Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்

Featured Replies

இங்கு இரண்டு பேருக்கும் அவகுடிப்பது வைனா தெரியுது ஆனால் எனக்கு அவ வைன்கிளாசுக்குள் பிளேன்றியை ஊற்றி குடித்திருக்கா போல்  தோன்றுது இப்படித்தான் நீங்கள் இவவின் கொலையையும் பார்க்கும் பார்வை.

                                                                                                                            உங்களை மாதிரியாண ஆட்கள் புலி உருவாகி 2009மௌனிக்கும்வரை கலைச்சு கலைச்சு அபாண்ட பழிகள் சுமத்துவதிலேயே இருந்தீர்கள் சரி எல்லாம் முடிஞ்சு ஐந்து வருடத்திற்க்குமேல் ஆகியும் காழ்ப்புணர்வுடணேயே இருக்கின்றீர்கள் முடிந்து போனவைகளை விட்டு நடக்கவேண்டிய காரியங்களில் உங்கள் அனுபவத்தில் சாதுரிய ஆலோசனைகளை தமிழன் வாழனும் எனும் வகையில் வைத்தால் நல்லது.

நல்ல அந்தர் பல்டி..பிளேன் டீ??  :lol:  :lol:
நீங்கள் ஏன் அந்த படத்தை போட்டீர்கள் என்று என்னும் சொல்லவில்லையே.  :huh:
 
எல்லாம் முடிஞ்சு போச்சு என்டு ராஜபக்சவோட கை குலுக்குவமா?

Edited by தெனாலி

  • Replies 118
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1468774_756038124429397_1317777752_n.jpg

ராஜினியை புலிகள் கொன்றார்களா இல்லை புலிகளுக்கும் புத்திஜீவித கூட்டத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த என்னுமொரு தரப்பு கொன்றதா என்ற சந்தேகம் அவர் கொலைசெய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை கிடையாது. அவர்கொல்லப்பட்டதன் நோக்கம் மற்றும் விழைவுகள் என்ன என்ற அடிப்படையில் அவர் ஒரு அடயாளக் குறியீடாக மாற்றம் பெற்றார். புலிகள் போராட்டம் பயங்கரவாதமாக அடயாளப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தக் குறியீடு பெரிதும் பயன்பட்டது. புத்திஜீவிகள் இந்தக் குறியீட்டை நன்கு பயன்படுத்தினர். குறிப்பாக UTHR நன்கு பயன்படுத்திக்கொண்டது. அரச பயங்கரவாதம் செய்த ஆயிரக்கண அப்பாவி மக்களது படுகொலைகளை இந்தக் குறியீடு ஒரு திரைச்சேலையாக மறைத்து அரசபயங்கரவாதத்தை நியாயப்படுத்தியது. இவ் நியயப்படுத்தல்களில் சிங்களப் பேரினவாதத்தை விட தமிழ் புத்திஜீவிதக் கூட்டமே பெரிதும் பங்குபற்றியது. ராஜினியைப் போல் மருத்துவர்கள் தாதிகள் இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனையில் கொல்லப்பட்டனர் என்னும் ஏராளமானவர்கள் பல சந்தரப்பங்களில் கொல்லப்பட்டனர் ஆனால் அவர்கள் குறியீடாக மாற்றம் பெறவில்லை. ராஜினியின் கொலை பல ஆயிரம் கொலைகளை நியாயப்படுத்தும் ஒரு பிரச்சார அரசியலின் தொடக்கக்ப் புள்ளி. அது இன்னும் தொடர்கின்றது. இதனால் தமிழர்தரப்புக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. புத்திஜீவிதக் கூட்டம் புலிகள் செய்தது என்ற நிலையில் இருந்து அவர்கள் செய்தது பிழை என்று சொல்லும் போது அரச பயங்கரவாதம் சரி என்றாகின்றது. இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நியதி. இந்தச் சரி என்ற நியதிக்குள் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களது கொலைகள் அடங்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புலி விசுவாசிகள் ரஜனியின் வைன்கோப்பை ஏந்திய படத்தை போட்டதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு ரஜனி மேலிருக்கும் வன்மம்.

இந்த மாதிரி ஒரு வன்மம் பிடித்த ஒரு புலியால்தான் ரஜனி கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

புலிக்கு எதிராக பேசுபவர்களுக்கு தாசிப் பட்டம் கட்டுவதும், அவர்கள் தனிப்பட்ட படங்களை நெட்டில் போடுவதும் - "ஊத்தை சேது" போன்றவர்களின் நிதர்சனம்.நெட் இல் நடத்திய "கூவம்-ராஜதந்திரமும்" உலகம் அறிந்ததுதான்.

அதைப்போல தான் இந்தப்படமும், இப்போ கேள்வி எழுந்தவுடன் பிளேன் டீ, பால் டீ என்று சப்பை கட்டு கட்டல் வேற.

  • கருத்துக்கள உறவுகள்

யூட் நன்றாக ஆட்டுக்க மாட்டை விட்டு கட்டபார்க்கின்றீர்கள் .

நான் லண்டனில் இருந்த காலத்தில் புலிகள் உத்தியோக பேச்சாளராக ராஜனி இருந்தார் .பல்கலை கழக மாணவர்கள் கடத்தல் பற்றி வாக்குவாதப்பட்டிருக்கின்றோம் .

ராஜனி கொலை பற்றி மட்டும் எழுதுங்கள் .இதற்குள் கொண்டுவந்து தர்மலிங்கம் ,ஆலாலசுந்தரம் ,ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளை இதற்குள் போட்டு குழப்பவேண்டாம் .

இந்த கொலைகள் மற்றும் மாலை தீவின் மீதான பிளாட்டின் தாக்குதல் ஆகியவை அனைத்தும் இந்திய மற்றும் வேறு நாடுகளின் இரகசிய இராணுவ பிரிவுகளின் சம்பந்தத்துடன் இடம் பெற்றவை என்று நம்பும் பலர் இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் பொதுவான பின்னணி இருக்கிறது. நீங்கள் அதனை பார்க்க, அது பற்றி விவாதிக்க மறுக்கிறீர்கள். ஏன்?

கொலை செய்யப்பட சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு முன்னுள்ள இந்திய இராணுவம் பல்கலைக்கழகத்துக்குள் வந்து சுட்டது பற்றி அந்த முகாம் பொறுப்பாளருடன் பகிரங்கமாக வாக்குவாதப்பட்டார்.

புலிகள் பகிரங்கமாக நடமாட முடியாத காலம் அது. ரஜனி அவர்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதே வேளை தவறை தவறு என்று நேரடியாக சொல்லும் ஒருவராக இருந்தார்.

சிந்தித்து பார்த்தால் முறிந்த பனை என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளிநாடுகளை மையமாக வைத்து வெளிவந்த புத்தகம். யாழ்ப்பாணத்து புலிகளுக்கு ஆங்கில புலமையோ, ஆங்கிலத்தில் வரும் மனித உரிமைகள் பற்றிய புத்தகத்தை உடனுக்கு உடன் படிக்கும் வழக்கமோ அறவே இல்லை. அப்படி இருக்க எப்படி அவர்கள் தாம் நடமாட முடியாத நிலையில் இந்த புத்தகத்தை படித்து அதற்க்காக திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து ரஜனியை கொன்றிருக்க முடியும்? அதுவும் அதே இந்திய இராணுவ முகாமில் இருந்து பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரு ஈ பி ஆர் எல் எப் மாணவர்கள் முன்னிலையில்?

இது ஒரு திட்டமிட்ட சதி என்பதில் எனக்கு அன்றும் சந்தேகம் இல்லை இன்றும் இல்லை.

புலிகள் செய்த அநியாய படுகொலைகள் பல. ஆனந்தராஜா, செல்வி, விஜிதரன் போன்றவை அவற்றுள் மோசமானவை. ரஜினியின் கொலையும் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் புலிகள் பல படு கொலைகள் செய்தார்கள் என்பதற்காக வேற்று நாட்டு இராணுவ சதிகளை மூடி மறைக்கவோ கண்டும் காணாது விடவோ அல்லது எனது அறிவு சொல்வதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவோ போவதில்லை.நான் அறிந்த அளவில் ரஜினியின் கொலை வேற்று நாட்டு சதி.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்,

இப்படி தாங்கள் செய்யாத ஒரு கொலயை தம்மீது போட்டு, அதன் மூலம் அவர்களது போராட்டத்தையே ஆட்டம் காணச்செய்யும் படி இனவாதிகள் காய் நகர்த்தும் போது, இருபது வருடங்களாக அந்த கொலையை மறுக்காமல், அதன் மூலம் நடத்தப்பட்ட இராஜதந்த்ஹிரப் போரை முறியடிக்காமல் வேடிக்கை பார்க்குமளவுக்கு கையாலாகாதவர்களா புலிகள்?

நான் அப்படி நினைக்கவில்லை. புலிகளை நீங்கள் மிகவும் மட்டமாக எடை போடுகிறீர்கள்.

ராஜினியை புலிகள் கொன்றார்களா இல்லை புலிகளுக்கும் புத்திஜீவித கூட்டத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த என்னுமொரு தரப்பு கொன்றதா என்ற சந்தேகம் அவர் கொலைசெய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை கிடையாது. அவர்கொல்லப்பட்டதன் நோக்கம் மற்றும் விழைவுகள் என்ன என்ற அடிப்படையில் அவர் ஒரு அடயாளக் குறியீடாக மாற்றம் பெற்றார். புலிகள் போராட்டம் பயங்கரவாதமாக அடயாளப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தக் குறியீடு பெரிதும் பயன்பட்டது. புத்திஜீவிகள் இந்தக் குறியீட்டை நன்கு பயன்படுத்தினர். குறிப்பாக UTHR நன்கு பயன்படுத்திக்கொண்டது. அரச பயங்கரவாதம் செய்த ஆயிரக்கண அப்பாவி மக்களது படுகொலைகளை இந்தக் குறியீடு ஒரு திரைச்சேலையாக மறைத்து அரசபயங்கரவாதத்தை நியாயப்படுத்தியது. இவ் நியயப்படுத்தல்களில் சிங்களப் பேரினவாதத்தை விட தமிழ் புத்திஜீவிதக் கூட்டமே பெரிதும் பங்குபற்றியது. ராஜினியைப் போல் மருத்துவர்கள் தாதிகள் இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனையில் கொல்லப்பட்டனர் என்னும் ஏராளமானவர்கள் பல சந்தரப்பங்களில் கொல்லப்பட்டனர் ஆனால் அவர்கள் குறியீடாக மாற்றம் பெறவில்லை. ராஜினியின் கொலை பல ஆயிரம் கொலைகளை நியாயப்படுத்தும் ஒரு பிரச்சார அரசியலின் தொடக்கக்ப் புள்ளி. அது இன்னும் தொடர்கின்றது. இதனால் தமிழர்தரப்புக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. புத்திஜீவிதக் கூட்டம் புலிகள் செய்தது என்ற நிலையில் இருந்து அவர்கள் செய்தது பிழை என்று சொல்லும் போது அரச பயங்கரவாதம் சரி என்றாகின்றது. இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நியதி. இந்தச் சரி என்ற நியதிக்குள் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களது கொலைகள் அடங்குகின்றது.

நீங்கள் சொல்லும் பதில் அனைவரும் அறிந்ததுதான் .

யார் சுட்டது என்று கேட்டால் அதை யார் பயன்படுத்தினார்கள் என்று பதில் எழுதுகின்றீர்கள் .

இரட்டை கோபுரத்தை யார் தாக்கினார்கள் என்று கேட்டால் அதை அமெரிக்கா நல்லா பயன்படுத்தி உலகம் முழுக்க ஊடுருவுது  என்பது பதில் அல்ல .

சந்ததியை சுட்டது யார் என்றால் அதன் பதில் புளொட் அதை என் எல் டி பயன்படுத்தியது என்பதல்ல .

இனிமேலாவது சுற்றி வளைக்காமல் விஷத்தை நேரடியாக எழுதி கதைத்து பழகுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிஞ்சு போச்சு என்டு ராஜபக்சவோட கை குலுக்குவமா?

கைகுலுக்குவம் வாங்க கஜல் அகர்வால்,சமந்தா இப்படியாண பேபிகளுடன் மாத்திரமே நான் கைகுலுக்குவன்.

-------------

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்,

இப்படி தாங்கள் செய்யாத ஒரு கொலயை தம்மீது போட்டு, அதன் மூலம் அவர்களது போராட்டத்தையே ஆட்டம் காணச்செய்யும் படி இனவாதிகள் காய் நகர்த்தும் போது, இருபது வருடங்களாக அந்த கொலையை மறுக்காமல், அதன் மூலம் நடத்தப்பட்ட இராஜதந்த்ஹிரப் போரை முறியடிக்காமல் வேடிக்கை பார்க்குமளவுக்கு கையாலாகாதவர்களா புலிகள்?

நான் அப்படி நினைக்கவில்லை. புலிகளை நீங்கள் மிகவும் மட்டமாக எடை போடுகிறீர்கள்.

இராஜதந்திரத்திலும், அரசியலிலும் புலிகள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள் என்பதில் பலரும் உடன்படுகிறார்கள். சொல்ஹைம் ஒருபடி மேலே சென்று புலிகள் சிறந்த இராணுவம் ஆனால் அவர்களுக்கு அரசியல் சூனியம் என்று அண்மையில் சொல்லியிருந்தார். அவர்களின் தோல்வி இராணுவ தோல்வி அல்ல; மிக மோசமான அரசியல் இராஜதந்திர தோல்வி. இராணுவ வெற்றியை கவனத்தில் கொண்டு மற்ற அனைத்தையும் அவர்கள் கைவிட்டிருந்தார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி, விஜிதரன், விசு போன்ற பல படுகொலைகளின் பின் புலிகள் மறுப்பு பிரசுரம் விட்டிருந்தால் அப்பாவிப் புலிகள் மேல் எந்தப் பழியும் வந்திருக்காது.

அப்பாவிகள் அரசியலுக்கு வருவதும் இல்லை புரட்சிகள் செய்வதும் இல்லை. புலிகள் அப்பாவிகள் இல்லை.

ஆனால் உங்களுக்கு புரிந்த அரசியலும் இராஜதந்திரமும் அவர்களுக்கு புரிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

நீங்கள் புலிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு ( ராஜதந்திரம் தெரியாததால் எதிரிகள் வீண்பழி போட்டபோதும் அதை எதிர்த்து அரசியல் செய்யத் தெரியாமல் துவக்கை மட்டும் நம்பி இருந்தார்கள் என்பது) ரஜனியை கொன்றார்கள் எனும் குற்றச்சாட்டை விட பாரதூரமானது.

ஏனைய அரசியற் சக்திகள் அனைத்தையும் அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றி, தம்மை தாமே ஏக பிரதிநிதிகளாக வரித்துக்கொண்ட இயக்கம் - புலியை விட்டால் தமிழர்க்கு வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியபின் - இப்படி பட்ட வரலாற்றுத்தவறுகளை விட்டதே அதன் மூலம் தமிழர் போராட்டம் சாவடிக்கப்பட்டதே எனும் போது முள்ளிவாய்க்காலில் நம் இனத்தை நடுத்தெருவில் விடுவதற்க்கான ஆரம்ப படிகளில் ஒன்றுதான் ரஜனியின் சாவு என்பதுதானே பொருள்?

கைகுலுக்குவம் வாங்க கஜல் அகர்வால்,சமந்தா இப்படியாண பேபிகளுடன் மாத்திரமே நான் கைகுலுக்குவன்.

-------------

நியானி: தணிக்கை

அவங்களோட கை குலுக்கிறது இருக்கட்டும்..நீங்கள் ஏன் எமது மற்ற கேள்வியை தவிர்கிறீர்கள்?

நீங்கள் ஏன் அந்த படத்தை போட்டீர்கள் என்று என்னும் சொல்லவில்லையே.   :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வைன் கிளாசுக்க பிளேன் டீ குடிச்சதாலை ராஜினி கொல்லப்படவேண்டியவர்!

நீங்கள் சொல்லும் பதில் அனைவரும் அறிந்ததுதான் .

யார் சுட்டது என்று கேட்டால் அதை யார் பயன்படுத்தினார்கள் என்று பதில் எழுதுகின்றீர்கள் .

இரட்டை கோபுரத்தை யார் தாக்கினார்கள் என்று கேட்டால் அதை அமெரிக்கா நல்லா பயன்படுத்தி உலகம் முழுக்க ஊடுருவுது  என்பது பதில் அல்ல .

சந்ததியை சுட்டது யார் என்றால் அதன் பதில் புளொட் அதை என் எல் டி பயன்படுத்தியது என்பதல்ல .

இனிமேலாவது சுற்றி வளைக்காமல் விஷத்தை நேரடியாக எழுதி கதைத்து பழகுவோம்

யார் சுட்டது என்பதற்க உண்மையில் விடை தெரியாது. தெரியாத ஒன்றை புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை.

எனக்குத் தெரிந்தது ராஜினியை புலிகள் கொன்றார்கள் என்ற கருத்தின் மேல் தொடரும் பிரச்சார அரசியல் மட்டுமே. எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் என்னால் எழுத முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி விசுவாசிகள் ரஜனியின் வைன்கோப்பை ஏந்திய படத்தை போட்டதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு ரஜனி மேலிருக்கும் வன்மம்.

இந்த மாதிரி ஒரு வன்மம் பிடித்த ஒரு புலியால்தான் ரஜனி கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

புலிக்கு எதிராக பேசுபவர்களுக்கு தாசிப் பட்டம் கட்டுவதும், அவர்கள் தனிப்பட்ட படங்களை நெட்டில் போடுவதும் - "ஊத்தை சேது" போன்றவர்களின் நிதர்சனம்.நெட் இல் நடத்திய "கூவம்-ராஜதந்திரமும்" உலகம் அறிந்ததுதான்.

அதைப்போல தான் இந்தப்படமும், இப்போ கேள்வி எழுந்தவுடன் பிளேன் டீ, பால் டீ என்று சப்பை கட்டு கட்டல் வேற.

ஆமண்ணேய் விட்டால் பொதுக்கருத்துக்களத்தில் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி புலியை மட்டம்தட்ட உங்களால் மட்டும் தான் முடியும். எதிர்மறையின் முகமற்ற படத்துக்கு இயல்பாண    படம் கூகிலில் பன்ன இந்த படம்தான் கிடைச்சிது இந்தபடம் uk யில் எடுக்கப்பட்டிருக்கு.இப்படியாண அறிவிஜிவிகளை புலிகளிற்க்கு அழிக்கவேண்டிய தேவையில்லை அவர்களை பொறுத்தவரை இதற்க்கு பதிலலிப்பதற்க்கு முதல் ஆயதபலத்தை கூட்டுவதிலேயே ஆர்வமாய் இருந்தார்கள் கடைசியில் அதுதான் பிழையாகிவிட்டுது.இஸ்லாமிய அரசு (is)போல் எதிர்த்தவனை எல்லாம் வாளை வைச்சு அறுத்திருந்தால் சிங்களம் அம்பாந்தோட்டைக்குள்ளும் புலி கொலும்பிலும் நீங்கள் .......................... இருந்திருக்கவேண்டியிருக்கும்.

படம் போட்டதிற்க்கு விளக்கம் தரப்பட்டுள்ளது இதற்க்கு மேலும் ஏன்போட்டாய்? என  அறிவுஜீவித்தனமாய் கேட்க்க மாட்டீர்கள் தானே? :D

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

நீங்கள் புலிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு ( ராஜதந்திரம் தெரியாததால் எதிரிகள் வீண்பழி போட்டபோதும் அதை எதிர்த்து அரசியல் செய்யத் தெரியாமல் துவக்கை மட்டும் நம்பி இருந்தார்கள் என்பது) ரஜனியை கொன்றார்கள் எனும் குற்றச்சாட்டை விட பாரதூரமானது.

ஏனைய அரசியற் சக்திகள் அனைத்தையும் அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றி, தம்மை தாமே ஏக பிரதிநிதிகளாக வரித்துக்கொண்ட இயக்கம் - புலியை விட்டால் தமிழர்க்கு வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியபின் - இப்படி பட்ட வரலாற்றுத்தவறுகளை விட்டதே அதன் மூலம் தமிழர் போராட்டம் சாவடிக்கப்பட்டதே எனும் போது முள்ளிவாய்க்காலில் நம் இனத்தை நடுத்தெருவில் விடுவதற்க்கான ஆரம்ப படிகளில் ஒன்றுதான் ரஜனியின் சாவு என்பதுதானே பொருள்?

உண்மை. இது வரலாறு. நடந்து முடிந்தது. அதேவளை ஏனைய அரசியற் சக்திகள் புலிகளிலும் பார்க்க சிறந்த வகையிற் செயற்பட்டார்கள் என்று நான் சொல்ல்லவில்லை. அவர்களின் பலவீனங்கள் பல.

Edited by Jude

யார் சுட்டது என்பதற்க உண்மையில் விடை தெரியாது. தெரியாத ஒன்றை புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை.

எனக்குத் தெரிந்தது ராஜினியை புலிகள் கொன்றார்கள் என்ற கருத்தின் மேல் தொடரும் பிரச்சார அரசியல் மட்டுமே. எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் என்னால் எழுத முடியும்.

புலிகள் தான் செய்தார்கள் என்று உங்களை யார் சொல்ல சொன்னது .எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் எழுதுகின்றோம் .யாழில் இது தானே காலமாக நடக்குது .

இதில் பெரும் பகிடி நீங்கள் சொல்லும் பிரச்சார அரசியல் .இதைத்தானே நாங்கள் இவ்வளவு காலமும் சொல்லுகின்றோம் .புலிகள் சுட்டார்களோ இல்லையோ அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் வலுவுற்று சர்வதேசம் அவர்களை அழிக்கும் போது அநியாயமாக் பொதுமக்களும் அழிய போகின்றார்கள் என்று .

அமிரை ,ராஜீவை,நீலனை கேதீசை கொல்லும் உதைத்தானே சொன்னோம் உந்த கொலை அரசியல் உங்களையும் அழித்து தமிழர்களையும் அழிக்க போகின்றது என்று .உந்த கொலை அரசியலை வீரம் என்று  விசில் அடித்தவர்களைதான் தான் இப்போ திட்டி தீர்கின்றேன் .

உந்த பிரச்சார அரசியல் தானே ராஜபக்ஸா அரசு இவ்வளவு அழிவுகளையும் செய்யும் போது சர்வதேசத்தை வாய் மூடவைத்தது இது கூட விளங்காமல்  புலி என்ரை மாமனை இல்லை மச்சானை சுட்டது என்று திட்டி தீர்ப்பது போலிருக்கு உங்கள் கதை .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமிரை ,ராஜீவை,நீலனை கேதீசை,ரஜனியை கொல்லும் போது சர்வதேசம் புலிகளுக்கு எதிராக திரும்பி பயங்கரவாதிகளாக்கி அவர்களை அழித்ததாம். ஆனால் அரசு பரராஜசிங்கம், குமார் பொன்னம்பலம், ரவிராஜ், மற்றும் தராக்கியை கொல்லும் போது மட்டும் இதே உலகம் அரசைப்பார்த்து பயங்கரவாதி என சொல்லவும் இல்லை. அழிக்கவும் இல்லை. தர்க்கமாக பார்த்தால் உலகம் கேனைகளாக உள்ளார்கள். அல்லது சுயநலவாதிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் பதில் அனைவரும் அறிந்ததுதான் .

யார் சுட்டது என்று கேட்டால் அதை யார் பயன்படுத்தினார்கள் என்று பதில் எழுதுகின்றீர்கள் .

இரட்டை கோபுரத்தை யார் தாக்கினார்கள் என்று கேட்டால் அதை அமெரிக்கா நல்லா பயன்படுத்தி உலகம் முழுக்க ஊடுருவுது  என்பது பதில் அல்ல .

சந்ததியை சுட்டது யார் என்றால் அதன் பதில் புளொட் அதை என் எல் டி பயன்படுத்தியது என்பதல்ல .

இனிமேலாவது சுற்றி வளைக்காமல் விஷத்தை நேரடியாக எழுதி கதைத்து பழகுவோம் 

லூசுதனமானவர்களுடன் பக்குவமாக உட்கார்ந்து இருந்து ஆறுதலாக அவர்களுக்கு புத்தி வரும்படி பேசும்.
புத்தி எனக்கு இன்னமும்  வரவில்லை. அதனால் அப்படியான னவர்களை கண்டால் கொஞ்சம் ஒதுங்கி இருந்து 
போக பழகி கொண்டேன்.
 
27 அடி விட்டத்தை கொண்ட (steel) இரும்பிலும் கனதியான உலகோத்தில் தான் இரட்டை கோபுரம் கட்டபட்டது.
இதில் மேலே சென்று ஒரு பிளேன் மோதினால். 21 நிமிடத்தில் அது எங்கும் சரியாது அப்படியே அடிமட்டத்தில் கிழே விழும் என்று. மண்டையில் மயிர் மட்டும் இருப்பவர்களுக்கே சொல்லி நம்ப வைக்க முடியும். 
நம்ப வைத்தும் விட்டார்கள்.
 
சும்மா ஒரு தடியில் அதிக பாரத்தை வைத்தாலே ஒரு பக்கம் சரிந்துதான் முறிந்து விழும்.
இது மயிர் மட்டும் உள்ளவர்களுக்கு கண்டுபிடித்த புது physic 
 
கிட்டதட்ட ரஜனி கொலை போல................
ஒரு இனமே அழிந்து கிடக்கிறகிறது.
 
ஒரு ரஜனிக்கு மட்டும் இரங்கலும் கூட்டமும் கட்டாயம் நடத்தித்தான் ஆகனும். புத்தி கூர்மை இருந்தால் இப்படிதான்  செய்யணும்.
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமிரை ,ராஜீவை,நீலனை கேதீசை,ரஜனியை கொல்லும் போது சர்வதேசம் புலிகளுக்கு எதிராக திரும்பி பயங்கரவாதிகளாக்கி அவர்களை அழித்ததாம்.

புலிகள் கொன்றதாக சொல்லியாவது அவர்களை பயங்கரவாதிகளாக பிரகடன படுத்தியது உண்மை தானே?

ஆனால் அரசு பரராஜசிங்கம், குமார் பொன்னம்பலம், ரவிராஜ், மற்றும் தராக்கியை கொல்லும் போது மட்டும் இதே உலகம் அரசைப்பார்த்து பயங்கரவாதி என சொல்லவும் இல்லை. அழிக்கவும் இல்லை.

உண்மை தானே?

தர்க்கமாக பார்த்தால் உலகம் கேனைகளாக உள்ளார்கள். அல்லது சுயநலவாதிகளாக உள்ளார்கள்.

இன்னமும் உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கிறதா? இப்படியான உலக அரசியலில் செயற்பட தெரிந்த நாடுகளும் இனக்குழுக்களும் தாம் வாழுகின்றன. மற்றவை அழிந்து போகின்றன.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

புலி விசுவாசிகள் ரஜனியின் வைன்கோப்பை ஏந்திய படத்தை போட்டதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு ரஜனி மேலிருக்கும் வன்மம்.

இந்த மாதிரி ஒரு வன்மம் பிடித்த ஒரு புலியால்தான் ரஜனி கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

புலிக்கு எதிராக பேசுபவர்களுக்கு தாசிப் பட்டம் கட்டுவதும், அவர்கள் தனிப்பட்ட படங்களை நெட்டில் போடுவதும் - "ஊத்தை சேது" போன்றவர்களின் நிதர்சனம்.நெட் இல் நடத்திய "கூவம்-ராஜதந்திரமும்" உலகம் அறிந்ததுதான்.

அதைப்போல தான் இந்தப்படமும், இப்போ கேள்வி எழுந்தவுடன் பிளேன் டீ, பால் டீ என்று சப்பை கட்டு கட்டல் வேற.

நீங்கள் தேனி போன்ற தளங்களை வாசிக்காத நல்லவரோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் செய்தார்கள் என்று உங்களை யார் சொல்ல சொன்னது .எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் எழுதுகின்றோம் .யாழில் இது தானே காலமாக நடக்குது .

இதில் பெரும் பகிடி நீங்கள் சொல்லும் பிரச்சார அரசியல் .இதைத்தானே நாங்கள் இவ்வளவு காலமும் சொல்லுகின்றோம் .புலிகள் சுட்டார்களோ இல்லையோ அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் வலுவுற்று சர்வதேசம் அவர்களை அழிக்கும் போது அநியாயமாக் பொதுமக்களும் அழிய போகின்றார்கள் என்று .

அமிரை ,ராஜீவை,நீலனை கேதீசை கொல்லும் உதைத்தானே சொன்னோம் உந்த கொலை அரசியல் உங்களையும் அழித்து தமிழர்களையும் அழிக்க போகின்றது என்று .உந்த கொலை அரசியலை வீரம் என்று  விசில் அடித்தவர்களைதான் தான் இப்போ திட்டி தீர்கின்றேன் .

உந்த பிரச்சார அரசியல் தானே ராஜபக்ஸா அரசு இவ்வளவு அழிவுகளையும் செய்யும் போது சர்வதேசத்தை வாய் மூடவைத்தது இது கூட விளங்காமல்  புலி என்ரை மாமனை இல்லை மச்சானை சுட்டது என்று திட்டி தீர்ப்பது போலிருக்கு உங்கள் கதை .

ஏன் அப்ப சுடுபவருடன் கூட போன மாதிரி இவளவு நாளும்  குத்தி முறிகிறீர்கள்???
யாழ் களத்தை ஐ நா பிரதி நிதிகளா வாசிக்கிறார்கள் ????
 
எனக்கு பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கு இருக்கு என்று என்னைத்தான் அண்ணே இவளவு நாளும் எழுதிவாறார் போல...
அண்ணே வீட்டில் யாழ் களத்தை  வாசிப்பவர்கள்தான் உலக அரசியல் வாதிகள்.
 
நல்லது செய்பவன் அழிந்து போவான் என்பது உலக நியதி ................. அது புலிகளுக்கும் தெரியும் செகுவரவுக்கும் தெரியும்  ஜேசு கிறிஸ்துவுக்கும் தெரியும்.
அதுக்காவெல்லாம் போராடாமலே போவது என்றால். புலிகள் என்று ஒரு இயக்கமே இருந்ததிருக்காது.
புளொட் மட்டும்தான் இருந்திருக்கும்.
எங்களை சுட வந்தார்கள் அதுதான் சொந்த இனத்தையே காட்டிகொடுத்து சுட்டு தள்ளினோம் என்று புது தியரி எல்லாம் கண்டுபிடிக்க. இலட்சியவாதிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கொள்கையும் கோட்பாடும்தான். 

புலிகள் தான் செய்தார்கள் என்று உங்களை யார் சொல்ல சொன்னது .எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் எழுதுகின்றோம் .யாழில் இது தானே காலமாக நடக்குது .

இதில் பெரும் பகிடி நீங்கள் சொல்லும் பிரச்சார அரசியல் .இதைத்தானே நாங்கள் இவ்வளவு காலமும் சொல்லுகின்றோம் .புலிகள் சுட்டார்களோ இல்லையோ அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் வலுவுற்று சர்வதேசம் அவர்களை அழிக்கும் போது அநியாயமாக் பொதுமக்களும் அழிய போகின்றார்கள் என்று .

அமிரை ,ராஜீவை,நீலனை கேதீசை கொல்லும் உதைத்தானே சொன்னோம் உந்த கொலை அரசியல் உங்களையும் அழித்து தமிழர்களையும் அழிக்க போகின்றது என்று .உந்த கொலை அரசியலை வீரம் என்று  விசில் அடித்தவர்களைதான் தான் இப்போ திட்டி தீர்கின்றேன் .

உந்த பிரச்சார அரசியல் தானே ராஜபக்ஸா அரசு இவ்வளவு அழிவுகளையும் செய்யும் போது சர்வதேசத்தை வாய் மூடவைத்தது இது கூட விளங்காமல்  புலி என்ரை மாமனை இல்லை மச்சானை சுட்டது என்று திட்டி தீர்ப்பது போலிருக்கு உங்கள் கதை .

நீங்கள் திட்டித் தீர்ப்பது என்பது புலிகள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியே. இதன் விழைவு அரச பயங்கரவாதத்தை நியயப்படுத்துவது மட்டுமே. இது திட்டுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. லாபம் சிங்களப் பேரினவாதத்திற்கே. புலிகளின் செயற்பாடுகளை திட்டுதல் அல்லது நியாயப்படுத்துதல் என்பதற்கு அப்பால் அதன் விழைவு என்ன அதனால் தமிழர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கின்றதா என்பதே முக்கியம்.

பல முன்னாள் போராளிகள் புலிகளின் கடந்தகாலத் தவறுகளை எழுதுகின்றார்கள் பலர் அரசியல் தெரியாதவர்கள் என்று திட்டுகின்றார்கள். இவைகள் எல்லாம் என்னுமொரு போராட்டம் நடக்கும் போது கடந்த காலத்தில் நடந்த தவறுகள் நடக்காமல் பார்ப்பதற்காக இல்லை. கடந்த முப்பது வருடகாலப் போராட்டத்தை அனுபவமாக எடுத்து இனிப் போரட்டத்தை தெடரவேணும் என்ற பிரயாசையில் இல்லை. ஏனெனில் இந்த அனுபவம் மரணத்துக்கு ஒப்பானது. வேணுமானால் என்னுமொரு ஒடுக்கப்படும் தேசீய இனம் இப்போராட்டத் தோல்வியில் இருந்து சில அனுபவங்களை தமது விடுதலை முயற்ச்சிக்கு பயன்படுத்தலாம் தவிர நாங்கள் இல்லை. ஏனெனில் நாம் போராட கிடைக்கும் எஞ்சிய அத்தனை துருப்புச் சீட்டையும் எதிரியிடம் கொடுக்கின்றோம். போராட்டத்திற்கான அவசியத்தை இல்லாமல் செய்கின்றோம்.

கொலை அரசியல் என்பது புலிகளின் சொத்து இல்லை. புலிகளுக்கு மட்டுமானதில்லை. அது இந்த இனத்தின் அசைவியக்கம். இரத்தக்கறை படியாத இயக்கங்கள் இல்லை. வேணுமானால் யார் கூட செய்தது யார் குறையச் செய்தது என்று பார்க்கலாம். கொலை பல படிநிலைகளைக் கடந்து இறுதியானது. அவ் இறுதிப் புள்ளியில் இருந்து எமக்கு ஞானங்கள் பிறப்பது அர்த்தமற்றது. கொலைக்கு முதல் நிலைகளில் ஒருவனை ஒருவன் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோதம் பகை அனுசரிக்கும் மன நிலை இல்லாமை வெறுப்பு என்பது நிரப்பி வழியும் பாரம்பரிய சமூகத்தில் ஆயதங்களும் அதிகாரமும் அறிவுடன் செயற்படவில்லை. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த அறிவு புலிகளுக்கு மட்டும் இல்லை மற்ற எல்லாருக்கும் இருந்தது என்பது அபத்தமானது. கொலையில் ஈடுபட்டவர்கள் கடசிநிலையில் உள்ளவர்கள். ஆனால் விரோத குரோத மனப்பான்மையுடன் நாம் இன்னும் முதல் நிலைகளிலேயே இருக்கின்றோம். இச்சமூகம் இன்னும் ஜனநாயக விரோத சமூகமே ! எமக்குள் நாம் இரைதேடும் குணத்துடன் தான் இருக்கின்றோம். எய்தவன் மீது குற்றம் சுமத்தி ஏவிய இந்தச் சமூகமம் அதில் நாமும் எக்காலத்திலும் யோக்கியராக முடியாது.

நாம் தோற்றதுக்கு கொலை அரசியல் காரணமாயின் அதை சரி செய்ய கொலை அரசியலின் பின்னணி என்ன அதில் எமதும் எமது சமூகம் பாரம்பரியத்தின் பங்கு என்ன என்ற தேடல் ஒன்றே வழி தவிர ஐயகோ புலிகள் கொலை அரசியல் செய்து விட்டார்கள் என்று காலம் முழுக்க கத்துவது வழி அல்ல. அக் கத்தலில் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகள் கதறல்கள் கேளாமல் போகின்றது. அந்தவகையில் ராஜினிக்கு ஒப்பாரி வைப்பதும் ஒரு கொலை அரசியலே .

அங்கை சிங்களவனும் முஸ்லிமும் எங்கடை நிலத்தை கொள்ளை அடித்து இனத்தை அழிக்கிறான் , நீங்கள் எல்லாம் எப்பவொஓ நடந்த கொலை பற்றி விவாதியுங்கள் , யாராவது எமது நிலத்தை எப்படி மீட்கலாம், நலிந்து போய் இருக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்திர்களா? இன்னுன் சொல்லப் போனால் இவர்கள் இப்படியான திரிகளை திறப்பத நோக்கமே எம்மை திசை திருப்புவது தான்.

கொலை எப்போ நடந்தது என்றாலும் அந்த கொலையை நியாயப்படுத்த அல்லது பூசி மெழுக‌ இங்கு சிலர் முயல்வதால் தான் அதைப்பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது. 
 
இப்படித்தான் சிங்கள இனவாதிகளும் முள்ளிவாய்க்கால் நடந்து 5 வருடமாகி விட்டது. எப்பவோ நடந்ததைப்பற்றி பேசாமல் நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று மட்டும் பேசுங்கள் என்று சொல்கிறார்கள். இறுதி யுத்தத்தைப்பற்றி பேசுபவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள் என்கிறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.