Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால தமிழக அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வாருங்கள் நண்பர்களே!
 
ஒரு களவாணி உள்ளே போன நிலையில், அடுத்த களவாணி கருணாநிதி குடும்பமும் கம்பி எண்ண தயாராகும் நிலையில், தமிழக அரசியல் எதிர்காலம் தான் என்ன?
 
வைக்கோ, ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆதரவுடனான ரஜனி, விஜயகாந்த்..... அட நம்ம சீமான்....
 
சட்டம் புதிய பாதையினை போட்ட நிலையில்.....
 
எழுதுங்கள் உங்கள் கருத்துகளையும், கணிப்புகளையும்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி  பேசலாம்..


எதிர்பாராத

தமிழரையே புரட்டிப்போட்ட நிகழ்வு

வைகோ போன்றவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஆசை.  இல்லாவிட்டால் விஜயகாந்த் போன்ற அரைகுறை அரசியல்வாதிகள் இந்த வெற்றிடத்தை நிரப்பி விடுவார்கள். திமுக இதை பாவித்து மீண்டும் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு காரணம் தமிழக வாக்காளர்கள் விரைவில் பழசை மறந்து விடுவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ போன்றவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஆசை.  இல்லாவிட்டால் விஜயகாந்த் போன்ற அரைகுறை அரசியல்வாதிகள் இந்த வெற்றிடத்தை நிரப்பி விடுவார்கள். திமுக இதை பாவித்து மீண்டும் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு காரணம் தமிழக வாக்காளர்கள் விரைவில் பழசை மறந்து விடுவார்கள். 

 

மோடி, பிரதமராக இருக்கும் வரை ஊழல் அரசியல் சரிவராது. அரசியல் வாதிகளுக்கு பயம் உண்டாகும். ஆனானப் பட்ட ஜெயலலிதாவே உள்ளே செல்ல வேண்டிய நிலையெனில்....
 
முன்னர் போல், சேலை, வேட்டி கொடுத்து வாக்கு வாங்க கட்சிகள் தயாராகப் போவது இல்லை.
 
விஜயகாந்த், தன்தலையில் தானே மண் போட்டு விட்டார்.
 
மக்கள், தெளிவாக உள்ளனர்.
 
ஊழல் இல்லாதவர்களுக்கே இனி அரசியல் வாழ்வு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள்

வைகோ

தா.பாண்டியன்

திருமாள்வளவன்

டாக்டர் ராமதாஸ்

மற்றும் நம்ம சீமான்..

 

இவர்களுடன்

அதிமுக -திமுக-தேதிமுக- காங்கிரஸ்- கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்களையும் ஒன்றிணைத்து

அவர்களுக்கு மே -17

மாணவர்கள்

மற்றும் அனைத்து இன உணர்வாளர்களும்

தமிழகத்தை தமிழன் ஆளணும் என்ற இலட்சியத்தோடு ஆதரவு கொடுத்தால்...

தமிழகத்தில் எமக்கான தளம் கிடைக்கும்...

2016 தமிழருடைய  ஆண்டாக மலரும்....

 

(சீமானின் கணக்கு இதுவரை பிழைத்ததே இல்லை :icon_idea: )

 

Edited by விசுகு

தமிழ் உணர்வாளர்கள்

வைகோ

தா.பாண்டியன்

திருமாள்வளவன்

டாக்டர் ராமதாஸ்

மற்றும் நம்ம சீமான்..

 

இவர்களுடன்

அதிமுக -திமுக-தேதிமுக- காங்கிரஸ்- கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்களையும் ஒன்றிணைத்து

அவர்களுக்கு மே -17

மாணவர்கள்

மற்றும் அனைத்து இன உணர்வாளர்களும்

தமிழகத்தை தமிழன் ஆளணும் என்ற இலட்சியத்தோடு ஆதரவு கொடுத்தால்...

தமிழகத்தில் எமக்கான தளம் கிடைக்கும்...

2016 தமிழருடைய  ஆண்டாக மலரும்....

 

(சீமானின் கணக்கு இதுவரை பிழைத்ததே இல்லை :icon_idea: )

 

இப்படி ஒரு கூட்டணி அமைவது சாத்தியம் இல்லை. முதலில் சீமான் இதற்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இது அவரின் பேட்டிகளைப் பார்த்தாலே புரியும். யார் தலைமையில் கூட்டணி என்று அடுத்த பிரச்சனை வரும். ஜெயலலிதாவின் அரசியல் இத்தோடு முடிவடையும் என்றும் நான் நம்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா ரொம்பத்தான் கிச்சு கிச்சு மூட்டுகின்றார்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை காலியாகும் என்பதை விட்டுவிட்டு மக்களால் விரும்பப்படும் தலைமையாக வந்து நல்லாட்சி செய்யவேண்டும். அதற்கு இந்தத் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லுபவர்கள் எவரும் லாயக்கானவர்களாக எனக்குப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா ரொம்பத்தான் கிச்சு கிச்சு மூட்டுகின்றார்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை காலியாகும் என்பதை விட்டுவிட்டு மக்களால் விரும்பப்படும் தலைமையாக வந்து நல்லாட்சி செய்யவேண்டும். அதற்கு இந்தத் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லுபவர்கள் எவரும் லாயக்கானவர்களாக எனக்குப்படவில்லை.

 

மரத்துப்போனவர்களுக்கு  நான் கிச்சுகிச்சு மூட்ட  மினக்கெடுவதில்லை... :lol:

உணர்வுள்ளவர்கள் அதை எழுதட்டும் :D

 

ஒரு ஆசை

அவ்வளவே

உங்களது கருத்தை வையுங்கள் ஐயா.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன எல்லாம் சின்ன விசயம்.. இதுக்கு மேலயும் தமிழக அரசியல் புரட்டிப் போடப்படும்.. :D

ஈழத்தமிழர் வலிகளில் ..அவர்களின் துன்பத்தில் உங்களை வளர்த்து உங்கள் தேவைக்கு எல்லாம் அப்பாவிகளின் உயிர்களை கூட மதிக்காது திமிரா ..ஆணவபோக்கில் நடந்து கொண்டதன் விளைவு நேற்று கருணாநிதி இன்று ஜெயலலிதா நாளை .............

ஈழம் வைத்து பிழைப்போர் ...உண்டியல் குலுக்குவேர் உங்களை எங்கள் ஆன்மாக்கள் மன்னிக்காது என்பதை புரிந்து நடந்தால் நல்லம் ..

அடுத்தது யாரோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் அரசியல் இத்தோடு முடிவடையும் என்றும் நான் நம்பவில்லை. 

 

போன முறை பதவி இழந்து, பன்னீர்செல்வம் முதல்வரான போது, அவர் முதல்வராகும் தகுதி மட்டுமே இழந்து இருந்தார்.
 
அந்த தகுதியினை, சட்ட ரீதியாக, உயர் நீதிமன்று சென்று மீட்டார். அவ்வாறு மீட்பார் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், அவரது கட்சிக் காரர்களே, அவரை விட்டு அகலவில்லை.
 
இம்முறை அவர் ஜெயிலில். இவர் பெயிலில் வெளியே வந்தாலும், சிறை சென்றேயாக வேண்டும். 10 வருடத்துக்கு முதல்வராக முடியாது.
 
அடுத்த முதல்வர், யாராயினும், தமது அதிகாரத்தினை நிலைப் படுத்த முயல கட்சி உடையும்.
 
தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச்  சுடும்.
 
ஆனானப் பட்ட MGR கூட நோயினால் வீழ்ந்தார். ஜெயலலிதா தன்னால் வீழ்ந்தார்.
 
இதுவே மகிந்தருக்கும்...
 

 

Edited by Nathamuni

நாதமுனி அண்ணா, முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன். ஜெயலலிதாவின் தண்டனை 2 வருடங்கள் என குறைக்கப்பட்டால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியுமாம். இது உண்மையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி அண்ணா, முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன். ஜெயலலிதாவின் தண்டனை 2 வருடங்கள் என குறைக்கப்பட்டால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியுமாம். இது உண்மையா?

இந்த வழக்கு இந்திய 'உச்ச நீதிமன்றின்' கண்காணிப்பிலும், நெறிப் படுத்துதளிலும் நடந்ததால், நடப்பதால், நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு இல்லை.
 
மிக நேர்மையான நீதிபதி ஆக புகழ் அடைந்த ஒருவரையே நியமித்ததால், இந்த வழக்கில் ஊழல் நடை பெற வில்லை என சொல்லலாம். இல்லாவிடில் அவரையே ரத்தத்தின் ரத்தங்கள் விலைக்கு வாங்கி இருக்கும்.
 
ஒரு தீர்ப்பில் உள்ள ஓட்டைகளை வைத்தே, நீங்கள் சொல்லும் தண்டனைக் குறைப்புக்கு, அப்பீல் பண்ண முடியும். ஆனால் இந்த நீதிபதியோ, அந்த ஓட்டைகள் எதுவுமே இல்லாதவாறு, மிகத் தீவிரமாக ஆய்வு செய்து தீர்வு வழங்குபவர் என்று புகழ் கொண்டவர். அதாவது இவரது தீர்ப்புக்கு எதிராக உயர் நீதி மன்றகளில் வாதங்கள் வைக்கும் அளவுக்கு ஓட்டைகள் இருப்பதில்லையாம்.
 
அதே வேளை, இந்த வழக்கு, ஒரு அரசியல் பழிவாங்கல் என தெரிந்திருந்தால், அவரே தூக்கி வீசி இருப்பார். 
 
மோடி ஊழலுக்கு எதிரானவர் என சொல்லப் படுகின்றது. கருணாநிதி குடும்ப வழக்கில், எதிராளிகளின் பிரதிநிதிகளை வீட்டில் சந்தித்ததன் காரணமாக இந்திய CBI தலைவரே சிக்கலில் உள்ளார். பெரும்பாலும் பதவி விலகுவார்.

Edited by Nathamuni

அம்மாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது ஒன்றும் தமிழகத்துக்கு ஆரோக்கியமானதில்லை. திராவிட அரசியலுக்கு ஒருவகையில் இந்திய தேசீய கட்சிகள் முடிவுகட்ட முற்படுகின்றது. தி மு க மற்றும் அதிமுக வை அகற்றி காங்கிரஸ் பிஜேபி போன்றன தமிழகத்தில் பெரும்பான்மைக் கட்சிகளாக காலூன்ற முற்படுகின்றது. இது அம்மா கருணாநிதி ஆட்சியை விட நூறுமடங்கு மோசமானது. தமிழகம் தனது இருப்பை தொலைக்கும் நிலைக்கு ஏதுவானது. ஊழல் என்றால் அது ஏக இந்தியா முழுவதுக்கும் பொதுவானது. முறையான தண்டனை என்றால் முதலில் காங்கிரசும் பிஜேபியும் தான் உள்ளுக்கு போக வேணும்.

 

இந்த நிலையை பயன்படுத்தி பமக வைகோ விசயகாந் சீமான் எல்லாம் வீறுகொண்டு எழ முடியாது. இவர்கள் எல்லாம் எவ்வளவு தூரம் வளரவேணும் என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்கின்றது. தலைக்குமேல் வளர்ந்த ஒரு நிலையாலே திமுக அதிமுக படிப்படியாக கத்தரிக்கப்படுகின்றது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத

தமிழரையே புரட்டிப்போட்ட நிகழ்வு

 

 
இல்லை விசுகர்,
 
நான் எதிர்பார்த்தேன்.
 
மிகுந்த அரசியல் பலம் வருவதற்காக, வாக்குகள் விலைக்கு வாங்கப் பட்டது. 38 இடங்கள் கிடைத்தும், மோடியின் பெரும் பாராளுமன்ற பலம் காரணமாக ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விட்டது.
 
இதை தெரிந்து தான் ரஜனிக்கு 'குளிசை' கொடுக்கப் பட்டு உள்ளது. வைக்கோ கடந்த வாரங்களில், வழைமைக்கு மாறாக, 'அம்மாவை' எதிர்த்து' பேசினார்.

கைதி எண் 7402 ..

 

சீமான் அண்ணாதான் 2016  நேரடி முதல்வர் போட்டி இன்றி வந்தாலும் வரலாம் அண்ணே அவர் ஆடும் களம் அப்படி அடுத்து வைகுண்டராஜன் உள்ளே போகும்போது துணைக்கு போக ஆள் வேணும் எல்லே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது ஒன்றும் தமிழகத்துக்கு ஆரோக்கியமானதில்லை. திராவிட அரசியலுக்கு ஒருவகையில் இந்திய தேசீய கட்சிகள் முடிவுகட்ட முற்படுகின்றது. தி மு க மற்றும் அதிமுக வை அகற்றி காங்கிரஸ் பிஜேபி போன்றன தமிழகத்தில் பெரும்பான்மைக் கட்சிகளாக காலூன்ற முற்படுகின்றது. இது அம்மா கருணாநிதி ஆட்சியை விட நூறுமடங்கு மோசமானது. தமிழகம் தனது இருப்பை தொலைக்கும் நிலைக்கு ஏதுவானது. ஊழல் என்றால் அது ஏக இந்தியா முழுவதுக்கும் பொதுவானது. முறையான தண்டனை என்றால் முதலில் காங்கிரசும் பிஜேபியும் தான் உள்ளுக்கு போக வேணும்.

 

இந்த நிலையை பயன்படுத்தி பமக வைகோ விசயகாந் சீமான் எல்லாம் வீறுகொண்டு எழ முடியாது. இவர்கள் எல்லாம் எவ்வளவு தூரம் வளரவேணும் என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்கின்றது. தலைக்குமேல் வளர்ந்த ஒரு நிலையாலே திமுக அதிமுக படிப்படியாக கத்தரிக்கப்படுகின்றது.

 

என்ன சொல்ல வருகிறீர்கள் சண்டமாருதன்?
 
பலாத்தகாரம் செய்தவனே கலியாணம் செய்யும் 'பழைய' தமிழக நிலைப்பாட்டினை அங்கீகரிப்பது போல் அல்லவா இருக்கிறது உங்கள் கதை.
 
களவாணிகளை  தூக்கி எறிந்து, புதிய ஊழல் இல்லா அரசியல் வாதிகள் இந்த திராவிட கட்சிகளை தலைமை தாங்கி வர, தமிழக மக்களின் வாக்குகள் துணை செய்யும்.
 
அண்ணாவின் பின்னரும், காமராஜர் பின்னரும் அவர்கள் வளர்த்த கட்சிகள் தொடர்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சக் காலத்திற்கு ஆளுனர் ஆட்சியில் தமிழ்நாடு இருக்கட்டும்

 

என்ன சொல்ல வருகிறீர்கள் சண்டமாருதன்?
 
பலாத்தகாரம் செய்தவனே கலியாணம் செய்யும் 'பழைய' தமிழக நிலைப்பாட்டினை அங்கீகரிப்பது போல் அல்லவா இருக்கிறது உங்கள் கதை.
 
களவாணிகளை  தூக்கி எறிந்து, புதிய ஊழல் இல்லா அரசியல் வாதிகள் இந்த திராவிட கட்சிகளை தலைமை தாங்கி வர, தமிழக மக்களின் வாக்குகள் துணை செய்யும்.
 
அண்ணாவின் பின்னரும், காமராஜர் பின்னரும் அவர்கள் வளர்த்த கட்சிகள் தொடர்கின்றன.

 

 

எமக்கு மகிந்தனும் கோத்தவும் தான் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் அழித்தவர்கள் போல் தோற்றமளிக்கின்றது. பேரினவாதமும் அதன் வரலாறும் அதற்கு ஆதரவான 90 வீதத்துக்கும் மேற்பட்ட மக்களும் என்ற பின்புலம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல் தான் தமிழகத்தின் ஊழலும். தமிழகத்தின் ஊழல் கருணாநிதி குடும்பமும் அம்மா என்ற இரு தரப்பும் செய்வதில்லை. இந்திய லஞ்ச லாவண்ய ஊழலை ஒரு கலாச்சாரமாகவே வர்ணிக்கின்றார்கள். அது அடிமட்ட மக்கள் வரை இயல்பாகிவிட்டது. தலையாக இருக்கும் இரண்டுபேரை தண்டிப்பதால் ஊழலை சிறிதும் ஒழித்துவிட முடியாது.

 

அரசியல் சேவை அல்ல மாறாக அது வியாபாரம். ஏனைய வியாபாரங்களுக்கெல்லாம் தலமையான வியாபாரம். மில்லியன் தொடக்கம் ஐந்து பத்து ருபாய் வரை அதன் தலையீடு இருக்கின்றது. தமக்கு சாதகமான வியாபார சக்திகளை தலமையாக கொண்டுவருவதில் வியாபாரிகள் எப்போதும் தலையீடு செய்வார்கள். திமுக அதிமுக இரண்டு பெரும்பான்மையான வியாபராம் சம்மந்தப்பட்ட சக்திகள். இந்த இரண்டு சக்திகளும் தத் தமது வியாபாரத்துக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் என்னுமொரு வியாபாரக்  கட்சி உருவாக்கப்படும். அக் கட்சி சேவை என்று இயங்கினாலும் அதன் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு வியாபாரமாக மாற்றப்படும். அம்மாவாகட்டும் கருணாநிதியாகட்டும் அவர்கள் ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டுவது அக்கட்சி சார்ந்த மக்களே !. ஊழல் அவசியமாக கலாச்சாரமாக இயல்பாக  அடித்தட்டுவரை இருக்கும் போது அவர்களை ஆழ்பவர்கள் நேர்மையுடன் இருப்பது என்பது நடமுறைக்குச் சாத்தியமற்றது.

 

இப்போது இந்திய மத்திய அரசு தனது அதிகாரத்தை தமிழகத்தின் மீது பிரயோகிக்கவே ஊழலை காரணம் காட்டி அம்மாவில் கைவைத்துள்ளது தவிர இந்தியாவில் ஊழலை ஒழிக்க இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மோடி லஞ்சம் வாங்குபவராக இல்லா விட்டால் அவரது ஆட்சியில் அவர் கொஞ்சம்,கொஞ்சமாக லஞ்சத்தை ஒழிப்பவராக இருப்பார்...அவரது ஆட்சியின் முதல் பலி ஜெ...தங்களுக்கு விருப்பமானவர்கள் பிழை செய்தாலும் தண்டனை கொடுக்க கூடாது என்பது போல் இருக்குது சுகனின் கருத்து.

தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி அமைக்க நல்ல சந்தர்ப்பம், இந்தியனாக இல்லாமால் தமிழனாக சிந்தித்து முடிவெடுக்க நல்ல ஒரு சந்தர்ப்பம்

மோடி லஞ்சம் வாங்குபவராக இல்லா விட்டால் அவரது ஆட்சியில் அவர் கொஞ்சம்,கொஞ்சமாக லஞ்சத்தை ஒழிப்பவராக இருப்பார்...அவரது ஆட்சியின் முதல் பலி ஜெ...தங்களுக்கு விருப்பமானவர்கள் பிழை செய்தாலும் தண்டனை கொடுக்க கூடாது என்பது போல் இருக்குது சுகனின் கருத்து.

 

அம்மாவோ இல்லை கருணாநிதியோ எமக்கு விருப்பமானவராக இருப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.

 

அம்மவை இல்லை கருணாநிதியை உள்ளுக்குப்போடுவதில் கவலைப்படவோ இல்லை சந்தோசப்படவோ எதுவும் இல்லை.

 

பெரும்பான்மை தமிழ மக்களின் வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றவர் மத்திய அரசின் அதிகாரத்தால் தூக்கியெறியப்படுகின்றார். அதற்கு ஊழல் ஒரு காரணப்பெயர். இங்கே அம்மாவை தாண்டி அம்மாவுக்கு வாக்களித்தவர்களுக்கு மத்திய அரசு பயமுறுத்துகின்றது.

 

இதே அம்மா பிஜேபி உடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு சம்மதித்திருந்தால் இன்று இந்த வழக்கும் இல்லை தீர்ப்பும் இல்லை.

 

இவற்றையே எழுதினேன்.

 

இந்தியாவில் ஊழல் இல்லா கட்சி என்று எதையாவது கூற முடியுமா? ஊழல் இந்தியாவில் அதிகாரி, அரசியல்வாதி, சாதாரண மக்கள் என்று எல்லாராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. ஊழல் ஒரு சமூக வியாதி...  66 கோடி ஊழலுக்கு 100 கோடி அபராதம், 4 வருட சிறை என்றால் லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் என்ன சொல்ல??  கார்ப்பரேட்டுகள் சம்பந்தபட்டுள்ளதால் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்து விடப்போவதில்லை.
 
தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? 
சாதரண மக்கள் ஜெயலிதாவை பார்த்து அனுதாபமே கொள்கிறார்கள்.  மற்ற யாரையும் விட ஜெயலலிதாவையே ஆளுமை நிறைந்தவராக நம்புகிறார்கள். வைகோ, சீமான் எல்லாம் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. அது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கப் போவதும் இல்லை. அந்த ஆளுமையும் அவர்களுக்கு கிடையாது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஜெயலலிதா பினையில் வரப்போகிறார். அவர் சொன்னவர் ஆட்சி செய்யப் போகிறார். ஆனால் அடுத்து அவரால் இந்த அளவுக்கு பெரும்பான்மை வரமுடியுமா என்பது சந்தேகமே!. திராவிடக் கட்சிகளுக்கு பெருன்பான்மை கிடைக்காவிடில் என்ன நிகழும்?
 
தே.மு.க, பா.ம.க மற்றும் இதர இரண்டாம்தரக் கட்சிகளினால் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மெல்ல பரவக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதனால் தமிழ் சார்ந்து உணர்வுகள் மெல்ல காயடிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.  சமீபத்தில் கொண்டாடப்பட்ட சமஸ்கிருத தினத்தையும், குரு உத்சவையும் முதலில் கண்டித்த மாநிலம் தமிழகம்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அ.தி.மு.க  தமிழகத்தில் பெற்ற அசுர வெற்றி விரும்பதாகது தான். அ.தி.மு.க ஆட்சியில் இந்திய வெளியுறவு கொள்கையுடன் முரண்படும் வகையில் தொடர்ந்து சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மாணங்கள் நீங்கள் நினைவு கொள்வது அவசியம். ஆகையால் அ.தி.மு.கவையும் தி.மு.கவையும் ஒன்று அகற்ற வேண்டும் இல்லை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது காவிகளின் நிலைப்பாடு.
 
தமிழகத்தில் அ.தி.மு.க  பெற்ற அசுரத்தனமான வெற்றி, இந்திய வெளியுறவு கொள்கையுடன் முரண்படும் வகையில் தொடர்ந்து சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மாணங்கள்,  மத்திய அரசின் காவி மயமாக்கும் கொள்கை  இந்தி மயமாக்கும் கொள்கை போன்ற விடயங்களில் பெரும்பான்மை கொண்ட அ.தி.மு.க அச்சுறுத்தலாக இருக்க கூடிய வாய்ப்பு. மேற்கூறிய காரணங்களால் மத்திய அரசுக்கு தமிழக அரசை நிர்வாக ரீதியில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம்.
 
இரண்டாவது  அரசியல் ரீதியாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் உள்ளே தள்ளுவதால்,  தே.மு.க, பா.ம.க மற்றும் இதரக் கட்சிகளின் கூட்டணியோடு தமிழகத்தில் கால் பதிக்க முடியும். இதன் காரணமாக மோடியின் இனி வரும் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தமிழ் சார்ந்த உணர்வுகளை மட்டுக்குள் வைத்து இந்திய தேசியம் என்ற சிந்தனையை கூட்ட முடியும்.  

 

 

 
இனி தமிழகம் டெல்லியுடன் எந்தமாதிரி உறவினை வளர்த்துக் கொள்ளப் போகிறது? இதுவரைக்கும் மத்தியில் நடக்கும் ஆட்சியை குறை சொல்லி வந்த ஜெயலிதா அவர்களுடன் அனுசரித்துப் போகவேண்டியது வருமா? தனது குறைகளையும், வேண்டுதலையும் கொஞ்சம் கனிவான குரலிலே சொல்ல வேண்டி வருமா?  ஜெயலலிதாவின்  ஈழம் சார்ந்த நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
 
மோடிக்கு முதலீட்டாளர்களை இழுக்க, இங்கு ஊழல் இல்லை எனச் சொல்ல முதல் பலி ஜெயலலிதா. இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்க கூடும். 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடி லஞ்சம் வாங்குபவராக இல்லா விட்டால் அவரது ஆட்சியில் அவர் கொஞ்சம்,கொஞ்சமாக லஞ்சத்தை ஒழிப்பவராக இருப்பார்...அவரது ஆட்சியின் முதல் பலி ஜெ...தங்களுக்கு விருப்பமானவர்கள் பிழை செய்தாலும் தண்டனை கொடுக்க கூடாது என்பது போல் இருக்குது சுகனின் கருத்து.

 

மோடியின் அமைச்சர் ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவருடன்  ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்தில், பேரம் பேசுதலில், இருந்தார்.
 
பேசி முடித்து, சாப்பிட ஆரம்பித்து 5 நிமிடத்தில் தொலைபேசி அழைப்பு. பேசியவர், நிராகரிக்கப் பட முடியாத மோடி: எப்படி சாப்பாடு, சிக்கன் புரியாணி எப்படி? என்றார்!
 
வேறு எதுவுமே பேசாமல் போனை வைத்து விட்டார் மோடி. அரக்கப் பரக்க, தலை தெறிக்க, 5 நிமிடத்தில் இடத்தினை காலி செய்தார் அமைச்சர்.
 
தம்மை சுட்டி பெரும் புலனாய்வு வளைகள் உள்ளதை அறிந்து அமைச்சர்கள் மிகவும் கவனமாக உள்ளனர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு முக்கிய தேவைப்பாடுகளை இந்தக் கைது ஏற்படுத்தி உள்ளது.

 

1. தமிழகத்தை தமிழர்களின் கையில் கையளிப்பது.

 

2. ஹிந்திய தேசியவாதிகள் தமிழகத்தில் காலூன்ற இடமளிப்பது ஆபத்தானது என்ற உணர்தலை ஏற்படுத்த வேண்டி உள்ளது.

 

தமிழகத்தை தமிழர்கள்.. தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள்.. மதச் சார்பற்ற.. ஊழல் அற்ற.. அபிவிருத்தி கண்ட.. தமிழகத்தை விரும்புவர்கள் ஆள வேண்டிய கட்டாயம் இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

 

சுப்பிரமணியம் சாமி போன்ற ஹிந்திய தேசிய வெறியர்கள் தமிழகத்தை நாசம் செய்வதற்கு.. ஊழல்களையும்.. உறுதியற்ற அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக்கி அதனூடாக தங்கள் ஆதாயங்களை.. ஹிந்திய தேசியத்தை பலப்படுத்த முனைவதற்கு எதிராக தமிழக மக்கள் தங்களின் நலன்சார்ந்து.. எதிர்கால அரசியல் சார்ந்து.. பொருண்மியம் சார்ந்து தங்களைப் பலப்படுத்தக் கூடிய ஒரு அரசியலை நோக்கி  நகர இந்தக் கைது உதவியுள்ளது என்றால் மிகையல்ல.

 

இந்த ஜெயலலிதா.. காங்கிரஸோடு கூட்டணி வைத்தால்.. அதற்கு சார்ப்பான கொள்கை வகுப்பார். பா ஜ கவோடு கூட்டணி வைத்தால் அதற்கு சார்ப்பான கொள்கை வைப்பார். தமிழகத்துக்கு என்று கொள்கை வகுத்துச் செயற்பட்டது கிடையாது. தனது பதவிக்கு எது பாதுகாப்போ அதை நோக்கி அவர் நகர்ந்தார். கருணாநிதி இதற்கு விதிவிலக்கு அல்ல..!

 

இந்த நிலையில்.. தமிழகம்.. பல துறைகளில்.. திராவிடக் கட்சிகளால்.. பிந்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரளா.. தமிழகத்தை காட்டிலும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. கர்நாடகா அப்படி. ஆந்திரா அப்படி.  இந்த திராவிடக் கட்சிகள்.. ஹிந்தி தேசியவாத காங்கிரஸையும்.. பா ஜ க வையும் சரிக்கட்டி.. அரசியல் செய்யும் சித்தாந்தத்ததை.. தமிழக விரோதமாக செய்து வந்துள்ள நிலையில்..

 

இந்தக் கைது.. தமிழகத்தில் புதிய.. தமிழ் தேசிய.. அரசியலுக்கான வலுவான காரணங்களை கண்டறியவும்.. மக்களிடத்தில் அதனை முன்னிறுத்தவும் தகுந்த வலுவான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

 

அந்த வகையில்.. இந்தச் சூழலை..பயன்படுத்தி.. தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகள்.. தமக்கிடையே ஒற்றுமையை பேணி.. தமிழகத்தை 21ம் நூற்றாண்டுக்குரிய வளர்ச்சி நோக்கியும்.. தமிழர்களின்.. தமிழகத்தின் பாதுகாப்பை.. இருப்பை.. மதிப்பை பேணத்தக்க அரசியல் சூழல் ஒன்றை தமிழகத்தில் உருவாக்கப் பாடுபடுதல் அவசியமாகும்.

 

வை.கோ.. சீமான்.. ராமதாஸ்.. திருமாவளவன்... உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்தப் புதிய முயற்சிக்கு சந்தர்ப்பம் அளிப்பார்களா அல்லது தமிழக மக்களை சினிமா கூத்தாடிகளின் பின் அலையவிட்டு தமிழகத்தை இன்னும் பல தசாப்தங்களுக்கு சீரழிய அனுமதிப்பார்களா..???! பொறுத்திருந்து பார்ப்போம். :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.