Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பில் நாளை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒருவர் எழுதியதை முழுமையாக வாசித்து தெளிவாக கருத்தை முன் வைக்க பழகுங்கள்.

என்னை நடுநிலைவாதியாக காட்டுவதற்காகவோ அல்லது 'இன்னென்ன'வாதியாகக் காட்டுவதற்காகவோ எழுதுகிறவன் அல்ல நான்.  உண்மைக்கு முன் நடுநிலை என்பது ஒருக்காலும் சரிவராது என்று நம்புகின்றவன் நான்.

ஈராக்கில் ஐந்து, பத்து ஸ்ரிப் கிளப்புகள் இருந்தால் அதனை அம் மக்கள் எதிர்க்கட்டும். இன்னொரு நாட்டில் இவ்வாறான கிளப்புகளுக்கு சென்று வருகின்ற ஒருவர் ஈராக்கில் இருக்கும் கிளப்புகளை எதிர்ப்பது தான் பிரச்சனைக்குரிய விடயமாக போகும். அதாவது புலம்பெயர் நாடுகளில் நிகழும் தமிழகத்து கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டோ அல்லது மெளனமான ஏற்றுக்கொண்டோ அல்லது அவை பற்றி நிறுவனமயப்படுத்தப்பட்ட விமர்சனம்  எதுவும் வைக்காமல் இருப்பவர் ஒருவர் அதனை எதிர்ப்பது போன்றது.

ஈராக் மக்கள் எதிர்த்தால் அது இல்லாமல் போய்விடும் ...? அந்த அளவிற்கு ஜெனாயகம் அங்கே தலைவிரித்து ஆடுகிறது? இப்போ அவையெல்லாம் ஈராக் மக்களின் சம்மதத்துடன்தான் இருகின்றன .....
உங்கள் அளவிற்கு செய்திகளை நான் படிப்பதில்லைதான் ....... எமக்கு ஸ்ட்ரிப் கிளப்புகள் வேண்டும் என்று ஈராக் மக்கள் ஒன்றாய் திரட்ன்டு போர் நடத்திய செய்தியை நான் படிக்கவில்லை. ஈராக்கின் சகஜ வாழ்வு எப்படி திட்டமிட்டு சிரழிக்க படுகிறது என்ற செய்தியை மட்டும் படித்துவிட்டு அப்படி எழுதிவிட்டேன்.

நீங்கள் வருகின்ற ஒரு செய்தியும் வாசிக்காமல் வெற்றுக் கற்பனையில் கருத்தெழுதுபவர் என்பதை உங்களில் மேற்சொன்ன பதிலின் மூலம் உணர முடிகின்றது. இதே அரச பயங்கரவாதத்தின் பிடிக்குள் இருந்து கொண்டு தான் மக்கள் காணி பறிப்பு எதிராகவும், காணாமல் போனோரை கண்டு பிடித்து தரும் படியும், தமிழ் ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையாக போராடி வருகின்றார்கள். இவை மட்டுமன்றி இன்னும் பல விடயங்களுக்காக எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். அவர்களுக்கு எவற்றை எதிர்ப்பது, எவற்றிற்காக போராடுவது என்ற தெளிவு உஙகளை விட அதிகமாக இருக்கின்றது.

Jeyakumari Balendran is a Sri Lankan Tamil woman and an activist campaigning for the families of those who disappeared while in Sri Lankan military custody. Sri Lankan government forces currently have Ms Jeyakumari and her 13-year-old daughter Vipoosika in detention at an unknown location. They gained prominence during British Prime Minister David Cameron’s visit to Jaffna in November, when Vipoosika’s desperate pleas for the return of her missing brother gained widespread coverage.செய்திகளை நான் படிப்பதில்லைதான் படிச்சாலும் விளங்க மாடன் எங்குது. ஓம் ஓம் .... அதுதானே மக்கள் என்ன வேணும் என்று போராடினால் ..... அவர்கள் கொடுத்துவிட்டு போகிறார்கள். இவர்கள் போராடாமல் இருந்தால் அவர்களுக்கு எப்படி தெரியும் இவர்களுக்கு என்ன வேண்டும் என்று?? 
 
..அதாவது தாயக மக்கள் மீது புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு செய்யும் அரசியலில் ஏவல் அரசியலும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? அவை இன்னும் காலாவதியாக வில்லை என்றும் சொல்கின்றீர்கள்?

தாயகத்திலும் 3/4 மடங்கு மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருந்து கொண்டுதான் போராடினார்கள். எல்லோரும்ம் இடம் பெயர்ந்துதான் இருக்கிறோம். தூர இடைவெளி வேறு வேறாக இருக்கிறது. நாட்டில் இருப்பவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது. இலங்கையை கடந்து வாழ்பவர்களுக்கு அது இல்லை.

எனது நாட்டிற்காக என்னை போராடாதே என்று சொல்ல எவனுக்கு உரிமை இல்லை. எனது உரிமை க்கு குரல் கொடுக்கவேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை... எமது உரிமைகளை பறித்து வைத்திருப்பவர்கள்தான் அப்படி கூப்பாடு போடுகிறார்கள். எனது நாட்டிற்கு எது தீமை பயக்கும் என்று எழுதாதே என்று நீங்கள்தான் சிங்கள பேரினவாதிபோல் இப்போ புதுசா கிளம்பி இருக்கிறீர்கள்

இந்திய இலங்கை உளவுத்துறைகளால் கண்காணிக்கப்படும் புலம்பெயர் அமைப்புகள் இப்படியான துரோக முத்திரை குத்துவதிலும், அதை இதை புறக்கணி என்று புறக்கணிப்பு அரசியல் செய்யும் சில்லறை அமைப்புகளாக இல்லை. அவை காத்திரமான அரசியல் செய்யும் அமைப்புகளாக, சர்வதேசத்தில் இலங்கைக்கு நெருக்குதல் ஏற்படுத்தக் கூடிய அமைப்புகளாக இருக்கின்றன. சில்லரை அரசியலும், விசைப்பலகை அரசியலும் செய்து கொண்டு இருக்கும் எந்த அமைப்புகளை எந்த நாட்டு புலநாய்வு அமைப்புகளும் ஏறெடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசியலை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு வாசிப்பும், தெளிவும் இருக்காது என நம்புகின்றேன்.

அவை எல்லாம் யாழ்பாணத்திலா இருக்கு ...??

அதை புறக்கணி இதை புறக்கணி என்று நான் எங்கும் எழுதவில்லை. எது அதிக தீங்கு விளைவிக்குமோ அதுதான் தமிழனுக்கு அத்கம் பிடிக்கும் என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். சட்டியை தொட்டு பார்த்து பெறும்  ஞானம் மேலானது. எழுந்த மாத்திரத்தில் .... புலம்பெர்ந்தவர்கள் அதோ இதோ என்று எழுதினீர்கள் ...... இப்போ அவை வேறு இவை வேறு என்று வந்து நிற்கிறீர்கள்.
உங்கள் தடுமாற்றம் பற்றிதான் நான் கருத்து வைத்தேன். 

  • Replies 69
  • Views 4.2k
  • Created
  • Last Reply

என்னமோ அங்குள்ள மக்கள் இப்படியான நிகழ்வுகளை புறக்கணிப்பதுமில்லை, புறக்கணிக்க விரும்புவதுமில்லை, இங்குள்ள ஒரு சிலர் தான் (இத்திரியில் அது என்னை சுட்டிக்காட்டுகிறது) ஒதுக்குப்புறத்திலிருந்து குய்யோ முய்யோ என்று கத்துகிறார்கள் என்ற ரீதியில் தானே எழுதியிருந்தீர்கள். தனிமனிதர்களின் கூட்டம் தான் மக்கள் என்பவர்கள். சில மக்கள் அங்கு நிகழ்வுக்கு சென்று வந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று கூறும் உங்கள் போன்றோர் அதுவே தமது பாதிப்பிலிருந்து மீளமுடியாதவர்களோ அல்லது அப்படியான மக்களை நினைத்து இவ்வாறான நிகழ்வுகளை புறக்கணிப்பவர்களின் முடிவுகளை ஏன் ஏற்பதில்லை?

ஒரு நிகழ்வை மக்கள் கூட்டாக அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவோ புறக்கணிக்கின்றார்கள் என்றால் அதற்கான வெளிப்பாடு தெளிவாக ஊடகங்களின் மூலமோ, அவர்களின் அரசியல் கட்சிகளின் மூலமோ அல்லது வெகுசன அமைப்புகளின் ஊடாகவோ தெளிவாக புலப்படும். ஆனால் இந் நிகழ்வு மற்றும் இதைப் போன்ற எந்த நிகழ்வுக்கும் அண்மையில் இவ்வாறான எதிர்ப்புகள் தாயகத்தில் இருந்து வெளிக்கிழம்பவில்லை. ஆகக் குறைந்தது அங்குள்ள கலை சார்பான அமைப்புகள் கூட இது பற்றி எதையும் குறிப்பிட்டு எதிர்ப்பதாகச்  சொல்லவில்லை.

தனி மரம் தோப்பாகாது. தனி ஒருவரின் புறக்கணிப்பு என்பது ஒரு சமூகத்தின் புறக்கணிப்பு அல்ல. இவ்வாறான நிகழ்வுக்கு 95 வீதமானோர் செல்வதில்லை. இதன் அர்த்தம் 95 வீதமானோர்  எதிர்க்கின்றனர் என்பது அல்ல.

நானும் ஒரு தனிமனித பெண்ணாக தான் எனது கருத்தை முன்வைத்தேன். எந்த அமைப்போ நிறுவனமோ சார்ந்து அல்ல. அதில் கூட இந்நிகழ்வை புறக்கணியுங்கள் என்றோ, ஆதரவு கொடுங்கள் என்றோ எழுதியிருக்கவில்லை. யாருக்கும் துரோகி பட்டமும் கொடுத்திருக்கவில்லை. இந்நிகழ்வால் ஏற்படும் தீமை என எனக்கு தோன்றியதை எழுதியிருந்தேன். ஒரு தனிமனித கருத்துக்கு அபத்தமான அரசியல் என்று முத்திரை குத்த தெரிந்த உங்களுக்கு தாயகத்திலிருந்து வரும் ஒரு தனிமனித கருத்தை ஏற்க முடியவில்லை.

மீண்டும் திரியின் முதலாம் பக்கத்தில் இருந்து தெளிவாக வாசிக்கவும்.

நீங்கள் இணைத்த பதிவுக்கான என் முதலாவது பதிலாக நிகழ்ச்சியை வாழ்த்தி இருந்தேன். ஆனால் அதன் பின்னான தொடர் பின்னூட்டங்களுக்கான பதிலாகத்தான் என் இரண்டாம் பதில் அமைந்தது. ஒருவர் எழுதிய கருத்து ஒரு அபத்தமான கருத்து என்று எனக்கு தோன்றும் போது அதை உரைப்பதில் எந்த தவறும் இருப்பதாக எண்ணவில்லை. இப்படியான ஒரு நிகழ்வின் மூலம் அனைத்து மக்களும் சந்தோசமாக இருக்கின்றனர் என்று உலகம் நினைத்து விடும் என்று எழுதியிருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வந்தது, இப்படியான நிகழ்வுகளை எதிர்க்க சொல்லி. அதுவும் முக்கியமாக தென்னிந்தியாவில் இருந்து வரும் கலைஞர்கள் மூலம் நடாத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்க்கச் சொல்லி.

உங்கள் பின்னூட்டங்களின் அரசியல் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்க்க / புறக்கணிக்க சொல்வதுதான். அந்த அரசியலைதான் எதிர்த்து எழுதுகின்றேன். "இல்லை என் கருத்துகளின் அரசியல் அது அல்ல" என்று கூறுகின்றீர்களா?

ஈழத்து கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற துளசியின் ஆரம்ப கருத்து அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஈழத்தில் தமிழ் திரைபடங்களை எடுக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் இருந்தே இத்தகைய கருத்துகள் முதுபெரும் ஈழ கலைஞர்களால் வலியுறுத்தப்படும் கருத்தே. பைலற் பிரேம்நாத் திரைப்படம் இலங்கையில் எடுக்கபடும்போதே ஈழத்து கலைஞர்களிடம் இருந்து இத்தகைய எதிர்ப்பு குரல்  கிளம்பியது. அன்று ஈழ தமிழ் கலைஞர்களுக்கு ஆதரவாக  இந்திய திரைப்பட ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்த  நடிகர் காமினி பொன்சேகா  ஒரு தமிழ் எதிர்ப்பாளராக ஒரு சிலரால்  பாரக்கபட்டார்.  அதேபோல்  துளசி இந்த கருத்தை வைத்ததும் ஏதோ சொல்ல கூடாத ஒன்றை அவர் சொல்லிவிட்டது போல் பலர் துள்ளி குதிக்கின்றனர்.   துளசி கட்டளையிடும் பாணியில் எதுவும் சொல்லவில்லை. அரசியலும் பேசவில்லை.தனது கருத்தை மிகவம் நாகரீகமாவே இங்கு பதிவு செய்தார். துளசியின் கருத்து  சற்றே திருத்தபட்டு "தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்வுளை நடத்தும் அதே வேளை ஈழத்து கலைஞர்ளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையிலை  தாயக புலம்பெயர் தமிழர் ஈடுபடல் வேண்டும்", என்று இருந்திருக்கலாம்.  ஆனால் அவர் அவ்வாறே கூறியிருந்தாலும்  இப்போது போல் அவர் மீது பாய்வோர் அப்போதும் இதையே செய்திருப்பர் என்றே தோன்றுகிறது.   ஆரோக்கியமாக  தளத்தில் இருந்து விவாதம் செய்திருக்கவேண்டிய ஒரு விடயம் தேவையற்று அரசியல் மயப்படுத்தபட்டு விட்டதாகவே நான் உணர்கிறேன்.

Edited by tulpen

ஓம் துல்பன், பின்வரும் கருத்துகள் மூலம் இவர் நீங்கள் குறிப்பிட்டதை மட்டும் தான் சொல்ல முனைந்து இருக்கின்றார் என்று நம்புறம்

2) தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைப்பதன் மூலம் எம்மக்கள் இப்பொழுது ஒரு பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக உள்ளார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது பயன்படும்.

உதாரணமாக மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை விரும்புகிறார்கள் என்று நீங்கள் கூறியதை போல் மற்றவர்களும் நினைப்பார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்க இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகிறது. போரில் ஏற்பட்ட வலிகளை மறந்து அனைவரும் சந்தோசமாக உள்ளார்கள் என்று காட்டவே அது பயன்படும்.

தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைக்க வேண்டாம் என்று தாயக மக்களுக்கு கூறிக்கொண்டு புலம்பெயர் மக்கள் மட்டும் நடத்தலாம் என்றில்லை.

புலம்பெயர் மக்களையும் சேர்த்து தான் எனது விமர்சன கருத்தை வைத்திருக்கிறேன்.

எமது மக்கள் தமக்குள்ளேயே நடத்தும் நிகழ்வுகளை விட தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நடத்தும் நிகழ்வுகளே அதிகளவில் வெளியுலகை அடைகின்றன, பிரச்சாரங்களுக்கும் பயன்படுகின்றன.

நல்லூர் திருவிழாவுக்கு சனம் அள்ளுப்பட்டுக்கொண்டு செல்வதையும் நான் ஆதரிக்கவில்லை. கோவிலுக்கு செலவழிக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவளித்தாலாவது மக்கள் பயன் பெறுவார்கள்.

தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்வுளை நடத்தும் அதே வேளை ஈழத்து கலைஞர்ளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையிலை  தாயக புலம்பெயர் தமிழர் ஈடுபடல் வேண்டும்", 

பல  எதிர்பார்ப்புக்களோடு எம் ஈழக்கலையயும் .ஈழக்களைஞ்சர்கலைஞ்சர்களின் படைப்பபுக்களையும் வெளியே எம் மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் அவதியில் வாழும் ஈழக்கலைஞ்சன் என்ற வகையில்    இந்தக்கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் .................
 
அரசியல் எதுவும் எழுதக்கூடாது என்ற நோக்கில் இருந்தாலும் படைப்பு கலை என்ற வரையறைக்குள் இந்த திரியை பார்ப்பதனால் இங்கே எழுத நினைக்கிறேன் .
உண்மையில் அன்று தொட்டு  இன்று வரை எம் ஈழக்கலை உலகம்   கனவுகளும் ஏக்கங்களும் நிறைந்ததாகவே காணப்படுகிறது .இடையில் விடுதலைப்புலிகள் காலத்தில் போராட்ட காலத்திலும் சற்று உயர்ந்து நின்றதை மறக்கவோ மறுக்கவோ முடியாது .ஆனால் தற்போது என்னைப்போன்ற கலைஞ்சர்களுக்கு கிடைப்பது ஏக்கமும் ,வலிகளுமே.....
 
எம் தொப்பிழ்கொடி உறவுகளுக்கு பெரும் தளம் உள்ளது கலை உலகில் அவர்கள் வானுயர்ந்து நிற்கிறார்கள் ........ஆனால் எமக்கு என்று ஒரு சிறு தளமும் இல்லாமல் திண்டாடுகிறோம் ........என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான கலைஞ்சர்களின் மனக்குமறல் இது .இந்தப்பக்கமும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் ..இங்கே அரசியலோ ,பக்கசார்போ என்னிடம் இல்லை ..............எனது ஆதங்கம் எப்படியெல்லாம் எம் தொப்பிள் கொடி உறவுகளின் கலையை வளர்க்க அந்த கலைஞ்சர்களை அந்த மக்கள் ஊக்குவித்தார்களோ .அப்பிடி எம் தேசத்தின் கலையை வளர்க்க தேசத்தின் கலைஞ்சர்களை ஏன் எம் ஈழ தேச மக்கள் ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கக்கூடாது .நன்றி 

மேலே விவாதிக்கப்படும் நிகழ்ச்சியை நடாத்தியது மட்டக்களப்பு தமிழ் சங்கம். தமிழ் சங்கம் தங்கள் கட்டிட நிதிக்காக அதிகளவு மக்களை கவரக் கூடிய, ஓரளவுக்கு பிரபலமானவர்களை வரவழைத்து நடாத்தி இருக்கு. இன் நிகழ்வு வெற்றியோ தோல்வியோ என்பதுக்கு அப்பால் தாயகத்தில் இருக்கும் ஒரு தமிழ் சங்கம் தான் இதனை மேற்கொண்டு இருக்கு. 

இவற்றை தவிர, உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் பல இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சிறு கோவில்களில் தொடங்கி பாடசாலைகள் வரைக்கும் இவற்றை நடத்துகின்றன. இங்கு நான் குறிப்பிடுவது இராணுவத்தினரின், பாதுகாப்பு அமைச்சின் மூலம் நடாத்தப்படும் இசை / களியாட்ட நிகழ்வுகள் அல்ல. உள்ளூர் கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்து கொண்டு இருக்கின்றன.

ஓம் துல்பன், பின்வரும் கருத்துகள் மூலம் இவர் நீங்கள் குறிப்பிட்டதை மட்டும் தான் சொல்ல முனைந்து இருக்கின்றார் என்று நம்புறம்

நிழலி நான் கூறியது துளசியின் ஆரம்ப  பிரதான கருத்தை பற்றியது. விவாதங்களுக்கு இடையில் அவர் கூறிய பதில்கள்  பற்றியதல்ல. துளசி உங்கள் கருத்தை சற்றே திருத்துங்கள் என்று கூறி இலகுவாக முடித்திருக்க வேண்டிய விடயம் தேவையற்று நீள்கிறது.

Edited by tulpen

நிழலி நான் கூறியது துளசியின் ஆரம்ப  பிரதான கருத்தை பற்றியது. விவாதங்களுக்கு இடையில் அவர் கூறிய பதில்கள்  பற்றியதல்ல.

துளசியின் அந்தக் கருத்துக்கு முழு ஆதரவு உண்டு. முக்கியமாக புலம்பெயர் வியாபார நிறுவனங்கள் தாயக இசைக் குழுக்களை அழைத்து மேடை கொடுத்தால் மிகவும் நல்லது. இப்பொழுது இங்குள்ள வானொலிகளில் 'இது எங்கள் பாட்டு" என்று ஒவ்வொரு மணித்தியாலமும் ஈழக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை போடுகின்றனர்.  தாயகத்தில் இருந்து வெளிவரும் குறும்படங்களையும் விருதுகளின் தேர்வுகளில் இணைக்கின்றனர்.  சின்ன சின்ன முயற்சிகள்  ஒரு நல்ல சூழலை உருவாக்கும் என்று நம்புகின்றேன்.

சரி, இந்த திரியில் அதிகம் மினக்கெட்டு விட்டதால், நான் போதிய கருத்துகளையும் இட்டுவிட்டதால் இதுவே இத் திரியில் இறுதி பதில்.

நன்றி வணக்கம்.

  • தொடங்கியவர்

நன்றி tulpen அண்ணா. :)

ஒரு நிகழ்வை மக்கள் கூட்டாக அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவோ புறக்கணிக்கின்றார்கள் என்றால் அதற்கான வெளிப்பாடு தெளிவாக ஊடகங்களின் மூலமோ, அவர்களின் அரசியல் கட்சிகளின் மூலமோ அல்லது வெகுசன அமைப்புகளின் ஊடாகவோ தெளிவாக புலப்படும். ஆனால் இந் நிகழ்வு மற்றும் இதைப் போன்ற எந்த நிகழ்வுக்கும் அண்மையில் இவ்வாறான எதிர்ப்புகள் தாயகத்தில் இருந்து வெளிக்கிழம்பவில்லை. ஆகக் குறைந்தது அங்குள்ள கலை சார்பான அமைப்புகள் கூட இது பற்றி எதையும் குறிப்பிட்டு எதிர்ப்பதாகச் சொல்லவில்லை.

தனி மரம் தோப்பாகாது. தனி ஒருவரின் புறக்கணிப்பு என்பது ஒரு சமூகத்தின் புறக்கணிப்பு அல்ல. இவ்வாறான நிகழ்வுக்கு 95 வீதமானோர் செல்வதில்லை. இதன் அர்த்தம் 95 வீதமானோர் எதிர்க்கின்றனர் என்பது அல்ல.

மீண்டும் திரியின் முதலாம் பக்கத்தில் இருந்து தெளிவாக வாசிக்கவும்.

நீங்கள் இணைத்த பதிவுக்கான என் முதலாவது பதிலாக நிகழ்ச்சியை வாழ்த்தி இருந்தேன். ஆனால் அதன் பின்னான தொடர் பின்னூட்டங்களுக்கான பதிலாகத்தான் என் இரண்டாம் பதில் அமைந்தது. ஒருவர் எழுதிய கருத்து ஒரு அபத்தமான கருத்து என்று எனக்கு தோன்றும் போது அதை உரைப்பதில் எந்த தவறும் இருப்பதாக எண்ணவில்லை. இப்படியான ஒரு நிகழ்வின் மூலம் அனைத்து மக்களும் சந்தோசமாக இருக்கின்றனர் என்று உலகம் நினைத்து விடும் என்று எழுதியிருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வந்தது, இப்படியான நிகழ்வுகளை எதிர்க்க சொல்லி. அதுவும் முக்கியமாக தென்னிந்தியாவில் இருந்து வரும் கலைஞர்கள் மூலம் நடாத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்க்கச் சொல்லி.

உங்கள் பின்னூட்டங்களின் அரசியல் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்க்க / புறக்கணிக்க சொல்வதுதான். அந்த அரசியலைதான் எதிர்த்து எழுதுகின்றேன். "இல்லை என் கருத்துகளின் அரசியல் அது அல்ல" என்று கூறுகின்றீர்களா?

நீங்கள் தான் மீளவும் முதல் பக்கத்திலிருந்து வாசியுங்கள். அதிலும் உங்கள் கருத்துகள் அனைத்தையும் திரும்பவும் வாசியுங்கள். ஏனென்றால் நீங்கள் எழுதியது உங்களுக்கே விளங்காத மாதிரி முன்னைய கருத்துக்கு நீங்கள் கொடுக்கும் தற்போதைய விளக்கம் பொருத்தமில்லாமல் உள்ளது.

இப்படியான நிகழ்வுகள் மூலம் தாயக மக்கள் இப்பொழுது நன்றாக உள்ளார்கள் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்பது உண்மை. பிரச்சாரம் என்பது தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் சர்வதேசத்தை நோக்கி முன்னெடுக்கப்படும். அதை யார் நம்புகிறார்கள், யார் நம்பவில்லை என்பது இரண்டாவது பிரச்சினை.

சிங்களவர்கள் நடத்தும் முகநூல் பக்கங்களில் கூட தமிழர்கள் இப்பொழுது நன்றாக உள்ளார்கள். தமிழர்களுக்கு அரசாங்கம் நல்லது செய்து கொடுக்கிறது என்ற பதிவுகள் பல இடம்பெற்றன. சிறு தமிழ் பிள்ளைக்கு பிஸ்கட் கொடுக்கும் இராணுவத்தின் படம், தமிழ் மக்கள் நன்றாக உள்ளார்கள் என்ற அசினின் கருத்து, டேவிட் கமரூனுக்கு முத்தையா முரளிதரன் கூறிய கருத்து என பல்வேறு பட்ட கருத்துகள் பகிரப்பட்டு அதற்கு பலரது லைக்கும் கிடைத்தன. சில கருத்துகள் யாழிலும் இணைத்திருந்தேன். தமிழர்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு எடுபட்டுப்போவோரும் உள்ளார்கள்.

அத்துடன் இப்படியான நிகழ்வுகளில் பங்குபற்றும் கலைஞர்கள் தமது பாடலுக்கு கைதட்டி ரசிக்கும் அல்லது விசிலடித்து ரசிக்கும் மக்களை தான் அன்றைய நிகழ்வில் காண்பார்கள். அதை வைத்து ஈழத்து தமிழர்கள் நன்றாக உள்ளார்கள் என நினைப்பார்கள். அதையும் தாண்டி மக்களின் பிரச்சினைகள், இராணுவ அடக்குமுறைகள், அன்றாட வாழ்க்கைப்பிரச்சினைகள், கைதுகள், பாலியல் வல்லுறவுகள் என நாட்டில் இடம்பெறும் திட்டமிட்ட இன அழிப்பை தெரிந்து கொள்ளாமல் தான் இலங்கையை விட்டு வெளியேறுவார்கள். (ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) பின் தமக்கு தெரிந்தவர்களிடம், நண்பர்களிடம் இலங்கை தமிழர்கள் நன்றாக உள்ளார்கள் என்றே கூறுவார்கள்.

தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது என கூறி அதற்கு இரு காரணங்கள் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேனே தவிர இந்த நிகழ்வுக்கு செல் என்றோ புறக்கணி என்றோ நான் கூறியிருக்கவில்லை. உங்களை நியாயப்படுத்த எனது கருத்துக்கு வேறு விளக்கம் கொடுக்க வேண்டாம்.

நீங்கள் தான் நான் "அபத்தமான அரசியல்" செய்கிறேன். அங்குள்ள மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்றீர்கள். இப்ப முனிவர் அண்ணா புறக்கணிப்பு பற்றி எழுதியதும் தனிமனிதர்களின் புறக்கணிப்பு வேறு. அமைப்பு ரீதியாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து புறக்கணிக்க வேண்டும் என்கிறீர்கள்.

செல்லாத அனைத்து மக்களும் நிகழ்வை புறக்கணித்தவர்கள் என்று நான் எங்காவது எழுதியிருக்கிறேனா? ஆனால் நிகழ்வை புறக்கணித்தவர்களும் உள்ளார்கள் என்பது தானே உண்மை. புறக்கணிப்பும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் சுயநலம். அமைப்பு ரீதியாக வெளிப்படையாக கருத்து கூறி புறக்கணித்தால் தான் பெரும்பான்மை, எனவே நம்புவீர்கள். இல்லாவிட்டால் அதை கருத்தில் கொள்ள மாட்டீர்கள். இப்ப மட்டும் எத்தனை வீதமானோர் புறக்கணிக்கும் முடிவில் இருந்து புறக்கணித்தார்கள் என்று கருத்துக்கணிப்பு நடத்திப் போட்டா கதைக்கிறீர்கள்?

அமைப்பு ரீதியாக கருத்து கூறி புறக்கணித்தால் அந்த அமைப்புக்கும் பட்டப்பெயர் கொடுப்பவராச்சே நீங்கள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உள்ளூர் கலைஞர்கள் நிகள்வு செய்து அங்கு மக்கள் கூடினால் மக்கள் சந்தோசமாக இருக்கினம் என்று நினைக்காதோ.இப்ப நான் அங்கு இருந்தால் கூட இந்த நிகழ்வுக்கு போய் இருக்க மாட்டேன்.அதன் அர்த்தம் நான் இதை ர்றக்கிறேன் என்று ஆகுமா.மற்றது  ஒரு கதைக்கு முனிவர் இந்த நிகழ்வுக்கு தான் போகிறேன் என்று சொல்லி இருந்தால் எங்கடை சனம் எப்படி அதைப் பாக்கும்.இதை  எழுதக்கூடாது தான்.ஆனால் முனிவரின் நிகழ்வுக்கு போகாமையை பற்றி எழுதியமையால் எழுத வேன்டி வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடியார் கூத்தையும் அரிச்சந்திரா மயான காண்டத்தையும் எல்லாச்சனமும் எந்த நேரமும் விரும்பாது. ரசனை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.அதை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் எமக்காக போராட வேண்டும்,கொடி பிடிக்க வேண்டும் ஆனால் இப்படியான நிகழ்வுகளை மட்டும் அக் கலைஞர்களை கொண்டு நடத்தக் கூடாது கேட்டால் சர்வதேசம் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்ர்கள் என நினைக்கும்,எங்கட கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவர் என்ட சப்பை கட்டுக் காரணங்கள்.

துல்பனில் கருத்துக்களை வாசிக்கும் போது ஏதோ அகூதா ஞாபகத்திற்கு வருகிறார் :rolleyes:

Edited by ரதி

ரதி அகூதா என்றால் என்ன?
  • தொடங்கியவர்

அகூதா அண்ணாவின் profile பக்கம்

http://www.yarl.com/forum3/index.php?/user/1724-akootha/

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் ஆழ்மனதிற்குள்  ஊடுருவி யோசிக்க வேண்டிய விடயம்.  :rolleyes:

போன கிழமை டென்மார்க்கில ஒரு ஸ்ரார் நைட் நடந்தது. அதுக்கு சுப்பர் சிங்கள் Syed Subahan என்பர் வந்திருந்தவர். அதில அவர் "விடை கொடு எங்கள் நாடே" என்ற பாடலையும் பாடியிருந்தவர். இது சரி என்றால் மட்டக்கிளப்பில் நடப்பதும் சரியே. 

இதுவும் சரி என்றால் தமிழ் நாட்டில் கத்தி படமும் சரியே.

10670075_10204829190951094_7569913110151

என்னால செய்ய முடியாததை அடுத்தவன் செய்ய வேணும் என்டு நினைக்கிற மனநிலையை என்னவென்று சொல்வது? 

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணாவின் profile பக்கம்

http://www.yarl.com/forum3/index.php?/user/1724-akootha/

துளசி எதற்கு இப்போது அகூதாவின் புரபைலை இணைத்தீர்கள்?..."அகூதா",அகூதா என்ட பெயரில் யாழுக்கு வாறதில்லை என்று தானே நானும் சொல்கிறேன்:)

  • தொடங்கியவர்

துளசி எதற்கு இப்போது அகூதாவின் புரபைலை இணைத்தீர்கள்?..."அகூதா",அகூதா என்ட பெயரில் யாழுக்கு வாறதில்லை என்று தானே நானும் சொல்கிறேன்:)

அகூதா அண்ணா பற்றி முதல் கருத்தில் எழுதி விட்டு அவர் profile பக்க இணைப்பை அடுத்து இணைத்திருந்தேன். நிர்வாகம் முதல் கருத்தை நீக்கி விட்டது. அதனால் இதை இணைத்தது சம்பந்தமில்லாதது போல் தோற்றமளிக்கிறது.

அகூதா அண்ணா வேறு பெயரில் இப்பொழுது எழுதுகிறார் என்று நினைக்கிறீர்கள் . ஆனால் நான் அப்படி கருதவில்லை. நிர்வாக உறுப்பினர் ஒருவரின் ஒரு கருத்தும் அகூதா அண்ணா யாழ் வருவதில்லை என்பதை உறுதி செய்வது போல் அமைந்தது.

ஓஅப்படியா? நான் நீக்கின கருத்தை வாசிக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.