Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்

Featured Replies

நீங்கள் திட்டித் தீர்ப்பது என்பது புலிகள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியே. இதன் விழைவு அரச பயங்கரவாதத்தை நியயப்படுத்துவது மட்டுமே. இது திட்டுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. லாபம் சிங்களப் பேரினவாதத்திற்கே. புலிகளின் செயற்பாடுகளை திட்டுதல் அல்லது நியாயப்படுத்துதல் என்பதற்கு அப்பால் அதன் விழைவு என்ன அதனால் தமிழர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கின்றதா என்பதே முக்கியம்.

பல முன்னாள் போராளிகள் புலிகளின் கடந்தகாலத் தவறுகளை எழுதுகின்றார்கள் பலர் அரசியல் தெரியாதவர்கள் என்று திட்டுகின்றார்கள். இவைகள் எல்லாம் என்னுமொரு போராட்டம் நடக்கும் போது கடந்த காலத்தில் நடந்த தவறுகள் நடக்காமல் பார்ப்பதற்காக இல்லை. கடந்த முப்பது வருடகாலப் போராட்டத்தை அனுபவமாக எடுத்து இனிப் போரட்டத்தை தெடரவேணும் என்ற பிரயாசையில் இல்லை. ஏனெனில் இந்த அனுபவம் மரணத்துக்கு ஒப்பானது. வேணுமானால் என்னுமொரு ஒடுக்கப்படும் தேசீய இனம் இப்போராட்டத் தோல்வியில் இருந்து சில அனுபவங்களை தமது விடுதலை முயற்ச்சிக்கு பயன்படுத்தலாம் தவிர நாங்கள் இல்லை. ஏனெனில் நாம் போராட கிடைக்கும் எஞ்சிய அத்தனை துருப்புச் சீட்டையும் எதிரியிடம் கொடுக்கின்றோம். போராட்டத்திற்கான அவசியத்தை இல்லாமல் செய்கின்றோம்.

கொலை அரசியல் என்பது புலிகளின் சொத்து இல்லை. புலிகளுக்கு மட்டுமானதில்லை. அது இந்த இனத்தின் அசைவியக்கம். இரத்தக்கறை படியாத இயக்கங்கள் இல்லை. வேணுமானால் யார் கூட செய்தது யார் குறையச் செய்தது என்று பார்க்கலாம். கொலை பல படிநிலைகளைக் கடந்து இறுதியானது. அவ் இறுதிப் புள்ளியில் இருந்து எமக்கு ஞானங்கள் பிறப்பது அர்த்தமற்றது. கொலைக்கு முதல் நிலைகளில் ஒருவனை ஒருவன் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோதம் பகை அனுசரிக்கும் மன நிலை இல்லாமை வெறுப்பு என்பது நிரப்பி வழியும் பாரம்பரிய சமூகத்தில் ஆயதங்களும் அதிகாரமும் அறிவுடன் செயற்படவில்லை. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த அறிவு புலிகளுக்கு மட்டும் இல்லை மற்ற எல்லாருக்கும் இருந்தது என்பது அபத்தமானது. கொலையில் ஈடுபட்டவர்கள் கடசிநிலையில் உள்ளவர்கள். ஆனால் விரோத குரோத மனப்பான்மையுடன் நாம் இன்னும் முதல் நிலைகளிலேயே இருக்கின்றோம். இச்சமூகம் இன்னும் ஜனநாயக விரோத சமூகமே ! எமக்குள் நாம் இரைதேடும் குணத்துடன் தான் இருக்கின்றோம். எய்தவன் மீது குற்றம் சுமத்தி ஏவிய இந்தச் சமூகமம் அதில் நாமும் எக்காலத்திலும் யோக்கியராக முடியாது.

நாம் தோற்றதுக்கு கொலை அரசியல் காரணமாயின் அதை சரி செய்ய கொலை அரசியலின் பின்னணி என்ன அதில் எமதும் எமது சமூகம் பாரம்பரியத்தின் பங்கு என்ன என்ற தேடல் ஒன்றே வழி தவிர ஐயகோ புலிகள் கொலை அரசியல் செய்து விட்டார்கள் என்று காலம் முழுக்க கத்துவது வழி அல்ல. அக் கத்தலில் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகள் கதறல்கள் கேளாமல் போகின்றது. அந்தவகையில் ராஜினிக்கு ஒப்பாரி வைப்பதும் ஒரு கொலை அரசியலே .

கொலை அரசியல் புலிகளின் சொத்து மட்டும் என்று யார் சொன்னது ,கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பார்வையில் தான் உங்கள் பதிவுகள் இருக்கு ,

நான் எழுதாத விடயங்களை எழுதிய மாதிரி கற்பனை செய்து பதில் எழுதுகின்றீர்கள் .

தமிழர்கள் அரசியலை விடுவம் ,

ஜே ஆர் ,பிரேமா ,ரணில் சந்திரிகா ,ராஜபக்சாவரை கொலை அரசியல் தான் செய்கின்றார்கள் அதை பிழை என்று விமர்சிக்கும் சிங்கள அரசியல் விமர்சகர்களை எல்லாம் சிங்களம் எதிரியிடம் துருப்பு சீட்டை கொடுகின்றீர்கள் என்று உங்களை மாதிரித்தான் சொல்லுது ,அப்ப அந்த விமர்சகர்கள் எங்களை மாதிரி உங்கள் பார்வையில் துரோகிகளா ? (லாசந்தா உட்பட ) அப்ப உண்மையை சொல்லும் அவர்களையும்  கொலை அரசியல் செய்கின்றார்கள் என்றா சொல்ல போகின்றீர்கள் .

நேரடியாக சொல்லுங்கள் எதிரிக்கு சாதகமாகிவிடும் என்று உண்மைகளை மூடி மறைக்க சொல்லுகின்றீர்களா ? 

  • Replies 118
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொலை எப்போ நடந்தது என்றாலும் அந்த கொலையை நியாயப்படுத்த அல்லது பூசி மெழுக‌ இங்கு சிலர் முயல்வதால் தான் அதைப்பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது. 
 
இப்படித்தான் சிங்கள இனவாதிகளும் முள்ளிவாய்க்கால் நடந்து 5 வருடமாகி விட்டது. எப்பவோ நடந்ததைப்பற்றி பேசாமல் நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று மட்டும் பேசுங்கள் என்று சொல்கிறார்கள். இறுதி யுத்தத்தைப்பற்றி பேசுபவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள் என்கிறார்கள்.  

பூசி மெழுக வேண்டிய அவசியம் இல்லை. பொஸ்கோ சுட்டவர். அதை அவுஸ் டொக்டர் கண்டவர். இது ஒரு கொலைக்கு போதுமான சாட்சியமா? ஆதாரங்கள் மேலும் தேவை. சந்தேகப்படுவது வேறு?
 
பலரின் சந்தேகம் புலிகள் உரிமை கோராமல் விட்டதால் அவர்களாக இருக்கும். அத்தோடு புலிகளை விமர்சித்தவர் என்பதுவுமே.
 
ஆனால் என்னைப்போன்றவர்களின் சந்தேகம் புலிகளை சாட்டி கொலை செய்யக்கூட்டிய சாத்தியக்கூறுகள் இருப்பது தான்.
 
அத்தோடு ரஜனியின் கொலையை பூதாகரமாக்கி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை பற்றி எதுவும் பேசாமல் குத்தி முறிபவர்களையும் நாம் அறிவோம்.
  • கருத்துக்கள உறவுகள்

அடாடா.. இந்த திரி இன்னமும் முடிவிற்கு வரவில்லியா? sdisp.gif

இப்படி ஆறிப்போன புண்ணை மறுபடியும் தேடியெடுத்து சொறிந்து ரணமாக்கும் மனநிலை இருக்கும்வரை உங்களுக்கு மீட்சியும் இல்லை, ஈழமும் எட்டாக்கனியாயாகவே அமையும்.

உங்களின் குழாயடிச் சண்டை சகிக்கவில்லை. bouh.gif

2009இக்கு பிறகு ஆறிப் போனவை சூடுகாட்டப்படுகின்றன.

சாயம் வெளுத்தவை வர்ணம் பூசப்படுகின்றன.

:o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி திரணகம், புலிகளைப் போலவே, அந்தக் காலத்தில் மனிதவுரிமைக்கெதிராகச் செயற்பட்ட இலங்கை ராணுவம், இந்திய ராணுவம், தமிழ்த் தேசிய ராணுவம், இ.பி. ஆர். எல் எப் , டெலோ, புளொட் என்று எல்லோடரினதும் கைங்கரியங்களிச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆகவே அவரை அழிக்கவேண்டுமென்று பலர் காத்திருந்தனர்.

புலிகள் இதனைச் செய்திருக்கலாம் என்று நான் நம்பவில்லை, அதற்காக அவர்கள் நல்லவர்கள், அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நான் நினைக்கவுமில்லை. ஏனென்றால், அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன், நீலன், கதிர்காமர் என்று தமக்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்ட பல தமிழர்களைப் புலிகள் கொன்றிருக்கிறார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்கள் நடந்துகொண்டவிதம் சரியா தவறா என்கிற விவாதத்தைப் புறந்தள்ளி வைத்துப் பார்த்தால் இவர்கள் கொல்லப்பட்டதால் எமக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை என்பதே எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று மேற்குலகு நம்புவதற்கு இது ஏதுவாகிவிட்டது.

சரி, ரஜினியின் நினவிற்கு வருவோம். அவரது படுகொலை எவ்வளவு கேவலமோ அதையொத்த கேவலம்தான் அவரது படுகொலையை மூலதனமாக்கி இன்றுவரை நடைபெறும் பிரச்சாரம். மனிதவுரிமைக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் ராஜன் கூல் மற்றும் அவரோடிணைந்த சிலர் சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களை மறைக்க ரஜினிப் படுகொலையை ஒரு திரையாகப் பாவித்தது மட்டுமல்லாமல், அரசின் இனக்கொலையை இல்லையென்றும் வாதிட்டு வருகின்றனர்.

எனக்கென்னவோ இன்றுவரை ராஜினி மக்களால் ஏன் அதிகம் விரும்பப்படவில்லையென்கிற கேள்வி அடிக்கடி எழுந்துவருகிறது. உண்மையிலேயே அவர் மக்களுக்காக இறந்திருந்தால் அவரது நினைவு மனிதவுரிமை வியாபாரிகளால் அன்றி மக்களாலேயே அனுட்டிக்கப்பட்டிருக்கும். சிலவேளை அவரது மரணத்தை அவரோடிருந்தவர்கள் கைய்யாண்ட விதம் மக்களை அவரிடமிருந்து விலத்திக் கொண்டுபோய்விட்டதோ என்னவோ.

எப்படியிருந்தாலும், அவரது இழப்பு அநியாயமானது, யார் செய்தார்கள் என்பதற்கப்பால் கண்டிக்கப்படவேண்டியது.

ரகுநாதன் எவரையும் காழ்புணர்வுடன் வசைபாடாது  உங்களை போல் நடுநிலையுடன் விமர்சிக்கும் விமர்சன போக்கு பாராட்டதக்கது. வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமைக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் ராஜன் கூல் மற்றும் அவரோடிணைந்த சிலர் சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களை மறைக்க ரஜினிப் படுகொலையை ஒரு திரையாகப் பாவித்தது மட்டுமல்லாமல், அரசின் இனக்கொலையை இல்லையென்றும் வாதிட்டு வருகின்றனர்.

ரகுநாதன்,

ஸ்ரீ லங்கா அரசின் பல மனித உரிமை மீறல்களை உலகுக்கு அறியத் தந்தவர்கள் இந்த அமைப்பினர். ரஜனியும் அவர்களில் ஒருவர். அதை உங்கள் ஆக்கத்தில் முதல் வரியில் சொல்லிவிட்டு இந்த பகுதியில் அதற்கு முரணாக எழுதி இருக்கிறீர்கள்.

ரஜினியின் கொலை இந்திய அரசின் திட்டமிட்ட சதி. அதை அற்புதன் எழுதியதால் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. ராஜன் ஹூல் இவ்வாறன சதிகளை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்றவர். புலிகளின் மற்ற கொலைகளால் இந்த கொலையையும் அவர்களே செய்தனர் என்று உலகறிய செய்தவர். அவருக்கு அப்படி "கண் கண்ட சாட்சிகள்" சொன்னார்கள். அந்த "கண் கண்ட சாட்சிகள்" இந்திய அரசால் ஏற்பாடு செய்யப் பட்டவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காக அவர் ரஜனியின் கொலையை பயன்படுத்துகிறார் என்பது உண்மையாக தெரியவில்லை.

நடந்தது இனப்படுகொலையா, போர்க்குற்றமா, மனித உரிமை மீறலா என்பது அந்த அந்த வரைவிலக்கணங்களை வழங்கும் சட்டங்கள் பற்றிய வாதம். இது பற்றிய அறிவியலுடன் இந்த வாதம் இடம்பெற வேறு திரி வேண்டும்.

எனக்கென்னவோ இன்றுவரை ராஜினி மக்களால் ஏன் அதிகம் விரும்பப்படவில்லையென்கிற கேள்வி அடிக்கடி எழுந்துவருகிறது. உண்மையிலேயே அவர் மக்களுக்காக இறந்திருந்தால் அவரது நினைவு மனிதவுரிமை வியாபாரிகளால் அன்றி மக்களாலேயே அனுட்டிக்கப்பட்டிருக்கும்.

மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை "மனிதவுரிமை வியாபாரிகள்" என்று எழுதியிருக்கிறீர்கள். இவ்வாறு தான் ஸ்ரீ லங்கா அரசும் கோத்தபாயாவும் மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை அழைக்கிறார்கள். இந்த விடயத்தில் உங்களுக்குள் உள்ள ஒற்றுமையை பார்த்தீர்களா?

மக்கள் ராஜினியை விரும்பவோ வெறுக்கவோ, முதலில் அவர்கள் ராஜினியை அறிந்திருக்க வேண்டும். ராஜினியை அறிந்த சமுகம் அவரை விரும்பி மதித்திருந்தது. அவர்களுள் விடுதலை புலிகளும் அடங்கும். பல்கலைக்கழக சமுகம் அவரை அறிந்திருந்தது.

பொதுமக்கள் அரசியல்வாதிகளை அறிந்திருந்தார்கள். போராளிகளை அறிந்திருந்தார்கள். இந்திய நடிகர்களை அறிந்திருந்தார்கள். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்களை மக்கள் அறியவில்ல. ஆகவே அவர்களுக்கு ராஜினியை தெரியாது; அவ்வளவே.

ரகுநாதன்,

ஸ்ரீ லங்கா அரசின் பல மனித உரிமை மீறல்களை உலகுக்கு அறியத் தந்தவர்கள் இந்த அமைப்பினர். ரஜனியும் அவர்களில் ஒருவர். அதை உங்கள் ஆக்கத்தில் முதல் வரியில் சொல்லிவிட்டு இந்த பகுதியில் அதற்கு முரணாக எழுதி இருக்கிறீர்கள்.

ரஜினியின் கொலை இந்திய அரசின் திட்டமிட்ட சதி. அதை அற்புதன் எழுதியதால் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. ராஜன் ஹூல் இவ்வாறன சதிகளை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்றவர். புலிகளின் மற்ற கொலைகளால் இந்த கொலையையும் அவர்களே செய்தனர் என்று உலகறிய செய்தவர். அவருக்கு அப்படி "கண் கண்ட சாட்சிகள்" சொன்னார்கள். அந்த "கண் கண்ட சாட்சிகள்" இந்திய அரசால் ஏற்பாடு செய்யப் பட்டவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காக அவர் ரஜனியின் கொலையை பயன்படுத்துகிறார் என்பது உண்மையாக தெரியவில்லை.

நடந்தது இனப்படுகொலையா, போர்க்குற்றமா, மனித உரிமை மீறலா என்பது அந்த அந்த வரைவிலக்கணங்களை வழங்கும் சட்டங்கள் பற்றிய வாதம். இது பற்றிய அறிவியலுடன் இந்த வாதம் இடம்பெற வேறு திரி வேண்டும்.

மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை "மனிதவுரிமை வியாபாரிகள்" என்று எழுதியிருக்கிறீர்கள். இவ்வாறு தான் ஸ்ரீ லங்கா அரசும் கோத்தபாயாவும் மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை அழைக்கிறார்கள். இந்த விடயத்தில் உங்களுக்குள் உள்ள ஒற்றுமையை பார்த்தீர்களா?

மக்கள் ராஜினியை விரும்பவோ வெறுக்கவோ, முதலில் அவர்கள் ராஜினியை அறிந்திருக்க வேண்டும். ராஜினியை அறிந்த சமுகம் அவரை விரும்பி மதித்திருந்தது. அவர்களுள் விடுதலை புலிகளும் அடங்கும். பல்கலைக்கழக சமுகம் அவரை அறிந்திருந்தது.

பொதுமக்கள் அரசியல்வாதிகளை அறிந்திருந்தார்கள். போராளிகளை அறிந்திருந்தார்கள். இந்திய நடிகர்களை அறிந்திருந்தார்கள். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்களை மக்கள் அறியவில்ல. ஆகவே அவர்களுக்கு ராஜினியை தெரியாது; அவ்வளவே.

ஜீட் வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட ஒருவரை ஒருவர் காயபடுத்தான அதேவேளை தவறுகளை சுட்டிக்காட்டும் சினேகபூர்வமான விமர்சனங்களை யாழ் களத்தில் பார்க்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,

ஸ்ரீ லங்கா அரசின் பல மனித உரிமை மீறல்களை உலகுக்கு அறியத் தந்தவர்கள் இந்த அமைப்பினர். ரஜனியும் அவர்களில் ஒருவர். அதை உங்கள் ஆக்கத்தில் முதல் வரியில் சொல்லிவிட்டு இந்த பகுதியில் அதற்கு முரணாக எழுதி இருக்கிறீர்கள்.

ரஜினியின் கொலை இந்திய அரசின் திட்டமிட்ட சதி. அதை அற்புதன் எழுதியதால் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. ராஜன் ஹூல் இவ்வாறன சதிகளை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்றவர். புலிகளின் மற்ற கொலைகளால் இந்த கொலையையும் அவர்களே செய்தனர் என்று உலகறிய செய்தவர். அவருக்கு அப்படி "கண் கண்ட சாட்சிகள்" சொன்னார்கள். அந்த "கண் கண்ட சாட்சிகள்" இந்திய அரசால் ஏற்பாடு செய்யப் பட்டவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காக அவர் ரஜனியின் கொலையை பயன்படுத்துகிறார் என்பது உண்மையாக தெரியவில்லை.

நடந்தது இனப்படுகொலையா, போர்க்குற்றமா, மனித உரிமை மீறலா என்பது அந்த அந்த வரைவிலக்கணங்களை வழங்கும் சட்டங்கள் பற்றிய வாதம். இது பற்றிய அறிவியலுடன் இந்த வாதம் இடம்பெற வேறு திரி வேண்டும்.

மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை "மனிதவுரிமை வியாபாரிகள்" என்று எழுதியிருக்கிறீர்கள். இவ்வாறு தான் ஸ்ரீ லங்கா அரசும் கோத்தபாயாவும் மனித உரிமைகளுக்காக செயற்படுபவர்களை அழைக்கிறார்கள். இந்த விடயத்தில் உங்களுக்குள் உள்ள ஒற்றுமையை பார்த்தீர்களா?

மக்கள் ராஜினியை விரும்பவோ வெறுக்கவோ, முதலில் அவர்கள் ராஜினியை அறிந்திருக்க வேண்டும். ராஜினியை அறிந்த சமுகம் அவரை விரும்பி மதித்திருந்தது. அவர்களுள் விடுதலை புலிகளும் அடங்கும். பல்கலைக்கழக சமுகம் அவரை அறிந்திருந்தது.

பொதுமக்கள் அரசியல்வாதிகளை அறிந்திருந்தார்கள். போராளிகளை அறிந்திருந்தார்கள். இந்திய நடிகர்களை அறிந்திருந்தார்கள். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்களை மக்கள் அறியவில்ல. ஆகவே அவர்களுக்கு ராஜினியை தெரியாது; அவ்வளவ

நான் மனிதவுரிமை வியாபாரிகள் என்று குறிப்பிட்டது மனிதவுரிமைக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் இனவழிப்பை மறைத்துவிட்டு புலிகள் செய்த படுகொலைகள் என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தவர்களைத்தான். உண்மையான மனிதவுரிமைவாதிகளையல்ல.

மேலும், இப்போது இந்த நினைவுதினம் அனுட்டிக்கப்படவேனண்டிய கட்டாயம் என்ன ? இதுவரை இது வருடம்தோறும் அனுட்டிக்கப்பட்டதா?? உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.

இதனை நடத்துபவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, அதேவேளை இது வருடம்தோறும் நடைபெறும் நிகழ்வென்றும் தெரியாது.

மனிதவுரிமை பற்றி பேசுபவர்களை மக்கள் அறிந்திருக்கவில்ல  என்று எழுதியிருந்தீர்கள், அதை ஏனென்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னைப்பொறுத்தவரை மக்கள் மீது இனவழிப்புப் போர் ஒன்று நடைபெறும்போது, அதைப்பற்றிப் பேசாமல் இருபக்க மனிதவுரிமை மீறல்கள் என்று அடக்கப்படுபவர்களையும், அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தது இந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் மக்களுக்குத் தெரியாமல் போகக் காரணமாக இருந்திருக்கலாம்.

முறிந்தபனை நான் வாசித்திருக்கிறேன். புலிகளைப்போலவே ஏனையோரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், பலர் இதனைப் புலிகளுக்கெதிரான ஆவனமாகப் பாவித்து இறுதியில் ரஜினி புலிகளால் கொல்லப்பட்டார் என்றும் முடித்துவைத்தார்கள். இதுவும் ஒரு காரணம் யாழ் பலகலைக் கழக மனிதவுரிமை ஆசிரியர் சங்கம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போக. குறிப்பாக சந்திரிக்கா காலத்தில் கொழும்பிலிருந்து இந்த குழு பத்திரிக்கைகளில் விட்ட அறிக்கைகளைப் படித்திருக்கிறேன். அரசை வாழ்த்தியும், புலிகளைப் பயங்கரவாதிகளாக்கியும் அந்த அறிக்கைகள் வெளிவந்தன. இதுவும் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போக காரணமாக்கின.

இதைவிட எனக்கு இந்த அமைப்புப் பற்றித் தெரியாது.

இறுதியாக, இந்த நினைவு தினமும் புலிகளைப் பயங்கரவாதிகள்தான், ஆகவே அழிக்கப்பட்டது சரிதான் என்று சொல்வதற்காக நடத்தப்பட்டால், இவர்கள் இனிமேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்பிற்காகப் பயன்படும் ராஜினி திரணகமவின் மரணம் : இராவணன்

rajani.jpg

சமூகத்தை மாற்றுவதற்காக மரணித்தவர்கள் நம் மத்தியிலிருக்கிறார்கள். அதனை மாற்றக்கூடாது என்று மரணித்தவர்களையும் காணலாம். பண்பாட்டின் சில பகுதிகள் புதிதாக மாற்றமடையும் போது சமூகச் சிரழிவாக பழமை சார்ந்து கூச்சலிடும் கலாச்சாரக் காவலர்களை காண்கிறோம். நமது சமூகத்தின் அதிகாரவர்க்கத்திற்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சமூகத்தை மாற்றுவதற்குப் பதிலாகச் சீர்த்திருத்தங்களை முன்வைப்பவர்களைக் காண்கிறோம். ஐரோப்பிய நாட்டு மனித உரிமை அமைப்புக்களில் பெரும்பாலானவை அந்த நாடுகளின் அதிகார வர்க்கத்தின் மீது தூசுபடிந்துவிடக்கூடாது என்பதற்காகவே மனித உரிமை சமாதானம் என்றெல்லாம் கூச்சலிடுகின்றனர். அதிகாரவர்க்கம் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனித உரிமைகளி மீறும் போது அவற்றக் மனித உரிமை வாதிகள் கண்டுகொள்வதில்லை. அல்லது தமது எஜமானர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில்மனித உரிமை விதிகளை காதோரமாகச் சுட்டிக்காட்டுவார்கள்.

மக்கள் சார்ந்த அரசியல் என்பது மனித உரிமை, மனிதாபிமானம் போன்ற ஒற்றைப் பரிமாண தலையங்கங்களுக்குள் மட்டும் குறுக்கப்படுவதில்லை.

ராஜினி திரணகம மனித உரிமைவாதி என்ற அடையாளத்திற்கும் அப்பால் செல்ல முற்பட்ட ஒருவர். தென்னிந்திய ஆங்கிலிகன் திருச்சபையுடன் தொடர்புடைய மேல்தட்டு யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியிலிருந்து மனித உரிமைக்கு அப்பால் சமூகத்தைப் பார்க்கும் தகமை படைதவராகவிருந்தார். இந்திய பார்ப்பன சமூகத்திற்கு ஈடான வேளாள கிறீஸ்தவர்கள் இலங்கை அரசியலில் ஆளுமை மிக்கவர்கள். சிங்கள கொய்கம ஆங்கிலிக்கன் தலைவர்களான டீ.எஸ்.சேனாநயக்க, டட்லி சேனநாயக்க, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, ஜூலியட் ரிச்சார் ஜெயவர்தன போன்றோர் இலங்கையின் ஜனாதிபதிகளாகவும் பிரதமர்களாகவுமிருந்தனர்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழ் அரசியலில் அதிகாரம் செலுத்த முயன்ற பலர் ஆங்கிலிக்க திருச்சபையின் கிறீஸ்தவ வேளாளர்களாகவிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பை வசிப்பிடமாகவும், பொருபாலான வேளைகளில் கொழும்பில் சிங்கள அதிகாரவர்கத்தின் நெருங்கிய நண்பர்களாகவும் செயற்பட்டவர்கள்.

இவ்வாறான பின்னணியிலிருந்து வந்த ராஜனி திரணகம அதிகாரவர்க்கப் பெறுமானங்களுக்கு அப்பால், மனித உரிமை வாதி என்பதற்கு அப்பால் சமூகத்தை நேசித்தவராவிருந்தார். அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலை முன்வைக்க முனைந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் செய்துகொள்ளவில்லை.

இங்கிலாந்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்ற போது 80 களின் ஆரம்பத்தில் புலிகளின் லண்டன் கிளையுடன் இணைந்து செயற்பட்டார். லண்டனில் தீவிர புலி ஆதரவாளராகச் செயற்பட்ட ராஜினி, யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் அனரொமி பிரிவின் தலைவராக தனது 35 வது வயதில் பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் புலிகளின் மறைவிடமாகவே கருதியது, முறைதவறாமல் நாளாந்தம் பல்கலைக் கழக மாணவர்களைக் கைது செய்தது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய இராணுவத்துடன் இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட அஞ்ச்சிய நிலையில் ராஜினி திரணகம மற்றும் சில விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் சார்பாகச் செயற்பட்டார். கைதுசெய்யப்டும் மாணவர்களை விடுவிப்பதற்காகப் போராட்டங்களை நடத்துவதிலிருந்து பல்கலைக் கழககம் சார்பாக இந்திய இராணுவத்துடன் வாதம் செய்து விடுவிப்பது வரை உயிராபத்தான வேலைகளில் ஈடுபட்டார்.. புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக அறியப்பட்ட பல மாணவர்களை, அவர்களின் அரசியல் தொடர்பாகத் தெரிந்துகொண்டும் விடுவிப்பதற்காகப் போராடி வெற்றிபெற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத்தின் அடியாள் படை ஒன்றை உருவாக்க முனைந்த இக்கட்டான காலகட்டத்தில் ராஜினி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் தமது கண்ணில் படும் மீசை அரும்பத்தொடங்கிய அத்தனை இளைஞர்களையும் கைது செய்து கட்டாயப் பயிற்சி வழங்கி விருப்பத்திற்கு மாறாக இராணுவப்படையில் இணைத்துக்கொண்டது. இது தொடர்பாகப் பேசுவதற்கு முழு சமூகமும் அஞ்சிய வேளையில். ஆள்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் ஊடாகத் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட முன்னின்று செயற்பட்டார்.

உலகைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட நிலைகொண்டிருப்பதாக எண்ணியிருந்தது. இந்தியா முழுவதும் இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்டச் சென்ற இராணுவத்திற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்றே மக்கள் எண்ணினர். இந்தக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் கொடூரத்தைப் பட்டியலிடும் நீண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதில் முக்கிய பங்குவகித்தார். முறிந்த பனை என்ற தலைப்பில் வெளியான அந்த ஆவணத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களும் பட்டியலிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை விமர்சன நோக்கிலேயே வெளியாகியிருந்தன.

புலிகளின் தலைமை கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டதில்லை. நூறுகருத்துக்கள் மோதினால் நூறு பூக்கள் மலரும் என்பார்கள். புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகள் மோதினால் ஒரு துப்பாக்கி ரவை போதுமானது என்பதே கோட்ப்பாடாக முன்வைக்கப்பட்டது.

அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

29.08.1989 அன்று மாலையை அண்மித்த பொழுதில் மருத்துவக் கல்லூரிக்கு முன்புற வீதியில் ராஜனி திரணகம என்ற இரு குழந்தைகளின் தாய் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி வீதியில் விழுந்துகிடந்தார்.

எமது சமூகத்திலிருந்து பெண்போராளி ஒருவர் பிடுங்கியெறியப்ப்பட்ட அந்த நாள் துயர்மிக்கது.

ரஜனி திரணகம ஆரம்பித்த மனித உரிமைகாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரின் மரணத்தின் பின்னரும் செயற்பட்டது. புலிகளின் மனித உரிமை மீறல் மட்டுமே அவர்களின் பிரதான குறியாகவிருந்தது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பின் செயற்பாடுகள் அருகிப் போயின. இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான ‘முறிந்த அரசமரத்திற்கான’ வேலைகள் முற்றாக நடைபெறவில்லை.

மக்களுக்காகப் போராடிய புலிகளின் போராளிகள் எவ்வாறு பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறார்களோ அவ்வாறே ராஜினி திரணகமவின் மரணமும் பிழைப்பு வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.

ரஜனி திரணகமவின் 20 ஆண்டு நினைவஞ்சலி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொலையாளிகளில் ஒருவரான ராஜபக்சவின் முற்றத்தில் நடைபெற்றது. இலங்கையில் ஈ காக்காய் கூட ராஜபக்சவின் அனுமதியின்றி நுளைய முடியாது என்ற நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ராஜனியின் 20 ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. அதுவும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இரத்தவாடை இலங்கையில் எல்லைகளையும் கடந்து வீசிக்கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தினுள் ரஜனி திரணகமவின் ஆவி கூட நுளைவதற்குக் கூச்சப்பட்டிருக்கும் என்பதே உண்மை.

அதே நினைவஞ்சலியை இந்த முறை யாழ்ப்பாணப் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் நடத்தவிடமாட்டோம் என்ற அரசியலைக் கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாகத் தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆங்கிலிகன் வேளாள சமூகம் தனது அதிகாரத்தை மீளுறுதி செய்வதற்கு ராஜினி திரணகமவின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவது வழமையே. எது எவ்வாறாயினும் இன்று ராஜினியின் மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு உலக உலா வரும் பிழைப்புவாதிகளை வைத்து ராஜினியை மதிப்பிடும் தவறிழைப்பது தவறு!

http://inioru.com/?p=42050

  • கருத்துக்கள உறவுகள்

நான் மனிதவுரிமை வியாபாரிகள் என்று குறிப்பிட்டது மனிதவுரிமைக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் இனவழிப்பை மறைத்துவிட்டு புலிகள் செய்த படுகொலைகள் என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தவர்களைத்தான்.

சுமேந்திரனும் முதமைச்சர் விக்னேஸ்வரனும் கூட இனவழிப்பு என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க இனவழிப்பை மறைப்பதாக காரணம் காட்டி இந்த மனித உரிமை அமைப்பை நீங்கள் "வியாபாரிகள்" என்று அழைக்கிறீர்கள்.

  • சுமேந்திரனையும் விக்னேஸ்வரனையும் கூட இவர்களுடன் சேர்க்க போகிறீர்களா? பலர் இனவழிப்பு என்ற வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்க்கு காரணம் இனவழிப்பு பற்றிய சட்ட முரண்பாடு ஆகும்.
  • மனிதவுரிமைக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர் சங்கம் புலிகள் செய்த படுகொலைகள் தவிர ஏனையவற்றை மறைத்தார்கள் என்பது உண்மை அல்ல. அவர்களது அறிக்கைகளை மீண்டும் படித்து பாருங்கள்.

மேலும், இப்போது இந்த நினைவுதினம் அனுட்டிக்கப்படவேனண்டிய கட்டாயம் என்ன ?

கட்டாயமாக செய்ய வேண்டியதை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

மறைந்து போன ஒருவரை அதுவும் பேராசிரியராக இருந்து மாணவர்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும்குரல் கொடுத்தால் கொல்லப்பட்ட ஒருவரை நினைவுகூர எவருக்கும் உரிமை உண்டு.

இதுவரை இது வருடம்தோறும் அனுட்டிக்கப்பட்டதா?? உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.

இதனை நடத்துபவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, அதேவேளை இது வருடம்தோறும் நடைபெறும் நிகழ்வென்றும் தெரியாது.

ரஜினி கொல்லப்பட்ட மறுநாள் பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் தமது வாய்களை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு ஊர்வலம் போனார்கள். வருடம் தோறும் நடந்தாலும் அல்லது இந்த வருடம் தான் ஆரம்பித்தாலும் ரஜினி நினைவு கூறப்பட வேண்டிய ஒருவர். ஆனால் இன்று இந்த நினைவு தினத்தை நடத்துபவர்கள் புலி எதிர்ப்பு அரசியலுக்காக நடத்துவது திளிவாகவே தெரிகிறது. அவ்வாறு நடப்பதற்கு முக்கியாமான காரணங்களில் ஒன்று மற்ற மனித உரிமை அமைப்புகளோ அரசியல் அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழகமோ இந்த நினைவு தினத்தை நடத்த முயலாதது.

மனிதவுரிமை பற்றி பேசுபவர்களை மக்கள் அறிந்திருக்கவில்ல  என்று எழுதியிருந்தீர்கள், அதை ஏனென்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மனிதஉரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் அரசியல்வாதிகள் போல் மக்களின் வாக்குகளுக்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில்லை.

போராளிகள் போல் மக்களின் ஆதரவுக்காகவும் தமது அமைப்பில் மக்களை இணைத்து கொள்வதற்காகவும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில்லை.

மனிதஉரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தம்மால் முடிந்த அளவு மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆகவே அவர்களை மக்களுக்கு தெரியாது. மக்கள் மத்தியில் இறங்கி பிரச்சாரம் செய்பவர்களை மக்கள் அறிவார்கள். இவர்களை மக்கள் அறியும் சாத்தியம் குறைவு.

முறிந்தபனை நான் வாசித்திருக்கிறேன். புலிகளைப்போலவே ஏனையோரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், பலர் இதனைப் புலிகளுக்கெதிரான ஆவனமாகப் பாவித்து இறுதியில் ரஜினி புலிகளால் கொல்லப்பட்டார் என்றும் முடித்துவைத்தார்கள். இதுவும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணத்தில் புலிகள் இந்த ஆங்கில புத்தகத்தை தவறாமல் படித்து அதை புரிந்து கொண்டு ரஜனியை கொன்றார்கள் என்று சோடிக்கப்பட்ட இந்த கதை தான் இந்திய இரகசிய இராணுவத்தின் சதியை அம்பலப்படுத்தும் ஆதாரம். பல்கலைக்கழக மாணவர்களுக்கே இப்படியான புத்தகங்களை படிக்கும் ஆர்வமோ, புரிந்து கொள்ளுமளவுக்கு ஆங்கில புலமையோ அங்கு பெருமளவில் இல்லை. இந்திய இராணுவத்தின் சதிக்கு இலகுவாக இராஜன் ஹூலும் தனது புலி எதிர்ப்பு கொள்கைகளால் ஸ்ரீதரனும் பயன்பட்டார்கள். ஹூலுக்கு தமிழ் பெருமளவில் புரியாது. ஆகவே அவர் புலிகளையும் தன்னை போல ஆங்கிலம் பேசுபவர்கள் என்று நினைத்து விட்டார்.

உண்மையில் இந்த புத்தகத்தை விட்டால் வேறு எந்த காரணத்தை காட்டியும் ரஜினியின் கொலைக்கு புலிகளை காரணம் காட்ட முடியாது. அதனால் தான் இந்த புத்தகத்தை கண்டுபிடித்தது இந்திய சதி.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும், விக்கினேஸ்வரனும் இனவழிப்பு எனும் சொல்லைப் பாவிக்க வேண்டாம் என்பதை நானும் கேட்டிருக்கிறேன். ஏதாவது சட்டச் சிக்கல்கள் இருக்கலாம்.அல்லது வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் நடத்தப்பட்டது இனவழிப்புத்தான் என்பதில் உங்களுக்குக் கூட சந்தேகம் இருக்காது என்று நம்புகிறேன்.

யாழ் பலகலைக் கழக ஆசிரியர்களின் மனிதவுரிமை அமைப்பின் அறிக்கைகளை நான் படித்திருக்கிறேன். பெரும்பாலானவை அரசை ஆதரித்தும். புலிகளை விமர்சித்துமே வந்திருக்கின்றன.

மரணித்த ஒருவரை நினைவுகூறுவதற்கு எவருக்கும் உரிமையுண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நினைவுகூறப்படும் இடமும், காலமும், நினைவு கூறும் ஆட்கள் பற்றியும்தான் கவலை எனக்கு.

இறுதியாக, ராஜினியைத் தவறென்று நான் நினைக்கவில்லை. அவர் கொல்லப்பட்டது தவறென்றுதான் சொல்கிறேன். அவர் நினைவுகூறப்படுவதில் தவறிருப்பதாகவும் நினைக்கவில்லை.

உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டதற்கும், ரஜினியின் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் நடத்தபடுவதற்கும் நிறையவே ஒற்றூமைகள் தெரிகின்றன எனக்கு, அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆங்கிலம் தெரியாது ஆகவே அவர்கள் புத்தகத்தை வாசித்து இருக்க மாட்டார்கள் எனவே ரஜனியை கொலை செய்திருக்க மாட்டார்கள் என்பது நகைச்சுவை மிகுந்த அபத்தம்.

இந்த காலத்தில்தான் நடேசன் சத்யேந்திரா, பாலசிங்கம் தம்பதிகள், யோகி போன்ற ஆங்கிலப் புலைமை உடயோர் பலர் புலிகளோடு இருந்தனர்.

புலிக்கு வெள்ளை அடிக்கும் உந்துதலில் நீங்கள் புலியை ஏதோ கடத்தல் கும்பல் ரேஞ்சுக்கு தரம் தாழ்துகிறீர்கள்.

ராஜன் கூல் ஒரு சிறந்த புத்திஜீவி மட்டுமில்லை விடயங்களை அலசி ஆராயும் investigative mind உடையவர். ஜீவன் கூல் போல கிறீஸ்தவ வாதம் பிடித்தவரில்லை. சிறீதரன் போல புலி எதிர் முகாம் ஆளுமில்லை. கொழும்பு டெலிகிராப்பில் பிரேமதாச, விஜய குமாரதுங்க, லலித் கொலைளை பற்றி 83 கலவரத்தை பற்றி ராஜன் எழுதியவற்றை படித்துப் பாருங்கள். அவர் எப்படி பக்க சார்பின்றி ஆதாரங்களின் அடிப்படையில் விடயங்களை அணுகுகிறார் என்பது புரியும்.

ஆக ராஜன் கூலின் நம்பகதன்மை பெரிதும் பாதிக்கப்படாதது.

இன்னொரு முக்கிய விடயம் இந்தியாவின் ஓடரில் ஈபி இதை செய்திருந்தால் பிரேமச்சந்த்ஹிரன் அதை தெளிவு படுத்தலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் தயவுசெய்து ரட்ணஜீவன் கூல் அவர்களை இழுக்காதீர்கள். அவர் ஒரு வெள்ளையின பெண்ணைத் திருமணம் செய்து தமிழ் கற்றுக்கொடுத்து தனது பிள்ளைகளுக்கு வடமொழியாக இருந்தாலும் தமிழில் புழங்கும் சொற்களான அன்பு, சமாதானம், சந்தோசம் எனப் பெயரிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி யாரினதும் தனிப்பட்ட வாழ்வை வைத்து அவர்கள் பொதுவாழ்வை எடை போட முடியாது. நல்லதுக்கும் கெட்டதுக்கும். ஜீவன் பற்றி நீங்கள் கூறிய தனிவாழ்க்கை குறிப்புகள் இதுவரை நானறியாதது.

ஆனால் பொதுவாழ்வில்,

ஜீவன் புலியை எதிர்க்க வேண்டும் என்பதற்க்காக, அவர்களை பற்றி நன்கு தெரிந்தே இருந்தும் மகிந்தவுக்கும் தேவானந்தாவுக்கும் ஆலவட்டம் பிடித்தார் என்பதும், பின்னர் அவர்களாளேயே துடைத்து முடிந்ததும் தூக்கி வீசப்பட்டார் என்பதும் கூட உண்மையே.

ஜீவன் ஒரு மதவாதி என்பதும் இந்துக்கள் மீது அவர் பகிரங்கமாகவே வன்மம் பாராட்டுவதும் அவரின் வரலாற்றை அலசும் கட்டுரைகளையும் யாழ் பல்கலையில் அவர் நடந்து கொண்ட விதமும் பறைசாற்றும்.

இடைக்கிடை என் அப்பப்பா ஒரு வெள்ளாள இந்து எனும் சாதித்தடிப்பும் வெளிப்படும்.

தேவையான போது தேசம் நெற் கோஸ்டியுடன் சேர்ந்து வக்கணையாக இன ஒற்றுமை பேசுவதும், தன்நலத்துக்கு ஆபத்து என்றவுடன் தன்னை விமர்சிக்கும் மாற்று இனத்தினரை "சிங்களவன்" என்று திட்டுவதும், தவராசா ரேஞ்சுக்கு இறங்கிப் போய் கீழ்தர அரசியல் செய்வதும் இதுதான் ஜீவன் கூலின் பொது வாழ்க்கை அறம்.

யாழ்பாணத்தின் மிகப்பெரும் மூளைசாலிகளில் ஒருவர் ஜீவன் சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல் அறத்தை பொறுத்தவரை ஒரு நாலாம்தர வியாபாரி.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தவறு என்னுடையதுதான். நான் சொல்பவர் ஜீவன் இல்லை. இவர்கள் இருவரின் (ராஜன், ஜீவன் ) இன்னொரு சகோதரராக இருக்கலாம். கண்டியில் தான் சந்தித்தேன். அவர் நல்ல மனிதராகவே காணப்பட்டார். எனது தந்தையாருக்கு நன்கு பழக்கப்பட்டவர். பெயர் நினைவு வருகுது இல்லை.

அவர் பெயர் சார்ள்ஸ் ஹுல் :D

Edited by வாலி

வாலி யாரினதும் தனிப்பட்ட வாழ்வை வைத்து அவர்கள் பொதுவாழ்வை எடை போட முடியாது. நல்லதுக்கும் கெட்டதுக்கும். ஜீவன் பற்றி நீங்கள் கூறிய தனிவாழ்க்கை குறிப்புகள் இதுவரை நானறியாதது.

ஆனால் பொதுவாழ்வில்,

ஜீவன் புலியை எதிர்க்க வேண்டும் என்பதற்க்காக, அவர்களை பற்றி நன்கு தெரிந்தே இருந்தும் மகிந்தவுக்கும் தேவானந்தாவுக்கும் ஆலவட்டம் பிடித்தார் என்பதும், பின்னர் அவர்களாளேயே துடைத்து முடிந்ததும் தூக்கி வீசப்பட்டார் என்பதும் கூட உண்மையே.

ஜீவன் ஒரு மதவாதி என்பதும் இந்துக்கள் மீது அவர் பகிரங்கமாகவே வன்மம் பாராட்டுவதும் அவரின் வரலாற்றை அலசும் கட்டுரைகளையும் யாழ் பல்கலையில் அவர் நடந்து கொண்ட விதமும் பறைசாற்றும்.

இடைக்கிடை என் அப்பப்பா ஒரு வெள்ளாள இந்து எனும் சாதித்தடிப்பும் வெளிப்படும்.

தேவையான போது தேசம் நெற் கோஸ்டியுடன் சேர்ந்து வக்கணையாக இன ஒற்றுமை பேசுவதும், தன்நலத்துக்கு ஆபத்து என்றவுடன் தன்னை விமர்சிக்கும் மாற்று இனத்தினரை "சிங்களவன்" என்று திட்டுவதும், தவராசா ரேஞ்சுக்கு இறங்கிப் போய் கீழ்தர அரசியல் செய்வதும் இதுதான் ஜீவன் கூலின் பொது வாழ்க்கை அறம்.

யாழ்பாணத்தின் மிகப்பெரும் மூளைசாலிகளில் ஒருவர் ஜீவன் சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல் அறத்தை பொறுத்தவரை ஒரு நாலாம்தர வியாபாரி.

கோசான் ஜவன் கூல் பற்றி நீங்கள் கூறிய கருத்து அவருக்கு மட்டுமல்ல யாழ்பாணத்தில் பல படித்த மூளைசாலிகள் என்று கூறப்படுபவர்கள் பலர்  இவரின் ரேஞ்சிலேயே இருந்தனர், உள்ளனர். இதற்கு கட்சி, அமைப்பு, இயக்க வேறுபாடு இல்லை. அனைத்து அரசியல் கட்சிகள்,  ஆயுத போராட்ட இயங்கங்கள், பொது அமைப்புகள் என்று எங்கும் இவரை போல் உள்ள புத்திஜவிகள் வியாபித்து  இருந்தனர். ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தும் கலையில் இவர்களை மிஞ்சி யாரும் இருக்கமுடியாது. தமிழ் மக்களிடையே முக்கிய விடயங்களில் கூட ஒற்றுமை ஏற்படாதத்தற்கு இவகளே முக்கிய காரணியாக இருந்தார்கள். நான் இங்கு கூறுவது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல மற்றயை எல்லா பொது அமைப்புகளையும் சேர்த்தே கூறிகிறேன்.   சாதாரண மக்களாவது சண்டை பிடித்தால் அடுத்த நாள் மறந்து ஒற்றுமையாகிவிடுவர். இவர்களோ அப்படியல்ல.மிகவும் ஈகோ பிடித்தவர்கள். புத்திஜீவித்தனத்துக்கும் இவர்களின் செயற்பாடுகளுக்கும் பாரிய வேறுபாட்டை அவதானிக்கலாம்.

Edited by tulpen

முறிந்த பனையின் முதல் பக்கத்தில் தடித்த பெரிய எழுத்தில் இருக்கும் வசனம் இது ,

கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க ,அவற்றை நல்ல மனிதர் என்போர் அதிர்சியூட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது  பற்றியே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.

-மார்ட்டின் லூதர் கிங் .

நல்ல மனிதர் என்போர் அதை எதிர்த்தாலோ அல்லது வெளியில் சொன்னாலோ  அதை எதிரி அதை பயன்படுதிவிடுவான் .

-எமது கிங்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆங்கிலம் தெரியாது ஆகவே அவர்கள் புத்தகத்தை வாசித்து இருக்க மாட்டார்கள் எனவே ரஜனியை கொலை செய்திருக்க மாட்டார்கள் என்பது நகைச்சுவை மிகுந்த அபத்தம்.

இந்த காலத்தில்தான் நடேசன் சத்யேந்திரா, பாலசிங்கம் தம்பதிகள், யோகி போன்ற ஆங்கிலப் புலைமை உடயோர் பலர் புலிகளோடு இருந்தனர்.

புலிகளின் அமைப்பபில் இருந்த இந்த சிலர் அந்த தலைமறைவு காலத்தில் இந்த ஆங்கில புத்தகத்தை படித்து விளக்கியதன் அடிப்படையில் புலிகள் திட்டமிட்டு இந்த கொலையை செய்தார்கள் என்கிறீர்கள். அவ்வளவுக்கு இந்த புத்தகம் முக்கியமானதா? நம்ப முடியவில்லை.

ராஜன் கூல் ஒரு சிறந்த புத்திஜீவி மட்டுமில்லை விடயங்களை அலசி ஆராயும் investigative mind உடையவர். .. சிறீதரன் போல புலி எதிர் முகாம் ஆளுமில்லை.

ஏன் இந்த "புத்திசாலி" ஸ்ரீதரனுடன் சேர்ந்து "மனித உரிமைகளுக்காக" இயங்குகிறார்?

ஸ்ரீதரன் பற்றிய "விடயங்களை அலசி ஆராய" எப்படி இவருக்கு முடியாமல் இருக்கிறது?

நான் இருவரையும் நேரடியாக அறிந்திருக்கிறேன். மாணவர்கள் சார்பில் ராஜனுடன் உடன்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றி இருக்கிறேன். உண்மையில் ராஜன் ஹூல் மற்றவர்களை இலகுவாக நம்பும் இரக்க குணமுள்ள ஒரு அப்பாவி.

இலகுவாக ஏமாற கூடிய ஒருவர். ஆனால் நல்ல மனிதர். ஸ்ரீதரன் அவரை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.