியாவுடன் உறவு வளர்த்தத்து போதாது என்று சிலர் கதையளக்கிறார்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்தியாவை என்ன செய்யலாம்? எப்படி கையாளலாம் துல்ஸ்?

இந்தியாவை பற்றி குத்தி முறிகிறவை இன்று அவர்கள் விசிவாசமாக இருக்கும் அமேரிக்கா, இங்கிலாந்து ஐரோப்பா போன்ற நாடுகள் மற்ற நாடுகளில் செய்வதை பற்றி எப்படி வக்காலத்து வாங்குவினம்? தலைவரின் பாசையில் உலகில் உள்ள எல்லா நாடுகளோடு எல்லாம் நேரம் கிடைத்தால் சண்டை செய்யணும்......நியாயமானவர்கள் என்றால் இது போன்ற நாடுகளில் இருந்தும் விலகவேண்டும்... :)

எங்களுக்கு வசதி என்றால் பொத்திக்கொண்டு இருப்போம்...ஆனால் வெட்டி நியாயம் கதைப்போம்..

 

பார்க்கவில்லையா உக்ரைனை , ஈராக், சிரியா, லிபியா.......

Edited by naanthaan

இந்தியாவின் மட்டும். நின்று விடாது எமக்கு நட்பு சக்திகளை மேற்குலகில் உள்ள பலமிக்க நாடுகளுடனும் வளர்த்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு நிர்பந்தம் ஏறபட்டாலொழிய இந்தியா எமக்கு உதாவாது மட்டுமல்ல ஶ்ரீலங்காவை விட மோசமாக எமக்கு எதிராக செயற்படும். ஆகவே இந்தியாவுடன் மட்டும் நட்புறவை வளர்ப்பது என்ற தந்நிரோபாயம் work out ஆகாது. இந்தியாவை விட சிங்களவர்கள் மிக அதிகமாக தமிழரின் அன்பாக இருப்பார்கள் என்பதே எமது பட்டறிவு. இந்தியாவை மட்டும் நம்புவதற்கு பதில் முழு சிங்களவர்ராக மாறினால் மிகவும் சந்தோசமாக எமது எதிர்கால சந்ததி இருக்கும் என்பதே கசப்பான உண்மை.

டுல்பேன் இதே மேற்கு நாடுகளும் இந்தியா எமக்கு செய்ததை/செய்வதை தானே மற்ற நாடுகளில் செய்கின்றன....அவை தமிழருக்கு மட்டும் எப்படி நன்மை செய்யும்?  ஏன்?

 

BRICS பலம் பெற பெற மேற்குநாடுகளின் உண்மை சொரூபம் தெரியும்.....

 

BRICS ஜெர்மன், அர்ஜென்டினா, venizuela போன்ற நாடுகளும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் :)

Edited by naanthaan

நாந்தான் மற்றய நாடுகள் எமக்கு உதவி செய்யும் விருப்புடன் இருப்பதாக நான் கூறவில்லை. அவை விரும்பினால் உதவி செய்யும் அல்லது உபத்திரவம் செய்யாது. இந்தியா அப்படியல்ல. தான் கஷரப்பட்டாவது தனக்கு விருப்பமிலாதவனை கெடுக்க நினைக்கும். நாந்தான் இந்தியாவை நீங்கள் விரும்பலாம். அதற்கு தடை இல்லை. ஆனால் இந்தியா ஈழதமிழரான உங்களை. இரும்பவேண்டும் என்று எதிர் பார்த்தால் எமாந்து போவீர்கள் இந்த உண்மை கசக்க தான் செய்யும்.

Edited by tulpen

இந்தியாவுக்கு என்று ஒரு மரபு இருக்கின்றது. அது ஆயிரமாண்டுகளாகக் கட்டப்பட்ட மரபு. சமுகங்களை பிரித்து சிதைத்து தேசீய இனங்களை பிரித்து முரண்பாடுகளை நிரந்தரமாக்கி ஆழ்வதே இந்திய மரபு. சாதீயம் வருணாசிரம தர்மம் ஆன்மீகம் கடவுள் அனைத்தும் இந்த மரபை நெறிப்படுத்தவே பாவிக்கப்பட்டது. இன்று இந்தியாவின் அனைத்து தேசீய இனங்களும் பலவீனப்பட்ட நிலையில் இந்தியா என்று ஒரு தேசம் அழப்படுகின்றது. எந்த ஒரு தேசீய இனமும் சுய அதிகாரம் பெறுவது இந்திய மரபுக்கு முரணானது. அந்தவகையில் தமிழகத்தோடு பிணைந்த கடலால் மட்டும் பிரிந்த தமிழினம் சுய அதிகாரம் பெறுவதும் இந்திய மரபுக்கு முரணானது.

 

கண்ணுக்கு முன்னே பங்களாதேஷ் பிரிந்து போனது மேலேசொன்ன இந்திய மரபும் வருணாசிரம தர்மம் பற்றியும் எவரும் அலட்டிக்கொள்ளவில்லை .பிழையாக ஒரு அலுவலை செய்துவிட்டு விதியில் பழி போடுவது போல்தான் இதுவும் .

 

இதுதான் இந்தியாவின் நிலை என்று தெள்ள தெளிவாக தெரிந்ததும், பிரபா முன்னிருந்த தெரிவு

1) இந்தியாவுடன் இணங்கி தேசிய சுயநிர்ணயத்தை கைவிட்டு, அடுத்த நிலைக்கு உடன் படுவது

2) இந்த்ஹியாவை பகைத்து, தேசிய சுயநிர்ணய போரை முன்னெடுப்பது.

அவர் இரண்டாவதை தேர்ந்தார் - rest, as they say is history. இதுதான் நடந்தது.

சுய நிர்ணயத்தைக் கைவிட்டு விட்டு எதற்கு இந்தியாவுடன் இணங்கிப்போகவேணும்? அதுக்குப் பேசாமல் இலங்கையுடன் ஒத்துப்போயிருக்கலாமே !

 

கண்ணுக்கு முன்னே பங்களாதேஷ் பிரிந்து போனது மேலேசொன்ன இந்திய மரபும் வருணாசிரம தர்மம் பற்றியும் எவரும் அலட்டிக்கொள்ளவில்லை .பிழையாக ஒரு அலுவலை செய்துவிட்டு விதியில் பழி போடுவது போல்தான் இதுவும் .

 

 

90 வீதத்துக்குமேல் இஸ்லாமியர்களை கொண்ட பங்களதேஷம் பிரிந்து போனதே இந்திய இந்துத்துவா நடுவண் அரசுக்கு சாதகமானது. இதையே இந்துத்துவவுக்கு எதிராக இந்தியாவில் பெரும் புயலைக் உருவாக்கிய தமிழகத்து திராவிட எழுச்சி நிலுவையில் இருக்க தமிழகத்துக்கு அருகில் தமிழ்த்தேசம் உருவாக்கப்படுவதும் அங்கே தமிழ்த்தேசீய இனம் தன்னைத்தானே அழ்வதும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் அண்டய மாநிலங்களில் அதனால் உருவாகும் தாக்கங்களும் மாற்றங்களும் இந்திய தேசீயத்துக்கு எற்புடையதாக எப்படி இருக்கும்? பங்களாதேஸமும் ஈழமும் ஒருமாதிரியான அணுகுமுறைக்கு உட்பட்டதில்லை.

 

பிரபாரகரன் என்ற ஒரு நபர் பிழை செய்தார் என்று மற்ற  எல்லோருக்கும் புரிகின்றது என்றால் அவரைத் தவிர மிச்சம் பேர் சரியாய் யோசிக்கக் கூடியவர்களும் சரியாக அலுவல்களை செய்யக் கூடியவர்களும் அதிகமாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம். அந்தவகையில் மிகவிரைவில் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்புவோம். முதற்கட்டமாக 13% சுதந்திரம் வழங்கப்படும் என்று எதிர்பாரக்கின்றோம். (கூப்பன் அரிசி றேஞ்சில் இருக்கின்றது தேசீயம்) 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மாலைதீவில் என்ன செய்ய முயன்றது என்பதைச் சிலர் மறந்து போகின்றனர். சிறிலங்கா இராணுவத்தைக் கூட நம்பிவிடலாம். ஆனால் இந்திய இராணுவம்.... பாலியல் வல்லுறவு என்ற வக்கிரக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த கொடூரத்தில் இந்திய இராணுவத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. அக்காலப்பகுதியில் தலைவர் அவர்கள் போராளிகளுக்கு ஏன் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான காரணத்தைச் சொல்கின்றார். அது எவ்வித மான அனுமதியோ, ஆலோசனையோ பெறாமல் இந்தியாவால் திணிக்கப்பட்டது என்கின்றார். ஒரு போராட்டத்தின் தோல்வியின் பின்னர் வல்லவர்கள், நல்லவர்கள் தங்களின் அறிவுத்திறனைக் காட்ட முனைவது உயர்ச்சி தான். இன்று போராட்டத்தில் சிங்களவன் தோற்று, நாம் தமிழீழம் கண்டிருந்தால், தமிழனுக்கு அப்பவே தீர்வைக் கொடுத்திருந்தால், இந்தமாதிரி நாட்டைப் பிரித்து இருக்கத் தேவையில்லை என்ற சிங்களவர்களுக்குள் எதிர்ப்புக்குரல் , பிரச்சனைகள் கிளப்பப்பட்டிருக்கும். அப்போது சிங்களவர்கள் ஜேஆர்ரையும், பாண்டாரநாயக்கா குடும்பத்தினரையும் பற்றி அவதூறாக எழுதிக் கொண்டிருப்பார்கள்.... தோற்றுவிட்டோம் என்ற ஆதங்கம் பல தடவைகள் கோபமாக வெளிப்படுவதுண்டு ஆயினும், அது வரலாற்றை அவதூறாக பேசுவதாக அமையக்கூடாது.

இக் காணோளியில் தலைவர் 3.41வது நிமிடத்தில் ஒப்பந்தம் பற்றிச் சொல்கின்றார்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவர் .சிறுபான்மை  இனத்தில் இருந்து இனி ஒருவர் எதிர்கட்சி தலைவராக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை .எமது பிரச்சனையை பட்டி தொட்டி எல்லாம் கொண்டுபோனது மாத்திரம் இல்லாமல் சர்வதேசத்திற்கும் கொண்டு போனவர் .

 

அரசியல் தலைவராக இருந்தால் தூற்று வாங்குவது வெகு சகஜம் .

 
விதண்டா வாதம் செய்யவில்லை.
இதை சற்று விரிவாக எழுத முடியுமா ? 
83 கலவரம் ஐ நா வில் பதிவாகி ... ஒரு தமிழர் தரப்போடு அவர்கள் பேசினார்கள் அதில் இவர் இருந்தார். 
மற்றவர்கள் கெரில்லா மறைவிட போராளிகள் ..... 
 
............. ஏன் தொடர்ந்து பேசவில்லை ??
கொழும்பு வதிவிடத்திட்கு ஆப்பு இறங்காமல் கவனமாக பார்த்து கொண்டாரா தலைவர் ?? 
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தங்கள் அறிவிற்கும் தங்களுக்கு தெரிந்தவற்றையும் எழுத முடியும் .

அமிர் பல உலக நாடுகள் சென்று சர்வதேச புகழ் பெற்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் ,அவர் எதிர்கட்சியில் இருக்கும் போது சமர்பிக்கபட்ட பட்ஜெட் பற்றி அவர் ஆற்றிய உரை பல ஆழும் கட்சி அங்கத்வர்களாலேயே பாராட்டப்படப்பட்டது .

தை பொங்கலுக்கு தமிழ் ஈழம் என்று அமீர் பேசவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு என்று பேசினார் .

செல்வா டட்லியின் ஒப்பந்தத்துடன் காலாவாரியாகிவிட்டார் .

 

அமிரும் பிழை விடாத மனிதர் அல்ல ஆனால் மிக சிறந்த அரசியல் தலைவர் .

 

சுந்தரத்தை பிராபாவை கொண்டு போடா வைத்தவர் இவர்தான் என்றும் கதையிருக்கு  .

 

வடலிக்கு பின் போவர்களுக்கு டாய்லட் பற்றி தெரியாது . :icon_mrgreen:

டொயீலட் இற்குள் பிறந்தவர்கள் organic என்று இங்கிலிசில் பேசிக்கொண்டு வடலி பக்கம் வராது  விட்டாலே போதும்.
வடலிக்குள் நாம் நிம்மதியாக வாழ்வோம்.
எங்கு வாழ்வு அமைந்ததோ ....அதுவே எமது சொர்க்கம்.
எங்கு வாழ்கிறோம் என்பது உண்மையான மனிதனுக்கு பொருட்டு அல்ல ...
எப்படி வாழ்கிறோம் என்றுதான் மனிதன் சிந்திக்கிறான்.
(அதற்கு சிந்திக்கும் சக்தியுள்ள மூளை சற்று என்றாலும் வேண்டும்) 

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ரெண்டும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral private agreements). Indo-Lanka is an international agreement between two countries. இதெல்லாம் உங்களுக்கு விளங்கநியாயமில்லை.

பிரபாகரனை மிரட்டி அசோகா கோட்டலில் வைத்து அடிபணிய வைத்து கைச்சாத்தானதுதான் 87 ஒப்பந்தம். It was signed despite Pirabaharan not because of him.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ரெண்டும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral private agreements). Indo-Lanka is an international agreement between two countries. இதெல்லாம் உங்களுக்கு விளங்கநியாயமில்லை.

பிரபாகரனை மிரட்டி அசோகா கோட்டலில் வைத்து அடிபணிய வைத்து கைச்சாத்தானதுதான் 87 ஒப்பந்தம். It was signed despite Pirabaharan not because of him.

அடேங்கப்பா .......!
இந்த தத்துவத்தை படித்து வியந்து போனேன். 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை -இந்தியா என்ன நடந்தது என்று தெரியாமல்  வழக்கம் போல அவரவர் கதை அளக்கின்றார்கள் .

 

அமீர் உட்பட அனைத்து தலைவர்களின் அனுமதியுடன் தான் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது தனது அறியாமையினாலும் இந்தியாவின் பலம் தெரியாததாலும் பிளேட்டை மாற்றியது பிரபாகரன் தான் .

 

எல்லாரையும் சுற்றி ஏக பிரநிதியாக தமிழ் ஈழம் பெற கனவு கண்டார் .கனவு காண்பதில் பிழையில்லை அதன் சாத்தியம் பற்றி தெரியாதவரை .மற்ற தலைவர்களுக்கு ஓரளவு சர்வதேச அரசியல் தெரிந்திருந்தது தான் உண்மை .

ஏக பிரதிநிதியாக பிரபாகரன்தான் இருந்தார்.
என்ன நடக்கிறது என்று ஆவலாக கேட்க பிரபாகரனுக்கு பின்னால்தான் லட்சம் தமிழர்கள் போனார்கள்.
 
மற்றவர்களுக்கு சிலுக்கு சிமிதாவின் படத்தை காட்டியே கையெழுத்து வேண்டினார்கள்.
 
பிரபாகரனோடு தான் அரசியல் பேசினார்கள்.
 
இதை இந்தியா காரன் பக்கம் பக்கமா எழுதுகிறான். 
 
டோயலேட்டுக்குள் அந்த காலத்தில் இன்டர்நெட் வசதி இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

87ல் இந்தியபடைகள் நாட்டில் நிக்க, சிங்களப் படைகள் முகாமில் முடங்கியிருக்க, அமிர் தலைமையில் ஒரு வடக்கு-கிழக்கு மாகாணசபை அமைந்திருந்தால் அது வலுவானதாய் இருந்திருக்கும். தெற்கே ஜேவிபி பலம் மேலும் கூடியிருக்கும்.

நீதிமன்ரு மூலமோ வேறுவழிலிய்லோ மாகாண அரசை நீர்த்து போக இந்தியா விட்டிராது. மீறி இலங்கை செயல்பட்டால் இந்தியாவே இலங்கையை துண்டாடியும் இருக்க கூடும்.

இந்த eventuality கிரகிக்கும் ஆற்றல் அதற்க்கேற்ப காய்நகர்த்தும் ஆற்றல் அமிருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பிரபாவுக்கு இந்த game plan ஏ புரியவில்லை. புரிந்திருந்தால் அவர் அப்படி நடந்திருக்க மாட்டார்.

காரணம்  இந்தியாவின் பிளான் A-Z பிரபாகரனுக்கு 1984 இலேயே நன்கு புரிந்துவிட்டது.
 
மாலைதீவில் பிளாட் போராளிகள் இறந்த போது .... சொன்னாராம். இப்படிதான் உமா கெட்டு போகபோகிறார் என்று. 
முகவரியே இல்லாமல் கொழுபில் நடுவீதியில் சகபோராளிகளால் சுடபட்டு கிடந்தார்.  
  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான பேரளிவை சந்தித்த பின்னர் இன்றய காலகட்டத்தில் இவ்வாறு சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆனால் இந்தியப் படைகள் காலத்தில் இவ்வாறு சிந்திக்கும் அளவுக்கு எதுவித சூழலும் இருந்திருக்கவில்லை. இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தபின்னரே இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழரின் முதுகில் குத்தியது. அப்போதிருந்த சூழல் தமிழர்களுக்கு இரண்டு எதிரிகள் ஒன்று இந்தியா என்ற பெரிய எதிரி இரண்டாவது சிங்களம். இதுதான் அன்றய யதார்த்தம். பெரிய எதிரியை அகற்றுவது பின்னர் சிங்களத்துடன் போரிடுவது என்ற நோக்கமே அன்றய காலகட்டத்தின் நிலையாக இருந்தது.

ஒருவகையில் அது அற்புதமான வாய்ப்பாக கருதினாலும் அதை பயன்படுத்தும் அளவுக்கு எந்தச் சூழலும் சாத்தியக் கூறுகளும் இருந்திருக்கவில்லை.

ஒருவன் 100 ருபாய் பேசி ஒரு வேலையை செய்தான். அவனுக்கான 100 ருபாய் நியாயமான பணத்தை வாங்குவதற்காக போராடினான்.

75 ருபாய் தரலாம் 50 தரலாம் இல்லை 10 தரலாம. தரவே முடியாது. வேணுமானால் தட்டை எடு பிச்சையாக ஏதாவது போடுகின்றோம். அவனெட்ட போயிருந்தால் 100 ருபாயையும் வாங்கியிருக்கலாம் இவனெட்ட போயிருந்தால் 50 எண்டாலும் வாங்கியிருக்கலாம். கடசி இங்க போயிருந்தால் தட்டில் கொஞ்சம் சில்லறையாவது விழுந்திருக்கும்.

மேற்சொன்னபடிதான் சுதந்தித்துக்கான விடுதலைப்போராட்டம் அணுகப்படுகின்றது. இதுதான் ஈழத்தமிழரின் புத்தியீவித எல்லையும் சிந்தனை முறையும். இவ்வாறான சூழ்நிலையானது அடிமைத்தனத்தை துறக்க முடியாத நிரந்தர அடிமைத்தனத்தை அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அதற்குள்ளாக தாம் வாழ்வதற்கான உரிமைகள பெற முற்படும் நிலையே. பாரம்பரியமாக பழக்கப்பட்ட சாதிய அடிமைச் சமூகங்கள் இந்த நிலையில் இருந்தே எந்த ஒன்றையும் அணுகும். அவ்வாறே இது அணுகப்படுகின்றது.

இச் சூழலுக்கு அப்பால் பட்டு இவற்றைக் கடந்து செல்ல முற்பட்ட ஆயுதப்போராட்டம் இச்சூழலுக்குள் திரும்ப வந்து நிற்கின்றது. இச் சூழல் அன்றும் இன்றும் என்று நிலையாய் இருப்பது. இதில் ஆயுதப்போராட்டம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர் "பார்த்து ஏதாவது போடுங்கையா" என்பதை இப்போதும் எப்போதும் தொடரவேண்டியதுதான்.

இந்த கருவாடு........... காய்ஞ்சு போனதுகளுக்கு விளங்கும் என்று நான் எதிர்பார்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தபின் - சாண்டமாருதன் எந்த உலகில் இருக்கின்றார் .புலிகள் தரப்பில் இந்தியாவுடன் பேச்சில் ஈடுபட்டவர்கள் யாரவது இருந்தால் உண்மையில் என்ன நடந்து என்று கேட்டு அறியுங்கள் .

 

பல தரப்பிலும் இருந்து பேச்சுக்களில் பங்கு பற்றிய பலர் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் .புலிகள் இந்தியாவின் சொல் கேட்க  முடியாது என்றபின்னர் தான் அழிக்க நினைத்தார்கள் .

 

இந்தியா எதிரி அல்ல எதிரியாக ஆக்கினார்கள் என்பது தான் உண்மை .

மாலைதீவில் பாட்டி வடை சுட்ட கதையை .......... அவர்களிடம் கேட்டு கொஞ்சம் விரிவாக எழுதினால்.
 
அச்சா பிள்ளை இந்தியாவை பற்றி நாம் அறிந்துகொள்ள வசதியா இருக்கும்.
 
அப்பாடா 30 வருட போரை ......
இப்படியும் சுருக்கி எழுதலாமா ??
 
ஆனால் பட்டவனுக்கு வலி தெரியும்................... பார்த்தவனுக்கு அல்ல.

இதுதான் இந்தியாவின் நிலை என்று தெள்ள தெளிவாக தெரிந்ததும், பிரபா முன்னிருந்த தெரிவு

1) இந்தியாவுடன் இணங்கி தேசிய சுயநிர்ணயத்தை கைவிட்டு, அடுத்த நிலைக்கு உடன் படுவது

2) இந்த்ஹியாவை பகைத்து, தேசிய சுயநிர்ணய போரை முன்னெடுப்பது.

அவர் இரண்டாவதை தேர்ந்தார் - rest, as they say is history. இதுதான் நடந்தது.

பிரபாகரன் ஒரு போராளி!
 
title of the HISTORY யே அதுதான் ............. இப்பதான் கொஞ்சபேர் தலைப்பை என்றாலும் வாசிக்க தொடங்கி இருக்கிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பற்றி குத்தி முறிகிறவை இன்று அவர்கள் விசிவாசமாக இருக்கும் அமேரிக்கா, இங்கிலாந்து ஐரோப்பா போன்ற நாடுகள் மற்ற நாடுகளில் செய்வதை பற்றி எப்படி வக்காலத்து வாங்குவினம்? தலைவரின் பாசையில் உலகில் உள்ள எல்லா நாடுகளோடு எல்லாம் நேரம் கிடைத்தால் சண்டை செய்யணும்......நியாயமானவர்கள் என்றால் இது போன்ற நாடுகளில் இருந்தும் விலகவேண்டும்... :)

எங்களுக்கு வசதி என்றால் பொத்திக்கொண்டு இருப்போம்...ஆனால் வெட்டி நியாயம் கதைப்போம்..

 

பார்க்கவில்லையா உக்ரைனை , ஈராக், சிரியா, லிபியா.......

புலிகளுக்கு முன்னால் நின்றால் நாம் எல்லாம் துரோகிகள்தான்.
இன்னொரு புறத்தில் புலிகளையும் தமிழரையும் அடித்ததில் ஓடிவந்த எங்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு.
 
அதற்காக நாக்கில் சொறி சிரங்கு இருப்பவர்கல்போல் .....
உண்மையை .. பொய் என்று ஏன் எழுதி திரியவேண்டும் ??
 
அதனால் ஏதும் வருமானம் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தந்தால் அது பற்றி சிந்திக்கலாம். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

டொயீலட் இற்குள் பிறந்தவர்கள் organic என்று இங்கிலிசில் பேசிக்கொண்டு வடலி பக்கம் வராது  விட்டாலே போதும்.
வடலிக்குள் நாம் நிம்மதியாக வாழ்வோம்.
எங்கு வாழ்வு அமைந்ததோ ....அதுவே எமது சொர்க்கம்.
எங்கு வாழ்கிறோம் என்பது உண்மையான மனிதனுக்கு பொருட்டு அல்ல ...
எப்படி வாழ்கிறோம் என்றுதான் மனிதன் சிந்திக்கிறான்.
(அதற்கு சிந்திக்கும் சக்தியுள்ள மூளை சற்று என்றாலும் வேண்டும்) 

அடேங்கப்பா .......!
இந்த தத்துவத்தை படித்து வியந்து போனேன். 

 

 

இவர்கள் கண்ணுக்கு தெரியாத வரலாறுகளை/கதைகளை நம்புபவர்கள் .

ஆனால் கண்ணெதிரில் நடந்த சம்பவங்களை நம்ப மாட்டர்கள்.  :icon_idea:

 

அர்ஜுனின் அடிமட்ட பிரம்மாஷ்திரம் வடலி...... :icon_mrgreen:

மேலதிகமாக கருத்தாடல் செய்ய முடியாவிட்டால் இவர் எடுக்கும் ஆயுதம்... வடலி கக்கூஸ் படிப்பறிவில்லாதவர் பள்ளிக்கூடம் போகாதவர்   அதாவது பிறரின் பலவீனத்தை தனது பலமாக பயன்படுத்துவது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.