Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹாங்காங்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?

Featured Replies

டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் http://www.lankann.com/ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. இதுவரை இச்செய்தி பற்றிய உண்மைத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை.

Read more at: http://tamil.oneindia.in/news/india/pottu-amman-arrest-hong-kong-210651.html

 

 

 

 

http://tamil.oneindia.in/news/india/pottu-amman-arrest-hong-kong-210651.html

  • கருத்துக்கள உறவுகள்

'புலிகளின் தலைவர் பிரபாகரன் கைது' என்ற ஊகமும் வருமோ என்னவோ? :o:(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் உங்கள் புதிய இணையத்தளத்தை பிரபல்யம் அடையச் செய்யும் ஒரே வழி.... அப்படின்னு கீழ போட்டால் இன்னும் நல்லா இருக்கும். :lol:

  • தொடங்கியவர்

ஐ நாவில் உரையாற்றவிருக்கும் மகிந்தவுக்கு வரும் தடைகளை தகர்த்தெறிய இலங்கைப்புலனாய்வுத்துறை தமிழ் மக்களை உளரீதியாகப் பாதிப்படைய எடுத்த முயற்சியாகக் கூட இருக்கலாம்.

 

இது ஒரு தமிழர் மீது திணிக்கப்பட்ட உளவியல் யுத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் மத்தியில் சரிந்துவரும் மகிந்தவின் செல்வாக்கை நிமிர்த்துவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்.  


சிங்களவர் மத்தியில் சரிந்துவரும் மகிந்தவின் செல்வாக்கை நிமிர்த்துவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்.  

பொட்டம்மான் கைது செய்யப்பட்டாரா?

அன்பார்ந்த தோழர்களே பொட்டம்மான் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற வதந்தியை முதன்முதலில் நேற்று lankann.com என்ற இணையதளம் நேற்று பரப்பியது அதே தகவலை இந்த இணையதளத்தை மேற்கோள் காட்டி நாலாந்தர ஊடகமான tamil.oneindia.com இணையதளம் இன்று பரப்பி உணர்வாளர்களிடையே தேவையில்லாத மன உளைச்சலை பரப்பிவிட்டது..

இந்த lankann.com இணையதளம் seevarathinam dinoth என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபரை தேடியதில் இவரின் கூகிள் ப்ளஸ் முகவரியை கண்டுபிடிக்க முடிந்தது. இதில் இவர் பிரான்சில் வசிப்பதாக பதிவு செய்திருக்கிறார்.

https://plus.google.com/116199428086926845673/posts

இவர் பெயரை முகநூளில் தேடியதில் இவரது பெயரில் எந்த கணக்கும் இல்லை.

ஆனால் இந்த நபரின் பெயரில் வேறு எந்த இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேடினால் TAMILNEWS1.COM என்ற பெயரில் ஏற்கனவே ஒரு இணையம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை பதிவு செய்த போது இவர் தனது மின்னஞ்சல் முகவரியாக dinothss@yahoo.fr என்ற முகவரியை கொடுத்திருக்கிறார். இந்த மின்னஞ்சலை வைத்து அந்த நபரை முகநூளில் தேடியபோது அவரது முகநூல் முகவரியாக Tamilminthan Tamileelam என்ற பெயரில் அவரது முகநூல் கணக்கு இயங்கி வருவது உறுதியானது. இதில் இவர் பிரான்சில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/ttamileelam

மேலும் அவரின் பெயரில் இருக்கும் மற்றைய முகநூல் கணக்கு இது தான்

https://www.facebook.com/dinoth.athiyan

https://www.facebook.com/sdinoth

இந்த கணக்கில் இருந்து தான் தொடர்ச்சியாக பத்திற்கும் மேற்பட்ட முறை காலையில் இருந்து பகிர்ந்திருக்கிறார்.

அநேகமாக இது இவரின் மற்றைய முகநூல் கணக்காக இருக்கலாம்.

https://www.facebook.com/tamilkannews

இவரின் கூகிள் ப்ளஸ் முகவரியின் மூலம் இவர் நடத்தும் மற்றொரு வலைதளத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

http://francestudentsnews.blogspot.in/

http://tlknews.blogspot.fr/2013/10/blog-post.html

இந்த வலைதளமும் பிரான்ஸ் ஸ்டுடண்ட்ஸ் நியூஸ் என்ற பெயரில் தான் இருக்கிறது. எனவே இது குறிப்பிட்ட seevarathinam dinoth என்று உறுதி செய்ய முடிகிறது.

தமிழினத்தை உளவியல் ரீதியாக குழப்பமடைய செய்வதற்காகவே இப்படியான நபர்கள் இணையதளங்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் பல முகவரிகளில் தமிழாதரவு இணையதளங்களாக நம்மிடையே பரவி நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் தோழர்களே.

# நண்பனை போல் இருப்பான் பரம அயோக்கியன்

10622914_811491398873076_249424411922226

 

https://www.facebook.com/photo.php?fbid=811491398873076&set=a.256188451070043.71409.100000366696465&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அம்மானுக்கு போக வேற நாடே கிடைக்கல்ல ஹாங் காங் போய் சர்வதேச விமான நிலையம் ஊடாக கனடா போக பாத்தவர்......

முடியல்ல.....

போங்கடா நீங்களும் உங்க செய்தியும்....

  • கருத்துக்கள உறவுகள்

எடை தம்பி இப்படி ஒரு செய்தியப்போட்டு பொட்டம்மான் பெயருக்கே மரியாதையில்லாம பண்ணிவிட்டீன்களே 

பொட்டம்மான் என்ன புலிகள் இயக்கத்தில் வடையா சுட்டுக்கொண்டிருந்தவர் 

எடை தம்பி இப்படி ஒரு செய்தியப்போட்டு பொட்டம்மான் பெயருக்கே மரியாதையில்லாம பண்ணிவிட்டீன்களே 

பொட்டம்மான் என்ன புலிகள் இயக்கத்தில் வடையா சுட்டுக்கொண்டிருந்தவர் 

அப்ப கே பி இயக்கத்தில் வடையா சுட்டவர் .

மிக மகிழ்ச்சியான செய்தி .இது .எம் வீரத்தின் விளைநிலம் பொட்டம்மான் அண்ணா இன்னும் இருக்கிறார் என்ற செய்தியை அரசாங்கமே எமக்கு உறுதிப்படுத்தியுள்ளது .........இனி ..............

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் இருப்புப் பற்றிய செய்தி இங்கு சிலருக்கு வடை பாயாசத்தை நினைப்பூட்டுது. என்ன இருந்தாலும் மண்ணின் மைந்தர்களல்லவா. :D 

இதுவே இப்படி என்றால்...!! வரும் யனாதிபதி தேர்தலில், மகிந்த கும்பல் பிரசாரத்தை மேற்கொள்ளும் வேளையில், வாக்குத் தேடும் நோக்கில், தலைவர் பிரபாகரன் பற்றிய செய்தியைத் தப்பாமல் வெளியிடுவார்கள். அந்த வேளையில் என்னென்னவெல்லாம் நினைவில் வரப்போகுதோ....???  :rolleyes:  :rolleyes:  

  • தொடங்கியவர்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த http://www.lankann.com இணையதளம் தற்போது இதை மறுத்து இச்செய்தியை நீக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த செய்தித் தளத்தில், அந்த இணையம் ஹேக் செய்யப்பட்டு பொட்டம்மான் பற்றி பொய்ச்செய்தியை பதிவேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அச் செய்தித் தளம் அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொட்டம்மான் பற்றிய செய்தியை நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளது. தமிழ் ஒன் இந்தியா மேற்கண்ட இணைய தளத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியே பொட்டம்மான் கைது என்ற செய்தி வெளியாகி இருப்பதாக வெளியிட்டது. ஆனால் தற்போது இந்த செய்தியை நீக்கிவிட்டதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இதற்கு தமிழ் ஒன் இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் எழுதி இருப்பதற்குதான் என்ன அர்த்தம் என விளங்கவே இல்லை. 

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/srilankan-portal-denied-pottamman-news-210766.html

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/srilankan-portal-denied-pottamman-news-210766.html

  • தொடங்கியவர்
பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டாரா? : 
இலங்கை ராணுவம் விளக்கம்
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான், கனடா செல்லும் வழியில் கொங்கொங் நாட்டில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக லங்கன் இணையதளம் செய்தி வெளியிட்டது.
 
இது குறித்து  இலங்கை ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.  இலங்கை ராணுவத்தின் பேச்சாளர் ருவான் வணிகசூர்யா இது குறித்து கூறுகையில், ’’2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் நடந்த மோதலின் போதே பொட்டு அம்மான் படுகாயமடைந்து உயிரிழந்ததைப் பார்த்த நேரடி சாட்சியங்கள் உள்ளன. ஆனால் அவரது உடல் மட்டும் மீட்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.  எனவே, பொட்டு அம்மான் உயிருடனும் இல்லை, அவர் கைது செய்யப்படவும் இல்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மான் உயிரிழந்துவிட்டார்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-

12 செப்டம்பர் 2014

Pottu-Amman-with-prabakaran_CI.jpg

பொட்டு அம்மான் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அண்மையில் சில இணைய ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் உயிரிழந்தமைக்கான போதியளவு ஆதாரங்கள் கிடைக்கப ;பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொட்டு அம்மானுக்கு எதிரான இந்திய நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அண்மையில் குறித்த வழக்கிலிருந்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொட்டு அம்மான் காயமடைந்து உயிரிந்ததனை பல நேரில் கண்ட சாட்சிகள் உறுதி செய்யுதுள்ளதாகவும், அவரது சடலம் கிடைக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது களத்தில் இருந்ததாகவும், பொட்டு அம்மான் உயிரிழந்தமையை உறுதி செய்ய முடியும் எனவும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும், பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என அவரும் குறிப்பிட்டுள்ளார்.

பணம் திரட்டும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வாறு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கக் கூடும் எனவும், பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111495/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கே பி இயக்கத்தில் வடையா சுட்டவர் .

அன்ன அவர் வடை மட்டுமல்ல சகலத்தையும் சுட்டவர் .

என்ன அவர் சிலபேரை போல வாயால வடை சுடவில்லை(வாயால ஈழம் வாங்கித்தாறோம் என்று) 

ஆனால் இப்ப சகல சௌபக்கியத்துடன் அரச செலவில் அல்வா சாப்பிடுகிறார்தானே ...  சிலரைப்போல 

 

Edited by Atonk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.