Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நித்திரையை குலைத்தவள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதியவள் ஒருத்தி

என் அறையில் என்னோடு..

நடு நிசியை நோக்கி

நேரம் ஆகிறது..

படுக்கைக்குப் போக..

விளக்கை அணைக்கவா

இல்லை விடவா..

உள்ளம் தடுமாறுகிறது...!

 

உள்ளூர ஒரு பயம்

என்னை அணுகுவாளா

உயர நகர்வாளா

பின் என் உடல் மீது பாய்வாளா..

அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??!

அனுபவமின்றியவன் நான்

சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்...

 

அவளோ

என் அறைக்குள்

துணிவோடு..

அனுமதி இன்றி நுழைந்தவளாய்

சுவரோடு ஒட்டியவளாய்

நகர்வின்றி...

என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள்

அதை அழைப்பு என்பதா

எச்சரிக்கை என்பதா..??!

சிந்தனை குழம்புகிறது..!!

 

போனால் போகுது

எனியும்..

விடுவதில்லை இவளை..!

விட்டால்

என் நித்திரை இன்றி இரவுகளுக்கு

யார் பதில் சொல்வது..??!

 

நொடிகளை வீணாக்காமல்

அவளை நெருங்குகிறேன்

நகர்வின்றி நின்றவள்

நகர முனைகிறாள்

திமிர முனைகிறாள்..

நானோ விடுவதாக இல்லை

ஒருகை பார்த்தே விடுவது

என்ற துணிவில்..

 

அவளோ

அதுவரை அஞ்சமின்றி நின்றவள்

அசந்து போகிறாள்

கண்களில் பயத்தைக் கொட்டிறாள்

உடலை நெளித்துக் கொள்கிறாள்

கால்கள் நகர்ந்து ஓட முனைகின்றன..

 

என் கண்கள் இவற்றை ரசிக்க

என் மூளை

அவளுக்கு இரக்கம் காட்டுகிறது.

சரணாகதி அடைபவளை

கஸ்டப்படுத்துவது

காருணியமே அற்றது..

போதனை செய்கிறது..!

 

இருந்தாலும்

தொலைய இருக்கும்

சந்தர்ப்பங்களை எண்ணிய

மனசு

முடிவெடுக்கிறது..

நினைத்ததை

முடித்தே விடுவது என்று.

 

கிட்ட நெருங்குகிறேன்

கையில் ஒரு கவிதைக் கொப்பி..

நீட்டுகிறேன்

அவளோ விலத்தி

ஓடினாள்

பாய்ந்து வீழ்ந்தாள்

நானோ

அலறி அடித்துக் கொண்டு

அறையை விட்டே ஓடினேன்...

ஓடினேன்.. ஓடினேன்

வீட்டின் வாசல் வரை ஓடினேன்..!

 

நித்திரை இன்றிய

இரவோடு

நிம்மதியும் தொலைந்தது.

தேடுதல் வேட்டையும் கூடவே

சேர்ந்து கொண்டது.

தொலைந்து போனவள்

எங்கே பதுங்கினாளோ

எப்ப பாய்வாளோ..

இன்னும்.. விடையின்றிய நொடிகளோடு

பதட்டம் இருப்பதால்..

பயத்தை மறைக்க

பதிகிறேன் இதனை..!

 

எல்லாம்..

புது அனுபவமாய்..

முதல் அனுபவமாய்..

அதைத் தந்தவளாய் அவள்..

இதோ..!!

 

Spoiler

10625087_10152308035612944_8118634154867

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் நாங்க ஏமாறமாட்டம்.. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் நாங்க ஏமாறமாட்டம்.. :D:lol:

 

பார்த்தா.. அப்படி தெரியல்லையே. தலைப்பைப் பார்த்து ஏமாந்திட்ட மாதிரித்தானே இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாந்திட்டம்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு எப்பிடிப்ப் போட்டாலும் நெடுக்கைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு விளங்கிவிடும் நிட்சயமாய்ப் பெண்ணாய் இருக்க முடியாது என்று. ஆனாலும் போயும் போயும் எட்டுக்கால் பூச்சிக்கா பயம் ???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரு என்ன சொன்னாலும் ,தம்பிக்கு காய்ச்சல் தொடங்கிட்டுது எண்டது மட்டும் உண்மை

யாரு என்ன சொன்னாலும் ,தம்பிக்கு காய்ச்சல் தொடங்கிட்டுது எண்டது மட்டும் உண்மை

அதே அதே நந்தன் அண்ணே  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விசயத்தை பட்டும்படாமலும் சொல்லி நிக்கிது இந்த கவிதை.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுத்கின் நித்திரையைக் குலைத்தவளா? யாரவள்? இந்த வருடம் ஊருக்குப் போயிருந்த பொழுது பல்லியையும் பூச்சிகளையும் பார்த்து என் பிள்ளைகள் என் நித்திரையை குலைத்ததுதான் ஞாபகம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 'நித்திரையில் குலைத்தவள்' எண்டு மாறி வாசிச்சிட்டன். எனக்கும் வயசு போகுதுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

நான்.... நுளம்பு என நினைத்தேன். நெடுக்ஸ்... சிலந்தியை வர்ணித்துள்ளார்.
நெடுக்ஸ்.... எழுதிய கவிதை என்ற படியால், பெண் என்று நினைக்கவே இல்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாந்திட்டம்...! :)

 

உண்மையை சொல்லிட்டீங்க. நம்பிட்டம். :lol:  நன்றி சுவி அண்ணா. :)

 

தலைப்பு எப்பிடிப்ப் போட்டாலும் நெடுக்கைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு விளங்கிவிடும் நிட்சயமாய்ப் பெண்ணாய் இருக்க முடியாது என்று. ஆனாலும் போயும் போயும் எட்டுக்கால் பூச்சிக்கா பயம் ???? :lol:

 

8 கால் என்றால் என்ன 6 கால் என்றால் என்ன பூச்சின்னா.. பயப்பிடத்தான் செய்வாங்க. பார்ரா.. பூச்சிக்கு பயப்பிடாதவாவை. அதுவும் இல்லாமல்.. இது பூச்சி... இல்ல சிலந்தி. நன்றி அக்கா. :lol::D

யாரு என்ன சொன்னாலும் ,தம்பிக்கு காய்ச்சல் தொடங்கிட்டுது எண்டது மட்டும் உண்மை

 

காய்ச்சல் பிறந்ததில இருந்து வருகுது.. போகுதண்ணே. அதென்ன புதிசா. :lol:  நன்றி நந்து அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே அதே நந்தன் அண்ணே  :lol:  :D

 

பார்ரா.. காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டவர்.. சப்போட் வாய்ஸ் கொடுக்கிறத..! :lol:  நன்றி அஞ்சு..! :)

ஒரு விசயத்தை பட்டும்படாமலும் சொல்லி நிக்கிது இந்த கவிதை.... :icon_idea:

 

சரியாச் சிந்திச்சிருக்கீங்க. கோடை காலத்தில் சுதந்திரமாக வாழும் சிலந்திகள்.. இலையுதிர் காலத்தில்.. குளிர்காலத்தை கழிக்க மனிதர் கட்டியுள்ள வீடுகளுக்குள் குடிபெயரும். அதில் பெண் சிலந்தி தான் இப்படி வரும். ஏனெனில் அது தான் கருக்கட்டிய முட்டைகளை வைச்சிருக்கும். அடுத்த வசந்த காலத்தில்.. குட்டி சிலந்தி பூச்சிகளை உருவாக்க. இதில் கொடுமை என்னான்னா.. ஆண் சிலந்திகள் இப்படி இடம்பெயராமல்.. செத்துவிடுவது தான். ஆண்களுக்கு எப்பவும் தியாக மனப்பான்மை.. என்றதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீங்க.. கு.சா ண்ணா. வாழ்த்துக்கள். :lol:  நன்றி.. அண்ணா. :)

தம்பி நெடுத்கின் நித்திரையைக் குலைத்தவளா? யாரவள்? இந்த வருடம் ஊருக்குப் போயிருந்த பொழுது பல்லியையும் பூச்சிகளையும் பார்த்து என் பிள்ளைகள் என் நித்திரையை குலைத்ததுதான் ஞாபகம் வந்தது.

 

அப்ப தம்பிட்ட இன்னும் குழந்தைப் பிள்ளைத் தனம் இருக்கென்றீங்க.  :lol:  நன்றி அக்கா. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

புதியவள் ஒருத்தி

என் அறையில் என்னோடு..

நடு நிசியை நோக்கி

நேரம் ஆகிறது..

படுக்கைக்குப் போக..

விளக்கை அணைக்கவா

இல்லை விடவா..

உள்ளம் தடுமாறுகிறது...!

 

உள்ளூர ஒரு பயம்

என்னை அணுகுவாளா

உயர நகர்வாளா

பின் என் உடல் மீது பாய்வாளா..

அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??!

அனுபவமின்றியவன் நான்

சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்...

 

அவளோ

என் அறைக்குள்

துணிவோடு..

அனுமதி இன்றி நுழைந்தவளாய்

சுவரோடு ஒட்டியவளாய்

நகர்வின்றி...

என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள்

அதை அழைப்பு என்பதா

எச்சரிக்கை என்பதா..??!

சிந்தனை குழம்புகிறது..!!

 

போனால் போகுது

எனியும்..

விடுவதில்லை இவளை..!

விட்டால்

என் நித்திரை இன்றி இரவுகளுக்கு

யார் பதில் சொல்வது..??!

 

நொடிகளை வீணாக்காமல்

அவளை நெருங்குகிறேன்

நகர்வின்றி நின்றவள்

நகர முனைகிறாள்

திமிர முனைகிறாள்..

நானோ விடுவதாக இல்லை

ஒருகை பார்த்தே விடுவது

என்ற துணிவில்..

 

அவளோ

அதுவரை அஞ்சமின்றி நின்றவள்

அசந்து போகிறாள்

கண்களில் பயத்தைக் கொட்டிறாள்

உடலை நெளித்துக் கொள்கிறாள்

கால்கள் நகர்ந்து ஓட முனைகின்றன..

 

என் கண்கள் இவற்றை ரசிக்க

என் மூளை

அவளுக்கு இரக்கம் காட்டுகிறது.

சரணாகதி அடைபவளை

கஸ்டப்படுத்துவது

காருணியமே அற்றது..

போதனை செய்கிறது..!

 

இருந்தாலும்

தொலைய இருக்கும்

சந்தர்ப்பங்களை எண்ணிய

மனசு

முடிவெடுக்கிறது..

நினைத்ததை

முடித்தே விடுவது என்று.

 

கிட்ட நெருங்குகிறேன்

கையில் ஒரு கவிதைக் கொப்பி..

நீட்டுகிறேன்

அவளோ விலத்தி

ஓடினாள்

பாய்ந்து வீழ்ந்தாள்

நானோ

அலறி அடித்துக் கொண்டு

அறையை விட்டே ஓடினேன்...

ஓடினேன்.. ஓடினேன்

வீட்டின் வாசல் வரை ஓடினேன்..!

 

நித்திரை இன்றிய

இரவோடு

நிம்மதியும் தொலைந்தது.

தேடுதல் வேட்டையும் கூடவே

சேர்ந்து கொண்டது.

தொலைந்து போனவள்

எங்கே பதுங்கினாளோ

எப்ப பாய்வாளோ..

இன்னும்.. விடையின்றிய நொடிகளோடு

பதட்டம் இருப்பதால்..

பயத்தை மறைக்க

பதிகிறேன் இதனை..!

 

எல்லாம்..

புது அனுபவமாய்..

முதல் அனுபவமாய்..

அதைத் தந்தவளாய் அவள்..

இதோ..!!

 

[spoiler]

 

 

ராசா

இவ்வளவு ஆசைகளையும் வைத்துக்கொண்டு

எதற்கு வீணாக்கணும் நாட்களை

இரவுகளை...

 

ஒரு துளி  தானே

கொடுத்துவிட்டுத்தூங்குங்கள்.......

அவளும் தூங்குவாள்...

 

அருமையான உவமானங்கள்

உங்களது வளர்ச்சி

பெருமிதம் தருகிறது..

தன் பிள்ளையை  சான்றோன் எனக்கேட்ட தாயின் நிலை எனக்கு..

 

தொடருங்கள்...

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் 'நித்திரையில் குலைத்தவள்' எண்டு மாறி வாசிச்சிட்டன். எனக்கும் வயசு போகுதுதானே!

 

உங்களின் "நாய்.. குலைத்தவள்"...ஞானத்தின் வாயிலாக.. நீங்கள் வயசாகி அனுபவசாலி ஆகுகிறீங்கன்னு.... புரியுது தானே. இதை.. சொல்லி வேற தெரியனுமாக்கும்..! :lol:  நன்றி வாலி. :)

நான்.... நுளம்பு என நினைத்தேன். நெடுக்ஸ்... சிலந்தியை வர்ணித்துள்ளார்.

நெடுக்ஸ்.... எழுதிய கவிதை என்ற படியால், பெண் என்று நினைக்கவே இல்லை. :D

 

இந்தச் சிலந்தியின் கால்கள் ரெம்ப நீட்டுத் தான். அத்துடன் அளவில் பெரிசு. அதனால் தான் கருத்தைக் கவர்ந்தது. வரிகளிலும் வந்துவிட்டது. இருந்தாலும்.. பெண் என்று நினைக்கல்ல.. என்பதை நம்ப முடியல்ல.  :lol: நன்றி தமிழ்சிறி அண்ணா. :)

ராசா

இவ்வளவு ஆசைகளையும் வைத்துக்கொண்டு

எதற்கு வீணாக்கணும் நாட்களை

இரவுகளை...

 

ஒரு துளி  தானே

கொடுத்துவிட்டுத்தூங்குங்கள்.......

அவளும் தூங்குவாள்...

 

அருமையான உவமானங்கள்

உங்களது வளர்ச்சி

பெருமிதம் தருகிறது..

தன் பிள்ளையை  சான்றோன் எனக்கேட்ட தாயின் நிலை எனக்கு..

 

தொடருங்கள்...

வாழ்க வளமுடன்

 

ஆம் அண்ணா. ரெம்ப ஆசை.. இயற்கையை வர்ணிப்பதில்..! :lol:

 

 

துளிகள் விடயத்தில் அவதானம் வேண்டும்...

 

மழைத்துளிகளில்.. வைரஸ் இருக்கலாம்..

 

விசத் துளிகளில்.. விசம் இருக்கலாம்..

 

கவிதைத் துளிகளில்... கற்பனை இருக்கலாம்...

 

எல்லா துளிகளிலும்.. கவிதைத் துளி ஆபத்துக் குறைஞ்சது.

 

 

வாழ்த்துக்கும் அக்கறைக்கும்.. நன்றி  விசுகு அண்ணா. :)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கார்...

இது பெண் ஸ்பரிசத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க துடிக்கின்ற ஒருவரின் கற்பனை போல் அல்லவா இருக்கிறது...

சிலந்தியிலும் நீங்கள் ஜெயந்தியை பார்க்குறீர்கள்... பலே பலே..

கவிதை அருமை... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கார்...

 

இது பெண் ஸ்பரிசத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க துடிக்கின்ற ஒருவரின் கற்பனை போல் அல்லவா இருக்கிறது...

சிலந்தியிலும் நீங்கள் ஜெயந்தியை பார்க்குறீர்கள்... பலே பலே..

கவிதை அருமை... :)

 

யார் அந்த ஜெயந்தி.. சந்தியமா எங்களுக்கு அப்படியா யாரையும் தெரியாதுப்பா. தெரிஞ்சதெல்லாம் சிலந்தி.. சிலந்தி.. சிலந்தி. :lol:

 

(பெண்ணைப் பற்றி என்ன ஒட்டுமொத்த மனிதனையும் பற்றி ஓரளவுக்கு அறிஞ்சு கொண்டவங்க.. சிலவற்றை அனுபவிக்கவா துடிப்பாங்க... நிதானமா சிந்தித்தால்.. எல்லாம் சுத்த வேஸ்டு. அதுக்குப் போயி.. இந்த மனுசப் பயலுவ படுற பாடு..! அப்படின்னு தான் யோசிக்கத் தோணும். ) :lol:

 

நன்றி சசி_வர்ணம் அண்ணா. :)

Edited by nedukkalapoovan

"நித்திரையை குலைத்தவள்"

 

அதுசரி நெடுக்ஸ்... அந்தச் சிலந்தி     பெண் சிலந்திதான் என்று            உங்களுக்கு எப்பிடித் தெரியும்???? :icon_idea::rolleyes::wub::D:lol:

( சிலந்தியைக் கூட விட்டு வைக்கிறது இல்லை..... என்ன கொடுமை சரவணா இது...?!! நெடுக்ஸுக்கா இந்த நிலைமை ! :lol:  )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நித்திரையை குலைத்தவள்"

 

அதுசரி நெடுக்ஸ்... அந்தச் சிலந்தி     பெண் சிலந்திதான் என்று            உங்களுக்கு எப்பிடித் தெரியும்???? :icon_idea::rolleyes::wub::D:lol:

( சிலந்தியைக் கூட விட்டு வைக்கிறது இல்லை..... என்ன கொடுமை சரவணா இது...?!! நெடுக்ஸுக்கா இந்த நிலைமை ! :lol:  )

 

நீங்கள் இந்தக் கருத்தை வாசிக்கவில்லைப் போல. :)

 

கோடை காலத்தில் சுதந்திரமாக வாழும் சிலந்திகள்.. இலையுதிர் காலத்தில்.. குளிர்காலத்தை கழிக்க மனிதர் கட்டியுள்ள வீடுகளுக்குள் குடிபெயரும். அதில் பெண் சிலந்தி தான் இப்படி வரும். ஏனெனில் அது தான் கருக்கட்டிய முட்டைகளை வைச்சிருக்கும். அடுத்த வசந்த காலத்தில்.. குட்டி சிலந்தி பூச்சிகளை உருவாக்க. இதில் கொடுமை என்னான்னா.. ஆண் சிலந்திகள் இப்படி இடம்பெயராமல்.. செத்துவிடுவது தான். ஆண்களுக்கு எப்பவும் தியாக மனப்பான்மை.. என்றதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீங்க..

 

 

சிலந்தி நம்ம வீட்டுக்க அத்துமீறி நுழைந்து நம்மளை தொந்தரவு பண்ணினா விட்டா வைக்க முடியும். :lol::D

 

நன்றி கவிதை..தங்கள் கருத்துக்களுக்கு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் மூளைக்குள் பெண் என்கிற மாய விம்பம் புகுந்து சிப்பிலி ஆட்டுது.. :D ஆனால் அவர் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்.. :huh:  ஏனென்றால் அதே மூளை பொய் சொல்லச் சொல்லுது..  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் மூளைக்குள் பெண் என்கிற மாய விம்பம் புகுந்து சிப்பிலி ஆட்டுது.. :D ஆனால் அவர் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்.. :huh:  ஏனென்றால் அதே மூளை பொய் சொல்லச் சொல்லுது..  :lol:

 

மாய விம்பம் அல்ல.. பெண் என்கிற.. மாயப் பிசாசு. அது மூளைக்க நுழைய முயற்சி செய்யத் தொடங்கி கனகாலமாச்சு. நாங்க தான் உள்ள வராமல்.. விரட்டிக்கிட்டு இருக்கம்..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.